1 Jul 2015

வாட்டர் டேங்க்,,,,,

பார்த்துவிட்டுத்தான் சொல்கிறாயா அல்லது உத்தேசமாக ச்சொல்கிறாயா என நான் கேட்ட போது மணி காலை 7.30 லிருந்து 8.00 மணிக்குள்ளாக இருக்க லாம்.எப்போதும் இந்நேரம் கிளம்பியிருப்பேன்.

இன்றைக்குகாலைஎழுந்ததிலிருந்துநான்குமுறையாவதுஅம்மாபோன்பண்ணி யிருப்பார்கள். ஊர்ப்பொங்கலுக்கு அவசியம் வந்துவிடு என/ சரியென கடந்த ஒருவாரமாகசொன்ன பதிலைத் தான் இப்போது நான்காவது முறையுமாய் சொல்லிக் கொண்டிருப்பவனாய்/

சொன்ன பதில்,எண்ணப்பிண்ணல்கள் மற்ற மற்றதுடன் சேர்ந்து கொள்கிற உடல் சோம்பல் என்கிறதாய் கைகோர்த்துகொண்டஎல்லாமுமாய்என்னை விடுவித்தநேரம்இந்நேரமாய் ஆகிப் போகிறது.

இன்னும் ஒரு மணி நேரத்தி ற்குள் கரண்ட் கட்டாகிவிடும்,ஆகவே மோட்டா ரை ஆன் பண்ணி விட்டு மாடிமேல் இருக்கிற டேங்கில் எவ்வளவு தண்ணீர் இருக்கிறது என பார்த்து விட்டு வாஎன மகனிடம் பணித்துவிட்டு பாத்ரூமிற் குள் செல்கிறேன் அவசரமாக/ அட துண்டெடுக்க மறந்து போனேனே, மறந் தால் என்ன கெட்டுவிட்டது இப்பொழுது? ஒரு மினி சப்தம் அல்லது பாத்ரூம் கதவை லேசாக ஒரு செல்லத்தட்டு தட்டினால் துண்டு கைக்கு வந்து விட்டுப்போகிறது இதற்குப்போய்,,,,,,,,


பிளம்பர் சரவணனிடம் இந்த வேலையை ஒப்படைப்பது சாலச்சிறந்தது என பரிந்துரைத்தஉறவினர்ஒருவரை இன்றுவரை மறக்கமுடியவில்லை. சரியான வேலைக்கு சரியான நபரை தேர்ந்தெடுத்து அழைப்பது ஒரு தனிக்கலை.அது கைவராத பொழுது அந்தல்,சிந்தலாய் ஆகிப் போகிறது.

மோட்டார் மாட்டுவதற்கு ஒரு மாதத்திற்கு முன்பாகவே விசாரிக்க ஆரம்பித் தது நீண்டு கோடு புள்ளியாய் வந்து ஓரிடத்தில் நின்ற போது அது பிளம்பர் சரவணைனை உருக் காட்டியது.

சரவணன் என உறவினர் சொன்னதும் அவரது போன் நம்பர் அவரது இருப்பி டம் எல்லாம் கேட்டுவிட்டு தொடர்பு கொண்ட போது அவரே மோட்டார் ,பைப்,மற்ற ஜாமான்கள் அதற்கான வேலை செய்ய ஆட்கள் என ஒரு நல்ல ஞாயிற்றுகிழமை வந்து மாடியில் டேங்கை வைத்து வீட்டின் முன் வராண் டாவில் மோட்டாரை வைத்துவிட்டு அடிகுழாய் நின்ற இடத்தில் பைப் இறக்கி கனெக்‌ஷன் கொடுத்து அன்று மாலையே மோட்டாரை ஓட வைத்துவிட்டு போய் விட்டார்.நாளை ஒரு எலக்ட்ரீஷியன் வைத்து சுவிட் போர்ட் மாட்டி விடுங்கள்எனவும்இரண்டுநாளைக்குக்குள்ளாகபில்தொகையையும்கூலியையு ம் கடையில் கொடுத்து விடுங்கள் எனவுமாய் பில்லைக் கொடுத்து விட்டுச் சென்றார்.

அன்றிலிருந்துஇன்றுவரை அதிகமாய் ஒன்றும் ரிப்பேரல்லாது 5 ஆவது வருட த்தில் காலடி எடுத்துவைத்து வெற்றிகரமாய் ஓடிக்கொண்டிருக்கிற மோட்டார் இது.


ஓடட்டும் ஓடுகிற வரை என்கிறதான அதிர்ச்சியற்ற மனோநிலையுடன் சுவிட் சைப் போடுகிற ஒவ்வொரு முறையுமாய்எண்ணத்தை தூவுகிற மோட்டார். போட்ட சுவிட்சின் விசை காற்றுடன் துளையிடப்பட்ட பூமியின் அடியாழம் வரைச்சென்றுஉறிஞ்சிமாடியிலிருக்கும்டேங்கில்தளும்பத்தளும்பநிரப்பிவைத்து விட்டுகுழாயைத்திறந்தால்தண்ணீரைவிழச்செய்கிறபைப்பின் திருக்கில் ஓட்டை விழுந்துவிட்ட நாளில் சரவணனுடன் வேலைபார்க்கும் மற்றொ ருவர் வந்து வேலைக்கென நின்ற போது ”இன்று நீங்கள் வேலைபார்க்க வேண்டாம்,இன்னொரு நாள் பார்த்துக்கொள்ளலாம்” என சொல்லி அவரை திரும்ப அனுப்பிய அன்று என்னிடம் வருத்தப் பட்ட சரவணன் கொஞ்ச நாள் வரை என்வீட்டுப்பக்கம் மோட்டார்ரிப்பேர்ப்பார்க்க வரவேயி ல்லை.அவரது வருத்தம் அவருக்கு,வேலைக்கு வந்தவர்களை திரும்ப அனுப்பிவிட்டார்கள் என/

சரி பரவாயில்லை,நமது ஆள் போதையில் வீட்டில் வேலைக்குப்போனது தவறுஎன்கிற சொல்லாறுதலுடன்சற்றுநாள்க்கழித்துஅவரேவந்து ரிப்பேராகிப் போன பைப்பை சரிசெய்து விட்டு போனவராக/

அன்றிலிருந்து இன்றுவரை மோட்டாரைப்போட்டவுடன் தண்ணீர் விழுந்து விடுகிறடேங்க்நிறைந்துவிட்டதாய்சொன்னஎனதுமகனிடம்தான்கேட்கிறேன்.

பார்த்துவிட்டுதான் சொல்கிறாயா அல்லது உத்தேசமாகச்சொல்கிறாயா என/

8 comments:

 1. "இப்படிக் கூட ஒரு நிகழ்வை அருமையாக சொல்ல முடியுமா...?" என்று ரசிக்கிறேன்...

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் திண்டுக்கல் தனபாலன் சார்,
   நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/

   Delete
 2. Replies
  1. வணக்கம் தளிர் சுரேஷ் சார்,
   நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/

   Delete
 3. ரொம்ப அருமையாச் சொல்லியிருக்கீங்க அண்ணா...

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் பரிவை சே குமார் அண்ணா
   நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/

   Delete
 4. உங்களுடைய இந்த பதிவு இன்றைய வலைச்சரம் http://blogintamil.blogspot.com/2015/07/thalir-suresh-day-7-part-2.html இல் அடையாளம் காட்டப்பட்டுள்ளது. நேரமிருப்பின் சென்று பார்க்கவும். நன்றி!

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் தளிர் சுரேஷ் சார்,
   நன்றி வலைச்சரஅறிமுகத்திற்கு/

   Delete