எதையும் விட வலியதாய் ஒரு விதவைத் தாயின் கண்ணீர்.
பேசிக்கொண்டிருக்கும்போதேகண்களிலிருந்துஇறங்கிச்சொட்டுகிறகண்ணீர்த் துளிகள் எதைச் சொல் கிறது அந்த நேரத்தில்,,?என்கிற கேள்வியை விடுத்து நிறையச்சொல்லவும் நிறையயோசிக்கவைக்கவும்செய்கிறது என்பதே அந்த நேரத்து நிதர்சனமாய்/
அவள்வரும்போதேஅப்படித்தான்வருகிறாள்முழுடென்சனுடனும்படபடப்புட னுமாய்/காலிங்பெல்சப்தம் இல்லை.ஒருகூப்பிடல்இல்லை, வீட்டினுள்தானே இருக்கிறோம்எனதிறந்துவைத்திருந்தகதவை முழுமையாக தள்ளிக் கொண்டு உள்ளே நுழைகிறாள்.
அப்பொழுதான் கவனித்ததாக எழுந்து நின்று வாம்மா என்கிறான்.அப்படி ஒன் றும் அவள் அவர்களது வீட்டிற்கு அடிக்கடி வருபவளோ அல்லது தொலை பேசியில் கதைப்பவளோ இல்லை/
ஏதாவது விசேச வீடு கல்யாணம் காது குத்து ,,,,இப்படியாக பார்த்துக் கொண் டால்தான் உண்டு,எங்களுக்குத்தெரிந்து அவளை நாங்கள் கோயிலில் பார்த்த ஞாபகமோஒருசின்னகேள்விப்படலோகூடஇல்லை.போகிறவருகிறஇடங்களில் பார்க்கிற போது விடமாட்டாள் லேசில்/
எப்டியிருக்கீங்க என்பதில் ஆரம்பித்து பக்கத்து வீடு சொந்தம் பந்தம் சமீபத் தில்நடந்தகல்யாணம்,குழந்தை பிறப்பு,சடங்கு வீடு ,உடல்நலம்தனது வேலை சம்பளம் தான் வேலை பார்க்கும் ஊரின் தன்மை.என நிறையவேபேசிநிறுத்து வாள்.
அவளதுபேச்சின்முடிப்பு இப்படித் தான் இருக்கும்,என்ன முன்ன மாதிரி ஆளப் பாக்கமுடியல.என/
பார்த்த மாத்திரத்தில் இப்படி தங்கு தடையற்ற நீரோட்டமாகபேசஎங்குகற்றுக் கொண்டாள் எனத்தெரியவில்லை.பொதுவாக மனதில் கள்ளம் இல்லாதவர் களுக்குத்தான் இது போலாய் பேச வாய்க்கும் என்பார்கள். அப்படியானதை அவளிடமிருந்துதான்கற்றுக்கொள்ளவேண்டும்.மனதிலிருந்துஎடுத்துக்கோர்த்த வார்த்தைகளை அவள் வாய் வழியாக முன் வைக்கும் லாவகமும் ஒட்டுதலும் ஈரமும் மன அவிழ்ப்பும்/சிறந்த மேடைப்பேச்சாளன் பின் வாங்க வேண்டும்.
அவளும்,அவனது மனைவியும் ஊரில் இருக்கிற ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில்ஒன்றாய்ப்படித்தவர்கள்.நெருங்கியசொந்தம்என்பதற்காகஅப்படியா அள்ளிக்கொண்டு வரும் படிப்புஒன்று போல/
அவள்முதல் ஐந்து ரேங்குகளுக்குள்ளாய்,அவனது மனைவி பத்துக்குள்ளாய்,,,/ ஆனால் மற்ற எல்லாவற்றிலும் ஒன்றாகவே,சொல்வாள் அவனது மனைவி/
அவன் எப்பொழுதும் போல் சட்டையில்லாமல் கைலியுடனும், மேலில் போட் டிருந்ததுண்டுடனும்கையில்டீடம்ளருடனும்/பையன்கள் இருவரும் பள்ளிக்கு கிளம் புகிற அவசரத்தில்/அவனது மனைவி சமையலறையில்/
படபடவெனவந்தாள்அவன்அமர்ந்திருந்தசுவரோரநாற்காலிக்குஇரண்டுநாற்காலி தள்ளி அமர்ந்தாள். முகம்இளகிஇளக்கமற்றும் சேதி சொல்லும் கண்களுடனும் யோசனையாயும் கலங்கியவளாயும்தெரிந்தாள்.
முன்னைவிடமுகம்களையாகவேகன்னக்கதுப்புகள்சதைபோட்டுஇறுகித்தெரிந் தன.கண்ணுக்குமைஇட்டிருந்தாள்.முகம்கொஞ்சம்களையாகவும்பாந்தமாகவும். முன்னை விட இப்போது சதை போட்டுத் தெரிந்தாள்.அவள் கட்டியிருந்த சேலை கலரில் பளிச்சிட்டுத்தெரிந்த சட்டையும் அதற்கு மேட்சாகவே/ கை யில் வைத்திருந்தலெதர்பைநல்லடிசைனாக/காலில்அணிந்திருந்த செருப்பின் தரத்தை கவனிக்கவில்லை.அவளை வழியனுப்பும் போதுதான் பார்க்க வேண்டும்.
முன்புபோல்அல்லாமல்பேரன்பேத்திஎடுத்திருக்கிறஇந்தவயதிலாவது இப்படி யானஆசைதுளிர்விட்டிருக்கிறதே/பாலிடெக்னிக் முடித்து விட்ட அவனது பையனுக்குகவுன்சிலிங்கில்பொறியியல்கல்லூரியில்இடம்கிடைத்து ள்ளது. அடுத்த திங்களன்று சேர்க்க வேண்டும்,அதற்குள் வங்கியில் கல்விக் கடன் வாங்கி விடலாமா எனக் கேட்கிறாள்.
இன்னமும் ஒரு வாரம்தான் இருக்கிறது அவள் சொன்ன திங்களுக்கு/ அவன் வேலை பார்க்கிற வங்கியில் அவனது கடை நிலை ஊழிய உத்தியோக வரம்பிற்குள் எதையுமே உறுதிபடச்சொல்லிவிட முடியாத நிலை. இன்னும் தெளிவாகச் சொல்வதானால் அந்தக்கடனைப்பற்றி முழுவிபரமும் தெரியாத வனாகவே,,சரிம்மா கேட்டுச்சொல்கிறேன் எனச்சொன்னான்.
அவளது அக்காவின்கணவனிடமும்இதைத்தான் சொல்லியிருந்தான். அக்கா வின் கணவர் இரண்டு நாட்களுக்கு முன்பாக போன் பண்ணிக்கேட்டார். அவரது பேச்சு உடனடியாக லோன் வாங்கியே ஆக வேண்டும்என்கிற ரீதியில் இருந் தது.
அக்காவும் மாமாவும் கிராமத்தில் டிராக்டர் வைத்து விவசாயம் செய்யுமள விற்குவசதியானகுடும்பப்பிண்ணனியுடன்.அவள்டவுனில்குடியிருந்துகொண்டு அருகில்இருக்கும்கிராமத்தில் ஆரம்ப சுகாதார நிலையத்தில் நர்ஸாக வேலை பார்க்கிறாள்.அவளது பிழைப்பிற்கு அது சரியாகிப்போகிறது.
ஒரு நாள் இரவு டிராக்டர் எடுத்துக்கொண்டு காட்டுக்கு உழுகப்போன கணவன் பாம்பு கடித்து இறந்து போனபோது ஆண் ஒன்றும் பெண் ஒன்றுமான இரு பிள்ளைகளூம் கண் முழியாத கோழிக்குஞ்சுகளாக/
”பிழைப்பிற்கு பிடிமானம் வேண்டும் நான் இந்த கிராமத்தில் இருந்து என் வாழ்வை நடத்த முடியாது,உங்களது கண் முன்னாலேயே பிச்சைக்காரிக்கும் கேவலமாகஆகிப்போவோம்நானும்எனது பிள்ளைகளுமாகஎனஅழுதுஅரற்றி அடம்பிடித்தபின் கிடைத்த வேலையாக அவளுக்கு இந்த வேலை வாய்த்திரு க்கிறது.
எது எப்படியோ இந்த வாழ்க்கை அவர்கள் போட்ட பிச்சை,அவர்களின் உதவி இல்லாவிட்டால்இந்நேரம்வாழ்க்கைசிதைந்துஅடையாளமற்றுபோயிருப்பேன். இரண்டு பிள்ளைகளோடு/
இந்த நினைப்பின் அடி நாதமே அவர்கள்இருவரின்முடிவுக்குசம்மதம் சொல்ல வைத்தது.தன்மகளுக்குதூரத்துஊரில்மாப்பிள்ளைபார்த்துவிட்டதைச்சொல்லி அவளது சம்மதம் எதிர்பார்த்தார்கள்.இதற்கு அருகிலேயோ அல்லது தூரத்தி லிருந்தோஒருவனைமருமகனாகக்கொண்டுவந்துவிட்டால்பிள்ளையைப்பார்த் துக்கொள்ளலாம் கண் குளிர என்கிற நினைப்பு/
தர்மபுரி எங்கே அருகிலேயா இருக்கிறது போய் வர,,?அது எந்தப்பக்கமோ என்னவோ,,?பழக்கமில்லாதஊரில்பழக்கமில்லாதமனிதர்கள் மத்தியில் போய் என்மகள்எப்படிகுடும்பம்நடத்துவாள்.வேறுஇடம்பார்க்கவாய்ப்புஇல்லையா,,,? அண்ணனிடம்பேசியபோதுதான்சொன்னார்/
இதுவேஓங் மகளுக்கு கெடச்சி ருக்குற நல்ல அதிஷ்டம்,பொழம்பாத சும்மா என்றார்.
அவன்வேறொன்றும்சொல்லிவிட்டதாகவோகேட்டுவிட்டதாகவோநினைவில் லை வீட்டிற்கு வந்திருந்தவளிடம்/பின்ஏன்அப்படி?சரசரவென இறங்கிச் சொட் டியது கண்ணீர். அழுகை க்கானஎந்தவிசும்பலும் இல்லைஅவளிடம். கையில் மடித்துவைத்திருந்தமஞ்சள்பையைக்கொண்டுமுகத்தைபக்கவாட்டாகமறைத்தாள்.
அந்தஅழுகைக்கான ஆரம்பம் அவளிடம்எங்கே நங்கூரமிட்டிருந்தது எனத் தெரியவில்லை. என்னம்மா,ஏன் இப்படி,எதற்குஎன்கிற அவனது ஆதரவான கேள்விக்குஅவனது மனைவி வேலையைப்போட்டு விட்டு வந்து விட்டாள் அடுப்படியிலிருந்து.
அவளருகே அமர்ந்தவள் பையனை தண்ணீர் கொண்டுவரச்சொல்லி குடிக்கச் செய்தாள்/பழைய பள்ளி நாட்களின் இறுக்கம் அவர்களிடம்.
என்ன லோன் வாங்கீரலாமா இன்னும் ஒரு வாரத்துக்குள்ள,வேற பேங்குல யும் போயி கேட்டுப் பாத்தோம்,அவுங்கவேறொரு நா வரச் சொல்லியிருக்கா ங்க. என அவள் மஞ்சள் பையினுள் வைத்திருந்த போஸ்ட் ஆபீஸ் சேமிப்புப் பத்தி ரத்தை எடுத்துக்காண்பித்தாள்.
அது அவளது மாமனாரின் பெயரில் இருந்தது,பேரனை வாரிசாக காண்பித் திருந்தார்.அதை அடகு வைத்து லோன் வாங்கலாமா எனக் கேட்டாள். நகை க்கு கடன் எவ்வளவு தருவார்கள் எனக்கேட்டாள்.
பையன் நேற்றுதான் நண்பனுடன் திருச்சி போயிருப்பதாகவும் அங்குள்ள ஒரு கல்லூரியில் இடம் கிடைத்திருப்பதாகவும் சொன்னாள்/ நண்பனும் சேர்ந்து இந்தசொல்லுதலின் ஊடாக சின்னப்பையன் அவன் எங்கு போய் யாரைப் பார் த்துஎன்னசெய்கிறான்எனத்தெரியவில்லை.எனபுலம்பவும் மறக்கவில்லை.
ஆண்துணையற்ற வீட்டில் எல்லாவற்றிற்கும் இப்படியாய் அலைந்து அல்லல் பட்டுசீரழியவேண்டியிருக்கிறது என்றவளின்கண்களில்முட்டிநின்ற கண்ணீ ரை துடைத்தவாறுஎழுந்தவளை என் மனைவி பாத்ரூம் கூட்டிச்சென்றாள்.
பார்வை திருப்பினான் அவளிலிருந்து.இன்னும் குளிக்காத உடம்பின் வியர் வை வாடையும் ,உடலின் கசகசப்பும் முகத்தில் முள்ளு முள்ளாய் குத்திட்டு நின்ற ஷேவிங் செய்யப்படாத முடியும் மனதை பிசைந்த அவளது அழுகை யும் ஒரு சேர உடலை அழுத்தி அமுக்கியது.
மனதின் கவனம் ஒரு இடத்தில் குவிய மறுக்கிறது.பார்வை வீட்டிற்குள் ஒவ்வொருஇடமாகமுட்டித்திரும்புகிறது.கடில்,பீரோ,மேஜைதையல் மிஷின், கதவு நிலை ஜன்னல் ,,,,என ஒவ்வொன்றாய் மோதி அடுக்கலையில் நிலை கொள்ளும் போது அவள் வருகிறாள்.அடுப்படியில் கிடந்த அறுக்கப்பட்ட காய்கறிகளின்மிச்சத்துண்டுகளின் மீதும் வெங்காயத்தோல்சருகுகளின் மீதும் மிதித்தவாறே வந்த அவள் கேஸ் சிலிண்டரோரம் சீரற்றுகிடந்த அரிவாள் மனையை எடுத்து நேராக வைத்தாள்.
ஸ்டவ்வில் எரிந்து கொண்டிருந்த தீயை மட்டுப் படுத்தி வைத்தாள்.ஸிங்கில் இரைந்து கிடந்த பாத்திரங்களின் மீது தண்ணீர் தெளித்தாள்.சரி வுடுங்க ஏங் கஷ்டம் என்னோட என்றவளாய் அடுப்படியிலிருந்து வெளியே வந்தாள்.
எவ்வளவோ சொல்லியும் சாப்பிடவும் டீக்குடிக்கவும் மறுத்துவிட்ட அவள் அவனிடம் வீட்டின் போன் நம்பரை வாங்கிக்கொண்டு போனாள்.
வாசல் வரை போய் அனுப்பிவிட்டு வந்த அவனை திரும்பிப் பார்த்தவாறு வேகமாக நடந்தாள். அந்த வேகமும் அதிர்வும் ஒரு விதவைத்தாயின் கண்ணீ ரையும் அதை ஒட்டிய அவளது செயல்பாடுகளையும் வலியதாய் ஆக்குகிறது,

(எனது முதல் தொகுப்பு காக்கா சோறிலிருந்து,,,,,,,,)
8 comments:
சூழல் சுழலாகி விட்டது... வேதனையுடன்...
வணக்கம் திண்டுக்கல் தனபாலன் சார்,
நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/
சுழல் சுழற்றி அடிக்கிறது வலியுடன்!
வணக்கம் தளிர் சுரேஷ் சார்,
நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/
அதான் நானும் யோசித்துக்கோண்டே இருந்தேன். எங்கேயோ வாசித்த மாதிரி.. தங்கள் நூல் காக்காச்சோறு என்று நீங்கள் இறுதியில் சொல்லியும் விட்டீர்கள். ஒரு விதவையின் மனதில் இரூக்கும் வலிகள், எண்ணங்கள் எளிதில் புரிந்துகொள்ள முடியாதவை. தொடர்ந்து பதிவுகளை வாசித்தும் கருத்துக்கள் கூறவும் இயலவில்லை. முடிந்தவரை பல பதிவுகளை வாசிக்கிறேன். நன்றி சார்...
சூழல் அருமை அண்ணா.
வணக்கம் விச்சு சார்,
நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/
வணக்கம் பரிவை சேக்குமார் அண்ணா,
நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/
Post a Comment