24 Jul 2015

பொழுதொன்றின் நகர்வில்,,,,,,,

அப்பொழுதுதான் வந்திருந்தான் பஜாரிலிருந்து,/

இருசக்கரவாகனத்தைஎங்குநிறுத்துவதுஎன்பதுஇப்போதையஇரண்டு
நாட்களுக் குள்ளானபெரும்பிரச்சனையாய் மாறிப்போனது.

மழைக்கு விழுந்து விடக்கூடும் வீட்டின் பக்கவாட்டாய் போடப் பட்டி ருந்த செட் என்கிற அவசரநிலை மனதை உறுத்த நேற்றைக்கு முன் தினம்தான் செட்டைப்பிரித்துப்போட்டிருந்தான் பந்தக்கார லட்சுமண னை  வைத்து/

”லட்சுமணன்தான்செட்டைபோட்டுக்கொடுத்தது,இப்பொழுதுஅதைப் பிரிக்க அவரே வருகிறார் என்பது ஒரு வினோத முரண்” என்றாள் மனைவி.

இதிலென்ன முரண்,ஆக்கியவரே அழிக்கவும் வருகிறார்,தேவேயை ஒட்டிப்போட்டோம்,இப்பொழுதுபழுதுதடைந்துவிழுந்துவிடும்நிலை யில்இருப்பதால்அவரையேகூப்பிட்டுப்பிரிக்கச்சொல்கிறோம்.
அதனால் என்ன கெட்டு விட்டதுஇப்பொழுது,பிரசவம் பார்த்த டாக்ட ரே,,,,,,,,,,,,அதுபோல்எனநினைத்துக்கொள்,,தேவைஇப்பொழுதுஅப்படி/ என்ன செய்ய,,,,,,,நாமும்கடந்த இரண்டு மாதங்களாய்நினைத்துக் கொண்டிருந்தோம்,நீகூடஎன்னிடம்கடிந்துகொண்டாய்,மழை,காற்று
என ஏதாவது ஒன்று பெரிதாய்சுழன்றடிக்கு மானால்விழுந்து விடும், ஆள் நடமாற்றமற்ற நேரத்தில் விழுந்து விட்டால் பரவாயில்லை. யாராவதுதெருவில்நடந்துபோகிறவர்களின்மீதுவிழுந்துதொலைத்து
விட்டால்அந்தபாரத்தையார்சுமப்பது,யோசித்துக்கொள்ளுங்கள்.சும்மா
எதற்கெடுத்தாலும்தலையாட்டிக்கொண்டுமற்றவேலைகளைதள்ளிப்
போடுவதுபோல்இதையும்தள்ளிப்போட்டுவிடாதீர்கள் ஆமாம்” எனச் சொன்னஅவளின்எச்சரிக்கைஒலியும்,அசரீரியுமாய்சேர்ந்துஒலித்துக் கொண்டிருந்தஇந்தஇரண்டுமாதஇடைவெளில்அப்பொழுதுசெய்வோம், இப்பொழுதுசெய்வோம்எனநினைத்து,நினைத்துஒருவழியாய்நேற்றைக்கு முன்தினமாய்செட்டைபிரித்தெடுத்துமூலையில்போட்டபின்சைக்கிள் மற்றும்இருசக்கரவாகனம்நிறுத்ததோதில்லாமல் போனது.

இரண்டுநாட்களாய்இரவுவேளையில்வீட்டின் மேற்குப்பக்கச்சுவரோ ரமாய்நிறுத்திவீட்டில்வேஸ்டாகக்கிடந்தபிளக்ஸ்பேனர்கொண்டுமூடி
நிறுத்தினான் இரு சக்கரவாகனத்தை/

எதற்கும்இருக்கட்டுமேஎனபிளக்ஸ் பேனர் கொண்டு மூடியது நல்ல தாய்ப்போயிற்று,இவன்அலுவலகம்விட்டுவந்தசாய்ங்காலமாய்கண்ணா
மூச்சி காட்டிக் கொண்டிருந்த மழை இரவு தூறலாய் பெய்திருந்தது தெரிந்தது.

போட வேண்டும் இன்னொரு செட்,இப்பிடியே இருந்தால் தாங்காது எத்தனைநாள்தான்வெட்டவெளியில்சைக்கிளையும்இருசக்கரவாகன த்தையும் நிறுத்துவது என மனைவியிடம் சொன்ன போதுவாயைப் பொத்திக் கொண்டு சிரித்தாள்.

”நீங்களாவதுஇப்பதைக்குள்ளசெட்டுபோடுறதாவது,ஒங்களுக்குஊர்
வேலைன்னாமொதல்லபாக்கத்தெரியும்,அதேதுவீட்டுவேலைன்னா தாம்சமாத்தான்செய்யத்தோணுது.இல்லன்னாபாக்கத்தோணும்.நீங்க ரோட்டுக்குப்போயிவீட்டப்பாக்குறீங்க,நாங்கவீட்டுக்குள்ள இருந்து ரோட்டப்பாக்குறோம்,அப்படிபாக்கையிலரோட்டுலஓடுறஒரு சின்ன எறும்பு கூட எங்களுக்குத் தெரியுது,ஆனா ரோட்டுல இருந்து வீட்டப் பாக்குற ஒங்களுக்கு வீட்டோட வெளிப்புறத்தோற்றம் மட்டுமே தெரியும்ங்குறது ஏங்கருத்து,எத்தன தடவ இதச்சொன்னாலும் உடன் படமாட்டீங்க நீங்க,அதுனாலஒங்ககிட்டஇதப்பத்தி பெரிசாநானும் ஒண்ணும் பேசுறதில்லை.கல்யாணம் ஆன புதுசுல மாஞ்சி,, மாஞ்சி அடிச்சிக்கிடேன்,இப்ப புள்ளைக,அவுக படிப்பு மத்த,மத்ததா செதற்ற கவனம் எல்லாம் சேந்து இதையெல்லாம் ஒங்களோட பேச விடாம ஆக்கிருச்சு,சரிவிடுங்க,அதுனாலபெரிசாஒன்னும்கெட்டுப்போயிடல  இப்ப, வெளியில அலையுறதுல காம்பிக்கிற மனசொகத்த கொஞ்சம் வீட்டு வேலை செய்யிறதுலகாம்பிங்க”,என்றாள்.அவள் சொல்வது சரிதான் எனத் தோணியது.
அவள் சொன்னதும்.வண்டியை ஓரமாய் நிறுத்தினான்.

வெயில்சுடாதமதியவேலையின் இரண்டரை மணி பொழுதது. வெயி லாய் மிகவும் எரிக்கவும் இல்லை.அதே நேரம் அது அற்றுமாய் இல்லை. மாறாக வீசியமென் காற்று பட்டும்,வீசிய குளிர் தீண்டியும் உடல் ஜில்லிட்டு இதம் காட்டியது.

இன்றைக்கு மழை பெய்தாலும் பெய்யலாம்.மாதப்பிறப்பு இன்று. மாதப்பிறப்பின்குணம்தனியாய்த்தெரிறதுபோலும்.நேற்றைக்குமுன்
தினம்பெய்தமழையின் பலனா என்னவெனத் தெரியவில்லை.

ஜில்லிட்டிருந்தமண்ணில்ஊர்ந்துதிரிந்தஎறும்புகள்கூடதன்கதை
சொல்லியவா றும், ஒன்றன் பின் ஒன்றாய் இரை சுமந்தவாறுமாய்/

ஈரம் பாரித்திருந்த தரை எறும்புகள் செல்லஓரம் காட்டி வழி விட்டு விட்டுவீட்டின்முன்குளம் போலதேங்கியிருந்ததண்ணீரை காட்சிக்கு வைக்கிறது.பொதுவாகவேஇதுபோல்கட்டிக்கிடக்கிறஅல்லதுதேங்கி
யிருக்கிற தண்ணீர் வெளியைப்பார்த்துமாய்ச ந்தோஷமாகிப்போகி றது  மனது.

இப்படித்தான்சென்றமாதம்ஊருக்குப்போயிருந்தசமயம்மனைவியிடம்
சொல்லி விட்டுகாலையில்பத்துமணிக்குகண்மாய்க்கு குளித்து வரப் போனவன் மதியம்2.00மணியைநெருங்கியபொழுதில்மனைவி வந்து அழைத்ததும் தான் வந்தான்.

அன்று இரவு காய்ச்சல் கண்டு உள்ளூர் டாக்டரிடம் போய் ஊசி போட் டது தனிக்கதை, உள்ளூர்க்கார்தான், அவர்டாக்டர்இல்லை, ஆனால் அந்த ஊருக்கு மட்டும்இல்லை,சுத்துப்பட்டிஅனைத்திற்கும் அவரே டாக்டர்,மில்ட்ரி ரிட்டை யர்டாக்டர் ஒருவர் டவுனில் வைத்திருந்த ஆஸ்பத்திரியில்கம்பவுண்டராக பணிபுரிந்தவர்,அனுபவம் ப்ளஸ் பழக்கம் கைகொடுக்ககிட்டத்தட்டஇருபது வருடங்களாய் அந்த ஊரிலேயேநோய் தீர்க்கும் சாமியாய்இருக்கிறார்,

அவரிடம்காய்ச்சல்வந்த காரணத்தைச் சொன்ன போது தலையில் அடித்துக்கொண்டு சிரித்தார்.இந்தமாதிரி ஆளக்கண்டமா,எங்க ஊருப் பக்கமெல்லாம்தண்ணிகர பொரண்டு ஓடும்,வீட்டுக்கு முன்னாலயே கால்வாய் கூட ஓடும், அப்படியிருகுறயெடத்துலயே கூடகுறிப்பிட்ட நேரத்துக்கு மேல நான் தண்ணிக் கொளத்துலஇருந்ததில்ல, நீங்க என்னா டான்னா,,,,,, வயசுக்கு ஏத்த,ஜாக்கரதையாஇருக்க வேணாம், ஏதாவதுஜன்னிகின்னி வந்துருச்சின்னு வச்சிக்கங்க, செரமம்தான, என்றார்/

என்மனைவியைதனியாய்கூப்பிட்டுபாத்தும்மாஅவராட்டம்நடுச்சாமத் துல எந்திருச்சிஎங்கிட்டாவதுகொளம் குட்டைன்னுகுளிக்கப் போயி றாம,,,,,என்றார்,அதைச்சொல்லிமனைவியும்பிள்ளைகளும்இப்பொழுதும் கேலிபேசுவார்கள்.


நேற்றைக்குமுன்தினம்சரியானமழைஎனச்சொல்லிவிட முடியாது. ஆனால்நல்லமழை,மழைபெய்தநேரம்இவன்ஏ.பி.ஆர்ரோட்டில்இருந்
தான்.கோவிலுக்கெல்லாம்போயிருக்கவில்லை,ஆனால் கோயில்
இருக்கிறரோட்டில்இருந்தான்.கோயிலுக்குள்செல்வதைஇவன்எப்பொ ழுதும் தவிர்க்கப்பார்த்ததில்லை, ஆனால்செல்லத்தான் சந்தர்ப்பம் வாய்க்கவில்லை.எப்பொழுதாவதுமனைவிபிள்ளைகளுடன்செல்லும் போதுசாமிகும்பிடுவதைத்தவிர்த்துசாமிகும்பிடவருகிறவர்களையும், அங்கிருக்கிறகோபுரச்சிற்பங்களையும்பார்த்தவனாய்இருந்திருக்கிறா ன்.
“உஸ்ஸீ,,,,கோயிலுக்குள்ளவந்துட்டுஎன்னஇதுபிடிவாதமா,,,,,,,என
காதருகில்மனைவிமுனகியபோதும் கூட இவன் அப்படித்தான் இருந் திருக்கிறான்,பரவாயில்லைஅதனால்கொஞ்சதிருநீராவதுபூசிவிடுகி றேன்காட்டுங்கள்நெற்றியைஎன்பாள்,ஏ.பி.ஆர்ரோட்டில்உள்ளவெளி யில் புத்தகச்சந்தை போட்டிருந்தார்கள்.காலை பத்து மணி வாக்கில் காய்கறி வாங்க பஜார் போன போது புத்தகச் சந்தையின் பேனர் கண்ணில் பட்ட இடம் மகப்பேறு மருத்துவ மனையாய் இருந்தது. அங்கு புத்தகக்கண்காட்சியின் பேனர் இருந்தது நல்லஒற்றுமை யாயும் கூடுதல் பார்வைப்பெற்றதாகியுமாய் தெரிந்தது

இவனதுநண்பன் புத்தகஸ்டாலில் நின்றான்,

”மனிதவாழ்வியலைகதைகளாய்,கவிதைகளாய்கட்டுரைகளாய்,
தத்துவவிசாரங்களாய்சொல்லிச்செல்கிறபுத்தகங்கள்இங்கேபறவை யின் இறகு விரிப்புப் போல் மென்மை படர்ந்து அடுக்கப்பட்டும், விரிக் கப்பட்டுமாய் காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கிறது,வா வந்து பார், பிடித் தால்எடுத்துக்கொள்,இல்லையானால்பரவாயில்லை,பணம் இல்லை என்றால்கூடபரவாயில்லை, இரண்டு நாட்கள் கழித்துக்கூடகொடு, இல்லையென்றால் சம்பளம் வாங்கியதும் கூடக் கொடு,ஒன்றும் இல்லைஅதனால்.பணம் கிடக்கிறது பணம்,முதலில் உள்ளே வா நீ,உன்னைப்பற்றியும்,உன் புத்தக வாசிப்பைப்பற்றியும் வெகுவாய் அறிவேன் நான்.ஒரே நேரத்தில் இரண்டு மூன்று வேறுபட்ட விஷ யங்கள்சொல்லும்புத்தகங்களைபடித்துஉள்வாங்குபவன்நீ/உனக்கேற்றது
இருக்கிறது இங்கே”எனச்சொன்ன, அவனது வார்த்தையின் கைபிடித் தவனாய் தேடி எடுத்து 250 ரூபாய்க்கு ரொக்கமாகவும் 800 ரூபாய்க்கு கடனாகவும் வாங்கி வந்தான் பத்து சதவீதகழிவில்/அன்று வாங்கி வந்த புத்தகங்கள் ஒன்றைக் கூட இன்னும் படித்தபாடில்லை.

காய்கறிவாங்கவைத்திருந்தகாசுபுத்தகத்திற்குப்போய் விட்டது ,இனி சாய்ங்காலமாய்வாங்கிகொள்ளலாம் காய்கறி,வீட்டில் காசு கையிரு ப்பு எவ்வளவு இருக்கிறது எனத்தெரியவில்லை. இன்னும் பத்து நாட்கள் இருக்கிறது ஒண்ணாம் தேதி பிறக்க/

இது போலானவர்களின் சிரமத்தை போக்கும் விதமாய் புத்தகக் கண்காட்சி நடந்தஒருமாநகராட்சியில் அந்தமாவட்டக் கலெக்டர் அரசு ஊழியர்களுக்கு மாதத்தவணையில் புத்தகம்அளிக்கப் பணித் தார் பதிப்பகங்களை, என செய்தி படித்திருக்கிறான்,

இதுஅப்பொழுதேஞாபகம்வரவில்லை.இல்லையெனில்நண்பனிடம்
சொல்லியிருக்கலாம்எனத்தோணியது.இத்தனைக்கும்நண்பன்
புத்தகங்களைசுமந்துகொண்டுஇவனுடன்வந்தான்இவன் வேண்டாம் நீ போய்உன் வேலையைப் பார்,சக ஊழியர்கள் கோபித்துக் கொள்ளக் கூடும்.என அவனிடம்சொல்லியும் கேட்காமல் டீக்கடை வரை வந்தான்.

எப்பொழுதும்இவன்வழக்கமாய்டீசாப்புடுகிறகடைதான்,இப்பக்கம்வந்து
விட்டால்கூடவேஇந்தடீக்கடையின்மாஸ்டரும்இவனுக்குஞாபகம்வந்து
விடுவார்.

இவன் இப்படியாய் தனித்து டீக்கடையில் நிற்கிற வேளைகளில் நண்பர்கள்அல்லதுதோழர்கள்யாராவதுபோன்பண்ணிக்கேட்டால்உடனே அலுக்காமல் சொல்வான்,”ஆமா நிக்கிறேன் டீக்கடை வாசல்ல, டீக் கிளாஸீம்,கையுமா,டீ இருக்கு, வடைஇருக்கு, டீமாஸ்டர்பாய்டீப் போடுறாரு, கல்லாவுல அன்புஅண்ணனாதென்படுறவரு காசு வாங் கிப் போடுறாரு,வெயில் பரவாயில்லாம அடிச்சிக்கிட்டுஇருக்கு, இந்தமத்தியானநேரத்துலரோட்டுலநாலஞ்சு சைக்கிள் போயிருச்சி, ரெண்டு டவுன் பஸ்ஸீ கடந்துருச்சி,பத்துக்கும் மேற்ப் பட்டடூ வீலர் போயிட்டும் வந்துக் கிட்டும் இருக்கு,தூரத்துல தெரியிற ரயில் வே கேட் ரயிலோட வருகைய எதிர்பார்த்து பூட்டுறதுக்காக தெறந்து வச்சி காத்துக்கிட்டு இருக்கு” என்றிருக்கிறான் பெரும்பாலுமாய்/

கோவில் வாசலை ஒட்டி இருபக்கமுமாய் பாவு நெய்தது போல இருந்த கடைகளில் ஒன்றாய்த்தான் இவனது பதிவு டீக்கடை. நண்ப னுக்குள் அப்படி ஒரு பழக்கம் இருந்தது இவனுக்குத் தெரியாது, தற்செயலாய் திரும்பிப் பார்க் கிறான்,காணவில்லைநண்பனை, சரி நேரமாகிறதுஎனபுத்தகஸ்டாலுக்குப்போயிருக்கலாம்எனபோன்பண்ண செல்லைஎடுத்தபோதுஅவன் நடை பாதை வியாபாரிகளை படம் எடுத்துக்கொண்டிருந்தான்.

ஆண்ட்ராய்ட்செல்,பளிச்செனவிழும்போட்டோ/பெரும்பாலுமாய்
இப்படியாய்விளிப்பில்வாழும்மக்களின்புகைப்படங்களைஇவனிடம்
நண்பன்காண்பிக்கும்போதுஇவன்எங்கிருந்தோவாங்கிவந்துகாண்பிக்
கிறான்எனத்தான்நினைத்திருந்திருக்கிறான்,ஆனால்இப்பொழுதான்
தெரிகிறது.முதலில்இந்தத்தவறுக்காய் அவனிடம் நிபந்தனையற்ற மன்னிப்புக்கேட்கவேண்டும்.

அவனிடம் இதைச் சொன்னால் கட, கடவெனச்சிரித்து ”அட போடா” என்பான்.

வீட்டிற்குப்போனதும் பையை இறக்கி கீழே வைக்கும் முன்பாகவே சின்ன மகள் ஓடோடிவந்து ”அய்புத்தகம் என வாங்கிக் கொள்கி றாள். என்ன ஒங்கப் பாவுக்கு காய்கறிச்செடியில புத்தகம் பூத்திருச்சாமா”? என மனைவி பேசிக் கொண்டிருக்கையிலேயே புத்தகங்களில் ஒன் றை எடுத்து விரித்துப்பார்த்த இளைய மகள் அதற்குள்ளாய் ஐந்தாறு பக்கங்களைக் கடந்து விட்டாள். அய்,,,,,,,,ரொம்பநல்லாயிருக்குப்பா புத்தகம்,எனக்குரொம்பப்பிடிச்சிருக்குப்பா,இதநானேவச்சிக்கிர்றேன்ப்பா, முன்னாடிஅட்டையிலபேருஎழுதிக்கிரட்டுமா” என்றாள்.
“வச்சிக்கப்பகண்ணு,ஒனக்கில்லாம யாருக்குப்பா இதெல்லாம், இந் தா அந்தப் புத்தகத்தஎடு,இது ஒங்கம்மாவுக்கு பிடிச்ச புத்தகம்மா, ஒங்கம்மாவும் நீயும், ஓங்தம்பியுமாஇங்கவீட்டுக்குள்ள இருக்குற புத்தகங்கள எடுத்து பேர எழுதி வச்சிக்கங்க,என்றான் இவனும்”.

அம்மாவுக்குபுத்தகம்புடிக்குமாப்பா,உண்மையாவா,பின்னஏன்அத
வெளியிலவேசொல்லமாட்டேன்றாங்கப்பா,அவுங்க புத்தகம் படிச்சி நானோ,தம்பியோஇதுவரைக்கும் பாத்ததில்ல,என்ற அவளது பேச்சுக் கு,,,,,”இல்லப்பா,ஒங்கஅம்மாபடிப்பப்பத்திஒனக்குத்தெரியாது,இப்ப
யாராவாதுஎழுதுனகதையில இருந்து ஜெனரெல்நாலேஜ் வரைக்கும் எதுவேணாலும்கேளு,படக்குன்னுசொல்வா,ஒங்கஅம்மாபடிப்பெல்லாம் யாருக்கும் இடைஞ்சல் இல்லாம நீங்களெல்லாம் தூங்கிப் போன பெறகோ,பள்ளிக்கூடத்துக்குபோனபெறகோதான்இருக்கும். என்கிற இவனதுபேச்சுக்குசரிதான் இப்படி போயி மாசக்கடைசியும் அதுவுமா ஆயிரக்கணக்கானரூபாய்க்குபுத்தகம்வாங்கீட்டு
வந்துருக்கீங்களே,வீட்டுலஏதாவதுகையிருப்புஇருக்கான்னுயோசிச் சிங்களா,இல்லையா,”?

”யோசிக்காமஒன்னும்இல்ல,கடனுக்குவாங்குனதுதான்எல்லாம், குடுத்துக்கலாம்,பின்னாடி/                                 
          நானாவது இருந்து வேன்போல இருக்குசும்மா, ஒன்னால புத்தகம்            
         படிக்காமஒருநா,ஒருபொழுதுகூடஇருக்கமுடியாது போல இருக்கே,”
        -இவன்/
கையிலகாசுஇல்லாமலயா,,,,,,?,புத்தகஸ்டால்லஇருக்குறஃப்ரண்டுகிட்ட
ஆயிரம் ரூபாய்வாங்குனேன்,கைக்காவலுக்குஇருக்கட்டும்முன்னு, ஏற்கனவேவீட்லரெண்டாயிரம்இருக்குன்னுசொன்னயில்ல,காணாது பத்துநாப்பொழுதுக்கு?”


சின்னவளுக்குத்தான்ஹாக்கிபேட்வாங்கனும்.இப்பஎன்னஇந்தப்பணத்து
லவாங்கிக்கிறலாம்,800ரூபாதான,போனாபோகுது,வாங்கிப்போட்டாஅவ சந்தோசமாவெளையாடிக்கிருவாஎன்றான்,

“இல்லப்பா,,ஸ்கூல்லமிஸ்கிட்டகேட்டிருக்கேன்ப்பா,ஸ்கூல் பேட்ல யிருந்து ஒண்ணுதர்ரேன்னுசொல்லீருக்கா ங்கப்பா,ஒருபத்துநாளு ஆகும்,அந்த பேட்டு வர்ரதுக்கு,அதுவரைக்கும் லீவுபோடுற புள்ளைக பேட்டமாத்தி,மாத்திவாங்கிசமாளிச்சிக்கிறேம்பா,,,விடுங்கப்பாஎனக்கு பேட்ஒண்ணும்பெரியபிரச்சனையில்லப்பா,நீங்கவீட்டுப்பாட்டப்பாருங்
கப்பா,என்றவளைதிரும்பிப்பார்த்தபோதுமுதிர்ந்தவயதுமூதாட்டியாய்த் தெரிந்தாள்.
அவளையும்,டீ.விபார்த்துக்கொண்டிருந்தமூத்தமகனையும்அருகில்
கூப்பிட்டு உச்சி முகர்ந்தஇவன்மனைவியையும் அருகில் அழைத்தா ன்.அன்பொழுகியபார்வையுடன்வந்தஅவள்இவனைப்பார்த்ததும் வெட்கிதலைகுனிந்து கொண்டாள், ”போங்க அங்கிட்டு” என இவனது தோளில் சாய்ந்தவாறு/

பஜாரிலிருந்து அப்பொழுதான் வந்திருந்தான்/

3 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

அழகான நிகழ்வை கண்ணில் காண்பதாய்... அருமை...

”தளிர் சுரேஷ்” said...

மகளின் வீட்டுப் பொறுப்பும் புத்தக ஆர்வமும் சிறப்பாக தெரிந்தது! வழக்கம் போல் அருமை!

vimalanperali said...

வணக்கம் தளிர் சுரேஷ் சார்,
நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/