8 Jul 2015

வெல்லக்கட்டி,,,,,


எங்குமேகாணக்கிடைக்கிறதுதான்காசியப்பன்கடைகள்.காசியப்பன்கடைஎன்றால்எங்களூரில் மிகவும் பேமஸ்.பிறக்கப்போகிற குழந்தை தவிர அனைவருமாய் அறிந்த கடை. 

காசும்,பணமுமாய்கைகோர்த்துஉறவாடிக்கொள்ளாதகாலங்கள்அது.இப்போதி
லிருந்துஒருநாற்பதுஆண்டுகள்பின்னோக்கிவைத்துக்கொள்ளலாம். கட்டளை யிட்டது போல காலங்களில் வானம் அவிழ்ந்து பெய்கிற மழையும், கோடை யில் அடிக்கிற வெயிலும் ஆடியில் தேடி விதை க்கிற பட்டங்களும் நிறை கண்மாய்த்தண்ணீரும் மடை வாய்க்காலில் நிறைந்த நீரும் வயல் நிறைந்து பயிர்களுமாய் செழித்திருந்த காலமது. 

களையினூடேபயிரும், பயிருனூடே களைகளுமாய் கறுப்பு முடிகளுக்கு மத்தி யிலிருக்கிற வெள்ளை முடியாயும்,வெள்ளை முடிகளை தூக்கிக் கொண்டு தெரிகிற கறுப்பு முடியாகவும் காட்சிப்படும்.

உயர்ந்து நிற்கிற கண்மாய்க்கரை மேட்டில் செல்கிற கருநிறம் பூசிய தன் இரண்டு ஓரங்களில் வலப்புறம் கண்மாயையும்,இடப்புறம் வயல் வெளியை யுமாய் காட்சிப் படுத்திய ஊரது.

கண்மாயில் அலையடிக்கிற நீர் மீதும்,வயல்களில் தலையசைக்கிற பயிர்கள் மற்றும் மரம் செடி கொடிகள் மீதும் தழுவிப்படர்கிற காற்றாய் உறவு பூத்த நெஞ்சங்களும், நட்பு கொண்ட உள்ளங் களும் பரஸ்பரம் ஒருவர் மீது ஒருவர் நன் மதிப்பு கொண்டும், உள்ளச்சுத்தியோடுமாய் வாழ்ந்து வந்த காலங்கள் அவை,எதைப்போட்டாலும் முளைக்கிற மண்ணாய் காட்சிப்பட்ட அது அவர் களது உழைப்பையும், வியர்வையையும், தன் ஈரம் காயா உடல் மீது அப்பியிருந்தது/

கணக்கும்,வழக்கும்காசும்,பணமும் இருக்கட்டும் உங்களோடு. உழைப்பும், வியர்வையும் அதன் உன்னதமும் இருக்கட்டும் எங்களோடு என போகத்திற்கு ஒரு முறை விளைகிறவிளைச்சலை கமிஷன் கடையில் விற்று விட்டு காசும் பணமுமாய் வாங்கி வந்து வைத்திருக்கிற பணத் திற்கு சரியாக கனக்குக்கூட பார்க்கத்தெரியாமல் குத்து மதிப்பாய் செலவளித்து வாழ்ந்து தெரிந்த வெள்ள ந்தி மனிதர்கள் குடிகொண்டிருந்த பூமியுமாய்.

கலர்க்கலராய் கொம்புகளில் அடித்த பெய்ண்ட் உதிர்ந்திருக்க தன் உயரம் காட்டிச் செல்லும் காளை மாடுகள்,கொஞ்சமாயும் அப்புராணியாயும் செல்லும் பசுமாடுகள்.கூட்டம்,கூட்டமாய்தன் தினவுகாட்டிச்செல்கிற எருமைகள், உடலி ல் வளர்ந்து கிடக்கிற ரோமத்தின் அடர்த்தி காட்டிய படி நடமிடும் ஆடுகள். வீதிகளெங்கும் நிறைந்து வீசுகிற வாசனையும், காணக் கிடைக்கிற காட்சி களும்வீதிகளில்நிறைந்து கிடக்கிறசாணத்தையும் கோமியத் தையும்,ஆட்டுப் புழுக்கைக ளையும், தரையில் உதிர்ந்துகிடக்கிறகோழி இறகுகளையும், எச்சங் களையும் நிறைந்து காட்சிப் படுத்திய வாறும் பூத்தும்,சிரித்துமாய்/ 

அதிகாலை4.30திற்கெல்லாம் விழித்துக்கொண்டு விடுகிற டீக்கடைகள் அந் நேரமே கையில் டீக்கிளாஸீடன் மனிதர்களை அறிமுகம் செய்யும். அந்நேர மேஊரின்துவக்கத்தை பிள்ளையார் சுழியிட்டு ஆரம்பித்து வைக்கிறவர்களாக அவர்களே ஆகித் தெரிகிறார்கள்.ஊர் மந்தையில் சின்னதாய் ஒரு குடிசை தாங்கி காட்சி தருகிற அந்த இரண்டு டீக்கடைகள்தான் ஊரின் தேநீர் விரும் பிகளுக்குதாக சாந்தி அளிப்பதாக. மத்தியான வெயிலில் டீக்குடிகிற டீ ஆர்வ லர்களை தன்னகத்தே தக்கவைத்துக் கொண்டிருக்கிற அந்த இரு கடைக ளில் ஒருகடைமதியம்ஒருமணிக்குமாய்,இன்னொருகடைசற்றே பிந்தியுமாய்மூடப்படுகிறஅதிசயம்இங்கே அன்றாடங்களில்/ ஒரு மணி நேரம் முன்னப்பின்ன என்கிற சொல்லாடலுக்கு உட்பட்டு/


சொல்லாடல்சரிதான்.கடைமூடுவது சொல்படியா அல்லது முன்னப்பின்னவா என்கிறதெல்லாம் காசிநாதன் அகராதியில் வந்திருக்கவில்லை.

24 நான்கு நேர டீக்கடை அது.இப்போது பலசரக்குக்கடை வைத்திருக்கிற இடத் தில் முன்பு டீக்கடைதான் வைத்டிருந்தார்.டீ,வடை மொச்சை என்கிற ஜபர்த ஸ்தான ஏற்பாடுடன்/ தூங்குகிற நேரம் தவிர்த்து அவரிடம் வந்து டீக்குடிக்க ஆள் இருக்கத் தான் செய்தார்கள். காலை எழுந்து வருகிறவர்கள் முதல் மாலை வேலைக்கு சென்று திரும்பி வருகிறவர்கள்,இரவு வீட்டில் மனைவி மக்களுடன்சண்டைபோட்டுவிட்டுமனதில்மல்லுக்கட்டு நிரம்ப வந்து கடித்துக் குடிக்கிற டீயும்,உடைத்துச்சாப்புடுகிற வடையும்எனசாப்பிடுபவர்களுக்காய் இரவு ஒன்பது மணிவரை கடை திறந்திருக்கும்.

டீ வாங்கலையோ,டீ,,,,,,என குரல் கொடுக்க மறந்து போகிற காசிநாதனை ஞாபகப்படுத்து கிறவர்களாய்இருக்கிறார்கள்இரவு 9 மணிவரை டீக்குடிக்க வருகிற ஆட்கள்.அவ்வாறாய் வந்து போகிற கடைசி டீத் துளியின்மனிதர்கள் தருகிற காசின்அல்லது சொல்லிச்செல்கிறகடனின் அடையாளங்களுடன் அணைக்கப்படுகிற அடுப்பு எந்நேரமும்பால்ச்சட்டி சுமந்தே/

அடுப்பை சுத்தம் செய்கிற அவரது கவலையெல்லாம் நெருப்புக்கு விறகு செலவாகிப் போகும், இல்லையென்றால் அடுப்பில் எந்நேரமும் சட்டியை ஏற்றி வைத்துக் கொண் டே இருக்கலாம் என்பதே/ 

பாலுக்கென ஒன்று,தண்ணீருக்கென பிறிதொன்று என இரண்டாய் காணப் படுகிறசின்னதேக்சா அளவிலான ஈயச்சட்டிகள் அடுப்பில் காய்ந்து கொண்டே/ அப்படி காய்ந்து கொண்டிருக்கிற சட்டி கள் ஒன்றில் இரு நாளின் இரவுப் பொழுதில் காலியாய் எரியாத அடிப்பில் ஏறி வைக்கப்பட்டிருந்த சட்டியில் இறந்த பூனை ஒன்று யாருக்கும் தெரியாமல் ரகசியமாக விழுந்து விட்டது என்கிறார்கள்.

உயரம் காட்டி நின்ற அடுப்பாதலால் விழுந்த பூனையை கவனிக்காமல் மறு நாள் அந்தப் பாத்திரத்தில்அப்படியே தண்ணீர் ஏற்றி டீப்போட்டு விட்டார் என்கி றது தகவல் அறிந்த வட்டா ரங்கள் சொல்லிச் செல்கிறதாய் ஒரு பேச்சு இருந் தது ஊருக்குள்/அப்படியெல்லாம் காசிநாதன் போட்ட டீ திக்காக இருந்ததற்குப் பதிலாய் ஒரு மாதிரி கிக்காய் இருந்தது.அந்த கிக் அனைவரிடமுமாய் குடி கொண்டிருந்த நேரங்களில்தான் கட்டு படியாக வில்லைஅவசர அவசரமாய் டீக் கடையை மூடி விட்டு பலசரக் குக் கடையை ஆரம்பித்தார். 

சரி பலசக்குக்கடைக்கு எதற்கு வண்டி மாடெல்லாம் என அவர் தவிர யாருக் கும் தெரிந்திருக்க வில்லை.இப்போது போல் அப்போதெல்லாம் முக்குக்கு மூணு கடைகள் கிடையாது, அல்லது நினைத்த நேரம் நினைத்த மாத்திரம் பக்கத்து நகரம் சென்று இருசக்கரவாகனத்தில் சரக்கு வாங்கி வருகிற பழக் கங்கள்முளைத்துக் காணப்பட்டதில்லை. 

அப்படியிருந்த காலத்தில் காசிநாதன் கடை தேடி பக்கத்து ஊர்களிலிருந்தெ ல்லாம் சரக்கு வாங்க ஆட்கள் வந்ததில் ஆச்சரியம் ஒன்றுமில்லைதான். 

அப்படி நிலைகொண்டிருந்த கடை மிகவும் சின்னதாகவும் அல்லாமல் பெரிய தாகவும் அல்லா மல் நிலை கொண்டு காட்சி அளித்ததாய்/

ஆனால் அந்தமாட்டு வண்டி இருக்கிறதே அவரது கையில் படுகிற பாடு சொல் லி மாளாது. தினசரி வேலை இருக்கிறதோ இல்லையோ வண்டியை பூட்டி கொண்டு கிளம்பி விடுவார் டவுன் நோக்கி/

ஒற்றைமாட்டுவண்டு கூட்டு வண்டிசைஸில் சின்னதாய் காட்சிப்பட்டு சென்ற பயணம் நேர்கொண்ட பயணமா அல்லது சீரற்றதா எனவெல்லாம் சொல்ல இயலாது.

மார்க்கெட்,காய்கறி,மாம்பழப்பேட்டை,மாம்பழங்கள்,இதர,இதரவென அள்ளி வருவார்.அப்படிஅள்ளிவருகிறவைகளில்அரிசிபருப்பும்அடங்கும்சமயங்களில்/ இவர் என்ன கடையில் போய் வாங்குவார சரக்குகளை அல்லது சூரை போடும் போது அள்ளி எடுத்து வந்துவிடுவாரா என பேசிக்கொள்ளாதவர்கள் இல்லை ஊருக்குள்/

பத்துபைசாவிற்குப்புளி,நாலணாவிற்குபொரிகடலை,பத்துபைசாவிற்குதேங்காய்ச்சில் ஒரு ரூபாய்க்கு நல்லெண்ணை,,,,,,,,,,,,,,,,எனதருகிறஅதிசயம்அவரதுகடையில் நடக்கிற போது இந்தப்பேச்செல்லாம் அழுங்கிப்போகும் தன்னாலே/

ஊரே நின்று ஒட்டு மொத்தமாய் சரக்கு வாங்கினாலும் கூட அவரிடமும், அவரது மனைவியிடமும் இருக்கிற நிதானம் அவரது கடைக்கு அடையாள மாய்/

தபால் பை டரவுசரும்,தோள்ப்பட்டையோரம் கிழிந்த சட்டையும், புத்தகங்கள் சுமந்த மஞ்சள் பையுமாய் பள்ளி முடிந்தவுடன் வசதியாய் இருக்கிற நாங்கள் (அப்பொழுதெல்லாம் கையில் ஐந்து பைசாவிற்கு மேல் வைத்திருந்தால் வசதி மிக்கவர்கள்) நேராகச்செல்வது காசிநாதன் கடைக்கே/கடைக்குச் சென்ற பெரு ம்பாலானவர்களின்வாக்குபொரிகடலைப்பக்கமாகவேஇருக்கும். கை நிறைய வைத்துச்சாப்புடுகிறஅளவிற்கு நிறைந்து தெரிகிற பண்டம் அதுதானே? ஆத லாலே பிடிக்காவிட்டாலும் கூட அது அனைவரினது பிடித்த தின்பண்டங்களி ன் லிஸ்ட்டில் காணப் பட்டதுண்டு. 

எங்களுக்குமட்டும்எனஇல்லை.பெம்பாலனவர்களின்தின்பண்டம்அதுவாகவே
இருக்கும். வடக்குத் தெருவின் வாசலை ஒட்டி இடது புறசந்தில் இரண்டாவ தா ய் காணப்பட்ட கட்டிட மாய்/ 

கடைக்கு என ஏது அப்பொழுதெல்லாம் தனியாக கட்டிடங்கள்.அதுவும் கிராம த்தில்/ அந்த வகையில் வீடே கடையாய் காட்சிப்பட்டுத் தெரிந்தது.சுண்ணாம்பு உதிர்ந்த சுவர்களும், வெள்ளை மங்கி பழுப்புகாட்டி கரை படிந்த சுவர்களுமாய் அழுக்குப் பிடித்த கட்டிடமாயும் காட்சிதரும்.

உப்பிலிருந்துகாய்கறிவரை எல்லாமுமாய்அடைபட்டு காணக்கிடைகிற கடை யில் என ஒரு பெரிய வம்பென்றால் எந்தப்பொருள் எங்கிருக்கிறது எனத் தெரியாதபடி எல்லாவற்றின் மீதும் எல்லாமும் கிடக்கும்.உப்பு மீது துவரம் பருப்பும்,பருப்பு மீது அரிசியும்,அரிசி மீது காய்கறிகளும் கறிவேப்பிலையும் எண்ணெய் டின்னின் மீது வெல்லக்கட்டிகளும், வெல்லக்கட்டிகளின் பக்கத் தில்சேவுடின்னும்,அதனருகில்சீவல்வைத்திருக்கிறகொட்டானுமாய்அதிலும்,  இதிலும் என மாறி,மாறி கிடக்கும்/

கடையின் வாசலிருந்த உப்பு மூட்டையின் அடியிலிருந்து தண்ணீராய் கசிந்து ஒழுகும். வாசலோரத்தில் கடைமுன்பாகதரையில்கசிந்து ஓடுகிறஉப்புத்தண் ணீரைக் கடக்க படகெல்லாம் தேவையிருக்காது.

அழுக்கடைந்து போயிருக்கிற அந்தக்கடை இருட்டடைந்து போயுமாய். மின் சார வசதியில்லாத வீடு,கடை வாசலிருக்கிற உப்பு மூட்டையை தாண்டி கடை க்குள் பிரவேசிக்கையில் ஒன்றின் மீது ஒன்றாய் சிதறி காட்சிப்பட்ட சரக்குகள் தரையிலும் சிந்திக் காணப்படுவதாக/

காசிநாதனும் அவரது மனைவியுமாய்அடைபட்டுதெரிகிறகடையில்இருக்கிற பலசரக்கின் நிறங்கள் அவர்களது உடலில் ஒட்டிக்கொண்டதா அல்லது இவர்களது நிறம்பலசரக்கில் பாய்ந்து போனதா எனதெரியாத அளவிற்கு இருப் பார்கள் அவர்களிருவருமாய்/

ஊரில்கூடசிலர்கேலியாகபேசிக்கொள்வதுண்டு.”ஊர்பஞ்சாயத்தக்கூட்டிமொத ல்ல அவுங்க ரெண்டு பேரையும் சுத்தமா குளிக்கச் சொல்லிச் சொல்லணும்” என/

அம்மாதிரியாய் காட்சிப்பட்டுத்தெரிந்தவர்கள் உடையிலும், கூடவா அப்படித் தெரிய வேண்டும்?

எங்கும் காணக்கிடைப்பதாகவே காசியப்பன் கடைகள்/

7 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

இங்கும் ஒரு கடை இது போல் உள்ளதை அப்படியே கண்முன் வந்து சென்றது...

செய்யும் தொழிலே தெய்வம்...

கரந்தை ஜெயக்குமார் said...

அருமை
செய்யும் தொழில் தெய்வமல்லவா
தம +1

vimalanperali said...

வணக்கம் திண்டுக்கல் தனபாலன் சார்,
நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/

Thulasidharan V Thillaiakathu said...

இப்படித்தான் கருமமே கண்ணாயினார்களாக கிராமங்களில் கடைகள்...அதை நடத்துபவர்கள். எங்கள் கிராமத்திலும்...தமிழ் நாட்டில்...ஆனால் கேரளத்தில் இதற்கு நேர்மாறாக.....

கிராமத்தை கண் முன் விரித்தீர்கள் நண்பரே! எங்கள் சிறுவ்யது நினைவுகள்....

'பரிவை' சே.குமார் said...

அருமை அண்ணா...

vimalanperali said...

வணக்கம் சேக்குமார் அண்ணா,
நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/

vimalanperali said...

வணக்க்கம் துளசிதரன் சார்,
நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/