1 Aug 2015

மாத்துமடை,,,,

 
முகத்தில்அறைந்து அடிக்கிறகாற்றைஅணையிட்டுதடுத்து விடவா முடியு ம்? 

அல்லது கை கொண்டு மறைத்து விடுவதா? இல்லையேல் சுவர் ஏதேனும் எழுப்பி ,கதவிட்டு மூடிவிடுவதா?,,,,,,,,,ம்கூம்இதெல்லாம் ஆகாத செயல் போல தெரிகிறது.

கோவில் பட்டி டூ மடுரை பஸ் அது.பைபாஸ் சாலையில் PRC க்கு எதிராக நின்று ஏறினோம். ஊதாக்கலரில்இடையிடையாகடிசைனிட்டவண்டி.பார்க்க நன்றாகயிருந்தது. பைபாஸ் ரைடரும் இல்லை, விரைவுப்பேருந்தும் இல்லை.

நானும்    நண்பனுமாக   ஏறிவிட்டோம்.  அவன்    பின்னால்    .நான்  முன்னால்.

பஸ்ஸின்இரண்டுபுறவாயிலுக்கும்வழிவிட்டுவரிசையாய்அடுக்கிதைக்கப்பட்
டிருந்த இருக்கைகளை மனிதர்கள் நிறைக்கவில்லையாயினும் இருக்கைகள் நிறைந்து காட்சியளித்ததாய்/

கானல்நீர்போல்அப்படிஒருகாட்சிபோலும்.அதுவும்பார்க்கநன்றாகத்தான்இருந்தது.இருக்கைகளின் மேல்விளிம்பைஒட்டியும்அதன்தலைக்குமேலாகவுமாய்தெரிந்தமனிதமுகங்
கள்சிரித்தவாறும்பேசியவாறும்அமைதியாயும்மற்றும்தூக்கத்தைதுணைக்
கழைத்துக்கொண்டும்இதுஎதுவுமேயற்றும்பஸ்ஸிற்குள்ஒலித்தமென்மையான 
நல்லபாடலையும்,அதுஅல்லாதமுரட்டுப்பாடலையும்மீறிசிலர் செல்போனில்
பேசிக் கொண்டிருந்தார்கள் சப்தமாக/

பாட்டின் ஒலியிலும், பஸ்ஸின் சப்தத்திலுமாக அவர்களால் எப்படி பேச முடிந்தது.எதிர் முனை பேச்சை எப்படி புரிந்து கொள்ள முடிந்தது என்பது ஆச்சரியத்திலும் ஆச்சரியமாகவே/

எண்பதுகளில் வெளி வந்து என் போன்ற இளைஞ,இளைஞிகள் மற்றும் நல்ல ரசனையாளர்களின்மனதில்குடிகொண்டு எங்கள்   மனதை  கொள்ளையடித்த
பாடல்கள் அது.

பாடல்மட்டுமா,காதில்தேனூற்றுகிறபாடல்கலைசுமந்துகொண்டு,பெல்பாட்டம்
+பாபிக் காலர் சட்டையும், ஹிப்பித் தலையுமாய் சைக்கிளில் ரோட்டைக் கடக்கையில்தெரிகிறவண்ண,வண்ணசைன்போர்டுகளும்,ரக,ரகமானசினிமா
வால்போட்ஸ்டர்களும்,வேலையில்லாதஇளைஞர்களின் கோஷங்கள் முழங் கியதட்டி போர்டுகளும் அவர்களது கூட்ட அறிவிப்புக்களும், தியேட்டரின் முன்பு பகல் ஷோவுக்காகாககூடியிருப்பவர்களும் இன்னும் இன்னுமா ன நிறைய விசயங்களும் அது பற்றிய பேச்சும்,காதலும்,காற்றுமாய் நம்மை கடந்து போகும் நம் தோள் தட்டி வருடலுடனுமாய்/

முன்பக்கம்வாசலோரஇருக்கைஅதுவும்வாசல்படியைஒட்டி/நான்மற்றும்இன்
னொருவரும் அமர்ந்திருந்தோம். 

எனதருகில்அமர்ந்திருந்தவர்செல்போனில்பேசிக்கொண்டயிருந்தார்எங்கிருந்துஇப்படிபேசியபடியவருகிறார்என்பதுதெரியவில்லை.பேசுகிறார்
பேசுகிறார்,பேசிக்கொண்டே இருக்கிறார்ஒருசிரிப்பில்லை,கோபமில்லை
அனுதாபமில்லை.எந்தவிதமுகஅசைவுகளும் உடல் மொழியும்(?/) இல்லை.

இருக்கையில்பரந்து அமர்ந்துவிரிந்திரிந்தவரிடமிருந்து கொஞ்சம் விலகி சற்று ஒதுங்கி அமர்ந்திருந்தேன் இருக்கைநுனியிலும்கொஞ்சம் நடுப்புறமு மாகச்சேர்த்து/கொஞ்சம் தள்ளி அமரச்சொல்லலாமா என யோசித்தவனாய் அவர் பக்கம் திரும்பிய போது முகத்தை கடுமையாக வைத்துக்கொண்டு இன்னும் பேசிக்கொண்டிருந்தார்.

இப்போது அவரது பேச்சுடனான செய்கையில் ஒரு சின்ன மாறுதல்.ஹெட் செட் போட்டு பேசிக்கொண்டிருந்தார்.

கொஞ்சம்தள்ளிஅமரச்சொல்லலாமாஎனயோசித்தால்,,,,,அவரையும்  அவரது 
பேச்சின் வேகத்தையும் பார்க்கும் போது பயமாகவே இருந்தது.விட்டால் வாயிலிருந்து வருகிற வார்த்தைகளுடன் சேர்த்து ட்ரைவர், கண்டக்டரையும் தூக்கிவெளியில்வீசிவிடுவாரோ?(ரொம்பபயங்க்க்,,,,கரமானா  ஆளா  இருப்பா-
ரோ?) என்கிற  நினைப்புடன் நடுக்கமெடுத்துப்போய் அமர்ந்திருக்கிறேன்.
அதேஇருக்கையில்,அதேநிலையில்அப்படியேஅச்சுக்குலையாமல்/

முன்இருக்கைஅமர்வு,வாசலைஒட்டியஇருக்கை,யாருடையஅனுமதியையும்
பெறாமல்வெளியிலிருந்துவீசுகிறகாற்று முகத்திலறைந்து படர்ந்தவாறு/

ஆகாஎப்படி,எப்படி,எப்படிஇப்படியேமுகத்திலறைந்துவீசிக்கொண்டேயிருந்தால் 
எப்படி?கொஞ்சமாவது நிறுத்தி விலகி தயவு காட்டக்கூடாதா”?என அதனிடம் சொன்ன போது வீசுவதுதானே என்வேலை, தவழ்ந்தும், படர்ந்தும் மென்மை காட்டியும் முரட்டுத்தனமாயும் அடைத்து வீசும் போதுதானேநான்தெரிகிறேன் நான்,இதை நிறுத்தச் சொன்னால் எப்படி?என பதிலுரைக்கவும் அதெல்லாம் சரிதான்கொஞ்சம்ஓய்வுகாட்டி சற்றே ஓரத்திலமர்ந்தால் என்போன்றவர்கள் நிம்மதிபெருமூச்சுவாங்கிக்கொள்வார்கள்தானே?

அது சரி நீங்கள் நிம்மதி பெருமூச்சு விடுவதற்காய் என் இயக்கத்தை சற்று நிறுத்தி ஓய்வெடுப்பது எப்படி சரியாகும்?அது போக நான் ஓய்வெடுக்கப்போய் விட்டால் நீங்கள் பெரு மூச்சு மட்டுமல்ல,சிறுமூச்சுகூட விடமுடியாதே? இல்லையா,,,,,,,,,கொஞ்சம் யோசித்துப்பாருங்கள்.

உங்களுக்கு ஏதேனும் இடர் பாடு என்றால் உங்கள் சௌகரியத்திற்கு எங்களை மாற்றியமைக்க அல்லது மாற்றி வைத்துக் கொள்ள யோசிக்கிறீர்களே தவிர எங்களிடம் கொஞ்சம் அனுசரிப்பு காட்டி செல்லக்கூடாதா?

அன்புக்காதலியிடமும்,பிரியமனைவியிடமும்,பாசம்மிகுந்தபெற்றோரிடமும்,  பிள்ளைகளிடமும் நடந்து கொள்வதைப் போல_காற்று."

“இப்படியெல்லாம் நீ மனம் தொட்டு பேசும் போது என்னதான் செய்வது?_நான்/

இதற்கு மேல்என்இயக்கத்திற்குஓய்வு தேவை என நீங்கள்கருதினீர்களானால் வாயு பகவானுக்கு ஒரு மனுப்போடுங்கள்.என நிறுத்திக்கொண்டு என்னிலி ருந்து விலகிபோய் விடுகிறது.

பஸ்ஸிற்குள் பார்க்கிறேன்.படர்ந்து விரிந்தவனாயும் ,காற்றிடம் இதுவரை உரையாடிய அலுப்பைப்போக்கிக்கொள்ளவுமாய்/

காற்றின்மென்வருடலையும்,சுகந்தத்தையும்அனுபவித்தவாறும்பஸ்சினுள்
ஒலித்தபாடல்களுக்குதலையசைத்தவராயும்,தொடையில் தாளமிட்டவராயும் அமர்ந்திருக்கிறார் ஒரு பெரியவர்.

4 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

அந்த இனிய நாட்களுக்கு சென்று வந்து விட்டேன்.... நன்றி....

கரந்தை ஜெயக்குமார் said...

நானும்தான் நண்பரே
நன்றி
தம +1

vimalanperali said...

வணக்கம் திண்டுக்கல் தனபாலன் சார்,
நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/

vimalanperali said...

வணக்கம் கரந்தை ஜெயக்குமார் சார்,
நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/