22 Aug 2015

கண்ணாடிப்பூ,,,,

அதற்குள்ளாகவா நிரம்பிப் போனது நீர்.அதென்ன நீரா?அல்லது காற்றா?
மோட்டார்ப் போட்டதும் அதன் விசை போர் குழியிலிருந்து தண்ணீ ரை கைபிடித்துக்கூட்டிக்கொண்டுஇரண்டுவிரல்அளவே உள்ள ப்ளா ஸ்டிக் பைப் வழியாக மேலெழும்பி வந்து 500 லிட்டர் கொள்ளவு கொண்ட டேங்கில் விழுந்து நிறைகிற கணம் இவ்வளவு சடுதியில் நிகழ்ந்து போகிறதா என்ன?ஆச்சரியமே/
ஒன்று,இரண்டு ,மூன்று என்கிற வரிசைகிரமங்களுக்குள் தன்னை தக்க வைத்துக் கொண்ட மாடிப்படியில் மூன்று படிகளுக்கொன்றாக தாவி ஏறி,ஏறி,ஏறி,,,,மொட்டை மாடியை தொட்டு மூச்சிரைக்கப் போய் நின்றுடேங்கைஎட்டிப்பார்த்தபோதுநடந்தநிகழ்வே மேல் விவரித்தவை என சொல்லி நகர்கிறது காலம்.
ரோஸ் கலர் அல்ல,வெள்ளையும் அல்ல.ரோஸீம்,வெள்ளையும் கல ந்த அரை வெள்ளை அல்லது அரை ரோஸ் என்ன சொல்லலாம்.
அப்படி ஒரு கலரை பூசிக்கொண்டிருந்த மாடியின் கைபிடிச்சுவரின் உள் மடிப்பில் தெரிந்த வர்ணத்துடனாய் உரசி வலது பக்க மூலையி ல் அமர்ந்திருந்த கருப்பு டேங்கில் ஏதோ ஒரு முண்ணனி கம்பெனி யி ன் பெயர் வெள்ளை கலரில் மின்னியது.
மாடியின் பரப்பு முழுவதுமாய் பரந்து சிதறியிருந்த வேப்பமர மற்றும் பன்னீர் மர,புங்கமர இலைகள் காய்ந்த சருகுளாயும் பச்சைவர்ணம் பூசிக்கொண்டஇலைகளாயும்,இளம் வெளிர்மஞ்சள் நிறத்திலுமாய்/
அதனுடன் சேர்ந்து பன்னீர்மரப் பூக்களும் கைகோர்த்துக் கொண்டு
தெரிந்ததாய்/
இதில் வேப்ப மர இலைகளின் உதிர்வும்,பன்னீர் மர இலைகளின் வாடலும் இவனது வீட்டின் பக்கவாட்டு வெளியிலிருந்த மரங்களிலி ருந்து விழுந்தவை.
புங்க மரத்திலைகள் பக்கத்து வீட்டு வெளியில் முளைத்திருந்த மரத் திலிருந்து விழுந்தவை.
இடது பக்கம் புங்க மரக்கிளை வளைந்து உள் தொங்கவும் வலது புறம் வேப்ப மரக் கிளையின் கிளை தனது பங்கிற்கு சுவரை எட்டித் தொட்டதாய்/
அப்படி எட்டித் தொட்ட கிளைகள் இரண்டும் உரசி முத்தமிட்டுக்
கொள்ளாத போதும் கூட தண்ணீர் ததும்பி நின்ற டேங்கை தொட்டு உரசிச் சென்றது.
நீர் ததும்பி எப்பொதுமே பார்ப்பதற்கு அழகாக இருக்கிற டேங்கின் மேல் மூடியின் மீதும்,அதன் ஓரத்திலுமாய் நிற்கிற குருவிகளும், வேப்ப மரத்திலும் அதன் எதிர் புங்க மரத்திலுமாய் அமர்ந்தும்,அதன் ஊடாகவும் பறந்து திரிகிற காக்கைகளும் பேசித்திரிகிற காதல் மொழிகளை தண்ணீர் பார்க்கப் போன இவன் கவனித்ததில்லை போ லும்.
டேங்க் நிரம்பியிருக்கிற தண்ணீர் சொல்கிறது. “நேற்று மாலைதான் உங்களதுமனைவி மோட்டாரை போட்டு விட்டார்கள்.நான் அப்போ தே நிரம்பி நின்றேன் முக்கால் டேங்கிற்கு சற்று மேலாக,இப்போது வந்து நீங்கள் மோட்டாரைப்போட்டுவிட்டுப் பார்த்தால் நான் சடுதி யில் நிரம்பித்தெரியாமல் எப்படித் தெரிவேனாம்?போங்கள் அங்கிட் டு” என இவன் மீது பூச்செரிந்து இவனை சில்லிட்டுப் போகச் செய் யாமல் திருப்பி அனுப்புகிறது.
இவனும்பதிலுக்குதண்ணீரை வலது கையின் ஆள்க்காட்டி விரலால் அதன்பரப்பில் மெலிதாக ஒரு சுண்டு சுண்டுகிறான் .காய மேதும் பட்டு விடக்கூடாது என்கிற ஜாக்கிரதை உணர்வுடனும், விளையா ட்டுத்தனமாயும்/
“சீப்போங்கள்எனமேனிசிலிர்க்கிறபெண்ணாய்அதுவும்வளைய,வளை யமாய்விரிந்து வெட்கம் காட்டி சிரித்ததாய் தெரிகிறது.
அட,,,,,இதுவும் நன்றாகத்தான் இருக்கிறது என டேங்கை மூடிவிட்டு நிறைந்து தெரிந்த தண்ணீர் பரப்பையும்,பறந்து திரிந்தும்,மூக்கோடு மூக்கு உரசிகாதல் பாஷை பேசிக் கொண்ட பறவைகளையும் , மாடிப் பரப்பையும்,உதிர்ந்துகிடந்த இலைக்களையும்பூக்களையும்மாடியின் சுவர்களும்,படிகளும் பூசிக்கொண்ட வர்ணர்த்தையும் பார்த்தவனாய் கீழிறங்கி வருகிறான்.
தூரத்தில் எங்கோ பூ ஒன்று மலர்ந்து சிரித்த சப்தம்/

10 comments:

 1. Replies
  1. வணக்கம் நாகந்திர பாரதி சார்,
   நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/

   Delete
 2. அருமை நண்பரே
  தண்ணீர் கூட வெட்கப்பட்டிருப்பது அருமை
  நன்றி
  தம 1

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் கரந்தை ஜெயகுமார் சார்
   நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/

   Delete
 3. அருமையான எழுத்தோவியம் ...கவிதையின் வடிவமாய்

  ReplyDelete
  Replies
  1. வனக்கம் தேவராஜ் சார்,
   நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/

   Delete
 4. அருமையான எழுத்தோவியம் ...கவிதையின் வடிவமாய்

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் தேவராஜ் சார்,
   நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/

   Delete
 5. Replies
  1. வணக்கம் தளிர் சுரேஷ் சார்,
   நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/

   Delete