7 Aug 2015

தண்டவாளம்,,,,,,


                                                                                          
எனதுமனைவியின் தொலைபேசியழைப்பு என்னைத் தொட்டு எழுப்பிய போது மணி அதிகாலை மணி அதிகாலை 3.45 அல்லது 3.50 இருக்கலாம். விண் வெளு க்கஆரம்பித்திருந்தஅதிகாலைபொழுது.        
                             இப்படியானஅதிகாலையின்அமைதியானபயணமும்ஒருவிதசுகம்அளிப்பதாகவே.
காக்கைகளும்,குருவிகளுமாய் தூக்கம் கலைந்து சோம்பல் முறித்து தன்னை மறுநாளின் சுழற்சிக்கு தயார்படுத்திக் கொண்டிருந்த அழகிய பொழுது/இருள் விலகி பகல் தன்னை உள்நுழைத்துக் கொள்ள தயாராய் இருந்த நேரம்.
 
பூக்கள்மலர்கிறமெல்லியஓசையையும்,பறவைகள்பறக்கிறஒலியையும்,மரங்கள் ஆடும்மென் ஒலியையும் அறிமுகப்படுத்திக் கொண்டிருந்தபொழுது என்னை
தாங்கிபயணிப்பதாயும்,நான்கொண்டஎண்ணங்களைசுமந்து,சூழ்கொண்டுமாய் பயணிக்கிற பொழுதாயும்  இருந்தது. 
 
 அதிகாலை ஐந்து அல்லது விழிப்பு  வருகிற நாலு மணிக்கெல்லாம் எழுந்து மாடுகளை எழுப்பி  அதன் நலம் விசாரித்து, தண்ணீர் காட்டி, மாற்று இடத்தில் கட்டி கூளம் போட்டு,தொழுவை சுத்தம் செய்து மாடுகளை திரும்பவும் அதே இடத்தில் கட்டிப்போட்டு விட்டு மொழு,மொழு கடை டீயை சாப்பிட்ட பின்னா லானவிடியலில் ஆரம்பிக்கிற அசுர உழைப்பு காடு,கரைகளின், மண்ணின் மலர்வையும்,விரிவையும்,வாசத்தையும்அதன்சுக,துக்கத்தையும்அறிமுகம் செய்து விட்டு போன நாட்களிலிளிருந்து நகன்று இன்று ஒரு அரசு அலுவ லகனாக உருவெடுத்து பயணம் செய்து கொண்டிருக்கிற வாழ்க்கை வாய்க்க பெற்றது நான் செய்த பெரும் பாக்கியமாகவே என்னுள் எப்பொழுதும் உறை ந்து கிடக்கிறது.
 
அது விரிந்தெழுகிற நேரங்களில் இம்மாதிரியாய்சூழ்கொள்கிறநினைவுகளும், அது தரும் இன்ப, துன்ப  மனப்பிரலயங்களும் சொல்லி மாளாது.
 
அப்படி சொல்லி மாளாத தருணங்களாய் என்னுள்ஏற்பட்ட ஏகமானதுகளின்
குவியல்களுடன் பயணித்துக்கொண்டிருக்கிற நான் இப்பொழுது உங்கள் முன் இதோ இப்படியாய் காட்சிதந்தபடி/
 
 முன்புறம் இரண்டும் பின்புறம் நான்குமாக ஆறு சக்கரங்களை கொண்டிருந்த செவ்வக வடிவ நீள ஊர்தியில்தான்எனது பயணம்  தொடங்குகிறது.  அதை தான் பேருந்து என்றார்கள்.
 
 வாரத்தின் முதல் நாள்  பிள்ளையார் சுழியிடும் திங்களன்று அதிகாலை எனது பயணம் தொடங்குகிறது.
 
மூன்றரை மணிக்கு இந்த பஸ்சை பிடிக்க நடுஇரவின் பின் பகுதியான இரண்டு மணிக்கெல்லாம் எழுந்து விடுகிறேன்.கிட்டத்தட்ட ஊரும் அக்கம்,பக்கமும் ஆழ்ந்த தூக்கத்திலிருக்க நான் மட்டும் ஜில்லிட்டுப் போயிருக்கும் நீரை அள்ளி அவசர,அவசரமாகவும்,ஒருவிதமனபதட்டத்துடனும்குளித்துக்கொண்டிருப்பேன்

இன்று அம்மாதிரியான பதட்டமெல்லாம் கூட இல்லைதான்.வேகவேகமாக குளித்தாலும் கூட ஒருவித பதற்றமற்ற தன்மையில் குளித்து முடித்த திருப்தி இருந்தது.
 
பச்சைக்கலர் பிளாஸ்டிக் வாளி,பச்சைகலர் கப்,பச்சைகலரில்இருந்தகுளியல் சோப்,,,,லேசாக அழுக்குப்பிடித்துப்போயிருந்த குளியலறை, பக்கத்தில் இருந்த கழிவறை என எல்லாவற்றையும் பார்க்க முடிகிறது. பார்த்து அதனை   மதிப்பிட்டுவிடமுடிகிறது,வீட்டுக்குகூடியசீக்கிரம்பெயிண்ட்அடிக்கவேண்டும்.  நல்ல கலராகப்பார்த்து.
 
  அடுத்ததடவைசோப்புவாங்கும்போதுஅதிகமாய்ஒன்று வாங்கவேண்டும்.
வாளியையும் கப்பையும் மாற்ற வேண்டும்,அரத பழசாகிப்போனது.வழுக்கும் பாத்ரூம் தரையை சுத்தமாகக் கழுவச்சொல்ல வேண்டும் மனைவியிடம்/ என்கிறமாதிரியானசிந்தனைகள் வந்து விடுகிற இடைவெளிக்கிடைத்த மனோ நிலை இருந்தது.
 
என்னதான் இருந்தாலும் சனிக்கிழமை பின் மதியம் அலுவலகம் முடித்து அவசர,அவசரமாக கிளம்பி வருகிற அந்த சந்தோசம் இல்லை.அவசர, அவசர மாக அலுவலக பணிகளை முடித்து விட்டு அன்பின் மனிதர் சக்கரபாணியும், ரகுராமும்சேர்ந்துவாங்கித்தருகிறசாப்பாட்டினைகோழிதவிட்டைமுழுங்குகிற மாதிரி முழிங்கி விட்டு(பின் ஏழுமணிநேரம் தாங்க வேண்டுமே வயிறு)புது பஸ்டாண்ட் வந்து பஸ் ஏறும்  போது,அல்லது பஸ் ஏற காத்திருக்கும் போது பார்க்கிறஎல்லாமேஅழகாகத்தெரியும்,பஸ்நிலையமேசிரித்து, பூப்பூத்துத் தெரி யும்.அழுக்குப்படிந்திருக்கும் பேருந்தும்,முகம் கடுத்து எரிச்சலாகப் பேசுகிற டிரைவர்,கண்டக்டரும்கூடநேசம்மிக்கவர்களாய்த்தெரிவார்கள்.பேருந்தின்டயர் களில் சிக்கியிருக்கிற தூசியும்,படிந்திருக்கிற அழுக்கும் கூட அழகாகத் தெரி யும்.பஸ்சினுள்ளே கிழிந்து தொங்குகிற பஸ்ஸின் சீட்டுகளும்,நெரிசலும் கூட இடைஞ்சல் பண்ணி விடுகிற தோற்றத்தைகொடுத்து விடுவதில்லை. யாரைப் பார்த்தாலும் நட்பாகவும்,சினேகமாகவும் தோன்றும்.
 
 மொத்தத்தில் பூத்து விடுகிற மனதோடு பஸ் ஏறுகிறநீண்ட பயணம் சனி இரவு முடியும்.நான் வந்து இறங்குகிற நேரம் எனது வீடிருக்கும் பகுதிக்கு பயணிக்க  டவுன் பஸ் அல்லது மினி பேருந்து ஏதாவது ஒன்று இருந்தால்தான் உண்டு. இல்லையெனில் ஆட்டோவே சரணகதி/
 
 நான் கும்பகோணத்திலிருந்து சாத்தூர் வந்ததை விட அதிகம் பத்து ரூபாய் கொடுத்து பயணிக்க வேண்டியிருக்கும்.அம்மாதிரியான நேரங்களில் பயணச் செலவில் அதுவும் ஒன்றாகிப்போகும்.
 
வீடுபோய் இறங்கியதும் வருகிற நிம்மதி,மனபூரிப்பு மனைவி,மக்களது அருகா மை என எல்லாம் சேர்ந்து ஞாயிறு ஒரு நாள் சந்தோசமாகக்கழியும்.
 
திரும்பவும் திங்கள் கிழமை அதிகாலை தொடங்குகிறஅலுப்பான  சுழற்சியின் வட்டத்தில் காணாமல் போகிற சந்தோசம் எனது பயணத்தினுள்ளே ஊடறுத்து நிற்கிறது.
 
 அதிகாலையின் பிஞ்சு இருட்டில் பஸ்  ஏறுகிற நான் நன்கு புலர்ந்த காலை 9.30 அல்லது 10.00 மனிக்கு பிழைப்பு தேடி வந்த ஊரில் இறங்குவேன்.
 
 அதுதான் என் போன்றோரை பொறுத்தவரை வாரத்தின் முதல் நாள்.அந்த நாளின் ஆரம்பம் மிக சந்தோசமாகவே இருக்கும்.நன்றாக வேலை செய்வேன். வயிறு நிறைய நன்றாகச் சாப்பிடுவேன்.நன்றாகத்தூங்கியும்கூட விடுவேன். காலையில் மனைவி கொடுத்து விட்ட டிபன்,மதியம்ஹோட்டல் சாப்பாடு, இரவும் அப்படியே இருக்கும் நகர்வு  நன்றாகவே/ 
 
 இரண்டாவது நாளும் அப்படியே/
 
மூன்றாம் நாள் கொஞ்சமாக நொண்டியடிக்க ஆரம்பிக்கும் மனது.சாப்பாடு தண்ணீர்கொஞ்சம் மட்டுப்படும். உடலும்,மனதும் டல்லாகும்.எரிச்சல் மிகும்.
செல்போன் பேச்சு அதிகமாகும்.250 கிலோமீட்டருக்கு அப்பால் இருக்கிற எனது வீடு நான் தங்கியிருக்கும் அறையின் வாசலில் வந்து வீற்றிருக்கும்.மனைவி மக்கள் கண்முன்னே நடமாடுவார்கள்.ஏற்கனவே இருக்கிற அல்சர் கூடும். எனது அறையிருக்கும் தெருவிலிக்கிற ஓய்வு பெற அரசு மருத்துவரிடம் 40 ரூபாய்க்கு ஊசி போட்டுக் கொள்ளவேண்டியிருக்கும்.
 
 மீதமிருக்கிற இரண்டு நாட்களில் நான்கு இட்லி மூன்று இட்லியாகும்.ஒரு சப்பாத்திஅரைசப்பாத்தியில்நின்றுபோகும்.டீக்குடிப்பதுதள்ளிப்போகும்.குளிப்பது, துணிதுவைப்பதுபல்விளக்குவது,ஷேவிங்க்செய்துகொள்வது எல்லாம் அப்படி யப்படியே/
 
நானும்எனதுமேலாளரும்தான்அறைஎடுத்துதங்கியிருந்தோம்.அறைஎன்றால் அது ஒரு வீடுதான் சின்னதாய்.புதிதாய் மணமானவர்கள் தங்கிக் கொள்ளும ளவுக்கு/
 
சுற்றிலும் தென்னை மரங்களும்,பிற மரங்களுமாய் வளர்ந்து தெரிந்த எங்களது அறையின் கீழேதான் வீட்டு உரிமையாளர் குடியிருந்தார்.
 
தென்னையின் கீற்று பச்சையும்,மாமரத்தின் வெளிறிய,கரும் இலைகளும் மனம் சூழ்ந்து கொண்டதாகவே எப்பொழுதும்.
 
கீழேதான் வீட்டின் உரிமையாளர் குடியிருந்தார்.நல்லதண்ணீர்,நல்ல காற்று, நல்ல இட வசதி,நல்ல சூழல் என எல்லாம் பொருந்தித் தெரிந்த இடத்தில்தான் எங்களது உடலும், உயிரும் மையம் கொண்டிருந்தது.
 
இரண்டு,இரண்டுபேர்களாய்இடது பக்கம் அமர்ந்திருந்த இருக்கைகள் 9 வரிசை களாகவும்,மூன்று,மூன்று பேர்களாய் வலது பக்கம் அமர்ந்திருந்த இருக்கை கள் 11 வரிசைகளாயும் ஒன்றன் பின் ஒன்றாக காட்சி தந்தது.
 
 பின் பக்க வாசலோரம் சற்று பின்தள்ளி நின்றிந்தேன்.என்னைப்போல மூன்று பேர்நின்றிந்தார்கள்.முன்புறவாசலில்ஒருவர்அமர்ந்திருந்தார்.இருக்கைகளின் நெருக்கடி மிகுந்து காணப்ப்படுகிற நேரங்களில்இதுமாதிரி பார்க்க முடிவது சாதாரணமாகிப்போன ஒன்று.
 
 இருக்கைகள் எல்லாம் நிரம்பியிருந்தன.அனைவரும் அனேகமாக தூங்கி விட்ட நிலையில் இருந்தார்கள்.
 
பஸ் ஓடிய சப்தத்தையும் நடத்துனர் டிக்கெட் கேட்ட சப்தத்தையும் தவிர வேறொன்றுமில்லை.
 
கலர்,கலராக துணி போர்த்தியிருந்த இருக்கைகளின் அருகில் நின்றிருந்த கம்பியில் சாய்ந்திருந்தேன்.கம்பிகளில் பூசியிருந்த நிக்கல் எனது கண்ணில் பட்டு டாலடித்தது.டாலடித்ததின் ஊடாக பெயிண்ட் உதிரிந்து உருவம் காட்டிய கம்பி பலவாறாக அர்த்தம் சொல்லியவாறு/
 
நான் நின்றிருந்த பக்கத்து இருக்கைப்பெண் அடர்நிறத்தில் புடவை கட்டியி ருந்தாள்.அவளருகே அமர்ந்திருந்தவளினது புடவை  லைட் கலரில்.அவளது மடியிலிருந்த குழந்தை லேசாக  புரண்டு படுத்து சிணுங்கியது.
 
பஸ்ஸினுள்ஒலித்தபாடல்சமகாலத்தைய,பழையகாலத்தைய நினைவுகளை சுமந்து சுற்றியபடி/
 
பேருந்தின் விளக்கு ஒளியில் சாலையின் தெளிவும்,அதிகாலையின் சுகந்தமு ம்/
 
இவை எல்லாமுமாய் என்னுடன் உறவாடிக்கொண்டிருந்த நேரத்தில்தான் எனது மனைவியிடமிருந்து கை பேசிஅழைப்பு.
 
அழைப்பையும்,உறவையும்துண்டிக்கமனமில்லாதவனாக,எண்ணங்கள்சுமந்த வனாக எனது பயணம் தொடர்கிறது. 

7 comments:

Geetha said...

வேறு ஊரில் வேலைப்பார்ப்பவர்களின் மனநிலையை அழகாக எடுத்துக்காட்டியுள்ள விதம் அருமை..

கரந்தை ஜெயக்குமார் said...

வீடு ஓரிடம்
பணி வேறிடம்
என உலவும் மனிதர்களின் மன நிலையினை
படம் பிடித்துக் காட்டிவிட்டீர்கள் ஐயா
நன்றி
தம +1

vimalanperali said...

வணக்கம் கரந்தை ஜெயக்குமார் சார்,
நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/

vimalanperali said...

வணக்கம் கீதா அவர்களே,
நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/

”தளிர் சுரேஷ்” said...

பிள்ளைகள் குடும்பம் பிரிந்து வேற்றூரில் வேலை செய்பவர்களின் மன நிலையை அழகாக பதிவாக்கியது சிறப்பு! நன்றி!

'பரிவை' சே.குமார் said...

அழகான பகிர்வு அண்ணா...

vimalanperali said...

வணக்கம் பரிவை சேக்குமார் அண்ணா,
நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/