17 Sept 2015

சலங்கை,,,,,,,,,,,,


மலர்பூக்கும்சரிசிரிக்குமாஎன்னசிரித்ததேசிரித்ததோடுமட்டுமல்ல பேசியது.அதுவும் எப்படி?கொஞ்சிக் கொஞ்சி. 

 ஆகா இது எப்படியிருக்கு?அதிகாலை பெருவெளி. சூரியன் கண் விழி க்க சற்றே தாமதப்பட்டுப்போன மென் பொழுதது.தூக்கம் பிடிக்காமல் விழித்த நான் சின்னவனின் வயிற்றில் தலை வைத்து படுத்திருந்து விட்டு அதுவும் நிலை கொள்ளாமல் எழுந்து டீக்கடைக்குச் செல்கி றேன். 

 அங்கே போனால் அப்படித்தான் வாய்க்கிறது.கலங்கலாக ஒரு டீ. வரி போட்ட கண்ணாடி க்ளாஸில் முக்கால் அளவே நிரப்பட்ட திரவ ம். நன்றாகயிருந்தால் நான்கு அல்லது ஐந்து மடக்கு குடிக்க கிடைக் கும்.அதற்கு ஐந்து ரூபாய். 

 வீட்டில் டீக் கொடுத்தாலும் இது மாதிரி கடையில் போய் எப்போதா வ து டீக்குடிப்பது வழக்கமாகிப்போகிறது.அன்றும் அப்படியே/ 

டீக்குடித்து விட்டு வந்த நேரம் இருள் பிரிந்து நன்றாக விடிந்திருந்த து. கோழிகள் தரையைக் கிளறி மேய ஆரம்பித்திருந்தன.ஆடுகள் வெற்று வெளியில் இரைதேடியும் திறந்து விடப்பட்ட சுதந்திரத் துட னுமாய்/ 

தூரத்தில் விரைகிற பால்க்காரனின் சைக்கிள் மணிச்சப்தம்.விரைந்து செல்கிறஇருசக்கரவாகனத்தின்ஒலி.மூடப்பட்டிருந்தவீடுகளுக்குள்ளும்,
வெளியிலுமாய்கேட்ட மனிதர்களின் பேச்சரவம்.சுத்தமாய் வீசுகிற காற்று.சப்தமாய் கேட்கிற சப்தம்.அதிகாலையின் சுப்ரபாதம்.எல்லா வற்றின் கலவையாய் வீடு வந்து சேர்ந்த நேரம் குப்பைகளும், மரத் திலை களும்,தூசியுமாய் கிடந்த வீட்டின் பக்கவாட்டு வெளியையும், மாடியையும் கூட்டி சுத்தம் செய்யலாம் என விளக்குமாறை  கையி லெ டுத்த போது நான்,விளக்குமாறு,குப்பை,இலைகள்,தூசி மற்றும் தரை என்கிற பிணப்பு எங்களுக்குள் நெசவிடப்பட்டிருந்ததாய்/ 

கூட்டக்கூட்ட மேடிட்டும்,சேர்ந்தும் வருகிறது குப்பையும் இலைகளு ம்.கூடவே இவை இரண்டினுடனுமாய் கலந்து ஒட்டிக்கொண்டு வரு கிற தூசி,அதனடியில் புரள்கிற நெளிகிற ,ஊர்கிற புளுக்களும் பூச்சிகளும்,எறும்புகளும் தத்தமது பாஷையில் ஏதேதோ பேசிக் கொ ண்டு தரை அளந்து சென்றவாறும் நடந்து நடமிட்டவா றும். 

அவைகள் போகிற போக்கில் கோபமாய் திரும்பிப்பார்த்து என்னை முறைத்து விட்டுச்  செல்வதாய்  தோணுகிறது.  நாங்கள்   நெளிவதற் கும்,ஊர்வதற்கும்,ஒளிவதற்கும் இனிஎங்குபோய்இலைகளைத் தேடு வோம்  என்பதே அதன் உள் அர்த்தமாய் இருந்தது.அதோ கத்துகிறதே குருவிகள் அதன் “கீச்,கீச்கள்” அதற்கு அங்கீகாரம் அளிப்பதாகவே உள்ளது. 

கீழேதரைமுழுவதும்கூட்டிபெருக்கிவிட்டுமாடிக்குசென்றுகூட்டுகிறேன்,
ஒன்று,பத்து,நூறு,,,,,,,,,,,எனஇலைகளையும்,தூசியையும்எண்ணாமல் கூட்டிக்கொண்டிருந்த வேலையில் “ஏய்”என ஒரு குரல் வீசி என்மீது எறியப்பட்டதாய்.எந்ததவித கலப்படமும் அற்று சுத்தமான மழலைக் குரலில் செய்யபட்ட சப்தம்.திரும்பிப்பார்த்தால் குரல் வந்த திசை பக்கத்து வீட்டு மாடியாய் இருந்தது.வலது பக்கம் நான்,இடது பக்கம் குழந்தை.சரியான பக்கம்தான் நிற்கிறதாகத் தெரிகிறது.மாடியின் கைபிடிச்சுவரில் ஒட்ட வைத்த பூங்கொத்தாய் தெரிந்தாள் அந்த மழலை/ 

மூன்று வயதிருக்கலாம்.கைகால் முளைத்த மென் புஷ்பம்.சுவரில் அழுந்தி ஒட்ட நின்று கொண்டு மார்பிலிருந்து தெரிந்தாள்.ஏய் எனச் சொன்னவளை அதட்டி அப்பிடியெல்லாம் சொல்லக்கூடாது,மாமா ன்னு கூப்புடனும் என்றாள் பக்கத்து வீட்டுப்பெண், பூங்கொத்து நின்றிருந்த மாடிப்பரப்புக்கு சொந்தக்காரி.+2 படிக்கிறவள். அவள் அப்படிச்சொன்ன மறுநிமிடம் “மாமா என்ன செய்றீங்க,?-பூங்கொத்து. 

தரை கூட்டிக்கிட்டி இருக்கேன்.நான். 

கூட்டுங்க,கூட்டுங்க,எனகைகளைவிரித்துசொல்கிறாள்,எதுக்குகூட்டு றீங்க?என்கிற கேள்வியை இணைத்துக்கொண்டு/ 

கூட்டுனாத்தான தரை சுத்தமாகும்.-நான். 

தரை எதுக்கு சுத்தமாயிருக்கணும்?-பூங்கொத்து. 

அப்பத்தான்நல்லாஇருக்கும்.அதுக்குத்தான்.-நான் 

அப்பிடியா மாமா கூட்டுங்க,கூட்டுங்க,கூட்டுற குப்பைய கீழ போடக்கூடாது குப்பக்கூடயிலதான் போடணும்.-பூங்கொத்து, 

சரிப்பா,சரிப்பா நீ சொல்ற படி கேட்டுக்கிறேன்ப்பா.-நான். 

  நீ மட்டும் குப்பைய கீழ போட்டா ஓங்கூட காய் விட்டுருவேன்,நீயி ஆயிமாமான்னுசொல்லீருவேன்ஆமாம்எனசொல்லிவிட்டுஇறங்கிப் போய்விட்டது பூங்கொத்து. 

நான் நின்று கொண்டிருந்தேன் பூங்கொத்து போன திசையை வெறித் தவாறு/

2 comments:

கரந்தை ஜெயக்குமார் said...

பூங்கொத்து
அறிவுக் கொத்து
அருமை
தம 1

vimalanperali said...

வணக்கம் கரதை ஜெயக்குமார் சார்,
நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/