21 Sept 2015

ரயில்ப்பூச்சி,,,

 ஒரு முறையல்ல,இரண்டு முறையல்ல,மூன்றுமுறையுமல்ல,,,ஏழு அல்லது எட்டு முறையாவது இருக்கலாம்.அவளது வலது பாதத்தில் போய் முட்டி முட்டித் திரும்புகிறது.

ஆரஞ்சுக் கலர் ப்ளாஸ்டிக் கிண்ணத்தில் முக்கால்வாசி அளவு நிரம்பியுள்ள கோலப் பொடியை கையிலெடுத்து ஒவ்வொரு புள்ளியாய் அவள் தரையில் வைக்கிற நேரம் கையில் தேனீர் கோப்பையுடன் அமர்ந்திருந்த அவன் மனது உடலிருந்த கழண்டு கோலப்புள்ளியை முத்தமிட்டும் தொட்டுக்கும்பிட்டுமாய் வருகிறது.

புள்ளிகளை வைத்து கோடு போட்டு,வளைவுகளைவரைந்து இடையிடையாக வளையங்களை பூக்கச்செய்து கொண்டிருந்த முனைப்பிலிருந்த நிமிட நேரங் களில் அந்த வழியாக ஊர்ந்து சென்ற ரயில் பூச்சி மிகச்சரியாக வெறெங்கும் செல்லாமல் கோலத்தைக்கடக்கிறது விரைந்தும்,மெதுவாகவும்/

அதற்குஏன்அங்குவரவேண்டும்எனத்தோணியதுஎனத்தெரியவில்லை? பரந்து விரிந்தவெளியில்விலகி தனது ஊர்தலையும்,பயணத்தையும் வைத்துக் கொள் ள  வேண்டியதுதானே?

அதன்இந்தஊர்தல்ஏதேனும்தேவைநிமித்தமாகவா,அல்லதுச்சும்மாவா?தெரிய
வில்லை. இல்லை வெற்று வயிறுட ன் இருக்கிற அது இரைதேடி ஏதேனும் ஒருஇலக்கைகுறிவைத்தும்,தனதுஇருப்பிடம்நோக்கியும்பயணிக்கிறதா, புரிய வில்லை/

பயணிக்கட்டும்,போகட்டும்,வரட்டும் அதில்ஒன்றும் தவறில்லை பெரிதாக. ஆனால் ஏன் செல்கிறதுஇந்தப் பாதையில் என்பதே இந்த நேரத்து வருத்த மா யும், கவலைக்குள்ளாகிப் போகிற விஷயமாயும்/

ஏராளமான கால்களுடனும், நீண்டு மெலிந்த தன் உடலுடனுமாய் தன்னை இழுத்துக் கொண்டு தரையின் பரப்பு முழுவதுமாய் ஊர்ந்து வந்த அது அழகாக வரையப்ப்பட்டுக் கொண்டிருந்த கோலத்தின்மீதும்,கோலப்புள்ளிகள்மீதும் அதன் சிறு சிறு வளைவுகளின் மீதுமாய் தன் உடல் மொழி பதித்து ஊர்ந்து,, ,ஊர்ந்து,,,,,ஊர்ந்து,,,,,,,,,,கோலமிடும் அவளின்வலதுபாதத்தின் நடுப்பகுதியிலும் அதன் ஓரத்திலுமாய் மோதித் திரும்புகிறது.

ஒரு முறையல்ல,இரண்டு முறையல்ல ஆறு அல்லது ஏழு எட்டு முறையா வது கோலமிடுபவளின் பாதத்தில் மோதி வேறெங்கெனும் செல்ல வழியற்று திரும்புகிற ரயில் பூச்சிக்கு இங்கு ஒரு சிக்னல் அமைக்க வேண்டுமோ?

No comments: