21 Oct 2015

கொட்டாவி,,,


அவனும் என்னதான் செய்வான் பாவம்.தினசரிகளில் இரவு பணிரெண்டுமணி வரைக்கும் படிக்கிறான்.பாடங்கள் கொஞ்சம் கூடுதலாக இருந்தால் ஒரு மணியைக்கூட எட்டித்தொட்டு விடுகிறது.

கொட்டாவி விடுதலுடனும்,உடல் முறுக்கிய தூக்கக் கலக்கத்துடனுமாய் படிக் கிறான் படிக்கிறான், உடல் அலுக்கும் வரை படிக்கிறான்,எழுதுகிறான் கை வலிக்கும் வரை எழுதுகிறான், கேட்டால் எங்களது டீச்சர் கொடுத்த வீட்டுப் பாடம்என்கிறான்,வாங்கிப்பார்த்தால்ஒரேகேள்விபதில்களை இருபது அல்லது அதற்கு மேற்பட்டு எழுதச் சொல்லியிருப்பார்கள்.ஏன் அப்படி எனக்கேட்டால் பதில் டீச்சர் சொன்னார்கள் என்பது தாண்டி வேறொன்றுமாய் இருப்பதில்லை.

இது சம்பந்தமாக டீச்சரிடம் போய் கேட்கலாம் என்றால் அதற்கும் மனம் ஒப்புதல் அளிப்பதில்லை.அதை மீறி பையனிடம் கேட்டால் பையனின்பதில் வேறு மாதிரியாக இருக்கிறது, அப்பயெல்லாம் வந்து கேக்க வேணாம்.நீங்க வந்து போனகோவம்எங்க மேல திரும்பும்வேணாம்அதுஎதுக்குஅனாவசியமா,, என்றான்.

இப்படித்தான் அவன் மூணாம் வகுப்புப்படிக்கையில் அவனது வகுப்பு ஆசிரி யை பிரம்பு கொண்டு காலில் அடித்து கால் வீங்கிப்போனது,பள்ளியில் போய் கேட்கலாம் என்றால் வீட்டில் மனைவிவேண்டாம்என்கிறாள்,என்னசெய்ய அப்புறம்?கேட்டால் ஏதாவது வம்பு வரும்,நாம் போய் கேட்க நாம் பேசிய பேச்சின்மீதானவேகம்பையன்மீதுபாயும் என்ற அவதானிப்புக்குப் பிறகு விட்டு விட்டாகிவிட்டது.எழுதுதல்படித்தல்மனப்பாடம்செய்தல்என்கிறஇதரஇதரவான விஷயங்களுக்கெல்லாம்சரியாகப்படுவதுஇரவுதான்என்றாகிப்போனநிலையில் அவனும்படிப்பிற்காய்அந்தநேரத்தில்தான்தஞ்சமடையவேண்டியதிருக்கிறது,

அதிகாலை விழித்தெழுந்துபடிப்பதும் எழுதுவதும் சாத்தியம் கொள்கிற விஷய மாய்த் தெரியவில்லை.அதை மீறி ஒரு நாளின் நகர்தலில் அதிகாலை எழுந்து
எழுதவோ படிக்கவோ உட்கார்ந்தால் ஒன்று நேரத்திற்கு பஸ்ஸைப் பிடிக்க முடியாமல்போய்விடும்அல்லதுசரியாக சாப்பிடமுடியாமல் அரை குறையாக எழுந்து ஓட வேண்டியிருக்கிறது.அதனால்அவன் சொல்லி விட்டான். இனி மேல் என்னை காலையில் ஏழு மணிக்கு எழுப்புங்கள் போதும் என/

இவன்எழுந்துபல்விளக்கிடீக்குடித்து,,,,,,எனபாதிவேலைகளைமுடித்தபின்தான்
அவனும்எழுந்திருக்கிறான்,அவன்எழும்போதுஅவனதுதலைக்குநேராகஅவனு
க்குப் பிடித்த கோடு போட்ட சட்டை தொங்கும்.

உங்கள் மகனுக்கு எந்த ட்ரெஸ் போட்டாலும் நல்லாவே இருக்கும்என பி.டூ ஸ்டோர்க்காரர் சொன்னது ஞாபகம் வருகிறது,ஒரு தடவை துணி எடுக்கும் போது/

சார்சும்மாஎடுத்துப்போடுங்க,தம்பிக்குஎந்தக்கலர்லபேண்ட்சட்ட,போட்டாலும்
சூப்பரா இருக்கும்,மேட்சாவும் இருக்கும் என்றார்.அதன் படி பள்ளிக் கூட யூனி பார்ம் பையனுக்குநன்றாகஅமைந்துபோனது. ரெடிமேடில்வேணாம். தைத்துப் போட்டுக்கொள்ளலாம்என்றான்.அதுவும்இரண்டுசெட்போதும்எனவும்சொல்லி விட்டான்.

இதற்கு முன்னான வருடங்களில் ரெடிமேடாக பேண்ட் சர்ட் எடுத்த போது ஏதும் பேசாதவன் தைக்கப்பட்டு வந்த உடைகளைப் பார்த்ததும் மிகவும் மகிழ்ந்துபோனான்.அதுவும்அவனுக்குப்பிடித்தடெய்லர்கடையில்தைத்துவந்த ட்ரெஸ் எனவும் இரண்டு தினங்கள் அதைப் பற்றிய பேச்சுதான்,திறந்த வாய் மூடவில்லை.பெருமிதம் தாங்கவில்லை.

அவனது அண்ணந்தான் இவனுக்கு அந்த டெய்லர் கடையை அறிமுகம் செய்துவைத்தான்.அவனுக்குஅவன்பிரெண்ட்மூலமாய்அறிமுகம்/அப்படியானகடையில்தைத்துஇரண்டே நாட்களில் வாங்கிக் கொண்ட துணிகள் தான் பையனை அந்த அளவிற்காய் பேச வைத்தது.

அப்படியாய் தைத்து வாங்கிய யூனிபார்ம் சட்டை தவிர்த்து பையனுக்கு மிகவும் பிடித்தது பிஸ்கட் கலரில் நீள நீளமாய் கோடுகள் இறங்கிய சட்டை. பார்க்கக்கொஞ்சம்மதிப்பாக இருந்தது.பையனிடம் இருந்த எந்தக் கலர் பேண்ட் டுக்கும்அதுமேட்சாகித்தெரிந்தது.அந்தசட்டையைஉள்பனியன்போடாமல்அவன் போட்டுப்பார்த்ததில்லை.

”சும்மாவாபின்னேஎப்பிடியும்ரெண்டுமூணுவருஷங்களாவதுவைச்சிருக்கணு ன்னுநெனச்சிஎடுத்தசட்டை.சீக்கிரம்கிழிஞ்சிபோச்சுன்னாஎன்னசெய்ய? இப்பிடில்லாம் வேர்வையில போட்டு அடிச்சாகிழியும்தான, சீக்கிரம் எனவும் இன்னைக்கு வெயில்கொஞ்சம்அதிகம்தான், காலையில எட்டு மணிக்கே இந்த வெயில்ன்னாஇன்னும் நேரம்கெடக்கு பொழுது சாய,,/ இன்னைக்கி அடிக்கிற வெயிலப்பாத்தாமழைவெயில்போலத்தான் தெரியுது.கெழக்குமொகம் கறுத்து மேற்குமொகம்வெளுத்துத்தெரியுதுஎனச்சொன்ன பையனின் பேச்சுக்கு தலை யசைக்கதான்செய்தான்இவனும் பஸ் ஏற்றிவிடச்சென்ற ஒரு நாள் காலை.

படிக்கிறபடிப்புதவிர்த்துபிறவற்றில்கவனம்செலுத்தியோசித்துப்பார்க்கக்கற்றுக் கொண்டுள்ளான்இப்பொழுது.அதுஅவனில்எப்படிவந்ததுஎப்பொழுதுவந்தது எனத்தெரியவில்லை.வந்துவிட்டது,அதுவும்நல்லதெனவேபடவும் செய்கிறது

அவன் பள்ளிவிட்டு வரவே மாலை ஆறு மணியாகிப்போகிறது சமயாசமயங் களில் அது ஏழுமணிவரை கூட நீளும்.பள்ளி விட்டு 5.30 மணி பஸ்ஸிற்கு ஏறினால் ஆறு மணி அல்லது5.50ற்குமுக்குரோட்டிற்கு வந்து விடுவான்,

அந்தபஸ்ஸின்பெயரே பறக்கும் ரதம்தான்.பஸ் கிளம்பியதும் டயர்க ளைகட்டி வைத்துவிடுவார்கள்அல்லதுடயர்கள்உள்ளிழுத்துக்கொள்ளும்.அதனால்சடுதியில் போய் சடுதியில் வந்து விடும்.

பஸ்ஸின் வெளிப்புறம் முழுக்கவுமாய் மாடர்ன் ஆர்ட் வரையபட்டிருந்தது போல்கலர் அடிக்கப்பட்டிருந்த பஸ் பார்ப்பதற்கு கொஞ்சம் அழகாக இருக்கும், பஸ்சினுள்ளாய் இருக்கிற சவுண்ட் சிஸ்டமும் சீட்அரேஞ்மெண்டும் புதிதாக பஸ்ஏறுபவரைகொஞ்சம்அசத்தி விடுவதுண்டு,ஆனால்வேகம்தான் கொஞ்சம் ஆளைபயமுறுத்திவிடும்.

ஒரு மழை மாதத்தின்முன் மாலைப்பொழுது அது ,இவன் பணி முடிந்து வந்துகொண்டிருந்தான்அந்தபஸ்ஸிலேயே/உட்காரஇடமில்லை.எப்பொழுதாவ து தனது சீட்டில் உட்காருகிற கண்டக்டர் எழுந்து சார் உட்காருங்கள் என்றார். இல்லை வேணாம்காலை பத்து மணியிலிருந்து மாலைஐந்து வரை உட்கார் ந்து கொண்டேதானேஇருக்கிறோம்வேலைசெய்கிற இடத்தில்,இப்பொழுதா வது கொஞ்சம் நிற்போம் என்கிற நினைப்பில் நின்று கொண்டே இருப்பதுதான். நிற்கிறேன்பரவாயில்லை.எனச்சொல்லிகொண்டேவந்துகொண்டிருந்தவேளை பக்கத்து ஊர் வந்து விடுகிறது,அங்கு ஆட்களை ஏற்றிக்கொண்டு கிளம்பப் போகிறவேளையில்இரண்டுபேர் ஓடி வந்து ஏறினார்கள்,நல்ல தண்ணி போலி ருக்கிறது,நிறைபோதையில்அவர்களால்நிற்கக்கூடமுடியவில்லை,தள்ளாடிக் கொண்டேநின்றார்கள்.அவர்களதுகோபமெல்லாம்எப்படிஅவர்களைஓடவிட்டு பஸ் ஏறவிடலாம் என்பதே,,/

”ஏண்டா எங்கள என்ன இளிச்சவாயன்னு நினைச்சயா ஒழுக்கமா பஸ்ஸ நிப்பாட்டி ஆள்கள ஏத்தீட்டு போக மாட்டயா,,,?பெரிய,,,,,,,,,,,நீயி,பஸ் என்ன ஒங்க அப்பன் வீட்டுதா,சம்பளத்துக்கு வேலை பாக்குற நாயி,,,ஒனக்கு அவ்வ ளவு திமிறா,வெட்டிபயலுகளா,,,,,என கெட்ட வார்த்தைகளில் வைய ஆரம்பி த்து விட்டார்கள்.இவ்வளவும் நடந்தது கண்டக்டர் டிக்கெட் கேட்க போன போது/

பொறுத்துப்பொறுத்துப்பார்த்தார்கண்டக்டர்.சரிஒக்காருங்க,இனிமநீங்க வந்தா அரை மணி நேரம் கூட நின்னு ஏத்தீட்டுப்போவம், சரிதான என கண்டக் டர் சொன்னதைக்கூட காதில் வாங்காமலும் டிக்கெட்டும் எடுக்காமலும் ஒரே பேச்சைதிரும்பத்திரும்பப்பேசிக்கொண்டிருந்தார்கள்பஸ்ஸிலேறியஇருவரும். பார்த்தார் கண்டக்டர் இது வேலைக்காகாது என அவரும் சண்டைக்கு இறங்கி விட்டார்,ஏண்டா,,,,,,,,,,,,ஆள் தெரியாம திரியிறிங்களா நாங்க எத்தன ஊரப் பாத்தவுங்க,எங்ககிட்டயேவா,நானும்சின்னப்புள்ளக்கிசொன்னமாதிரிசொல்லிக் கிட்டு இருக்கேன் ரொம்பத்தான யெக்குறீங்க ரெண்டு பேரும் ஏண்டா நீங்க என்ன,,,,,,,என ஒருவரின் சட்டையை எட்டிப்பிடித்து விட்டார்,சண்டையும் சத்தமும் பெரிதாகவும் டிரைவர் வண்டியை நிறுத்தி விட்டு கையில் மூன்று அடிஉயரஇரும்புராடுடன்வந்துவிட்டார்.அவர்வந்ததும்ஒருவனைசட்டையைப் பிடித்து அடித்து விட்டார்,ஏண்டா சொன்னா கேக்க மாட்ட ஒழுக்கமா,தண்ணி போட்டதிமிருல பேசச்சொல்லுதா,,,,தராதரம் கெட்ட நாயி,ஒழுக்கமா யெறங்கி ஓடிப்போயிருங்க ரெண்டு பேரும்,இல்ல வண்டிய நேரா போலீஸ் ஸ்டேசனுக்கு கொண்டு போயிருவேன்,அப்புறம் உள்ளதான் இருக்கணும் அவுங்கசொல்றவரைக்கும் என சப்தம் போட்டதும் அவர்களது போதை போன வழி தெரியவில்லை.கம்மென முனகியவாறு போய் ஓரமாய் நின்று கொண் டார்கள்,

மறு நாள் அதே இடத்தில் பஸ்ஸேறிய இருவரும் டிரைவர் கண்டக்டரிம் மன்னிப்புக்கேட்டுக்கொண்டார்கள்.அண்ணேநேத்துதண்ணிமப்புலஏதோபேசிப் புட்டேன்னே,மன்னிச்சிக்ககங்கண்ணே,நீங்கசொன்னமாதிரி போலீஸ் ஸ்டேச னுக்கு வண்டிய விட்டிருந்த எங்க பொழப்பு நாறிபோயிருக்கும்ண்ணே,நாறி நல்லவேளைஅப்பிடிஎதுவும்நடக்கல,,,,நாங்கவரத்தாட்டுக்காரங்கண்ணே,
கெடைய இங்க அமத்தீட்டு டவுன் வரைக்கும்போயிட்டுவரலாம்னுவந்தோம், வர்ற வழியில ருசிகண்ட நாக்கு பாத்தீங்களா, கடையப்பாத்த ஒடனே நின்னு ருச்சி,,,,சரக்குஉள்ளபோனஒடனேபுத்தியும்தடுமாறிருச்சி,அதான்நிதானமில்லாம
இப்பிடி யெசக்கேடா நடக்க வச்சிருச்சி,,இனிம அப்பிடி ஆகுதுண்ணே,என கும்பிடு போட்டவாறு இறங்கிப்போனார்கள்,இடம் வந்ததும்.

அவர்கள் இறங்கியதும் பஸ்ஸிலிருந்த ஒருவர் சொன்னார்,ஆமாம் இவிங்க ளுக்கு வேற வேலையில்ல,இதே பொழப்பாப்போச்சி,ஏதாவது பஸ்சீல ஏற வேண்டியது,தகறாறு பண்ண வேண்டியது,அப்புறமா மன்னிப்பு கேக்க வேண் டியது,,,,,,,,பொழப்பத்த பலுக என்றார்,

விடுங்கண்ணேநாளெல்லாம்காட்டுலயும்மேட்டுலையும்சுத்தித்திரியிறவுங்க, இப்பிடித்தான் என்னைக்காவது வயிறு முட்ட குடிச்சிப்புட்டு புத்தி கெட்டு பேசிக்கிட்டும் வம்பு இழுத்துக் கிட்டும் திரியிறவிங்கதான்.இதேது வசதி படைச்ச வீட்டு ஆளுக கண்ணு மண்ணு தெரியாம குடிச்சிப்புட்டு ஏதாவது யெசக்கெடாநடந்துக்கிட்டாக்கூடநம்மபெரிசாஒண்ணும்பேசப்போறதில்ல.
நமக்கு கோபமெல்லாம் இவுங்க மாதிரி ஆளுக கூடவும்,இவனுக்கும் கீழ இருக்குற சாமான்யன் கூடவும்தான என அன்று டிரைவர் பேசிய பஸ்ஸை விடுத்து பள்ளியில் கொஞ்சம் கூடுதல் நேரம் ஆகிப்போகிறா போது பையன் ஏறி வருகிற ஆறு மணி டவுன் பஸ் பக்கத்தில் இருக்கிற ஊர் வரை போய் வரும்,கூடுதலாய் கால் மணி நேரம் வரை ஆகும்.

எது எப்படி ஆன போதும்அவன்வந்துஇறங்கியவுடன் முக்கு ரோட்டிலிருந்து ஒருபோன்பண்ணிவிடுவான்,அங்கிருக்கிறகடையில்உள்ளகாய்ன்போனிலிரு
ந்து,கரெக்டாகஅவன்போன்பண்ணுகிறநேரமாய்இவனும்போய் விடுவான்.

சிலசமயங்களில்.அழைப்பொலிஇவனதுசெல்லில்கேட்டுக் கொண்டே இருக்க இவனும் தம்பிஇதோவந்துவிட்டேன்என போய் விடுவான், பையனும் உடனே கொடுத்த காய்னைகடைக்காரரிடமிருந்து வாங்கிகொண்டு வந்து விடுவான்,

இவனுக்குக்கூட சற்று சங்கடமாய் இருக்கும்,சொல்வான் பையனிடம், குடுத்த காசவாங்கவேணாம்,ஏதாவதுஅந்தகாசுக்குவாங்கித்திண்ணுக்கஎன்பான்.ஆனா ல் அவன்வேண்டாம் அதெல்லாம் என்று விடுவான், அவனுக்கு இப்படியாய் தெருக் களில் நின்று தின்பதில் கூச்சம்.இதேது வாங்கிக் கொண்டுபோய் வீட்டில் கொடுத்தால் சாப்பிடுவான்.

சிலபிள்ளைகளைப் பார்க்கும்போது இவனுக்கு சற்று பொறாமையாக கூட இருந்திருக்கிறது.ரோட்டோர டீக்கடைகள் மற்றும் பெட்டிக் கடைகளில் அவர்கள்வாங்கிச்சாப்புடுகிறவேகம்நம்மைஅசத்திவிடுகிறதுண்டுதான்.அந்த
வயதிற்குரிய வேகம்சாப்புடுகிறவிஷயத்திலும்இருக்கும்போலும்.அவனிடம் அதைச்சொன்னால் என்னால்முடியாதுஅப்படியெல்லாம்சாப்பிட என்பான்,

இத்தனைக்கும் அவன் போன் பண்ணுகிற கடையில் வாழைப் பழங்கள், கடலை மிட்டாய்மற்றும்பாட்டில்களில் அடைத்து வைக்கப்பட்டிருக்கிற வித விதமான மிட்டாய் மற்றும் முறுக்குகள் காணக்கிடைக்கும்,அதையெல்லாம் ஒன்றையும் தொட்டுக்கூடப்பார்க்காதவனாக ஆகிப்போவான்,அவனை முக்கு ரோட்டிற்கு போய் கூப்பிடப்போகிற மாலை வேளைகளிலெல்லாம் தவறாமல் இதை அவனிடம் சொல்வதுண்டு,அவனும் தவறாமல் அதை மறுப்பதுண்டு.

மூடித்திறக்கிற கண்களின் விழித்திரை இரண்டிற்கும் மேலொன்றிற்கும் கீழொ ன்றிற்குமாய் இழுத்துக்கட்டப்பட்ட கயிறுகள் அறுந்து விழாதபடி பார்த்துக் கொள்ளவும்,கண்களின்கருவிழிகள்இடம்பெயர்ந்துவிடாமலும்,அசையாமலும் இருக்குமாறுபார்த்துக்கொள்ளவுமாய்சாரம் கட்டி ஒரு ஆளை நிறுத்த வேண்டி இருக்கிறது.

ஆனால்பையனுக்கானால்அப்படியெல்லாம்இருப்பதில்பிடித்தம் இல்லை. உடல் ஒத்துக்கொள்ளவும்இல்லை.அதிக நேரம் படிப்பதும் கண் விழிப்பதும் அவன் உடலுக்குச் சேரவில்லை.

முதலில் உடல்சூடுஏறிக்கொண்டது,பின் சாப்பிட்ட சாப்பாடு உடலுக்கு ஒத்துக் கொள்ளவில்லை.ஒருநாளைக்குநான்கைந்துதடவைபாத்ரூம்போனான்.இவன் எப்பொழுதும் நம்பிக்கை வைத்துஇயங்கிக் கொண்டிருக்கும் ஹோமியோபதி வைத்தியரிடம்தான்கூட்டிப்போனான்பையனை,அவர்பெரிதாக  ஒன்றுமில்லை, மனஅழுத்தம்தான் என்றார்.

ஆனால் அவரிடம் போய் வைத்தியம் பார்த்துக் கொண்டபின்னும்அதே போல் தான் இருந்தது.பள்ளிக்கி அடிக்கடி லீவு எடுக்க வேண்டி வந்தது.அது அவனு க்கே ஒரு மாதிரி தர்ம சங்கடமாயும் குற்ற உணர்வாயும் இருந்தது. அதற்கு அவன் சொன்ன ஒரே காரணம் வேறு ஏதாவது உடல் கோளாறு என்றால் சமாளித்துக்கொள்ளலாம்.பாத்ரூம் பிரச்சனையை எப்படி,,,?அதுவும் ஸ்கூலில் பாத்ரூம்இருந்தால்தைரியமாகப்போய்விடுவேன்.அதுஇல்லாததால்தயக்கமா க இருக்கிறது எனவும் பள்ளியில் போய் பாத்ரூம் வந்தால் நான் எங்கு போவேன் என்றும் கேட்கிறான்.அவனுக்கு சரியான பதில் சொல்வது விடுத்து இப்படியேஇருந்தால் படிப்புக் கெட்டுவிடும் எனத்தான் சொல்ல வேண்டி இருக்கிறது.

கணக்கு,தமிழ்,இங்கிலீஸ்,,,,,,,,எனஅடுக்கப்பட்டிருக்கிற வரிசையில் ஒன்றைக் குறைத்தால் நன்றாக இருக்கும் என யோசித்துக்கொண்டிருக்கிற வேளையில் ஐய்யையோ இன்னும் ஒன்று அல்லது இரண்டு பாடம் கூட்டலாமா என்பது பற்றி நினைத்துக்கொண்டிருக்கிறோம் என பதில் வருகிறது கற்பிக்கிற தரப்பி லிருந்து.

ஆனால் அவர்களைச்சொல்லியும்,ஆனால் அவர்களைச்சொல்லியும் குற்றம் இல்லை,சனி ஞாயிறுகளின் விடுமுறை தினங்களில் கூட வகுப்பு எடுக்க வந்து விடுகிறார்கள் பள்ளிக்கு/

இதில் பையனின் பயாலஜி டீச்சர் படுகிற சிரமம்தான் சற்று கடினமானதுதான். மதுரையிலிருந்து தினசரி போய் வருகிற அவளுக்கு இது போலான சனி ஞாயிறுகளின் லீவுதினங்கள்தான் சொர்க்கம் அல்லது பிரீ/எங்காவது சொந்த பந்தம்வெளியூர்,விசேசநிகழ்ச்சிகள்,கோயில்குளம்எனபோய்வரலாம்.ஆனால் அதைசனிஞாயிறுகிளாஸ்கள்கெடுத்துவிடுகிறது.கைக்குழந்தைக்குவைத்தியம் பார்க்கடாக்டரிடம் கூட போக முடிவதில்லை.டாக்டர் கூட சப்தம் போடுகிறார். சம்பாதியத்தப் பாக்க ஓடுற சாக்குல கொழந்தையமறந்துறாதீங்க என்றார்,

“என்ன செய்ய சார்,பாத்துக்கிட்டு இருக்கூற வேலைய திடீர்ன்னு கொழந் தைக்காக விட்டுட மனசு இல்ல சார்,தவிர இதயும் விட்டுட்டா எங்களுக்கு ன்னு இருக்குற பெரிய பிடிமானம் போயிருமுன்னு நம்புறோம்,இதுலதான் எங்கதன்மானமும்அடங்கிக்கெடக்குன்னு நெனைக்க வேண்டியதிருக்கு/ எங்க சாருக்கும் வீட்ல உக்கார நேரமில்ல,ஓடிக்கிட்டே இருக்காரு,அவரு பொழப்பு அப்பிடி என்ன செய்ய,ஏதோ வேலைக்காரம்மா தயவுல குடும்பம் ஓடிக்கிட்டு இருக்கு சார், ஏங் வயசுல இந்த மாதிரி நல்ல வேலைக்காரம்மாவ பாத்த தில்ல.அவுங்கமட்டும்இல்லைன்னாஏங் நெலமைய நெனைச்சிப்பாக்கவே தர்ம சங்கடமா இருக்கு சார்,அந்த அம்மாவுக்கெல்லாம் கோயில் கட்டி கும்புடணும் சார். அவுங்களுக்கு மட்டும் இல்ல சார்,ஏங் வீட்டுக்காரருக்கு,கூட வேலை பாக்குற டீச்சர் வாத்தியார்களுக்கு,சமயத்துல ஏங்கிட்ட படிக்கிற பசங்களுக்குன்னு,,,,,,நெறையப்பேருக்குநான்கடமைப்பட்டிருக்கதாநெனைச்சி ருக்கேன், அன்னை க்கி ஒரு நா இப்பிடித்தான் லீவு நாளைனக்கி கிளாஸ் எடுத்துக்கிட்டுஇருந்தப்பஒருமத்தியான நேரம் மயங்கி விழுந்துட்டேன்.பதறிப் போச்சி புள்ளைங்க,,, அதுலஉள்ளூர்ல இருக்குற ஒரு பொம்பளப்புள்ளதான் தண்ணிஎடுத்து தெளிச்சி எழுப்பி உக்கார வச்சிட்டு ஓடிப்போயி அம்மாவை யும் பக்கத்துவீட்டுக்காரங்கலயும்கூட்டிக்கிட்டு வந்துட்டா,எனக்கு ஒண்ணும் இல்ல, சும்மா சாதாரண மயக்கம்தான்னு சொன்னாலும் கூட போக மாட்டேங் கிறாங்க,நான் கிளாஸ் நடத்தி முடியிற வரைக்கும் பள்ளிக்கூட வாசல்லயே ரெண்டு பேர் இருந்து கிளாஸ் முடிஞ் சதும்என்னையக்கொண்டு வந்து பஸ் ஏத்தி விட்டிட்டுத்தான் போனாங்க/

சமயங்கள்ல ஸ்கூல்ல அஜெஸ்மெண்ட் பண்ணிக்கிருவாங்க, இல்லைன்னா லீவு கிடைக்கும் .சமயங்கள ஒங்க வேலைய நீங்கதான் சரியா பாத்துக்கிற ணுன்னுஉத்தரவுவரும்பள்ளிநிர்வாகத்தரப்பிலிருந்துஅதுக்கும்அடிபணிஞ்சிதான் ஆகணும்,என்ன செய்ய சார் எங்க நெலமஅப்பிடி,/ இந்தமாதிரியான நேரங்க ள்லஎங்ககோபமும் ஆதங்கமும் பசங்க மேலதான் திரும்பும்,ஊருக்கு யெளச்ச வன் கதையா அவுங்க ஆகிப்போவாங்க,,,,,/

அப்படித்தான் பள்ளி விடுமுறை தினத்தின்று ஒரு சனிக்கிழமை கிளாஸ் வைத்திருந்தபோதுஆற்றாமையில்இரண்டு பசங்களை அடித்து விட்டாள். அதில் இவனது பையனுக்கு கூடுதல் அடி.அடியின் வேகம் தாங்காமல் காய்ச்சல்வந்துவிட்டது.இவனுக்கானால்சரியானகோவம்.என்னஇதுஇப்படியா பிள்ளையைப்போட்டுஅடிப்பது?எனஆசிரியநண்பர் ஒருவரிடம் குறை பட்டுக் கொண்டிருந்த போது அவர் சொன்னார்,புள்ளைகள அடிக்கக்கூடாது வைக்கக் கூடாதுன்னு சொன்னாலும் என்ன செய்ய சார்,ஏதோ ஒரு மன வருத்ததுல, ஆத்தமாட்டாமலேசாபெரம்பெடுத்துறவேண்டியதுதான்இருக்கு,ஆனாஅதுக்காக நாங்கமனசளவுல வருத்தப்பட்ட நாட்க நெறைய இருக்கு சார், பெரம் பெடுத்து புள்ளைகள அடிக்கப்போறதுக்கு முன்னடியோ இல்ல அடிச்சி முடிச்ச பின்னா டியோ வருத்தப்படாமஇருந்ததில்ல.என்னையப்பொறுத்த அளவுக்குஇங்லீஸ் மீடியத்துலபடிச்சிட்டுஇருக்குறஏங்பையன்ஞாபகம்தான்வரும்.அந்தமாதிரியான நேரத்துல அது போலத்தான் எல்லா டீச்சர் வாத்தியார்களுக்கும் வருத்தம் இருக்கும். தவிர விடுங்கள் இதையெல்லாம் பெரிதாக எடுத்துக் கொள்ளா தீர்கள்., அப்படித்தான் இருக்கும் இந்த ஒரு வருடம்,இது அவன் தலை விதியை நிர்ணயிக்கிறவருடம்,அதனால்பசிதூக்கம்,சாப்பிட்டான்,சாப்பிடவில்லை,உடல் நோவுடீச்சர்அடிக்கிறாள்என்பதையெல்லாம்பெரிதாகஎடுத்துக்கொள்ளாதீர்கள். பிள்ளைகள் நன்றாகப்படித்து நல்ல மார்க வாங்கி சந்தோஷமாக வந்து நிற்கிற போது பட்ட கஷ்டமெல்லாம் மறந்து போகும் என்றவர் பையனை சரியாக இருக்கச்சொல்லுங்கள் பள்ளியில் ஏனென்றால் இந்தக்காலத்தில் இந்த வயதில் பிள்ளைகளை நம்ப முடிவதில்லை என்றார். நான் சொல்கிற இந்த வார்த்தை என் பிள்ளைகளுக்கும் பொருந்தும் என்றார்.

அவர்என்ன சொன்ன போதும் கூட மறுநாள் பையனை ஸ்கூலில் போய் விட்டுவிட்டு டீச்சரிடம் சொல்லி விட்டு வந்தான்.இவனைப் பார்த்ததும் சிறிது நேரம்நன்றாகபேசிக்கொண்டிருந்தவள்அழுதுவிட்டாள் இவனுக்கே கொஞ்சம் பாவமாகக்கூடப்போயிற்று.அப்படியேவாசலோடுபோயிருக்கலாமோபள்ளிக்
குள் வந்திருக்கக்கூடாதோ,என்கிற நினைப்பில் டீச்சர் அழுது முடித்ததும் வருத்தம் தெரிவித்து விட்டு வந்து கொண்டிருக்கையில் ரயில்வே கேட் அடைப்பிற்காய் நின்றிருந்த போது நண்பர் ஒருவர் சொன்னது ஞாபகத்திற்கு வந்தது.

சார்ஏம்பொண்ணு பத்தாம் வகுப்புப்படிக்கிறா,கணக்குல 50மார்க்கு வாங்குனா, போனதடவ,டீச்சர்கூப்புட்டுவிட்டாங்கபோனேன்,ரொம்பக்கொறபட்டுச்சொன்
னாங்க,சரிதான் டீச்சர் இவ்வளவு குறை பாடுகள சொல்ற அதே வேளையில பிள்ளைகளுக்கு கணக்குன்ன என்ன அதப்படிச்சா வாழ்க்கைக்கு எவ்வளவு தூரம் பயன்படுமத எவ்வலவு தூரம் நடை முறை வாழ்க்கையில எவ்வளவு தூரம்பிராக்டிகலாஅப்ளைப்பண்ணிபாக்கமுடியும்ன்னுசொல்லிக்குடுங்க,சரியா வருவாங்கன்னு சொல்லீட்டு வந்த கொஞ்ச நாளையில இப்ப டீச்சர் எங்க கூட நல்லா பேசுறாங்க சார்.எல்லாரும் கொஞ்சம் நல்லாப்படிக்கிறோம்ன்னு சொன்னாசார்,இதுதான்வேணும் பள்ளிக்கூடங்களுக்கு என்றார்.

அது போல் இவன் பள்ளிக்குப்போன போது டீச்சரிடம் ஏதாவது சொல்லலாம் என நினைத்த போது அவளது அழுகை இவனை ஒன்றும் பேச விடாமல் செய்து விட்டது.வந்து விடுகிறான் ஏதும் சொல்லாமல்/

அதற்கப்புறமாய் பள்ளியையும் பார்க்கவில்லை. டீச்சரையும் பார்க்கவில்லை.

அவனும் என்னதான் செய்வான்பாவம்.தினசரிகளில் இரவு பணிரெண்டு மணி வரைக்கும் படிக்கிறான்.பாடங்கள் கொஞ்சம் கூடுதலாக இருந்தால் ஒரு மணியைக்கூட எட்டித்தொட்டு விடுகிறது .

6 comments:

கரந்தை ஜெயக்குமார் said...

அருமை
உண்மை
தம +1

vimalanperali said...

வணக்கம் கரதை ஜெயக்குமார் சார்,
நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/

”தளிர் சுரேஷ்” said...

இன்றைய கல்வியையும் மாணவர்களின் நிலையையும் சிறப்பாக உருவகப்படுத்தியது பதிவு!

vimalanperali said...

வணக்கம் தளிர் சுரேஷ் சார்,
நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/

'பரிவை' சே.குமார் said...

கொட்டாவி நல்லாயிருக்கு.

vimalanperali said...

வணக்கம் சேக்குமார் அண்ணா,
நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/
சும்மா விடும் கொட்டாவியை
கொஞ்சம் மேட்டர் சேர்த்து விடுவோம்/