26 Oct 2015

அம்பு,,,,,

நூறு,,,,ஐம்பது,,ஐந்நூறு,,,,ஆயிரம்,,,பத்து,,இருபது என அஞ்சறைப் பெட்டிகளாக பிரிக்கப்பட்டிருந்த ட்ராயரின் தனித்தனி அறைகளில் வசதிக்கு ஏற்ப பிரித்துப் போடப்பட்டிருந்த ரூபாய் நோட்டுக்கள் அவனைப் பார்த்து கண்சிமிட்டு கின்றன.

பேன் காற்றில் படபடத்து கைஅசைக்கின்றன.என்னைப்பார்,பேசு,இப்படி உம்ம னா மூஞ்சாக உனது,,,,,,,,,,,,ப் போலவே இருக்காதே என என்னுடன் பேச எத்தனிக்கிறது.

அதனுடன்அவனுமாய்பேசிநலம்விசாரிக்காவிட்டாலும்கூடஅதன் பிறப்பிடம், பூர்வீகம்,பற்றி கேட்டறிந்து விசாரிக்கிற ஆவலிலும் என்ன வேண்டும் உனக்கு? எப்படி இருக்கிறாய்நீ?என ஒரு கற்பனையான உரையாடலை துவக் கு கிற புள்ளியிலுமாயும்,நெசவிடலுடனும் துவக்குகிறான் அவன்.

10 டூ5 இது அலுவலகநேரம்.இதை உள் மனதில் இருத்தி 9.00,,,,,,9.15, ,,,,,9.30, ,,,,9.45, ,,,,10.00அலுவலக வருகை பதிவேட்டில் கையெழுத்திடுகிறவர்களின் வரிசையில் அவனும் ஒருவனாய்இருக்கிறான்.9.50க்கு அல்லது 10.00 மணிக்கு பணப்பெட்டியை திறந்து பணம் எடுத்து கேஷ்ப்பார்க்கையில்தான் இத்தனை யும் நடக்கிறது.பணம்வாங்குகிறான்,பணம் கொடுக்கிறான், வருகிற கஸ்டம ர்களிடம் பேசுகிறான்.வாஞ்சையோடு விசாரிக்கிறான். 
“எந்தஊர்என்னசெய்கிறீர்கள்எதற்காய்இவ்வளவுபணம்வாங்குகிறீர்கள்,வீடு,கீடு
கட்டுகிறீர்களா?அல்லதுஏதேனும் நிலம் விலைக்கு வருகிறதா? எனக் கேட்பது டன், நீங்கள் இங்கு பணம்போடுவது சரி,உங்களது ஊரிலிருக்கிற உங்களது சொந்தங்கள் அல்லது தெரிந்தவர்கள் யாரேனும் பணத்தை முடிந்து வீட்டில் வைத்திருந்தால் எங்களிடமே போடச்சொல்லுங்கள்.

இப்போது நல்ல வட்டி நிலவுகிறது போடுகிற உங்களுக்கு நல்லலாபம் பணத் தி ற்கும் பாதுகாப்பு”எனவும் இன்னும்,இன்னுமாய் நிறைய பேசியவாறும் அன்றாடங்களில் அவன் பொழுதும் 10 டூ 5.00 வாழ்க்கையும்.

ஒரு நாளைக்கு நான்கைந்துமுறை மட்டுமே பஸ் வந்து போகிற ஊரில் இருக் கிற ஒரு தனியார் அலுவலகத்தில்தான் அவன் பணிபுரிகிறான் இருசக்கர வாகனம்ஒன்றைகையில்வைத்திருப்பதனால்தப்பித்தான். இல்லையென்றால் பஸ்சைமட்டுமேநம்பியிருந்தால்அவன்சரியானநேரத்திற்குவேலைக்குப்போய் வருவது கேள்விக் குறியாகிவிடக்கூடும்.

அப்படியிருந்தபோதும் கூட அவன் தன் அலுவலக நாட்களை இன்முகத்து டனேயே எதிர்கொள்கிறான்அன்றாடம். இதுவரைஇருபத்தியொன்பது வருட ங்களாக சில வருடங்கள் தவிர்த்து கடலியே நீச்சலடித்து வந்தவன் இப்போது கண்மாயில் அல்லது குட்டையில் நீச்சலடிப்பது மிகவும் சிரமாய் இருக்கிறது. இருந்தாலும்சிரமங்களுடன்சிரமமாயும்,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,என்கிறமனோநிலை யுடனுமா ய் பணிபுரிகிறான்.

இரண்டு வாரங்களாக மாலை நான்கு மணிக்கு பெர்மிஷன் போட்டு விட்டு போக வேண்டும் என நினைக்கிறான்,முடியவில்லை,கடைக்கு போய் ஆசை மனைவிக்கு ஒரு சேலை எடுக்க வேண்டும்பையன்ஒரு கடந்த ஒரு மாதமாய் கிரிக்கெட்பேட் கேட்டுக் கொண்டிருக்கிறான்,வாங்கிக்கொடுக்க நேரமில்லை.

“காலையில எட்டு மணிக்கு வீட்டை விட்டு கெளம்புறவுங்க இப்பிடி இருட்டுனப் பெறகுதான் வீடு வர்றீங்க,ஞாயித்துக்கெழமை ஒரு நா மட்டும்தா ஒங்கள முழுசா பாக்க முடியுது. அன்னைக்கும் அலுப்பா இருக்குதுன்னு தூங்கீ றீங்க. நாங்ககடை கண்ணிக்கு போறதுன்னா,இல்ல ஏதாவது விசேஷ வீட்டுக் கு போறதுன்னாக் கூட நாங்களாத்தான் தனியா போய்வர வேண்டி யிருக்கு. ஒருநாள்லீவுபோடுங்கன்னா லீவுகெடைக் கலைங்குறீங்க,அப்பிடிஎன்னதான்
உத்தியோகம்பாக்குறீங்களோஉலகத்துலஇல்லாதஉத்தியோகம்?எனவீட்டார்கள் அலுத்துக்கொள்வதும்இவன்சமாளிப்பதும்அன்றாடநிகழ்வாகிப்போனது.ஆனா லும் கூட அவன் நினைத்த பெர்மிஷனை இன்னும் எடுக்க முடியவில்லை.

இப்போதெல்லாம்ரூபாய்நோட்டுக்களுடன்பேசமுடியவில்லைஅவைகண்சிமிட்டிசிரிப்பதையும்,
கையசைப்பதையும் பார்த்து ரசிக்கமுடியவில்லை. பச்சை கலந்த ஊதா, மஞ்சள் கலந்த பழுப்பு,வய்லெட் நிறம் அணிந்தும்,சிவப்பு நிறத்திலுமாய் என காட்சிப்பட்ட ரூபாய் நோட்டுக்கள் எல்லாவற்றிலுமாய் புலி சிரித்தும், மலை கள் ஓடியும், கடல் நீண்டுமாய்,வயல்கள் விரிந்துமாய் தெரிந்தது அது நாற்று நட்டுக் கொண்டிருந்த பெண்களையும், உழவுசெய்த ட்ராக்டரையும் வயர்கள் ஓடி அலைபாய்ந்த மின் கம்பிகளையும் கூடவே தேசத்தந்தை மகாத்மா காந்தியின் படத்தையும் சேர்த்து காட்சிப் படுத்துகிறது.

அப்படி காட்சிப்பட்ட நோட்டுக்கள் அவனைப்பார்த்து கேட்கின்றன.ஏன் முன்பு போல என்னிடம்பேசிச்சிரித்துஉரையாடுவதில்லை நீங்கள் என்னை முன்பு போலஏன்மென்மையாககையாள்வதில்லை.?என்னைகையிலெடுத்துஎண்ணும் போதும்,எண்ணிவாடிக் கையாளரிடம் தருகிற போதும் கையில் ஒரு முரட்டுத் தனமும், இறுக் கமும் முளை விட்டுத் தெரிகிறதே உங்களிடம் என வரிசை யாக கேட்கிற கேள்வி களை சற்றே பின்னகர்த்திவிட்டும், உனது கேள்விக்கு அப்புறமாய் பதில் சொல் கிறேன் என புறந்தள்ளி விட்டுமாய் வேலைகளின் சுழலில் சுழன்று எழுந்து வருகையில் ரூபாய் நோட்டுக்கள் கேட்ட அழகான கேள்விகள் ஞாபகம் வருகின்றன/

9 comments:

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

ஒவ்வொருவர் வாழ்விலும் எதிர்கொள்ளும் யதார்த்தம். நன்றி.

கரந்தை ஜெயக்குமார் said...

அருமை
நன்றி நண்பரே
தம +1

சென்னை பித்தன் said...

மனத்தின் எதிரொலி!
அருமை விமலன்

vimalanperali said...

வணக்கம் சென்னைப்பித்தன் சார்,
நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/

vimalanperali said...

வணக்கம் ஜம்புலிங்கம் சார்,
நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/

வலிப்போக்கன் said...

ரூபா நோட்டில் காந்தி சிரிப்பதுதான் என் நிணைவுக்கு வருகிறது...

vimalanperali said...

வணக்கம் வலிப்போக்கன் சார்,
நன்றி வருகைக்கும்,கருத்துமாக/

”தளிர் சுரேஷ்” said...

விடுமுறை இல்லா வேலை! அலுப்புதான்!

vimalanperali said...

வணக்கம் தளீர் சுரேஷ் சார்,
நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/