30 Oct 2015

பூப்பு,,,,

  பையே  உண்டியலாகிப்  போனது  கடைக்குச் செல்லும் போதும்,பள்ளிக்குச் செல்கையிலும்
கொடுத்து விடுகிற பணத்தில் மிச்சம் பிடிக்கிற அல்லது சேர்த்து விடுகிற ஒரு ரூபாய்,இரண்டு ரூபாய் நாணயங்கள் ஒன்றிரண்டு அவன் அணிந்திருக்கிற பெர்முடாஸ் பையிலேயே தங்கி விடுகிற கணங்களில் அது சேமிப்பாய் உருமாறிப் போகிறது அல்லது காட்சி அளிக்கிறது.
  சேர்ந்து விட்ட சில்லறைகள் மொத்தமாகிப்போகிற போது மீன் வடிவ உண்டியலில் அது குடிகொள்ளும்.
  அப்படி குடி வைத்து வளர்த்த தொகை மொத்தம் 637 ரூபாய் என அறிவித்தாள் சின்ன மகள்.
  அடிக்கடி அதை எடுத்துப் பார்த்துக் கொள்வாள்.அரை வெள்ளைக் கலரில் இருக்கிற டைல்ஸில் நீயூஸ் பேப்பரை விரித்து அதில் சில்லறைகளை கொட்டி எண்ணிப்பார்ப்பாள்.மிகசரியாக 100 ரூபாய்கள் சேர்ந்ததும்எனது மனைவியிடம் சில்லறைகளாகக் கொடுத்து ரூபாய்களாக மாற்றிக் கொள்வாள்.
  பூ  ஒன்று  மரத்திடம்  கைவிரித்து  பரிமாற்றம்  செய்து கொள்கிறது.கொள்ளட்டுமே அதுவும்பார்க்க அழகாய்த்தானிருக்கிறது.  பூ   மரத்திற்கு அம்புக்குறியிட திரும்பவும் மரம் 
பூவிற்கு அம்புக்குறியிடவுமான காட்சி பார்க்க ரம்யமாய்/
  “சிப்பி இருக்குது,முத்தும் இருக்குது திறந்து பார்க்க நேரம் நேரம் இல்லடி ராசாத்தி.சிந்தை இருக்குது,சந்தம் இருக்குது கவிதை பாட கலந்திருப்பது இப்போது”/,,,,,,,,,,,,,,,,,,,,எந்த சேனல் எனத் தெரியவில்லை.காலை 7 மணிக்குகமலஹாசனும்ஸ்ரீதேவியும் பாடிக்கொண்டிருந்தார்கள்.
  பாடலும்,  சூழலும்காட்சியும்,  அதில்  தெரிந்த  மரங்களும்,  பச்சையும்
கண்ணுக்கு குளிர்ச்சியாக/
  மரம் மலர்ந்திருந்தது.மண் சிரித்துத் தெரிந்தது.பச்சைகள் தலையாட்டி கண்சிமிட்டியது.
  “என்னடி காலங்காத்தால டீ.வி முன்னால உக்காந்துகிட்டு ஸ்கூலுக்கு கிளம்ப வேண்டாமா?டேய் பெரியவனே மோட்ரப்போட்டு விடுறா,மாடியில போயி டேங்குல எவ்வளவு தண்ணியிருக்குதுன்னு பாரு.அப்புறம் படக்குன்னு கரண்டு போயிரப்போகுது.  ஏங்க இந்த காய்கள கொஞ்சம் நறுக்கித்தர்றீங்களா?மொதல்ல டீய எடுத்துக் குடிங்க.டீக்குடிக்கிற வேளையிலதான் போன் பண்ணத்தோணும் ஒங்களுக்கு.மொதல்ல நீங்க டீக்குடிக்கிற நேரத்துல யாரு போன் பண்ணக்கூடாதுன்னு ஒரு அறிவிப்பு வெளியிடணும்.அப்புறம் எத்தன தடவதான் சுடவைக்கிறது.டேய் நல்ல புள்ளைங்கடா,அப்பாவ மாதிரியே இப்பிடி பாட்ட ரசிக்கிட்டு இருந்தா பொழுது உருப்பட்டுரும்.புள்ளங்கள வலத்து வச்சிருக்காரு பாரு ஒங்க அப்பா,”
  “நீங்க மட்டும் ராத்திரி நாங்க தூங்குனதுகப்புறம் பழைய பாட்ட கேக்குறீங்க ,முந்தாநாளு பாட்டோட சோகம் தாங்காம அழுதுட்டீங்களாம்ல” இளையவளின் பேச்சில் அமுங்கிப்போகும் எனது மனைவின் சப்தம்/
 “மிச்சமிருக்கிறஒருபக்கத்தைமட்டும் படிச்சு முடிச்சிக்கிறேன்.அப்பத்தான் ஒரு புஸ்தகத்த முடிச்ச திருப்தி கெடைக்கும்.இல்லன்னா எழுதுனவுங்க கோவிச்சுகிறப் போறாங்க”என்ற பேச்சை வழிமறித்து முறத்த மனைவி நான் நேத்துதான் படிச்சு முடிச்சேன் என்கிறாள்.
  “அம்மாவும்,அப்பாவும் இப்பிடி படிப்பு,பாட்டுன்ன்னு இருந்தீங்கன்னா  பின்ன நாங்க மட்டும் எப்பிடி இருப்பமா”?சின்னவள்.
  “இப்ப,பாக்கலாம்,,,,,,,தனனா,தன்னேனன்னா,,,,மழையும்,வெயிலும் என்ன உன்னைக்கண்டால்,,,,,,தன்னேதன்னானே,,,,,,,”
  “சரி போதும் எந்திரிடி,டீவிய ஆப் மண்ணிட்டு குளிக்கிற வேலையப்பாரு.காலாகாலத்துல ஸ்கூலுக்கு கெளம்புற வழியப்பாரு,ஸ்கூல் பீஸ் என்னன்னு சொன்ன,டூயூசன் உண்டான்னு கேளு,பத்தாம் வகுப்பு போயிருக்க/ஹாக்கிக்கு போறதயெல்லாம் நிறுத்தீரு,வேணும்னா ஒங்க அப்பாவ PTமாஸ்டர்கிட்ட வந்து சொல்லச் சொல்வம். படிப்புல கான்ஸண்டேசன் பண்ணு ஆமா,சும்மா வெளையாட்டுத்தனமா திரியாத”/
  நேற்று பள்ளிக்குப் போகும் போது கொடுத்து விட்ட காசின் மிச்சம் பெரிவனின்(மூத்த மகன்)பெர்முடாஸ் பையில் கிடந்தது.ஒற்றை ரூபாய் நாணயம்,அவன் கையெலெடுக்கையில் நான் பார்த்து விட்டேன்.
   “சிப்பி இருக்குது,முத்தும் இருக்குது,,,,,,,,,,,,,,,,,,,”
   உண்டியலாகிப்  போன  பையே  காசை  திரும்பவுமாய்  உள்வாங்கிக் கொள்கிறது.
  உள்வாங்கியதை திரும்பவுமாய் தோண்டி எடுத்து வலது கைகட்டை விரலுக்கும்,ஆள்க்காட்டி விரலுக்கும் இடையாக தூக்கி நிறுத்தி  முன் பக்கம்,பின் பக்கம்,பக்கவாட்டு தோற்றம் என  பார்க்கிறான்.
  விடுபட்டுப் போன ஒருபக்கத்தை முடித்து விட்டு காய்கறி நறுக்க அமர்கிறேன்.
  “சிப்பி   இருக்குது,  முத்தும்   இருக்குது,,,,,,,” பாட்டு   முடிந்து   போனது.
சின்னவள் குளிக்கப்போகிறாள்.காசு உண்டியலாகிப்போகிறது.
 வீடு காலைநேர இயக்கத்தை அணிந்துகொள்கிறதுஎனது மனைவிசேனலை
மாற்றிபழையபாடலை கேட்டுக்கொண்டிருந்தாள்.

8 comments:

KILLERGEE Devakottai said...

நடைமுறை யார்த்தம் கண்முன் காட்சியாய்.....
தமிழ் மணம் 1

கரந்தை ஜெயக்குமார் said...

வீட்டுச் சூழல் இயல்பாய் கண்முன்னே தோன்றுகிறது
நண்பரே
நன்றி
தம +1

திண்டுக்கல் தனபாலன் said...

அழகான பாடலுடன் ரசித்தேன் ஐயா...

”தளிர் சுரேஷ்” said...

வீட்டின் காலைக்காட்சியை கண் முன்னே நிறுத்தியது சிறப்பு! வாழ்த்துக்கள்!

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

ஒவ்வொருவர் வீட்டிலும் நடப்பதே. பகிர்ந்த விதம் அருமை.

vimalanperali said...

வணக்கம் கரந்தை ஜெயக்குமார் சார்,
நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/

vimalanperali said...

வணகக்ம் தளிர் சுரேஷ் சார்,
நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/

vimalanperali said...

வணக்கம் ஜம்புலிங்கம் சார்,
நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/