8 Oct 2015

புரோட்டா சால்னா,,,,,,கடித்தகடிக்கும்,இழுத்த இழுவைக்கும் கொடுத்த பணம்போதுமாஅல்லது நேர்படுமா என்கிற ஐயப்பாட்டுடனேயே இவன்/

கைநிறையவைத்திருந்தபணம்கரைந்து போகிறசமயங்களிலும் கூட இவன் இப்படி வருத்தப் படவேண்டியதில்லை.மணிகண்டனின்கடைஇருக்கபயமேன்என்கிறசொல்லாக்கம்உருப்பெற்றுவிட்ட நிலைத்துவிட்டபொழுது இவன்இப்படிஅனாவசியமாய்வருத்தம் கொள்வதேன்.

சலனமானமதியவேளையில்கண்மாய்கரையில்அமர்ந்திருந்தமணிகண்டன்புரோட்டாகடைக்கு சாப்பிடப்போயிருந்தான்.பஸ்டாப்பை அடுத்ததாய் அமைந்திருந்த வெளியில் கூரை வேயப் பட்டிருந்த கடை.

அவரதுமனைவியும்அவருமாய்பேசிக்கொண்டிருந்தார்கள்,மனைவியின் அருகில் அவர்களது குழந்தைவிளையாடிக்கொண்டிருந்தது.இன்னொன்றுபள்ளிக்குபோயிருப்பதாய் சொன்னாள். 

“என்ன ஆச்சியும் அய்யருமா இந்நேரம் பேச்சிக்கால்ல” என்கிற இவனது கேள்விக்கு எங்க சார்இவ்வளவுபெரியகடையவச்சிக்கிட்டுகாலையிலஇருந்துஈஓட்டவேண்டியிருக்கு.காலையில இருந்து ஒருபொட்டு  யேவாரம் இல்ல,இப்பிடியிருந்தா ரெண்டு பொட்டப்புள்ளைகள வச்சிக்கிட்டு என்ன செய்யன்னு தெரியல.வயசு வேற போயிக்கிட்டு இருக்கு சார்,32 ஆச்சி,இன்னும,,,,,ஒடம்புலதெம்பு இருக்கும் போது சம்பாதிச்சிக் கிட்டாதான, போற போக்கப் பாத்தாஇந்த சம்பாத்தியத்துலயும் மண்ணு விழுந்திரும்போலயிருக்கு. பேசாம ஓட்டல் வேலைக்குசப்பளைக்குப்போயிரலாம்போலயிருக்கு. என்றார் வருத்தமாக/

வேயப்பட்ட கிடுகளின்  மீது தார் அட்டை போர்த்தியிருந்ததாய் காட்சிப்பட்ட அதில் வெயில் நேரத்தில் உள்ளே உட்காரயோசிக்க வேண்டும்.கூடவே தார் அட்டை கிளப்பும் வாடை வேறு.கூரையின் கிடுகளையும் மூங்கில்களையும் இணைத்துக் கட்டப்பட்டிருந்த கயிறுகளில் தொங்கிய தூசியும்,நூலாம் படையும் அடை சேர்ந்த கூடாய் காட்சியளிக்கும். சாப்பிடுபவர்களின் இலை மீது அது எந்நேரம் வந்து விழுமோ என்கிற ஐயப்பாட்டுடனோ, பயத்துடனோ சாப்பிட வேண்டியிருக்கும். கடையின் கூரை முழுவதுமாய் வித்தை காண்பிக்கிற வெற்றுக்கூடுகளாய் ஆங்காங்கே தொங்கிக்கொண்டிருக்கிற நூலாம் படைகளின் அணி சேர்க்கையை துடைத்தெரிந்து சுத்தம் செய்தால் என்ன?என்கிற இவனது 105 தடவையான பேச்சுக்கு”எங்கண்ணே,நமக்குயேவாரத்தகவனிக்க,புரோட்டாப் போட, டீப்போட,,,,,,,,, அங்கிட்டு,இங்கிட்டு போயிட்டு வர இதுக்கே நேரம் சரியா போயிரப்ப,,,,,,,,,, இதையெல்லாம்கவனிக்கநமக்குபொழுதுஏதுன்னே/வர்றவட்டமெல்லாம்வேறசொல்லிக்கிட்டே இருக்கீங்க,மொத வேலையா ஒரு ஆளவுட்டு சுத்தம் பண்ணீட்டுதாண்ணே மத்த வேல”/ என்பதுதான் மணிகண்டனின் உடனடி பதிலாயும் எதிர் வினையாயும் இருக்கும்.

பெருமாள்கண்ணன்இருந்தவரைமணிகண்டன்கடையில்ஆளைப்பார்ப்பதுஅரிதுதான். ஆனால் அது பற்றி அவன் கவலைப்பட்டவனாய் இல்லை,அவனது கடைக்கு சாப்பிட எனதண்ணி வாடையுடன் வருகிறவர்களுக்கு புரோட்டா பிய்த்துப்போட்ட நேரம் தவிர  கோழிக்கறி யேவாரம் பார்க்க நேரம் சரியாய் இருக்கும்.

மொச்சை வடை,இட்லி,தோசை டீ என்கிற ஜபர்தஸ்துடன் காணப்பட்ட காலையிலேயே காட்சிப்பட்டு விடுகிற பெருமாள் கண்ணனின் கடை இப்பொழுது இல்லாமல் ஆகிப்போன பின்பு மணிகண்டனின் கடையில் கொஞ்சம் யேவாரம் மிகுதியாகிப் போனது.

ரெண்டு வருடங்களுக்கு முன்பாய் ஊரை விட்டு பிழைப்பு தேடி போய்விட்ட பெரு மாள் கண்ணன் இப்பொழுது என்றாவது ஊருக்கு வருகிற நேரங்களில் சாப்பிடுவது மணி கண்டன்கடையில்தான்.

மாமா,மாப்பிள்ளை என்றுதான் இருவரும்பேசிக்கொள்வார்கள்,”என்ன மாமா சின்னப் புள்ளையிலஇருந்து ஒங்க கிட்ட  தொழில் கத்துக்கிட்ட நா இங்கயே நெலச்சிட்டேன், நீங்க பொழப்புக்காகஊரவுட்டுப் போயிட்டீங்களே,மாமா, ,,,என்கிற மணிகண்டனின் ஆதங்க கேள்விக்கு ”எங்க மாப்புள பொம்பள சகாவாசம் எந்த ஆம்பளயாவது  எந்திரி க்க வுட்டதா கேள்வி இருக்கா ,கூடாத சகவாசத்தால இப்ப சொந்த மண்ணுல நிக்க முடியாம நாயா அலைஞ்சிட்டுத்திரியிறேன்,கட்டுன தாரமும்,புள்ளைகளும் ஒரு பக்கமுமா இருக்க நான் ஒரு பக்கமா கெடந்து அல்லாடுறேன்.நமக்கு வேற என் ன  தொழில் தெரியும் மாப்புள ஓட்டல்தான்.திருப்பூர்ல ஒரு ரோட்டோரக்கடையில வேலைக்கு இருக்கேன் மாப்புள,”எங்க ஒதவின்னு கேட்டு வந்தவள பக்கத்துல அண்டவிட்டது தப்பா மாப்புள, சொன்னாங்க கூட அப்பயே எல்லாரும்,நாந்தான் கேக்கல.நானும் கொஞ்சம் ஆடிட் டேன்னு நெனைக்கிறேன். எல்லாம் அந்த ,,,,,,,,,,,,,,,வந்த வெனை,தண்ணிண்னு கேட் டு வந்தவள தண்ணி குடுத்து வாசலோட அனுப்பாம வீட்டுகுள்ள விட்டதுக்கு இப்ப அனுபவிக்குறேன் மாப்புள.சொந்த ஊர்லசண்ட,பொழப்பு தேடி வந்துருக்கோம், தங்கத்தூங்கக்கூட இடமில்ல, கொஞ்சம் ஒத்தாச பண்ணுங்கண்ணு புருசனும், புள்ள யுமா அனலடிச்சிவந்து நின்னா ங்க.நானும் ஊர்ல ஒரு வீட்டப்பாத்து குடியிருந்துக் கிட்டு வேலைவெட்டியப் பாருங்கன்னு சொல்லியிருக்கலாம், பாவம் பாத்து ஏங் தலையில அள்ளிப்போட்டுக் கிட்டது வம்பாப் போச்சி என்பார் பெருமாள் கண்ணன். இருக்குற இருப்பு தெரியாம ஆடிகிட்டு திரிஞ்சா இப்பிடித்தான் மாப்புள”,,,,,,,,இருபத்து மணி நான்குநேரமும் அணையா அடுப்புபோல எந்நேரமும் நெருப் பெரிந்து கொண்டிருக்கிற அடுப்பின் மேல் காய்ந்து கொண்டிருக்கிற கல்லில் இவனுக்குத் தெரிய எந்நேரமும் புரோட்டா வெந்து கொண்டே இருந்திருக்கிறது.

அப்படியெல்லாம்எத்தனைபுரோட்டாக்களை யாருக்காகசுட்டெடுப்பார்எனத் தெரியவில்லை. அதுவும் நன்றாக இருந்தால் கூட பரவாயில்லைஒரு புரோட்டாவை மெல்ல ஒரு நாள் ஆகிப்போகலாம் அல்லது  கைக்கும்,  வாய்க்கும் ஏதாவது கடினமான பயிற்சி கொடுக்க நினைத்தால் மணிகண்டனின் கடை புரோட்டாவை சாப்பிடலாம்.

இல்லாத ஊருக்கு ,,,,,,,என்கிற கதையாய்,அவர் சுடுகிற புரோட்டவையும்,அதன் மேல் படர விடுகிற சால்னாவையும் அள்ளிச்சாப்பிட தனிமனம் தேவைப்பட்டிருக்கிறது இதுவரை, இல்லையெனில்மனசாட்சியைஅடகுவைத்துவிட்டுதான்சாப்பிடவேண்டும். 

இத்தனைக்கும் மணி கண்டனின்கடையைத்தாண்டிஇன்னொரு கடை இருக்கிறது. அங்கும் புரோட்டாவே. ஆனால் அது கொஞ்சம் ருசியாக இருக்கும்.புரோட்டா தவிர தோசை கேட்டாலும் ஊற்றித்தருவார்கள்.

ஆனால்இந்தவிஷயத்தில்மணிகண்டனின்கணக்கு வேறு/ தோசையென்றால் இரண் டு அல்லது மூன்றுடன் எழுந்து விடுவார்கள். புரோட்டா என்றால் பிய்த்துப்போட்ட மூன்றுடன் ஒற்றை ஆம்ளேட்டையும் சேர்த்து விடலாம்.முன்னதானால்3தோசைக்கு 15 ரூபாய்கள்தான். பின்னதானால் புரோட்டாக்கள் மூன்றுக்கும் ஆம்ப்ளேட் ஒன்றுக்குமாய்  சேர்த்து 28ரூபாய் வாங்கிவிடலாம்.எல்லாம்தெரிந்துருந்தும்கூட பழக்கத்தின் கைகோர்ப்பை மனதில் கொண்டு அடுத்தகடைப்பக்கம் போக மனம் அனுமதிப்பதில்லை.மணிகண்டனின் கடைக்கு மேலாய் இருக்கிற புளிய மரத்தில் இருந்து விழுகிற மரத்திலைகளைப்போல/ 

பஸ்ஸிற்காய் காத்து நின்ற மாமி இவன் சாப்பிட போகையில் பாத்து சிரிக்கிறாள். சிறிது நேரத்திற்குமுன்பாய்இவனதுஅலுவலகத்திற்கு நகை வைத்து பணம்  கடன் வாங்கவந்திரு ந்தவள்.

அவள்அலுவலகம்விட்டுபோனஇந்நேரத்திற்குபஸ்ஏறிஇருக்கவேண்டியிருக்குமே/”வரவேண்டிய பஸ்இன்னும் வரல மாமா,சடுதியா வந்து சடுதியா போயிறலாம்ன்னு நெனைச்சா முடியாம போச்சுமாமா,இனிமநான் போயிதான் அங்கன ட்ராக்டருக்காரருக்கு அட்வான்ஸ் குடுக்கனும், சீக்கிரம்போகலைன்னாஅவருவேறபக்கம்கைநீட்டிஅட்வான்ஸ்வாங்கிறுவாரு,அவரசொல்லியும் குத்தம் இல்லை மாமா,அவுங்க ளும் இப்பிடி வேல சமயங்கள்ல நாலு காசு பாத்தாத்தான உண்டு.போனவருசம் செம்மையா  மழைதண்ணிஇல்லாம வெள்ளாம இல்ல.இந்த வருசமா வது வெதைச் சிப் பாப்போம்ன்னு இருக்கோம்மாமா.காடு கரைகள நம்பித்தான் எங்க பொழப்பு மாமா.இதவுட்டா எங்களுக்கு வேற தெரியாது.எப்பிடியும் நீங்க குடுத்த பணம் போதாது மாமா இன்னும் ஒரு ரெண்டாயிரமாவது தேவை இருக்கும் என்றவளின் பையில் ஒரு புரோட்டா பார்சல் இருந்ததாய் தெரிந்தது.

மணிகண்டனின் கடையை ஒட்டியே அமர்ந்திருந்தாள்.அடர் நிறசேலையில் பூத்துத் தெரிந்த வெள்ளை பூக்களும்,ப்ரௌன் சட்டையும் அவளது  நிறத்திற்கு ஒத்துப் போனதாய்.கரிய தார் ரோடும் ஓரத்து மண்ணும் அவளையும் பஸ்ஸிற்காய் காத்து அமர்ந்திருந்த வர்களை யும் சேர்த்து படம் பிடித்துக்காட்டியதாய்/

காலையிலிருந்து மாமி முதல் யேவாரம், நீங்க இரண்டாவதுயேவாரம் என்ற மணிக ண்டன் எனக்கு புரோட்டா எடுத்து வைக்க ஆரம்பித்தார்.
பஸ்ஸிற்காய் காத்திருந்த மாமி அதை அர்த்தமாய் பார்ப்பதாய்ப்பட்டது.

2 comments:

  1. Replies
    1. வணக்கம் கரந்தை ஜெயக்குமார் சார்,
      நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/

      Delete