24 Nov 2015

மலர்ச்சி,,,,அழிந்து போனது உங்களது நம்பர் மட்டுமே, நினைவுகளல்ல. அதிகா லை எழுச்சியின் நேரம் ஞாபகம் வேறெதுவுமாக அற்று இது ஒன்றே மனதின்மையமாககுடிகொண்டிருந்த வேளை .

உங்களுக்கு போன் பண்ணலாம் என நினைத்து கைபேசியை எடுத்த நேரம்கைபேசியில்உங்களது எண் இல்லை. ஆகா,,,,,,,,,,,ரிப்பேர் ஆகிப் போன செல்லினுள் குடிகொண்டு அழிந்த எண்களில் இதுவும் ஒன் றாக இருக்குமோ என்கிற நினைவில் உங்களுக்கும்,எனக்கும், நம் எல்லோருக்குமாய் தெரிந்த,பரிச்சயமான இன்னும் சொல்லப் போ னால் மனம் நெருங்கிப் DC க்கு போன் பண்ணி கேட்டபோது சொன் னார்கள்உங்களது நம்பரை.

என்ன உங்களை அடையாளப்படுத்திக் கேட்க உங்களது பெயருடன் ஒரு நாட்டின் பெயரையும் சேர்த்துச் சொல்ல வேண்டியதாகிப் போனது. அது போலவே உங்களது பெயரும்.

ஆடத்தெரியாத ஒயிலாட்டத்தை தெரிந்து கொண்ட தெம்புடனும், தைரியத்துடனும் வெம்பக்கோட்டையில் தோழர்கள் அழைப்பின் பெயரில் நடத்திய கலை நிகழ்ச்சியில் நாம் போய் ஆடிவிட்டு வந்த ஆட்ட நாளிலிருந்து இன்று வரை உங்களது நினைவு புடம் போட்டு என்னுள்/

அப்போதெல்லாம் ஏது செல்போன்,,,,,?கடிதம்,நேரில் பார்த்த பேச்சு ,,,,,,,மிகமிக முக்கியம் என்றால் ட்ரங்கால்,ஞாபகமிருக்கிறதா,பதிந்து வைத்துக்கொண்டு மணிக்கணக்கில் காத்துக்கொண்டிருக்க வேண் டும் .சமயத்தில் அது நீண்டு நாளாக உருவெடுத்துநிற்கும்.இப்போது போல பத்தடிக்குள்ளாக இருக்கிற ஒருவரும் ,மற்றொருவருமாய் செல்போனில் பேசிக்கொள்ள நேர்கிற அவலம் இல்லை.அன்றும் பேச்சு இருந்தது,கூட்டம் இருந்தது,பகிர்வும்,விவாதித்தலும்,கற்றுக் கொள்ளலும்,மன நெருக்கமும் இருந்தது.நினைத்த விஷயங்களை நினைத்த நேரம்பேசிக்கொள்கிற சொளகரியம்வந்து விட்ட இன்று அது இருக்கிறதா இல்லையா என்பது கேள்விக்குறியாவே/

நடக்கவிருக்கிறதர்ணாவிற்குசாமியானா பந்தல்,சேர்,மைக் எல்லாம் ஏற்பாடு செய்ய வேண்டியிருந்தது.அதற்காக உரியவர் நம்பரை தெரிந்து வைத்துக்கொண்டால் போன் பண்ணி பேசிக் கொள்ளவும், ஏற்பாடுகள் செய்யவும் வசதியாக இருக்கும் என்கிற காரணத்தால் கை பேசியை படக்கென எடுத்துப்பார்க்கைய்ல் அழிந்து போன உங்க ளது நம்பரைப்போலவே அவர்களது நம்பருமாய்/
சம்பந்தப்பட்டவர்களின்அந்தநம்பரை தெரிந்து கொள்வதற்காக உங்க ளு க்கு போன்பண்ணலாம் என நினைத்தால் உங்களது நம்பரும் கை வசம் இல்லை.அப்புறமாக DC யில் கேட்டு உங்களது நம்பரை அறிந் தும்,குறித்தும் கொண்டு உங்களுக்கு போன் பண்ணியபோதுஉங்களி டமிருந்து வந்த “வணக்கம் தோழர்” என்கிற வார்த்தைஆயிரம் வாட்ஸ்சக்தியாக/

வார்த்தையிலும்,சொல்லிலும் அவ்வளவு உற்சாகத்தை ஒளித்து வைத்திருக்கிற நீங்கள் “அந்த நம்பர்கள் மட்டும் என்னிடம் இல்லை. அது தவிர்த்து வேறெந்த நம்பர்களையும் கேளுங்கள் தருகிறேன்” என்றீர்கள்.அது சரி யாரிடம் கேட்டால் கிடைக்கும் என கேட்டதற்கு தலைவரை சிக்னலிட்டீர்கள்.என்ன அவர் இந்நேரம் சிகரெட் குடிப்பதில் பிஸியாய் இருக்கக்கூடாது என நினத்தவனாக அவருக்கு போன் பண்ணி நம்பர் வாங்கினேன்.

வாங்கிய நம்பர் பயனுக்குள்ளான பொழுதுகளில் வந்த ஞாபகங்கள் தவிர்க்கமுடியாதவையாக/

பழுதுபட்டுப்போய் விட்ட கைபேசியின் பாகங்கள் ஒவ்வொன்றாய் தன்இறுதிமூச்சைநிறுத்திக்கொண்ட நேரம் அழிந்து போன நம்பர் களில் முதலாகவோ கடைசியாகவோ இருந்திருக்கலாம் உங்களது, சரியாக ஞாபகமில்லை எனக்கு.ஆனால் அந்த எண்னைஅழுத்தி உங்களிடம் பேசிய பேச்சும்,இன்னபிற பரிமாற்றங்களும் இன்னமும் நினைவில் இருக்கிறது தோழனே/

அழிந்து போனது உங்களது நம்பர் மட்டும்தான் நினைவுகளல்ல/


(சமர்ப்பணம்: தோழர் முத்துக்குமார் அவர்களுக்கு/)

2 comments:

 1. மனதை அதிகம் தொட்ட பதிவு. நன்றி.

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் டாக்டர் ஜம்புலிங்கம் சார்
   நன்றி வருகைக்கும் கருத்துரைக்குமாக/

   Delete