7 Nov 2015

ஸ்பீட் பிரேக்,,,,,

இது இந்த வாரத்தின் இரண்டாவது விபத்து என பதிவாகிறது எனது பார்வையில்.

முதல்விபத்துநான் அனுபவித்ததும்,பார்த்ததும்.இரண்டாவது இன்று  மாலை விருதுநகர் டூ உசிலம்பட்டி சாலையில் பார்த்தது.
எனக்கு நடந்தது விபத்து என்றால் பிறந்த குழந்தை கூட எழுந்து நின்று கைகொட்டி சிரிக்கக்கூடும்சப்தமாக/ நான் மற்றும் எனது நண்பர் முத்து இரண்டு பேருமாய் விருதுநகரிலிருந்து உசிலம் பட்டிக்கு போய்க்கொண்டிருந்தோம்.எனது நைந்து போன இரு சக்கர வாகனத்தில்/

ரயில்வே கேட் அடைத்திருக்கிறதே என அவ்வளவு ஜன நெரிச லையும்,சாலையின் மேடு பள்ளங்களையும் பிளந்து மேம்பாலத்தின் வழியாக வந்த போது கூட நேராத, ஒரு சின்ன நகக்கீறல் அளவு கூட எதுவும் ஆகி விடாத அளவிற்கு சுமுகமாக வந்து கொண்டிருந்த வேளையது.சுமார் 8 கிலோ மீட்டர் தாண்டிய பயணத்திலும்,தேசிய நெடுஞ்சாலையின் ஏதோ ஒரு பிரிவில் விரிந்து நீண்டிருந்த சாலை யில் ஒரு சின்ன அளவு கூட ஏதும் நிகழாத ஒன்று கட்டம் கட்டியும் பெரும் உருவெடுத்துமாய் உசிலம்பட்டியின் நுழைவாயிலில் காத்தி ருந்தது.

அந்தகாத்திருப்புஎங்களுக்குதெரியவாய்ப்பில்லாமலும்,ஞாயமில்லாம
லும்விருதுநகரில்குடித்த தேநீரின் சுவையுடனும்இருசக்கரவாகனத் தில் வருகிற சொகுசுடனுமாய் நானும்,முத்துவும் மாறுபட்ட எண்ண ங்களில் வந்து கொண்டிருந்த வேலை மதியம் 3.30 ஐத்தாண்டி 4.00ஐ நெருங்கிகைகோர்க்கும் வேளையது.
கறுப்புப்பேண்டும்,வெள்லைக்கலர் டீசர்ட்டும் அணிந்திருந்த நான். அடர் கலரில் சட்டையும்,லைட்கலரில்பேண்டுமாய் முத்து. இருவரு மாய் விரைந்து வந்து கொண்டிருந்த வேளையில் காதோரம் பறந்து தட்டிய டீ சர்ட்டின் காலரை மடக்கி அமர வைத்தவாறும் தோளில் தொங்கியபையைசரியாய்இழுத்துவிட்டவாறுமாய்வந்துகொண்டிரு ந்தோம்.
என்னைப்போலமுத்துவும் தனது பங்குக்கு ஏதாவது செய்து கொண்டி ருக்ககூடும்.
சேட்டைக்காரமுத்துஎனநாங்களெல்லாம்சொல்கிறநேரத்தில்கொஞ் சம் குட்டையாக இருக்கும் முத்துவை,,,,,,,,,,,,,,,,,முத்து என கேலி செய்வதுண்டுஎங்கள்எல்லோராலும்தாத்தா என அன்பாக அழைக்கப் படுகிற சேவியர்.
வேறெதும் அணிந்து அலுவலகத்தின் உள்ளே அமர முடியா நிலை. சட்டைபோட்டால்வியர்த்துஉடலுடன்ஒட்டிக்கொள்கிறது.நல்லசட்டை கள்,இருநூற்றிச்சொச்சமும்,முற்றூற்றிச்சொச்சமுமாய்விலைகொடு த்து வாங்கியது,அதை போட்டுகொண்டு வேலைக்குப் போனால் நன்றாகத்தான் இருக்கிறது.
ஆனால்அலுவலகத்தில்கரண்ட்போய்விட்டால்வியர்க்கஆரம்பித்துவிடு
கிறகடுமையில்உடலெல்லாம்நனைந்துபிசுபிசுக்கஆரம்பித்துவிடும். கொஞ்சநேரத்தில் ரொட்டிஅடுப்பில் உட்கார்ந்த மாதிரி ஆகிவிடும்.
எவ்வாவு லூசான சட்டை போட்டிருந்தாலும் உடலின் பின் புறம் தோள்ப்பட்டையின் அருகில்முதுகோடு முதுகாய் ஒட்டிக்கொண்டு விடுகிறது.அப்படி ஒட்டிகொண்டிந்ததை பிய்த்தெடுக்கஇரண்டுஆள் தேவைப்படும்பின்னாளில்என்கிறகடுமையானயோசனையிலும்,
மண்டைக்குடைச்சலிலும் எடுத்த முடிவாகத்தான் டீ சர்ட் மட்டும் அணிந்து கொண்டு போவோம் என வெறும் டீ சர்ட்டினனாய் உலா வருகிறேன்.
“பின்ன,இப்பிடி ரொட்டி அடுப்புக்குள்ள உக்காந்த மாதிரியிருந்தா என்ன செய்ய சார்?என சொல்கிற முத்து கூட சமயத்தில் என்னைப் போல டீ சர்ட் அணிந்து வருவதுண்டு.
ஆனால் அவர் பெரும்பாலும் அணிந்து வருகிற உடைகள் தேய்த்து நீட்டாக இருக்கிற உடைகள்மட்டுமே. அதுவும் அந்த கொசுவலைத் துணியில் தைத்திருக்கிற வெள்ளைச்சட்டையைபோட்டுகொண்டு அவர் வருகிற வேளை நன்றாக இருக்கிறது.
வெள்ளைநிறம்பளிச்செனஒருஅழகைக்கொடுத்துவிடுகிறது. சாரதிக் காட்டன்,சாதாக்காட்டன்,டெரிக்காட்டன்,பாலியெஸ்டர்எல்லாம்கோ லாச்சிக் கொண்டிருந்த காலம் போய் இப்போது இது நிலை கொண்டு நிற்கிறது.கேட்டால் நல்லது நிற்கும் என்கிறார் முத்து.
ரோட்டின் ஸ்பீட் ப்ரேக்கர் ஏறி இறங்கி ரோட்டின் இடது புற திருப் பத்திற்குகைகாட்டாமல் நேராக கைகாட்டி அங்கு நீண்டிருந்த நெடுங் குளம் சாலையில் உள் நுழையப்போன நேரம் .எங்கிருந்து வந்தான் எப்படி வந்தான் என புரிந்து கொள்வதற்கு முன்னாலேயே சடுதியில் நடந்துவிடுகிறதுவிபத்து,நல்லபோதையில்வந்திருப்பான்போலிருக் கிறது.நன்றாகயிருந்தால் 25 வயது இருக்கலாம்.
உசிலம்பட்டி ஊர் முடிந்து நெடுங்குளம் சாலையின் நுழைவில் எங்க ளது வண்டி முன் டயரை அடியெடுத்துவைத்தநேரம் சுற்றிலுமாய் தென்பட்ட கடைகள் சுற்றிலுமாய் ஆணும்,பெண்ணும்,குழந்தைக ளுமாய் பஸ்ஸிற்காய் காத்து நின்ற மனிதர்கள். அவர்களின் பேச்சு, செய்கைகள் காத்திருத்தல் உறவு சார்ந்த அதன் உலகம் என காட்சிப்பட்ட நேரத்தில்தான் சேது கடையிலா, கிட்ணன் கடையிலா எங்கு குடிப்பது டீ ,மணி மாலை நான்காகப்போகிறது.இந்நேரம் குடிக் கிற டீ உடலுக்கும்,மனதுக்கும் இதமாகஇருக்கக்கூடும்என்கிற சொல் லில் உண்மை இல்லாமல் இல்லை .
அதனால்தான் டீக்டைகள் முன்பு அவ்வளவு கூட்டம் இருக்கிறதோ? அதுவும் வெறும் 100மில்லிக்கும் குறைவாக கண்ணாடிக் கிளாஸிற் குள்குடிகொண்டிருக்கிற திரவத்திற்காகமட்டும்கூடுகிற கூட்டமாகத் தெரியவில்லை.அதுதருகிறருசிக்கும்,மனத்தெம்புக்குமாய்அருந்துகிற பானமாய் இருக்கிறது.அது அன்பின் மனிதர் சேதுவோ,கிட்ணனோ யார் தருகிறடீயாகஇருந்தாலும் அந்த கிராமத்தின்நிலைக்கும் அங்கு போகிற விலைக்குமாய் அப்படியொரு டீயாக உருமாறி காட்சிய ளிக்கிறது.
வடைகளும்,பஜ்ஜிகளும்,இனிப்புபோண்டாக்களுமாய்வரிசைபிடித்து நிற்கிறதட்டில்நிலைகொண்டிருக்கிறஇரண்டுகடைவியாபாரங்களும் இரண்டுகடையின்உரிமையாளரும்எனக்குமிகநெருங்கியபழக்கமாக மாகவும்,என மனதிற்குள் வந்து போகிறவர்களாயும் என நினைத்து வண்டியை மிக மெதுவாக ஓட்டிக்கொண்டு போன நேரம் பின்னா லிருந்து டம்மெனஒரு சப்தம்.என்ன நடந்ததென நிதானிக்க சற்று நிமிடங்கள் ஆனது.பின்னாலிருந்து இடித்த பெரிய வண்டி(இரு சக்கரவாகனம்)நிலைகுலைந்து அலைபாய்ந்து நாங்கள் சென்று கொண்டிருந்த வண்டியை ஒட்டி உரசி பிரிக்க முடியாத அளவுக்கு இழுத்துக்கொண்டு போய் இழுத்துக்கொண்டு போய் சற்று தூரத்தி லிருந்த கொடிமரத்தின் மேடை மீது மோதி நின்றது.
நாங்கள்அப்படியேவண்டியில் அமர்ந்திருந்த நிலையிலே அமர்ந்திரு ந்தோம்.மோதியவன்கீழே விழுந்து மூக்கில்அடி. சில்லு மூக்கு உடை பட்டிருக்க வேண்டும்.
சேதுதான்தனது டீக்கடையிலிருந்து ஒடி வந்து தண்ணீர் கொடுத்தார். வேறு யாரும் அருகில்கூட வரவில்லை அவ்வளவு கூட்டத்திலு மாக/
தண்ணீரைவாங்கி அவன் முகத்தை கழுவிக்கொண்டிருந்த நேரம் அந்த இடத்தில் பற்றிக்கொண்டது சின்னதாய் ஒரு பதற்றம்,செய்வது ஏது என அறியாது நானும் உடன் வந்த முத்துவுமாய் கையை பிசைந்து கொண்டு நிற்கிறோம்,முத்துவுக்கு காலில் நல்ல அடி. பின் னால் வந்து மோதிய வண்டியின் வேகத்திற்கு அவரது காலின் ஆடு சதையில் நல்ல அடி என்றார்.எனக்கு காலின் வலது மணிக்கட்டு அருகே நல்ல அடி,காலின் தோள் கிழிந்து தொங்கியது.மோதிய வேகம்,அடிபட்ட எரிச்சல்,பற்றிக் கொண்ட பதட்டம் எல்லாவற்றை யும் கணக்கில் கொண்டு நாங்கள் தயங்கி நின்றிருந்த நேரம்.
அங்குபஸ்ஸிற்காககாத்துக்கொண்டுநின்றிருந்தஒருத்திசொன்னாள், ”டேய் தப்பு ஒன்னோடதுதாண்டா,அவுங்கவாட்டுக்கு போய்க்கிட்டு இருந்தவுங்க மேல நீதான் வந்து மோதுன, மொதல்ல மொகத்தக் கழுவீட்டு வீட்டுக்குப்போ,ஆமாம் என்றாள்.
உள்ளூர்காரியாக இருக்கவேண்டும்.அங்கிருந்த இன்னொருவரும் நீங்கவாட்டுக்கு போங்க சார்தண்ணியபோட்டுட்டுவந்துதிமிரெடுத்து மோதீட்டவனுக்காக நீங்க நிக்காதிங்க,மொதல்ல யெடத்த காலி பண்ணீருங்க என்கிறார்.
ரத்தம் வழிய முகம் கழுவிக் கொண்டிருந்த அவன், அவனின் நிலைக் காய் வருந்திக்கொண்டும்,அவனுக்கு ஏதும் பெரிதாக ஆகி விடக் கூடாது என நினைத்தவாறும் நின்று கொண்டிருந்த நாங்கள்,சற்றே தள்ளி கீழே சாய்ந்து கிடந்த அவனது வாகனம்,அந்த இடத்தில் பரவித் தெரிந்த மென் பதட்டம் என கணக்கில் வைத்து எங்களை போகுமாறு கண் ஜடை காட்டிய சேதுவின் அசைவையும்,நிலைமையையும் கணக்கில் கொண்டு எங்களது அலுவலக பொறுப்பையும் கணக்கில் கொண்டு கிளம்புகிறேன் அவனாக வந்து இடித்ததற்கு நாங்கள் என்னசெய்யமுடியும்நண்பாஎன்பதுபோன்ற வார்த்தைகளையும் ,உப வாச கங்களையும் மனதில் தாங்கி/

இரண்டாவதுவிபத்துஇன்றுமாலைநாங்கள்பார்த்தது.அதேவிருதுநகர் டூ உசிலம்பட்டி சாலை.நடு ரோட்டை விட்டு சற்றே தள்ளி ஓர் ஓரமாக நின்று கொண்டிருந்த டூரிஸ்ட் வேனை தாண்டி சென்ற பொழுது ரோட்டை கடந்த பெண் அவரது வண்டியின் இடிப்புக்கு உள்ளாகிப் போகிறாள்.பரஸ்பரம் இரண்டு பேருக்குமே அடி.

நல்ல அடி என்கிற அளவிலெல்லாம் இல்லா விட்டால் கூட கீழே விழுந்த வேகத்தில் ஏற்பட்ட உராய்வு காயங்களாய்.

அவரை சுற்றி சிதறி நின்ற கூட்டத்தை விலக்கி விட்டு அவரை ஆசுவாசப்படுத்தி எனது பை திறந்து தண்ணீர் எடுத்துக் கொடுத்து அவரை குடிக்க வைத்து ஏதும் செய்ய இயலாமல் நடுக்கமாய் அமர்ந்திருந்த அவரின் பக்கத்திலேயே அமர்ந்து விடுகிறேன் சிறிது நேரம் அவர் ஆசுவாசப்பட்டு எழுகிற நேரம் வரை.அவர் எழுந்ததும் முன்னால் போகச் சொல்லிவிட்டு நாங்கள் பின்னால் செல்கிறோம்.

6 comments:

 1. நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக விபத்துக்கள் அதிகரித்துக் கொண்டே இருக்கின்றன
  பெருகிவிட்ட வாகனங்கள், இள வயது மாணவர்களின் உற்சாக வேகம்
  சாலையில் பயணிக்கவே பயமாகத்தான் இருக்கிறது
  தம +1

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் கரந்தை ஜெயக்குமார் சார்,நன்றி வருகைக்கும் ,கருத்துரைக்குமாக.
   வாகனங்களின் பெருக்கமும்
   அதை சந்தைப்படுத்துபவர்களின்
   வியாபாரமுஸ்தீபும் தவிர்க்க
   முடியாததுதான்,
   எல்லாஇடத்திலும் இப்படித்தானே
   இருக்க முடியும்,
   அதற்கேற்றார் போல் நாம்
   இன்னும் மாறவேண்டிய சூழல்கள்
   இருப்பது இங்கு அவசியமானதாக/

   Delete
  2. வணக்கம் திண்டுக்கல் தனபாலன் சார்,
   நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/

   Delete
 2. விபத்துக்கள் பெருகிவிட்டன! சிறு கவனக் குறைவு விபத்தினை உருவாக்கிவிடும்!

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் தளிர் சுரேஷ் சார்,
   நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/
   கவனக்குறைவு மட்டும் இங்கு விஷயமாய் இல்லை/

   Delete