9 Nov 2015

தார்த்தொட்டிப்பூ,,,,

கொட்டிக்கிடந்த கெட்டிப்பட்டதாரைஎட்டித்தொட்ட கணத்தில் சில்லி ட்டுப் போகிறது உணர்வுகள்.

பத்து மணிக்கு என சொல்லியிருந்தார்கள் சந்திப்பை. நாமும் நம் சந்திப்பும்பேச்சும்சிலவிஷயபகிர்மாணங்களும்இந்நேரம்பேசப்படுவதும் அது குறித்தான விஷயங்களை சொல்பரப்பாக்கி நூற்த்துக்கட்டி அலசப்படுவதும் மிக மிக அவசியமான ஒன்றாய் இருக்கிறதுதான். வந்துவிடுங்கள்மிகச்சரியானநேரத்திற்குஎனச் சொல்லி விட்டார்கள் தான் நண்பர்கள்.

சின்னதும் பெரியதுமான கடிகார முட்கள் விநாடி முள்ளொன்றை துணைக்குச் சேர்த்துக்கொண்டு வட்ட வடிவ கடிகாரத்திற்குள் மணி பத்தை எட்டித் தொடப் போகிற நேரம்தான் வீட்டில் இட்லிக்குக்கரில் ஆவி வந்து கொண்டிருந்தது.

வேண்டாம் இனி தோசை,அரிசி மாவையும் உளுந்த மாவையும் அரைத்துச்சுட்டபண்டங்களில் இட்லி மட்டுமே போதும் தவிர்க்க இயலாதகணங்களில் மட்டும் தோசையையும் அதை தொட்டுச் சாப்பிட அன்பும் பாசமும் கலந்து தரும் தேங்காய் சட்னியையும் பாசிப்பருப்புச்சாம்பாரையும் ஏற்றுக்கொள்கிறேன் தான்என வீட்டில் சொன்ன நாட்களிலிருந்து வீட்டில் மாவு கிரண்டர்சுற்றுகிற நாளன் றின் மறு நாளைக்கு இட்லி தான்.

மல்லிகை பூப்போல இல்லாவிட்டால் என்ன இட்லியை இட்லியாக அவித் தெடுத்து மென்மை கலந்து தரும் போது கூடரெண்டு உள்ளே போகிறதுதான்.

எப்பொழுதும்வாங்குகிறஅரிசிக்கடையில்வாங்கியஇட்லிஅரிசி தான் பெரும் பாலும் இட்லிக்கும், தோசைக்குமாய் ஆகிறது. மாதம் ஐந்து அல்லது ஆறு கிலோசரியாகிப்போகிறது.

உளுந்து செல்ப் சர்வீஸ் கோ ஆப்ரேட்டிவ் ஸ்டோர் கடையில். பாசிப் பருப்பும் மற்ற மற்றதான பலசரக்கு சாமான்களும் அங்குதான்.

துவரம்பருப்புஅல்சர்வயிறுக்குஒத்துக்கொள்ளாதுஎனஎப்பொழுதும்
வாங்குவதில்லை.இப்பொழுதுவிலைகூடிப்போனதிலிருந்துஆசைக்கு
அவ்வப்பொழுதுவாங்கிக் கொண்டிருந்ததும் நின்று போனது.

மாதகடைசி தேதியையும் பிறந்து ஜனித்த அடுத்தமாதத்தின்இரண்டு தினங்களையும் விடமாட்டாள் மனைவி,பிறந்து விட்டது மாதம் வாங்கி விட்டீர்கள் தானேசம்பளம். வாருங்கள் வீட்டில் கிடக்கிற வேலைகள் அப்படியே இருக்கட்டும், வெளியில் நீங்கள் செய்ய வேண்டிய வேலைகள்,கம்ப்யூட்டர் வேலை அது இதுஎன்கிற சால் ஜாப்பு உடல் அலுப்பு அனாவசிய கற்பனை என எது இருந்த போதி லும் தள்ளி வைத்து விட்டு வாருங்கள்.தொங்க விடப்பட்டு வெட்டி விடப்பட்டிருந்தகிராப்பில்இரட்டைச்சரமாய் மடித்துத் தொங்கவிடப் பட்டிருக்கிறமல்லிகைப்பூவும்,நெற்றியின்நேர்வகிடெடுத்தகுங்குமமும் நன்றாகத்தான் இருக்கிறது பார்ப்பதற்கு/நதியில் நடந்து போனால் சில்லிட்டு விடுகிற கால் பாதம் எத்தனை நேரம் குளிர்ச்சிதாங்கி நிற்கிறது என்கிறதும் இதர இதரவான சொல்லாடல்களையெல்லாம் மனதுள் போட்டு களம் விரித்து விளையாண்டு கொண்டிருக்காமல் வாருங்கள் ஒழுக்கமாய் என்னோடு/ சடுதியில் போய் சாமான்களை வாங்கிக்கொண்டு வந்து விடலாம் சடுதியில்.

மாதாமாதம் உங்களை இப்படியாய் கிளப்புவதே பெரும் வேலையாய் ஆகிப் போகிறதே, வெறெங்கும்தான் என்னை கூட்டிப்போவதில்லை. உங்களோடு ஒரு கோயிலுக்குள் சேர்ந்து போய் பதினைந்து வருடங்களாகிப்போனது.ஒரு கோயில் குளம் கோபுரம் சினிமா,,,,, ஏதாவது உண்டுமா பாவி மனுசா ஏதோ புள்ளைங்க தலையெடுத்த பெறகு நாலு யெடங்களுக்கு போயி வந்துக்கிறேன். என்பாள் பேச்சின் ஊடாக/

அதுல சின்னவள விட பெரியவ ரொம்பக்கெட்டி.ஏதாவது லீவுன்னா போதும்வாங்க அங்கிட்டு,வாங்க இங்கிட்டு என இழுத்து விடுகிறாள். ஏதாவது சால் ஜாப்பான பேச்சிற்கு ஊடாக அவள் கூப்பிடும் போது நாலு தடவைக்கு ஒரு தடவையாவது போயிட்டு வர முடியுது. சின்னவளுக்கு இதிலெல்லாம் மனப் பிடித்தம் இல்லை. வேண்டா வெறுப்பாக வருவாள்,கேட்டால் எனது டேஸ்ட் வேற என்கிறாள். அப்படி என்ன டேஸ்டோதெரியவில்லை.யாதர்த்ததோடு ஒட்டி வாழப் பழகாதவள்.

மனைவி சொன்ன சொல்லும்,பேசிய பேச்சும் மனதில் நிற்க தட்டில் தன் தடம் பதித்து இருந்த இட்லிகளை பார்க்கிறான்.

பறக்கிற ஆவியை ஏணி வைத்து எட்டிப்பிடித்து கூட்டி வந்து திரும்பவுமாய் தட்டில் வைத்து அடுக்கப்படிருக்கிறஇட்லிகளுக்குள் புதைத்து சட்னியுடனும் சாம்பாருடனுமாய் தோய்த்துச்சாப்புடுகை யில் சளைக்காமல் விடாது தன் ஓட்டம் காட்டுகிற கடிகாரம் மணி பத்துக்கு மேலாகிப்போனதை நினைவுப் படுத்திச்செல்கிறது.

நீள் முக்கோண வடிவில் இருந்த கடிகாரம் ரூபாய் நூற்று ஐம்பதிற்கு பேசி வாங்கியது.தெரியாத கடைக்கார்தான் அவர்.கடிகாரம் வாங்கக் கூட ஒரு கடை யை தெரிந்து வைத்திருக்கவில்லையே என நண்பர் ராமராஜிடம் கடிகாரம் வாங்கிய அல்லது கடிகாரம் வாங்கப்போகிற வெகு சில தினங்களுக்கு முன் பாக இதைச்சொல்லி வருத்தப் பட்டபோது விடப்பா நீயி ஒண்ணு, எல்லாரும் எல்லாமும் தெரிந்து வைத்துக்கொள்ள முடியாது.நாளைக்கு ஒயின் ஷாப் பத்தி யாராவது ஏதாவது கேட்டால் அடடா இந்தக்கடைப்பற்றி தெரிந்து வைத்துக் கொள்ளாமல் போனோமே,என வருத்தம் கொள்வாயா எனவும் விடு அதையெல்லாம்வருவது வரவு,போவது செலவு,எண்ணத்தையும் செயல்களை யும் லேசாக்கி கூட்டி வைத்துக்கொள் சரியாகிப்போகும் என்றார்.அவரின்சொல்படியாகவும்சிலநேரங்களில்நடக்கக் கடமைப் பட்டவனாக/

அட்டைப்பெட்டிக்குள்ளாய்கட்டிஅடைத்துக்கொண்டுவரப்பட்டகாலனை காட்டிக் கொண்டிருந்த கடிகாரம் இப்பொழுது இவன் தோள் தட்டி மணிசொன்னதாய் எடுத்துக்கொண்டு அழைத்தவர்களின் அழைப்பிற் கிணங்கி போன இடம் தேனி சாலையிலிருந்த ஒரு கட்டிடமாய் இருக்கிறது.

கட்டிடத்தின் முன்வாசலில் முளைத்து அடர்ந்து நிழல் பரப்பியிருந்த நான்குமரங்களுக்குக்கீழானஏழுச் சேர்களில் அமர்ந்திருந்தவர்களில் இவனும் ஒருவ னாய் அமர்ந்தான்.

மண், மரம், காற்று, நீர், நெருப்பு, ஆகாயமென பகுத்துப்பார்க்க வேண்டியதாய் எல்லாம் இருக்கவில்லை.நீர் நீராகவும் ஆகாயம் ஆகாயமாகவும் மண் மண்ணாகவும் மரம் மரமாகவும் நெருப்பு நெருப் பாகவுமே இருந்தன.கூடவே அடுக்கி நிறுத்தப்பட்டிருந்த தார் டின்களையும் சேர்த்துக்கொள்ளலாம்.

என்னஇன்னும் சிறிது நேரத்தில் ஆகாயமும் நீருமாய்கைகோர்த்துக் கொண்டுமழையைபெய்விக்கலாம்போல்வானம்காட்சிபட்டுநின்றது, மப்பும் மந்தாரமுமாய்/

பெய்கிற மழையில் மண்ணும்நனைந்து,மரமும் நனைந்து மனிதர்க- ளும், அவர் களின் மனமும் குளிர்ந்து போகலாம்.

கடந்துபோன வருடங்களை பின்னடந்து போய் பார்க்கிற போது பத்துஅல்லது பணிரெண்டு வருடங்களுக்கு முன்பாக இருக்கும் என நினைக்கிறான்.

இதோ தேனி சாலையில் இருக்கிற எஸ்,எம்.எஸ் உயர்நிலைப் பள்ளி காம்பவுண்ட் சுவரின்நீட்சிக்குஅருகில் ஓடிக் காண்பித்துக் கொண்டி_ -ருந்த ஓடையின் நடுவி லாய் இருந்த தார் தொட்டியை எதற்காக அந்த இடத்தில் போய் கட்டினார்கள். என கேட்கத்தோணுகிறது

பஸ்ஸீம் லாரியும், இன்னும் இன்னுமான கனரக மற்றும் இலகு ரக வாகன ங்கள்செல்லும் சாலையோரமாய் இருந்த தார் தொட்டி மீது படர்ந்துகிடக்கிற நீரும் பறந்து அதன் மேல் ஒட்டிக்கிடக்கிற தூசி யுமாய்/

வெயில் காலங்களில் உருகிகுளமாய் தட்டுப்படுகிற ஒன்றாயும் காட்சிப்பட்டுத் தெரிகிறதார்தொட்டிஇப்படி சாலையின் விளிம்போர மாய் வாய் பிளந்திருக்கிற காலனாகஇருக்கிற ஆபத்தை யாரும் உணர்ந்ததாகவோ அப்படி ஒன்று இருப்ப தாகவோ காட்டிக் கொள்ள வில்லையா என கேள்விக்குறியுடன் கடந்த நாட்கள் இப்பொழுது இவனது நினைவில்/

நல்ல வேலையாய் தார்த் தொட்டி இல்லை இப்பொழுது.இது நாள் வரை இந்த இடத்தில் அது உறை கொண்டிருந்திருக்குமானால் வேகம் கொண்ட இந்த சாலைப்போக்குவரத்தில் கண்டிப்பாக சில பேரை காவுவாங்கி இருக்கக் கூடும்.அந்த வகையில் சம்பந்தப்பட்ட துறையினர் அந்தப்பாவத்தை கட்டிக்கொள்ளாமல் அந்தக்குழியை மூடி புண்ணியம் தேடிக்கொண்டார்கள்.

அப்படியானால்ஓடை,,,,,,?எனநீங்கள்கேட்பது புரிகிறது.ஊர் முழுவது மாய் மூடிப்போன எத்தனையோ ஓடைகளில் இதுவும் ஒன்றென கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டியதிருக்கிறது.

அப்படியாய் அன்று காட்சிப்பட்டுத்தெரிந்த தாரை இன்று டின்களுக் குள் அடைத்து வைத்திருந்தார்கள்.

இப்படி தாரை அடைத்து டின்களை ரோட்டோரம் பறிக்கப்பட்ட மண் குழி அடுப்பில் சூடு பண்ணி தண்ணீராக்கி அதை மொண்டு ரோடுப் போடும் போதுதான் செண்பகா அக்காவின் பையன் ரோட்டோரமாய் கொட்டிக்கிடந்த தாரில் கால்விட்டு காயம் பட்டு கால் பொத்துப் போய் பத்து நாட்கள் வரை பள்ளிக்கூடம் போக முடியாமல் இருந்தான்.

அந்நாட்களில் செண்பகா அக்காவின் பையனை சைக்கிள் கேரியரில் உட்கார வைத்துக்கொண்டு டாக்டரிடம் கூட்டிக்கொண்டு போய் விட்டு வருவான்.

சமயத்தில் டாக்டருக்குக்கொடுக்க செண்பகா அக்காவிடம் காசு இருக்காது. அவரது வீட்டுக்காரர் திருப்பூரில் பனியன்கம்பெனியில் வேலை பார்க்கிறார், மாதம் ஒரு முறை அல்லது இரண்டு முறை வந்துபோவார்வீட்டிற்கு,அதுகையில்புழங்குகிற பணத்தைப் பொறுத் து இருக்கிறது.அப்படி வருகிற பொழுது அவர் கொடுத்து விட்டுப் போகிற பணம்தான் மாதம் முழுமைக்குமான வீட்டுச் செலவிற்கு/

பையனுக்குகாலில்காயம் பட்ட விஷயத்தை சொன்னபோது மிகவும் உடை ந்து போனார் மனிதர்.

இவன்தான் பேசினான் போனில்.இப்பொழுது போல் அப்பொழுதெல் லாம்செல்போன்கிடையாது.ஊரில்எங்காவதுஇருக்கிற டெலி போன் பூத்தில் போய்தான் பண்ணவேண்டும். அதுவும்எஸ்.டி.டி பண்ணி விட்டுப்போக வேண்டும். அதுவும் எஸ்.டி.டிபண்ணி விட்டுக் காத்தி ருக்கவேண்டும்.அதுக்கிடைக்கிறஅதிர்ஷ்டத்தைப்பொறுத்தது.சமயத்தில்
சீக்கிரமாககிடைக்கும்,சமயத்தில்லேட்டாகவும் ஆகிப்போகும்/

பையனுக்குகாயம்ஆறிசரியாகப்போகிறநாள்வரைஇவன்தான்இரண்டு நாட்க ளுக்கு ஒரு முறை போன் பண்ணிச் சொன்னான்.

அந்தவகையில்இவனைசெண்பகாஅக்காவிற்குமிகவும்பிடித்திருந்தது. இப்பொழுது செண்பகா அக்கா எங்கே இருக்கிறாள், அவர்களது குடும் பமும் அவளது பையனும்என்னசெய்கிறார்கள் எனவும் சரியாகத் தெரியவில்லை.குடும்பத்துடன் திருப்பூருக்கு போய் விட்டார்கள்என அரசல்புரசலாய்கேள்விப்பட்டான்.எங்கிருந்தாலும்அவர்களதுகுணத் திற்குநன்றாகத்தான்இருப்பார்கள்.மேன்மக்கள்.

போடப்பட்டிருந்தஏழு சேர்களில் ஒன்றில் அமர்ந்திருந்த இவனுக்கு வலக்கைப் பக்கமாய் இருந்த தார் டின்னின் ஓட்டையிலிருந்து நேர் கோடாகவும் அடர் வாயும் ஒழுகி தரையில் கொட்டிக் கிடந்த தாரை எட்டித்தொட்டகணத்தில்ஏற்பட்டஉணர்வுகளைஎன்னவென்றுசொல்லத் தெரியவில்லை/

பார்வையை எட்டி நீட்டியதில் தார் டின்னின் அடியிலாக அதைத் தொட்டு முளைத்துக் கிடந்த புற்களும் படர்ந்தடந்திருந்த புற்களின் நீட்சியாக உயர்ந்து நின்றமரங்களின் அடர்ந்து படர்ந்திருந்த நிழல் அந்தஇடத்தை குளிர்விக்கவும், இதமாக்கவுமாய் செய்ய கூப்பிட்டிரு ந்த நண்பர்கள் பேச ஆரம்பித்திருந்த பேச்சை கேட்க ஆரம்பிக்கிறான். அது இந்த தீபாவளி நாளில் நடந்தது மனதுக்கு இதமாக இருக்கிறது,

          (அனைவருக்கும் இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள்,,,,,,,,)

8 comments:

கரந்தை ஜெயக்குமார் said...

இனிய தீபஒளித் திரு நாள் நல் வாழ்த்துக்கள்
தம 1

vimalanperali said...

நன்றி கரந்தை ஜெயக்குமார் சார்,
வாழ்த்திற்கும் வருகைக்கும்/

RAMJI said...

though i know tamil typewritting i am unable to make use of the same through computer i shall soon learn and share my views in tamil with great schollars like you your a comman mans personal life story is highly commendable i have also travelled to theni and other places along with your story; i am 72 young man if you are younger than me kindly take my wishes and if you are elder than me in abe my asirvathms and blessings to you i am blessed to read your wall on this deepavali day with prayrs

”தளிர் சுரேஷ்” said...

அருமை! இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

மனம் நிறைந்த தீபாவளி நல்வாழ்த்துகள்.

vimalanperali said...

வணக்கம் தளிர் சுரேஷ் சார்,
நன்றி வருகைக்கும்,வாழ்த்திற்குமாய்/

vimalanperali said...

வணக்கம் பி ஜம்புலிங்கம் சார்,
நன்றி வருகைக்கும்,வாழ்த்திற்குமாய்/

vimalanperali said...

thanks ramji sir,