30 Dec 2015

பெயிண்ட் டப்பா,,,,,,

 
100 அல்லது 200 மில்லி போதுமானது.பெயிண்ட் அடிக்க வேண்டும் கதவிற்கு 
என முடிவெடுத்தநாள்வியாழக்கிழமையாய் இருந்தது,

வியாழன்,வெள்ளி,சனி,ஞாயிறு,,,,,,நான்கு நாட்கள்விடுமுறை அலுவலகத் திற்கு. என்ன செய்யலாம் நான்கு நாட்களின் லீவில் பிரயோஜனமாய் என யோசிக்க வெல்லாம்இல்லை. யோசிப்பது கூட கிடக்கட்டும் சற்றே அது பற்றி சிந்திக்கக் கூட இல்லை.

புதனன்று மாலை அலுவலகம் விட்டு வந்ததும் வழக்கம் போல் தேநீர்,மாலை நேரஓய்வு,தொலைக்காட்சி,செல்போனில்கொஞ்சம்மனம்பிடித்தவர்களிடமாய் பேச்சு,,,,,,என்கிற வரையறைக்குப் பின்னால் இரவுச்சாப்பாடு தூக்கம் என முடிந்து போன அன்றைய தினத்தின் இரவு மறு நாள் வியாழன் காலையை கொண்டு வந்து கண் முன்னே காட்சிப்படுத்துகிறது.

சபாஷ்இப்படி ஒரு காலையா, பார்ப்பவர்கள் பார்க்க,கேட்பவர்கள் கேட்க,சிரிப் பவர்கள் சிரிக்க,,,,,,,,என பெண்கள் தத்தனது வீட்டுவாசல்களில் மாக்கோலம் போட்டுக்கொண்டிருந்த மார்கழியின் சிறப்பான வேளையில் வந்து உள்ளம் புகுந்தயோசனையாய் வொயிட் சிமிண்ட்அடித்துவிடப்பட்டிருக்கிற மொட்டை மாடியின்பரப்பிற்கு திரும்பவுமாய் செகண்ட் கோட் கொடுக்கலாமா,,,?என்கிற நினைப்பு சூழ்கொண்டு சடுதியில் வேலைகள் நடை பெற்றதான நினைப்பு இவனுக்கு.

சிறிது நாட்களுக்கு முன்னாய்பெய்துமுடித்திருந்த அல்லது பெய்து கொண்டே இருந்தமழை வீட்டுச் சுவற்றை, வீட்டின் வெளி வராண்டாவை,வீட்டின் கொல் லைப்புற வெளியை,வீட்டு மொட்டை மாடியின் சதுரச்செங்கல் பதிக்கப்பட்டி ருந்த பரப்பை பாசம் பூக்கச்செய்து விட்டுப் போயிருந்தது.அந்த பாசத்தை எடுக்க என்ன செய்யலாம் என போன தடவை வீட்டிற்கு பெயிண்ட் அடிக்க வந்திருந்த மிக்கேல் சொல்லியிருந்த யோசனை சரி எனப்பட அதன் படியே போன மூன்று வருடங்களுக்கு முன்பு அடித்தது போல இப்பொழுதும் வொய்ட் சிமிண்ட் அடிக்கலாம் என நின்று போன மழை முன்னறிவிப்பு செய்ததாய் நினைப்பில் மழை நின்று போன மறு நாளின் மறு நாள் வொய்ட் சிமிண்ட் அடித்துப்போட்டான்.

விளையாட்டுப்போல இல்லாவிட்டாலும் கூட மிகப்பெரியதான தீர்மானம் என்றெல்லாம் இல்லாமல் செய்ய ஆரம்பித்திருந்த வேலைதான் அது,ஆனால் செய்து முடித்து விட்ட வேலையை திரும்பிப்பார்க்கும் பொழுது முழு திருப்தி ஆகிப்போனது இவனுக்கு/

உடன்நின்றுகொண்டிருந்தமனைவியிடம் சொன்னான். இன்னும் ஒரு வாரம் கழித்து இரண்டாவது கோட்டிங் கொடுத்து விடலாம் நன்றாக இருக்கும் பார்ப்பதற்கும்,பாதுகாப்பிற்குமாய் என/.சரி அப்படியே செய்து விடுங்கள் எனச் சொன்ன மனைவியின் பேச்சிற்கு செவி மடுத்து பார்த்துக்கொள்ளலாம் அடுத்து சமயம் வாய்க்கையில் என இருந்த நாள் இந்த மார்கழியின் முழு வியாழனாய் பட்டுத்தெரிகிறது.

அந்த வியாழனில் காலையிலிருந்து மதியம் வரை மாடியின் பரப்பெங்குமாய் வொய்ட் சிமிண்டால் இரண்டாவது கோட்கொடுக்கப்பட்டபோது தோழர் மிக்கேல் சொன்னது அசரீரீயாய் காதில்/தோழர் மழையினால் இப்படியாய் பூக்கிற பாசத்தை வொய்ட் சிமிண்ட் பூசி காலி செய்யா விட்டால் மாடியின் தரை பரப்பில் பதிக்கப்பட்டிருக்கிற சதுரச்செங்கல்களை தின்று விடும்,பின் சொரிப் பிடித்தது போல் மாடியின் தரைப்பரப்பெங்கிலுமாய் அங்கங்கே பெயர்ந்து, பெயர்ந்து புள்ளிப்புள்ளியாய் ஆகிப்போகும்/ அதனால்,,, என அவர் அன்று சொன்ன வார்த்தைகள் இன்றும் எதிரொலித்துவாறே இருக்க அதை மனதில் இருத்திவொய்ட் சிமிண்ட்அடித்து முடித்தபின்னாய் பாத்ரூமில் குளிக் கையில் நாளைவெள்ளிக்கிழமை.பாத்ரூமின்பின்பக்கக் கதவிற்கு பெயிண்ட் அடித்துவிட வேண்டும்,கதவு முழுவதிற்குமாகக் கூட வேண்டாம். கதவின் பின் பக்கமாய் அடிக்கப்பட்டிருக்கிற தகரத்திற்கு அடித்தால் கூட போதுமானது.

யாராவது சிறு பிள்ளைகள் பார்த்தால் உடம்பிற்கு சௌகரியம் இல்லாமல் போய்விடக்கூடும் என்கிற அளவிற்கு அவ்வளவு துருப்பிடித்துப் போய் இருந்தது, அதை பயங்கர துரு என்பதா இல்லை துருவின் பயங்கரம் என்பதா தெரியவில்லை.

பாத்ரூமின்பின்பக்கமாய்இருக்கிற மரக்கதவு,இப்படியே வெறும்மரம்மட்டுமே சுமந்த கதவாய் மட்டுமே விட்டு விட்டால் தண்ணீர் பட்டுப்பட்டு இத்துப் போகக்கூடும், ஆகவே ஏதாவது ஒன்று கதவின் மேல் போர்த்தியே ஆக வேண்டும்.அது ஒன்று பிளாஸ்டிக் சீட்டாய் இருக்க வேண்டும் அல்லது தகரமாய் இருக்க வேண்டும்,தகரமென்றால் நாகத்தகடு வாங்கி கதவின் மேல் போர்த்தவேண்டும் இல்லை கனமான ஏதாவது இரும்பு சீட் இருந்தால் தேவலாம்என யாரோ அப்பொழுது சொன்ன சொல் கேட்டு கனமான இரும்புத் தகடுவாங்கி அடித்தான் இவன்.அப்படியாய் அடித்த இரும்புத் தகடுதான் இன்று தன் சுய நிறத்தை இழந்து துரு ஏறி பல்லிளித்துக்கொண்டு நிற்கிறது.

அப்படியாய்இருந்த கதவின் பின் பக்கமாய் ஒட்டப்பட்டிருந்த தகடின் மேல் தான்இப்பொழுது பெயிண்ட் அடிக்கலாம் என்பதாய் ஒருயோசனை வருகிறது. சரி நாளையும் லீவுதானே அடித்து விடுவோம்பெயிண்ட்டை என்கிறமுடிவில் வெள்ளியன்று காலை எழுந்ததுமாய் மனதில் சூழ் கொண்ட பெயிண்ட் நினைவுகளை சுமந்து கொண்டு பஜாரில் போய் பெயிண்ட கடையில் இவன் தேர்ந்தெடுத்த வர்ணம் அடர் ரோஸ் கலராக இருந்தது.

பெயிண்ட் கடைக்காரர் தலையில் அடித்துக்கொள்ளாத குறைதான் இவன் பெயிண்ட தேர்வு செய்த விதத்தைப் பார்த்து/

இரண்டு கம்பெனிகளின் ஷேட் கார்டை எடுத்துக்கொடுத்து தேர்வு செய்யச் சொன்னபோது கொடுத்தவரிடமே கேட்கிறான்.ஒவொரு கார்டிலுமாய் இருந்த ஒரு அடர் நிற ரோஸ்கலரையும்,இலகுநிற ரோஸ்கலரையும் காட்டி இரண் டுக்கும் ஊடாக அடர் நிறத்தை விட சற்றே குறைச்சலாகவும் இலகு நிறத்தை விட சற்றே தூக்கலாகவும்(TONE)இருக்கிற கலர் ஏதாவது ஒன்று இருந்தால் காட்டுங்களேன் பெரியமனது பண்ணி என கடைக்காரரிடம் சொன்ன பொழுது இதில் என்ன இருக்கிறது தம்பி பெரிய மனது பண்ணுவதிலெல்லாம் எனக்கு அபிராய பேதம் கிடையாது.ஆனால் எங்களிடம்தான் இல்லை நீங்கள் கேட்கிற மாதிரியான கலர்/ஒன்று செய்யலாம் நீங்கள் சொன்ன இரண்டு கலர்களிலும் அதில் கொஞ்சம் இதில் கொஞ்சம் என வாங்கி நீங்களே இரண்டையும் கலந்து ஒரு புது நிறம் உருவாக்கினால்தான் உண்டு. ஆனால் அப்படியானதொரு உருவாக்கத்தில் நீங்கள் விரும்பிய வர்ணம் கிடைத்து உங்களது விருப்பம் நிறைவேறுமா  எனத்தெரியவில்லை, ஆகவே  இரண்டில்  ஒன்றை தேர்ந்தெ டுத்து சட்டென சொல்லுங்கள் கொடுத்து விடுகிறோம் சடுதியில், காத்துக் கிடக்கிறது பணியும் வியாபாரமும் எங்களுக்கு என்கிற கடைக்காரரின் பேச்சிற்கு அடிபணிந்து அரை லிட்டர் போதும் என வாங்கி வந்த அடர் நிற ரோஸ்கலர் பெயிண்ட் இப்பொழுது இவ்வளவு தூரம் வேலை வைக்கும் என நினைக்கவில்லை.

வாங்கி வந்த அரை லிட்டர் போதவில்லை இவன் முடிக்கவேணும் என நினைத்துத் தொட்ட வேலைகளுக்கு/

எப்படிப் போதும் பெயர்ந்து இத்துப் போயிருந்த கதவுக்கு பின்பக்கமாய் பிடிவாதம் காட்டி ஒட்டிக்கொண்டு இற்றுப்போயிருந்த தகரத்திற்கு மட்டுமே அடிக்கலாம் என வாங்கி வந்திருந்த பெயிண்டை அது முடிந்து மற்ற பக்கம் அடிக்க ஆரம்பித்தால்,,,,,?

கதவிற்கு மட்டுமே போதும் இப்போதைக்கு,மற்ற,மற்றதெல்லாம் பின்னால் பார்த்துக் கொள்ளலாம்.வீடும் புதுப்பொலிவு கொள்ளும் என்கிற நினைவில் பூச ஆரம்பித்த வர்ணம் இப்படியாய் தகரத்தையும் தாண்டி கதவிற்குத்தாவி பாத்ரூம்முழுமைக்குமாய்ஆக்ரமிக்கும்என நினைத்திருக்கவில்லை.

ஒன்றைத் தொட்டு அழகு படுத்துகையில் மற்றொன்று அழகு பட்டால் நன்றாக இருக்கும் என நினைப்புஆழ வேறூன்றி மனதில் பதியனிடுகையில் அதை கிள்ளி எறிய கொஞ்சமும் மனம் இல்லாமலும் கையில் இருக்கிற கொஞ்சம் காசும் கொடுக்கத்தயாராய் இருக்கிற உழைப்பும் இயைந்தும், கைகோர்த்தும் காணப்படுகிற வேளையில் கவலைஎதற்கு அனாவசியமாய் எனப் பட்ட ஆசையை செயலாக்கம் செய்த நாளில் ஆரம்பித்த வேலைக்காய் இன்னமும் ஒரு அரை லிட்டர் பெயிண்ட் அதே கலரில் அதே கடையில் வாங்கி வந்தான்.

அட என்ன ஆச்சரியம்,அதே கலர் வாங்கசென்ற அதே கடையில் அதே கடைக்காரர்.கடைக்காரர் அவரல்லாமல் வேறொருவராகவா இருப்பார் எனக்கேட்க வேண்டாம்,இங்கே கடைக்காரர் என இவன் அர்த்தப்படுத்தியது அதே கடையில் வேலை பார்த்த வேலைக்காரரை/

இவனுக்குத் தெரிந்து இவனோ அல்லது இவனுக்கு பழக்கமானவர்களோ இல்லை  சொந்தக்காரர்கள் யாரானாலும் சரி அந்தக்கடைக்குப்போய் வருபவர் கள் வேலைக்காரையே கடைக்காரர் என்கிறார்கள்.அது அவரது உழைப்பிற்கு ம் உண்மைக்கும் கிடைத்த மரியாதை எனச்சொல்லலாம்.

அவர் தான் எடுத்துக் கொடுத்தார் இவன் கேட்ட அரை லிட்டர் பெயிண்ட் டப்பாவை.கொடுக்கும் போது சொல்கிறார் மறக்காமல்/”ஏன் இப்படி கொஞ்சம் கொஞ்சமாய்வாங்குகிறீர்கள்,தேவைக்குவாங்கிக்கொள்ளலாம்தானேமொத்தமாய் என அவர் சொன்ன போது சிரித்தான் ,தேவை இவ்வளவு என நிர்ணயம் செய்யத் தெரியாமல்தானே இப்படி அலைகிறேன் வீட்டிற்கும் கடைக்குமாய்,,,,, எனச்சொன்ன இவனை தோள்தட்டி அனுப்பி வைத்த கடைக்காரரிடமிருந்து வாங்கிவந்த பெயிண்ட் சனி மாலைவரைஅடித்துத்தீர்ந்து போகிறது.

ஆனாலும் இவன் நினைத்து வைத்திருந்த இடம் முழுமைக்குமாய் பெயிண்ட் அடித்து முடிக்கவில்லை.நினைத்து வைத்திருந்த ஆசை,,,,,படர்ந்து பரவ வேண்டிய பெயிண்ட்,,,,,,,இன்னமும் அழகு பட்டு தெரிக்க வேண்டிய இடம், இன்னமும் பாத்ரூமில் கொஞ்சம் பாக்கி இருக்கிறதே,விடலாகாது இப்படியே நாளைக்காலை முதல் வேலையாய் கடை திறந்ததும் இன்னமும் அரை லிட்டர் பெயிண்ட் வாங்கி வந்து வேலையை முடித்து விட்டும் பட்ட ஆசை யை நிறைவேற்றவும் ,பாத்ரூமை அழகு படுத்திவிடவும் வேண்டும் என்கிற நினைவில் ஞாயிற்றுக்கிழமை காலையில் வாங்கி வந்த இன்னமும் அரை லிட்டர் பெயிண்டை அடித்து முடித்த வேளை மதியம் மணி இரண்டரை ஆகிப் போகிறது.

இரண்டைரை மணியில் இல்லை இப்பொழுது பிரச்சனை .ஆனால் பூசி முடிக்க நினைத்த வர்ணம்அடைத்த இடம் இன்னமும் முழுமை பெறாமல் கொஞ்ச மாய் குறைபட்டு நிற்கிறது.ஆனால் பூசத்தான் பெயிண்ட் இல்லை. டப்பாகாலி, என்னசெய்யலாம்,சரிஇப்போதைக்குநிறுத்திவைக்கலாம்வேலையை,,சாப்பிடு வோம் முதலில்,,,,,,நல்ல பசி,,,,என நினைத்து சாப்பாட்டில் கை வைத்த நேரம் தான் ஞாபகம் வருகிறது.இன்று ஞாயிற்றுக்கிழமை என்ன முயன்றாலும் எங்கு ஓடித்திரிந்தாலும் எந்தக்கடையும் மதியத்திற்கு மேல் திறந்திருக்காது என்கிற நினைவுடனும் வேலையை முடிக்க முடியாமல் போய்விட்டதே என்கிற ஆதங்கத்துடனுமாய்சாப்பிட்டுமுடித்துவிட்டு பெயிண்ட் சிதறிய கைகளுடனும், இறுகக்கட்டிய லுங்கியுடனும் கோடு போட்ட சட்டை யுடனுமாய் இரு சக்கர வாகனத்தை எடுத்துக்கொண்டு கிளம்பும் போதுதான் அந்த நினைவு வருகிறது, இன்னமும் 100 அல்லது 200 மில்லி பெயிண்ட் இருந்தால் போதுமானது. இன்னமும் மிச்சம் இருக்கிற கொஞ்சம் இடத்திற்கும் வர்ணம் பூசி பாத்ரூம் முழுமைக்குமாய் பரவச்செய்து பொலிவு கொள்ள வைத்து விடலாம்.

2 comments:

 1. இனிய ஆங்கிலப் புத்தாண்டு
  நல்வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் ராஜராஜேஸ்வரி அவர்களே/
   நன்றி வாழ்த்திற்கும் என்றும்
   மாறாத அன்பிற்கும் பாசத்திற்குமாய்/

   Delete