11 Jan 2016

காம்பவுண்டுச்சுவர்,,,,,,

படித்த பள்ளியை போய்ப்பார்ப்பதில் தவறொன்றும் இருக்க முடியாது எனவும் வேறு மாற்றுக்கருத்தேதும் இருந்து விட வாய்ப்பில்லை எனத்தான் நினைக் கிறான்.

விதை கீறிமுளைவிட்ட பயிர் ஒன்று ஓடோடிச்சென்றி விதையையும் முளை விட்ட இடத்தையும் விசாரிக்கிற இனிய வைபவமாய் அது மாறிப்போகும் என்பதில் ஏதும் ஐயமில்லைதான்/

ஐந்து கிலோ மீட்டர்கள் இருக்கலாம் என பள்ளிக்குப்போவதற்கான தூரம் என கணக்கிட்டது தப்பாகிப்போய் நான்கு அல்லது மூணறைக்கிலோ மீட்டர்களே இருக்கலாம்அதன் தூரம் என்கிற முடிவிற்கு சடுதியில்வருகிறான்யாரிடமும் கேட்காமல்/

வேண்டாம்இதில்கருத்துக்கேட்பது,ஆகாதுஇப்போதைக்கு கருத்துக் கேட்கும் படலம்/கருத்துக்கேட்டால் பாம்பும் பஞ்சாயத்துமாகக்கூட ஆகிப் போகலாம், ஆனால் நான்கிற்கும் ஐந்திற்குமாய் எவ்வளவு தூரம் இருந்து விட முடியும் வித்தியாசம்/

அதுக்கும் அதுக்கும் ரொம்பதூரமா எனக் கேட்கிற வேல்அண்ணனின்ஞாபகம் வருவது இப்போது தவிர்க்க முடியாதது ஆகிப்போகிறது.ஒரு தலைவரின் பெயரைச்சொல்லி அவருக்கு அடுத்ததாய் மிகவும் மன தைரியம் மிக்கவர் இவர்தான் என்பார் வேல் அண்ணனின் நண்பர்.

உடலெல்லாம் மிதமிஞ்சிய சர்க்கரை நோய் இருக்கும் போது கூட எங்காவது ஏதாவது ஒரு வேலையின் நுனி பற்றி ஓடிக்கொண்டேதான் இருப்பார் வேல் அண்ணன்.கேட்டால் ஓட்டம் சிறந்தது,ஓரிடத்தில் உட்கார்ந்திருப்பது ஆகாது உடலுக்கு மனதுக்கும் என்பார்.

அவரிடம் இவன் சமயா சமயங்களில் தர்க்கித்து இருக்கிறான்.அதற்கும் அதற்கும் பெரியதான தூர வித்தியாசம் ஒன்றும் இருந்து விடவில்லைதான், ஆனால் அது வேறு,இது வேறு இல்லையா என்பான்,அவர் விட்டுக் கொடுக் காமல் தான் சொன்ன சொல்லில் நிலைகுத்திநிற்பார், இவனும் விடாமல் கேட்பான் கேள்விகளையும், விசாரனைகளையும்/ஒரு கட்டத்தில் சலித்துப் போன அவர் சரி வுடு ஒரு டீ சொல்லு அண்ணனுக்கு என்பார்,ஒரு டீ மட்டும் சொல்வதுடீக்கடைக்கார்களுக்குசெய்கிறபச்சைதுரோகம் அல்லது செல்லாது, செல்லாது,,,,,என நினைத்து இவனுக்குமாய் சேர்த்து இரண்டு டீக்கள் சொல்லி விடுவான்.நல்ல டீ நன்றாக இருக்கும் குடிப்பதற்கு அந்தக் கடையில் என நினைத்துதான் பேச்சு வாக்கில் அங்கு கூட்டி வந்து விடுவார் வேல் அண்ணன்,

அவர் அப்படியாய் கூட்டி வரவைல்லையானாலும் கூட இவனாக வந்து விட்டிருப்பான் என்பது தனிக் கதை/ என்ன இவனாக வந்தால் டீயும் கொஞ் சம் ஏதாவது கடிக்கானுக்கு ஒன்று எடுத்துக்கொள்வான்,வேல் அண்ணன் வரும் போது எடுக்கலாம் கடிக்கானுக்கு.ஆனால் அவர் எனக்கு எதுவும் வேண்டாம் எனச்சொல்லி விடுவார், உடன் வருபவர் சாப்பிடாத போது இவன் மட்டும் கையில் கடிக்கானை வைத்துக்கொண்டுஆட்டிக் கொண்டிருந்தால், அல்லது தின்றுகொண்டிருந்தால்,,,,, அது விருந்தோம்பலுக்கு செய்கிற மிகப் பெரிய துரோகம் என நினைத்து கை விட்டுவிடுவான் அந்த யோசனையை/

அவரதுநல்ல உள்ளத்திற்குவெள்ளந்தி த் தனத்தனத்திற்கும் டீஎன்னசாப்பாடே வாங்கிக் கொடுக்கலாம்,சொன்னால் ”சும்மா இரு நீ, நீயே காணாத வருமான த்துல கஷ்டப்பட்டுகிருக்க,இதுல சாப்பாடு வேறயா சாப்பாடு என்பார்,நான் சும்மா அப்பிடியே ஓன் கூட டீசாப்புட்டு ரொம்ப நாளாச்சேன்னும்,ஒரு உரிமை யிலயும் கேட்டேனப்பா,அவ்வுளவுதா,நீயீ என்னான்னா சாப்பாடு வரைக்கும் போயி நிக்குற,இங்க எந்தக்கட கொறையா இருக்குனு நினைக்கிற,,, அந்த ரோட்டு முக்கு கடைக்குப்போனம்ன்னு வையி அவன் மொத வேலையா சாப்புறீங்களான்னு கூட கேக்க மாட்டான், வந்துக்குற ஆளு வாட்ச், மோதரம், செயினோடவந்திருக்குறானான்னுதான் மொதல்ல பாப்பான், அப்பறம் தான் என்ன வேணுன்னு வாயத்தெறந்து கேப்பான்,அத விட்டுட்டு அந்த மெயின் ரோட்டுல இருக்குற மெஸ்ஸீக்கு போனம்ன்னு வையி மொத வேலையா அடமானம் வைக்க ஓங்கிட்ட ஏதாவது பொருள் இருக்கா,இருந்தா கடைக்குள் ளவா,இல்லைன்னா வராதங்கறது மாதிரி பாப்பாங்க,இன்னும் இன்னுமா இருக்குற எல்லா கடைகளுக்கும் ஒவ்வொரு கொனம் ஒவ்வொரு வெல, இதுலகடைக்குசாப்புடகூப்புடுறாராம்ல்லசாப்புட”,,,என்பார்வேல்அண்ணன்,

அதைச்சொல்கிறஅதேநேரத்தில்”கையிலகாசுநெறையஇருந்தா அண்ணன்ட்ட குடுத்து வையி தேவைப்படும்போது வாங்கிக்க என்பார். கோவணத்துல நாலு காசிருந்தா கோழிக்குக் கூட பாட்டு வருமாம் அது கணக்கா இருக்கு நீயி பேசுறது” எனச்சொல்லவும் மறக்க மாட்டார்.

அவர் மீது இருக்கிற அவ்வளவு பிரியத்திற்கும் மரியாதைக்குமான காரணம் பெரிதாக ஒன்றும் இல்லைதான்.கண் முழியாத கோழிக்குஞ்சாய் இந்த ஊரில் வந்து வேலைக்கு சேர்ந்த போது இவன் வேலை பார்த்த தனியார் நிறுவனத் தின்அருகில் இருந்த அலுவலகத்தில்தான் வேலை பார்த்தார்.வேல்அண்ணன்.

இவன் வேலை பார்த்த தனியார் நிறுவனத்திற்கு எப்பொழுதாவது ஒரு முறை வந்து போவார்.இவன் வேலை பார்க்கிற நிறுவனத்தின் முதலாளியும்,வேல் அண்ணனும் சிறுவயதிலிருந்து ஒன்றாய்ப் படித்தவர்களாம். அந்தப் பழக்கம் தான் இப்பொழுதுவரை இருவரும் தனித்தனி இடங்களில் வேர்விட்ட போதும் கூட ஒருவர் மீது ஒருவரை கிளை பாயசெய்திருக்கிறது எனலாம் என்பார் வேல் அண்ணன்.

அவர் அலுவலகத்திற்கு வந்த ஒரு மழை நாளில் இவனையும் இவனது வேலையையும்.இவனையும் பார்த்த வேல் அண்ணன் மனதில் இவன் குடி கொண்டு விட யார்,,,,,,, என்ன,,,,, என்று விசாரித்து நட்பைப் படர விடுகிறார் அன்றிலிருந்து/

இவன்கூட கொஞ்சம் தயங்கினான். இவனை விட வயது மூத்தவராய் தெரிகி றாரே,அவரிடம் எப்படி சரி சமமாய் பழக என தயங்கிய இவனை குஞ்சை அணைக்கிற தாய்க்கோழியாய் தன் இறகு விரித்துக்காத்தார்.

“பொழைக்க வந்த யெடத்துல கொஞ்சம் முன்னப் பின்ன இருக்கும்,புது ஊரு புது மனுசங்க,புதுப் பழக்கம்ன்னு,,,,,, நெறைய மாறுதல் தெரியும்,ஆபீஸ் வேலையா வெளியில் போய் வரும் போது, நீயி வேற கொஞ்ச வயசுப் பயலா வேற இருக்கயா ,,,,, கொஞ்சம் பாத்து சூதானமா நடந்துக்க என்பார், எங்கள மாதிரி ஆள்களுக்கு பிரச்சனை இல்ல,இங்கனயே பழந்தின்னு கொட்ட போட்டவுங்க,அதனால எங்களுக்கு சரியாப்போகும், ஒனக்கு பழக்கம் பிடிபட கொஞ்சம் நாள் ஆகும் ஆமாம் தெரிஞ்சிக்க” என்பார்.

நிறுவனத்தில் வேலை அதிகமாகிப்போன ஒரு நாளிலும் மனம் அலுத்துப் போய் விட்டேத்தி காட்டி விட்ட நாளன்றின் பொழுதிலுமாய் இவனிடம் ”வா என் ஊருக்கு கூட்டிப்போகிறேன்,இன்று இரவு அங்கு தங்கு, சரியாகிப் போகும் எல்லாமும்”என்றார்.

ஊருக்குக்கூட்டிப்போனவர் நேராக இவனை அவரது நண்பர் கணபதியிடம் ஒப்படைத்து விட்டு போய் விட்டார் அவரது வீட்டிற்கு,கணபதியுடன் ஒட்டு வதில் இவனுக்கு கொஞ்ச நேரம் தயக்கம் இருந்தது.சிறிது நேரத்தில் சரியாகிப்போனது அதுவும்/

கணபதி பேச இவன் பேச,கணபதியின் நண்பர்களும் சுற்றமும் பேச அடேயப் பா ஒரேசிரிப்பும்பேச்சுமாய் கச்சேரியாய்த்தான்ஆகிப்போனதுசிறிது நேரத்தி ற்கு/

பின் என்ன திறந்து விட்ட மனதில் இருப்பதைக்கொட்டி எல்லாம் சொன் னான் கணபதியிடம்.”சரி ஒன்றுமில்லை. இதெல்லாம் வருவதுதான் இந்த வயதில், இன்னும் தெளிவாக சொல்லப் போனால் இதெல்லாம் வரவேண்டும் வரா விட்டால்தான் சிக்கலே என்று சொன்ன கணபதி இன்னும் நிறைய நிறைய சொல்கிறார்,நிறைய நிறைய பேசுகிறார்,இவனும் கேட்டுக்கொண்டே இருக்கி றான் சளைக்காமல்.சரி போதும் விட்டால் பேசிக்கொண்டே இருப்பேன் நான், சாப்பிடப்போகலாம்வா,அம்மாஆளனுப்பி விட்டார்கள்.சீக்கிரம் வரச் சொல்லி. அவர்கள் நமக்குசாப்பாடு போட்டு விட்டுப்படுத்தால்தான் சீக்கிரம் எழுந்து வேலைக்குப் போக முடியும் ,உங்களைமாதிரி டவுனில் தூங்கவதைப் போல் லேட்டாக தூங்க மாட்டார்கள். விட்டால் இந்நேரம் இரண்டு தூக்கம் தூங்கியி ருப்பார்கள்.பொதுவாகவே முன் தூங்கி முன் எழுபவர்கள்,நீ வந்திருக்கா விட்டால் இந்நேரம்தூங்கியிருப்பேன்நானும்” என்றகணபதிவேல்அண்ணனி ன் வயதுக்கு இவ்வளவு பேச்சையும் உன்னிடம் பேசமுடியாது,அதனால்தான் என்னிடம் தள்ளிவிட்டு விட்டுப் போய் விட்டார்கள் உன்னை.உன்னை காலை யில் அலுவலகம் கொண்டு போய் சேர்க்க வேண்டியது எனது பொறுப்பு” என வீட்டிற்கு கூட்டிப் போன கணபதி அவரது அம்மாவிடம்பக்கத்தில் போய் ஏதோ சொன்னார், இரு என சைகையில் சொன்ன அவரது அம்மா வீட்டை விட்டு வெளியே போய்விட்டு சிறிது நேரத்தில் வந்தவர் அடுப்பை பற்ற வைத்து சூடாக தோசையும் குழம்பு ஊற்றுகிற குழிக்கரண்டியில் உளுந்த வடையும் சுட்டுத்தந்தார்கள்.நன்றாக இருந்தது அதன் ருசியும் பக்குவமும் அவரது மனது போல,கையெடுத்துகும்பிட்டு நன்றி சொல்லி விட்டுப் படுத் தவன்மறுநாள் கணபதியின் அம்மா சுட்டுத்தந்த கம்பந்தோசையை சாப்பிட்டு விட்டு நாக்கு வரள தண்ணீர் தாகத்துடன் அலுவலகத்திற்கு வந்தான்,

“கணபதி அதிகாலையில் எழுந்து ஏதோ பக்கத்து ஊரில் வேலை இருக்கிறது எனவும் உன்னைக்கூட்டிப்போக வேல் அண்ணன் வருவார் இன்னும் சிறிது நேரத்தில் என கணபதி அண்ணன் சொன்னதையும் கேட்காமல் கருவேலை காட்டு வழியே நடந்து வந்தான் வேலைக்கு.

இவன் அலுவகத்தில் நுழையப் போகையில்அலுவலகவாசலில்நின்றிருந்த வேல்அண்ணன்சப்தம்போட்டார்,”என்னப்பாஇப்பிடியாசொல்லிக்காமகொல்லிக் காம வர்ரது,நீ தனியா வரணும்ன்னு பிரியப்பட்டா வந்துட்டுப்போ, ஒரு வார்த்த சொல்லிட்டு வந்திருக்கலாம்ல,நான் பையன இன்னும் காணம் ண்ணு பதைச்சிப் போயிட்டேன் பதைச்சி,சின்னப்பையங்குறது சரியாத்தா இருக்கு பாத்தியா, இளங்கன்று பய மறியாதுங்குறதும் சரியாதான் இருக்கு என சிரிப்புடன் சொன்னவர் வா டீ சாப்பிட்டுக்கிட்டே பேசலாம் என்றார்,சரி என போனவனிடம் நிறைய/

ஊருக்குக்கூட்டிப்போன இவனை கவனிக்க இயலாமல் போய் விட்டது குறித் தும் அது ஏன் எனவுமாய் சொன்னவர் உடல் நலமில்லாமல் இருக்கிற தனது தாயாரை டவுன் ஆஸ்பத்திரிக்கு கொண்டு வரத்தான் இவனை கணபதியிடம் ஒப்படைத்து விட்டுப்போனதாகவும் அவர் இருக்கிற கிராமத்திலிருந்து டவுனு க்குஅந்நேரம் பஸ்கிடையாது என்பதால் பக்கத்து ஊருக்கு சைக்கிளில் சென்று அங்கு வேன் வைத்திருக்கிறவரிடம் வேன் வாடகைக்குப் பேசி அமர்த்தி கூட்டிவந்தேன்எனவுமாய்ச் சொன்னார்,அதற்கே இரவு பதினோரு மணி ஆகி விட்டது என்றார், டவுன் ஆஸ்பத்திரிக்கு வர பதினொன்றை பணிரெண்டு ஆகிப் போனது என்றார்,சற்று முன்புவரை ஆஸ்பத்திரியில் இருந்து விட்டு இப்பொழுதான் வருகிறேன் எனவும் இவனை இரவு சரியாக கவனிக்க முடியாமல் போனது குறித்தும் வருத்தம் தெரிவித்தார்.

சரிஎன்ன அதனால் அவரதுஇடத்தில் கணபதி இருந்து இவனை மனம் கோண விடாமல் கவனித்துகொண்டது குறித்து பெருமிதமாய் சொன்னான்,இவர்கள் வழக்கமாய் டீ சாப்புடுகிற கடை தான் அது.

“வேல் அண்ணதான் அங்கு இவனு க்கு கணக்கு ஆரம்பித்துக் கொடுத்தார். ஆத்திர அவசரத்திற்கு இருக்கட்டும். வீட்டிலிருந்து சாப்பாடு கொண்டு வராத தினங்களிலும் கையில் காசில்லாத நேரஞ்களில் டீ சாப்பிட்டுக் கொள்ள வுமாய் இருக்கட்டும்.வைத்துக்கொள் இப்படி ஒரு ஏற்பாடை. தேவை இல்லை அல்லது பிடிக்கவில்லை கையில் எனக்கு காசு புழங்கிக்கொண்டே இருக்கும், நினைத்த நேரம் நினைத்த கடையில் சாப்பிட்டுக்கொள்வேன் நான் என்கிற முடிவிற்கு நீ வரும் போது கணக்கை குளோஸ் பண்ணிக்கொள்” என்றார்.

”அப்படியெல்லாம் இல்லை நான் இங்கு வேலை பார்க்கிற வரைக்கும் எனது உறவும் எனது பணியும் இந்த மண்ணைத்தொட்டு இருக்கும் வரைக்குமாய் கடைக் கணக்கு தொடரும்” என்பான் பதிலுக்கு வேல் அண்ணனிடம்/அதற்கு சப்தமாக இவனதுதோள்தட்டி சிரிப்பார்/அந்த தோள் தட்டளிலில் எந்த ஒரு சங்கோஜத்தையும் தர்ம சங்கடத்தையும் உணர்ந்ததில்லை இவன்.

வருடங்கள் எத்தனை கடந்தும் இன்னும் இவனுள் குடி கொண்டிருக்கிற வேல் அண்ணன் தூரம் பற்றி பேசும் போதும்,இன்னும் இன்னுமுமான பிற விஷயங்கள் பற்றி பேசும் போதுமாய் ஞாபகத்திற்கு வந்து விடுவது தவிர்க்க இயலாததாகிப் போகிறது தான்.

லிங்கம் பட்டிக்கு திருமணத்திற்கு சென்ற ஒரு மழை நாளில் பட்டியன் தொட்டி ஊர் வழியாக வழி கேட்டுக்கொண்டே செல்கிறான்.பட்டியன் தொட்டி யில் தென் பட்ட இளைஞர் இன்னும் இரண்டு கிலோ மீட்டர்களே இருக்கிறது நீங்கள் செல்ல வேண்டிய ஊருக்கு என்கிறார்.இல்லை இருக்காது அப்படியெ ல்லாம்உறுதியாக தூரமாகவே இருக்க வாய்ப்புண்டு என அறிவுறுத்திய மனச் சொல்லின் கைபிடித்துக்கொண்டவனாய் போய்க்கொண்டிக்கிறான். பத்து கிலோ தூரம் போனதும் தான் இவன் போக வேண்டிய ஊர் வந்தது.

சேட்டைக்கார இளைஞராய் இருப்பார் போலிருக்கும் அவர்,சரிதான் அவ்வப் போதைக்கு வேண்டும்தானே இது போலானமனிதச்சேட்டைகள் இவனும் சேர்த்துப் பண்ணுவதுதானே அது போலானசேட்டைகளை அவ்வப்போதுமாய்/

அந்த இளைஞனை குடி வைத்திருந்தஊரும் கொஞ்சம் வசதிப்பட்ட ஊராகத் தான் தெரிந்தது,பெரிய பெரிய வீடுகளும் கோயிலும் ஓரிடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தநான்கைந்து வேன்களும் கார்களுமாய்/.கூடவே ஒரு அரசுப் பள்ளியும்/

கண்மாய்க்கரை ஒட்டிவழி நெடுகிலுமாய் இருக்கிற ஊர்களைத்தாண்டி சென்ற ஊரகச்சாலைஅந்தஊரை அடையாளம் காட்டியபோதுகடக்கவேண்டிய தூரமும் இடமும்எவ்வளவு என்றால் என்ன,அடையவேண்டிய இலக்கு தானே முக்கியம் என்பார்கள்,இவன் விஷயத்தில் அது பொய்யாகிப்போனது குறித்து மிகவும் வருத்தம் இருக்கிறதுண்டு இப்பொழுது வரை/

பரஸ்பரம்வருத்தமும்,அது சார்ந்த நினைவுகளும் அது சுமந்த மனதும் கட்டிக் கொண்டாடி வரும் இனிய தருணங்கள் வாழ்கவும், வளர்கவுமாய்இருக்கட்டும் நலமுடன் என்றுதான் சொல்ல முடிகிறது. இந்தத் தருணத்தில்/

கட்டிப்பட்டு ப்போயிருந்த கெட்டியான சுவரைக்கொண்ட பள்ளி இவனுக்கு எட்டாவது வகுப்பை சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்த நாட்களின்றின் பள்ளிக்குச்சென்றகாலைவேளையில் ப்ரேயர் நடக்கிற இடத்தை ஒட்டியிருந்த காம்பவுண்ட் சுவரில் இரண்டு ஆட்களின் பாதம் பதித்த தடங்கள் தெரிந்தன/ பதிந்த தடத்தின் காலடிகளின் இழுவல்கள் சுவரில் பூசப்பட்டிருந்த மஞ்சள் சாயத்தை உதிர்த்துக் காண்பித்திருந்தது.

ப்ரேயர் முடிந்து ரீசஸ் பீரியடில்தான் கேள்விப்பட்டான் பள்ளியில் திருட்டுப் போய் விட்டது என/திருடு போனது என்ன,பணமா,ரெக்கார்ட்டு நோட்டுகளா அல்லது மாணவ மாணவர்களின் டீ.சி யா தெரியவில்லை.

பணம் அவ்வளவாக இருந்திருக்க வாய்ப்பிலை,ஒரு வேளை கோபம் கொண்ட யாரேனும் டீ.சி களை அள்ளிக்கொண்டு போயிருக்கலாமோ,அவர்களுக்கு அப்படி என்ன பள்ளி மீது கோபமோ தெரியவில்லை.மொத்ததில் ஸ்கூலில் திருட்டு என்பது பரபரப்பு போலீஸ்,துப்பறியும் நாய்,,,,,என்கிற படலத்திற்கு பின்னாய் முடிந்து போனது. அன்றிலிருந்து ஒருவாரத்திற்கு பாடம் படிப்பு பள்ளி,,,,,என்பதெல்லாம்பின்னால் போய் விட்டது. ஒரே துப்புத் துலக்கல்தான்./ திருட்டும் அது நடந்தபிண்ணனியும்அது பற்றியகதையுமாக/

இவனுக்கு முன் பெஞ்சில் அமர்ந்திருக்கிற மல்லிகா பற்றி இவனுக்கு எந்த வித பிரஞ்னையும்இருந்திருக்கவில்லை அந்த நேரத்தில்/

வகுப்பு வாத்தியார் ஆறுமுகம் சார்தான் இவனை அடிக்கடி வைபராக இருந் திருக்கிறார்,ஸ்கூல் முடிந்த பின் தனியாக கூட்டிப்போய்/”டேய்படிக்க வந்த யெடத்துல படிப்ப மட்டும் கவனி, மனச அவுத்து அலைபாய வுடாத,ஆமாம் சொல்லிப்புட்டேன்” என்பார்.

இருந்தாலும்அவரதுசொல்படி கேட்காத மனது கொஞ்சம் துள்ளியாடி திரிந்தது தான் எனச்சொல்லலாம் அந்த பள்ளி நாட்களில்/

படித்த பாடங்களிலும்,ஆடிய ஆட்ட ங்களிலும்,ஓடிய ஓட்டங்களிலும் அதுவும் ஒன்றாய் பட்டுத்தெரிய சந்தோஷப் பட்டுத் திரிந்த நாட்களை சூழ் கொண்டு சுமந்துகொண்டிருந்த மனது அடர்த்தியாகவும் அல்லாது லேசாகவும்இல்லாது இரண்டிற்கும் நடுவாந்திரமாய் இருந்தது போலாய் ரோஸ் கலர் வர்ணம் பூசப்பட்டிருந்த பாத்ரூமில் குளித்துக் கொண்டிருக்கும் போது உருவானதாய் அந்த எண்ணம்/

உருவான லேசான எண்ணம் வலுப்பட்டு உருக்கொண்டு தன் பலம் காட்டி எழுந்து நடமாட ஆரம்பிக்கும் முன்பாய் பள்ளியைப்போய் பார்த்து விட வேண் டும் என எழுந்த ஆவலுக்கு எந்த வித 144 ம் பிறப்பித்து விடவில்லை தான் இவன்/

ஏறி விளையாடிய சறுக்கும்,தொட்டு விளையாடிய சக மாணவர்களும் சற்று மங்கலாகவே ஞாபக அலைகளில் கரை கொண்டிருக்க நினைவலைகளில் இன்னமும் சற்றுப்பிரகாசமாய் ஞாபகம் இருக்கிற என்.சி.சி மாஸ்டரும்,பி.டி வாத்தியாரும் அவரது பீரியடில் புல்லபஸ் எடுக்க மறுத்து அழுத மாணவ னையும் மறந்து விடமுடியவில்லைதான்.அவர்களெல்லாம் இப்பொழுது எங்கிருக்கிறார்கள் என செய்து கொண்டிருக்கிறார்கள் என்பது தெளிவற்ற பதிவாகவே இவனுள்/

அப்படியா,அவர்களா,இன்னமுமா,இங்கேயா,,,,,,,எனச் சொல்ல இவன் இதுவரை கேள்விப்பட்டது கூட இல்லை.பனிக்கால அதிகாலைப் பொழுதொ ன்றின் ஒரு பள்ளித்துவக்க நாளில் என்.சி.சி சீருடயுடன் கிரவுண்டில் போய் பெரேடில்நின்றபொழுதுபெரேடைபார்வையிட பள்ளிக்கு வந்திருந்த மிலிட்டரி கேப்டனிடம்சொல்லிக்கொண்டிருந்தார்என்.சி.சிமாஸ்டர் இவனைக் கையைக் காட்டி/இவன் போலீஸ் அல்லது மிலிட்டரியில் சேர்ந்தால் சிறப்பாக வருவான் என.

அந்தப்பேச்சை அரை குறையாகத்தான் இவன் கேட்டான்.ஆனால் இவனுக்குப் பக்கத்தில் நின்றசக மாணவர்கள் கேட்டு விட்டா ர்கள் மாஸ்டர் சொன்னதை/ அன்றிலிருந்து சிறிது நாள் வரை ”டேய் போலீசு,டேய்மிலிட்ரி கேப்டன்” என ஓயாத பேச்சும்ஒளியாத கேலியுமாய்இருந்தார்கள் கிடைத்த நேரங்களிலும் கிடைத்த இடைவெளிகளிலுமாய்/

இது நடந்து ஒரு வாரம் கழித்து பி.டி பீரியடில் எல்லோரும் புல்லப்ஸ் எடுத்து முடித்த வேளை வேளையாய் யாரும் எடுக்காதவர்கள் இருக்கிறார் களா பாக்கி என துப்பறிந்து பார்த்த போது வழக்கம் போல் சுரேஷ் எடுக்கா மல் பின் தள்ளித் தள்ளிப்போய் உட்கார்ந்து கொண்டே இருந்தான்.சுரேஷ் புல்லப்ஸ் எடுப்பதற்கு ஏதுவாய் புல்லப்ஸ் கம்பத்தின் கீழ் ஸ்டூல் எடுத்துப் போட்டு விட்டு அதன் அருகிலேயே நின்றார் பி.டி மாஸ்டர்.

புல்லப்ஸ் கம்பத்தை எட்டிப்பிடிக்க ஸ்டூல் வைத்தாயிற்று சரி.புல்லப்ஸ் எடுத்தானா சுரேஷ் என நீங்கள் கேட்பது புரிகிறதுதான். ஆனாலும்ஸ்டூல் ஏறிகூட புல்லப்ஸ் எடுக்கவில்லைஅவன்.

நடுங்கிய காலில் வழிந்து தெரிந்த வியர்வைக்கோடுகளுடன் ஸ்டூல் மீது ஏறி நின்ற அவன் நடுங்கிக்கொண்டும் அழுது கொண்டும் புல்லப்ஸ் எடுக்க இயலாது தன்னால் என புல்லப்ஸ் கம்பத்தின் உயரம் பார்த்துக்கொண்டே சொன்னான்.

ஒன்று ஸ்டூல் மீது ஏறி நின்று கொண்டு புல்லப்ஸ் கம்பத்தை தொட அஞ்சு கிறான் அல்லது புல்லப்ஸ் கம்பத்தில் காலை மடக்கி தொங்கிக்கொண்டு கீழே இறங்க மறுத்து அழுகிறான்.என்ன செய்வது எனத்தெரியாமல் தலையி லடித்துக் கொண்ட பி.டி வாத்தியார் அவனை பிடித்து இறக்கினார்/

இதன் பின்னாக நீண்ட நாட்கள் கழித்து இவனது பள்ளிமாணவ மாணவிகள் சென்ற ஏதோ ஒரு ஊர்வலத்தின் போது கூட்டத்தின் கூச்சலோடு கூச்சலாக கிட்ண வாத்தியாரை வைது விட்டு வீட்டிற்கு வந்தவன் அதன் பின்னாய் பள்ளிக்குப் போகவில்லை.இவன் வைதது கிட்ண வாத்தியாருக்குக் கேட்டி ருக்குமோஎன்னவோ.தெரியவில்லை ஆனால் அதில் ஒரு திருப்தி இவனுக்கு. பழி தீர்த்துவிட்டோம் வகுப்பில் குறிப்பிட்ட பீரியடில் கடுப்புக்காண்பித்ததற்கு என/

பின்னாளில் ஸ்கூலுக்குடி.சி வாங்கப்போகும் போது அவர்தான்இவனுக்கு உதவி செய்தார்.

இவைகள் தவிர்த்து அவ்வளவாகஇவனதுநினைவின்வாசலில்வந்து வேறெது வும் நிற்காத பொழுது இவனில் உருக்கொண்டதாய் அந்தப்பள்ளியின் கட்டிடம் மட்டுமே இருக்க போய் வரலாம் ஒரு எட்டு என நினைத்த நினைப்பில் எந்த வித தவறும் இருக்க முடியாது எனவே நினைக்கிறான் அதில் தவறொன்றும் இருந்து விட முடியாதுதானே,,,,,,?

4 comments:

 1. தவறொன்றும் இருக்கமுடியாது. உண்மைதான்.

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் டாக்டர் ஜம்புலிங்கம் சார்
   நன்றி வருகைக்கும் கருத்துரைக்குமாக/

   Delete
 2. ஏக்கம் ஏங்க வைத்து விட்டது...

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் திண்டுக்கல் தனபாலன் சார்,
   நன்றி வருகைக்கும் கருத்துரைக்குமாக/

   Delete