15 Jan 2016

இண்டிக்கேட்டர்,,,,,,

எதற்கு இந்த இடத்தில் போய் அனாவசியமாய் இண்டிக்கேட்டர் கையைக் காட்டினால் போதுமே இவன்தான் வலது கை காட்டி திரும்புகிறான்,

மிகச் சரியாக போலீஸ்க்காரர்கள் நிற்கிற திருப்பு முனை அது.வேறு எங்கு எப்படிப் போனாலும் இங்கு போகும் போது பெரும்பாலுமாய் கையைக்காட்டித் திரும்புவது பெரும்பாலான நாட்களில் இவனது நடவடிக்கைகளில் ஒன்றாகிப் போனது.

முழுக் கை சட்டை அணிந்தால் நன்றாக இருக்கும்.ஆகாது அரைக்கைசட்டை அதிலும் அதன் கலரும் எடுப்பு சைஸீம் ஆளுக்குத்தகுந்த மாதிரி இருக்கிறதா என்ன இல்லைதான்.

பீரோவிலிருந்து எடுத்து கொடியில் தொங்கப்போட்டிருந்த வெள்ளைச்சட்டை (அரைக்கைதான்) இரண்டு நாட்களாய் தேட ஆளில்லாமல் அனாதையாய் தொங்குகிறது. ஏன் அப்படி எனவும் கேட்கவும் தொட்டுப் பேசவுமய் ஆள் இல்லாத அந்தியந்த நிலை.

அதனிடம் போய் வாஞ்சையோடு அதனைத்தொட்டு மூன்று நாட்களுக்கு முன்பாய் உன்னை அடுக்குகளின் அடியிலிருந்து வெளியில் எடுத்த போது இந்த அப்பாவியின் உடலில் இரண்டு மாதங்கள் கழித்து ஒட்டப்போகிறோம். நல்லதோ கெட்டதோ ,பிடிக்கிறதோ, பிடிக்கவில்லையோ எதுவாய் இருந்த போதிலும் கடையிலிருந்து வாங்கு போது பத்து சட்டைகளைப் புரட்டிப் பார்த்து கழித்து விட்டு என்னை மட்டும் பாத்தமாத்திரத்தில் டக்கென எடுத்து கக்கத்தில் இடுக்கிக்கொண்டு கடைக்காரரிடம் கணக்கில் எழுதச்சொல்லி விட்டு வந்து விட்டீர்கள்/

கணக்கு இருக்கிறது அங்கே,தோழர் கோட்டையிடம் ஒரு நாளன்றின் பொழு தில் மிகவும் தயங்கிக்கொண்டே கேட்ட பொழுது இப்பொழுது என்ன உங்களு க்குநினைத்த நேரம் போய்நினைத்த துணியை எடுத்து வரவேண்டும்.கையில் காசு இருக்கும் போது அல்லது மாததவணையில் கொடுத்துக்கொள்கிறமாதிரி வசதியாய்ஒரு கடை பார்க்க வேண்டும்.அவ்வளவுதானே ? விடுங்கள் கவலை யை என அறிமுகம் செய்து வைத்த பி.கே.என் ஜவுளி ஸ்டோர்தான் இவனதும், இவன்வீட்டுக்குமானஜவுளிதேவையைஅவ்வப்பொழுது நிறைவேற்றுகிறது. கொஞ்சத்துக்கு கொஞ்சமேனுமாய்.

வீட்டில் மற்றவர்களுக்கு துணிப்போகும் போது யாரைவது கூட்டிக் கொண்டு போவான்,இவனுக்கு பேண்ட் அல்லது சட்டை எடுக்கப் போவதென்றால் மட்டும் தனியாகத்தான் போவான்.அப்படிப்போகிற நாட்களில்தான் இவனுக்கு பிடித்தமான சட்டை பேண்ட் அமைந்திருக்கிறது எனலாம்/இம் முறையும் அப்படித்தான் இவனுக்கு அமைந்த வெள்ளைச்சட்டையும்/

காட்டன் சட்டைதான் இருக்கிறது,என்றார் காட்டன் தவிர்த்து வேறு இல்லை யாஎனக்கேட்டபோது கடைக்காரர்/ வெள்ளைச்சட்டை போட்டால் மிடுக்காய் இருக்கும் என நினைத்து கூட எடுக்க வில்லை.இன்னும் சொல்லப்போனால் அன்று ஏதாவது ஒரு கலரில் சட்டை எடுக்கலாம் என்கிற நினைப்பில்தான் போனான்.ஆனால் ரெடிமேட் சட்டைகள் அடுக்கப்பட்டிருந்த வரிசையில் இருந்த சட்டைகளைப் பார்த்துக் கொண்டிருந்த போது ஒரு வரிசையில் இருந்த வெள்ளைச் சட்டைகளைப் பார்த்ததும் இதை எடுத்தால் நன்றாக இருக்குமே என ஆசை வர சாய்ஸ் வேறெதும் தராமல் அதையே எடுத்துக் கொண்டான்.

பார்த்த மாத்திரம் எடுத்து வந்த சட்டையை உடலில் பொருத்திப் பார்த்து நன்றாகயிருக்கிறதா,நன்றாகயிருக்கிறதா இந்தச்சட்டை எனக்கு கிட்டத்தட்ட அல்லது நான்கோ வருடங்கள் கழித்து இம்மாதிரி வெள்ளையை எடுத்துப் போடுகிறேன் என்றும் அலுவலகப்பணி நிமித்தமாய் வெள்ளையை மட்டுமே சீருடையாகக்கொண்டிருந்தநான்வேறெதுவுமாய்கலர்களைப்போட்டுஅறிந்ததில்லை,நான்மட்டும் என இல்லை.என்னைப்போலான ஆயிரக்கணக்கானவர்கள் தங்களின் பணி நிமித்தமாய் அணிந்திருக்கிற வெவ்வேறான கலர்களிலான சீருடைகளே அவர்களின்உடைகளாகிப்போகிறதுபெரும்பாலானதினங்களிலும்பெரும்பாலான  பொழுதுளிலுமாய்/

அப்படியாகிப்போன ஒருவரில் என நான் இருபத்தைந்து வருடங்களுக்கு மேலாகஅணிந்திருந்த உடையை இப்பொழுதுவருடங்கள் கழித்துஅணிவதின் மூலமாய் சிறப்புச் செய்யப்போகிறேன் வெள்ளையை என்கிற பெருமிதமான அவரதுஅறிவிப்பும்பெருமையும் ஒன்றே போதுமேஎனக்கு என்கிறமகிழ்வுடன் அவரது உடலில் ஒட்டிக்கொள்கிறேன் என ஓடோடி வந்து ஒடிக்கொண்ட என்னை ஒரு நாள் முழுவதுமாய் போட்டுக்கொண்டு அலைந்தார்.அதுவும் அதிக தூரம் ஒன்றும் போகவில்லை.பல் டாக்டர்,பஜார்,காய்கறி மார்க்கெட் என்கிற முறமை தாங்கிய நடைமுறையில் மட்டுமே இயங்கிய அவரது உடலில் ஒட்டியிருந்த ஒரு நாளில் பெரிதாக ஒன்றும் அழுக்காகி விடவில் லை என புழங்காகிதம் கொண்டிருந்த வெள்ளைச்சட்டையை எடுக்கப்போன கை அதை விட்டுத்தாவி வேறொனறை எடுப்பதில் முனைப்புக் கொள்கிறது.

முதலில் பல் டாக்டரிடம் போனதைச்சொன்னாலே போதுமானது பக்கம் முடிந்து போகும் என நினைக்க வேண்டியிருக்கிறது.இடது பக்கமாய் கீழ் வரிசையில் இருக்கிற பல் ஒன்று அதன்அருகாமையாய்இருக்கிற பல் இன்னொன்றையும் துணைக்குச் சேர்த்துக் கொண்டு நாங்கள் இரண்டு பேரும் சொத்தையாகிப்போனோம்.அது சரியாக பராமரிக்கப்படாததாலா அல்லது வேறெதாவதின்காரணமாகவாஎனத்தெரியவில்லை.அதைஅறிந்து கொள்ளும் ஆர்வமற்று சொத்தையாகிப்போன நாங்கள் சென்ற வாரத்தின் இறுதி நாள் ஒன்றின் இரவில் இவரை தொந்தரவு செய்து விட வலி பொறுக்க மாட்டாமல் நடு ராத்திரியில் எழுந்து சென்று அரசு ஆஸ்பத்திரின் அவசர சிகிச்சைப் பிரி வில் வலி நிவாரணி ஊசி ஒன்றை போட்டுக்கொண்டு படுத்தவருக்கு இரண்டு நாட்களுக்கு முன் தான் நேரம் கிடைத்தது பல் டாக்டரிடம் போய் வர/

குறிப்பிட்டும் இலக்கிட்டுமாய் இந்த டாக்டரிம்தான் போக வேண்டும் என்கி தெல்லாம் இல்லை.

ஐந்தாவது ரயில்வே கேட் சாலை நான்கு பல் ஆஸ்பத்திரிகளை அடையாளம் காட்டி வைத்திருந்தது.அப்படியாய் அடையாளம் காட்டி வைத்திருந்ததில் நான்கில் இரண்டு அன்றைய தினம் விடுமுறை என எழுதப்பட்டிருந்தது.மற்ற இரண்டில் ஒன்று இரண்டு நாட்கள் விடுமுறை எனகோடிட்டுக் காட்டியது. இனியும் ஒன்று இருப்பதை இவன் கவனிக்கவில்லை.இவர்கள் அனைவரை யும் விட்டுவிட்டு சாத்தூர் ரோட்டிலிருந்த டாக்டரிடம் சென்று பல் காட்டி விபரம் சொன்ன போது பரிசோதித்துவிட்டு இரண்டு நாட்கள் கழித்து வாரு ங்கள் பல் ஓட்டையை அடைத்து விடலாம் எனச்சொல்லி இரண்டுநாட்களுக் குமாய் மாத்திரை கொடுத்தார்.அப்புறமாய் இரண்டு நாட்கள் கழித்து போய் பல் ஓட்டையைஅடைத்துக்கொண்டுவந்தான்.அதன்அருமாமையிலிருந்த பல்லை அடுத்தமாதத்தில் ஓர் நல்ல நாளாய்ப்பார்த்துப் பிடுங்கிக் கொள்ளலாம்.  அதுவரை அரசு ஆஸ்பத்திரியின் அவசர சிகிச்சைப்பிரிவிற்குச் செல்ல வேண்டிய அவசியம் இருக்காது என்கிற சொல்லுடன் பீஸ் கொடுத்து விட்டு வெளியே வந்தவனுக்கு மார்க்கெட் சென்று காய்கறி வாங்கிக்கொள்ளலாம் என்கிற ஞானம் வரவே அங்கு செல்கிறான்.

அன்றையை விட்டால்அடுத்து கடைகள் இருக்காது என சொல்லிவிட்டது போல்மார்க்கெட்எங்கிலுமாய்மனிதத்தலைகள்.அன்றாடத் தேவையை வாங்க க் கூடி இருக்கிற கூட்டம்,முன்பெல்லாம் இந்தப்பக்கம் வந்தது கூட இல்லை இவன்.

கோபாலண்னன்கடையில்தான்வாங்குவான்.கோபாலண்ணன்இரண்டுகடைகள்  வைத்திருந்தார்.அதில்ஒன்றைஅவரதுமச்சினன்நடத்தினார்.

தூரத்துச்சொந்தம்என்பார்கேட்டால்/பார்க்கஅப்படித்தான் தெரிந்தது, வேலைக் காரனைப்போல்நடத்தினார்,சமயத்தில்அதைவிடமோசமாய்/பெண் கொடுத்து பெண்எடுத்திருக்கிறார்,அவரதுஅக்காளைகோபாலண்னனும்,கோபாலண்ணனின் தங்கையை அவருமாக திருமணம் செய்திருக்கிறார்கள்.பிராயத்தில் பிழைப் பிற்குவழியற்று நிலையாக ஒரு வேலையும் இல்லாமல் டின் பேக்ட்ரி, பல சரக்குக் கடை,ஜவுளிக்கடை,அரிசிமண்டி,,,,,,,,என மாறி மாறி வேலை பார்த்துக் கொண்டிருந்தவனுக்கு தனது சகோதரியைக்கொடுத்து அவனுக்கென பஜாரில் ஓரிடத்தில் தனியாக கடை வைத்துக்கொடுத்தார்,

அன்றிலிருந்து அவரிடம் ஒட்டிக் கொண்டிருந்த சல்லவாரித்தனங்கள் கொஞ் சம் கொஞ்சமாய் உதிர ஆரம்பித்திருந்தது.இப்பொழுதும் உள்ளே தூங்கிக் கொண்டுஇருக்கிறதுதான்.அவ்வப்பொழுது எப்பொழுதாவதுதானாக விழித்துக் கொள்ளும் இல்லையானால் தேவைக்குத்தட்டி எழுப்பிக் கொள்வேன் என்றார். என்ன சமயங்களில் அடிக்கடியாய் எழுப்ப வேண்டி இருக்கிறது வேறு வழியி ல்லாமலும் நிர்பந்தத்துக்கு உட்பட்டுமாய் என்பார்/

ரோட்டோர ஆக்ரமிப்புகள் அகற்றப்படுவதற்கு முன்பான நாட்களில் கடை போட்டிருந்தார்.முதன் முதலாக காய்கறி வாங்கப் போகை யில் அவராய்த் தான்அறிமுகம்செய்துகொண்டார் கூட்டம்அதிகமற்ற நாளொன்றின் பொழுதி ல்/

என்னைய யாருன்னு தெரியுதா,நான் இன்னாரு என்றார்.இவனும் அப்படியா என சந்தோஷம் கொண்டு அவர் சொன்னதை மனதில் ஏற்றியும் கணக்கில் கொண்டுமாய் அவர் சொன்ன வார்த்தைகளின் அர்த்த அடர்த்தியுடனேயே மனதில் வரைந்துகொண்டான்.இவன்வரைந்து கொண்டதோடுமட்டுமல்லா மல் இவனது மனைவியிடமும் சொல்லி விட்டான். அவளும் அப்படியா பரவாயில் லையே நமது ஊரில் வறிய நிலையில் பிழைப்பிற்கு வழியற்று கஷ்டப் பட்டவர் இங்கு வந்துகடை வைத்திருப்பது நல்லவிஷயம்தானே என கூறிய தோடு நில்லாமல் பேச்சுக்கால் நடத்த இரண்டோ அல்லது ஒரு வாரத்திற் குள்ளாக இவனுடன் பஜாருக்கு வந்த இவனின் மனைவியுடன் காய்கறி வாங்கப் போனான்.

அப்பொழுது எண்ணன்னே என ஆரம்பித்து கேட்டே விட்டாள் மனைவி காய் கறிக்கடைக்காரரிடம்/அவர் பதறிப் போனார் பாவம்.என்ன சொல்வது ஏது சொல்வது எனத்தெரியாமல் இல்லை, இல்லை நீங்கள் சொல்லும் அவர் நான் இல்லை,நான் அவர் இல்லை,,,அவர் வேறு நான் வேறு இப்படி நிறைபஜாரில் வந்து நின்று கொண்டு திடுதிப்பென இப்படிக்கேட்டால் என்ன செய்யட்டும் நான்?ஆகவே நாலாம் பேருக்குத் தெரியாமல் இந்தக்கேள்வியை இங்கேயே உதிர்த்துவிட்டுப்போய் விடுங்கள் தயவு செய்து என்கிறார் அவர்.

அப்படிஎன்னகேட்டு விட்டோம் கேட்கக் கூடாதகேள்வியை. ஏன்இப்படிப் பதறு கிறார் அனாவசியத்துக்கு,என்கிற கேள்விக் குறியுடனேயே அன்று வீடு வந்த மனைவியை சமாதானப்படுத்த இவன்தான் மிகவும் சிரமப்பட்டுப் போனான்.

சரிவிடுநான்தான்சொல்லிவிட்டேன்தவறாகபெரிதுபடுத்திக்கொள்ளாதேஅதை என என்ன சமாதானம் சொன்னபோதும் கூடஅவள்சமாதானப்பட இரண்டு மூன்று நாட்களாயிற்று/

அந்த இரண்டு மூன்று நாட்களுக்குள்ளாய் இவன் பட்ட பாடு கொஞ்சம் அதிகம் தான்.அவ்வாறானஅதிகமும்குறைச்சலுமானநினைவுகளில்அசையிட்டபடியும் அதில் கரையிட்ட படியுமாய் இருந்த நாட்களைக்கடந்து பீரோவிலிரு ந்து எடுத்த முழுக்கை சட்டை பிரித்து பட்டன் அவிழ்த்து போடப்போகையில் ஏனோவெள்ளைச்சட்டையின்மீது பிரியம் வரஅதை எடுத்துபோட்டுக்கொண்டு கிளம்புகிறான்.

இருபத்தைந்து ஆண்டுகளுக்கும் மேலாக இவனது உடலில் இவனது அடை யாளமாக இருந்தவெள்ளைச்சட்டை திரும்பவுமாய் இவன் உடல் ஏறி காட்சிப் பட்டுத்தெரிகிறது/

அந்த வெள்ளையைப்போட்டுக்கொண்டு இரு சக்கர வாகனத்தில் செல்லும் போதுதான்எதற்கு இந்த இடத்தில் இண்டிக்கேட்டர் அனாவசியமாய், கையைக் காட்டினால் போதுமே என வலது கைப்பக்கம் திரும்புகிறான்.

11 comments:

 1. Replies
  1. வணக்கம் திண்டுக்கல் தனபாலன் சார்,
   நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/

   Delete
 2. ஒரு வெள்ளைச் சட்டை...
  அதன் பின்னான அவனின் பாதையில் மளிகைக்கடை, பல் மருத்துவம் என பயணிக்கும் நிகழ்வுகள் இனிமையான சாரல் அண்ணா...
  அருமை...

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் பரிவை சேக்குமார் அண்ணா,
   நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/

   Delete
 3. இண்டிகேட்டர் இருந்தாலும் ...நிறைய பேர் உபயோகிப்பதில்லை நண்பரே.....த.ம3

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் வலிப்போக்கன் சார்,
   நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/
   வாக்களிப்பிற்கும்/

   Delete
 4. இண்டிகேட்டர் இருந்தாலும் ...நிறைய பேர் உபயோகிப்பதில்லை நண்பரே.....த.ம3

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் வலிப்போக்கன் சார்,
   நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/
   வாக்களிப்பிற்கும்/

   Delete
 5. அருமை! இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்!

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் தளிர் சுரேஷ் சார்,
   நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குக்குமாக/

   Delete
 6. கருப்பொருளை கையாண்ட விதம் நன்று.

  ReplyDelete