26 Jan 2016

கொடைக்கால்,,,,,,

 அப்பிடியே வந்தேன் பாய் பஜார்ப்பக்கமா,சரிதான் வந்த யெடத்துல வீட்டுக்கு
 ரெண்டு வடை வாங்கீட்டு போகலாம்ன்னு இங்கிட்டுவந்துட்டேன் என்றுதான் ஆரம்பிக்கிறது அவருடனான பேச்சு/

சாலையின் இரண்டு பக்கமும் யாரிடமும் சொல்லாமல் கொள்ளாமல் பூத்துத் தென்பட்ட மண்பரப்பின் மீது ஓரம் கட்டி குடி கொண்டிருந்த கடைகளில் ஒன் றாய் பாயின் கடை.

அப்படியே பாய் கடையின் முன்பாக அல்லது அதன் ஓரமாய் ஒரு மரம் வைத்தால் நன்றாக இருக்கும் தானே,,,,,?வேறொன்றுமாய் இல்லை ஒரு புங்க மரக்கன்று வைத்தால் கூடப் போதுமானது.

அப்படித்தான்வைத்திருக்கிறார்கள். வைத்திருந்தார்கள். நிறையக் கடைகளின் முன்பும் பக்கவாட்டிலுமாக/

இப்பொழுது பெரும்பாலுமாக அப்படிப் பார்க்க முடியவில்லை.ஏன் என பாயிடம் கேட்டபொழுது அந்தக்கொடுமைய ஏன் சார் கேக்குறீங்க,சின்னதா கண்டு வச்சி வளர்ற வரைக்கும் ஒண்ணும் பிரச்சனையில்ல சார்,ஏன்னா கம்பி வலை போட்டு பொத்தி வச்சிருக்கமா, பெருசா ஆடு மாடுக அல்லது வேற சேதம்ன்னு பெரிசா ஒண்ணும் வந்துறப்போறதில்ல.ஆனா அது வளந்து நிக்கும் போது அதக்காப்பாத்த நாங்க படுற பாடு பெரும்பாடாப்போயிருது.

ஆடு மாடுகளுக்குன்னு ஏதாவது வந்து கேட்டு கொழ ஒடிசிக்கிட்டுப் போனாக் கூட பரவாயில்ல.மரத்தடியில் வந்து வெட்டிய நின்னுக்கிட்டு ஏதாவது வம்பு பேசிக்கிட்டு வெட்டி நொரண்டு இழுத்துக்கிட்டு திரியிற விருதாப்பயலுக நாலு பேரு வந்து ரெடியா காத்துக்கிட்டு நிக்கிறாங்க பாருங்க,அவுங்களாலதான் பிரச்சனையே/

அந்தா நாலாவதா இருக்கு பாருங்க வெல்டிங் பட்டறை ,அது முன்னாடி கொ டைமாதிரி பெருசா விரிஞ்சி ஒருவேப்ப மரம் நின்னுச்சிபாத்துக்கங்க இப்பிடித் தான்வம்புவருதுன்னு அவரே மனசு பிடிக்க மாட்டாம வெட்டிட்டாரு,அது போக ஒருமரம்ன்னு வச்சாஅதபத்தரமா பாதுகாக்காட்டி கூட பரவாயில்ல.அத நாசக்காடாக்குறதுல குறியா இல்லாம இருந்தா பத்தாதா,,,,அதுனாலத்தான் ஏன் வீண் வம்பு பொல்லாப்புன்னு மரம் வக்கிறதில்ல யாரும்/

இந்த யெடத்துல மரத்தப்பாக்கணுன்னா ஒண்ணு ரயில்வே ஸ்டேசன் போனா உண்டு,அங்கனஅம்பதுஅறுபது வருசத்துக்கு முந்தின மரமெல்லாம் இருக்கும். ஏதோ ஒரு மரத்தக்காட்டி ஒருத்தர் சொன்னாரு ஒரு நாள் இந்த மரத்துக்கு நூறு வயச எட்டித்தொடப்பொற வயசிருக்கும்ன்னு/அது போலான அபூர்வ வகைமரங்கள அங்கன பாத்துக்கிறலாம் /

ஒருநாமெனக்கெட்டுப்போயிசைக்கிள் எடுத்துட்டுப்போயிஎண்ணிப்பாத்தேன், மரங்கள/ எப்பிடியும் ஒரு முப்பதுமரம்வரைக்கும்இருக்கும் சார். பெரும்பாலும் வேற வேற ரகத்துல இருக்குற மரங்க சார்,ஒண்ணொன்னும் கருத்து பருத்துப் போயி பூவும் பிஞ்சும் யெலைகளுமா நெற மாசமா நிக்கிறது போல இருக்கு அப்பிடியே போயி கட்டிப்பிடிச்சிறலாம் போல இருந்துச்சி அதப்பாத்த கணத் துல/அது போலான அபூர்வவகி மரங்கள அங்கன பாத்துகிறலாம் பாத்துக்கங்க/

,அதவிட்டா இந்தா கொஞ்சம் தள்ளி எதுத்தாப்ல இருக்குபாருங்க,மர அறுவை மில்லு,அதுக்குள்ள இருக்கும் நெறைய மரங்க ரக ரகமா,அத ஏன் கேக்குறீங்க சார்,மரம்ன்னா மரம் அப்படி ஒரு மரம் பாத்துக்கங்க,அசந்து அங்கனயே கொஞ்ச நேரம் நின்னா வேர் விட்டுப்போற மரத்தோட மரமா சேந்து நம்ம ளயும் கணக்குல வச்சிருவாங்கங்குற பயத்தோடதான் அங்க போயி வர வேண்டியிருக்கும்.

அப்பிடிப்போன ஒரு நாள்லதான் மரக்கடை மொதலாளி சொன்னாரு. என்ன தான் நான் மரத்த அறுத்து வித்தப்பக்கூட கெடைக்காத சந்தோஷம் இதுகள வளக்குறதுல கெடைக்குதுன்னு சொன்ன மொதலாளி மரங்க அறுக்குற கொட்டகைக்குப் பக்கத்துலதான் நின்னாரு.

உருட்டையான பெரிய மரத்தடி ஒண்ணு படுக்கையில படுக்க வச்சது மாதிரி போயிக்கிட்டுஇருக்கு,அதுஇருக்கும்,நாலடிஒசரத்துக்காவது.ரெண்டு ஆளுக்கு மேலசேந்துபுடிச்சாத்தான்அதகட்டி அணைக்க முடியும் போலயி ருக்கு.

அப்பிடி ஒரு தடி உருட்டையா பெரிசா வந்துக்கிட்டு இருக்கு மிசின்ல,இவர் பக்கத்துல நின்னுக்கிட்டுகூலி ஆளுகளோட ஆளுகளா பேசிக்கிட்டு வேட்டிய மடிச்சிக்கட்டிக்கிட்டு வேலை செஞ்சிக்கிட்டு இருந்தாரு,அவரு மரத்தத் தொட்டு மிசினுக்குள்ள தள்ளி அத அறுத்து துண்டு துண்டா போடுற நேரம் மர மிசினுக்குப்பக்கத்துலயேஇருந்ததகரக் கொட்டாகைக்குப் பக்கத்து லயே நின்னுக் கிட்டிருந்த வேப்பமரம் பூவும் பிஞ்சும் காயுமா நெறஞ்சி சிரிக்குது பாத்துக்கங்க,,,,,என்ற அவர் மில்லுல கொஞ்சம் யெடத்த அடைச்சாப்ல மரங்க நின்னப்பக்கூட அதப்பத்தி அவரு பெருசா கவலப்பட்டுக்கிடல,நிக்கட்டுய்யா மரங்க, புள்ளைக போல அதுக/ புள்ளைகளப்போல பாதுகாக்காக்காட்டிக் கூட அதுல பாதி அளவுக்காவது அக்கறை வச்சி பாதுகாக்கணுமில்லையா என்பார் முதலாளி.

அந்த பாதுகாப்பு இன்னிக்கு வரைக்கும் அவர் கிட்ட இருக்கு சார். இன்னைக்கி நீங்க போனாக்கூட பாக்கலாம் என்பார் பாய்/

இந்த ஏரியாவுல இங்கன ரெண்டு யெடத்துல மட்டும்தான் மரங்க நிக்குது, அடர்த்தியா, அத விட்டா மரங்களப்பாக்கணுன்னா நீங்க அருப்புக்கோட்டை இல்லைன்னா சாத்தூர் ரோடு போனா உண்டு என்பார் மரங்களைப் பற்றியான பேச்சை அவருடன் அசை போடும் போது/இது போக அங்கன அங்கன ஒண்ணு ரெண்டா தனித்தனியா நிக்கிறதெல்லாம் தனி.என்பார் பாய்,

வாரவாரம்புத்தகம் வாங்கவந்த போது ஏற்பட்ட நட்பு அது எனச்சொல்லலாம். அவர் விற்கிற எத்தனையோ புத்தகங்களில் இவன் வாராவாரம் வாங்குவதை வைத்தே இவனின் டேஸ்ட் என்ன என்று கண்டு கொள்கிறார்.பின்னே ஆறாண்டு பழக்கத்தில் இது கூட இல்லையென்றால் எப்படி,,,,?அவரிடம் புத்தகம்வாங்க வருகிற தினங்களில் எப்பொழுதாவது இவன் கையில் காசில் லாமல் இருந்ததுண்டு.அப்பொழுதெல்லாம் இவன் புத்தகம் வாங்கிக்கொண்டு நாளை தருகிறேன் காசு எனக்கூட சொன்னதில்லை.காசு இல்லை பாய் என்பான் அவ்வளவுதான்.அவரும் அதனால் என்ன வாங்கிக்கொள்கிறேன் நாளைப்பின்னே என்பார்.

அவரிடம் புத்தகம் வாங்கி பையில் வைத்த கையோடு அவரது கடையின் பக்கத்தில் இருக்கிற கடையில் ஒரு டீயும் வடையுமாக சாப்பிட்டு விடுவான் பெரும்பாலுமாக/

பேச்சு வாக்கில் அவர் படித்த பள்ளியை சொன்ன போது என்ன பாய் சொல் கிறீர்கள் நானும் அந்தப்பள்ளியில்தான் படித்தேன்.என்று சொன்ன இவனை அப்படியா எந்த வருடம் எந்தக்கிளாஸ்,என்கிற அவரது கேள்விக்கு இவனிடம் சரியான பதில் இல்லை.சற்றே கூட அல்ல ரொம்பவே ஞாபகப்பிசகாகிப் போனது.இவன் படித்த போது இருந்த ஹெட் மாஸ்டர், அசிஸ்டெண்ட் ஹெட் மாஸ்டர்,பி டி மாஸ்டர்,தமிழ் டீச்சர்,ஹிஸ்ட்ரி வாத்தியார் குறிப்பாக என் சி சி மாஸ்டர் என எல்லோரையும் உருவகப் படுத்திய போது ஆகா அப்டீன்னா நீங்க என் சி சி ல இருந்தீங்களா சார்.என பாய் கேட்டபொழுது ஆமாம் பாய் ஒரு நா அதிகாலையில நடந்த என் சி சி பெரேடுல அன்னைக்கு என் சி சி ய பார்வையிட வந்திருந்த சிறப்புப்பார்வையாளர்கிட்ட இவனைக்காட்டி இவன் மட்டும் போலீஸ் இல்ல ஆர்மிக்குப் போனா ஒடனே செலக்ட் பண்ணிருவா ங்க எனச்சொன்னதை இவன் நினைவு கூர்ந்த போது என்னையும் அப்படிச் சொல்லியிருக்கிறார் என்றார் பாய்.

முன்னயெல்லாம் அப்பிடி பிட்டா இருந்தவந்தான சார் இப்ப இப்பிடி தொந்தி வச்சி பஞ்சுப்பொதி போல ஆயிட்டேன்,

கல்யாணம் முடிஞ்சி ரெண்டாவது பொண்ணு பொறந்ததுக்கு பெறகும் கூட பிட்டா இருந்தேன் சார்,அதுக்கபறம்தான் இப்பிடி ஆகிப்போனேன் .

ஏங் மாமியாரு வீடு உள்ளூர்லதான் இன்னும் சொல்லப்போனா நான் குடியிரு க்குற தெருவுக்கு அடுத்த தெருதான்.

ரெண்டாவது மக சிசேரியன் ஆபரேஷன்ல்தான் பொறந்தா,பதினைஞ்சி நா ஆஸ்பத்திரி பாடு. மாமியாரு வீட்ல இருந்து கூடச்சொன்னாங்க ஏங் மகள நான்பாத்துகிருறேன்,ஏங் வீட்ல கொண்டு வந்து விட்டுருங்கன்னு. எனக்குத் தான் அப்பிடி வேணாம்ன்னு தோணுச்சி.ஏங் வீட்டம்மாவுக்குக் கூட விருப்பம் தான் அப்பிடி போகலாம்ன்னு, ஏங்கிட்டக்கூட சொன்னா ஒங்களுக்கும் நேரா நேரத்துக்குஅங்கஇருந்து சாப்பாடுகுடுத்துவிடுறோம்ன்னு,,,,,சரியில்லைன்னு சொல்ற ஒரு விஷயத்த எத்தன தடவை யாருசொன்னாலும் கூட அது தட்டிப் போயிருந்தான,அப்பிடித்தான் தட்டிப்போச்சி,

ஏங்மாமியாருதனியாளா இருக்காங்க மாமனாருகெடையாது,யெறந்துட்டாரு, வீட்டம்மா கூடப்பெறந்த பயல்க ரெண்டு பேரும் கல்யாணம் முடிச்சி வெளியூர்லஇருக்காங்க.

ஒருத்தன் ரியல் எஸ்டேட் பண்றான், இன்னொருத்தன் செருப்பு பிஸினஸ் மாசத்துல பதினைஞ்சி நாளு லையனுக்குப் போயிருவான்,மீதி நாளுதான் இங்க இருப்பான்.

ரியல்  எஸ்டேட்  பண்றவனுக்கு  ரெண்டு  பொம்பளப்புள்ளைங்க,  செருப்பு
பிஸினஸ்லஇருக்குறவனுக்குபொண்ணொன்னு,ஆணொன்னு,,,,,,இருக்காங்க,  அதுவரை க்கும்சந்தோஷம்தான் அவுங்களுக்கு/

அவுங்க ரெண்டு பெருக்கு பொழப்பபாக்கவே நேரம் இல்லாதப்ப எங்க வந்து அம்மாவப்பாக்க,,,,,,அவுங்க பொழப்பு அவுங்களுதுன்னு ஆகிப்போச்சி,,, இந்த நெலையில ஒத்தையில இருக்குற அவுங்க கிட்ட கொண்டு போயி விட்டு வந்தா நல்லாவா இருக்கும்.அவுங்க பாடே பெரும்பாடா இருக்குன்னு சொன்ன பாய் நாந்தான் எல்லாம் பாத்தேன்,நல்ல வேளையா நாங்க குடியிருக்குறச் தெருவுல இருக்குற எங்க அம்மா வந்து கூட மாட சோறுபொங்கசெய்யன்னு ஒத்தாசையாஇருந்தாங்க,என்னதான்வந்து அவுங்க ஒத்துழைச்சாலும்கூட துணி தொவைக்கிறது,தண்ணி எடுக்குறது எல்லாம் நாந்தான்னு ஆகிப்போச்சி/

வீட்டுக்குள்ளஇப்பப் போல பைப் கனெக்‌ஷனெல்லாம் கெடையாது. இப்பத் தான அஞ்சி வருசத்துக்கு முன்னாடி வீட்டுக்குள்ள போர்ப்போட்டு மொட்டை மாடியில டேங்க வச்சி பைப் லையனெல்லாம் இழுத்து கனெக்‌ஷன் குடுத்தம். அதுக்கேஓடிபோச்சி அரைலட்சத்த எட்டி,,,,,,,,/

அதுக்கு முன்னாடி தெருக்குழாய் தான் கெதி,விடியக்கால நாலு மணிக்கெல் லாம் எந்திருச்சிருவேன். அந்நேரம் ஒருடீக்கடைகூட தெறந்திருக்காது. பாத் துக்கங்க,தெருவேவிரிச்சோடிக்கெடக்கும் தூரத்துல பால்க்காரரோட சைக்கிள்ச் சத்தம் மட்டும் கேக்கும்/அவ்வளவு நீளமான தெருவுல நான் மட்டும் அடி குழாய்ல தண்ணி அடிச்சிக்கிட்டு இருப்பேன்.

விடியக் காலைங்குறதுனால குழாயடி ஆளில்லாமத்தான கெடக்கும், அங்கன யே வச்சி துணிகளத் தொவைச்சிருவேன்,அதுக்குக்கூட தெருவுல முனுமுனு ப்பு வந்துச்சி,அப்பிடி முனுமுனுப்பு வந்தமறு நாள்ல இருந்து தெருக் கொழா யில துணி தொவைக்கிறத விட்டுட்டேன்/ஆனா அது விட்டு ரெண்டு நாக்கூட ஆகல,பக்கத்து வீட்டு மாமி வந்துதான் சொன்னாங்க,தம்பி நீங்க சும்மா தொவைங்க கொழயடியில, எவ என்ன சொல்லறான்னும்,எவ நாக்கு மேல பல்லுப்போட்டு பேசுறான்னும் பாத்துக்கிறேன்னாங்க.

அவுங்கசொல்லீட்டாங்களேன்னு ஒடனடியா வந்துட முடியுமா,,,?ஒரு ரெண்டு நாக்கழிச்சித்தான்தெருவோடதட்பவெட்பநிலையெல்லாம் பார்த்துட்டு திரும்ப வுமா தெருக்கொழாயில தண்ணி அடிக்க,,,தண்ணியடிச்சி துணியெல்லாம் தொவைச்சிற ஆரம்பிச்சேன்/

தெருக்கொழாயில போயி தண்ணி அடிக்கவும்,துணி தொவைச்சிகாயப் போட பளபளன்னு விடிஞ்சிரும்.அப்பிடியே கையக் கால கழுவீட்டு தெரு மொனை யில இருக்குற டீக்கடையில போயி துக்க்கு வாளியில டீ வாங்கீட்டு வரு வேன்/ பாலெல்லாம் வாங்கி டீப்போடுற அளவு க்கு எனக்கு நேரமிருக்காது.

காலையிஏழரைமணிக்கு கடைதெறக்கப் போகணும்.ஒரு அரை மணி முன்னப் பின்ன போறதுனால ஒண்ணும் இல்ல, இருந்தாலும் இன்ன நேரத்துக்கு கரெக்டா இவரு கடை தொறப்பாருன்னு ஒரு பதிவு வேணுமில்லையா அதுக்காகத்தான் இது.

டீக்கடைக்குபோயி வாளி நெறையா பார்சல் வாங்கீட்டு வந்துருவேன்.அமயம் சமயத்துல நானும் ஒரு டீக்குடிச்சிக்கிருவேன் கடையில வச்சே/

நான் டீ வாங்கீட்டு வரவும் எங்க வீட்டுக்கு அம்மாவரவும்சரியா இருக்கும், .அப்பிடியேஅம்மாகிட்டயும்,பொண்டாட்டிகிட்டயும் வீட்ட ஒப்படைச்சிட்டு அடுப்புல குக்கர ஏத்தீட்டு குளிச்சி முடிச்சி வந்துருவேன் என சுய கதை அவிழ்க்கிற பாய் கடையிலிருந்து அப்படியே நூல்ப் பிடித்துக்கொண்டு வட திசைப்பக்கம் சென்றால் சாத்தூர் செல்லலாம். தென் பக்கமாக சென்றால் ரயில்வே ஸ்டேசன் போய் விடலாம்.இதில் எது பக்கம் என்பதை விட எங்கு போவது முக்கியம் என்பதே பிரதானப்பட்டுத் தெரிகிறதாய்/

வடபக்கமாய் போய் பஸ்ஸேறிப்போவதை விட தென் பக்கமாய் போய் ரயிலேறி சாத்தூர் போய் இறங்கிவிடலாம் என்கிறார் அங்கிருந்து வருகிற ஒரு தனியாய் நிறுவன ஊழியர்.

அவர் போட்டிருக்கிற வெள்ளைச்சட்டை போல் வெள்ளையான மனதையும் எப்பொழுதும் சுமந்து கொண்டு திரிபவர். அதிலிருந்து பிறக்கிற எண்ணங் களை நெசவிட்டு சொற்கட்டுகளாக்கி எங்கும் பரவிட்டு நிற்பவர்.விழுது தாங் கிய வேர்களையும் வேர்களை விசாரிக்கும் விழுதுகளையும் அவ்வப் பொழு துமாய் நலமும் குணமுமாய் கட்டிக்காத்து வருபவர்.

அவர் சொல்கிற சொல் சரியாகத்தான் இருக்கும்.என்கிற நம்பிக்கையுடனாய் நகர்கிற நாட்களின் நுனி பிடித்து நாங்களும் சென்று கொண்டிருக்கிறோம், அவரும் வந்து கொண்டிருக்கிறார்.என்பதாய் வருகிற நினைவு தவிர்க்க முடிய வில்லை.

அப்படி அவரை வண்டியேற்றி விடப்போன ஒரு நாளில் வண்டி ஏதோ ஒரு கோளாறாய்பாதி வழியிலேயே நின்று விடஎன்ன செய்வது என கைபிசைந்து நிற்கையில் சடுதியாய் வந்த ஒரு இரு சக்கர வாகனத்தை கை நீட்டி லிப்ட கேட்ட பொழுது வண்டிக்காரர் நான் ரயில்வே ஸ்டேஷன் செல்லவில்லை, இதோ ரோட்டின் இடது புறமாய் அமைந்திருக்கிற சந்தில் இருக்கிற லாரி ஆபீஸ் செல்லவே வந்தேன்.நீங்கள் போய் உங்கள் உடன் வந்தவரை இறக்கி விட்டு வாருங்கள்.நான் எனது வண்டியைத்தருகிறேன்,அதுவரை தங்களது வண்டிலாரிஆபீஸ்முன்வேண்டுமானால்நிற்கட்டும்.உங்களுக்கு சம்மதமென் றால் லாரி ஆபீஸிலிருந்து நான்கு கட்டிடம் தள்ளியிருக்கிற வொர்க் ஷாப் மெக்கானிக்கை வந்து பார்த்துவண்டியை சரி செய்து வைக்கச்சொல்கிறேன் என அவரது வண்டியின் சாவியைக்கொடுக்கிறார்.

யார் இவர்,என்னை எங்கு பார்த்திருப்பார் ,என்னுடைய எந்தசெயல் இவருக்கு நம்பிக்கைதந்திருக்கும்?தெரியவில்லைசட்டெனஞாபகம்வரவில்லை. ஞாபக அலைகளில்ஏதோதடைச்சுவராய் எழும்பி நிற்கிறது. நிற்கட்டும் நிற்கட்டும் எத்தனையோதகர்ந்து போகிற போது இது தகர்ந்து போகாதா என்ன என்கிற சொல் யோசனையுடனும் எண்ண விளைச்சலுடனுமாய் சென்று திரும்பிய வேளையில் லாரி ஆபீஸ் வாசலில் நின்றவர் வண்டியை சரி பார்த்து வைத்திருந்தார், ரிப்பேர் செலவுக்கானபில்லை கையில் கொடுத்தவாறு/

இப்பொழுது என்ன சார்,கையில் பணமில்லை என்றால் நாளைப் பின்னே கொடுங்கள், அதனால் ஒன்றுமில்லை,உங்களை எனக்குத்தெரியும் முழுதாக இல்லா விட்டாலும் கூட அரை பாதியாவது தெரியும்.உங்களை நிறைய இடங்களில் பார்த்திருக்கிறேன்,உங்களைப்பற்றி கேள்விப்பட்டிருக்கிறேன். உங்களின் மூலத்தோற்றமும் பரவி ஓடிக் கொண்டிருக்கிற நதி மூலமும் நான் அறிவேன் ஓரளவிற்கயினுமாய்,,,/ஆகவேதான் இந்த உதவியை தயங்காமல் செய்கிறேன் எனச்சொன்ன நேரம் ஐந்து பத்து ரூபாய் நோட் டுக்கள் காட்சிப்பட்டு நிற்கின்றன.இவனில்/

பொதுவாகஇதுபோலாய் செய்த வேலைக்கு கூலியாய் தருகையில் முழுதாய் தருவதுதான் இவனது பழக்கமாய் இருந்துள்ளது.அது என்னவெனத் தெரிய வில்லை.சில்லறை நோட்டுக்களாய் தருவத ற்கும் முழுத்தாளாய் தருவதற்கு மாய்இருக்கிறமனமாச்சரியவித்தியாசங்களைநிறையவேகண்டுவியந்திருக்கிறான். கேள்விப்பட்டுமிருக்கிறான்.

இப்படித்தான்ஒரு மழை நாளில் அருப்புக்கோட்டையிலிருந்து வந்து கொண்டி ருந்த சாய்ங்கால பொழுதில் வெழுத்திருந்த வானம் இருட்ட ஆரம்பித்து விட்டது. ஆகா சிக்கலாயிற்றே மழை பெய்தால்,,,,,,என நினைத்த நினைவின் அழுத்ததுடன் வண்டியின் ஆக்ஸிலேட்டரை இறுகப்பற்றி திருகிய போது வேகம்காட்டிச்சென்ற வண்டி சிறிது தூரம் சென்றதும் முன் டயரை வெடிக்கச் செய்து விடுகிறது தன்னையறிந்து/

முன் டயர் வெடித்ததும் யாரோ எப்பொழுதோ சொன்னது ஞாபகம் வருகிறது. வண்டியின் ஓட்டத்தில் முன் டயர் வெடித்து விட்டால் வண்டியை ஓரமாக இழுத்துக்கொண்டு போய் விடும் எனச்சொன்னது ஞாபகம் வர வண்டிக்கு உடனே பிரேக்கிட்ட போதும் அது ரோட்டின் ஓரத்திலிருந்த ஓடையை நோக்கி வண்டியை இழுத்துக்கொண்டு போய் விட்டது.

இவன்,ஓடை,காலடியில் நழுவிச்செல்கிற சாலை,மேகம் கப்பிய சாய்ங்கால வேளை,சில்லிட்டகாற்றுஎன்கிற பரிமாணங்கள் கைகோர்த்திருந்த வேளை யில் விருட்டென ஓடையை நோக்கி நகர்ந்த வண்டி ஓடையின் கரை ஒரம் ஒதுங்கி நின்று விட்டது.

அதுஇவன்பிரேக்கிடதாலா அல்லது தானாக நின்று விட்டதா தெரியவில்லை. எதுவாயினும் நின்று விட்டது நல்லதாகவே ஆகிப் போனது.

இந்நேரம்ஓடையில்விழுந்திருந்திருந்தால் உடலெல்லாம் முள்கீச்சி கண்டிப் பாக ஒரு சின்ன சிராய்ப்பாவது ஏற்பட்டிருக்கும்.எந்த சாமி புண்ணியமோ அல்லது சாமி கும்பிடுபவர்களை சாமியாக நினைக்கிற புண்ணியமோ தெரிய வில்லை.காப்பாற்றப்பட்டு விட்டான்தான்.

மேவிப்போயிருந்த ஓடை ஒன்றும் ஆபத்தை ஏற்படுத்திவிடப்போவதில்லை என்றாலும் கூட அடியும் புறமும் தெரியாமல் முளைத்துப் போயிருந்த முட் செடிகளை நினைக்கிற போது தான் பயமாகிப்பட்டது மனதில்/

அந்த பயத்தையும் படபடப்பையும் உள்ளின் உள்ளுக்குள்ளாக மூடிவைத்து விட்டு சக்தியண்ணன் கடைக்கு போன் பண்ணினான். அவரது கடையின் அருகிலிருக்கும் வொர்க் ஷாப்க்காரருக்கு தகவல் சொல்லி வரச்சொல்லி,,/

என்ன வேகத்தில் சக்தியண்ணன் தகவல் சொல்லி என்ன வேகத்தில் வொர்க் ஷாப்க்காரர் வந்தார் எனத்தெரியவில்லை.இவன் போன் பண்ணிய கால் மணிக்குள்ளாக வந்து நின்றார் சக்தியண்ணன் கொடுத்த நூறு ரூபாய் நோட் டோ டு/

சக்தியண்ணனும் பாயைப் போலவே பழக்கத்தில் கிளைத்த நல்ல நட்பாய்/

6 comments:

 1. நல்ல மனம் படைத்த மனிதர்கள்...

  இணைத்த படம் ஆகா...!

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் திண்டுக்கல் தனபாலன் சார்
   நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/

   Delete
 2. நல்ல மனம் வாழ்க புகைப்படம் ஸூப்பர் நண்பரே
  தமிழ் மணம் 3

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் கில்லர் ஜி சார்,
   நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/

   Delete
 3. கட்டுரைக்கு முத்தாய்ப்பு புகைப்படம். வாழ்த்துகள்.

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் டாக்டர் ஜம்புலிங்கம் சார்,
   நன்றி வருகைக்கும் கருத்துரைக்குமாக/

   Delete