14 Feb 2016

மஞ்சள்த்தரை,,,,,

எதிரில் அமர்ந்திருந்த அவள் முகம் அப்பொழுதுதான் மலர்ந்திருந்தபூப்போல பூத்துக்குலுங்கிசிரிக்கிறதாக/

வட்டவடிவமானசின்னமுகத்தில் அப்பொழுதுதான் மஞ்சள் பூசிக்குளித்திருந் ததுபோலவும்,சரியாதுவட்டாதகூந்தலில்காதோரமாய் நரைத்துச் சுருண்டிருந்  த ஒற்றை நரை முடியில் இறங்கிச் சொட்டிய தண்ணீர்த் துளியின் கடைசிச் சொட்டு கீழே விழஅனுமதி கேட்டு நிற்பது போலவுமாய் தெரிகிறது.

ஜன்னல் கம்பிகளின் ஊடாக வந்திறங்கி வர்ணம் காட்டிய காலை நேரசூரிய வெளிச்சம் தரையில் பிரதிபட்டுத் தெரிவதாகவே உணர முடிகிறது.

நெற்றியில்ஒன்றிரண்டாய் புரள்கிற நரை முடியும்,காதோரமாய் இறங்கிச் சரி கிறநரைமுடிகற்றையும்ஏதோஒருஒற்றுமையைஉணர்த்திவிட்டுச்சென்றதாக/ கட்டியிருந்த புடவையில் மலர்ந்து சிரிக்கிற பூக்களில் ஒன்றிரண்டு தன் கவனம் மீறி கீழே விழுந்து விடுவோமோ என்கிற எச்சரிக்கையுடன் ஒட்டிக் கொண்டிருப்பதாகவும் ,புடவையில் நாற்றாங்கால் இட்டிருப்பதாயும்/

அதிகாலையில் எழுந்து வாசல் தெளித்து கோலமிடுகையில் நடமிடுகிற 
கையும், உயர்மனரசனையும் அவளில் எப்பொழுதும்வெளிப்பட்டுத் தெரிவதா க வே/

வரைமுறைகட்டி இழுக்கப்படுகிற கோடுகளும்,அதனுள்ளே ஆங்காங்கே இடப் படுகிற புள்ளிகளும் சிறிது நிமிடங்களில் வாசலின் முன் தோற்றத்தை மாற்றிப் போட்டு விடும் புதிதான ஒன்றாக/

நான்குபுள்ளியிலிருந்துஎத்தனையோ புள்ளிகள் ,கோடுகள்,கட்டங்கள் அடர்ந்த பார்டர்கள் கலர் பொடிகள்,,,,,,என இத்தியாதி இத்தியாதியாய் சின்ன வாசலின் முன்பாக அவள் கலர் காட்டியும் அது அல்லாமலும் வரைகிற கோலம் தினந் தோறும் காலையில்நட்டுவைத்த செடி போலவும்,ஊன்றி நீரூற்றி வளர்த்த மரம்போலவுமாய் காட்சிப்பட்டுத்தெரிவதுண்டு.

இவன் கூறியதான ஞாபகமா அல்லது அவளாக தெரிந்தெடுத்துக்கொண்ட தெரிவா என ஞாபகமில்லை சாரியாக/சும்மா வெறும் தண்ணீர் கொண்டு தெளிப்பானேன் வாசலை.அதில் கொஞ்சம் மஞ்சள் பொடியை மிகைப்படாமல் கலந்து தெளித்தோமானால் வாசல் கொஞ்சம் நன்றாககாட்சிப்பட்டும் மஞ்சள் வர்ணத்தில் கண்ணடித்துமாய்/

பார்த்ததுதான்சில பல இடங்களில்,பெரும்பாலுமாய் இவன் பார்த்தது அருப்புக் கோட்டைசாலைசெல்லும்வழியில்ரோட்டின் இடது ஓரம் சற்றே உள் வாங்கி தன் கம்பீரம் காட்டி அமர்ந்திருக்கிற திருமண மண்டபத்தின் வாசலில் தான். பெரியதானமண்டபத்தின்தோற்றத்திற்கேற்ப பெரியதான வாசல் ,அதை வாசல் என அவர்கள் சொல்லா விட்டாலும் கூட அந்த மண் வெளியே வாசலாய் மாறி பிளக்ஸ் பேன்னர்களும்,அலங்கார வளைவுகளும் வைக்கப் படுகிற இடமாய் காட்சிப்பட்டுப்போனது.

சரி அப்படியான இடத்தை மண்ணின் இயற்கை நிறத்திலேயே சும்மா விடுவா னேன் அன்றாடம் தெளிக்கிற தண்ணீரில் கொஞ்சம் மஞ்சள் பொடிகலந்து தெளித்து விட்டால்தரை நிறம்மாறித்தெரியும்தானே என்கிறஉயர்ரகஉத்தியில் செய்த வேலையாகக்கூட இருக்கலாம்/ஆனால் அவ்வளவு பெரிய வாசலுக்கு அவ்வளவு தண்ணீரை எப்படிசளைக்காமல் தெளிக்கிறார்கள் என்பது தெரிய வில்லை.

முதன் முதலாய் அங்கு பார்த்ததற்குப்பின்னாலும் அது இவனது கண்ணுக்கு பாரிய அழகாய் காட்சிபட்ட பின்புமாய் சில இடங்களில் வீடுகளின் முன்னா யும் பார்க்க நேர்ந்ததன் விளைவு அம்மாதிரியான மஞ்சள் நிற பவுடர் எங்கு கிடைக்கும் என தேட வைத்து விட்டது.

அது மஞ்சள் பவுடர் இல்லை,அதன் பெயர் சாணப் பவுடர், இன்றிலிருந்து அப்படியே பெயர் மாற்றம் செய்து கூப்பிடுங்கள். இல்லையெனில் ஏதாவது பிழையாகிப்போகும் என்றறிவித்தவர்கள் என்ன விலையில் எங்கு கிடைக்கும் எனச்சொல்ல மறந்து போனார்கள்.இவனும் இவன் குடியிருக்கிற ஏரியாவில் இருக்கிற கடைகள் முழுவதுமாய் அலசித்தேடிய போது எங்கும் கிடைக்காம ல் பஜாரில் கிடைக்கிறதென வாங்கி வந்து தண்ணீரில்கலந்து வாசலில் தெளித்த போது தெரிந்த அழகு வாசலை யாரும் கண்வைத்துவிடக்கூடாதே என கவலை கொள்ளவைத்து விட்டது.நெருக்கிப் பூசியிருந்த மஞ்சளின் மத்தியில் பூத்துத்தெரிந்த கொடிபோல் காட்சிப்பட்ட கோலத்துடன் தெரிந்ததா கவே உணர்கிறான்.

வாங்கி வருகிற பாலின் அளவுகொஞ்சமேயானாலும் பணியை முடித்த கையோடு சென்று வாங்கி வருகிற பாலில் மணம் கொஞ்சம் தூக்கலாகவே உணர முடிகிறதாகித்தெரிகிறது.போக வேண்டிய தூரம் நிறையத்தான் என்றா லும் வீட்டிலிருந்து சிறிது தூரம் போய்த்தான் வாங்க வேண்டியதிருக்கிறது பாலை.

வாங்குற பால் விலை கொடுத்தா அல்லது இலவசமாகவா என்கிற சந்தேகம் சமயா சமயங்களில் முளைத்துப்போய் விடுகிற அளவிற்காய் பட்டுத்தெரிகிற அவர்களது பேச்சு வாங்கப்போனஅளவை விடஇன்னும் கொஞ்சம் பாலை அதிகமாகவே வாங்க வைக்கும்.அப்படியாய் வாங்கிப்போன தினங்கள் இவர்க ளது வீட்டின் காலண்டர்களில் நிறைந்து குறித்து வைக்கப்பட்டிரு ப்பதாய்/

இயந்திரங்களை பார்த்திருக்கிறோம்தான் நிறைய,ஆனால் இப்படியாய் கை கால்முளைத்த ரத்தமும் சதையுமான இயந்திரத்தை இவர்கள் பால்வாங்கும் வீட்டில்தான் பார்க்க முடிந்திருக்கிறது.

ஐந்துமாடுகள்வரிசை கட்டி நிற்கிற இடத்தில் அதிகாலையின்மூன்றுமூன்றை மணிக்கெல்லாம் சுழியிடுகிற அவர்களது உழைப்பு ஓரிடத்தில் புள்ளியிட்டு முடிய மணி ஒன்பதை நெருங்கிவிடும் எனக் கேள்விப் பட்டுள்ளான். மிகவும் அவசரப்பட்டு சீக்கிரமாக முடித்தால் எட்டு முப்பதில் ஆகும் எனவும் சொல் வார்கள்.அதற்கப்புறமாய் அவர் குளித்து முடித்து வேறு வேலைக்குச் செல்கி றார்.

அவரை அனேகமாக பெரும்பாலானவர்களுக்குத் தெரிந்திருக்கிறது. அப்படித் தெரிந்திருந்தவர்கள்அனைவரும்அவரைப்பால்க்காரர்என்றுதான்சொல்கிறார்கள், கூப்புடுகிறார்கள்,பேசுகிறார்கள்.

வாங்க பால்க்காரரே, என்ன பால்க்காரரே, எப்பிடியிருக்கீங்க பால்க்காரரே ,,,,,,, என்கிற பேச்சுக்களில் நிறைந்து தெரிந்த வாஞ்சையும், நெருக்கமும் அவரது பெயரை மறக்கச் செய்து விட்டிருந்தது.அவருக்கு மட்டும் அல்ல இந்த நிலை அவரதுமனைவிக்கும் இதே நிலைதான் எனச்சொல்லவும் வேண்டுமா என்ன,,? அவரது பெயர் தெரிந்தவர்கள் அவரது மனைவியும் பிள்ளைகளாகவும், மனை வியின் பெயர்தெரிந்தவர் அவராகமட்டும்தான் இருப்பார் எனகருதுமளவிற்கு/

வாங்கி வந்த பால் இடைவெளி காட்டிக்காட்டி பாத்திரத்தில் பொங்கிச்சரிந்த வேலையில் சிவப்பு நிறத்தில் எரிந்த நெருப்புச் சுடர்களை சற்றே குறைத்து சிம்மில் எரிய வைத்து ஊதாக்கலராக மாற்றிவிட்ட இடைவேளையினூடாக வந்தமர்ந்த பொழுது இவன் படுக்கையை விட்டு இன்னும் எழுந்தமராத பொழுதாக இருக்கிறது.

பின்னிரவில்தூங்கியதூக்கம்முன்காலையில்எழுந்திருக்கமனமற்றுதூக்கத்தை தொடரச்செய்து விடுகிறது.எதன் காரணமாகவோ அல்லது என்னவோவெனத் தெரியவில்லை. தூக்கம் தொலைந்து போன பல இரவுகளைப் போல நேற்றும் தொலைந்து போன தூக்கத்தை எட்டிப்பிடிக்க மனமின்றி விழித்துக்கொண்டே படுத்திருந் தான் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைப்பார்த்துக் கொண்டும் அதை அணைத்து விட்டுமாய்/

தூக்கம்மறந்த விழிகள் இரண்டும் ஒருவழியாக பெரிய மனது பண்ணிதூக்கத் தைஎட்டிப்பிடித்த நேரம்இரவு இரண்டுஅல்லது இரண்டரையாக இருக்கலாம். அந்நேரத்திற்கு சற்றுமுன்பாக தொலைக்காட்சியில் சிரிப்பூட்டிய நகைச் சுவை நடிகரின் நினவும் அவரின் சிரிப்படங்கிய பேச்சுமாய் தூங்கிப்போன வேளை சற்று கழித்து வந்து விட்ட விழிப்பு மணி காலை நாலை என்பதை சுட்டிக் காட்டுகிறது,

சுற்றிச்சுழலும்சின்னச்சதுரத்திற்குள் இருந்த சின்ன முள்ளும் பெரிய முள்ளும் விநாடி முள்ளை விடாப்பிடியாக கைகோர்த்து அழைத்துக் கொண்ட படிமணி அறிவித்துச்சென்றுகொண்டிருக்கிறதுதான்ஓயாமலும் ஒழியா மலுமாய்/

ஓயாததுசரிஒழியாமல்ஏன் இருக்க வேண்டும்.என்கிற கற்பனையும் சொல் லும் உதைக்கிறதுதான் மனதை எட்டி/

விழிப்புகொள்ளசெய்துவிட்ட நாலு மணி திரும்பவுமாயதூக்கத்தைக்கொண்டு வந்துதரநாலரை மணியாகிப்போகிறது.நாலரை என்பது சரிதான், ஆனால் அது விழிப்பு வந்து விடுகிற அதிகாலைப்பொழுதல்லாவா,இருக்கட்டுமே என்ன அதனால் இப்பொழுது,அதிகாலையோ,பின் மாலை பொழுதோ இருக்கட்டும் அதனதன் தனித்தன்மையுடனும்,என நினைத்து தூங்கச்செல்கிற வேளை லேசாக எடுத்திருந்த பசி அதிகம் காட்டிச்செல்கிறதாய் தோணுகிறது.

அதுஎதனால்அப்படி எனத் தெரிய வில்லை.பசிக்கிறதுதான்இப்படியாய், ஒன்று அதிகாலை வேலையில் அல்லது நடு இரவிலாய்/

அல்சர்வந்தநாட்களிலிருந்துஇப்படித்தான்பாடாய்ப்படுத்துகிறது.சரி சாப்பிட்டு விடலாம் கொஞ்சமாக இல்லயெனில் பசியில் சுழியிட்ட வயிறு வலியில் போய் புள்ளிவைக்கும்.சமயத்தில் கோலமும் இட்டுவிடும். அப்படி யாய் கோல மிட்ட எத்தனையோ இரவுகளில் அரசு ஆஸ்பத்திரியின் அவசர சிகிச்சைக்குப் பிரிவிற்குப்போய் மருத்துவம் பார்த்துவிட்டு வந்திருக்கி றான். அப்படியான விடியலாக இது ஆகி விடக்கூடாதே என்கிற எண்ணத்தில் குக்கரின் மூடியை திறந்தபோதுகுக்கரின்அடிப்பாகத்தில்கிடந்தசாப்பாடு இரு கையளவு இருக்கும் எனச்சுட்டிக்காட்டுகிறது.

இரு கையளவு என்கிற சொல்பதம் இவன் கண்களில் அல்லது இவனது புலனுறுப்பில் எங்காவது தட்டுப்படுமாயின் அல்லது கேள்விப்படுகிற நேரங் களிலும் இவனைப்பின்னோக்கி இழுத்துப்போய் விடுவதுண்டுதான்.

காலம்கிழித்துப்போட்டபழைய காலண்டர் தேதிகளை கஷ்டபடாமல் சேகரி த்துபின்னோக்கிச்சென்றால்காணக்கிடைக்கிற காட்சி இவன் எர்பிடித்து உழுது கொண்டிருந்ததை காட்சிப்படுத்திவிட்டுச் செல்லும்எளிதாக/

இவன்மட்டும்அல்லகிட்ணண்னன்,மலைச்சாமி,ராயப்பன்,,,எனகாட்டுக்காரர்களோடு சேர்ந்து ஆறு பேரும் இரண்டுஏக்கர்காட்டைசெம்மை படுத்தி விதைக்க முனை ந்து கொண்டிருந்தார்கள்.

மழை பெய்து முடித்த பிறகு கல் பாவிக்கிடந்த மானாவாரிகட்டந் தரையை உழுது கீறி பயிர் முளைக்கச்செய்து விடுகிற வித்தையை ஆறுபேருமாய் செய்து முடிப்பதென எடுத்த சத்திய உத்தேசத்தை மெய்ப்பிக்க கனவு கண்டு கொண்டிருந்தார்கள்.

விதைப்பு உழவு அது,பெய்துமுடித்திருந்த மழையை நம்பியும்,இனி மேலாய் அவ்வப்பொழுது பெய்யப் போகிற மழையை நம்பியுமாய் அத்துவானமாய் விரிந்து கிடக்கிற கட்டாந்தரையில் வரகு விதைக்க வந்திருந்தார்கள்.ஊடு பயிராய் துவரை/

வரகு கம்பு போல் இருக்கிற அரிசி,துவரை என்பது துவரம்பருப்பு என அருஞ் சொற்பொருள் சொல்லாமல் பிறந்த குழந்தை கூட அறிந்து கொள்கிற அந்த பூமியில் மண்ணை நம்பியும்,மழையை நம்பியுமாய் விதைக்கப் போயிருக்கி றார்கள்.விதைக்கப்போயிருக்கிறார்களேதவிர்த்துஅதற்கான அடையாளங்கள் அந்தக்காட்டில் எங்கும் இல்லை.

காடு முழுக்கவுமாய் ஆங்காங்கே வஞ்சனையில்லாமல்முளைத்துத்தெரிந்த மஞ்சனத்திச்செடிகளும் இன்னமும் பிற செடிகளும் கொடிகளுமாக/

மானாவாரிக்காட்டில் இதுதான் நடை முறை ,விதைப்பு நேரம் மட்டும் காட்டை சுத்தம்செய்து விதைத்து விட்டுவந்து விடுவார்கள்.பின் மழையும்மண்ணுமாய் கைகோர்த்துக்கொண்டு பயிரை மண் கீறி மேலெழச்செய்கிற வித்தையை காண்பித்துவிடும்.

ஆனால் இவன் உட்பட அனைவருமாக காட்டைஎட்டித்தொட்ட நேரம் காடு அம்மாதிரியான அடையாளத்தையோ,உறுதி மொழியையோ தப்பிதவறிகூட தந்து விடக்கூடாது என்கிற தோற்றம் காண்பித்துத்தெரிந்ததாய்/

காட்டில்கால்வைத்த ஆறுபேரில்நாலு பேர்கொண்டவேலையாட்கள் முதலில் காடுமுழுவதுமாய்தலையாட்டித்தெரிந்தமஞ்சனத்திச்செடிகளையும் இன்னும் பிறக்களைச் செடிக ளையுமாய் வெட்டி அப்புறப்படுத்தினார்கள்.

கொஞ்சம் கவனம் செலுத்தி செய்ய வேண்டியவேலை அது,மழையின் ஈரத் திற்கு மஞ்சனத்திச்செடிகளின்அடியில் தேள்களும் இன்னும் பிற செடிகளின் அடியில் சுருட்டைப் பூச்சிகளுமாய் கை கோர்த்துக்கிடக்கும். நம்பிப் போய் கைகொண்டுசெடியை கூட்டிப்பிடிக்க இயலாது, பின் பங்கம் வந்து விடும் உடலுக்கு,அதை கவனத்தில் கொண்டே வெட்ட வேண்டும் செடிகளை ,வெட்டி னார்கள்,வெட்டிஅப்புறப்படுத்தினார்கள்.பின் காட்டின் நான்கு ஓரங்களிலுமாய் கரையை செதுக்கி உயரம் தூக்கிக்கட்டி காட்டின் பரப்பை புதுப்பொலிவு பெறச் செய்தார்கள்.முடிந்து விடவில்லை இத்துடன் வேலை.இருக்கிறது பாக்கி, இன்னும் சொல்லப்போனால் இனிதான் ஆரம்பிக்கிறது வேலையே என்கிற உறுதிப்பாட்டுடனுமாய் வேலையை ஆரம்பித்த பொழுதுமழை பெய்துமகிழ்ந் து போயிருந்த மண் தன் பொதும்பல் காட்டி பூரித்து இடம் தந்தது.

மண்கீறிஉழ உழ இன்னும்இன்னும் என வேலை பார்க்க நன்றாக இருக்கிறது. நான்கு ஏர்கள் மொத்தமாக ஒரே இடத்தில் உழுவதற்குப்பதில் இரண்டு இரண்டுஏர்களாகபிரிந்துகொண்டார்கள். இரண்டு ஏர்கள் ஒருஏக்கர்காட்டிலும், இன்னொரு இரண்டு ஏர்கள்இன்னொருஏக்கர் காட்டிலும் ஓடி உழுது காட்டை பண்படுத்தியிருந்தது, அப்படி உழுது முடித்திருந்த நிலத்தை (காட்டை)ப்பார்த்த காட்டுக்காரர் கண்களில் நீர்க்கோர்க்காத குறையாய் அக மகிழந்து போகிறார்.

காலையில் வந்த பொழுது பார்த்த கட்டாந்தரையான பூமி உழைப்பாளிகளின் வியர்வையில் விளைநிலமாய்மாறிகாட்சிப்பட்டிருக்கிறது.கட்டாந்தரை+ஆறு பேரின் உழைப்பு+ விளைநிலம்,,,,என்கிற காட்சி விரிய மதியம் சாப்பாட்டு வேளை நெருங்கிப் போகிறதுதான்.

காட்டுக்காரர்சாப்பிட்டுவிட்டுபின்வேலைபார்ப்போம்என்கிறார்.அவர்சொன்ன
தை நான்கு பேரில் இரண்டு பேர் அரை மனதாகவும் இன்னும் இரண்டு பேர் முழு மனதுடனுமாய் ஏற்றுக்கொள்கின்றனர்.இறுதியாக சீட்டுக் குலுக்கிப் போட்டுப் பார்த்ததில்கிடைத்தமுடிவு சாப்பிட்டு விட்டே வேலையை ஆரம்பிக்கலாம் என்பதே.

இதில் காட்டுக்காரரின் கணக்கு வேறொன்றாய்இருக்கிறது. வேலை செய்கிற வர்களின் வயிறு நிறையும் பொழுது அவர்களது மனமும் நிறையும்.அப்படி அவர்கள் வாழ்த்துகிற போது விதைத்ததெல்லாம் மண்ணில் பொன்னாக மலரும் என்கிற நம்பிக்கை.

சாப்பாடு என்றால் இலை போட்டு பரிமாறி என்பதெல்லாம் கிடையாது.கரை கஞ்சிதான்.இரண்டு மண் பானை நிறைய கட்டியாக எடுத்து வந்த கம்மங்கஞ் சியும் துவையலும்தான்.சரி அதை எங்கு வைத்து எப்படி உண்பது என்கிற போது காட்டின் நடுவில் நின்ற வன்னி வேலாமரத்தின் நிழலில் அமர்ந்து சாப்பிடவேண்டியதுதான்.

காட்டுக்காரம்மா நான்கு பேரையும் அரை வட்டமாக அமரவைத்துவிட்டு ஒவ்வொருவரின் முன்பாக சுத்தமாக கழுவிய கல்லை வைத்து அதில் ஒவ்வொருகுத்தாகசின்ன அளவிலாய் துவையலைஅள்ளி வைத்துக்கொண்டு போனாள், அடுத்ததாய் உரித்த வெங்காயம்,வறுத்த மோர் வத்தல்களை பங் கிட்டு வைத்துவிட்டு கரைத்து ரெடியாய் வைத்திருந்த கம்பங்கஞ்சியை குடிக்க எல்லோருக்கும்ஊற்றுகிறாள்.கூப்பிக்குவித்தஇருகைகளேஊற்றிய கஞ்சியை ஏந்தி வாங்கும் பாத்திரமாகிப்போக கூப்பிப்பிடித்த இருகைகளுக்குள்ளாய் விழுந்த குளிர்ச்சியான கம்மங்கஞ்சியை ஒரு வாய் குடிக்க குடித்து விட்டு குடித்து முடித்த அவசரத்துடன் துவையலை ஒரு விரலால் தொட்டு நக்கிக் கொள்ள,,,,என்கிற படலத்தில் சாப்பாடு முடியும்,

இதிலிருக்கிறபெரியதும்சின்னதுமானசிரமம்என்னவென்றால்கூப்பியகைக்குள்ளாய் இருக்கிற கஞ்சி கைகளின் இடை வழி வழியே நூலாக ஒழுகும், கஞ்சி யை வாயருகேக் கொண்டு போய் உறிஞ்சிக்குடிக்கிற போது வாயைச் சுற்றிலுமாய் வட்டம் போட்டதுபோல் கஞ்சி ஒட்டிக்கொள்ளும்.இதைவிட பிரதான மான தாய் குடித்து முடித்துவிட்ட கஞ்சிக்கு துவையலை எடுக்க கையை தாழ்த்தி ஆள் காட்டி விரலை கல்லில் இருக்கிற துவையலை எடுக்க நீட்டுகையில் கையில் மீதமிருக்கிற கஞ்சி நீட்டிய ஆட்காட்டி விரலின் வழியாக வழிந்து பட்டு பூமியைத் தொடும்.

இப்படியாய் எத்தனை கஞ்சி எவ்வளவு நேரம் வீணாவதுஎன்கிற வருத்ததிற்கு மாற்றாய் காட்டுக்காரம்மாளின் யோசனை ஒன்று முன் வைக்கப்படுகிறது.

கூப்பியகையில் இருக்கிறகஞ்சியை குடியுங்கள் தயங்காமல்,ஒவ்வொருவரது ஆட்காட்டி விரலின் மீதும் பொட்டு வைத்தது போல் நீங்கள் குடிக்கிற 
ஒவ்வொரு வாய்க்கஞ்சிக்கும் துவையலை வைத்து விடுகிறேன்,துவையல் வேண்டாம் எனக்கு,வத்தலும் வெங்காயமும் தாருங்கள் என்றால் வெங்கா யத்தை எடுத்து கஞ்சிகுள்ளும்,வத்தலை எடுத்து பத்து விரல்களின் ஏதாவது ஒருவிரலின் இடுக்கிற்குள்ளாகவும் சொருகி விடுகிறேன், கடித்துக்கொள்ளுங் கள் என்றார்.

இருகையளவு கொண்ட சாப்பாட்டை எங்கும்,எப்பொழுது பார்த்த நேரத்திலும் வந்து விடுகிற இந்நினைவு தவிர்க்க இயலாததாகவே இவனுள்ளாய்/

நேற்றைக்குமுன்தினமாய் வாங்கிய அரிசி ,சோறு கொஞ்சம் குழைந்து தெரிந் தது.கடைக்காரரின்பேச்சைபோல/செயற்கைத்தனமில்லாதஅவரது பேச்சும், குழைவும் யாரையும்ஈர்க்கும். அந்த ஈர்ப்பு அவர் கொடுக்கிற அரிசியில் தென் பட்டுத் தெரியும் நன்றாக/

அந்த அரிசியில் பொங்கிய சாப்பாட்டை பார்த்து விட்டு திரும்பவுமாய் படுத்து அரைத்தூக்கத்தில் இருந்த நேரம் அடுப்பில் டீயை ஏற்றிவிட்டு இவன் எதிரில் வந்து அமர்ந்திருந்த அவள் முகம் அப்பொழுதான் மலர்ந்திருந்த பூப்போல பூத்துக்குலுங்கிச் சிரிப்பதாக/

4 comments:

 1. Replies
  1. வணக்கம் கரந்தை ஜெயக்குமார் சார்,
   நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/

   Delete
 2. மனதின் வெளிப்பாட்டு உணர்வுகள் அருமை.

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் டாக்டர் ஜம்புலிங்கம் சார்,
   நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/

   Delete