24 Mar 2016

ரோட் சைடு,,,,

உசிலம்பட்டி வரை போகவேண்டும்,உசிலம்பட்டி ஒன்றும் இவனுக்குப் புதிதி ல்லை, அல்லது இவனை உசிலம்பட்டியோ அங்கிருப்பவர்களோ புறக்கணிக் கப் போவதில்லை.

சிறுவயதில் கண்மாய்க்கரை வழியே நடந்து போய் உடன் படித்தவர்களை பார்த்துவிட்டு வந்த ஞாபகம் இன்னும் பசுமையாக வே மனதினுள்ளாக/

கூணா பாண்டி,ராணா கண்ணன்,மேனாஅழகு,,,இன்னும் இன்னுமான நிறை ந்து போயிருந்த பலர் அவனுள் பசுமை விதைத்தும் நட்புக்கோர்த்துமாய் மனதில் ஈரம் பாரித்துக்கிடந்தார்கள்.

பாடங்கள்,எழுத வேண்டியது,இன்னும் இன்னுமானதுகள் என நிறைந்து கிடக்கிற ஏதாவது வேலையின் நுனி பிடித்துக்கொண்டு வாராவாரம் போய் வந்து விடுவான் அங்கு,

என்ன நிறை கண்மாயாக தண்ணீர் இருந்தால் போக மாட்டான்,வீட்டில் தோலை உரித்து உப்பைத்தடவி விடுவார்கள். அப்பாகூட ஒன்றும் சொல்ல மாட்டார்கள்.அம்மாதான்,,,,,,,,,

கண்மாயில் தண்ணீர் இல்லாத தினங்களின் பகல் பொழுதில் சீமைக் கரு வேலை முட்கள் அவ்வளவாக முளைத்துக்காணப்படாத அத்துவான வெளி யில் ஒற்றை ஆளாக நடந்து கூடப்போயிருக்கிறான்.

இப்படித்தான் ஒருதடவை காலையில் சாப்பிட்டுவிட்டு அங்கு போனவன் மாலையாகியும் வரவில்லை. பதறிப்போனார்கள் வீட்டில்.இவனது அம்மா வழக்கம் போல கத்த ஆரம்பித்து விட்டாள்.இவனது அப்பாதான் இவன் கூடப்படித்தவன் வீட்டிலேயே தூங்கிவிட்டான் என கூட்டி வந்தார்,

ஆனால் இவன் கூடப் படித்தவன் வீட்டிலெல்லாம் இருந்திருக்கவில்லை. உடன் படித்தவன் வீட்டில் பேசிக் கொண்டிருந்தவன் பக்கத்துத்தெருவில் துஷ்டிவீட்டில்அடிக்கும்கொட்டுச்சத்தம்கேட்டு துள்ளலாகிப்போய் விட்டான். சரி போனவன் வந்திருக்கலாம்தானே சிறிது நேரம் கழித்து, எனகேட்கை யில் கொட்டுச்சத்தத்தின் துள்ளலிலும் நயத்திலும் மனம் மயங்கி நின்று விட்டதாகவும் மயங்கிய மனதின் கைபிடித்துக்கொண்டு சுடுகாடுவரை சென்று விட்டான். அங்கிருந்து எல்லோரும்திரும்பியபிறகு போகும் பாதை அறியாமல் திகைத்து நின்ற வனை துஷ்டி வீட்டுக்கு வந்திருந்த ஒருவரே கூட்டிக்கொண்டு வந்துஇவன்கூடப்படிப்பவன் வீட்டில் விட்டு விட்டு வந்தார்.

அவன் அப்படி விடப்பட்ட சிறிது நேரத்தில் இவனது அப்பா வந்து விட்டார் ,கூட்டிப் போக/

அவருடன் சைக்கிளில் வந்து கொண்டிருக்கையில்தான்சொன்னான் இந்த மாதிரிஎன,அதனால்என்ன,ஒன்றில் மனம் பறிகொடுப்பதும் அதை ரசிப்பதும் தவறில்லை,ஆனால் அதில் ஆட்பட்டுப்போகும் போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும்,என.அவர் சொல்லிப்போனது இத்தனை வருடங்கள் கழித்துஇன்னும் மனம்குடி கொண்டிருப்பதாக/

உசிலம்பட்டி இங்கிருந்து ஐந்து கிலோ மீட்டரை எட்டித்தொட்டுவிடும் தூரம்தான்.பஸ்ஸில் போனால் ஐந்துரூபாய் டிக்கெட்.சைக்கிளில்சென்றால் உந்திமிதிக்கிறகால்களின் பலத்தில் தெறிபட்டுப்போகிற சுழற்சியின் வேகம்/ இருசக்கரவாகனத்தில் சென்றால் இருபது அல்லது முப்பது ரூபாய்க்கு ஆகிப்போகும் பெட்ரோல் தவிர்த்துபெரிதாக வேறொன்றும் இருந்து விடப் போவதில்லைதான்.

இதில் பஸ்ஸில் சென்றால் மினிபஸ்ஸில் போய் பஸ்டாண்டில் இறங்க வேண்டும்.அங்கிருந்து உசிலம்பட்டி பஸ் வர காத்திருந்து ஏற வேண்டும். போக ஐந்து வர ஐந்து ,,,,,,பஸ்ஸிலிருந்து இறங்கியதுமோ அல்லது பஸ் ஏறப் போகையிலேயோ குடிக்கும் ஒரு டீ என எல்லாம் சேர்த்து ரூபாய் 28வரை ஆகிப்போகும்.இதற்கு பேசாமல் இரு சக்கர வாகனத்தில் போய் விடுவதோ அல்லது சைக்கிளில் சென்று விடுவதோஎவ்வளவோ மேல்.

எங்கு போவதானாலும் சைக்கிளிலேயே போய்வந்தவன்தானே,சைக்கிளின் டயரோடு டயராகவும் பெடலோடு பெடலாகவும் சுற்றித்திரிந்தவனுக்கு என்ன இப்பொழுது,

மலைப்பேற்படக்காரணம் இல்லாமல் இல்லை,கூடிப்போன வயது, மூப்பின் விளிம்பில் நிற்கிற உடல் கூடவே சுமந்து கொண்டு திரிய வேண்டியதி ருக்கிற உடல் நோய்கள் என எல்லாம் எல்லாவற்றின் கைகோர்ப்பும், அசதியும் சேர்ந்து கூட்டு வைத்துக்கொள்கிறது,

இதுதான் பிரச்சனையாய் இப்பொழுது, ஆனால் அப்போது அப்படியில்லை. அப்பொழுதுதான்அலுவலகத்திலிருந்துவந்திருப்பான்திரும்பவுமாய் சைக்கிள் எடுத்துக் கொண்டு யாராவது கூப்பிட்டார்கள் நண்பர்கள் அல்லது தோழர்க ளைப் பார்க்க வேண்டும்.என போய் விடுவான்,அல்லது யாரும் சொல்லாத ஒரு வேலையை இவனாகமனதில் உருவகித்துக்கொண்டு போவான். டீக்க டை பஜார் பஸ்டாண்ட் இன்னும் இன்னுமான இதர இதர இடங்களில் சைக்கிளின் தடம் பதித்து விட்டு வந்து விடுவான்,

இப்பொழுதானே எங்கு செல்வதானாலும் கூடவே கைக்குழந்தையை சுமந்து செல்வது போல தண்ணீர் பாட்டில் ஒன்றை சுமந்து செல்ல வேண் டியதிரு க்கிறது.அப்பொழுதெல்லாம் அப்படி ஒன்றும் பெரிதாக தேவை இருந்து விடவில்லை.அப்படியே மீறி தண்ணீர் தவித்தாலும் தவிக்கிற வாய்க்கு ஒரு கிளாஸ் டீ அல்லது டீக்கடை ஓரமாய் இருக்கிற தண்ணீர் குடத்தில் ஒரு டம்ளர் தண்ணீர், இது போதுமானதாய் இருந்தது.

இப்பொழுது ஆயிரம் யோசனை வருகிறது,கண்ட இடத்தில் தண்ணீர் குடிக்கும் போது உடனே தொற்றிக்கொள்கிற நோயாய் இழுத்து இறுக்கிப் பற்றிக் கொள்கி்ற சளி மிகவும் பாடாய்ப்படுத்தி விடுகிறது. அதற்காக பயந்தேனுமாய் வீட்டிலிருந்து கிளம்புகையில்பாட்டிலில்தண்ணீர் கொண்டு போக வேண்டி யிருக்கிறது,

அதற்காக இப்படியா ஒரு அரைக் கிலோ மீட்டர் தூரம் போவதற்குக்கூட என்கிற கேள்விஎழுகிற போதுஅதற்கானபதிலைரெடியாகஎப்பொழுதுமே எடுத்து கையில் வைத்திருந்திருக்கிறான்.

அல்லம்பட்டி முக்கில் போய் மகளை பள்ளியில் இறக்கிவிட்டு வருகை யில் கண்டிப்பாக அங்கிருக்கிற கடைகளில்ஏதேனும் ஒன்றில் இவன் டீக் குடித்தேஆக வேண்டும். இல்லையெனில் இவன் தலை வெடித்துப் போகும் என்கிற அளவு வந்துவிடும்,அந்த ஏதாவதுஒரு டீக்கடை தோழர்கடையாய் இருந்தது,

இவனுக்குள்மட்டுமல்ல கேட்பவர்களிடமும் சொல்லியிருக்கிறான், பொது வாக இந்தப்பக்கம் வந்தால் இங்கு வந்து விடுவேன் டீக்குடிக்க என/

அது வெறும் டீக்குடித்தல் மட்டும் இல்லை,மனம் விரும்பிய இடத்தில் மனம்விரும்பிப்போய் ஒரு செயல்செய்யும்போது மிகவும் பிடித்துப் போகும் தானே,,,?அந்தப்பிடித்துப்போதல்இருக்கிற வரை இவன்டீக்கடைமட்டும் இல்லை.எங்குவேண்டுமானாலும் செல்ல வேண்டும் என்கிற எத்தனிப்பில் இருக்கிறான்.அந்த எத்தனிப்புடன் தண்ணீர் பாட்டிலைக்கொண்டு போகும் போது கூடுதல் ஒட்டுதலும் பாதுகாப்பும் இருக்கிறது,தவிர டீக்குடிக்கும் முன்னர் ஒரு டம்ளர் தண்ணீர் குடிக்க வேண்டும் அது கையில் இருந்தால் இன்னும்கொஞ்சம் சௌகரியம் மற்றும் பாதுகாப்பு என்கிற முன்னெச்சரிக் கையுடன் கொண்டு செல்வதுதான்தண்ணீர்பாட்டில்.

ஆனால் இவன் சீனித்துரை மற்றும் ராமச்சந்திரன் இன்னும் இன்னுமான வர்களுடன் வடமலைக்குறிச்சிக்கு கல்யாணத்திற்கு சென்று வந்த போது தண்ணீர் பாட்டிலெல்லாம் கொண்டு போயிருக்கவில்லை.

அதே போல்தான் நண்பரும் உடன் வேலை பார்ப்பவருமான அவரின் சொல்லை கேட்டும் ஏற்றும் அன்றாடம் பேப்பர் போடுகிற ஒருவருக்காய் சைக்கிளைக்கொண்டுபோய்க்கொடுத்தான்,அது இவனது உடலோடு உடலாக சுற்றிய சைக்கிள்தான் .

சைக்கிளை சாத்தூர் வரை மிதித்துக் கொண்டுதான் சென்றான்.25 கிலோ மீட்டர் இருக்கலாம் எனச் சொன்னார்கள் சாத்தூரின் தூர அளவை கேட்கிற போது.

அன்றையதினம் நால்வழிச் சாலை யெல்லாம் இல்லை.சிங்கிள் ரோடுதான். போக ஒரு பாதை வர ஒரு பாதை என இல்லாத சாலையில் ஆர் ஆர் நகர் வந்ததும் ஒரு டீ சாப்பிட்டான். அது ஸ்ட்ராங்காகவா இல்லை லைட்டாகவா என்பது இன்று வரை ஞாபகத்தில் இல்லை. ஞாபகத்தில் இருக்கவும் வாய்ப்பில்லை.என்ன இது சின்னப்பிள்ளை மாதிரி,ஞாபகத்தில் இல்லை அது இல்லைஇதுஇல்லைஎனச்சொல்பவர்களிடம்சொல்லியிருக்கிறான்.

சின்னப்பிள்ளை என்றால் ஞாபகம் இருந்திருக்கும்.தோழா இந்நேரம்,பெரிய பிள்ளை என்பதால்தான் இந்த ஞாபகபிசகு என நினைக்கிறேன் என/

வாஸ்தவம்தானே என்கிற வாஸ்தவங்களின் வாஸ்தவங்களை சற்றுகூட ஏற்றுக்கொள்ளாத மனது.

சைக்க்கிளை அவ்வளவு பெருந்தன்மையுடன் கொண்டு போய் கொடுத்ததற்கு பலன் இவன்நொந்து போனதாய்த்தான் இருந்தது.சைக்கிளை அவ்வள வு கசமாய்த் தான் வைத்திருந்தார் மனிதர்.

சைக்கிளைஅவரிடம் கொடுத்ததிலிருந்து இந்த ஆறுமாதங்கள்வரை சைக்கி ளை துடைத்திருக்கக்கூடக்கூட மாட்டார் போலிருக்கிறார் மனிதர்.

பின்சக்கரத்தில்ஐந்துகம்பிகள்போயிருந்தன. எல்லாவற்றையும் வளைத்தும், ஒடித்துமாய் பக்கத்திலிருக்கிற ஒன்னொரு கம்பியில் சொருகி வைத்திருந் தார்.கோட்டமாகிப்போன சக்கரம் ஒரு பக்கமாய் ஒதுங்கி சக்கரத்தின் இரு பக்கமுமாய் இருக்கிற ஒரு பக்ககம்பியிலும்,மட்கார்டிலுமாய் உரசி டயர் தேய்ந்திருந்தது.ஹேண்ட்பார்அடி வாங்கியிருந்தது.எங்காவது போய் முட்டியி ருப்பார் போலுமாய் தெரிகிறது.முன் சக்கரம் தொட்டால் அழுது விடும் போலான நிலையிலும் செயின் லூசாகிப்போய்கொடகொட வென ஆடிப் போயும் துருஏறிப்போயுமாய்தெரிந்தது.

அன்றைக்கு இவனை அலுவலகத்திற்கு ஒரு வேலையாய் பார்க்க வந்தி ருந்த அவரிடம் (இவனது சைக்கிளை வாங்கியிருந்த அவர்) நல்லாயிருக்கீ ங்களா என்பதற்குஅடுத்த கேள்வியாக சைக்கிள்எப்படியிருக்கு?என்றுதான்கேட்டான்.

இந்தாகொண்டாந்திருக்கேன்,வெளியில நிக்கிது என நெஞ்சு நிமிர்த்தி சொன்ன வரின்நிமிர்ந்தபார்வையைக்கடந்து அவருடன் சென்று சைக்கிளைப் பார்த்த போது இவனுக்கு ரத்தக்கண்ணீர்தான் வரவில்லை.

அடப்பாவியா வாரத்துக்கு ஒரு தடவ சுத்தமா தொடச்சி எண்ணை போட்டு வச்சிருந்த சைக்கிளை இப்பிடி கசமா பண்ணீட்டானே நாயிப்பய,,,,,,,என மனதிற்குள்ளாக இன்னும் கொஞ்சம் வசவு சேர்த்து வைது விட்டு முதல் வேளையாக சைக்கிள் சாவியை அவரிடமிருந்து வாங்கிக் கொண்டு மான சீகமாக இவனை இவனே செருப்பால் அடித்துக் கொண்டான். என்ன அடித்து என்ன செய்ய .சைக்கிளை திரும்பவும் ஓட விட வேண்டுமானால் குறைந்த பட்சம் முன்னூறு ரூபாயாவது செலவழிக்க வேண்டும் போலிருக்கி றது.

நல்ல படியாக அவரிடமிருந்து சைக்கிள் சாவியை வாங்கிக்கொண்டு அனுப்பி விட்டான்.அதற்கு அவர் சைக்கிளையெல்லாம் உங்களிடம் தரச் சொல்ல வில்லைநண்பர்.சும்மா பார்த்து வருமாறு அனுப்பினார். என்றார். இவனுக்கு வந்த கோவத்திற்கு எசக்கேடாக ஏதாவது பேசியிருப்பான்நல்ல வேளையாக அப்படிஎதுவும்செய்யவில்லை.ஆனால்அந்தஎசக்கேட்டையெல்லாம்சைக்கிளைக் கொடுக்கச் சொன்ன நண்பரிடம் காட்டிவிட்டான்.

என்னதான் கட்டுப்படுத்திக்கொண்ட போதும் கூட வார்த்தைகளை வடி கட்டிக் கொள்ளமுடியவில்லை.

இல்ல கையில காசு இல்லாமத்தான் சைக்கிள இப்பிடிப்போட்டு வச்சிட்டா ரு. என்கிற நண்பரின் சமாதானத்திற்கு கையில காசு இல்லாமயா இப்பிடி வெள்ளையும்சொள்ளையுமாஅலைஞ்சிக்கிட்டுஇருக்காரு. இதெல்லாம் ஒரு மத மதர்த்த திமிர்த்தனம் அடுத்தவன் பொருள்தானங்குற அசால்ட்னெஸ்,,,,,,,,, இப்பிடி ஆள்க வெயிலுக்கு நெழலாவும் இருக்க மாட்டாங்க, மழைக்கு கொடை யாவும் இருக்க மாட்டாங்க,இவனெல்லாம்,,,,,,,,,,என கோபமாக பேசியவன் அங்கிருந்த கடையிலெயே பழைய விலைக்கு விற்கக்கேட்ட போது சைக்கிள் கடைக்காரர் சொன்னார்.சார் ஒரு ரெண்டு நாள் டயம் கொடுங்க,ஒங்க சைக்கிள புது மாதிரி பண்ணித்தர்ரேன் என.

அப்படி அவர் பண்ணித்தந்த புதுசுக்கு அவர் கூலியாய் கேட்ட தொகை ரொம்ப வுமே குறைவுதான்,

அன்றிலிருந்து இன்று வரை அந்த சைக்கிள் இவனிடம்தான் இருக்கிறது.

மினி பஸ்ஸில் போகும் போது பஸ்ஸுக்கு கொடுக்கிற ஐந்து ரூபாய்க்கு அந்த பாட்டா,இல்லை பாட்டுக்காக அந்த ரூபாய் கொடுக்கிறோமா என்கிற சந்தேகம் எழுந்ததுண்டு.

பஸ் முழுக்கவுமாய் வியாபித்திருக்கிற இசையின் நர்த்தனம் அருகிலிருக் கிறவரின் பேச்சைக்கூட கேட்க விடாமல் செய்து விடுவதுண்டு.அந்த அளவி ற்கு சப்தம்.

கண்டக்டரிடம்ஒருதடவை கேட்டதற்குஅப்படியெல்லாம் ஒன்றும் இல்லை சார்,பஸ்ஸின் வெளி சின்னது,ஆனால் நாங்கள் வைத்திருக்கிற சவுண்ட் சிஸ்டம் பவர் கூடியது.அதனால்தான் இப்படிவந்து காதில் குத்துகிறது பாட்டு.தவிர எங்களது வயது என ஒன்று இருக்கிறதே,அதையும் நீங்கள் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும்.இன்றைக்கெல்லாம் இருந்தால் டிரைவருக்கு 26 தாண்டாத வயதுதான் இருக்கும்.அதை ஒட்டிய வயதே எனதும் எனச் சொன்ன கண்டக்டரிடம் அடுத்தடுத்த நாட்களில் பாட்டுப் போடு வது பற்றி எதுவும் பேசுவதில்லை.ஆனால் இரண்டு பெரும் நல்ல ரசனைக் கார்களாகத் தெரிந்தார்கள்.

இரு சக்கர வாகனங்களில் பயணிக்கிற நாட்களில் இப்படியான ரசனை உட் கொண்ட பாடல்களை கேட்பது தவறிப்போகிறது. தொலைக்காட்சியில் கேட்ட பாடல்களை மனதில் இருத்தி வைத்திருந்து கேட்டால்தான்.

.மீறி ஆசை வந்தால் செல்போனில் பாடல்களை ஒலிக்க விட்டுக்கேட்டுக் கொள்வான்.என்னவண்டி போகிற சப்தத்தில் பாடல் ஒலி கேட்காது.

வண்டியில் சப்தம் கொஞ்சம் அதிகமாகத் தெரிகிறது இந்த ஒரு மாதமாக/ வண்டியை சர்வீஸ் விட வேண்டும்.பின் சக்கரத்தில் மூன்று கம்பிகள் வேறு உடைந்து போயிருக்கிறது.ஏகத்துக்கு கோட்டம் இருக்கிறது.

ஒர்க்‌ஷாப்க்காரர் கூடக்கேட்டார்.லாங்க் டிரைவ் எதுவும் போனீங்களா என,,/ இல்லை என்று சொன்ன போதும் கூட நம்ப மறுத்த ஒர்க்‌ஷாப்க்காரர் வண்டியை நிறுத்திவிட்டுப்போங்கள் இதோ ஒரு மணி நேரத்தில் கம்பிக ளை புதிது மாற்றித்தருகிறேன் எனச்சொன்ன அவர் இவன் வீடு போய் திரும்பும் நேரத்திற்குள்ளாக கம்பிகளை மாற்றி வைத்திருந்தார்,

ஆச்சரியம்தான்,மாலைமுடிந்துஇருள்கவிழப்போகிறஇந்தவேளையில் இவ்வ ளவுவேலை பார்த்துக்கொடுத்திருக்கிறாரே என/ஆனால் வண்டியை சர்வீஸ் பார்க்க இன்னொரு நாள்வரச் சொல்லியிருந்தார், அந்த இன்னொரு நாள் இன்னும் வரவில்லை.

வண்டியை போன முறை சர்வீற்கு விடப்போன போதுதான் கவனித்தான், இடுப்பிற்கு கீழே செயல்பாடு இல்லா த ஒருவர் வேலை செய்து கொண்டி ருந்தார் தவழ்ந்து தவழ்ந்து/

ஆச்சரியமாகத்தான் இருந்தது.திறந்ததிலிருந்து மூடுகிற வரை பரபரப்பாக இயங்கிக்கொண்டிருக்கிறஒருவேலைத்தளத்தில் இப்படியான ஒரு மனிதரை வேலைக்குவைத்திருப்பதற்குஒர்க்‌ஷாப்ஓனருக்கு ஒரு தனி மனது வேண்டும் தான்.அது அவருக்கு வாய்த்திருந்தது. என்றுபட்ட நாளிலிருந்து இரு சக்கர வாகனத்தை வேறெங்குமாய் வேலைக்கு விடுவதில்லை.

இங்கிருந்து ஐந்து கிலோமீட்டர் தூரம் ஒன்றும் தூரம் அதிகமில்லை. என்கிற போதும் போவதற்கு கொஞ்சம் அலுப்பாக இருந்தது.

உசிலம்பட்டி அதுதாண்டி ஆர் ஆர் நகர் அது தாண்டி அது தாண்டி என நிறைய ஊர் வரை போய் வந்திருக்கிறான்,பொண் வண்ண மயிலாடும் தோட்டத்தில் என் வண்ணம் காண யார் இருக்கிறார் என பரந்து விரிந்த அத்துவான வெளி யின் வழியாய் விழிவிழுந்த பார்வைகழண்டு நிலை கொள்கிற இடமும் தூரமும் இதுபோலானை இடமாய்த்தான் இருந்திருக்கிறது.

பொழுது போகவில்லை வா போய்வரலாம் அப்படியே என இரு சக்கர வாகனத்தில் மனைவியை அழைத்துக்கொண்டு ஆர் ஆர் நகர் வரை போய் வந்தான்.அப்படியே சாத்தூர் வரை போய் வரலாம் என்கிற நினைப்பு இருந்த போதிலும் ஆர் ஆர் நகர் செல்லும் போதே மேகம் லேசாக இருட்டிக்கொண்டு வந்தது.சரி இனியும் வேண்டாம் விஷப்பரிட்சை என திரும்பவுமாய் வந்தது ஞாபகம் இருக்கிறது.

அப்பொழுதெல்லாம்தோன்றாத அலுப்பு இப்பொழுது வம்பாக வந்து போர்த்திக் கொண்டது ஏன் எனத்தெரியவில்லை.

4 comments:

 1. Replies
  1. வணக்கம் சேக்குமார் அண்ணா,
   நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/

   Delete
 2. கால ஓட்டம் நம்மை எப்படியெல்லாம் சிந்திக்கவைக்கிறது. அனைவரும் எதிர்கொள்ளும் ஒரு நிகழ்வினைப் பகிர்ந்தவிதம் நன்று.

  ReplyDelete
  Replies
  1. வணக்கம்டாக்டர் ஜம்புலிங்கம் சார்,
   நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/

   Delete