4 Mar 2016

வெட்டிப்பொழுது,,,,,


ஏன்தான் போனோம் என ஆகிப்போனது.போனதில் எதுவும் இல்லை பிரச்ச னை,ஆனால்இவ்வளவு நேரமும் காலமும் பொழுதும் விரயமாகிப் போகும் என மறந்தும் கூட நினைக்கவில்லை இவன்.

காலையில்ஆறு மணி சுமார் இருக்கும்,போன் பண்ணிவிட்டார் நண்பர். பொதுவாகஞாயிறுகளில்இவனதுபழக்கம்ஒன்று அதிகாலை நாலு நாலரை வாக்கில் எழுந்து குளித்துவிட்டு அந்த இளங்காலையில் ஊரை ஒரு வலம் வருவது,அது இல்லையென்றால் போதும்விடுஎனஒரேயடியாய் மணி எட்டை  எட்டும் வரைக்குமாய் தூங்கி விட்டு பதறாமல் எழுவான்,

இந்தப்பழக்கம்இவனில்எப்பொழுது குடிகொண்டது என சரியாக ஞாபகமில் லைஎன்றாலும்தஞ்சாவூருக்கு மாறுதலாகிப்போன நாட்களின் ஆரம்பத்தில் முளைவிட்டதாய்கருதுகிறான்.

ஊரே உறங்கிக்கொண்டிருக்கிற இரவு இரண்டு மணி பொழுதுக்கு எழுந்தி ருப்பான்அவசரஅவசரமாக/ஏதோபோருக்குதயாராவது போல்அதிவிரைவாய் குளிப்பான்.குளிக்கும்முன்பாகமுருகனிடம்ஆட்டோவிற்குச்சொல்லிவிடுவான்,அவரும் கேட்டு விடுவார்,எந்நேரம் சரியாக வர என,இவன் அப்பொழுது தான் குளிக்கப்போகிற விஷயத்தைச் சொல்லி கணக்குபண்ணிக் கொள்ளு ங்கள் நேரத்தை என்பான்,அவரும் இவன் குளித்து முடித்து பேண்ட சர்ட் போட்டு ரெடியாக நிற்கும் போது சரியாக வந்து விடுவார்.கேட்டால் பழக்கமாகிப் போனது என்பார்.

பார்ட்டியின் சொல்,அவரது காத்திருப்பானமனோநிலை,பொறுத்துப்போகிற சகிப்புத்தன்மை,,எனப்ளஸ்,ப்ளஸ்ஆககூட்டிக்கழித்துவருவதுதானேஎல்லாம்/ எனவுமாய் பதில் சொல்வார்.

இதை நான் எந்த பல்கலைக்கழகத்திலும் போய் கற்கவில்லை,தானாக வந்தது,தேவையைப்பொறுத்து நிற்கும் சிறிது காலம் வரை,தேவை போய் வேறு மாதிரி ஒன்று வந்து அமருமானால் அதற்கேற்ப மாறிகொள்வேன் நான் எனச்சொல்லும் அவர் எல்லாம் பிழைப்பிற்காக,,,,,,,,,,,,,,தின்பதுதானே, எனவும் சொல்வார்.

அவரது ஆட்டோவில் போய் மதுரை ரோட்டில் போய் இறங்க வேண்டும். அங்கிருந்து பஸ் ஏறினால் மதுரைப்போக ஒரு மணி நேரம்,பின் மதுரை யிலிருந்துதிருப்பத்தூர் வழியாக புதுக்கோட்டைபோய் தஞ்சாவூர்ப் போய்ச் சேர ஐந்து மணி நேரம் வரை ஆகிப்போகும்,அந்த ஐந்து மணி நேரத்தைக் கடக்க பஸ்ஸிற்காய் காத்திருக்கிற நேரத்தையுமாய் சேர்த்து ஏழு மணிப் பொழுதை நெருக்கி விடும்.

சமயத்தில்அதையும் தாண்டி விடுகிற கொடுமை நடப்பதுண்டு.ஒரு தடவை மதுரையில் பஸ்ஸிற்காய் காத்திருந்த பொழுது தஞ்சாவூர் பஸ் கிலம்ப அரை மணி தாமதம் ஆகிப்போனது முதல் பஸ்ஸில் ஏற வேண்டிய கூட்டம் இரண் டாவது பஸ்ஸீற்காய் காத்திருக்கிற கூட்டம் எல்லாம் ஒரு பஸ்ஸீல் ஏறி விட்டது.கேட்டதில் எல்லாம் முதல் பஸ் ரிப்பேர் என்றார்கள் ,பஸ்ஸிற்கு இல்லை டிரைவருக்குத்தான் அம்மாதிரி ஆகிப் போனது என பின்னர் சொன் னா ர்கள்.

75அல்லது 80 ரூபாய்கட்டணமாகக்கேட்பார் மதுரை ரோட்டில் வந்து இறாக்கி விடுவதற்கு/ ஆட்டோவிற்கு கொடுக்கிற கட்டணத்திற்கு இவன் தஞ்சாவூரே போய் சேர்ந்து விடலாம் எனச் சொன்னால் என்ன சார்செய்ய, பெட்ரோல் விலை அப்படியாய் விற்கிறது எனச் சிரிப்பார்.

அவர் சொல்லிலும் தப்பு இல்லைதான், அவர்களெல்லாம் எப்படிபெட்ரோல் போட்டுஎப்படிவண்டிஓட்டிசமாளிக்கிறார்கள்எனத்தெரியவில்லை.பெட்ரோல், வண்டி பராமரிப்பு எக்ஸட்ரா, எக்ஸட்ரா எனப் போகும்போது எப்படி சமாளி க்கிறார்கள் என்பது ஆச்சரியாமாக இருக்கும்.

சற்று அசந்தால் ஆளையே காலி பண்ணி விடும் தொழில் என்பார்,இவன் வைத்திருக்கிற இரு சக்கரவாகனத்திற்கே இரண்டு தினங்களுக்கு ஒரு முறை ஒரு லிட்டர் பெட்ரோல் கண்டிப்பாக தேவை எனும் போது பாவம் அவர் என்ன செய்வார்,இவனைப்போலசமயாசமயங்களில்நொந்து போவதைத் தவிர்த்து/

ரொம்பவும்தான் நொந்து போவதுண்டு சமயங்களில்/ வண்டியைப் பார்க்கும் பொழுது மிகவும் எரிச்சலாகிப்போகும்.அப்படியே ரோடு ஓரத்தில் தள்ளி விட்டுவந்துவிடலாமா என இருக்கும்.அதற்காக அப்படியெல்லாம் போட்டு விட்டு வந்து விட முடியாது,ஏதோ இது இருக்கப்போய் சக்கடா சக்கடா எனவாவதுஓட்டிக்கொண்டுதிரிகிறான் .

போகச்சொன்னால் போகிறது நிற்கச் சொன்னால் நிற்கிறது,என்ன அதற்கு தேவையான தீனி போட வேண்டும்/ தீனி கொஞ்சம் கூடிப்போகிற சமய ங்களிலோஅல்லது அது அதிகம் என தோணுகிறசமயங்களிலோ கொஞ்சம் மனச்சங்கடமாய்இருக்கும்,இவனைபொறுத்தவரைஅதிகமாய்ஒருடீ சாப்பிட் டு விட்டாலே அன்று முழுவதுமாய் மனதுக்குள்ளாய் ஒரு மெல்லிய சங்கடம் ஓடிக்கொண்டிருக்கும்/அதிலும் வண்டி பெட்ரோல் எனும் போது கூடுதமன அவஸ்தைக்கு ஆகிப்போகும்,கணக்குப்பண்ணிபார்க்கையில் ஒரு மாதத்திற்கு ஆகிறபெட்ரோல் செலவில் வீட்டிற்குதேவையானமளிகையில் கொஞ்சத்தை வாங்கி விடலாம் எனத்தோணும்/

அப்படியான சமயங்களில் இனி சைக்கிள் ஒன்றே போதும் எங்கும்போய் வருவதற்கு என/

உடலாவது கொஞ்சம் நன்றாக இருக்கும்,என்கிற உயரிய மதிப்பீட்டான எண்ணத்தில்கொஞ்சம்தீவைத்ததுபோல்அப்படி நடக்காத அளவிற்கு எண்ண, நேர மாற்றங்கள்நடந்து போவதுண்டு என்கிறது போலானவைகளைசுமந்து கொண்டுதான் ஆட்டோவில் ஏறுவான்,

அப்படியாயஏறியஒரு நாளன்றின் இரவுப்பொழுதில் ரயில்வே கேட் அடைப் பில்காத்துக்கொண்டிருந்தபோதுஇவனது ஆட்டோவிற்குமுன்னதாகஆம்புல ன்ஸ் நின்றிருந்தது. சைரனைசுழலவிட்டபடி/

இவன்இருக்கிறஏரியாவிலிருந்துடவுனுக்குள்காலடிஎடுத்து வைக்க வேண்டு மென்றால் ரயில்வே கேட்டைத் தாண்டித்தான் போகவேண்டும். என்ன ஒரு சங்கடம் முக்கியமான நேரங்களில் அடைபட்டுத் தெரியும் ரயில்வே கேட்/ இதற்காகஇனி போய் ஹை ஜம்பெல்லாம் பழக முடியாது அப்படியே பழகி னாலும்கம்புஊனிப்போய்ரயில்வேகேட்டைதாண்டிக்குதிக்கமுடியுமா என்பது சந்தேகமே/, அதற்கு அனுமதி உண்டா நடைமுறையில் எனத் தெரியவில் லை. அப்படி இருந்தால் ஒரு வேளை ஹை ஜம்ப் முயற்சிக்கலாம்.

போஸ்ட்ஆபீஸ்,அரசுமருத்துவமனை,கடைகள் லாட்ஜ், சினிமா தியேட்டர்,,, என்கிற நீளமான கடத்தலுக்குப் பின் வருகிற ரயில்வே கேட் ஏதாவது அவசர நேரங்களில்வருகிறபோதுபூட்டியிருப்பதுமிகவும்சங்கடப்படவைக்கிற விசய மாகிப் போவதுண்டுதான்.

அதுபோல்தான்ஆகிப்போனதுஅன்றும்,அதுவும்முன்னாடிநின்றிருந்த ஆம்புல ன்ஸை உற்றுப்பார்த்ததை கவனித்த ஆட்டோ டிரைவர் அது ஒன்றும் இல்லை சார்,தொடர்ச்சியாகவாந்திஎடுத்துக்கொண்டிருக்கிறஒருவரை ஆம்புலன்ஸில் வைத்து மதுரை ஆஸ்பத்திரிக்குக் கொண்டு போகிறார்கள், நெஞ்சு வலியாய் இருக்கும் என சந்தேகப்பட்டுஎன்றார்/

இவனுக்கானால்ஒருமாதிரியாகிப்போனது.தஞ்சாவூர்ப் போய்சேர்கிறதுவரை இவனில்அந்த நினைப்பு குடிகொண்டிருந்தது.

இவன் தஞ்சாவூர்ப்போய் இறங்கும் போது காலையில் எட்டரை அல்லது ஒன்பது மணியாகிப்போகும்/

ஊரிலிருந்துஏறிமதுரையில் வந்து இறங்கும் போது அதிகாலை மூன்றரை அல்லது நான்கு ஆகிப்போகும்.பஸ்டாண்டில் கால் வைத்ததும் வீட்டிற்கு ஒரு போன் பண்ணி விடுவான்,

மதுரை ரோட்டில் பஸ் ஏறியவுடன் முதல் போன் பஸ் ஏறிவிட்டேன் என,இரண்டாவதாய் மதுரை பஸ்டாண்டிலிருந்து,

மதுரை பஸ்டாண்ட் இவனை சூடாக ஒரு டீக்குடிக்கச்சொல்லும்,டீக்குடித்து விட்டு பாத்ரூம் போய் விட்டு வரவும் தஞ்சாவூருக்கு பஸ் கிளம்பவுமாய் சரியாக இருக்கும். எப்பொழுதும் கடைசி சீட்தான் இவனுக்குக் கிடைத்திருக் கிறதுஅல்லது கடைசி சீட்டுக்கு முன்னதாக இரண்டு சீட்கள்தள்ளி அமர்வா ன், அதிலும் ஜன்னலோர சீட் கிடைத்தால் கொஞ்சம் மகிழ்ச்சியாகிப் போவான் கூட/

பெரும்பாலானநாட்களில் ஊரில் இவன் பஸ் ஏறுகையில் தஞ்சாவூர் போவ தற்காய் ஒருவன் பஸ் ஏறுவான்,கிட்டதட்ட இவன் பையன் வயதை விட இரண்டு வயது குறைவாக இருக்கலாம், விளம்பரக்கம்பெனி வைத்திருக்கிற தாய்ச் சொன்னான்,

தஞ்சாவூரில் இருக்கிறகம்பெனிஒன்றிற்கு வாரா வாரம் சென்று வருவேன் என்றான்,அப்படியாய் செல்கிற நேரங்களில்தான் இவனைப்பார்க்கிறான், பெரும்பாலான நாட்களில் இல்லாவிட்டாலும் கூட எப்பொழுதாவதுஒரு நாள் இவன் ஏறுகிற பஸ்ஸில்தான்அவனும்ஏறுவான்.

திருப்பத்தூரில்இறங்கும்போதுஒரு டீசாப்பிடுவான்இவன். இவன் டீ சாப்பிட இறங்கும் போது அந்தப்பையனையும் கூப்பிடுவான் டீ சாப்பிட,வர மறுத்து விடுவான் அவன்,

விளம்பர நிறுவனத்தில்பணிபுரிகிறவன் என்கிற அடையாளம் அவனிடம் எப்பொழுதும் ஒட்டிக்காணப்பட்டதுண்டு.

பெரும்பாலுமாய் அவன் உடுத்துகிற உடைகள் அவனை தூக்கிக் காட்டுவ தாக இருந்தது.வெளிர் நிற பேண்ட் அணிந்தால் அடர் நிற சட்டை அணிவான், அடர் நிறத்தில் பேண்ட் என்றால் வெளிர் நிறத்தில் சட்டை இருக்கும், இதுவே அவனது தோற்றத்தை தூக்கிக்காட்ட உதவியிருக்கிறது.

இத்தனையையும்சுமந்து கொண்டு தன்னை தூக்கலாக காட்டிகொள்கிற அவன் எப்பொழும் கொஞ்சம் டல்லாகவே இருப்பான்.

ஏன்அப்படிஇருக்கிறான்கேட்கவேண்டுமேஎன நினைத்து நீண்ட யோசனை க்குப் பின் கேட்டே விட்டான் ஒரு நாளில்/

”எனக்கு இந்தவேலைபிடித்து வரவில்லை.வீட்டின்நிர்பந்தம் காரணமாகவும் நிலைகாரணமாகவும் வந்தேன்” என்றான்.

அக்காவிற்கு இன்னும் கல்யாணம் ஆகவில்லை.தங்கை படித்துக் கொண்டி ருக்கிறாள்அம்மாவுக்கு வயதாகிப்போகிறது,அப்பா இல்லாத வீடு,வேறு வழி யில்லை ,வேலைக்கு வந்து விட்டேன் என்பான்.

அப்படியாய் திருப்பத்தூர் பஸ்டாண்டில் பேசிக் கொண்டிருந்த ஒரு நாளில் தஞ்சாவூர் பஸ்ஸை விட்டு விட்டார்கள். அடுத்த வந்த பஸ்ஸில்தான் போனார்கள்,அதில்கூட்டமானகூட்டம்இல்லை.படிக்கட்டில்தொங்கிக்கொண்டு தான் போனார்கள் .

புதுக்கோட்டை வரைகொஞ்சம் அடித்துப் பிடித்துக் கொண்டு போனார்கள். தஞ்சாவூர்ப்போய் சேரும்வரை அப்படித்தான் போக வேண்டியிருக்கும் என நினைத்தவன்புதுக்கோட்டை போனதும் கொஞ்சம் ரிலாக்ஸாகிப் போனான், கூட்டம் கொஞ்சம் குறைவாகித்தெரிந்தது,பரவாயில்லை உட்காரலாம் சற்றே என நினைத்து விளம்பர நிறுவனப் பையனைத்தேடிய போது அவன் கிடைக் கவில்லை,அடுத்தடுத்தநாட்களில்பார்த்தபோதுசொன்னான்,கம்பெனி வேலை யாக புதுகோட்டையிலேயேஇறங்கிவிட்டேன் என/கம்பெனி யோச னையாக இருந்ததில் மறந்து போனது உங்களிடம் சொல்ல எனவுமாய் சொல்ல மறக்க வில்லை இவன்/

தஞ்சாவூர் போய் இறங்கியதும் ஸ்ரீதருக்கு போன் பண்ணுவான்,அவரது வீடு புது பஸ்டாண்டிலிருந்துஇரண்டு கிலோ மீட்டர் தூரம் இருக்கும்.அவருக்கு பெண் குழந்தை பிறந்து இரண்டு மாதங்கள் ஆகியிருந்தன.நல்ல பெயர் வைத் திருந்தார்,குழைந்தையும் பார்ப்பதற்கு அழகாக இருந்தது.அவருக்கு வீட்டில் தலை நிரைந்த வேலைகள் இருந்த போதும் கூட இது போலாய் அழைத்த குரலுக்கு ஓடோடி வந்து விடுவார்.

ஆபீஸிற்கு போகும் போது இவரைக்கூட்டிக்கொண்டு போய் விடுவார். அப்படி அவர் வர முடியாத நாட்களில் மினி பஸ் ஏறிப்போய் விடுவான் அலுலகத் திற்கு/

புது பஸ்டாண்டிலிருந்து ஏழுகிலோ ,மீட்டர் தூரம் இருக்கும் அலுவலகம்/ போய் இறங்கியதும் பழைய பஸ்டாண்டில் ஒரு டீ சாப்பீட்டு விட்டு அலுவல கம் போவான்,அங்கிருந்து மெயின் ரோடுவந்து கொஞ்சம் துரத்தில் வருகிற சித்தா ஆஸ்பத்திரி சந்தில் நுழைந்து அலுவலகம் போய்விடுவான்.

அலுவலகத்தில் போய்தான் சாப்பிடுவான்.வீட்டிலிருந்து கிளம்பும் போது வீட்டிலிருக்கிற சாப்பாட்டை ஒரு டிபன் பாக்ஸில் அடைத்துக்கொண்டு வரு வான். அலுவலகத்தில் கேட்காதவர்கள் பாக்கி இல்லை.என்ன சார் காலை யிலேயே சாப்பாடா என/ஏன் காலையில் சாப்பாடு சாப்பிட்டால் என்ன என ஏதும் விளங்காமல் கேட்டபோது அதை ஒரு குற்றச்செயல் போலவும் ஏதோ செய்யக்கூடாத ஒன்றை செய்தது போலவுமாய் போலவுமாய் சொன்னார்கள், பார்த்தார்கள்..

காலையிலயேசாப்பாடாஎன்னகொடுமையானசெயல்இது,,,,,அடப்பாவமே,இதெ
ல் லாம் காலத்துக்குஒவ்வாதகொடும்செயல்அல்லவா,,அந்த தெய்வத் திற்கே அடுக்காது இது எனவுமாய் கேட்ட மாதிரி இருக்கும் அவர்களது செயல்,,,/

அவர்கள் கேட்டால் என்ன,இவனுக்குப்பிடித்தது அதுதான்,இவனுடன் பணி புரிந்த மேலாளர் ஒருவர் அந்நேரம் சொன்னது ஞாபகம் வரும் அலசலாக/

சோறு சோறு,சோறு நமக்கெல்லாம் சோத்தாலா அடிச்சாத்தான் தாங்கும்பா என்னசொல்றசின்னதுலயிருந்துஅப்பிடியே வளந்துட்டோம்,பொறந்த கொழந் தைக்கு மொத மொத சோறு ஊட்ட ஆரம்பிக்கும் போது பருப்புச் சோறுத் தான ஊட்ட ஆரம்பிக்கிறோம்/

அதுல அவுங்கவுக வசதியப்பொறுத்து நெய்யி, எண்ணைன்னு பெசைஞ்சி இருக்கும்.அப்பிடி தின்னருசிதின்னு திருப்தி கண்டு நெறஞ்ச வயிறு இப்ப எதத்தின்னாலும் திருப்திப்பட்டுக்கிற மாட்டேங்குது. என்பார்

அதுபோல்தான் ஆகிப்போனது இவனுக்கு/டிபன் டீ இதைத் தவிர்த்து மதியம் மட்டுமே சாப்பாடு கிடைத்தது,காலையிலும் இரவிலும் டிபன்தான். இவனுக்கா னால் அந்த டிபன் ருசியும் சரி அல்லது டிபனும் சரி சுத்தமாக வயிற்றுக்கு ஒத்துக்கொள்ளவில்லை,

அல்சர் வயிறு இரண்டு நாள் சாப்பிட்டவுடன் மூன்றாம் நாள் வயிற்றுக் கோளாறில்போய்விட்டு விடுகிறது,ஒரு தடவையானால் மாதத்தின் கடைசி சனியன்று அலுவலகம் முடித்து விட்டு ஊருக்குக்கிளம்ப வேண்டும், மதியம் வரை அலுவலகம்.அரை நேரம் அரைப்பள்ளிக்கூடம், அரைத்தேரம் என அழை க்கப்படுகிறஅலுவலகம்முடிந்துமூன்றுஅல்லதுமூன்றைமணிக்குபஸ்ஏறினால்  இரவு எட்டு அல்லது எட்டரை மணிக்கு ஊருக்குப்போய் விடலாம்.

சனிக்கிழமைஊருக்குப்பயணமாவதற்குவியாழக்கிழமையிலிருந்தேரெடியாகி விடும் மனது. ஊரிலிந்து வந்த அன்று இரவு அலுவலகம் முடித்து வந்தவு டன் குளித்து முடித்து கொஞ்சம் ஓய்வெடுத்துக் கொண்டதும் புத்தகம் டீ.வி என முடித்துஓட்டலுக்குப்போய்சாப்பிட்டுவந்ததுமாய்தூங்குகிற தூக்கம் கொஞ்சம் நிம்மதிகொள்ளச்செய்வதாய்இருக்கும்,செவ்வாய்க்கிழமைஅதேநிலைநீடிக்கும், புதனில்கொஞ்சம் அந்த நிம்மதியில் கொஞ்சம் பிளவு வரும் ஊருக்கு அடிக்கடி போன் பண்ணுவான்,வியாழனில் பரபரப்பு கொள் ளும் மனது சனிக் கிழமைக் கிழமை வரை கொஞ்சமும் பரபரப்பு அடங்காமல் நீடித்தநிலையிலேயே இருக் கும்.

வழக்கமாய் சாப்பிடப் போகிற கடைக்காரரும் ,டீக்கடைக்காரரும், தெரு முக்கில் இருக்கிற சேவுக்கடைக்காரரும் கேட்பார்கள், என்ன சார் சனிக் கெழம நெருங்கீருச்சா என,

அதில் இவன் வழக்கமாக வாழைப்பழம் வாங்குகிற கடைக்காரம்மாதான் கேட்பார்,என்ன சார்,நீங்க ஏங்கிட்ட வாழைப் பழமோ இல்ல மாம்பழமோ இல்ல வேறெதாவது பழமோ வாங்குற வெலையில வேறெங்கயும் வாங்கீற முடியாது,நீங்க குடுக்குற காசெல்லாம் பழத்துக்கான வெலையே இல்ல,நீங்க வந்துபோறதுக்கானகூலின்னுகூடவச்சிக்கிறலாம்,ஆமாம், ஆமாசனிக் கெழம நெருங்கி வர்ராப்புல இருக்கு ஊருக்கு்ப்போற ஏற்பாடெல்லாம் ஆகிருச்சா என்பாள் சிரித்துக் கொண்டே/அவளதுசிரிப்பு அர்த்தங்கள் பலவற்றைஅடக்கிக் கொண்டிருக்கும்/

அவளதுசிரிப்பை உள்வாங்கிக் கொண்ட மறு நாள் வந்த சனிக்கிழமையில் வேலை பார்த்துக்கொண்டிருக்கும் போது ஏற்பட்ட வயிற்று வலி வயிற்றோ ட்டம் போல் ஆகிவிட இரண்டு மூன்று முறைகள் பாத்ரூம் போய் விட்டு வந்தவனைப்பார்த்துஇவனதுமேலாளர்கூடக்கேட்டார், என்னப்பா இன்னைக்கு போயிரலாமாஊருக்குஎன,,,,,,/போய் விடலாம் சார் இதெல்லாம் என்ன அப்படியே வந்தாலும் போகிற வழியில் பார்த்துக் கொள்ளலாம் என சமாதா னம் சொல்லி விட்டாலும் கூட உள்ளுக்குள்ளாய் கொஞ்சம்உதறல் எடுத்து விட்டது.மேலாளர்சொன்னதுபோல் ஆகி விட்டால் ,,,,,ஊருக்குப் போக முடியா மல்போய்விட்டால்,,,,,என்கிறநினைப்பில்இருந்தவன்ஊருக்குப்போய்விட்டான் அன்று/அன்றிலிருந்து ஊருக்கு பணி மாறுதல் ஆகி வருகிற நாள்வரை அப்படித்தான் இருந்தான்உடலளவிலும் மனதலளவிலுமாய்/பின் பணி மாறுத லில் வந்து சேர்ந்து உண்டு உறை விடமாகிப்போனநாளன்றின் பொழுதில் ஒரு நாள் நண்பர்ஒருவேலையாய் போக வேண்டும் வா என்றார்.

ஏன்தான் போனோம் என ஆகிப்போனது.போனதில் எதுவும் இல்லை பிரச்ச னை,ஆனால்இவ்வளவு நேரமும் காலமும் பொழுதும் விரயமாகிப் போகும் என மறந்தும் கூட நினைக்கவில்லை இவன்.

2 comments:

  1. வாராவாரம் போனவனுக்கு ஒருநாள் போனது நேர விரயமாகத் தெரிகிறது... குடும்பத்தோடு வாழ்வை ரசிக்கக் கத்துக் கொண்டவன் போல... அருமையான எழுத்து... வாழ்த்துக்கள் அண்ணா.

    ReplyDelete
  2. வணக்கம் சேகுமார் அண்ணா,
    நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/

    ReplyDelete