12 Apr 2016

சொற் சிதறல்,,,,,

இதில் காலைக்கும் மாலைக்குமாய்பட்டுத் தெரிகிற வித்தியாசங்கள் இருக்கி றதே, அதை அனுவித்தவர்களுக்குத்தான் தெரியும் என்பார் நண்பர்.

தொலை தூரத்தில் வேலையாய் இருப்பவர்,அவரது வேலை கல்ப்பாக்கத்தில் என முருகதாஸ் சொன்னதாய் ஞாபகம்.

பாத்ரூம் கதவின் பின் பக்க தகரம் அரித்துப் போய் தொங்கிக் கொண்டிருந்தது. குளிக் கும் போதும் மற்ற நேர தண்ணீர்ப்புழக்கத்தின் போதும்தண்ணீர்பட்டு தண்ணீர் பட்டு இற்றுப்போயிருந்த தகரம் பிய்ந்து தொங்கிப் போய் உதிர்ந்து காணப் பட்டது.

தினந்தோறும் பாத்ரூம் போகும் போதும் குளிக்கிற போதும் முதல் வேலை யாக் முருகதாஸைப்பார்த்து கதவை சரி செய்யச் சொல்ல வேண்டும் என நினைத்துக்கொள்வதுண்டுதான்/

தச்சு வேலை பார்க்கிற முருகதாஸை எப்பொழுதிலிருந்து பழக்கம் என சரியாகத் தெரியாவிட்டாலும் கூட அவர்களுக்குள்ளாய் பழக்கம் ஏற்பட்டு பத்து வருடங்களுக்கு மேலாக இருக்கும் என உறுதியாக ஆணியடித்துக் கூறி விட முடிகிறது.

இவன்,சேகரன்,பாண்டித்துரை,கண்ணன் என ஆனந்தா ஹோட்டலில் எப்பொ ழுதாவது சந்திக்கிற நாட்களில் நேரங்காலமில்லாமல் பேசிக் கொண்டிருக் கிற பேச்சின் ஊடாக முருகதாஸீம் கலந்து கொள்வார்.

இதில் சேகரனும் பாண்டித்துரையும் தன் வாழ்நிலையை பொது வெளிகளில் ஒப்படைத்து விட்டார்கள்.பொதுவாழ்க்கைகென அர்ப்பணிக்கப்பட்ட அவர்க ளது வாழ்க்கை திரும்புகிற திசையெல்லாம் எப்பஒழுதும் போல கசப்பும் இனிப்பும் இன்னும் பல சுவை கலந்துமாய் இருந்தது. போஸ்டர் கொடி தோர ணம் தட்டி போர்டு நோட்டீஸ் ,,,,என இன்னும் இன்னுமான வேலைகளோடு அவர்கள்கை கோர்த்து நிற்கிற போது இவனுக்குக்கொஞ்சம் பொறாமையாகக் கூட இருந்திருக்கிறது.

அந்தநேரங்களில் கண்ணன் அரசு வேலை ஒன்றில் ஐக்கியமாகி காக்கி உடை யுடன் நிற்கிறார்.இவன் ஒரு காலூன்றாத நிலையற்ற வேலையில் என்கிற உருக்கள் தாங்கி இருந்த நாட்களில் நிகழ்கிறசந்திப்பின்நூழிலையில் அறிமுக மானமுருகதாஸ்இப்பொழுதுநகரில்முக்கியவேலைக்காரராக/ஆடிட்டர்வைத்து கணக்கு வழக்கு பார்த்துக் கொள்கிற அளவிற்கு சொந்த வீடு இரு சக்கர வாகனம் பிள்ளைகளின் இங்கிலீஸ் மீடியப் படிப்பு என செட்லாகிப் போனான்.

நல்லதான மழை நாளின் மாலை நேரமொன்றில் தூவானம் போட்டுக் கொண் டிருந்த தூறலின் ஊடாக அவரது மரப்பட்டறையில் வைத்து அவரைப்பார்த்து விஷயத்தைச்சொன்னமறுநாளில்வந்துபாத்ரூம்கதவைசரிசெய்துகொடுத்தார்,

அவரும்வேலைபார்க்கவருகிறபோதெல்லாம்சொல்வதுண்டு.அண்ணேஒண்ணு பேசாம கதவ மாத்துங்க இல்ல நாகத்தகடு வாங்கி அடிச்சுருங்க என/

ஆனால்அவர்சொல்லிப்போன நாளிலிருந்து இன்று வரை இவன் கதவை மாற் றவோஅல்லதுநாகத்தகடுஅடிக்கவோஇல்லை.அதற்குக்காரணம்சோம்பேறித் தனமோ அல்லது கையில் காசில்லாமலோ இல்லை,

ஏதோ ஒரு நிலை அல்லது ஏதோ ஒரு வேலை கவனம் காரணமாகத் தட்டிக் கொண்டு போய் விடுகிறதுதான். காலை வெயிலின் சுகந்தத்தை சுகித்தவனாய் ஒரு நாளன்றின் காலையில் டீ குடித்துக்கொண்டிருக்கும்போது அங்கு அவ் வழியாகப்போனமுருகதாஸ்இவனைப் பார்த்ததுமாய் நின்று விட்டார்,

இவனது பழக்கம்தான் தெரியுமே ஊருக்கெல்லாம்,யாராவது நெருக்கமான வர்களைப்பார்த்தால் உடனேஅடுத்தவார்த்தைடீக்குடிக்கிறீர்களா எனக் கேட்
பது தானே,,,?

அது போலவே முருகதாஸைப் பாத்துக்கேட்டதும்தான் அவனது முகத்தைப் பார்க்கிறான்.என்ன இது இப்படி சூம்பிப்போய்க்கிடக்கிறது முகம்.ஏன் இப்படி யாய் அணைந்து போய்க்கிடக்கிறான் எனநினைத்துக் கேட்டபோது பின்ன எண் ணண்னே பிடிக்கலைன்னா பேசாம இருந்துட்டு போக வேண்டியது தான, ஏன் இப்பிடி வம்புபண்றாங்கஎண்ணையப்போட்டுஎன சேகரனும் பாண்டித் துரை யும் தன்னை அவர்கள் பக்கமாய் இழுக்கப்பார்க்கிறார்கள் என இவனிடம் சொன்ன போது இவன் பொத்தாம் பொதுவாக சொல்லி வைத்தான். உங்கள் மனதுக்கு எது சரி எனப்படுகிறதோ அதைச்செய்யுங்கள் என/

அந்த சொல்லில் கட்டிப்பொதித்து வைக்கப்பட்டிருக்கிற சொற்கட்டுகள் பாய் டீக்கடையில் நிற்கிற காலை மாலை வேலைகளின் ரம்யத்தில் உணர முடிகி றது.

3 comments:

துரை செல்வராஜூ said...

>>> நல்லதான மழை நாளின் மாலை நேரமொன்றில் தூவானம் போட்டுக் கொண்டிருந்த தூறலின் ஊடாக..<<<

வளமான சொற்கள்..

நடை நயம்.. வாழ்க நலம்!..

துரை செல்வராஜூ said...

அன்பின் இனிய தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துகள்!..

vimalanperali said...

வணக்கம் துரை செல்வராஜ் சார்,
நன்றி வருகைக்கும்,வாழ்த்திற்குமாய்/
இனிய தமிழ் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்/