2 May 2016

தார்ச்சாலை,,,,


அந்த சாலையில் இருக்கிற இவனுக்குப்பிடித்த கடைகள் இரண்டில் ஒன்றில் தான் ரமேஷ் அடிக்கடி சாப்பிடுவதுண்டு.

ரமேஷீ,ரமேஷீகடைக்குவந்துரு இன்னைக்கு,எனப்பாடுகிறதுபோல இருக்கும் இவன் கடைக்குப்போகிற நாட்களில்/

இரண்டு பூரிகளும் ஒரு வடையும்,சின்னதான் தோசை ஒன்றும் சாப்பிடுவதே ரமேஷின் வழக்கமாய் இருந்தது.

அதென்னவோ தெரியவில்லை, ரமேஷ் வாங்குகிற பூரியில் ஒன்று உப்பி தலையணைசைஸிலும்,இன்னொன்றுசப்பொனவத்திஒட்டிபோயுமாய்இருக்கும். இதில் சப்பென வத்திப் போயிருக்கிற பூரியின் மீது வைக்கப்பட்டிருக்கிற உப்பிப் போன பூரி மெலிந்த பூரியின் மீது ஏறி சவாரி செய்து நிற்பது போலிரு க்கும்.

கடைக்காரர் கூடக் கேட்பார், உங்களின் பதிவான சாப்பாடா இது என தினசரி களில் இல்லாமல் மாதத்தில் சில நாட்கள் மட்டுமே வந்து போகிற ரமேஷை பெயர் சொல்லிக் கூப்புடுகிற அளவிற்கு நெருக்கமாகிபோன கடைக்காரரை ரமேஷிற்கு மிகவும் பிடித்துப்போனதுண்டு.

கடைக்காரரின் கேள்விக்கு ஒரு மாதம் கழித்துத்தான் பதில்கிடைத்தது. அதுவும் ரமேஷ் சொல்லியே,,,/

வெள்ளை வேஷ்டியும் ஏதாவது ஒரு கலர் சட்டையுடனுமாயும் மெலிந்து புது நிறம் கொண்ட தோற்றத்துடனுமாய் காணப்படுகிற அவர் தினசரி ரோமக் கட்டைதட்டாத சேவிங் செய்வதில்ஆர்வமகொண்டவராயும் பளிச்சென்ற தோற்றத்துடனுமாய் காட்சி தருவார். கசக்கிக்கட்டுகிற கந்தையைப்போல/ கேட்டால் இப்படி இருக்க எனக்குப் பிடிக்கிறதுஎன்கிறார்.

அடர்நிறச் சட்டைக்குவெளிர் நிறபேண்ட்டும்,வெளிர்நிறச்சட்டைக்கு அடர் நிற பேண்ட்டுமாய் அணிந்து கொள்கிற ரமேஷ் முழுக்கைச்சட்டை அரைகை சட்டை என மாறி மாறி அணிவதிலுமாய் பிரியம் காட்டுவான்.

திருமணத்திற்கு முன்பான வயதிலிருந்து இப்பொழுதான இந்த52 வயது வரை இப்படித்தான் இருக்கிறான். என்ன முன்பெல்லாம் ப்ளென்க்கலர் சட்டைகள் அணிவதில்லை.இப்பொழுது அணிகிறான்.முன்பு போட்ட ஜிப்பாகளை இப்பொ ழுதுகண்ணால்கூட ஏறிட்டுப்பார்ப்பதில்லை.கட்டம் போட்டது என்றால் அரைக் கை,கோடு போட்டது என்றால் முழுக்கைச்சட்டை என்கிற ஒழுங்கு இருந்தது. அந்த ஒழுங்குகறுப்புக்கலர் பேண்ட் போடாத காலங்களிலும் கூட இப்பொழுது வரைஇருக்கிறது.

ஸ்டார் ஸ்டார் டெய்லர் ரமேஷைஇப்பொழுது பார்த்தால் கூட கேட்பார்.என்ன சார் முன்பு போல் இப்பொழுது கடைக்கு வருவதில்லை என,எங்க சார் இப்ப புள்ளைங்களுக்குதுணிஎடுக்கவும்அதத்தச்சிப்போடவுமேநேரம்சரியாஇருக்கு
என/

அது சமாளிப்பான வார்த்தை என்பது டெய்லருக்கு நன்றாகவே தெரிந்திருந் தது.

ரமேஷின் பிள்ளைகள் துணி எடுத்து தைப்பதெல்லாம் இல்லை. எல்லாம் ரெடிமேட்தான்.துணிஎடுத்துதைப்பதெல்லாம்எனக்கு செட்டாவது என்கிறான் பெரிய மகன்,உடை அணிவதில் அவனது டேஸ்ட்வேறு மாதிரியாகஇருக்கும்.

ஆனால் சின்ன மகளின் டேஸ்ட் இதிலிருந்து முற்றிலுமாக வேறு பட்டே/ அவளுக்கு ஆடைகள் கண்ணை உறுத்தாமல் இருக்க வேண்டும். மற்றபடி பெரிதாக ஒன்றும் எதிர்பார்ப்பு இருந்ததில்லை அவளிடம்/

சிம்ப்லிபெஸ்டாகஇருந்தால் போதும் என்பதுஅவளது ஆழமானகருத்து.பெரிய வன் ஆயிரம் ரூபாய்களில் நின்றால் சின்னவள் 500 அல்லது அதற்கும் குறை வாகபோதும்என்பாள்.இரண்டுபேரும்உடைசம்பந்தமாகபேசினார்கள் என்றால் வீட்டில் அன்று பானிப்பட் யுத்தம் நடப்பது உறுதி.

ரமேஷிற்குக்கூட அக்கா எடுத்துக்கொடுத்த பேண்டும் சர்ட்டும் ஒரு வருடமா கியும்இன்னும் பீரோவிற்குள்ளாய் தூங்குகிறது.ஏன் அப்படி எனத் தெரியவில் லை.இப்பொழுதெல்லாம்அப்படித்தான்வைத்துக்கொள்ளத்தோணுகிறது.அளவா க மூன்று அல்லது நான்கு செட்கள் மட்டுமே பேண்ட சர்ட் வைத்திருந்தால் போதும் எனவுமாயும்,ஒரு பேண்டோ அல்லது சர்ட்டோ கிழிந்து போவதற்கு ஒரு மாதம் அல்லது இரண்டு மாதங்களுக்கு முன்பாக எது கிழிந்து போகப்போகிறது என்பதறிந்து அதை எடுத்து வைத்துக்கொள்வது எனும் வழக்கத்தை.

ஆறு மாதங்களுக்கு முன்பாக இப்படித்தான் கிழிந்து போகிற நிலையில் இருக் கிற சட்டையை போட்டுக்கொண்டு அலுவலகம் சென்று விட்டான்.வேலை பார்த்துக்கொண்டிருந்த மதிய வேளையாக சட்டையின் வலது பக்கத்தில் அக்குள் ஓரமாய் கிழிந்து விட்டது.வேலை மும்பரத்தில் அது கூட ரமேஷு ற்குத் தெரியவில்லை.உடன் வேலை பார்க்கிற முத்தண்ணா சொல்லித்தான் தெரிந்தது.சாப்பிட்டு முடித்து விட்டு கை கழுவும் பொழுது/எண்ணண்னே சட்ட கிழிஞ்சிருக்கு என/

அன்று சாய்ங்காலம் வந்து பார்த்தால் வீட்டில் வேறு சட்டைகள் இல்லை.ஒரு சட்டை அழுக்காகிக் கிடந்தது.மடித்து வைக்கப்பட்டிருந்த டீசர்ட்டுகள் இரண்டு தான் பீரோவில் இருந்தது.அன்றிலிருந்து வந்ததுதான் இந்தப்பழக்கம்.

அம்மாதிரியானஒரு பேண்டுடனோ அல்லது சர்ட்டுடனோ கடைக்காரர் முன் பாக ரமேஷ் வந்து நிற்கிற சமயங்களில் சொல்வதுண்டு.

செலவழிந்துபோகிறதுபணம் என நினைத்தெல்லாம் வேறெதுவுமாய் வாங்கிச் சாப்பிடாமல் இல்லை.

வயிற்றுக்குஒத்துகொள்ளவில்லை வெண் பொங்கல் சாப்பிட்டால், இட்லி சாப்பிட்டால்வயிற்றுக்குள்ளாய்கல்லைப்போட்டதுபோல்இருக்கிறது.அதனால் தான்இதுபோலானஒரேஅயிட்டங்களைதேர்வுசெய்துசாப்பிட்டுக்கொண்டிருக்கி றேன்.என்பான் ரமேஷ்/

பூரிக்கு இவன் பொதுவாக கிழங்குவாங்கிவைத்துக்கொள்வதில்லை.சாம்பார் சட்னிதான்,ஆனந்தா ஹோட்டலில் ஏற்பட்ட பழக்கம் இது.

ரமேஷும்சோமசேகரனும் வாசனும் கண்ணனும் முருகனும் இன்னும் இன்னு மாய் பெயர் ஞாபக வைத்துக்கொள்ளாத நண்பர்களுமாக இயக்க வேலைகள் பார்த்துக்கொண்டிருந்த காலங்களில் கணக்கு வைத்துச்சாப்பிடுவான்.

கொடிகட்டபோஸ்டர்ஒட்டதோரணம்கட்ட,,,,,,,,,,இன்னும் இன்னுமான வேலை களுடன் அவ்வப்பொழுது கிராமங்களின் பக்கம் பிரச்சாரம் போக என இருந்த காலங்களிலும் பெரும்பாலுமாய் இரவு தூக்கமற்றுத்திரிந்த நாட்க ளிலும் அங்குதான் சாப்பிடுவான்,

முதல் நாள் இரவு இரண்டாவது ஷோ சினிமா பார்த்து விட்டு வந்தவன் மறு நாள்இரவுராஜேந்திரன்வீட்டில் இயக்க வேலையாய் தோரணம் ஒட்டிக் கொண் டிருக்கும் போது மயங்கி விழுந்திருக்கிறான்,மயக்கம் தெளிந்து எழுந்து உட்கா ர்ந்த பின் ராஜேந்திரன்தான் சொன்னார்,அப்பொழுதுதான் கிண்டிய சூடான உப்புமாவை கையில் வைத்துக்கொண்டே, என்ன இன்னும் சாப்புடலையா,,,, ஏன் இப்பிடி என கடிந்து கொண்டவர் எங்களுக்கு பழக்கம் பசி பட்னி எல்லாம்,,,,, எனச்சொன்னவாறே நீங்க மயக்கமாக்கி விழுந்தத கேட்ட ஒடனே ஓடி வந்த ஆனந்தா ஓட்டல்க்காரர்தான் இப்ப உப்புமா கிண்டிக்குடுத்து உட்டாரு, எதா இருந்தாலும் மொதல்ல சாப்புடச்சொல்லு தம்பிய ,அப்பறம் பேசிக்கிறுவோம்மத்ததெல்லாம்என அவர்சொன்னதாக ராஜேந்திரன் சொன்ன போது இவனுக்கு கண்களில் நீர் கட்டிவிட்டது.

வேலைநிமித்தமாகஇங்குரூம் எடுத்து தங்கியிருந்த பொழுதுகளில் கொள்கை பேசித்திரிந்த இவர்கள்தான் பின்னால் சோம சேகரனும்,வாசனும்,,,,,இன்னும் பிறருமான இயக்க வாதிகளாய்உருப்பெற்றுத் தெரிந்தார்கள்.அவர்களுடனான சேர்க்கைக்கும்,கைகோர்த்தலுக்கும்பின்தான்இவனுக்குஸ்தெப்பிப்புல்வெளியும், சிங்கிஸ் ஐத்மாத்தவும்,கார்க்கியும், அன்னை வயலும் அறிமுகமானது.

ஜெயகாந்தனையும் புதுமைப்பித்தனையும், இன்னும் இன்னமுமானவர்களை படிக்கவைத்ததும்அவர்களதுசேர்க்கையின்முனைவேஎனலாம்.டேய்என்னடா இது எதுவும் தெரியாத மக்குப்பயலா இருந்த இப்ப அடிபிண்றயேப்பா,,,,என ஊரார்கள் ஆச்சரியப்பட்டு பேசுகிற அளவிற்கு வளர்ந்து போனான்.

ஊர்பாஷை நன்றாக இருந்தால் வாழ்த்தும், கெட்டுப் போனால் தூற்றும். இந்த இரண்டுமற்று ரமேஷ் செய்து கொண்டது ஒரு விதமானகாம்ரமைஸ் ஒப்பந் தமே.

அலுவலகவேலை,இயக்க வேலை படிப்பு சாப்பாடு தூக்கம்,,,,என்கிற இவனின் முனைப்பானவேலைகளுக்கு மத்தியிலிலும்கூடவாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று தினங்கள்இரவுஇரண்டாவது ஆட்டம் சினிமா பார்த்து விடுவான் கண்டிப்பாக/ இது எப்படி ஒங்களாலமுடியுது ஒங்களால இவ்வளவு டைட் செட்யூல்டுக்குப் பின்னாடியும் என்பார் சோம சேகர்,

அதற்கு ரமேஷ் சொல்கிற பதில் இதுவாகத்தான் இருக்கும் நீங்க மட்டும் என்ன வேலை எப்படிக்கிடந்த போதும் கமல் படத்துக்கு மொதல் ஷோ பாக்கப் போயி நிக்கிறீங்கில்ல,அது போலத்தான் நாங்களெள்லாம்,என்ன நீங்க மொதல் நாளு மொத ஷோ,நாங்கஏதாவது ஒரு நாளு ஏதாவது ஒரு ஷோ அவ்வளவு தான் வித்தியாசம் என சோமசேகரிடம் சொன்னபோது எல்லோருமே இங்கு அப்படித்தான்,ஆனால்இயக்கம்எனவரும்பொழுதுகொள்கையில்கைகோர்த்து  நிற்போம்/என்றார்கள் மற்ற அனைவரும் கோரஸாக,/

ஆனால் ராஜேந்திரன் இதிலிருந்து கொஞ்சம் வித்தியாசப்பட்டு நிற்பார், இரவு இரண்டாவது ஆட்டம் சினிமா பார்த்து விட்டு வந்தால் மறுநாள் எனது பிழைப்புப்போய் விடும் காலையில் நான்கு மணிக்கு எழுந்து நியூஸ் பேப்பர் போட போக வேண்டும். அது முடியவே காலை மணி ஒன்பது ஆகிப் போகும். அப்புறமாய்வந்து குளித்து முடித்துவிட்டு சாப்பிட்டு விட்டு வீட்டுப் பாடுக ளைப்பார்க்கஇயக்க வேலை என சரியாய் இருக்கும் பொழுது, இதற்குள்ளாக கிடைக்கிற நேரத்தில் மதியம் கொஞ்சம் தூங்க வேண்டும் அப்பொழுதுதான் மறுநாள் ஓட முடியும் என்கிற பேச்சுக்கிற்கு ஊடாக தான் வாரம் வாரம் கறி எடுத்து சாப்பிடும்ரகசியத்தைச் சொன்னார் ஒரு நாள்.

ஞாயிற்றுக்கிழமைகளின் மதியம் கால்க்கிலோ ஆட்டுக் கறி எடுத்து அதை தான் மட்டுமாய் வதக்கிச்சாப்பிடும் ரகசியம் சொன்ன மறு நாளில் இருந்து அவரிடம்இன்னும் கொஞ்சம் ஒட்டுதல் ஜாஸ்தியாகிப் போனது தான்,

அது தனக்கும் கொஞ்சம் கறி கிடைக்கும் வாய்ப்புண்டு என்கிற ஆசை யினால் இல்லை.இப்படி ஓடியாடித்திரிகிற மனிதர்இது போலாய் ஏதாவது சாப்பிட்டால் தான் கொஞ்சம் உடல் தெம்பு கிடைக்கும் என்கிற அவரது முடி வில் இவனுக்கும் ஏற்பட்ட உடன்பாடுதான்/

அவர்அப்படிகறிசாப்பிடுகிற நாட்களில் மனைவியுடன்சினிமா போய் விடுவா ர், சினிமாப்போய் விட்டுவந்தமறுநாட்களில் அவர் ரமேஷைப்பார்க்கிற போது அவர் போய்விட்டு வந்த சினிமாவைப் பற்றி சொல்லும் போது ஊடாகச்சொ ல்லுவார்,ஒங்கள மாதிரிநான் ராத்திரி ரெண்டாவது ஆட்டம் சினிமாவுக்கெல் லாம் போக முடியாது,ஏன்னா ஏங்கூட என்னையநம்பி ஒருத்தி இருக்கா, அவளையும் பாக்கணுமில்ல என்பார்,

இப்படியாய் பேசித்திரிந்தும் இயக்கங்களில் கால்ப்பதித்த காலங்களில் சாப்பிட்ட சாப்பாடு இப்போதும் நினைவிற்கு வருவதாக/

தினசரி காலையிலும் இரவிலும் ஆனந்தா ஹோட்டலிதான் ரமேஷீற்கு டிபன். மொத்தமாக நான்கு அல்லது ஐந்து பூரிகள் வாங்குவான்.பின் அதை ஒன்றின் மீது ஒன்றாக அடுக்கி வைத்து சாம்பார் ஊற்றச்செய்து இலையில் வலது ஓரமாய் வைக்கப்பட்டிருக்கிற சட்னியை தொட்டுச் சாப்பிடுவான்.

முதலாளிதான் சாம்பாரைக்கொண்டு வந்து ஊற்றுவார்,அந்தக்கடையின் சரக்கு மாஸ்டர் அவர்.

அவரைத்தான் ரமேஷ் முதலாளிஎன்று அழைத்தான்.அந்தக்கடையில்டீஆற்று வதிலிருந்து இரவு புரோட்டாப்போடுவது வரை அவர்தான். ரமேஷ் அவரை முதலாளி எனக் கூப்பிடுவதும்,அவர் ரமேஷை முதலாளி எனக்கூப்பிடுவதும் அவர்களுக்குள்ளாக எப்பொழுது சுழியிட்டது எனத்தெரியவில்லை.

ஆனால் அந்தசுழியிடலில்பிறந்த வார்தைக்கோர்வைகள் ஒன்றும்பெரியதான வித்தியாசங்களில் தெரிபட்டுத் தெரிந்ததில்லை.அதுவரை சந்தோஷம் என ரமேஷீம் முதலாளி ஊற்றிய சாம்பாரில் ஊறிய பூரியை சாப்பிட்டுப்பழகியே வந்து விட்டான்.

அப்படியாய் பழகிய அந்தப்பழக்கம் இதுநாள் வரை இவனது நாக்கை விட்டு அகலாமலேயே/

ஆனால் கடைதான் வேறாய் போய்விட்டது, ஆனந்தா இல்லை,கனி டீஸ்டால் அண்ட் ஹோட்டலாக இடமும் காலமும் ருசியும் ஆட்களுமாய்மாறித்தெரிந் தார்கள்/

2 comments:

துரை செல்வராஜூ said...

>>> இடமும் காலமும் ருசியும் ஆட்களுமாய் மாறித் தெரிந்தார்கள் <<<

மறுபடியும் எப்போது கிடைக்கும் அந்த சுவை!?..

vimalanperali said...

வணக்கம் துரை செல்வராஜ் சார்,
நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/