24 Jun 2016

பச்சாதாபம்,,,

கால் பரப்பிப்படுத்துக்கிடந்த
நாய்க்குட்டிகளை
கனத்த குரல் கொண்டோ
மென்மை காட்டியோ
விரட்ட எத்தனிக்கிறேன்.
முந்தைய தினங்களுக்கு
முந்தைய தினங்களிலான
இரவுகளிலும் பகலிலுமாய்
கொட்டப்பட்டிருந்த மணல்
கால் பாவிக்கிடந்த இடத்தின்
அருகாய்காட்சிப்பட்டிருந்த
கட்டிடத்தின் பிம்பம்
என்னைப்பார்த்து கண் சிமிட்டி சிரிப்பதாக.
உந்தி மிதித்த இரு சக்கர வாகனத்தின்
விசைஎன்னைக்கூட்டிக்கொண்டு போய்
வந்து சேர்த்த பின்புமாய்
அதே இடத்தில் அதே நாய்கள்
கால் பாவியும் இளைப்பாறியுமாய்,,/
குவித்துக் கொட்டப்பட்டிருந்த
மணலின் நடுவிலாக/
இப்பொழுது முன்பு பார்த்ததைவிட
சற்றே இளைத்தும்,பரிதாபம்
காட்டியுமாய்,,/

8 comments:

”தளிர் சுரேஷ்” said...

காட்சியை கவிதையாக்கிய விதம் அருமை!

KILLERGEE Devakottai said...

கவிதை வழியாய் நானும் கண்டேன் நண்பரே அருமை
தமிழ் மணம் 2

துரை செல்வராஜூ said...

கவிநயம்.. காட்சி நிதர்சனம்!..

அருமை..அழகு..

வாழ்க நலம்!..

தி.தமிழ் இளங்கோ said...

எதார்த்தமான கவிதை. நாய்களும், பூனைகளும் தங்களது வாழ்வில் தூக்கத்திலும் ஒரு சுகத்தை அனுபவித்து உறங்கும் இயல்பின.

vimalanperali said...

வணக்கம் தமிழ் இளங்கோ சார்,
நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/

vimalanperali said...

வணக்கம் துரை செல்வராஜூ சார்,
நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/

vimalanperali said...

வணக்கம் கில்லர் ஜி தேவகோட்டை சார்,
நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/

vimalanperali said...

வணக்கம் தளிர் சுரேஷ் சார்,
நன்றி கருத்துரைக்கும்,வருகைக்குமாய்/