3 Jul 2016

பொய்ப்பாடு,,,,,,


தோணி விடுகிறதுதான் அந்த நேரத்திலும் அந்த இடத்திலுமாய்,தோணிய எண்ணத்தின் முளை தேடியும் மூலம் தேடியுமாய் அலைய முடியாது அல்லது அலைவது வேஸ்ட் இல்லை அபத்தம் .அதனால் தோணிய எண்ணத் தை முன் கையாக முந்திக்கொண்டு தவறென சொல்கிற தைரியம் இவனுக் கில்லை.

ஆனால் இவனது பையனுக்கிருந்தது,இளங்கன்று,பயம் அறிவதற்கு ஒன்று மி ல்லை என்ற போதிலும் துணிந்து சொல்ல மனமிருந்தது. மீசையும் ஆசையும் சேர்ந்து வளந்து விட்ட வயது.

பள்ளியின் இறுதி வகுப்பு முடித்து நிற்கிறான். என்ன படிப்பு என்ன மார்க், அடுத்த படிப்பு என்ன என்றால் வானத்தை அண்ணாந்து பார்த்து கற்பனையில் மிதக்காமல் யதார்த்தத்தில் காலூன்றி நிற்பவன்.ரொம்பவும்தான் பிராக்டிக்கல் என்பான் உடன் படிப்பவன்.

ஆனால் அந்தப்பிராக்டிக்கல் நிறைய இடங்களில் உதவுவதோ கொடுப்பதோ இல்லை.என்ன செய்ய அந்த மாதிரியான இடங்களில் அரிதாரம் பூசித்தான் ஆக வேண்டியிருக்கிறது.என்பதுமாய்ச்சொல்வான்/

சரிபூசிக்கொள்இந்தமாதிரியான இடத்தில் அரிதாரம் பூசித்தான் ஆகவேண்டும் இருக்கிறது.என்பதுமாய்ச்சொல்வான்.சரிபூசிக்கொள்இந்தஇடத்தில்இப்படித்தான் நடந்து கொள்ள வேண்டும் என்றால் தவறில்லை.என்பது போலான இவனது பச்சைவிளக்கும்தலையாட்டலும் அவனை அது போலாய் மேலும் கொஞ்சம் இயங்க வைக்கும்.அப்படியாய் அவன் இயங்குகிற வேளைகளில் இவனில் இருக்கிற இயங்கு திசை இயக்கம் மேற்கொண்ட அந்த எண்ணம் சரிதானா என கேள்வி கொள்ள வைக்கும்.

காலையில் எழுந்திரிக்கும் போதே இவனில் சுழியிட்டு விடுகிற அந்தியந்த மனோநிலையும் உடல் அசதியும் இவனில் கை கோர்க்க இன்று அலுவலகத் திற்கு விடுப்புப்போட்டு விடலாம் என்கிற எண்ணத்தை விதைக்கிறது. இது போலான நேரங்களில் வாக்கிங்க் போவது மட்டுமல்ல, பக்கத்திலிருக்கிற வீதிமுக்குக்கடைக்குடீக்குடிக்கப்போவது கூட தள்ளி வைக்கப் பட்டிருக்கிறது. அதிகாலையின் நான்கே முக்கால் மணிக்கே டீக்குடிக்க போக வேண்டுமா னால்மெயின் ரோட்டின் முக்கிற்கு போக வேண்டும்,போன மாதத்தின் தூக்கம் வராத ஒரு நாள் அதிகாலையின் நாலே கால் மணிக்கு மெயின் ரோட்டிற்கு டீ சாப்பிட வந்த இடத்தில் ரோட்டில் ரோந்து பணிக்கு நின்றிருந்த போலீஸ்க் காரர் ஒருவர் இவனையும் இவன் சென்ற இரு சக்கர வாகனத்தையும் நிறுத்தி வாயை ஊதிக்காட்டு என்றார்,

“சார் என்ன சார் இது இந்த அதிகாலை நேரத்துல எந்தக்கடை சார் தெறந்து வச்சிருக்கான்,நான் போய் குடிச்சிட்டு வர,என்று கேட்ட போது போலீஸ்க் காரர் சொன்ன பதில் தான் வேடிக்கையாக இருந்தது,நீ ஒரு வேளை நைட் குடிச்சிருந்தையின்னா,இல்லகாலையில் எந்திரிச்ச ஒடனே கொஞ்சம் ஊத்திக் கிட்டுவந்துருந்தையின்னா,,,,,,,,என்றபோதுசிரித்துவிட்டான்இவனையும் அறியாமல்,சார் நான் அப்பிடியெல்லாம் இல்லை,தூக்கக் கலக் கத் துல ஏங் கை பிடிச்சிருந்த வண்டி தள்ளமாடியிருக்கலாம்.அதுக்காக இப்பிடி குடிச்சிருக் கேன்னு சந்தேகப்படுவது சரியில்ல சார் என்ற போது,இவனது வீட்டு முகவரி வேலை பார்க்கிற இடம்,,,,,,எல்லாம் கேட்டுவிட்டு வேலையைச் சொன்ன வுடன் விட்டுவிட்டார்,இத மொதல்லயே சொல்லீருக்கக்கூடாதா என/

டீக்கடைக்காரர்விஷயத்தைகேட்டுவிட்டுவாய் கொள்ள மாட்டாமல் சிரித்தார், அட சண்டாளப்பாவமே, ஒங்களப் பாத்து இப்பிடி ஒரு கேள்வி கேட்டவருக்கு என்னிய மாதிரி ஆட்களப்பாத்து கேக்கணுன்னு ஏந்தோணமாட்டுதுண்ணு தெரியலசார் என்றார்.

நான் வருசமெல்லாம் தண்ணி போட்டுட்டு திரியிற ஆளுதான்.இவ்வளவு ஏன் சமயத்துல அவுங்க முன்னாடியே தண்ணி போட்டுக்கிட்டு வண்டிய ஓட்டிருக் கேன். அப்பவெல்லாம் புடிக்காதவுங்க,இப்ப பாவமேன்னு டீக்குடிக்க வந்த ஒங்களப் போயி,,,,,,எனசொல்லி விட்டு டீயை ஆற்றிக்கொடுத்தார்.

முன்பெல்லாம் 24 மணி நேரமுமாய் திறந்திருந்த டீக்கடைகள் உண்டு,அந்த 24 மணி நேரக்கடை களில் மூன்று சிப்ட்டுக்கு என மாறுகிற மாஸ்டர்களின் கைப்பக் குவத்திற்காகவும் ருசிக்காகவும் டீக்குடிக்க வருகிறவர்கள் நிறைய பேரைக் காணலாம்.

இப்பொழுது 24 மணி நேர டீக்கடைகளையும் காணோம் மாஸ்டர்களையும் காணோம்.

இரவு12மணியோடுசரி.டீக்கடைகளின்திறப்பு,அப்புறம்மறுநாள்தான்.இடையில்  ஊர் எங்கும் தேடினாலும் கிடைக்காது.

என்றாவது விழிப்பது போல அன்றைக்கும் சீக்கிரம் விழித்து விட்டான்.எழுந் தமர்ந்துவிட்ட நான்கு மணிக்கு திரும்பவு மாய் போய் படுத்து விட முடியாது. வேண்டாம் என நேரடியாக பாத்ரூம் போய் முகம் கூடகழுவாமல் குளித்து விடுவான்.வெயில்காலங்களில்அப்படியாய்குளிக்கையில்ஒன்றும்தெரியாது,  குளிர் மாதங்களில்தான் தெரியும் சிரமம்.இருந்தாலும் குளிர் பாராது குளித்து விடுவான்.

இது போலாய் முன்னெழுகிற காலையில் ஒன்றும் பெரிதாய் தெரிவதில்லை சிரமம்.ஊரே உறங்கிக்கொண்டிருக்கிற முக்கால் வாசி விடிந்த இரவு பொழுதில் குளித்து முடித்து விட்டு ப்ரெஸ்ஸாக வருபவன் பெரும்பாலுமாக பல்விளக்கப் போவதற்குமுன்பாக எப் எம் ரோடியோவைப்போட்டுவிடு வான்.

அதிகாலை நான்கு மணிக்கு குளித்த நீரின் குளிர்ச்சி எப் எம்மில் இருந்து வருகிற பாடல்களில் தெரியும்.அத்தனையும் அப்படி ஒரு மெலடி.

வீட்டில் இருக்கிற பென் டிரைவ்களில்ஒன்றில் மெலடி நிரம்பியும் மற்றொன் றில் அது இல்லாமல் எல்லாம் கலந்துமாய்/சின்ன மகள் இதில் கருத்து வித்தியாசம் கொள்வாள்.இதுல நான் கேட்பதும் மெலடிதான் கேளுங்கள் என்பாள்.அவளுக்கானால் இப்பொழுது இருக்கிற வருகிற புதுப்பாடல்களில் சிலவற்றை எந்த அளவிற்கு ரசிக்கிறாளோ அதே அளவிற்கு இடை நிலை காலங்களில் வந்த பாடல்களையும் ரசிப்பாள்.இப்பொழுது அவள் கேட்கும் பாடல்களில் சில இவனுக்கு பிடித்துப் போன லிஸ்டில்/

அது போலவே மனம் பிடித்தும் மெலடி கொண்டுமான பாடல்களின் கை பிடித்தவாறும் அவைகளை மனமேற்றிக் கொண்டுமாய் வாசலில் போய் நிற்பான் பல்துலக்கியவாறே/

இதே வாசலில் எத்தனையோதரம்இப்படியாய்பாடல்களை கேட்டுக் கொண் டோ அது அற்றுமாய் வந்து நின்றிருக்கிறான்.போன இரண்டு நாட்களுக்கு முன்பாக தூக்கம் வராமல் இரவின் இரண்டரை மணிக்கு அரை விழிப்புடன் வெளியில் வந்து நின்று கொண்டிருந்தான்.

அக்கம்பக்கமும் எதிர் சாரி வெற்று வெளியும் தெரு விளக்கின்வெளிச்சத்தில் தூக்கம் பிடித்துத்தெரிய இவன் மட்டுமாய் வாசலில் நின்று கொண்டோ அல்லது அமர்ந்து கொண்டோ,,,/

எதிர்சாரியில் வீடுகள் முளைத்திருந்தஇடம் போக இருந்த வெற்று வெளியில் தரைகீறிநின்றிருந்தசீமைக்கருவேலை மரங்கள் பெரிதாயும் அகலம் விரித்துப் படர்ந்துமாய்/அதனுள்ளாய் பற்றிப்படர்ந்து தெரிகிற பூச்சிகளும் புழுக்களும் எறும்புகளுமாக அதைத்தாண்டிய ஊர்வனவான பாம்புகளும் கீறிப்பிள்ளைக ளுமாய்இந்நேரம் எங்கு போய் திரியுமோ அல்லது அடைந்திருக்குமோ தெரிய வில்லைஎன்கிறஎண்ணத்துடனாய்/

அப்பொழுதாய் அந்த வேளையில் எழுதுகிற படிக்கிற கேட்கிற யாவும் மனதின் அருகாமையாய் ஓடோடி வந்து ஒட்டிக் கொள்கிற உணர்வுடனும் வைபவ முடனுமாய் பட்டுத்தெரியும்.ஆனாலும் கூட இந்த அதிகாலையின் ரம்யத் திற்கு ஈடாகித்டெரிவதில்லைதான்.தரை பட்டுத்தெரிகிற புல் கூட சிலிர்ப்புற்று அழகாகக்காணப்படுவதாய்/

இது போலாய் மென்மை வாய்ந்த பாடல்களையும் அதிலும் குறிப்பிட்ட இசை அமைப்பாளரின் பாடல்களை எப்பொழுதிலிருந்து கேட்க வாய்க்கப்பெற்றது என இவனுக்கு சரியாக ஞாபகமில்லைஎன்கிறபோதும் உத்தேசமாக இன்றிலி ருந்து பத்து வருடங்களுக்கு முன்பாக என வைத்துக்கொள்ளலாம்.

அப்பொழுது வெள்ளூரில் வேலை பார்க்கிறான்.காலை வேளையின் அவசர த்தின் பரபரப்புசுமந்துவந்த வேளைகளிலும், அரக்கப்பரக்க வேர்த்து விறு விறுத்து வந்த பொழுதுகளிலும் கூட அவன் வேலைக்குச்செல்லும் ஊருக்குச் செல்வதற்கென மூன்று பஸ்களை தேர்வு செய்துவைத்திருந்தான். ஒன்று நேரடியாய் வெள்ளூருக்கேச் செல்வது, இன்னொன்று நாராயணவிலாஸ்,இது போக அவசரத்திற்கென ஒரு பஸ் வைத்திருந்தான். அதுதான் அந்த ஊருக்குப் போகிற தீப்பெட்டி ஆபீஸ் பஸ்.

ஆத்திர அவசரத்திற்கென இவனை ஏற்றிக் கொண்டுபோவார்.அந்தவண்டியின் டிரைவர் இவன் வேலை பார்க்கிற அலுவலகத்திற்கு பக்கத்து வீட்டுக்காரர்.

என்றாவது ஒரு நாளின் மாலை வேலையாக இவன் வேலை விட்டு வருகிற நேரமாக அவரைப்பார்க்கலாம்.அப்பொழுது பார்த்து சிரித்துப்பேசிய நட்பு இவனை பஸ்டாப்பில் நிற்கிற வேளையாய் ஏற்றி வருகிற பழக்கத்திற்கு கொண்டு வந்து விட்டு விட்டிருந்தது.

காலையில்முதல்நடைகிராமத்திலிருந்துவேலையாட்களை ஏற்றிக் கொண்டு வருகிற பஸ் திரும்பவுமாய் வெள்ளூர் கடந்து ஐந்தாவது கிலோ மீட்டரில் இருக்கிற ஊர் வரைக்குமாய் தீப்பெட்டி ஆபீஸிற்கு வேண்டியஇடு பொருட் களை சுமந்து கொண்டுசெல்லும்.அந்நேரம்தான் இவன் பஸ்ஸை விட்டு விட்டு நிற்கிற நேரமாயும் பஸ்ஸில் தஞ்சம் கொள்கிற நேரமாயும் இருந்தி ருக்கிறது பெரும்பாலுமாய்/

அந்த பஸ்ஸின் டிரைவர் பெரும் ரசனைக்காரராய் இருப்பார் போலும்,அவரை விட கண்டக்டர் ஒரு படி மேல். இருவருக்கும் வெள்ளூர்ப்போய்ச்சேருகிற வரைக்குமாய் பஸ்ஸில் எந்தப்பாடல்களை ஒலிபரப்பலாம் என்பதில் பெரும் போட்டியே நடக்கும்,கண்டக்டருக்கு இளையராஜா,ஏ.ஆர் ரகுமான் இசைப் பிடித்தம், டிரைவருக்கு பழைய பாடல்கள் என்றால் உயிர்,கண்ணதாசனும் விஸ்வநாதன் இணையும் போது என்பார்,

ஆனால் இவன் என்றாவதான நாட்களில் அந்த பஸ்ஸில் ஏற நேர்கிற போது பெரும்பாலுமாய் இளையராஜா,ஏ ஆர் ரகுமான் இசைதான் ஒலித்திருக்கிறது, டிரைவரிடம் கேட்கும் பொழுது அவர் சொல்வார்,என்ன இப்ப அதனால,நான் கம்பெனிகிட்ட பஸ்ஸ ஓரம் கட்டீட்டு ரெஸ்ட் எடுக்கும் போது கூட பழைய பாட்டுகளகேட்டுக்கிருவேன்,ஆனாஅவன்அப்பிடியில்லை.நான்ரெஸ்ட்எடுக்குற நேரம்தீப்பெட்டிஆபீஸிலஅவனுக்கு ஏதாவது வேலை இருக்கும். அதுனால தான் அவன் இஷ்டத்துக்கு விட்டுர்றது,தவுர பாட்டுக்கேக்குற நேரத்துல 
பாருங்க அவன் மனசுல எவ்வளவுசந்தோஷம்இருக்குன்னு,,,,,ஏதோநிம்மதிப் பட்ட தாக் கூட அவன் உணரலாம். என்பார்.

அது போக நாராயணவிலாஸ் பஸ்,அதில்பயணிக்கிறபயணிகளைவிடவுமாய் அந்த பஸ்ஸில் ஒலிக்கிற பாடல்களால் பஸ்ஸே குலுங்கும்/பஸ்ஸிற்காக பாடல்களா அல்லது பாடல்களுக்காக பஸ்ஸா என்கிற சந்தேகம் வந்து போகும் சமயா சமயங்களில்,,,./

என்ன அந்த பஸ், பக்கத்திலுள்ள ஊருக்குபோய் விட்டு திரும்ப ரிட்டர்ன் வந்து பின் வெள்ளூருக்குப் போகும்.அதில் ஒரு அரைமணி கூட ஆகும்.

கண்டக்டர்கூடச்சொல்லுவார்,ஏன்சார்இதுலபோயிவந்துக்கிட்டு ஒங்களுக்குத் தான் அழகா இந்த பஸ்ஸிக்குபின்னாடியே நேரா போற பஸ்ஸீ இருக்குதே என்பார்.

அதற்கு லேசாகவும் சமயங்களில் பஸ் அதிரவுமாய் சிரிக்கிற இவன் பாடல் களைக் கேட்கத்தான் அந்த பஸ்ஸில் ஏறுகிறான் என்பது கண்கூடு.

“இப்பிடி ஒரு ஆளக்கண்டமா, காசையும் குடுத்து நேரத்தையும் செலவழிச்சி வர்ற ஆள,,, என இவனது முன்னால் பேசா விட்டால் கூட இவனுக்குப்பின் பேசுபவர்கள் அதிகம். ஆனால் அது பற்றியெல்லாம் கவலை கொள்வபவனாக இவன்இல்லை.இவனுக்குத்தேவைபாட்டு,பாட்டு,பாட்டு,பாட்டே,,,,,,,இது பரவா யில்லை, நேரமும் காசும் கொஞ்சம் கூடுதல் அவ்வளவே,

ஆனால் இது போக இன்னொரு பஸ்ஸில் பயணிக்கிற போது வெள்ளூரில் இறங்காமல் சிவகாசியில் போய்இறங்குவான் ,கேட்டால் பஸ்ஸில் ஒலித்த பாடல்கள் என்னை கைகோர்த்து இழுத்து வந்து விட்டது என்பான்,

எப்படியும் ஒழிந்து போங்கள் என தண்ணீர் தெளித்து விட்டு விட்டார்கள் இவனை அது விஷயத்தில்,

இவனும் மகனுமாக ஷோ ரூமில் போய் நின்ற போது மணி பதினொன்றை இருக்கும், முதலில் இங்கு வருவதாகவே உத்தேசம் இல்லை இவனுக்கு, மகனுக்கானால் சுத்தமாகப் பிடிக்கவில்லை.வெறென்ன செய்ய இவன் கூப்பிட்டான் என வந்திருந்தான்.

காலையில் பத்து மணிக்குக் கிளம்பி ஆபீஸிற்கு லீவு சொல்லி விட்டு ஆஸ்பத்திரிக்கு போனான்,

இவன் மட்டும் கூடப்போயிருக்கலாம்,ஆனால் எதற்கும் இருக்கட்டும் என மகனையும் உடன் கூட்டி க்கொண்டு போனான், அவன்தான் சொன்னான், என்ன இது ஏன் இப்படி,உடல் நலமில்லை என்றால் பேசாமல் ஆபீஸிற்கு லீவு போட்டு விட்டு படுத்தெந்திருக்க வேண்டியதுதானே,ஏன் இப்படி வீணாக வெயிலில் அலைய வேண்டும்?என, சலிப்பாய் சொல்லியபடியேதான் வந் தான்.

அவன் சொன்னபடி வெயில் இன்னும் குறையவில்லை,அக்னி நட்சத்திரம் முடிந்தும் வெயிலின் உக்கிரம் இன்னும் அப்படியே,,,/

அதற்காக வண்டியில் குடை மாட்டிக்கொண்டெல்லாம் போய் விட முடியாது. டவுனில் இவன்அங்கங்கே பார்த்திருக்கிறான்.வாகனத்தின்சீட்டுக்கு மேலாக ஆள்அமர்கிற அளவிற்கு இடைவெளிவிட்டு சற்றே உயரமாய் தூக்கி வைக்கப் பட்டிருந்தசின்னக்கூடாரம் போலான அமைப்பு பார்ப்பதற்கு நன்றாகவே இருந் தது,அப்படியாய் இவனது வண்டியில் மாட்டிக்கொள்ளவெல்லாம் சம்மதம் இல்லை இவனுக்கு.

ஆஸ்பத்திரிக்கு சென்றுவிட்டுவெளியில் வரும் பொழுதுஇன்றைக்கே ஷோ ரூம் போய் நீண்ட நாட்களாக நினைத்துக் கொண் டிருந்த இருசக்கர வாகனத் ந்தை இன்று எடுத்து விடலாம் என முடிவு செய்கிறான்.மகனிடம் கேட்ட பொழுதுசரிஎனச்சொல்லஇருவருமாய்போய் விடுகிறார்கள் இரு சக்கர வாக னம் விற்கிற ஒரு கம்பெனியின் ஷோ ரூம் நோக்கி.

குட்டையாய் குண்டாய் இருந்தவர்தான் இவனை வரவேற்று அமர வைத்து இவன் கொண்டு போயிருந்த பழைய இருசக்கர வாகனத்திற்கான விலை, எடுக்க இருக்கிற புது இரு சக்கர வாகனத்திற்கான விலை.மாதா மாதம் கட்ட வேண்டிய தவணை,,,, என எல்லாம் சொல்லி விட்டு வண்டி ரெடியாக இருக் கிறது சொல்லுங்கள் இப்பொழுதே நீங்கள் டெலிவரி எடுத்துப் போகலாம், ஸ்பேர்ப்பார்ட்ஸ் மாட்ட மட்டும் அரை மணி நேரம் ஆகும் என்றார்.

அவர்சொன்னதும்மணியைப் பார்க்கிறான்,மணிபணிரெண்டைஎட்டித் தொட்டு விடப்போகிறதாய்.

அவரிடம் சொல்லி விட்டு வீட்டுக்கு போன் பண்ணிக்கேட்கிறான்,மாலை நல்ல நேரம் எப்பொழுது என,5.30 டூ 6.30 என்கிறாள் மனைவி. ,சரி அந்நேரமே வந்து வண்டியை எடுத்துக்கொள்கிறேன் வண்டியை ரெடி பண்ணி வையுங்கள் என சொல்லிவிட்டு ஷோ ரூம் விட்டுக்கிளம்புகிறான்.

இது வரைக்குமான இவனது 45 வயது வாழ்க்கையில் இவனாக முடிவெடுத்துச் செய்கிற விஷயங்களில் நல்ல நேரம் ,கெட்ட நேரம் எதுவும் பார்த்ததில்லை,

ஏனோ தோணியது இப்பொழுது. கேட்டு விட்டான் வீட்டில்.தோணிய எண்ணம் தவறெனசொல்லவும் முடியாது.அதற்காகதோணிய எண்ணத்தின் முளை தேடியும் மூலம் தேடியுமாய் அலைய முடியாது அல்லது தேடுவதும் அலை வதும் வேஸ்ட் இல்லை அபத்தம்.

அதனால் தோணிய எண்ணத்தை தவறென சொல்கிற தைரியம் இவனுக்கில் லை.

10 comments:

 1. அருமையான கதை

  கருத்து மோதலில் பங்கெடுக்க வாரும்!
  http://www.ypvnpubs.com/2016/06/blog-post_27.html

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் காசி ராஜலிங்கம் சார்,
   நன்றி வருகைக்கும்,கருத்துரைகுமாக/

   Delete
 2. Replies
  1. வணக்கம் நாகேந்திரன் பாரதி சார்,
   நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/

   Delete
 3. ஏனோ தோணியது இப்பொழுது. கேட்டு விட்டான்--- வயதனால் மூளை பிசகி விடுமோ...???

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் வலிப்போக்கன் சார்,
   இது மூளை பிசகளின் வெளிப்பாடு
   இல்லை,
   தவிர எழுதியதை படைப்புடன் சம்மந்தப்படுத்தியும்,இணைத்தும்
   பார்க்கவேண்டியதில்லை,
   சமூகத்தில் பிதிபலிக்கிற
   நிகழ்வுகளின் நாயகர்களை
   அவர்களின் எண்ணப்பிரதிபலிப்புகளை
   சொல்லிச்செல்வது படைப்பாளனின் வேலையாகிறது,அப்படிச்செய்யும்
   போது உற்று நோக்கியதை எழுதுவதில்
   எண்ண மூளை பிசகல் இருந்து விட முடியும்,,,?ஹா,,ஹா,,ஹா,,,/

   Delete
 4. எண்ணத்தோன்றுதல் ஒவ்வொரு மனிதனுக்கும் மாறுபடும்
  த.ம. 2

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் கில்ல்லர் ஜீ தேவகோட்டை சார்,
   நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/

   Delete
 5. இதுதான் மனித மனம் என்பது. அதுவும் குறிப்பாக 40/45 ஐக் கடக்கும் போது இப்படித்தான் மனம்.....ஆகிப் போகின்றது பலருக்கும்

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் துளசிதரன் சார்,யார்த்தக்கருத்து,
   நன்றி வருகைகும்,கருத்துரைக்குமாக/

   Delete