30 Oct 2016

தேத்துளிகள்,,,,,,

கட்டாயம் தேநீர் குடித்தே ஆக வேண்டும் என்பதெல்லாம் இல்லை. குடித் தால் நன்றாக இருக்கும் போலத்தோணுகிறது.அவ்வளவே,,,/

எதுவுமே நாம் வைத்துக் கொள்வதுதானே,நம் கைக்குள்ளும் கட்டுப் பாட்டு க்குள்ளும்தானேஇருக்கிறதுஎல்லாம்,,,,,எனநினைக்கிற போதும்,சமயா சமய ங்களில் நடக்கிற விஷயம் நம் கை மீறிப்போகிற போதும்,,,,,அன்றாடம் அல்லது அடிக்கடிகுடிக்கிறவர்களைப் பற்றிநினைக்காமல் பேசாமல் இருக்க முடிவதில்லை.

என்றைக்குதேநீர் அதிகம் குடிக்கக்கூடாது என நினைக்கிறோமோ அல்லது அதைகம்மிபண்ண என நினைக்கிறோமோ அன்றைக்குத்தான் அதிகமாகிப் போகிறது,இல்லை மிக தேவை எனவும் நினைக்க வைத்து விடுகிறது,

அலுவலகத்தில் ஒன்பது மணிக்கு நுழைகிறவன் மாலை ஆறுமணிவரை தேநீரே சாப்பிடுவதில்லை.ஆனால்  வீட்டில்தூங்கி எழுந்ததிலிந்து அலுவல கம் செல்கிற வரைக்குள்ளாக இரண்டு அல்லது மூன்று தேநீர்களைச் சாப் பிட்டு விடுவான்,அது காலை சாப்பாட்டை பாதிக்கும் எனத்தெரிந்திருந்தும் கூட.

மூன்றுதேநீர் என்பது அதிகம் என நினைக்கிற நாட்களில் மனதுக்கு கடிவா ளம் போட்டுக் கொள்வான் இரண்டு போதும் என/

போதும்தான்இது என்கிற நிலை வந்த போதும் கூட கட்டுப்படுத்த முடியா மனோநிலையைஅள்ளிமுடிந்து கொள்ள முடியவில்லை பல சமயங்களில்/ விளைவுஆசையும்,நாக்கும் கூட்டுச் சேர்ந்துகொண்டு கட்டுப்படுத்தி வைத் திருந்தமனதைதூண்டிதேநீர்களின்எண்ணிக்கையைஅதிகமாக்கிவிட்டுப்போய் விடுகிறதுதான்.

அதுவும்வீட்டுத்தேநீரின்அளவுகடை தேநீரை விட இரண்டு அல்லது மூன்று மடங்குஇருக்கும்.அதுபோலானசமயங்களில்தான்மனைவியிடம் கூறுவான், ”தேநீர் குடிப்பதை கட்டுப்படுத்திக்கொள்ள முடியவில்லையே நம்மால்,இந்த லட்சணத்தில் குடிப்பவர்களை குறை கூறுகிறோமே”,,,,, என்பான்.

இதில்எங்களைஏன்சேர்க்கிறீர்கள்,,என்பாள்பதிலுக்கு மனைவி.அது போலான பேச்சுப்பதிவுடனும்,தலை தாங்கிய யோசனையுடனுமாய் அலுவல கம் வந்து விட்ட பின் தேநீர் சாப்பிடுவதில்லை,மாலை வரைக்குமாய்/

இது அலுவலகத்தில் வந்து தேநீர் விற்கிறவருக்கு கொஞ்சம் பாதிப்பாய் தெரிய ஒரு நாள் மிகவும் உரிமையுடன் சண்டைக்கு வந்து விட்டார், ”என்ன சார் நான் குடுக்குற டீ நல்லா இல்லைய்யின்னா நல்லா இல்லை யின்னு சொல்ல வேண்டியதுதான,ஏன் இப்பிடி மறுக்குறீங்க தீடீர்ன்னு டீ வேணாங்குறீங்க”என்றார்அவர்,

அதற்குஇவன்அவரிடம்இடைவெளி கிடைத்த நாளொன்றின் மாலை பொழு தாக உடல் நிலை இப்படி இருப்பதினால் வீட்டைத்தவிர வேறெங் கும் டீ சாப்பிடுவதில்லை என்றான்.

அரைமனதுடன்அந்தவார்த்தைகளைஒத்துக்கொண்டஅவர்இவனுடன்வேலை பார்க்கிறவர்சொன்னவைகளை இவன் முன்னாக இறக்கி வைத்தார், அதில் அவர்தருகிறடீ நன்றாக இல்லை என இவன் சொன்னதாகவும்  மிகவும் மோசம் செய்து டீ விற்கிறார் எனவும் இன்னும் இன்னுமாய் நிறையச் சொன்னதாவும் பதியப்பட்டுத் தெரிந்தது,

”அடவிடுங்கண்ணேபேசுற நாயி பேசீட்டுப்போகுது வஞ்சம் வைக்கிற கழுத வஞ்சம் வைச்சிட்டுப் போகுது,யார் என்ன சொல்லி என்ன ஆகப்போகுது ண்ணே,ஏங் பழக்கம் ஒங்ககிட்ட உண்மையானது,அது இந்தா ஒங்களுக்கு இப்ப புரிஞ்சிருச்சே அது போதும்,இப்பயும் சொல்றேன் எனக்கு ஒங்க கிட்ட டீயெல்லாம் வேணாம், நீங்க கொண்டு வர்ற வடை,பிஸ்கட்,பன்னுல ஏதாவது எப்பயாவது தேவைப் பட்டா கண்டிப்பா வாங்கிக்கிருவேன், இப்பயே வாரத்துல ரெண்டு நாளு பன்னு,ரெண்டு நாளு வடை,ரெண்டு நாளு பிஸ்கட்டுன்னு வாங்கீருவேன்,இது போதானுன்னு என்னைக்காவது ஒரு நா வரும் போது செவ்வாழைப்பழத்த கொண்டு வந்துற்ரீங்க,அதுல எப்பிடியும் சிறுசா இருந்தா ரெண்டுமூணு பெரிசா இருந்த ஒண்ணுன்னு கண்டி ப்பா வாங்கிருவேன், சமயத்துல நீங்க கொண்டு வர்ற வடை,பன்னு பிஸ்கட்டு,,,வாழைப்பழத்த வீட்டுக்குக் கூட வாங்கீட்டுப்போயிருக்கேன்,நீ ங்க இது மொத்தததையும் கணக்குப் பண்ணிப் பாத்தீங்கன்னா ஆபீஸீல ஒருரொருத்தருக்கும்வர்றடீக்காசவிட எனக்கு கூடத் தான் வரும், இல்லை யின்னா நெருக்கி வரும், ஆமா இதையெல்லாம் கணக்குல எடுத்துக்கிறாம இப்பிடி வந்து மல்லுக்கு நிக்கிற மாதிரி கேக்குறீங்களே,,,” என அவரிடம் சொன்ன நாளில் கொஞ்சம் சங்கடமாகவும்இவனைப்பற்றி பொரணி சொன் னவனை பற்றியுமாய் கூறினார்.

தவிரவும் எனது வயதுக்கும் ,அனுபவத்திற்கும் இதையெல்லாம் தவிர்த்தி ருக்க வேண்டும்,நான். அப்படிச் செய்யாமல் அநியாயத்திற்கு சந்தேகப்பட்டு விட்டேன் உங்களை என வருத்தப்பட்டார்,

”விடுங்கண்ணே யார் யாரை சந்தேகப்படல இங்க,,,,,,அதுக்காக நம்ம என்ன தீயாகுளிக்கமுடியும்,அதுக்குப்பதிலாத்தான்டீயக் குடிக்கிறோம்ல்லண்ணே” எனச்சொன்னான் இவன்.

அன்றிலிருந்துஇவனைஅவர்கழிவிறக்கமாகப் பார்ப்பதும்,இவனிடம் கழிவிற க்கமாகப்பேசுவதும் அதிகரித்தது,அதையெல்லாம் வெட்டி விட்டு அவரிடம் ”அப்படியெல்லாம்பார்க்கவும்வேண்டாம்,பேசவும்வேண்டாம்,எவனோஒருவன் சொன்னதை நம்பி என்னை மோசமாக எண்ணியதும்,நான் சொன் ன தைநம்பிஎன்னிடம்பச்சாதாபம்காட்டுவதும்வேண்டாம். எப்பொழுதும் போல் இருப் போண்ணே”என்றஇவனின் மனம் திறந்த பேச்சு அவருக்கு பிடி பட்டுப் போனது,

இதையெல்லாம் மீறி இன்றைக்கு தேநீரின் ஞாபகம் வந்து விடுகிறது,பை நிறைந்த காய்கறியுடனும் இன்னும் சில சாமான்களுடனுமாய் இரு சக்கர வாகனத்தை எங்கு நிறுத்திவிட்டு எங்கு போய் டீ சாப்பிடுவது என்பது தெரியவில்லை,இது போலாய் அகஸ்த்மாஸ்தாக டீ சாப்பிடத்தோணுகிற தினங்களில் காய்கறிக்கடையிலேயே வாங்கிய பையை வைத்து விட்டு அல்லதுவாங்கப்போகும்முன்பாகசொல்லிவிட்டுசெல்வதுஅவனது வழக்கம். ஆனால்இன்றுஅப்படிச்செல்ல முடியவில்லை. காரணம் கடையில் கூட்டம் அதிகமாகஇருந்தது.காய்கறிகளும்,கறி வேப்பிலைகளும், உருளைக் கிழங்க ளும்,வாழைப்பூக்களுமாய்கைகோர்த்து காட்சிப்பட்டுக் கொண்டிருந்த பொழு தாய் இருந்தது அது.அதை பார்த்துக்கொண்டேயும் நின்றிருந்த கூட்டத்தை கணக்கிலெடுத்துக் கொண்டும் வாங்கிய காய்கறிகள் அடங்கிய பையை இருசக்கர வாகனத்தின் முன்பாக கோர்த்துக்கொண்டு வண்டியை ஸ்டார்ட் பண்ணும் போது தோன்றிய எண்ணமாய் மட்டும் இல்லாமல் அலுலக த்திலி ருந்து கிளம்பும் போது தோன்றிய எண்ணமாயும் இருந்தது.

வாய் உளர்ந்து போகிறது,எதையாவது சாப்பிட்டால் அல்லது எதையாவது ஜில்லென குடித்தால் நன்றாக இருக்கும் என்கிற எண்ணம் மேலோங்க பஜார் வந்தவனுக்கு தோணிய எண்ணம்தான் இதுவாய் இருக்கிறது,

சோர்ந்து போகிற உடலுக்கும் உள்ளத்திற்கும் கொடுக்கிற ஒத்தடம் இவன் குடிக்கிற சில மிடறுகள் டீ மட்டுமே என ஆகிப்போகிறது அல்லது அப்படி யாய்நினைத்துதிருப்திப்பட்டுக்கொள்கிறான்.தேநீர்குடிக்கிறகாசுக்குகொஞ்சம் கூடப்போட்டால் ஒரு இளநீர் சாபிட்டுக்கொள்ளலாம்,இல்லை ஒரு ஜீஸ் சாப்பிட்டுக்கொள்ளலாம் அது விடுத்து தேநீர்,தேநீர் என இப்படியா இருப்பது பைத்தியம் பிடித்தது போல,,,,/

ஒருநாளைக்கு நான்கு ஐந்து தேநீர்கள் என்றால் பரவாயில்லை.ஒரு காலத் தில் பத்துக்கும் மேலாக போய்க் கொண்டிருந்த நாட்களில்தான் இப்படி யாய் பைத்தியம் பிடித்தது போல் எனச்சொல்ல வேண்டியதாகிப் போனது.

இவனது நண்பர் செய்யது கூடச் சொல்வார்,அட விடு மாமா,நீங்க என்ன மோ அஞ்சு டீக்கு மேல சாப்புட்டதுக்கே வருத்தப்படுறீங்க,நானெல்லாம் டின்பேக்ட்ரியிலவேலபாக்கும்போதுஒரு நாளைக்கு முப்பது டீ வரைக்கும் கூடஆகிப்போகும்பாத்துக்கங்க,அதுக்கு காரணம் இருக்கு மாமா,நைட் பகல் லுன்னு எந் நேரமும்வேலை, லயனுக்குப் போவேன் கலெக்‌ஷன் பண்ண, இங்க உள்ளூர்ல மட்டும் இல்ல,வெளியூருக்கும் போவேன், ஒரு தடவை கேரளாவுக்கு கலெக்‌ஷன்போயிட்டு வந்துக் கிட்டிருந்தேன், கொஞ்சம் நஞ்ச பணம்இல்ல.50ஆயிரம்ரூவா,40வருசத்துக்குமுன்னால50ஆயிரம்ன்னாநெனைச்சுப்பாருங்க,ட்ரெயின்லதான்வந்துக்கிட்டிருந்தேன்,திருநெல்வேலிதாண்டிட்டேன்,கோயில் பட்டிப் பக்கம் வரும்போது எப்பிடியோ துப்புக் கண்டுக்கிட் டு ரெண்டு பேரு வந்துட்டாங்க கத்தியோட/

நானும் தனியாளா போகும் போது கையில் ஆயுதம் இல்லாம போக மாட் டேன்.நம்ம போனாலும் பரவாயில்ல,பணம்போயிறக்கூடாதுங்குறமுடிவுக்கு வந்துட்டேன்,வேட்டிதான்கட்டிக்கிட்டுப்போயிருந்தேன்,நான்பணத்த எப்பவும் அண்ட்ராயர் பையிலயோ,இல்ல சட்டைப்பையிலயோ வச்சிக்கிட்டு வர மாட்டேன்.பணத்தஒரு நாலு மொழவேஷ்டியிலவச்சிஅத உருட்டிநடு வயித் துலவச்சிஇறுக்க கட்டிக்கிருவேன்.என்னைய மீறி அந்தப்பணத்த எடுக்கணு ம்ன்னா நான்மயங்கிதன்னுர்வு இல்லாமபோகணும்,இல்லஏங் உசுரு போன துக்கு பொறகுதான் அது நடக்கும்ன்னுதெரிஞ்சே எப்பவும் எதுக்கும் தாயா ராத்தான்போவேன்.அதுபோலத்தான் அன்னைக்கும் போனேன்.வந்த ரெண்டு பேரும் எதிர்பாக்கல இத,கண்ணிமைக்கிற நேரத்துக்கள்ள பாய்ஞ்சுட்டாங்க ஏங் மேல, நானும் கையில கத்தி எடுக்க வேண்டியதா போச்சு,அவன் மெரட்ட நான் மெரட்ட அடுத்து சீட்டுல ஒக்காந்துட்டுவந்தவரு கொஞ்சம் தைரியமானவரு,அவரும் என்னைய மாதிரி லயனுக்கு வசூல்ப்பண்ண வந்தவருதான், அவருஅந்ததிருட்டுப் பையலுக ரெண்டு பேரும் எதிர் பாக்காத நேரமா பாய்ஞ்சிட்டாரு அவுங்க மேல ,அவரு கையிலயும் கத்தி இருக்கு,ஏங் கையில் இருந்ததாவது பரவாயில்ல,அவரு கையில இருந்தது ஒரு பக்கம் சொருகுனா மறு பக்கம் வெளியில் வந்து நிக்கும் போல இருந்தது, கூலிக்கு மாரடிக்கிற பையலுக போலயிருக்கு,நாங்க ரெண்டு பேரும் பாய்ஞ்ச ஒடனே ட்ரென்ல யிருந்து குதிக்கப்பாத்தாங்க,ட்ரெயின் வேற கோயில்ப்பட்டிய நெருங்கீருச்சி, பெட்டியில இருந்த ஜனங்க எல்லா ருமா சேந்து அவுங்க ரெண்டு பேரையும் நாயமுக்குனா மாதிரி அமுக்கி ரயில்வேஸ்டேஷன்வரவும்போலீஸ்கிட்ட புடிச்சிக்குடுத்திட்டோம்”/ என்றார் மிகவும் சாதாரணமாக/

மிகவும்பிரியமானவர், சொன்ன சொல்லுக்கு பட்டுப்படுகிறவர். மாமா என்ற சொல்லுக்கு மறு சொல் சொல்லாதவர்,ஒருவர் ஒரு சொல் சொன்னால் ஏன்எதற்குஎனஆராய்கிறவர்.அவருக்கிருக்கிற வயதில் பாதிதான் இருக்கும் இவனுக்கு,55வயதுக்காரர்.ஆனால்இவ்வளவு வயதாகிறதே தனக்கு என தராதரம் பார்க்க மாட்டார்,நல்லவிதமான எந்த உதவி கேட்டாலும் மறுக்கா மல் தாராளமாகச் செய்வார்.அவரால் முடியா விட்டாலும் கூட உதவிக்கு உட்பட்டவர்களை கை காட்டுவார். இதுதான் அதற்கு தீர்வு எனவும் சொல்லி விடுவார். அப்படியெல்லாம் இருந்தவரை சென்ற வாரம் பார்த்த போது ”இல்ல மாமா நீங்க கூப்புட்டதுக்கு இணங்கி டீசாப்புட வர முடியாம போனதுக்கு வருந்துரேன் மாமா,,,,” என்றார்,டீ சாப் பிடுவதையே விட்டு விட்டாராம்.என்ன மாமா என்ற போது ”வயிறு நெறஞ்ச அல்சரு, டாக்ட ருங்கசொன்னாங்கவேணாம்ன்னு விட்டுட்டேன்” என்றார்.

இன்று காலை எழுந்ததும் முதல் டீயாக டம்பளர் நிறைந்த டீ மனைவி கையால் கிடைத்தது, இரண்டாவது டீயை மனைவி கொடுக்கும் பொழுது சொந்தக்காரர்போன் பண்ணினார், வாங்களேன் இன்னைக்கு ஒரு சந்திப்பப் போடுவோம்என,”இல்லதம்பி இன்னிக்கி வேணாம் நல்ல நாளும் அதுவுமா என்னசந்திப்பு வேண்டிக்கெடக்கு,அதான் குடும்பத்துஉறுப்பினர்க இருக்காங் கள்ல, அவுங்கள சந்திங்க, பேசுங்க, நல்லது பொல்லத சாப்புடுங்க,டீ வி பாருங்க, சிரிச்சிப் பேசுங்க, ,நல்ல மனுசங்க நாலு பேர சந்திச்சிப்பேசுங்க இல்ல அவுங்க கிட்ட போன்லயாவது பேசுங்க,,,நாம சும்மா சந்திச்சி என்ன செய்ய போறோம், அப்பிடி என்ன பேசிறப்போறோம், சும்மாச் சும்மாபேசுற பேச்சுக்களெல்லாம் ஏதாவது ஒண்ணப் பத்துன புள்ளியில போயி நின்னுக் கிட்டு நின்ன யெடத் துல இருந்துயாரையாவது புடிச்சி வம்புக்கு இழுக்கும் ஆகவே வேணாம் இந்த சந்திப்பு,தவிர்த்திருவோம் இப்போதைக்கு, ஏதாவது அவசியம் இருந்தா மட்டும் சந்திப்போம்”எனமுடித்தான்.

”அது போலானசந்திப்புகள்கிட்டத்தட்ட வேண்டாம்என்பது இவன் எண்ணம், வேண்டாமே நல்ல நாளும் அதுவுமா நண்பர்களும் சொந்தக்கார்களுமா சந்திக்கிறத விட குடும்பத்துக்காரங்களுக்குள்ள சந்திச்சிக்கங்க”,,,என்கிற சொல் கட்டு நிறைந்தது இவன்எண்ணம்/

சொந்தக்காரரிடம்இதைச்சொன்னபோது சிரித்தார்சப்தமாக,,,/அப்படியானால் வீடற்றவர்களும்,சொந்தபந்தம்இல்லாதவர்களும்எங்குபோக,, என பதிலுக்கு கேட்ட கேள்விக்கு பதிலில்லை இவனிடம்,,,/

வண்டிநிறைவண்டிபாரத்துடனும் மனம்நிறை சந்தோஷத்துடனுமாய்சென்று கொண்டிருக்கிற இரு சக்கர வாகனத்தை எங்கு போய்நிறுத்தி தேநீர்சாப்பி டவும் இடமில்லை,இங்கு,

நெருக்கமானஇடம்.ஜனநடமாட்டம் கூடிப்போன பொழுதுகள்,ஆகவே மார்க் கெட்டை சுற்றி எங்கும் நிறுத்தி தேநீர் சாப்பிட விருப்பமில்லாமல் நேராக வீட்டிற்கு போய் விட்டான். வீட்டில் காத்திருக்கும் தேநீர்,

கட்டாயம் தேநீர் குடித்தே ஆக வேண்டும் என்பதெல்லாம் இல்லை. குடித் தால் நன்றாக இருக்கும் போலத் தோணுகிறது அவ்வளவே,,,/


6 comments:

'பரிவை' சே.குமார் said...

கட்டாயமில்லை ஆனால் குடித்தால் நல்லாயிருக்கும் என எல்லாருக்கும் தோணுவதுதான்.... அழகிய கதையாய் விரிந்திருக்கிறது.

வாழ்த்துக்கள் அண்ணா...

vimalanperali said...

வணக்கம் பரிவை சேக்குமார் அண்ணா,
நன்றி வருகைக்கும்,கருத்துரைக்கும்,
மாறாத அன்பிற்குமாக/

Yarlpavanan said...

அருமையான பதிவு

vimalanperali said...

வணக்கம் காசிராஜலிங்கம் சார்,
நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/

KILLERGEE Devakottai said...

யதார்த்த நிகழ்வுகள் சொன்ன விதம் அருமை நண்பரே
த.ம.1

vimalanperali said...

வணக்கம் கில்லர் ஜி சார்,
நன்றி வருகைக்கும்,
கருத்துரைக்குமாக/