14 Dec 2016

சிதறிய வாழ்க்கை,,,,,,/



அப்பனும் ஆத்தாளும் ஒடம்புக்கு முடியாதவுங்க,
ஆத்தாளுக்குப்பாவம் இழுப்பு நோயி,
அப்பனுக்கு பக்கவாதம்,
எனக்கு மாசாமாசம் வர்ற ஒடம்புப்பிரச்சனை,
ஆணொன்னு பொண்னொன்னு பள்ளிக்கூடம் போகுதுக.
நானும் வீட்டுக்காரரும் தெனசரி
வீட்ட விட்டு வெளியேறி
வேலைக்கிப்போனாத்தான் சாப்பாடு.
வயசானவுங்கள வீட்டுல விட்டுட்டு
வேலைக்குப்போயிருவோம்.
எங்க ஆத்தாதான் நாங்க வர்றவரைக்கும்
வீட்டையும் புள்ளைகளையும் கவனிச்சிக்கிரும்,
நா கொத்த வேலையிலயிருந்து
எல்லா வேலைக்கும் போவேன்.
எங்க வீட்டுக்காரரு மில்லு வேலை பாக்குறாரு.
காலையிலவீட்டுப்பாடு புள்ளைக பாடுன்னு
பாத்துட்டு அவதி அவதியா கெளம்பிப்போனா
பொழுதடையத்தான் வீடு வருவோம்/
வாரச்சம்பளந்தான் ரெண்டு பேருக்கும் /
அத ச்சரியா குடுத்துட்டு வந்தவுங்க இப்ப சொணங்குறாங்க,
கொஞ்ச நாளவே நாங்க வேல பாக்குற யெடங்கள்ல
சம்பளம் வாங்குறது பிரச்சனை இருக்குது
சம்பளம் சரியா தர,மாட்டேங்குறாங்க,
கேட்டா பேங்குல பணம் எடுக்க முடியலங்குறாங்க,
அதுமட்டும் இல்லாம இந்த வாரச்சம்பளத்த
அடுத்த வரம் சேத்துத்தர்றேன்றாங்க,
அவுங்க சொல்ற வார்த்தைய ஏத்துக்கிட்டு
அப்பிடியே வீட்டுக்கு போனா
நாங்க எத வச்சி குடும்பம் நடத்த,,,,?????//////
சொல்லுங்க/

4 comments:

கரந்தை ஜெயக்குமார் said...

இன்றைய வாழ்வியல் யதார்த்தம் நண்பரே

திண்டுக்கல் தனபாலன் said...

அவர்கள் படும்பாடு சொல்லி மாளாது...

vimalanperali said...

வணக்கம் கரந்தை ஜெயக்குமார் சார்,
நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/

vimalanperali said...

வணக்கம் திண்டுக்கல் தனபாலன் சார்
நன்றி வருகைக்கும் கருத்துரைக்குமாக/