17 Dec 2016

கைக்கிட்டி,,,,,,,,

நான் வந்த நேரம் தூங்கிக்கொண்டிருந்தீர்கள் நீங்கள்.அப்படியொருதூக்கத்திற் க்கான தேவை அந்நேரம் ஏன் எழுந்தது எனத்தெரியவில்லை.

ஒரு வேளை இரவில் கண் விழித்திருக்கலாம்.அல்லது அரை மணிக்கு ஒரு
தரமும், ஒரு மணிக்கு ஒரு முறையுமாய் தயவுதாட்சண்யமின்றி தன் கண்க ளை இறுகமூடிக் கொள்கிறமின்வெட்டின்பொழுதுவிட்டுப்போன தூக்கத்தை இங்கு வந்து தொடரலாம், இல்லை உடல்ஏதும் நலமில்லாமல் இருக்கலாம்.

வழக்கத்திற்கு மாறாக சீக்கிரமாகவே வந்து விட்ட மாலை நேர 6.00 மணி பொழுதுக்கு தங்களைப்பார்க்க வேண்டும் என ஆவல் கொள்கிறது மனது. மறுநாள் எடுக்கவிருந்த விடுப்பிற்கான முகாந்திரத்தையும் ,பொறுப்பையும் உரியவரிடம்ஒப்படைத்து விட்டு வருகையில் எதிர்ப்பட்டது பாய் டீக் கடை யாக இருக்கிறது.

ஒரு டீ ஒரு வடை,,,என்கிற அடைப்படையில் முடித்துக்கொண்டு உங்களைப் பார்க்க வருகிறேன்.பார்த்தும்,பழகியும்,பேசியும்,விஷயங்களை பரிமாறிக் கொண்டும் மிகவும் நாட்களாகிப் போனது.

T K R சாலையது.இதுவரை பூத்து நின்ற வேனல்தன்வேகம்குறைத்திருந்த பொழுது. சாலையில் சென்ற பாதசாரிகளையும் இரு சக்கரவாகனர்களையும் தவிர்த்து டீக் கடைகள்பெட்டிக்கடைகள்மற்றும் சைக்கிள்கடை, டாஸ்மாக் முன்பு மனிதர்கள்தஞ்சம் கொண்டிருந்த வேளை.

எங்கும் எப்பொழுதும் தன் பிரியக்கரம் விரித்து மனிதர்களை தன்னுள் தக்க வைத்துக் கொள்கிற டீக்கடைகளில் நடமாடுகிற உலவுகிற அல்லது பரிமாறிக் கொள்கிற பேச்சைப்போலமற்றஇடங்களில்இருக்குமா எனத்தெரியவில்லை. இருக்கலாம் அல்லது இல்லாமலும் போகலாம்.

எனக்குத்தெரிந்துசினிமாத்தியேட்டர்களில்அந்தவேலைநடைபெற்றிருக்கிறது
ஒரு வேளை திரையில்வருகிறகாட்சிபிம்பங்களிலும் அதனுடாக பின்னப் படு கிறகதைகளிலுமாய்தன்னைஇடைநிறுத்திப்பார்க்கிறமனோநிலையாக இருக் கலாமோ? இருக்கலாம் எதிர்ப்படுகிற சொல்லையும்  காட்சி பிம்பங் களையும் தன் வசத்திற்கும் இசைவுக்குமாய் வளைத்துப் பார்க்கிற தனம் கூடிப் போன நிலை இங்கு இருக்கிறது என நினைக்கிறேன். அதுவும் மத்திய தரவர் க் கத்தில் அந்த நோய் மிகவும் பரவலாகஉள்ளதாகவேஅறிகிறேன். இருக்கட்டும், இருந்து விட்டுப் போகட்டும், என்னகுறைந்து விடப்போகிறது இப்பொழுது என சொல்லத்தோணவில்லை.ஆனாலும் சொல்லியும் விடுகிறேன் எப்போதாவது.

ஒரு தியேட்டர் மேனேஜரிடம் டொனேஷன் வாங்கச்சென்றிருந்த பொழுது அவர் மேனேஜராகஇருந்ததியேட்டரில்ஓடிக்கொண்டிருந்த படத்தைப் பற்றி இப்படிச் சொல்கிறார், என்னஇருக்கிறதுஇந்தப்படத்தில்எனத்தெரிய வில்லை. இவ்வளவு நாள் ஓடுகிற தெனவும்,நல்லவசூல்எனவுமாய்சொன்னார். அவரே தான் வருத்தமும் பட்டுக்கொண்டார். ஜன்ங்க ரசனையும் அதை ஒட்டுன மனோநிலையும் அப்பிடி இருக்கு என்றார்.அவர் சொன்னது வாஸ்தவம்தான் போலும் எனத்தெரிந்தது.

அந்த தியேட்டரில் வேலை பார்க்கிற கணேசன்.பார்த்த நாட்களில்பழக்கமாகிப் போன மனிதர். பழக்கங்களின் விரிவில் தெரிகிறஈரம்அவரில்எந்நேரமும் ஒட்டிக் கிடந்ததாகவே பட்டது எனக்கு. நாங்கள் பழகிக்கொண்ட இந்த நான்கு வருடங்களில்எங்கு பார்த்தாலும் எப்போது பார்த்தாலும் வாங்க டீசாப்புடலாம் எனசொல்லத்தவறுவதில்லை.அவருடன்வருகிறஇன்னொருவர்சுந்தரவதனம். ஏறக்குறையஒருவரும்ஒரே வயதுடையவர்களாய்த் தெரிந்தார்கள்.

தியேட்டருக்குள்ளும்,தியேட்டருக்குவெளியேயும்அவர்களிருவரையும்ஒன்றாகப் பார்க்கலாம்,அவர்கள் ஒன்றாக என் கண்ணுக்குப்படுகிற தினங்களில் மிகவும் அன்னோன்யம் தென்படும் அவர்கள் நடவடிக்கையில்/

அவர்கள் இருவருக்குமாய் பழக்கமான சைக்கிள் கடை ஓன்றில்தான் நான் ஒருசெகண்ட்ஹேண்ட்சைக்கிளுக்குச் சொல்லியிருந்தேன்.ஒருவாரம் கழித்து வரச் சொன்ன அவர்கள் நான் போன நாளில் ஒரு சைக்கிளைக் காட்டினார்கள், பழைய இரும்பை பொறுக்கி ஒன்று சேர்த்து ”சூ மந்தரகாளி” சொல்லி செய்தது போல இருந்தது. தொட்டாலே துரு உடம்போடு ஒட்டிகொள்ளும் அளவுக்கு/

கடைக்காரரைப்பார்த்தேன்,அவரும் சிரித்தபடி ஓட்ட,ஓட்டஒரு வழியாய் சரியாகிப் போகும் என்றார்.சரியாகிப்போகுமா,ஒருவழியாகிப்போகுமா என கேட்க மறந்து போனேன்.

இப்படி மறந்து போன நினைவுகள் பலவற்றைத்தேக்கியும்அணைகட்டியுமாய் திரிந்த நாட்களின் நகர்வன்றின் பலபொழுதுகளில் மேலெழுந்து வந்து நின்ற தங்களதுநினைவைமனதில்தேக்கிஇன்று தங்ளைப்பார்க்கவந்தபோது தூங்கிக் கொண்டிருந்தீர்கள்.எழுப்பமனம்இல்லை,வந்துவிட்டேன்அப்படியேபின்னகர்ந்து. இப்பொழுது என்ன கெட்டு விட்டது,நாட்களும் பொழுதும் நமக்கானவையே/

நாட்களின் நகர்வில் இன்னொரு நாள் பார்த்துக்கொள்ளலாம் தோழர்.

6 comments:

கரந்தை ஜெயக்குமார் said...

நாட்கள் நகர்ந்து கொண்டே இருக்கின்றன

Yarlpavanan said...

அருமையான பதிவு

திண்டுக்கல் தனபாலன் said...

அருமை தோழர்...

vimalanperali said...

வணக்கம் கரந்தை ஜெயக்குமார் சார்,
நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக,,/
நகர்வின் நாட்களில் வந்து போகிற மாற்றங்கள்,,,/

vimalanperali said...

வணக்கம் காசி ராஜலிங்கம் சார்,
நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/

vimalanperali said...

வணக்கம் திண்டுக்கல் தனபாலன் சார்,
நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/