15 Jan 2017

பழுப்புக்கலர்த்தாளு,,,,,/


பழுப்பு நிறம் காட்டி பரவிக்கிடக்கிற பேப்பர் ரேஷன் கடை பில்லாக இருக்கு மோ,,தெரியவில்லை சரியாக/

இங்கிருந்து பார்ப்பதிலும்,தோளில் தொங்குகிற கைப்பையின் கனத்திலுமாய் அதை அருகில் போய் பார்த்துவிடத்தோணவும் இல்லை,

தவிர நேரம் கூடி அலுவலகம் போய் சேர தாமதமாகிப்போகும் என்கிற நினை ப்பில்அருகில் போய் பார்க்கவும் தோணவில்லை.இப்போதைக்கு இரு சக்கர வாகனத்தை எடுத்துக்கொண்டு அலுவலகம் சென்றால் போதுமானது என்கிற எண்ணத்தில் விரைய வேண்டியவனாயும் இல்லை கொஞ்சம் தாமதமானால் கூட தண்டிக்கப்படலாம் என்கிற உயரிய எண்ணத்திலுமாய் கிளம்பிப் போகி றான்.

இதுதவிர அரிசி தவிர்த்து சர்க்கரை ஒரு கிலோ ரூபாய்,,,,துவரம் பருப்பு ஒருகிலோ ரூபாய்,,,,,,,கோதுமை ஒரு கிலோ ரூபாய்,,,,,, என நேற்றைக்கு முன் தினமே இவனது செல் போனுக்கு செய்தி வந்து விட்டிருந்தது,

முதல் முதலாக இது போலான செய்தி வந்த பொழுது சற்றே குழப்பமாய்த் தான் இருந்தது,எப்பொழுதும் வராத செய்தி இப்பொழுது புதிதாக வரக்காரணம் என்ன என ஆராய்ந்த பொழுது மனைவி சொன்னாள். போன வாரம்ரேஷன் கடைக்குச்சென்றிருந்த பொழுது செல்போன்நம்பர் கேட்டார்கள், உங்களது எண்ணைக்கொடுத்திருக்கிறேன் எனச்சொன்னது ஞாபகம் வருகிறது, இப்பொ ழுது,,,/

ஞாபக மறதி ஒரு தேசிய வியாதி என்பது எவ்வளவு உண்மையோ அவ்வ ளவு உணமை சில ஞாபகங்களை அடை கொண்டு வைத்திருப்பதும் என்றாள் இவன் மனைவி.

வாஸ்தவம்தான் என்கிற நினைவாக்கத்துடன் ரேஷன் கடையிலிருந்து  வந்தி ருந்த செல் செய்தியை மனைவியிடம் காட்டிக்கேட்ட பொழுது சொன்னாள். ஆமாம் வாங்கினேன்தான்இன்று மதியம் 12 மணிக்கு மேல் போய் இவை யெல்லாவ ற்றையும் எனச்சொன்ன மனைவியை ஏறிட்ட போது மணி பணிரெண்டு தாண்டி நான் சென்ற பொழுது நல்ல வெயில்,நம் வீட்டில் இருந்து கிளம்பிரேஷன் கடை போய் சேருகிறது வரை இடையில் வெயிலுக்கு ஒதுங்கி நிற்க ஒரு மரமோ , வேறு ஏதாவது கட்டிட நிழலோ இல்லை. அதற் காக குடை பிடித்துச்செல்கிற பழக்கமும் இது நாள் வரை எனக்கு இல்லை.ஒட்டு மொத்த மாய் தெருவே வேறொரு அடையாளத்தில் இயங்கிக்கொண்டிருக்கிற போது நான் மட்டும் குடைபிடித்துக்கொண்டு செல்வது வேறொரு அனர்த்த நிலைக்கு அல்லது சொல்லுக்கு இட்டுச்சென்று விடக்கூடும்.தவிர என்னாலும் தனித் தொரு அடையாளம் சுமந்து கொண்டு சென்று கொண்டிருக்க முடியாது. என்றாள்.

தெருமுக்கைதாண்டியவுடன்வருகிற மெயின் ரோட்டில் ஆரம்பிக்கிற காய்கறி கடையிலிருந்து அந்த தெரு முடிவு வரைக்குமாய் நெடுக இருக்கிற கடைக ளுக்கு ஊடாக முளைத்துக்கிடக்கிற வீடுகளில் ஒன்று கூட தெரிந்த வீடு இல்லை,இல்லை என்றால் ஆத்திர அவசரத்திற்கு ஒதுங்கிக்கொள்ளலாம்.

காய்கறி கடை தாண்டி கொஞ்ச தூரம் சென்றவுடன் வந்து விடுகிற சைக்கிள் கடை,சேவுக்கடை அதைத்தாண்டிய டீக்கடை,மினி ரைஸ் மில் இட்லிக்கடை, அதன் பக்கத்திலேயே இருக்கிற பிராய்லர் கோழிக்கறிக்கடை அது தாண்டி ஹோட்டல்சைக்கிள்கடை,,,,எனநிறைந்துமுளைத்துக்கிடக்கிறவை தெருவின் இடது பக்கம் என்றால் தெருவின் வலது பக்கம் அதற்கு சற்றும் குறைவி ல்லாமல் தெருவின் நட்டுவைக்கப்பட்டிருந்தன கடைகள் பல பெயர்களில் பல ரூபம் காட்டி/

இவையெல்லாம் தாண்டிகாட்சிப்படுகிற கடைகளைவிழிப்படலங்களிலிருந்து அகற்றி விட்டுப் பார்த்தால் தென் படுகிற தெருக்கள் இரண்டு பக்கமு மாய் சேர்ந்து பத்தாவது இருக்கலாம்,

நீளச்செல்கிற சாலையின் ஒவ்வொரு முனையிலிருந்தும் சுழியிட்டு ஆரம்பிக் கிற ஒவ்வொரு தெருவும் பதினைந்து அல்லது இருபது குடும்பங்களை காத்து வைத்திருந்தன.

அதில்மூன்றாவது தெருவில்தான் கார்மேகம் இருந்தார்.அவர் இறந்து போனார் இரண்டுமாதங்களுக்குமுன்பாக,பாவம் உடல் நலமில்லாத மனிதன், வயதாகிப் போனது,என்னதான் செய்வார் பாவம், மில்லில் வேலை செய்து கொண்டிருந்த காலங்களில்இங்கிருந்து மல்லாங்கிணறு வரை சைக்கிளில் சென்று வருவார். இது போக வீட்டின் தேவைகளுக்கு பஜார்,காய்கறி மார்க் கெட்,,,, இன்னும் இன்னுமான வேறேதுமான வேலைகளுக்குச்செல்ல வேண்டு மானாலும் கூட சைக்கிள்தான்.இத்தனைக்கும் வீட்டில் இருசக்கரவாகனம் ஒன்று இருக்கிறது. அதை ஆடிக்கொரு தடவை அமாவாசைக்கொரு தடவை ஓட்டினால் பெரிய விஷயம்.அப்படியெல்லாம் இருந்தவர் கடைசியில் நடக்கக்கூட வெகு சிரமப்பட்டவராய்/

கார்மேகம் உட்பட அனைத்துக்குடும்பங்களும் காய்கறி மளிகை வாங்குற கடையாக பெரியண்ணன் கடையும் இன்னும் இருக்கிற நான்கைந்து கடைக ளுமாக இருந்தது.

நிழலுக்காக நின்றால் பெரியண்ணன் கடை வாசலில் நிற்கலாம்.

சும்மா எப்படி ஒரு கடையின் முன்னால் போய்,,,,,,,,,ஒருதடவை பார்ப்பார்கள், இரண்டு தடவை பார்ப்பார்கள்,மூன்றாவது தடவை எதற்கு அனாவசியம் காட்டி உங்களது பிரசன்னம் இங்கே,,,,,,தேவை ஏதேனும் இருந்தால் மட்டும் வாருங்கள்,அல்லது வேண்டாம் உங்களது வருகை என தயவு தாட்சயணமி ன்றி சொல்லிவிடக்கூடும்.ஆகவே சும்மா போய் நலம் விசாரிக்கிற சொல் தாங்கி நிற்பதும் வலியச் சிரித்து பல் வரிசை காட்டுவதும் கூடாது. போனால் வாங்க வேண்டும் ஏதேனுமாய் என்கிற நோக்கில் ஓரிரு நாட்கள் போய் நின்றிருக்கிறேன் ,கடலை மிட்டாயிலிருந்து அரிசி பருப்பு வரைக்கும் விற்கிற கடையில் வேறெதாவது ஒன்றை வாங்கி விடவேண்டும் என்கிற கட்டாயம் அழுத்த,,,/

வாங்கிய பொருளை வீடு கொண்டு போய் சேர்ப்பதற்குள்ளாய் ஏற்பட்டு விடுகிற மனக்கஷ்டம் கொஞ்சம் அதிகமாகித்தான் காணப்பட்டு விடுகிறது சமயத்தில்/

பின்என்ன வாங்கிய பொருளையே திரும்பத்திரும்ப வாங்க நேர்வதில் இருக் கிற நெருக்கடி அல்லது அவசியம் என்கிற உந்துதலில் வாங்கிச் செல்கிற சாமான்களை கீழே போட வேண்டியுள்ளதுதான் சமயத்தில் என்கிற சின்ன சமாதானத்தைதவிர்த்துவேறொன்றுமில்லைபெரியதாக.,,,/என்கிற சொல்லாக் கத்தை மனம் தாங்கி கடை முன்னே போய் நிற்கிற போது கடைக்காரரின் மனைவி சொன்னதாய் சொன்னாள் இவன் மனைவி/

”எதுக்குக்கா இப்பிடி,,,,,,,,,வெயிலுக்கு ஒதுங்கி கடைக்கு முன்னாடி நிக்குறது ன்னாசும்மா நின்னுட்டுப் போங்க,வந்துநிக்கிறதுக்காக வாங்குன பொருளை யே திருமபத்திரும்ப வாங்கனும்ன்னு கட்டாயம் காட்டாதீங்க,,,,,,,,என்று சொன் ன அவள்,,,,,மேலும் சொன்னாளாம் ,ஒரு நாளைக்கு இப்பிடி எத்தனையோ பேரு அடிக்கிற வெயிலுக்கு ஆத்த மாட்டாம வந்து நின்னுட்டுப் போவாங்க,

கடைக்கு முன்னாடி நாங்க யெறக்கியிருக்குறது சின்ன தாழ்வாரந்தான்,ஆனா அது இப்ப சத்துக்கு மேல தாக்குப்புடிச்சி இந்த தெருவுக்கே ஒரு நெழல் கூடாரம் மாதிரி ஆகிப்போச்சி/இதுல என்ன ஒரு வம்புன்னாஒங்கள மாதிரி சில பேரு வந்து கடை முன்னால நிக்குற போது கடைய நம்பிபோட்டுட்டு போயி அடுப்படியில, இல்ல வீட்டுக்குள்ள இருக்குற கைவேலை ஏதாவது முடிச்சிட்டு வந்துரலாம்.ஒங்களப்போல ஆட்க நிக்காம வேற ஆகாதது போகாதது ரெண்டு நின்னுச்சுகன்னா கடைய நம்பி போட்டுட்டுப்போக முடி யாது என்றாளாம்.

மேலும் எப்பொழுதாவது ஒருமுறை இவன் அந்தக்கடைப்பக்கமாய் போகிற போதோ அல்லது தேவையாய் கடையில் போய் நிற்கிற போதோ அவள்தான் பேச்சின் துவக்ககன்னியை அவிழ்த்து விடுவாள்.

என்ன சார் இது இப்பிடிப்பண்றாங்க,நீங்களே சொல்லுங்க சார்,புள்ள படிப்புக் காகபேங்குல லோன் போட்டுருந்தோம் சார் ஒரு ஆறு மாசத்துக்கு முன்னாடி, அவுங்களும் அந்த ரிக்காடக்கொண்டா,இந்த ரிக்காடக்கொண்டான்னு வாங்கி வாங்கி வச்சிட்டு அது மேலதான் நடவடிக்கை எடுக்குறோம்,கொஞ்சம் பொறு ங்க,நாங்களே ஒங்களுக்கு லெட்டர் போட்டு வரவழைச்சிருவோம்ன்னு சொன் னாங்க/

போற போதெல்லாம் அப்பிடிச்சொல்லி காலம் கடத்தீட்டு இருந்த மேனேஜர் கிட்டமுடிவா ஒண்ணு சொல்லுங்க,உண்டு இல்லைன்னு அப்டீன்னு நெருக்கி போயி கேட்டுக்கிட்டு இருந்த நாட்கள்ல அவரும் ட்ரான்ஸ்பர் ஆகிபோயிட் டாரு,,, /

புதுசா வந்த மேனேஜர்கிட்ட போயி கேட்டப்ப கொஞ்சம் பொறுங்க இப்பத் தான் வந்துருக்குறேன் நானு,இன்னும் ஒங்க பேப்பர்கள பாக்கல எல்லாம் பாத்து முடிச்சிட்டுக்கூப்புடுறேன்னு சொல்லீட்டு பொண்ணுபடிப்பு, எங்க படிக்கிறா,,,, எத்தனாவது வருஷம்ன்னு எல்லாம் கேட்டு வச்சிட்டு இருந்த நேரத துல கரெக்டா ஒரு ரெண்டு வாரம் கழிச்சி ஐந்நூறு ஆயிரம் ரூபா நோட்டு செல்லாதுங்குற பணப்பிரச்சன வந்துருச்சி.இப்பவரைக்கும் அத நோக்கியும் அதைகையெலெடுத்துக்கிட்டு ஓடவுமே நேரம் சரியாகிப் போகுது.

அதுலயும் நாங்க நடத்துற யேவாரத்துல கடன் குடுக்காம குடுத்த கடன கொஞ்சம் மொகம் சுண்டி வசூல் பண்ணாம ஆகாது.கேக்குற மனசுக்கும் குடுக் குற கொணத்துக்கும் தெரியுமா பணப்பத்தாக்கொற,குடுக்கத்தான் வேண்டியி ருக்கு வாங்கத்தான் வேண்டியிருக்கு,,/ இதான் சாக்குன்னு எல்லாமே வருது, எல்லாமே போகுது,நாங்க வேணாமுன்னு சொல்ல முடியல.கொண்டான்னு ஏத்துக்கிறவும் முடியல,வேணாம்ன்னு சொன்னா குடுத்த கடன அப்பிடியே மறந்துற வேண்டியதுதான்,கொண்டான்னு ஏத்துக்கிட்டா இந்தா இன்னாரு கடையில எல்லாத்தையும் வாங்கிறான்பாருன்னு பேரு ஆகிப்போகும்.இரு தலைக்கொள்ளி எறும்பு போல ஆகிப்போச்சி எங்க நெலம,ஒரு பக்கம் ஒங்களப்போலசரக்கு வாங்கவர்றவுங்க கிட்டபணம் வாங்க,ஒருபக்கம் அதைக் கொண்டோயி பேங்குல கட்ட அங்கயிருந்து பத்தாக்கொறையா பணம் எடுத் துட்டு வர 1500 ரூபாய்,ரெண்டாயிரம் ரூபாய்,நாலாயிரம் ரூபான்னு ஒரு நாளைக்கு எடுத்துக்கிட்டு வந்து இந்தக்கடைக்கு என்னன்னு சரக்கு வாங்கிப் போட்டு எப்பிடி யேவாரம் பண்றது சொல்லுங்க,,,,,,,

பஜார்ல வழக்கமா எங்களுக்கு சர்க்குக்குடுக்குற மொத்தக்கடைக்காரரு எல்லாரும்வந்து இப்பிடி கடன் சொல்லிக்கிட்டு நின்னீங்கின்னா நான் கடைய இழுத்து மூடீட்டு போக வேண்டியதுதான்னாராம்.என்றாள்.

ஒரலுக்கு ஒருபக்கம் இடி மத்தளத்துக்கு ரெண்டு பக்கமும்ங்குறது மாதிரி நாங்க ஒங்கள மாதிரி யேவாரம் வாங்க வர்றவுங்கள சமாளிக்கிறதா,இல்ல மொத்தமாசரக்கு வாங்குற யெடத்த சமாளிக்குறதாங்குற சங்கடமும் எப்பிடி குடும்பத்த நடத்துறதுங்குற மன பேதலிப்பும் கூடிப்போச்சி,

இதுல புள்ளைய காலேஜ்ல படிக்க வைச்ச படிப்புக்கு ஏறீட்டுப்போற செலவு ன்னு சமாளிக்க முடியாத நெலமையையும் சங்கடத்தையும் பேங்க் மேனேஜர் கிட்ட சொல்லி கொஞ்சம் கூடுதலா பணம் எடுக்க அனுமதிங்க,எங்க பணத்த தான கேக்குறோம்,கடன் கேட்டப்ப அந்தா இந்தான்னு சொல்லி அது இல்லை ன்னே ஆகிப் போச்சி.அது மறந்தும் கூட போச்சி எங்களுக்கு/இந்த நெலைமை யில எங்களுக்கும் எங்களப்போல போல பேங்குக்கு வர்ற வாடிக்கையாளர் களுக்கும் கூடுதலா கொஞ்சம் பணம் எடுக்க ஒதவுனீங்கன்னா ஒங்களுக்கு புண்ணியமாப் போகும்ன்னு கேட்டப்ப அவரு சொன்ன பதில் பேச்சு எங்க நெஞ்ச தைக்க வந்துட்டோம் பேசாம,,,/

“ஐயா நானும் நீங்க பொறந்த மண்ணுல பொறந்தஆளுதாங்கய்யா நானும்/ நான் என்ன வானத்துல இருந்தா குதிச்சி வந்துட்டேன், ஒங்களுக்கு இருக்குற சொகம் துக்கம் இன்னும் இன்னுமான நெறைஞ்சி இருக்குற எல்லா விஷய மும் எனக்கும் இருக்குதுங்கய்யா,,,,,,என்ன நான் பேங்குக்கு உள்ள இருக்கேன், நீங்க பேங்குக்கு வெளியில இருக்கீங்க,,,,அவ்வளவுதான் வித்தியாசம்.”

நாங்க இதெல்லாம் மனசு விரும்பி செய்யல,எங்க நெலம அப்பிடிம்மா,,,,,,, சமயத்துல நாக்கப்புடுங்கீட்டு செத்துறலாம் போல தோணுது,ஆனா என்ன செய்ய,மானமுள்ளவனாவும்,மத்திய தர வர்க்கமாவும் ஆகிப்போனோம் என்ன செய்யச்சொல்லுங்க,,,,,,,என்றார்.

அவர்சொன்னது எவ்வளவு தூரம்உண்மைன்னு எங்களப்போல யேபாரத்துல காசப்போட்டு காச எடுக்குற ஆள்களுத்தான் தெரியும்

எங்ககடையில்கிட்டத்தட்டசின்னதும்பெரியதுமானஐம்பதுஅறுபது குடும்பங்க சரக்குவாங்குறங்க,இதுலரொக்கம்குடுத்துவாங்குறவுங்கரொம்பகம்மி,பத்துக்கு எட்டுப்பேரு,இல்லையின்னா ஆறு பேரு கடன் சொல்லி வாங்குறவுங்கதான், அவுங்க அப்பிடி ஒண்ணும் எங்க கிட்ட வேணுமின்னு கடன் சொல்லித்தான் வாங்கணுன்னு கட்டாயத்துல வர்றவுங்க கெடையாது,வேறவழியெல்லாமத் தான்எங்ககிட்டவர்றாங்க,,நாங்களும்என்னஇப்பிடிவர்றாங்களேன்னுவிட்டுறவும் முடியாது,ஆள் அம்பு சேனைங்குற மாதிரி ஆள்களுக்குத்தகுந்தாப்பல கடன் குடுப்போம்.அதுவும் வசூலாயிரும்,சமயத்துல கொஞ்சம் சண்டித்தனம் பண்ணி ஒதைச்சிக்கிட்டு நிக்கும்.

இப்பிடித்தான்ஒருகுடும்பம் பாவம் இல்லாத கும்பம்தான் அன்றாடக்கூலிக் காரங்க, புருசனும் பொண்டாட்டியுமா வெளியேறி அன்றாடம் வேலைக்குப் போனாதான் அவுங்க வீட்டு அடுப்பு எரியும்,அப்பிடியாப்பட்ட குடும்பம்தான் ஒரு ஐஞ்சு வருஷமா தொடர்ந்து குடுக்கல் வாங்கல்ல இருந்தாங்க,திடீர்ன்னு ஒரு நா ராவோட ராவா வீட்ட காலிபண்ணீட்டுப்போயிட்டாங்க,அந்த நேரம் நாங்களும் ஊர்ல இல்ல,எங்க அம்மா ஊர்ல பொங்கல்ன்னு போயிட்டோம் ஒரு ரெண்டு நாளைக்கு,வந்து பாத்தப்ப கடைக்கு வந்தவுங்க சொன்னாங்க இந்த மாதிரின்னு/அவுங்க சொன்ன மறு நா வீடு மாறிப்போனவரும் வந்துட் டாரு புள்ள குட்டிகளோட/ ஒங்க கடன அடைக்காம நான் எங்கயும் போயிற மாட்டேன்னுபுள்ளைங்கமேல சத்தியம் பண்ணி சொல்லீட்டு கொஞ்சம் ரூபாய குடுத்துட்டுப் போனாரு,,,,

அவுங்க ஒண்ணும் வேண்டி விரும்பியெல்லாம் அப்பிடிச் செய்யல, வேற வழியில்லாமத்தான் ,பாவம்,அவுங்க குடியிருக்குற வீட்டு ஓனர் வீட்ட இடிச்சி வேலை பாக்கப்போறேன்னு சொல்லீட்டாராம்.அதே வாடகைக்கு இங்க வேற வீடு பாத்துக்கிருக்காங்க அமையல,அவரு வேலை செய்யிற இஞ்சினியரோட கொடோன்லயே ஒரு ஓரமா சின்னதா ஒரு ஆஸ்பெட்டாஸ் செட்டு போட்டு தங்கிக்கிட்டாங்களாம்,அதுக்கும் மாச வாடகை உண்டாம்,என்ன கொஞ்சம் கொறவா வாங்கிக்கிருவாராம் இஞ்ஜினியரும் இவருகிட்ட வாங்கி அத இவரு பேர்ல பேங்குல ஒரு கணக்கு ஆரம்பிச்சி போட்டு வச்சிருக்குறதா சொல் றாரு,

இப்பிடி இருக்குற ஆட்கள நம்பியும் ஒங்களப்போல மாச சம்பளக்காரங்க, கைக்காசுக்காரங்க,இருந்தும்கொஞ்சம்கசறிக்குடுக்குறவுங்க,கொஞ்சம் மொகத்த சுண்டி காசக்கேட்ட ஒடனே கையில இல்லாட்டிக்கூட யார் கிட்டயா வது வாங்கீட்டு வந்து குடுக்குறவுங்க,,,,,,,,,இப்பிடிபலபேருகள நம்பித்தான் கடையும் ஓடுது,என்ன செய்யச்சொல்லுங்க,,,,/

நாங்களும் இவுங்களப்போல உள்ள ஆட்கள நம்பித்தான் கடையையும் ஓட்ட வேண்டியிருக்கு,ஒரேயடியா முறிச்சிறவும் முடியாது,ஒரேயடியா கையவும் மனசையும் தாராளமா வீசிறவும் முடியாது.

இதுல இந்த மாதிரி இக்கட்டு வேற,நெனைச்ச அளவு பேங்குல கெடக்குற பணத்த எடுத்துட்டு வந்து சரக்குகள வாங்கிப்போட்டு கடைய நெரப்பவும் முடியல,எங்ககிட்டசரக்கு வாங்க வர்ரவுங்களும் தாராளமா கை கூசாம குடுக் கவும் முடியல,அவுங்களும் தாராளமா சரக்குக வாங்கி ரொம்ப நாளாச்சு,,/

கேட்டா ஒங்களப்போலத்தான நாங்களும்,எங்களுக்கும் ஒரு நாளைக்கு,ஒரு வாரத்துக்கு இவ்வளவுதான்னுதான கெடைக்குது பேங்குலன்றாங்க/

பேங்குல கணக்கு இல்லாத கூலிக்காரங்களுக்கு அட்டை போட்டுக் குடுத்துற் ராங்க,இல்லஅட்டையெல்லாம்போடாதீங்க செஞ்ச வேலைக்கு காசக் குடுங்க ன்னு கேட்டா அப்ப அடுத்த வாரத்துலயிருந்து வேலைக்கு வராதீங் கன்னு சொல்லீருறாங்களாம் பட்டுன்னு,,,/பாவம் அவுங்களும்தான் என்ன பண்ணு வாங்க,இங்க இல்லாட்டி வேறயெடத்துல வேலையின்னு போனாலும் அங்க யும் பணத்தப்பொறுத்த அளவுக்கு அதுதான் நெலமைன்னு சொல்றாங்க,,,/ என்னதான் செய்ய பின்ன மனச மூடிக்கிட்டு விதிய நொந்துக்கிட்டு வேலை பாக்குறாங்க அத்தனை பேரும்/

இவுங்களப்போல உள்ளவுங்க செய்யிற வியாரபாரம் இப்போ பாதியா கொறை ஞ்சிபோச்சி,ஒங்களமாதிரிமாச சம்பளகாரவுங்களும் எண்ணி எண்ணித் தான் சிக்கனமா செலவழிக்கிறாங்க,பத்து ரூவா வர வேண்டிய யெடத்துல நாலு அல்லது ஆறு ரூவாதான் கடைக்கு வேயார வருமானமா வருது,

இந்தநெலையில ஏங் மாமனாரு படுத்த படுக்கையா கெடக்காரு,மூத்த பொண் ணோட காலேஜ் படிப்பு போட்ட லோன் வராம அப்பிடியே நகர்ந்து போயிக்கி ட்டு இருக்கு.சின்னப்பொண்ணு ஆளாகி ஒருவருசம் பக்கத்துல ஆகப்போகுது, இன்னும் எதுவும் விசேசம் வைக்கலையான்னு சொந்ததுல புடுங்கா ப்புடுங்கி தண்ணி குடிக்கிறாங்க,,,,,,,என்ன செய்யன்னு தெரியல,முழி பிதுங்கி நிக்கி றோம்,

படுக்கையிலகெடக்குறமாமனாருக்குவைத்தியம்பாக்குறதா,இல்லபுள்ளைங்க படிப்பப் பாக்குறதா,இல்ல சின்னவளுக்கு விசேசம் வக்கிறதப்பத்தி யோசிக் கிறதா, தெரியல,,,,,,

ஏதோஒங்களப்போல கடைக்கு வர்ற ஆள்ககிட்டத்தான் இது போலபேசிக்கிற முடியுது என்றாள்,

தரை பாவிக்கிடந்த பழுப்புக்கலர் பேப்பர் ரேஷன் கடை பில்லாக இல்லை. அங்கே சர்க்கு வாங்கியவரின் வாழ்கையாக இருந்தது/

4 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

இன்னும் நிலைமை மோசமாகும் போல... ம்...

கரந்தை ஜெயக்குமார் said...

நிலைமை சரியாவதற்கான அறிகுறியே தென்படவில்லையே நண்பரே

vimalanperali said...

வணக்கம் திண்டுக்கல் தன்பாலன் சார்,
நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/

vimalanperali said...

வணக்கம் கரந்தை ஜெயக்குமார் சார்,
நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/