27 Jan 2017

இன்மை,இருமை,,,,/



இலக்கில்லாத நெடுந்தொலைவான
பயணமெல்லாம் இல்லை.
கிளம்பிச் செல்கிற இடத்திலிருந்து
நான்கு அல்லது ஐந்து கிலோ மீட்டர்களை
உள்ளடக்கிய பயணமாகத்தான் இருக்கிறது.
டேப் இல்லாமல் கண் மதிப்பில்
விழி செல்கிற பாதையில்
பின் தொடர்ந்தால் கூட
அதே தூரம் வரும் என்பது நிச்சயமே,,,/
அப்புறம் என்ன போய் விட்டு சடுதியில் வரலாமே,,,?
வந்து விடலாம்தான் சடுதியில் ,
ஆனால் குறுக்கிடுகிற வேலைகளின்
கனமும் பரிமாணங்களும் எப்படிஇருக்கும்
எனச்சொல்லமுடிந்ததில்லை.
இருமைக்கும் இன்மைக்குமான தொடர்பும்
வித்தியாசங்களும் இங்கே பட்டுத் தெரிவதாக 
பளிச்சென்று,,,,/

2 comments:

கரந்தை ஜெயக்குமார் said...

அருமை

vimalanperali said...

வணக்கம் கரந்தை ஜெயக்குமார் சார்,
நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக,,,/