27 Jan 2017

நீர்க்குமிழியாய்,,,,,,/

கொட்டி விடவா ,அல்லது இருக்கட்டுமா அப்படியே பக்கெட்டில்,,,,,,,,,,?////////

காணாமல் போனது என விட்டுவிடாமல் அதை தேடி எடுத்து அது இது நாள் வரை தஞ்சம் கொண்டிருந்த பரணுக்கு நன்றி சொல்லி விட்டு அதை பரணி லிருந்து எடுத்த நாள் ஒரு நல்ல நாளாகவே இருக்கிறது,

நிறைந்த வெள்ளிக்கிழமை என்கிறதாய் நினைவு,எதற்கோ விடுப்பு என அறிவித்திருந்தார்கள் அரசாங்கத்தில்.

வாழ்நாள் முழுவதுமாய் அரசாங்க காரியஸ்தனாய் இருக்கிற ஒருவன் இந்த 58 ல் காலடியை எட்டி எடுத்து வைக்கப்போகிற இதுநாள் வரை அவர்கள் சொன்னபடியெல்லாம்கேட்டுகைகட்டிவாய்பொத்திஅதிகாரிகளின்ஆசைக்கும் மனோ நிலைக்கும் ஏற்றபடியாய் நடந்து கொண்டிருந்து விட்டு இப்பொழுது திடீரென எப்படி அவர்கள் சொன்னதை மறுதலிக்க,,,?

.நல்லதோ கெட்டதோ எல்லோருக்கும் ஏற்றதுதானே நமக்கும் என்கிற கட்டி தட்டிப் போன மனோ நிலையின் உச்சத்திலும் அது அல்லாது முயன்று பார்க்கலாம் முடிந்தவரை, முட்டியும் கூட பார்க்கலாம் இயன்றவரை என்கிற முனைப்பினாய் மாறி மாறி பயணித்துக்கொண்டும் அப்படி இருப்பவர்களை புறம் பேசியும் பழி சொல்லியுமாய் திரிந்து சுகம்காண்பவர்களின் பச்சோந்தித் தனத்தை கண்டு கொண்டுமாய் இருந்து விட்டு பணியாற்றிக்கொண்டிருக்கிற வேளையிலே இப்படி அரசு அறிவிக்கிற விடுமுறைகள் மிகவும் பயனுள்ளதா கவே ஆகிப்போகிறதாய்/.

எதனால் விடுப்பு, ஏன் விடுப்பு, அது எப்படி வந்தது,என்கிறது போலான சிந்த னையெல்லாம் அவசியமில்லாதது இந்த வேளைக்கு,,,,/

லீவு விட்டார்களா,,,,,? தூக்கமுடியாத அளவு புத்தக சுமைகொண்ட பையை தூக்கி தோளில் மாட்டிக் கொண்டு துள்ளிக்குதித்து சந்தோசித்து வருகிற பள்ளிக்குழந்தையைப்போலவீட்டிற்குப்போகவேண்டியதுதானே,,,?அதுவிடுத்து,,,,, அனாவசிய ஆராய்ச்சியெல்லாம் கூடாது ஆமாம்,தப்பு அது,

பொதுவாகவேநாம்எதிலும் அதிகம் பட்டுக்கொள்ளாமல் இருந்து விட்டு போய் விட வேண்டும்,எதற்கப்பா வம்பு என்கிற மனோ நிலை தாங்கியவர்களாக எனச்சொல்லும்ஒவ்வொருவரையும்பார்த்துஅப்படியில்லை அதற்கு அர்த்த மும் விளக்கமும்,,,,,,/தவிர அப்படியெல்லாம் நினைப்பது தவறு.

குறைந்த பட்சம் நமக்கான உணவை நாம்தானே தயாரித்துக் கொள்ள வேண் டும்,உணவென்பது இங்கு ஒரு குறியீடே என்பார் மதிப்பிற்குரியவர்,,,,,என்கிற நினைவுகளெல்லாம் உள் பொதிந்து வந்த அந்த விடுப்பு தினத்தின் மதியப் பொழுதாய் பரணில் இருந்து எடுத்த அந்த வாளி பிய்ந்து போன பிளாஸ்டிக் பக் கெட்டிற்கு பதிலாய் அல்லது மாற்றாக வாங்க வேண்டாம் இனி வேறொன்று என்று கட்டியம் கூறிசென்றதாய் பட்டது,

அதிலென்ன சிறப்பு அப்படி.அது கட்டியம் கூறி சொன்னதை கேட்டு விடுகிற அளவிற்கு என்றெல்லாம் யோசிக்க வேண்டாம்,அனாவசியம் சார் அது, கஷ்டப்பட்டு மூளையை போட்டு கசக்கிப் பிழிந்து,,,,அப்படியே அதிலிருந்து உடல் வளைத்து ஜீஸ் பிழிந்து அதன் சாரத்துடன் எடுத்தெல்லாம் யோசிப்ப தென்பது அனாவசிய விஷயம் சார் இங்கு,,,/

மிகவும்எளிமையாகஅதிகமாக யோசிக்கத்தோணாத அளவிற்காய் அது சொன் னது நான் பெயிண்ட் குடி கொண்டிருந்த வாளி ,இது நாள் வரையிலுமாய் பயன்படுத்தி முடித்த என்னை காலியான டப்பாதானே என நினைத்து பரணில் அடைத்துகட்டிப்போட்டிருந்தீர்கள்.,இப்போது நீங்கள் எடுத்து பக்கெட்டிற்கு மாற்றாய் பயன்படுத்தப்போகிறீர்கள் எனச்சொல்லி விட்டு நன்றி என சிரம் தாழ்த்தி வணக்கம் சொன்ன காலி பெயிண்ட் வாளி இவனின் முழங்கால் உயரத்திற்கு இருந்தது.

இருபதுலிட்டரோ,இருபத்தைந்துலிட்டரோகுடிகொண்டிருந்த பெயிண்ட் வாளி பின் எந்த உயரத்திற்கு இருக்குமாம்,,,ம்கூம் என ஒரு வெட்டு வெட்டிச் சென்ற மனைவியை பார்க்கையில் வெக்க வெக்கமாய் வருகிறது என்றானாம் கூறுகெட்ட ஒருத்தன்,என்றவன் அடப்பாவி இருவருக்குமாய் தலை நரைத்துப் போன இந்த வயதிலுமாய் என்ன,,,அப்படி ஒரு கூறு கெட்டத் தனம்,அறுபது நாளை ஆசைக்கும்,.முப்பது நாளை மோகத்திற்குமாய் விற்று விட்டு மிச்ச நாட்களைதேமேவென்றும்ஏனோதானோவென்றும்வாழவேண்டியதுதானே, ,,,, என்கிற கேள்விகளுக்கு அச்சடித்தபதிலாய்இவனிடம்எப்பொழுதுமேஇருப்பது ஒன்றே ஒன்றாய்த்தான் இருக்கிறது,

அட ஏன் போயி அப்பிடியெல்லாம் நெனைச்சிக்கிட்டு,,,?நரைச்சிபோனது முடி தானேமனசு இல்லையேப்பா என்பதுதான் அது,முப்பது நாட்களுக்கும், அறுபது தினங்களுக்குமாய்ஆசையையும் மோகத்தையும் அடகுவைக்காமல் கடைசி வரைக்குமாய் கட்டிக் காத்து கொண்டு போனால் நன்றாக இருக்கும் கொஞ் சம் என்பதாய் ஒற்றைப் புள்ளிவைத்துமுடிக்கிற பேச்சாய் இருக்கும் இவன் பேச்சு பெரும்பாலுமாய்,,,,,/

அது போன்ற பேச்சுக்களே இவனை உயர்த்தியும் தாழ்த்தியுமாய் இருக்கிறது நட்பு மற்றும் வேலை செய்கிற வட்டாரங்களில்,,,,/

பரவாயில்லை ரைட் விடு, போய்க் கொள்கிறேன்,,,,என லாங்காகஅல்லாமல் பக்கத்திலேயேஎன பாத் ரூமில் பெயிண்ட் வாளியை வைத்து அதை தண்ணீர் விட்டு அலம்பி சுத்தம் செய்து சோப்பு எல்லாம் போட்டு துடைத்து முடித்து வாளியை தூக்கிப்பார்த்த போது ஆ,,,,சூப்பர் புதிதாக ஒரு பக்கெட் வாங்கியி ருந்தால் கூட இப்படி இருக்காது.போதும் இது இப்போதைக்கு,,என முடிவு கட்டி யவனாய்அன்றுவைத்த பெயிண்ட் வாளி பக்கெட்டாய் உருமாற்றம் கொ ண்டு தெரிந்தது போல் அதனுள்ளாய் கால் வாளியளவே இருந்த தண்ணீரும் பட்டுத் தெரிந்தாய்,/

கேட்க நினைத்த கேள்வியை தொடர்பறுந்த வார்த்தையாய் கீழிறக்கிவைத்து விட்டு பாத்ரூம் சுவர்களெங்குமாய் சுற்றிப்பார்த்த போது திசைகள் அற்றும் அதைதேடித் திரிந்ததுமான மீன்கள் சுவர்களின் வெளியெங்குமாய் சுற்றித் திரிந்தன,

ஆகா அற்புதம் அற்புதம் அற்புதமே,,,,/ இது போலான காட்சிகளை பார்ப்பதும் அதை மனம் கொண்டு ரசிப்பதும் மிக மிக ரம்யமான ஒன்றும் நல்ல செயலு மே என்பான் நண்பன் ஒருவன்,

அவனைக்கூட்டிவந்து காட்டவில்லை,பாத்ரூமீன் சுவர்வெளியெங்குமாய் மீன் படம் பொரித்த டைல்ஸ்களை ஒட்ட வைத்த அன்று,கொத்தனார் பார்த்தார், சித்தாள் பார்த்தார்,நிமிந்தாள் பார்த்தார், டைல்ஸை ஒட்ட வைத்தவர் பார்த்தே ஆகவேண்டும் என்கிற கட்டாயத்திலோ அல்லது விரும்பியோ பார்த்தார், இவர்களுடன் பார்த்த பார்க்கவைக்கப்பட்ட இன்னும் யார் யாரெல்லாமோ இருந்தும்இப்படியெல்லாம்சொன்னநண்பன்பார்க்கவில்லைஅல்லது அவனை பார்க்க வைக்க இவன் அழைக்கவில்லை,

அழைக்கவில்லைஎன்பதுதான் உண்மை இங்கு என பதிவாகிப் போகிறது இந்த நிமிடத்தில்எனஅவனுடன் பேசிக்கொண்டிருந்த ஒரு நாளில் சொன்னான், சரிவாஇப்பொழுது உட்கார் எனதுஇரு சக்கர வாகனத்தில்,கூட்டிச்செல்கிறேன் உன்னை,வா என்னுடன் வீட்டிற்கு என அவனை எவ்வளவு வற்புறுத்தி அழைத் தும் கூட வர மறுத்தவனாகிப்போகிறான்,

எப்பொழுதாவது வீட்டிற்கு மனம்நிறைந்தோஅல்லது யாரும் எதிர் பார்க்காத தருணத்திலோ வருகிற அவன் கை நிறைந்து வாங்கி வருகிற தின்பண்டங் களை பிள்ளைகளுக்குக்கொடுத்து விட்டு மனமிருந்தால் உரிமையுடன் உட்கா ர்ந்து இலை போட்டு சாப்பிட்டு விட்டு பிள்ளைகளுடன் தர்க்கித்து விட்டு போவான்.

தர்க்கம் என்றால் சரி தர்க்கமாய் ஆகிப்போகும்,கிட்டத்தட்ட பார்த்தவர்கள் பயந்து போகிற தர்க்கமாய் கூட தென்படும் சமயத்தில்/

நிலம் நீர் ஆகாயம்,அடுப்படி காய்கறி சமையல்,படிப்பு திண் பண்டம் ,பள்ளி படிப்பு,நண்பர்கள்,,,,என நீள்கிற பட்டியலில் சூடுபிடித்து போகிற பேச்சுக்களில் பலவற்றைதெளிவு படுத்தியும் மிகச்சிலவற்றில் தோற்றுப் போயும் போவான்,

விடுறாதெரியாம தோத்துப்போகல, விட்டுக் குடுத்துட் டேண்டா,அங்க பாரு புள்ளைக மொகத்துல சந்தோஷத்த என்பான்,

நண்பனாயும்உறவுக்காரனாயும் தெரிந்தவனாயும் நாம் எப்படிப்பார்க்க விளை கிறோமோ அப்படியாய் உருப்பட்டுத் தெரிகிறவன் வீடு வந்து போன சந்தோச த்திலும்இவர்கள்அனைவரும் புத்தி தெளிவு பெற்றுவிட்ட முனைப்பிலுமாய் இருக்கிற கணங்களில் பூப்பில் மூப்பாய் தெரிகிற வீடு

அன்று முதல் சிறிது நாட்களுக்கு அழகுப்பட்டுத்தெரிகிறதாய் ஆகிப்போகும். பூப்பின் மூப்பு/

அப்படியான அழகும் புத்தித்தெளிவும் இருக்கிற வரை நாம் எங்கு போயும் எதையும் தேடி சாதிக்கலாம் என்கிற முனைப்பு தெரியும்தானே,,,,?அப்படியாய் தெரிவதும்இயற்கைதானே என்கிற உள்ளார்த்தம் விரிகிற நாட்களில் இப்படி யாய் கண்பட்ட டைல்ஸ்களில் நீந்திப்பட்ட மீன்கள் விழிப்படர்வை காத்துக் கொண்டு நிற்க அதன் பாதிப்புடனேயே பாத்ரூமிலிருந்து வெளி வருகிறான்,

வெளி வருவதற்கு சற்றேமுன்பாககொஞ்சம் பின் வாங்கியவனாக வாளியை எட்டிப் பார்க்கிறான், வாளியில் உள்ளேயிருந்த நீர் மஞ்சள் கலந்த ஆரஞ்சுக் கலராய் பட்டுத் தெரிகிறது,

இந்நேரத்தில் இந்தக்கலர் இங்கு எப்படி சாத்தியம்,,,?

சாத்தியமே கொஞ்சம் மஞ்சள் வெளிதெரியாமல்,வெகுவாய் கலந்து தெரிகிற ஆரஞ்சுக் கலர் மட்டுமாய் கொஞ்சம் மிகைப்பட்டு,இரண்டும் கலந்து உருக்கி ஊற்றியது போல் வாளியினுள்ளே அடைகொண்ட தண்ணீராய்,,,,

துண்டின் நிறத்தை பிரதிபலித்த தண்ணீராய் உள்ளே இருந்த நீர் பட்டுத்தெரிய அதில் தனது முகம் தெரிகிறதா என எட்டிப்பார்க்கிறான்,இல்லை தெரிய வில்லை,

ஆனாலும் என்ன,,,,,? தெரிகிறதே துண்டின் நிறத்தை சுமந்த நீர் அது போதும் என்கிற திருப்தியினானாய் வருகிறான்,முகத்தின் அழகை விட துண்டின் நிறம் சுமந்திருந்த நீரின் அழகு முக்கியம்,

கொஞ்சம் அழுக்கு கலந்த நீர்தான் ஆனாலும் பரவாயில்லை,கலரை ரசிக்க அழுக்குஎன்ன,அது அல்லாதது என்ன என்றும் நனைத்து பிழிந்த கால் வாளித் தண்ணீரை இன்னுமாய் காத்துக்கொண்டிருக்கிறதுதான் வாளி,அதை கொட்டி விடவா கீழே அல்லது இருக்கட்டுமா அப்படியே என கேட்டுக் கொண்டே,,,,,,,,,/

6 comments:

vimalanperali said...

வணக்கம் கரந்தை ஜெயக்குமார் சார்,
நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/

திண்டுக்கல் தனபாலன் said...

ரசித்தேன் தோழர்...

KILLERGEE Devakottai said...

யதார்த்தம்
த.ம.3

vimalanperali said...

வணக்கம் திண்டுக்கல் தனபாலன் சார்,
நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/

'பரிவை' சே.குமார் said...

மிகவும் அருமை அண்ணா....

vimalanperali said...

வணக்கம் பரிவைக்குமார் அண்ணா,
நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/