11 Feb 2017

அரிசி வெளியிடை,,,,,,,

சமையலறையில் போய் அமர்ந்து கொண்டு அதெல்லாம் செய்யாவிட்டால் என்ன,,,?

அரிசி பருப்பு எண்ணெய்இன்னும் இன்னுமாய் இதரவான தண்ணீர்க் குடங்கள் கேஸ் ஸ்டவ் காய்கறிகள் சமையல் பாத்திரஙக்ளெல்லாம் குடி கொண்டுள்ள அங்கு போய் அமர்ந்து இதைச்செய்யாவிட்டால் என்ன,,,?என்கிற கேள்வி இவன் முன்பாக வந்து நின்ற போது சமையலறையைப்பற்றி எழுதும் போது அங்கு போகாமல் வேறெங்கு போக,,,/சொல்லுங்கள் என்கிறான் மனதினுள் ளாக,/

அரிசி மூட்டை வைக்கப்பட்டிருந்த இடத்திற்கு அருகாக அமர்ந்து கொண்டு தான் எழுதிக்கொண்டிருக்கிறான்.

லைட் போட்டுக்கொள்ளவில்லை,பகல்தானே இருக்கிற வெளிச்சம் போதும் தானே எனநினைத்து காற்றாடியை மட்டுமாய் சுழலவிட்டுக்கொண்டு அமர்ந்து விட்டான்,

இப்பொழுது தோணுகிறது, எழுதுவதற்குகொஞ்சம்வெளிச்சம் போதவில்லை என/போதவில்லைஎன்பதை விட வெளிச்சம் இருந்தால் தேவலாம் போல தோணியது.

பல நேரங்களில் பல விஷயங்களில் இருந்தால் போதும் என நினைப்பது தவிர்க்க இயலாமல் போவதே,/

எழுந்திருந்து லைட்டைப்போடப்போகும் போதும் லைட்டைபோட்டுவிட்டு அம ரும் போதும் பக்கத்தில் இருக்கிற அரிசி மூட்டை தன்னை இடிக்காமல் ஜாக் கிரதை காட்டி அமர வேண்டும் எனத் தோணுகிறது.பார்த்து பார்த்துப்பார்த்து என்கிற சொல்லை மனம் தாங்கி அருகாமை காட்டி அமர்ந்து விட்ட போதி லும் கூட அமரப்போகிற சற்று நிமிட இடைவெளிக்கு முன்னாக அரிசி மூடை வைத்திருந்த மேஜைக்கு அருகாய் அதன் இடை வெளியில் சுவரை ஒட்டி வைக்கப்பட்டிருந்த வயர் கூடை இடைவெளி விடாமல் இடித்தாய்ப் பட்டது,

இடைவெளிவிடாமல்இடித்துரைப்பதுஎன்பது இதுதானோ,,,,?

இப்பொழுதுபரவாயில்லை,சொன்னவுடன் அல்லது அதற்கு மறு நாளில் அரிசி வந்து விடுகிறது,

முன்பெல்லாம்மொத்தமாகஒருமூடைதூக்கிவிடுவான்,இப்பொழுது அப்படியில் லை,போதும் ஐம்பது கிலோ மூடை ,மொத்தமாக தூக்குவதில் இருக்கிற சிரமம்என்னவென்றால் மூடையில் பாதி காலியானவுடன் அரிசி புழுப் பூத்துப் போகிறது.என மனைவி சொன்னதிலிருந்து ஐம்பது கிலோ மூடைதான்,

அரிசி தீரப்போவதற்கு இரண்டு அல்லது ஒரு நாளைக்கு முன்பாகச்சொல்லி விட்டால் போதும்.உடனே கொண்டு வந்து விடுவார்,அதற்கு சௌகரியமாகத் தான் அவரது செல்போன் எண்ணை பதிந்து வைத்திருந்தான்.

அண்ணே,,,,,,,,,என ஆரம்பித்தால் போதும்,இதோ கொண்டு போய் போட்டு விடுகிறேன் அரிசியை என்பார் மனிதர்,அவர் சொன்னது போலவே இவன் வீடு போய் சேர்வதற்கு முன்பாகவே அரிசி போய் சேர்ந்திருக்கும்,

இவனுக்குக் கூட அதில் கொஞ்சம் சங்கடம் இருந்ததுண்டு,கடன் சொல்லி வாங்குகிற கடையில் போய் அவர்களையே கொண்டு வந்து வீட்டில் போய் போட்டு விடுங்கள் எனச்சொல்வதுதான்,அது/

இவன் கூட அரிசி வேண்டும் எனச்சொன்ன கையோடு நானே வந்து தூக்கிக் கொள்கிறேனே எனச்சொல்வான் பலதடவையில்.,வேண்டாம்ன்னே,நானே போய்போட்டு விடுகிறேன்என்பார் கடைக்காரர்.

அவரது சொல் போலவே செயலும் இருக்கும்.இது போலான ஏற்பாட்டில்தான் இடைநிலையில் கொஞ்சம் உழப்பல் வந்து சேர்ந்து போனது.எப்பொழுதும் போல் இவன் அரிசிக்கான தவணைப்பணத்தை கொண்டு போய் கொடுக்கப் போகும் பொழுது கடைக்காரர் இருந்த இடத்தில் வேறேருவர் இருந்தார்,அவர் இவனைகொஞ்சம் விநோதமாகவே பார்த்தார்,மொத்தமாக வாங்கிய அரிசிக்கு மாதத் தவணைப்பணம்கொடுக்கவந்திருக்கிறேன் என்றபோது/

இவனுக்கானால்கொஞ்சமாகக்கூட அல்ல,சற்று மிகை தர்ம சங்கடமாகிப் போ னது.அவரது பார்வையே எல்லாம் சொல்லிச்சென்றது,இவனை அம்மணமாக நிற்க வைத்து வரி வரியாக எழுத்துக்கூட்டி படிப்பது போல் இருந்தது.

“அடசண்டாளப்பாவிகளா,இப்பிடியாஒருவனைப்பார்ப்பது.அவனுக்கும் மானம் ரோஷம் சூடு சொரணை இருக்கும் என்கிற சொற்பதம் கூட தெரியாமல் என நினைத்துக் கொண்டான்,

நினைத்த நினைப்பு ஒருபக்கமாய் இருந்தாலும் கூட பணத்தை அவரிடம்தான் கொடுத்து விட்டு வந்தான்,

பணத்தைகொடுத்தவிட்டஇரண்டு நாள்கழித்து அரிசிக்கடைக் காரரைப் பார்த்த போது நடந்தவற்றை சொன்னான்,

”அட விடுங்கண்ணே அது ஏங் சொந்தக்கதை சோகக்கதை,அதப்போயி இப்ப பேசிக்கிட்டு, அவரு ஏங் சொந்தக்காரருதான்,நா ஏங் சௌகரியத்துக்கு வெளிய போகவர்றநேரத்துலகடையப்பாத்துக்குற நம்பிக்கையா ஒரு ஆள் வேண்டி யதா இருந்துச்சி,சரின்னு கொண்டு வந்து ஒக்காரவச்சேன்,அது பாத்தா இப்பிடி ஆகிப் போச்சி, ஒங்களோட சேத்து பதினைச்சாவது ஆளு இந்த ரெண்டு நாள்ல வந்துசொல்லீட்டாங்க,எனக்கும்கொஞ்சம்சங்கடமாத்தான் இருக்கு,

ஒரு வேகத்துல போயி இப்பிடியே அவர நாலுவஞ்சி வெளியதள்ளீரலாம்ன்னு நெனைப்புதான்.அப்புறமும் மனசு கேக்கமாட்டாமத்தான் இழுத்து இழுத்து வச்சிக்கிட்டுஇருக்கவேண்டியதுஇருக்கு.அவருக்காகஇல்லாட்டிக்கூட அவரோட பொண்ணுக்காக பாக்க வேண்டி இருக்கு.,

”அவமுன்னாடி இந்தக் கடையில வேலை பாத்தா,அவ இருக்கும் போது நான் இந்தக்கடையோட மொதலாளி கெடையாது,அவதான் மொதலாளி/ கடைக்கி வர்ற ஒரு ஜனத்தக்கூட வெளிய விட மாட்டா,சின்னப்புள்ளதான்னா கூட அவள அந்தகடைக்கே பெரிய மனுசி தோற்றத்தோடகாட்சிதந்தா,,,,நான் வாட்டுக்குஅவளநம்பி கடையபோட்டுட்டுப் போயிருவேன்,அவதான் கடைக்கி வர்ற அரிசி லோட யெறக்கி வைக்கிறதுல இருந்து,லோடு மேனுக்கு சம்பளம் குடுத்து கடைக்கி அரிசி கேட்டு வர்ற ஆள்க,,அதுல கடன் ரொக்கம்ன்னு,,,, வந்து நிக்கிறவுங்கன்னு இன்னும் இன்னுமா நெறையபேசிசமாளிச்சி கடைக்கு ள்ளயும்,கடைக்கி வெளியேயும் இருக் குற பிரச்சனைகள சமாளிச்சி யேவாரத் தையும் பாத்துக்குடுத்து கடைக்கு வர்ற ஒரு ஆளக்கூட வெளிய விடாம கட்டிக் காத்து வச்சி நான் கடை போயி சேர்றவரைக்குமா காத்துக் கொண்டு வந்தா கடைய,,,,

“வேலையாளுக்குவேலையாளா,மொதலாளிக்குமொதலாளியா,யோசனை
சொல்றதுக்குயோசனையாளா எல்லாத்துக்குமா தோதா இருந்தா, அவ இருந்த நேரத்துலயேவாரமும்நல்லாஇருந்துச்சி,கடைக்குவர்றவுங்களுக்கும்கொறவில் ல,யாரையும் மனசு நோக பேச மாட்டா,எடுத்தெரிஞ்சி ஒரு சுடுசொல்லும் சொல்லீற மாட்டா,என்னகோவம்வந்தாலும்யெசக்கேடாஏதும்பேசீற மாட்டா,,,, இதெல்லாம் எனக்கு தோதா இருந்துச்சி, இப்ப அது தலை கீழா மாறீப்போச்சி,

”எப்ப அந்தப்பொண்ணு கல்யாணம் ஆகிப்போச்சோ அப்பயிலயிருந்து எனக்கு ஆரம்பிச்சிச்சி தலை வலி, அந்தப்பொண்ணு ஒண்ணும் அப்பிடி பிரமாதமா வெளியஎங்கயும்கல்யாணம்முடிச்சுப்போயிறல,இந்தாபத்துக்கிலோ மீட்டருக் குள்ளஇருக்குறஊருக்குள்ளதான்வாக்கப்பட்டுப்போயிருக்கு/வாம்மா, சம்பளம் வேணுண்ணா கொஞ்சம் கூட போட்டுத்தர்றேன்,ஓங் புருசனக்கூட ஒருஅரிசி மில்லுலசேத்துவிடுறேன்,அவனும்நித்தம்அன்றாடம்கூலிக்குப்போயிக் கிட்டு இருக்குறான்னுதான சொன்னன்னு கூப்புட்டுப்பாத்தேன்,அவ ரொம்ப சங்கடப் பட்டுக் கிட்டே சிரிச்சிக்கிட்டு சொன்ன சொல்லு வாஸ்தவமாத்தான் தெரியுது யதார்த்ததுல பாக்கையில,,,/

“சார் கல்யாணம் ஆகுறவரைக்கும்தான் சார் நாங்க எங்க வசம், அப்பறமெல் லாம் ஒரு டம்ளர் தண்ணி குடிக்குறதுக்குக்கூட அவுங்க கைய எதிர்பாத்துத் தான்நிக்கவேண்டியிருக்கு,அதுமட்டுமில்லாம அவுங்க ஆசா பாசம் என்னவோ அதுதான் எங்க ஆசா பாசாமா ஆக்கிக்கிற வேண்டியதிருக்கு சார்” ன்னா”,,,, கடைக்கி வந்த ஒரு நாள்ல,,,/

சரிண்ணு எனக்கும் நம்பிக்கையா ஒரு ஆள் வேணும் கடைக்கின்னப்ப அவதான் கையக் காட்டுனா, அவுங்கஅப்பன,இப்ப அவரு என்னடான்னா கடை யேவாரத்தகெடுத்துருவாரு போலயிருக்கு. கடைக்கி வர்ற ஆள்ககிட்ட பூராம் ஏதாவது ஏடா கூடமா பேசி அனுப்பி வச்சிருறாரு.சமயத்துல சண்ட கூட போட்டுர்றாரு,வருசக்கணக்குல கடைக்கி வந்து போறவுங்களக்கூட பாக்காம பேசி சண்ட போட்டு சட்டய பிடிக்காத கொறையா அனுப்பி வச்சிர்றாரு,அட இது கூட பரவாயில்ல,எங்க கடை இருக்குற வரிசையில ஒரு அரிசிக்கடை இருக்கு, அந்தக்கடைஓனருஎனக்கு நல்ல பழக்கம்,ஏங்கூட ஒண்ணா படிச்ச வன், வாடா,போடான்னுதான் பேச்சிக்கிருவோம்,அவன் வீட்டு விசேச த்துல நானும் ஏங் வீட்டு விசேசத்துல அவனுமா கைகோர்த்து நிப்போம்/ அப்பிடியாப் பட்டவன்ட்ட போயி இவரு நான் எங்க கடைக்கி வர்ற ஆள்களப் பூராம் கடையில அரிசி இல்லைன்னு ஒங்க கடைக்கி திருப்பி விட்டுர்றேன். நீங்க அதுக்கு எனக்கு ஏதாவது கமிஷன் குடுங்கன்னு கேட்டுருக் காரு,,,,,/ அவன் அவரு சொன்னத கேட்ட நிமிஷத்துல காறி துப்பாதகொறையா அவர திட்டி அனுப்பிச்சிருக்கான்,

“ஏங்கிட்ட கூட அவன் இதச்சொல்லல,கடைக்கி வந்த ஒருத்தர்தான் இப்பிடி இப்பிடி சங்கதின்னாரு, எனக்குன்னா சரியான கோவம்,ஏங் கடையில இருக் குறவரு மேல வந்த கோவத்த விட ஏங்பிரண்டு அரிசிக்கடைக்காரன் மேல தான் ரொம்பக்கோவம், நேராப்போயி என்னன்னு கேட்டப்ப நீ வருத்தப் படுவயின்னுதான் சொல்லலன்னு சொன்னான்,

“அதுமட்டுமில்ல,ஏங் கடை யேவாரம் எனக்கு போதும், அதுக்கே எனக்கு சமயத்துல போதும் போதும்ன்னு ஆகிப்போகுது.இதுல ஓங் யேவாரம் எனக்கு வேணாம்ப்பா,,,,,,,,,ஒருத்தன் வயித்துல அடிச்சி வர்ற காசு நெலைக்காது ஆமா பாத்துக்கன்னான்,,,,,,,,,,அந்த ஆமாம் பாத்துக்கன்ற வார்த்தையை சொமந்துக் கிட்டுபோயிஅவருகிட்ட கேட்டப்ப “மிங்கா மிங்கான்னாரு,,,,,/

சரின்னு இத்தன நாளு வேலை ஏங்கிட்ட இருந்ததுக்கு இந்தான்னு ஒரு தொகையக்குடுத்து அனுப்பி வச்ச ரெண்டொரு நாள்ல அவரு மகன் வந்து நின்னாப்பல,,,, அவன் வந்து நிக்கிறான்,ஆளப்பாத்தா கிங்காங்கு மாதிரி கும் முன்னு ஆறடி ஒச்சரத்துல வந்து நெஞ்சத்தூக்கீட்டு இருக்காப்ல,,,, என்னாடா இதுன்னு எனக்கே ஒரு மாதிரி ஆகிப்போச்சி,,,,,என்ன தம்பின்னு கேட்டது தான் தாமதம்,பொலபொலன்னு அழுதுட்டான்,எனக்கே ஏண்டா கேட்டம்ன்னு கொஞ்சம் சங்கடமாக்கூட ஆகிப்போச்சி,,/,

சரின்னு கடைக்குள்ள கூப்புட்டு வச்சி பேசுனா அப்பா செஞ்ச தப்புக்கு நான் மன்னிப்பு கேட்டுக்குறேன் , அப்பா செஞ்ச தப்புக்கு நான் என்ன பரிகாரம் செய்யணுன்னு சொல்லுங்க,செஞ்சிதர்றேன்னு சொன்னான் அழுதுக்கிட்டே,,,/ எனக்குன்னா ஒரே சந்தேகமாகிப் போச்சி ,சரி நீ போ வீட்டுக்கு நான் வர்றேன் ஒங்கப்பாவைப்பாக்க,வந்துபேசீட்டுசொல்றேன்னதுக்கு,வேணாம்நீங்க வீட்டுக் கெல்லாம் வர வேணாம்,அங்க எங்கப்பா தண்ணியடிச்சிட்டு உருண்டுக்கிட்டு திரியிறாரு,நீங்க வந்து அசிங்கப்பட்டுகிற வேணாம்ன்னு சொன்னான்.

சரிப்பா நாளைக்கி இல்லைன்னாரெண்டு நாளு கழிச்சி வா,சொல்றேன்னு சொல்லிஅனுப்புனேன்,மறு நாளு காலையில போயி கடை தெறக்க போறேன், வந்து நிக்கிறான் பாத்துக்கங்க,என்ன செய்ய எனக்குன்னா ஒரே தர்ம சங்கட மா போச்சி, சாப்ட் யான்னுகேட்டப்பஇல்லைன்னான், கையிலகாசக் குடுத்து மொதவேலையாபோயிசாப்புட்டுவர்றப்பஒரு டீ வாங்கீட்டு வான்னு சொல்லி அனுப்பீட்டுவிசாரிச்சப்ப அந்தப்பொண்ணு கல்யாணம் ஆகிப் போனதுல இருந்து வீடும் சரியில்லாம போச்சின்னாங்க,அப்பத்தான் புரிஞ்சிச்சி,அவ கடைய மட்டும் இல்லை வீட்டையும் பாத்துக்கிட்டு வந்துருக்கான்னு,,,,அத யோசிச்சி முடிக்கிறதுக்குள்ள வந்துட்டான் சாப்புடப்போனவன்,

“வந்தவன ஒக்கார வச்சி எல்லாம் பேசுனேன், கடை,யேவாரம்,கடைக்கு வர்ற மனுச மக்க,அக்கம் பக்கத்து கடைக்காரங்க,அவங்களோட பழக்க வழக்கம் ன்னு எல்லாம் சொல்லீட்டு கடையில ஒக்கார வச்சிட்டு ஒரு ரெண்டு வாரம் எங்கயும் போகாம அவனோட கூடயே இருந்தேன்,அந்த ரெண்டு வாரத்துலயே புடிபட்டுப்போச்சி,,,,அவன் அவுங்க அக்காவை விட அப்பாவை விட ரெண்டு படி மேல வந்து நின்னான்ங்குறது,

”யேவாரம் மனுசங்களோட பழக்க வழக்கம் எல்லாத்துலயும் மேல வந்து நின்னான்,எனக்குன்னா ஒரே ஆச்சரியம், அடடா ஒரே வீட்டுக்குள்ள இப்பிடி
யான்னு,,,,,,,

சந்தர்ப்பந்தான்ஒருமனுசனஉருவாக்கும்ங்குறதுஉண்மைதான்னுஆகிப்போச்சி,,,,சரின்னு அவனுக்குன்னு ஒரு வண்டி வாங்கிக்குடுத்து யேவாரத்த அவன லைனுக்கு போகச்சொல்லவரச்சொல்லன்னு பழக்கினேன்,நல்லா வந்தான், நல்லா இருக் கான். இன்னும் நல்லாவும் வருவான்னும் தோணுது/

வரட்டும் வாழ்த்துவோம் எனச்சொல்லியவனாய் எழுதிக்கொண்டிருக்கிறான் சமையலறையில் அமர்ந்து கொண்டு/

11 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

நல்ல மனம் என்றும் திருப்தியோடு வாழும்...

'பரிவை' சே.குமார் said...

அருமை... நல்ல மனம்...

vimalanperali said...

வணக்கம் பரிவை சேக்குமார் அண்ணா,
நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/

vimalanperali said...

வணக்கம் திண்டுக்கல் தனபாலன் சார்,
நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

நல்ல நம்பிக்கை.

கரந்தை ஜெயக்குமார் said...

நல்ல மணம் வாழும்

கரந்தை ஜெயக்குமார் said...

நல்ல மணம் வாழும்

vimalanperali said...

வணக்கம் ஜம்புலிங்கம் சார்,
நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/

vimalanperali said...

ஊருக்குள் ஒரு சொல் உண்டு,
உங்களப்போல நல்ல ஆட்க
இருக்குறதுனாலத்தான்
கொஞ்சம் நஞ்சம் மழை
தண்ணி பெய்யுது என,,,
அதை நீரூபிக்கிற சம்பவங்களில்
இதுவும் ஒன்றாய் இருக்கிறது,இருந்தது,
பிடித்தது,எழுதினேன்,
நன்றி சார்,வருகைக்கும்,கருத்துரைக்கும்/

vimalanperali said...

ஊருக்குள் ஒரு சொல் உண்டு,
உங்களப்போல நல்ல ஆட்க
இருக்குறதுனாலத்தான்
கொஞ்சம் நஞ்சம் மழை
தண்ணி பெய்யுது என,,,
அதை நீரூபிக்கிற சம்பவங்களில்
இதுவும் ஒன்றாய் இருக்கிறது,இருந்தது,
பிடித்தது,எழுதினேன்,
நன்றி சார்,வருகைக்கும்,கருத்துரைக்கும்/

Thulasidharan V Thillaiakathu said...

இப்படி வாழ்வின் ஒவ்வொரு நுணுக்கமான நிகழ்வையும், எண்ண அலைகளையும், மனிதர்களையும் அருமையாகப் பதிவாக்கும் உங்களுக்கு முதலில் பாராட்டுகள்!

அருமை!!! இப்படியும் நல்ல மனம் கொண்டவர்கள் இப்பூமியில் இருக்கிறார்கள்!!! என்பதை மிக அழகாகச் சொல்லியுள்ளீர்கள்!

வாழ்த்துகள்!