21 Feb 2017

வெளிச்சக்கோடு,,,,,

 
இடுப்பும், தலையும் அவளது. குடங்கள் யாரது எனத் தெரியவில்லை.தண்ணீரு டன்தலையில்ஒன்றும், இடுப்பில்ஒன்றுமாய் தூக்கி வைத்துக்கொண்டு அவள் எட்டெடுத்துவைக்கிறஒவ்வொருஅடிக்குமாய்குடத்திலிருந்துஅலம்பி,அலம்பி சிதறித்தெரிக்கிற தண்ணீர் துளிகள் மென்மழை தூரல்போல் அவள் மீதும் அவளது புடவை மீதுமாக பட்டுத்தெரித்துதரைதொடுகிறது. 

தரை தொட்ட தண்ணீரை உள்வாங்கி உறிஞ்சிக் கொண்ட மண்ணுக்கு எவ்வ ளவு தாகம் என தெரியவில்லை, பார்த்தகனத்தில்தண்ணீராய் இருந்தது மண் குடிக்க உள் போனது எப்படி என எண்ணத் தோணுகிற வாஸ்தவத்தைசற்றே தள்ளிவைத்துவிட்டுபார்த்தால்வழிந்ததண்ணீரில்பட்டுமின்னியவெயில்ஏதோ  சொல்லிப்போவதாகவும்,அழகு காட்டி நிற்பதாகவும்தெரிகிறது. 

முனிசிபல்தண்ணீர் வருகிற தினங்களில் அவளுக்கு பிரச்சனையில்லை.

அது அல்லாத நாட்களில் குடங்களை தூக்கிக்கொண்டு ஒவ்வொரு இடமாக அலையவேண்டியிருக்கும்.

சுப்புலட்சுமியக்கா வீட்டுக்கு சரசக்கா வீட்டுக்கு,மல்லிகா டீச்சர்வீட்டுக்கு,
போலீஸ்க்காரர்வீட்டுக்கு,நடராஜன்சார் வீட்டுக்கு,சுந்தர்ராஜ் சார் வீட்டுக்கு, தங்கம் மேடம் வீட்டுக்கு,,,,,,என அவள் அன்றாடம் தூக்கி சுமக்கிற தண்ணீரின் வரிகள் அவளது உடலில்வழித்து கோடு வரைகிற நேரம் அவளது எண்ணம் வேறொன்றாய் இருக்கிறது.

லாட்ஜ் அய்யாகிட்ட கேட்டு பத்துக்கொடம், ரயில்வே கேட்டுக்கிட்ட இருக்குற ஆஸ்பத்திரியில சொல்லி பத்து கொடம்,அப்புறம் வாட்டர் டேங்குல போன ஒரு பத்து கொடம்,மத்தாயு பங்களாவுல பத்து கொடம்,,,,,,,,,,,என அன்றாடம் அவள் நாற்பது குடங்கள் வரை தண்ணீர் சுமக்கிறாள். அனைவரது வீட்டுக்கு மாக சேர்த்து.

குடத்துக்கு இவ்வளவு என பேச்சு, அல்லது கணக்கு.பிளாஸ்டிக் குடம்தான். அதுஇருக்கும்முப்பதுகுடங்களுக்கும் மேலாக/

வீட்டுக்காரர்கள் கொடுக்கிற காசில்தான் இவள் தண்ணீருக்கும் காசு கொடுத்து விட்டு தனக்கும் பார்த்துக் கொள்ள வேண்டும்.

தண்ணீர் பிடிக்கிற சில இடங்களில் கரிசனப்பட்டு காசு வாங்க மாட்டார்கள் சமயத்தில்/

இதைவீட்டுக்கார்கள்கேள்விப்பட்டோமோப்பம்பிடித்தோவிட்டால் போதும்,
மறுநாள்அவள்குற்றவாளிக்கூண்டில்நிறுத்தப்பட்டுவிசாரிக்கப்படுவாள்
"அதான்ஓசியாதண்ணிகுடுத்தாங்களாம்லஅந்தயெடத்டுலஅப்புறம் என்னடி
எங்ககிட்டகாசுவேண்டிக்கெடக்குகொடத்துக்குஇவ்வளவுன்னு" எனவாய்க்கு
வந்த படி பேசுவார்கள்.

“இதுகஇப்பிடித்தான்க்காஎவ்வளவுசெஞ்சாலும்நன்றிவிசுவாசம் இருக்காது.
இதுலசெலவுக்கில்ல,வீட்லகஷ்டம் உதவி செய்யிங்கண்ணு பொலம்பல் வேற,

“இவ மினுக்கிக்கிட்டு,மினிக்கிக்கிட்டு அந்த லாட்ஜ்ப் பக்கம் போகும் போதே தெரியும்க்கா.இந்தமாதிரிஏதாவதுஏடாகூடமாசெய்வான்னு.இப்பஅது சரியாப் போச்சு எனவரம்பு மீறிய வார்த்தைகளும், செல்லரித்து புழுப்பூத்துப்போன சொற்களுமாய் வந்து காதில் நாராசமாய் துளைக்கிற வேளைகளில்மனம் பொறுக்கமாட்டாமல்சம்பந்தப்பட்டவர்களுடன்சண்டைபோட்டிருக்கிறாள்.

சண்டைபோட்டமறுநாளிலிருந்துதண்ணீர்குடங்கள்அவர்களது வீட்டுக்கு
சுமக்க வேண்டிய வேலையிருக்காது அவர்களது வீட்டிலிருந்து வருகிற காசு
நின்று விடும் என்கிற போதும் கூட/

பின்னே எவ்வளவுதான் பொறுப்பது இவர்களது பேச்சை,அவள் முன்பே சொல்லியிருக்கிறாள் மிகவும் நாகரீகமாகவும்,நாசுக்காகவும்.

“அம்மா நான் ஒங்க வீடுகளெல்யெல்லாம் தண்ணியெடுத்து வைக்கிறது சரிதாம்மா,ஒங்கக்கிட்ட கைநீட்டி அதுக்காக காசு வாங்குறேங்குறதும் நிஜம் தாம்மா,அதுக்காகஎன்னையஏளனமா பேசிப்புடாதிங்கம்மா,மனசு தாங்கா தும் மாஎனக்கு.தாயில்லாமவளந்தபுள்ளநானு.எனக்குகூடப்பொறந்தவுன்னுஅக்கா, தங்கச்சிங்க யாரும் கெடையாது.இந்த வீடுகள்ல ஏன் அம்மா வயசுல இருக்கு றவுங்களும்,ஏங்கூடப் பொறந்த பொறப்புகளா நான் நெனைக்கிறவுங்களும் இருக்காங்க,பாத்து கொஞ்சம்சூதானமாபேசிங்கன்னால்லேநான் புரிஞ்க்கிரு வே ம்மா”என/

ஆனால்அதையும்மீறிஇப்படிபேச்சுகள்சாக்கடையாய்வந்துவழிந்தோடுகிறநேரங் களில்வேறுவழிதெரியாமல்சிலிர்த்தெழுந்துவிடுகிறாள்.

அந்தமாதிரிசமயங்களில் காம்பவுண்டே வந்து அவளை சமாதானம் பண்ணும், பாதி முறைப்புடன்,மீதி முனைப்புடனுமாய்/

அவளுக்குத்தான்தெரியும்இந்தவீடுகளுக்கெல்லாம்தண்ணீர்பிடித்துகொண்டு வந்து சேர்ப்பதற்கு அவள் படுகிற பாடு.

எத்தனைபேச்சு,எத்தனைஏளனம்,எத்தனை இழிவு உடம்பை கிழித்து ஊடுரு வுகிற எத்தனை பார்வைகள்,,,,,,,,,என இன்னும் இன்னுமான அத்தனையையும் மீறி அவள்அங்கு நிலை கொண்டு பார்க்கிற வேலைஅவ்வளவு சுலபமானதாய்  அவளுக்கு இருந்ததில்லை.

ராமசாமிரோட்டின்முக்கிலிருக்கிறடீக்கடையிலிருந்துராதாகிருஷ்ணன்காம்ப வுண்டில்இருக்கிறவரிசைவீடுகள்வரைஅவள்தான் குத்தகை.

டீக்கடைகளுக்குதண்ணீர் சுமப்பதில் ஒரு சின்ன சௌகரியம்.ஓசியில் வடை வாங்கிக்கொள்ளலாம்,வீட்டில்பிள்ளைகளுக்குஆகிக்கொள்ளும்.

சாப்பாட்டுக்கும்ஆகிப்போகும்.ஓசியாககிடைக்கும்டீயில்சமயத்தில் பசியாறிக் கொள்ளலாம். 

காலையில்இரண்டுகுடங்கள்.தேவையேற்படுகிறநேரங்களில்தேவைப்படுகிற வீடுகளுக்குமாலை நேரங்களிலும் அவள் தண்ணீர் கொண்டு வந்து தருகிறாள்.

மெலிந்து,சிவந்த மேனியில்வலுக்கட்டாயமாக வீற்றிருக்கும் அந்தக் குடங்க ளை தினசரி காலையிலும்,மாலையிலுமாக அவள் சுமந்தாளா அல்லது குடங் கள் அவளைசுமந்ததா என தெரியாத அளவிற்குஇருந்த அவளது வாழ்வில் இடுப்பும் தலையும் அவளது.

ஆனால்அவள்சுமக்கிற குடங்கள் யாருடையது எனத்தெரியவில்லை/

No comments:

Post a Comment