5 Feb 2017

விஸ்வநாதன் என்கிற மனிதர் மற்றும் தலைவர்,,,,/

அது நான் கடை நிலை ஊழியராய் பணிபுரிந்து கொண்டிருந்த காலம்.
ஏதாவது ஒரு கிளையிலோ அல்லது தலைமை அலுவலகத்திலோ பணி புரிந்ததாய் ஞாபகம்.

அந்த நாட்களின் நகர்தலில்தான் சீவலப்பேரி மண்ணிலிருந்து பறந்து வந்த பறவையின் மென் இறகு ஒன்று பாண்டியன்கிராமவங்கி ஆபீஸர்ஸ் யூனியன் (PGBOU)தலைவராகவும்,விஸ்வநாதன்சார் என்கிற பெயர் தாங்கியுமாய் எங்கள் முன்,,,/

அந்தப்பெயரையும் அவர் தாங்கி நின்ற பதவியை காத்துக் கொண்டிருந்த நேரத்தில்தான்ஒருஎளியனாய் அவர் முன்னால் அறிமுகமாகிறேன்.

ஆவருக்கு என்னை அறிமுகம் செய்வித்தவர்கள் சோலை அண்ணா என்கிற திரு,சோலை மாணிக்கம் அவர்களும்,காம்ஸ் என்கிற திரு,காமராஜ், அவர்க ளும்,திரு மாதவராஜ் அவர்களுமான மூன்று மிகை பிம்பங்களும் தொழிற் சங்கத்தலைவர்களுமே,,,/

அந்த நாட்களில் அவருக்கும் எனக்குமாய் ஏற்பட்ட உறவு மிகவும் மகோன்ன தமாய் இருந்ததா இல்லையாவெனத்தெரியவில்லை சரியாக,/
ஆனால்அது ஒரு தலைவனுக்கும் எளியனுக்குமான இடைவெளியில் பூத்துச் சிரித்த நட்பாக அது இருந்தது.

அந்த நட்பின் மூலமாய் பூத்துக்கிளைத்த ஏதோ ஒன்று அவர் எந்நேரம் அழைத்தாலும் எந்த உதவியாக இருந்தாலும் போய் செய்கிறவனாக நான் இருந்தேன்.

அப்படியாய் அவர் அழைத்துப்போகிற நேரங்களிலெல்லாம் பெரும்பாலுமாய் அவர் என்னிடம் பேசுவது சங்க நடவடிக்கைகள் பற்றியும் வங்கியைப் பற்றி யுமாய் நீங்கள் பதவி உயர்வு பெற்றால் கடைபிடிக்க வேண்டியவை என இதர இதரவானவைகளை கைபிடித்து நடை பழக்குவது போல சொல்லித் தருவார்,

அன்று அவர் கற்றுக்கொடுத்து விட்டுச்சென்றவைகளின் கை பற்றியும் இன்று வரை பயணித்துக்கொண்டிருக்கிறேன் என்கிற நினைவுடனும் விஸ்வநாதன் என்கிற தலைவனையும் நல்மனம் கொண்ட மனிதனையும் இழந்து விட்ட சோகத்தையும் கடந்து நாட்களை நகர்த்திச்செல்லத்தான் வேண்டியிருக்கிறது.
ஒவ்வொருவரின் இழப்பும் ஒவ்வொன்றை சொல்லிசென்று விட்டு செல்கிறது தான்.தூரத்து வானத்தில் பறக்கிற பறவை ஒன்று உதிர்த்துவிட்டுச்செல்கிற இறகைப் போலவே,,,/

அன்னாரது மறைவிற்கு ஆழ்ந்த இரங்கல்கள்/

7 comments:

கரந்தை ஜெயக்குமார் said...

ஆழ்ந்த இரங்கல்கள் நண்பரே

திண்டுக்கல் தனபாலன் said...

அவரது ஆத்மா சாந்தியடைய வேண்டுகிறேன்...

Thulasidharan V Thillaiakathu said...

வேதனையான நிகழ்வுகளாகவே இருக்கிறது...ஆழ்ந்த இரங்கல்கள்!

vimalanperali said...

இரங்கல்களைப்பகிர்ந்து கொண்டதற்கு நன்றி../

vimalanperali said...

பகிர்ந்து கொள்லப்படுகிற விஷயங்களில்
மிகவும் சோகம் சுமந்ததாய் மனித இழப்பு நிகழ்வு,,,/

vimalanperali said...

முகமறியா ஒரு வரின் மரணத்திற்காய்
வேதனைப்படுகிற மனது யாருக்கும் எளிதில்
வாய்த்து விடாதுதான்,,,/

vimalanperali said...

வேதனை சுமந்த மனது இரங்கல் தெரிவிக்க
எப்போதும் ஆயத்தம் தாங்கியே இருக்கிறது,/