28 Feb 2017

நூழிலை,,,,,,

இங்கு திலகாவிற்கும் திலகன் என்கிற திலகராஜிற்குமான நூழிலைநெசவைப் பற்றி சொல்லியாகவேண்டும்.

“என்ன சொல்ல பெரிசா சொல்லு,திலகாவும் இந்த ஊருக்கு பொழக்க வந்தவ, திலகராஜும் இங்க பொழப்பு தேடி இந்த ஊருக்கு அண்டி வந்தவந்தான…./ இதுலதிலகராஜீங்குறதம்பியவிட திலகா குடும்பம்தான் பொழப்பு தேடி அண்டி வந்தவுங்க பாத்துக்க,”,என்பார்கள்.

திலகாவோட தாத்தாவுக்கு விருதுநகர் பக்கத்துல பத்தாவது கிலோ மீட்டர்ல இருக்குற கஞ்சம் பட்டிதான் ஊராம்.அங்க மண்ண உசிரா நேசிச்சி விவசாயம் பண்ணுறகுடும்பமாம்இவங்களோடகுடும்பம்,என்னதான்தனக்குன்னுஇல்லை யின்னாக்கூட தண்ணின்னு கேட்டு வந்தவுங்களுக்கு எண்ணெய எடுத்துக் குடுக்குற குடும்பம் அவங்களோடது.ஏதோ மானத்துக்கு அஞ்சி பொழக்கிற குடும்பம்,சொல்லு ஒண்ணு செயல் ஒண்ணுண்ணு இல்லாத குடும்பம்.அவுங்க சொல்லுதா அவுங்க செயலுக்கு பலம்,அவுங்க செயலுதான் அவுங்க சொல்லு க்கு பலம்.ஆனா அவுங்க தாத்தா இதையெல்லாம் தாண்டு னவரு.சொல்லுற சொல்லுக்கும் செய்யிற செயலுக்கும் என்ன பெரிசா வித்தியாசம் வேண்டிக் கெடக்குன்னுரெண்டையும்ஒண்ணாச்சேத்துப் பாத்தவரு, பாத்தது மட்டுமில்ல , அப்பிடியே இருந்தும் காட்டுனவரு.அது தான் அவருக் கும் பேரும் சேத்துச்சி, அதுதான் அவருக்கு பேரும் போக வச்சிச்சி. பொடிக் கடை தாத்தான்னா அந்த ஊர்ல பொறந்த கொழந்தையில இருந்து பள்ளிக் கொட புள்ளைங்கவரைக்கும் அவரப்புடிக்காதவுங்க யாரும் இருக்க முடியாது, ஏன்னா மந்தையில இருக்குற கடையில அவருதான் பள்ளிக்கூட புள்ளைக ளுக்கு தின்பண்டம் விக்கிறவரு,

”அந்த ஊர்ல அவரு கடைக்குப்பேரு ஒத்தைக்கடை..ஊரு மந்தையில அவரு கடை வச்சிருந்த நேரம் வேற யாரும் கடை வைக்கல.அதுனாலதான் அந்தக் கடைக்கு பேரு ஒத்தக்கடையின்னு பேரு வந்துச்சி/

அதுக்கு அப்பிடி பேரு வந்தது தப்பில்ல,அவரு அந்தக்கடைய நடத்துனதும் தப்பில்ல,கடை வருமானம் அவருஒத்தைஆளு சாப்பாட்டுக்கு,கடைக்குசரக்கு வாங்கிப்போட வர, கடைக்காக பேங்குல வாங்குன கடனுக்கு தவணை கட்டன்னு சரியாப்போகும்,அது போக எஞ்சியிருக்குறத குடும்பத்துக்கு குடுத் துருவாரு,பாட்டி கெடையாது பாவம்,தாத்தா மகன் வீட்ல அதான் திலகா வோட அப்பன் வீட்ல இருந்து காலம் தள்ளிருக்காரு,பாட்டி போனதுலயிருந்து என்னதான் மகன் பேரன் பேத்தின்னு கூட மாட ஒறவுகசுத்திஇருந்த போதும் கூட தனியா இருக்குறது போல ஒணந்தாரு,அப்பிடியான மனத்தாக்கம் அவரு கிட்ட வந்ததுலயிருந்து மனுசன் அப்பிடியே உக்கிப்போனாரு உக்கி,,,/,

”என்ன மனுசன் அப்பப்ப கொஞ்சம் தண்ணி சாப்புடுவாரு,பழகுன பழக்கம் விட முடியல,பாவம்,என்னைக்காவது ஒரு நா மாசம் வாரம்ன்னு கெடையா து,எப்ப நோங்குதோ அப்ப போவாரு கடையப் பூட்டீட்டு,,,,,,ராத்திரி எட்டு மணிக்கு மேல அவரு கடை பூட்டிக்கெடந்துச்சின்னா அன்னைக்கி அவரு பக்கதூர்ல தண்ணி சாப்புடப்போயிருக்காருன்னு அர்த்தம்,அங்கதான் கடை இருக்குது, பேரக்கொழந்தையோடசைக்கிள்இருக்குது,எடுத்துக்கிட்டுக்கூடபோகமாட்டாரு, ஒரேநடைதான்,அவருதண்ணிசாப்புட்டுருக்காராஇல்லை,சாப்புடலையான்னு வெளியில யாருக்கும் தெரியாது,கண்டு பிடிக்கவும் முடியாது, எவ்வளவு ஏத்துனாலும் அவ்வளவு ஸ்டெடி,கம்பா நிப்பாரு மனுசன்னு.அவரு வயசு ஆள்களெல்லாம் கேலி பண்ணுவாங்க அவர,

“இங்க பாரு அவன தண்ணியடிச்சிட்டு முட்டி மடங்காம நடந்து வர்றான் பாருன்னு கேலி பேசுவாங்க/.நம்ம வயசுல இருக்குற அவன் அனுபவிக்கிற ஒரே சொகம் அதுதானப்ப அது ஒங்களுக்கு பொறுக்கலையான்னு அந்த கேலிப்பேச்ச யெடை மறிச்சி செல பேரு எதிர் வாதம் செய்யவும் செய்வாங்க, ஆனா குடிச்சிட்டா வீட்டுக்கு போக மாட்டாரு மனுசன், ஒயின் ஷாப்புக்கு பக்கத்திலேயே வாங்கி வந்திருந்த புரோட்டா பார்சல சாப்பிட்டுட்டு பெட்டிக் கடைய தெறந்து அங்கேயே தூங்கிப் போவாரு மனுசன்.அவரு காலம் அப்பிடியே ஓடி போக அவரது குடும்பத்தாரோட பாடு ரொம்பவும் சங்கடம் சொமந்ததாவே ஆகிப்போச்சி அந்த ஊருல/”.

”அந்த சங்கடத்தை கூடுமான வரைக்கும் அவுங்களும் தவிர்க்கவும் கழுவி விடவுமாய்த்தான்பாத்தாங்க,முடியல,.விளைச்சலில்லை,நெலத்துலபோட்டத ற்கும் மேலாககையி நஷ்டமாகிப்போச்சு..கடை வியாபாரம் தாத்தாவிற்கும் கடைக்கு சரக்குவாங்கிப்போடவும்பேங்க்லோன்தவணைகட்டவுமேசரியாய் இருந்துச்சி. அப்படி சரியானதை மீறியும் இழுத்துப்பாத்தாங்க குடும்பத்தை ,ம்ஹூம் முடியலை,இழுத்துக்கட்டிய கயிறு அறுந்து போற நெலை வந்ததும் மதிப்பா கடையை வித்து பேங்க் லோனை கட்டீட்டு வந்த விலைக்கு நிலத்தை வித்துட்டு இந்த ஊருக்கு வந்துட்டாங்க பொழப்பு தேடி./,

”மழையில நனைஞ்ச கோழிக்குஞ்சா வந்தவுங்கள தலை துவட்டி விட்டு பொழப்புக்கு வழிகாட்டி விட்டிச்சி ஊரு,இப்ப பொழச்சிக்கொடக்காங்க, திலகா வோட அப்பா இந்த ஊரு பஜார்ல பெட்டிக்கடை வச்சிருக்காரு,டீயும் வாழைப் பழமுமா சேத்து/ என்பார்கள் திலகாவின் குடும்பத்தைப்பற்றி சொல்கிற போது/

இதில் திலகராஜ் என்கிற திலகன் மாறுதல் ஆகி இங்கிருக்கிற அரசாங்க அலு வலகத்தில் பணிபுரிய வந்திருக்கிறான்.சொந்த ஊரிலிருந்து 350 கிலோமீட்டர் துரம் தாண்டி இங்கு பணி மாறுதலாகி வந்த தினத்திலிருந்து உடன் பணி புரியும் நண்பரை சேர்த்துக் கொண்டு இந்த ரூமில் வந்து தங்கிய பொழுது இவனுக்குசிறிதுநாட்கள் தூக்கம் பிடிக்கவில்லைதான்.

”இவனுக்கு இருக்கிற கொஞ்ச நஞ்ச படிக்கிற பழக்கம்கூட தூக்கம் வரஉதவி ல்லை.ஒருசிலநாட்களில்புத்தகம் படித்துக் கொண்டே தூங்கிப் போவான், அல்லதுஅட்டையில் சொருகிய பேப்பரில் ஏதாவது எழுதிக் கொண்டிருப்பான். எழுதியது எழுதிய படி இருக்க படித்துக் கொண்டிருந்தது படித்த படி இருக்க அப்படியே தூங்கிபோயிருக்கிறான் பல நாட்களில்/

இதில் மிகப்பெரிய சோகம் என்னவென்றால் பலசமயங்களில் பல நாட்களில் இவன் தூங்கிப் போவதற்குஇரவு ஒன்றிலிருந்து மூன்றுமணி வரை கூட ஆகிப் போகும்/அப்படியாய் தூங்கிப்போகிற தினங்களில் மறு நாள் காலை விடியலில் கோலம் போட வருகிற திலகாவைப்பார்க்கிற வாய்ப்பு இவனுக்கு கிடைக்கிற துண்டு.

பாவிட்டு நூல் கோர்த்து விடப்படுகிற நெசவில்கிடைக்கிற முழு உரு பற்றி இவர்கள் இருவருக்கும் தெரியாது. இருவருக்குமிடையே இருந்தது காதலா அல்லது அது அற்றதா தெரியவில்லை. இருவருக்குமிடையே எந்தவித பேச்சோ அல்லது வேறேதுனும் கடித பரிமாறலோ சந்தித்துக்கொள்ளலோ அல்லதுதூதுவிடலோஇல்லை.வேறுவிதமாய்அவளைக்கவர்வதற்காய்அவனும், அவளைக் கவர்வதற்காய் அவனும் பெரியதாய் மெனக்கெட்டதாய் தெரிய வில்லை.

அவள் ஏறிட்டுப்பார்க்கையில் அவன் தலைகுனிவான்,அவன் ஏறிட்டுப்பார்க் கையில் அவள் தலை குனிவான் அவ்வளவே.அவர்கள் இருவருக்கும் இடை யிலான பந்தம்.

குனிந்துநிலம், பார்க்கிறசமயங்களில்அவளிடமிருந்து கழண்டு விழுகிற நாணமோஇல்லை வேறெதாவதுமோ அவள் இடுகிறகோலத்தின் புள்ளிகளில் தவறி விழுந்து விடுவதுண்டு. விழுந்துவிட்டப் புள்ளிகளின் கைகோர்ப்பும் இணைவுமாய் சேர்ந்து உருவாக்குகிற கோலங்கள் பெரும் பாலுமாய் அழகாய் அமைந்து விடுவதுண்டுதான்.

சின்னக்கிண்ணத்தில் எடுத்த கோலமாவு அவளது கைபட்டு கோலமாக மாறுகிற பொழுதுகளில் காணக் கிடைக்கிற மலர்ச்சி இருக்கிறதே அடேயப்பா, என்கிற ரகத்தில் சேர்த்தியாகிப் போகும்தான்,சின்ன வாசலின் முன்பாக/

முதலில் அவளது வீட்டு வாசலைத் தான் அவளது கோலம் அலங்கரிக்கும். கோலமென்றால் நாலு புள்ளி எட்டு புள்ளியெல்லாம் தாண்டி அவள் ஒரு புள்ளிகளில் வரைவாள் .

“ஏய் என்ன இது,புதுசாவுள்ள இருக்கும்மா, எங்கிட்டு புள்ளி வச்சி எப்பிடி கொண்டு வந்து கோலத்த முடிக்கிறாங்குற வித்தையே பிடிபட மாட்டேங்குதே ஆமாம்,இவஒருஸைசாத்தான்திரியிறா,,ஏம்மாகோலத்தையேஇப்பிடி வளைக் கிறையே,வரப்போற வீட்டுக்காரனஎப்பிடியெல்லாம்வளைச்சிப்போடுவாளோ, தெரியலையே,,,,,,,எனஅடிபடுகிறபேச்சுகளெல்லாம்அவளுக்குகவலையில்லை, ஆமாம் நான் வரப்போறவன வளைக்கிறது இருக்கட்டும்,நீங்க ஒங்க வீடுகள்ல வளைக்குற வித்தைய கத்துக்கங்க மொதல்ல,,,,,,,என்பாள் திலகா தன்னை கேலி பண்ணுகிறவர்களிடம்,/

இது போலான பேச்சுக்கள் திலகராஜின் காதுகளில் அவன் குறுக்க மறுக்க நடக்கும் போதாய் விழுவதுண்டு தான்.அந்த விழுதல்களே அவள் மீது இவனுக்கு ஈர்ப்பை ஏற்படுத்தியிருக்கும் எனநினைக்கிறான்,

அவள் வரைகிற கோலங்கள் வாசலுக்கு வரும் முன்பாக அவளது வீட்டில் அதற்கென தனியாக வைத்திருக்கிறகோல நோட்டை நிரப்பியிருக்கும், அதிலி ருந்து ஒன்றை உருவி எடுத்துத்தான் கோலமாக அன்றாடம் அவளது வீட்டு வாசலிலும் திலகராஜ் இருக்கிற ரூம் வாசலிலுமாக.வரைவாள்

முதலில் அவளது வீட்டு வாசலில் கோலம் போட்டு முடித்து விட்டுதான் திலகராஜின் ரூம் வாசலுக்கு வருவாள்.ரூம் என்ன ரூம் வீடுதான் அது,அதை ரூமாக உருமாற்றி பயன்படுத்திக்கொண்டார்கள்.பார்க்க பெரிய அளவில் இல்லா விட்டாலும் கூட ஒருகுடும்பம் ஆண்டு அனுபவித்தற்கான அடை யாளத்தைக்கொண்டிருந்ததுமுழுமையாக/

அந்தவீடுஇரண்டுபுறமுமாய் வாசலைக் கொண்டதாகஇருந்தது எப்படியும் 700 சதுரஅடிகளைகொண்டதாய் இருந்த அது சமையலறை,ஹால், படுக்கையறை மாடி,,,,,,,,எனதனித்தனியாககொண்ட வீட்டில் பாத்ரூம் இருக்கவில்லை. சிரமம் தானே எதற்கு அது தேவையில்லாமல் என விட்டுவிட்டார்கள் போலும்/

கிராமங்களில் இயற்கை கட்டியிருக்கும் மறை விடங்கள் வேறு வேறாயும் நிறைந்து போயுமாய் இருக்கிற போது வீட்டிற்குள் எதற்கு அனாவசியமாய் பாத்ரூம் என எண்ணி கூட கட்டாமல் விட்டிருக்கலாம்.

இரு வாசலில் முன் புற நடைவாசலில்தான் தலை வைத்துப் படித்திருப்பான் திலகராஜ்.

கிழக்குப்பார்த்த நடை,அந்தப்பக்கமாகத்தான் கீழ்வூர் இருக்கிறது.அடர்ந்த கருவேலைமரங்களும் வண்டிப்பாதையுமாய் வாலோடியாய் செல்கிற ஒற்றை யடி வண்டிப்பாதையுமாய் செல்கிற அந்த ஊரின் முகப்பாய்த்தான் அந்த ரோடு இருக்கிறது.அந்த ரோட்டின் முனையில் போய் நின்றால் போதும். பாதையே கைபிடித்துக்கொண்டு போய் ஊரில் விட்டு விடும்.

அப்படியிருந்த ரோட்டில் ஒரு மழை நாளின் மழை ஓய்ந்திருந்த இரவு நேர மாய் ஒண்ணுக்கிருக்கப்போனவன் வலது காலில் சுருக்கென ஏதோ கடித்து விடகொஞ்சம் பயந்துதான் போனான்.அன்று பார்த்து ரூம் மேட் கூட இல்லை. ஊருக்குப்போயிருந்தார்,சரி என்ன செய்வது,,,?யாரைக் கூப்பிட்டுச் சொல்லி எங்கு போய் யாரைப்பார்ப்பது என்கிற எண்ணத்தில் இருட்டான அந்த இடத் திலிருந்து வெளியே வந்து காலைப்பார்த்துக்கொண்டு நின்றிருந்த பொழுது அந்தப் பக்கமாய்வந்த திலகாவின்அண்ணந்தான் ”என்னசார் இங்கநிக்குறீங்க, காலக்கால பாத்துக்கிட்டே”,,,,என்ற போது சொன்னான் நடந்ததை/

“ஏன் சார் இருட்டான யெடத்துல வரும் போது ஒரு டார்ச்,கீர்ச் வச்சிருக்கக் கூடாதா,,?இந்த மழை நேரத்துல அதுவும் இந்த ஈரப்பிசுபிசுப்பான பாதையில என்ன வந்திச்சோ,,,,,?என்ன கடிச்சிச்சோ,,,,?தெரியலையே என்றவர் கொஞ்சம் இருங்க சார் வீட்ல போயி சைக்கிள எடுத்துட்டு வந்துர்றேன்,டாக்டர் வீடு வரைக்கும் போயிட்டு வந்துருவோம்,கையோட,,,” என சைக்கிளுடன் வந்தவர் டாக்டரிடம் கூட்டிக்கொண்டு போனார்.

அங்குபோனால்டாக்டர் இல்லை வீட்டில்,அவரது மனைவிதான் இருந்தாள். அவரிடம் விபரம் சொன்னவுடன் அடக்கமாட்டாமல் சிரித்தவள் ஒண்ணும் கடிச்சி ருக்காது,கிடிச்சிருக்காது,முள்ளுகிள்ளு இழுத்திருக்கும். எங்க காலக் காம்பிங்க பாப்போம். எனச்கூச்சப்பட்டு ஒதுங்கி நின்ற திலகராஜின் கை பிடித்து இழுத்து ”பயபடாதீங்க தம்பி ஏங்கிட்ட வந்துட்டீங்கில்ல,ஒங்கள ஒரு வழி பண்ணி ருவோம் என்றாள்.அதற்குள்ளாக காலை இழுத்துப்பார்த்து விட்டு ஒண்ணுமி ல்ல முள்ளுதான் இழுத்திருக்கு.என முள் கீறிய இடத்தையும் ரத்தம் கசிந்திருந்த இடத்தையும் காட்டி தண்ணீரில் பஞ்சு நனைத்துத் துடை த்து களிம்பைத் தடவினாள்.அதற்குள்ளாக டாக்டர் வந்து விட்டிருந்தார். வந்தவர் திலகாவின் அண்ணனையும் திலகராஜையும் பார்த்துவிட்டு விபரம் கேட்டு விட்டு அவரது மனைவியை சப்தம் போட்டார் செல்லமாக.

அவளும்இடுப்பில்கைவைத்துமுறைத்தவளாகடாக்டரைப்பார்த்துச்சொல்கிறாள். நீங்க வர்றதுக்குள்ள நானும் அரை வைத்தியர் ஆகிறலாம்ன்னு பாத்தேன்.என சிரித்தவராய் அடிக்கக்கை ஓங்கிய டாக்டரின் கையை தட்டி விட்டு விட்டு சமையலறைக்குள் சென்று எல்லோருக்குமாய் டீ எடுத்து வந்தாள்.

அன்று டாக்டரிடம் சென்று வந்ததும் டீ சாப்பிட்டதும் காயத்திற்கு களிம்ப்பு தடவியதும் வாசலில் தலை வைத்து படுத்திருக்கிற போது எப்பொழுதாவது தோன்றி மறைவதுண்டு, கூடவே குடும்பம் என நடத்தினால் திலகா போல் ஒருவளைக் கட்டிக்கொண்டு டாக்டர் தம்பதிகளைப்போல சந்தோஷமாக வாழவேண்டும் என்கிற நினைப்பும் வராமல் இல்லை.

3 comments:

கரந்தை ஜெயக்குமார் said...

மகிழ்வான தம்பதியினர்
அருமை

vimalanperali said...

வணக்கம் கரந்தை ஜெயக்குமார் சார்,
நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/

vimalanperali said...

வணக்கம் திண்டுக்கல் தனபாலன் சார்,
நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/