23 Apr 2017

நூலறுந்து,,,,,,,,,,,



அரசு நூலகத்தின் கிராமத்துக்கிளையில்
பணிபுரிந்தவள்  அந்த நூலகத்திற்கு
வருகிற உறுப்பினர்களுக்கு
நாவல்கள் எடுத்துக்கொடுத்தாள்.
சிறுகதை நூல்கள் படிக்கக்கொடுத்தாள்.
கவிதை நூல்களையும் கட்டுரை நூல்களையும்
அறிமுகம் செய்து வைத்த அவள்    
வாழ்க்கை வரலாறு நூல்கள் கேட்கையில்
எடுத்துக்கொடுக்க சிறிதே தயக்கம் காட்டுகிறாள்.
நான்காம் வகுப்புப்படிக்கிற பெண்குழந்தையுடனும்,
இரண்டாம் வகுப்புப்படிக்கிற ஆண் மகவையுடனுமாய்
தன்னை நிராதரவாய் நடுவீதியில் நிர்கதியாய்
விட்டுவிட்டுச்சென்று விட்ட கணவனைஎண்ணியும்
குழந்தைகளின் எதிர்கால வாழ்வை நினைத்துமாய்
அன்றாடங்களில் கவலை சுமந்து கொண்டிருக்கிறஅவள்
தன் வாழ்க்கை வரலாறை நினைத்து
பிறரது வாழ்க்கை வரலாறு நூல்களை
எடுத்துத்தரவும் பரிந்துரைக்கவுமாய் தயங்குகிறாள்.

7 comments:

KILLERGEE Devakottai said...

நூலறுந்த அவளது வாழ்க்கை குழந்தைகளால் சந்தோஷிக்கட்டும்.
த.ம.1

இராய செல்லப்பா said...

...தன் துயரங்களை முன்னிட்டு கடமை தவறுவது சரியா? தனக்கான நூல்களை இன்னும் படிக்கவில்லையோ அவர்?

இராய செல்லப்பா நியூஜெர்சி

கரந்தை ஜெயக்குமார் said...

வாழ்க்கை வரலாற்று நூல்கள் அவசியம் அனைவரும் படிக்க வேண்டியது அல்லவா

vimalanperali said...

அன்பும் நன்றியுமான வணக்கம்,
கருத்துரையும் வருகையும்
என்னை கௌரவம் செய்கிறது,

vimalanperali said...

வணக்கம் ராய செல்லப்பா சார்,
நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/
தங்களின் வருகை என்னை
கௌரவம் செய்கிறது/

vimalanperali said...

வணக்கம் கரந்தை ஜெயக்குமார் தங்களின் வருகையும்,கருத்துரையும் என்னை
கௌரவம் செய்கிறது.நன்றி சார்/

Kasthuri Rengan said...

வருத்தங்கள்தான்
வசந்தம் வராமலா போகும்