28 May 2017

நாற்றோடை.,,,,,,,,,,


கிளம்பிய நேரமும் கிளம்பிய இடமும் ஒன்றாகி காட்சிப்பட்டுத் தெரிகிறது, கிளம்பிய இடம் குமார் வேலை பார்க்கும் அலுவலகம்.கிளம்பிய நேரம் அலு வலக கடிகாரம் காட்டிய ஆறு முப்பது மணி/

மணி ஆறுக்கும் ஆறு முப்பதிற்குமாய் இவனைப்பொறுத்த அளவில் பெரிய தாய் ஒன்றும் வித்தியாசம் இருந்து விடப்போவதில்லைதான்.

அதே வேளை ஐந்து அல்லது ஐந்தரை என்றால் மிச்சப்படுகிற கொஞ்ச நேரத் தில் ஏதாவது ஒரு வேலையை செய்து முடித்து விடலாம் என நினைக்கிற வனாய்/

என்ன இன்னும் அங்க,,,,,,,,,,,,,,வேலைய முடிச்சமா வந்தமான்னு இல்லாம, சும்மா சவசவன்னு உக்காந்துக்கிட்டு இருந்தா எப்பிடி,,?வாப்பா சிக்கிரம் வீட்டு க்கு, இது மட்டும்தான் வேலையா பாக்க வேலையா இல்ல வேற வேறயா என்பார் நண்பர் ஒருவர்,

ஆனால் யார் என்ன சொன்ன போதிலும் என்ன செய்த போதிலும் குமாரைப் பொறுத்தவரைவேலை வேலை வேலை என றெக்கை கட்டிக்கொண்டு அலை பவன்,

அப்படியாய் ஏதாவது பெரிதாய் வேலை இல்லா விட்டால் கூட நடந்தவைக ளை அசை போட்டுக்கொண்டு அமர்ந்திருப்பான்.அலுவலக நேரம் முடிந்து போன பின்னும் கூட/

நாளை அல்லது அன்றைக்கு முந்தைய நாட்களில் விடுபட்டு நிலுவையில் இருக்கிற வேலை.,,,,,என ஏதாவது ஒன்றை நோண்டிக் கொண்டிருப்பான்.

அப்படியாய் வேலை பார்த்து வந்தால்தான் அவனுக்கு அன்றுவேலைபார்த்து முடித்த திருப்தியும் மன நிம்மதியும் இருக்கும் ,இல்லாவிட்டால் தூக்கம் தொலைந்து போகும் அன்றைய தினத்தில்/

காலையில் இவன் அலுவலகத்திற்கு வந்து விடுகிற நேரத்திலிருந்து மாலை வீடு செல்கிற வரையுமாய் வேறு வேறு உருவங்களில் வந்து போனவர்கள் ரூபங்களாயும்அரூபங்களாயுமாய் காட்சிப்பட்டுத்தெரிய காட்சியின் பதிவுக ளை விழிப்பதிவிலிருந்து கழட்டி தனியே வைத்து விட்டு நிமிர்ந்து பார்க் கையில் இவன் கிளம்புகிற நேரம் புள்ளியிடுகிறது.சிறியதாகவும்,பெரிது பட்டு மாய்/

சேர், டேபிள் ,நாற்காலிகள் கம்ப்யூட்டர்,,,,,,,,,,,அதன் முன்னால் இருந்த பென் சில் பேனா அழி ரப்பர் என நிறைந்து போனவைகளை எடுத்து அந்த மேஜை யின் ட்ராயருக்குள் போட்டு விட்டும் அணைக்காமல் விட்டுவிட்டுச் சென்றி ருந்த கம்ப்யூட்டரை அணைத்து விட்டுமாய் வெளியில் பெஞ்சில் அமர்ந்தி ருக்கையில் அந்தக்காட்சி சரியாக தீட்டப்பட்டாத ஓவியச்சிதறலாய் கண் முன்/

எல்லாவற்றையுமாய் எடுத்தும் ஒழுங்கு படுத்தியுமாய் வைத்த குமார் கம்ப் யூட்டர் மீது படிந்திருந்த தூசியை துடைக்க மறந்து போகிறான் என்பதை பெஞ்சில் போய் அமர்ந்த அவன் அமர்வு ஞாபகப்படுத்தி விட்டுச்செல்கிறது லேசாகவும்,அழுத்தம் தாங்கியுமாய்/

என்ன செய்ய இவ்வளவு ஞாபகப்படுத்திவிட்டு சென்று விட்ட பிறகு துடைக் காமல் விட்டுவிட முடியுமா என்ன,,,அல்லது இருப்பதுதான் ஞாயமாகி விட முடியுமா,,,?

ஞாயமும் அநியாயமும் இங்கே சில வேளைகளில் அநியாயமாய் தீர்மானிக்க படுகையில் இவன் மட்டும் ஞாயப்படி போய்க்கொண்டே இருக்க பிரியப் படு வானா என்ன.,,,/

எழுந்தான் ,துணியை எடுத்தான் ,துடைத்தான் மென்மையாகவும், சுத்தமாகவு மாய்,இவனுக்கெனபழகிப்போனஒன்றும் கைவரப்பெற்றதுமானதும் அதுதான், எது செய்தபோதிலும் முடிந்த அளவு மென்மை காட்டியும்,சுத்தம் காட்டியுமாய் எதையும் செய்து முடிப்பான்,அவனதுபலமும் பலவீனமும் அதுதானாகிப் போகிறது பல சமயங்களில்/

அது போலான பலமும் பலவீனமுமான சமயங்களில் இதுவும் ஒன்று என நினைப்பும் கம்ப்யூட்டரின் துடைப்புமாய் கைகோர்ப்பது இவனில் பட்டுத் தெரி கிறது அந்த நேரத்தில்/

அந்த நேரத்தில் மட்டும் இல்லை,எந்த நேரத்திலும் இவனுக்கு நேர்ந்து போகிற விபத்தும் நன் செயலும் அதுவாகியேப்போகிறது பெரும்பாலுமாய், அது தாங்கிதான் ஓடிக்கொண்டிருக்கிறான் இது நாள்வரை/

இவன்அமர்ந்திருந்தபெஞ்ச்என்றுதான் நினைக்கிறான்.பழைய காலத்து சோபா டைப்மரபெஞ்சாக காணப்பட்டது.அதில்தான் என நினைக்கிறான் ,இன்று காலை துடைத்து சுத்தம் செய்யும் போது பின்னால் பெஞ்சின் முதுகில் எனச் சொல்லலாம்.வலது ஓரக்கடைசியில் கை போகும் அளவிற்கு ஓட்டை இருந் தது,

இதுஎப்பொழுது,,,,,,?கேட்டமனதிற்குவிடைகொடுக்கமுடியாதவனாய் அல்லது தெரியாவனாய் எப்பொழுது ஏற்பட்டிருந்தாலும் ஓட்டை ஓட்டைதானே?என எண்ணியவனாய் அமர்ந்து கொண்டிருக்கையில் அலுவலகத்திற்கு எதிர்த்த கடையிருந்துபாட்டுகேட்டது.

காலத்தைவென்றநல்லபாடல்கள்.கார்களிலும்,கடைகளிலும் ,பொது இடங்க ளிலும் சினிமா தியேட்டர்களிலும் இன்னும் இன்னுமாய்நிறைந்து போன இடங்களிலுமாய் ஆக்ரமித்துக் கொண்டிருந்த வேளையில் தனது தனித் துவதால் தமிழ் பாடல்களை இசை நிரப்பி அனுப்பிய இசைக்காரர்/

அந்தப்பாடல்களை மட்டுமே அதிகமாக கேட்டுக் கொண்டிருந்த அவரிடம் கேட்டான் ஒருநாளில்/என்ன சார் பெரும்பாலுமா அவர் இசை அமைச்ச பாடல்களா விரும்பிக் கேக்குறீங்களே என,,,/

அதற்கு அவர் சொன்னதுதான் வியப்பாய் இருந்தது,சார் மொதல்ல அந்தப் பாடல்கள நான் விரும்பிக்கேக்குறேன்னு சொல்றதே தப்பு ,அந்தப்பாடல்கள் என்னைய தத்து எடுத்து கேக்கவைக்குது சார்.என்ன இல்லைன்னு சொல் லுங்க அந்த பாடல்கள்ல.அன்பு பாசம்,நேசம் காதல்,சுகம் துக்கம் ,வாழ்க்கை தத்துவம் ,ஆச்சரியம்,ஆத்தாமை,சிரிப்பு அழுகைன்னு,,,,,இன்னும் என்னனென் னமோ இருக்கு /

அதெல்லாம் சங்கீதம் பத்தி தெரிஞ்ச அது பத்தி ஞானம் இருக்குறவுங்களுக்கு மட்டும்தான் அதன் உள் விவகாரம் தெரியும், மத்தபடி பாட்டக்கேக்குறது, அதன் மிகுந்து போன பரிணாமங்களுக்கு தகுந்தாற் போல நல்லாயிருக்கு நல்லா இல்லைன்னு சொல்ல மட்டுமே தெரிஞ்ச என்னை போலானவ ங்களுக்கும் இது நல்ல சங்கீதம்,நல்ல பாட்டு,நல்ல இசை சார்,இது போதும்ங் குற திருப்தியோட அன்றாடம் பாட்டுக்கேட்டுக்குருவேன் தினசரிகள்ல இவ்வ ளவு நேரம்ன்னு. என்பார்,

ஏங் பொண்டாட்டி கூட வைவா. ஏங் இப்படி யேவாரம் நடக்குற யெடத்துல எந்நேரமும் பாட்டு பாட்டுன்னுஇருந்தா யேவாரம் எப்பிடி ஓடும். சொல்லுங்க, அதுவும் சரியாகேக்காதஇந்தகாதவச்சிக்கிட்டுஇப்பிடியெல்லாம் என்ன கேக்க வேண்டிக் கெடக்கு என்பாள் அவரது மனைவி/

மோட்டார் ஸ்பேர் கடை வைத்திருக்கிறார்,கடைக்கு வருகிற வாடிக்கையாள ர்களில் சிலர் கூடகேட்பதுண்டு சமயத்தில்.

என்ன சார் ஆடிக்கறக்குற மாட்டை ஆடித்தான் கறக்கணுங்குற மாதிரி ஏதா வதுபாடிமோட்டார் விக்கணும்ன்னு பிளானா சார் என்பார்கள், சிரித்துக் கொள் வார் அந்தப் பேச்சிற்கு அவர்.

குமார்வேலைபார்க்கிறஅலுவலகத்தின் வாடிக்கையாளர். அவர். என்ன சார் என்றால் சிரிப்பார் மென்மையாக.அலுவலகத்திற்குள் நுழையும் போது அவர் சொல்லும்வணக்கம்மென்மைசுமந்தேஇருக்கும்.அந்த மென்மையும் அவரது
அமைதியும் அவர் பேச வந்ததை அல்லது குமார் போலானோர் கேட்ட கேள்வி களுக்கு பதில் சொல்லிவிடும்,அதே நேரம் அவரது அமைதியே எங்களை கேள் வியும் கேட்டு விடும்.என்ன சார் நல்லா இருக்கீங்களா,வீட்ல புள்ளங்களெ ல்லாம் எப்பிடி இருக்காங்க,வேலையெல்லாம் எப்பிடி இருக்கு சார் என்கிறது முதல் இன்னும் இன்னுமான நிறைந்து போன எல்லாவற்றையுமாய் கேட்பது போலிருக்கும்.அதற்கு குமாரும் வாய் மொழியாக பதில் சொன்னது போல் திருப்திப்பட்டுக்கொள்வான்,அதேகுமாரும்அவடரிம்கேட்டதுபோலவும்அவர்
பதில்சொன்னதுபோலவுமாய்திருப்திப்பட்டுக்கொள்வார்.

அதையும்மீறி அவர் அலுவலகத்திற்கு வரும் பொழுது குமார் பேசுகிற பேச் சாக சிலவை இருக்கும்.

என்ன சார் எப்பிடியிருக்கீங்க,_ குமார்

நல்லாயிருக்கேன் சார்,_ கடைக்கார்.

யேவாரமெல்லாம் எப்பிடி நடக்குது சார்._ குமார்.

இருக்குது சார் சுமாரா _ கடைக்காரர்.’

ஒருசின்னடீக்கடைநடத்துரவர்லயிருந்துபெரிசானகடை நடத்துறவருவரைக் கும் யாரை கேட்டாலும் கூட அவர் சொல்றது சுமார்ங்குற பதில் தான் போல/_ குமார்

அவுங்ககிட்ட நீங்க எப்பபோனீங்க,நீங்க எப்ப பேசுனீங்க அவுங்க இப்பிடி சொல்றத கேக்குறதுக்கு,_ கடைக்காரர்.

வாஸ்தவம்தான் அவுங்க பக்கத்துல கூட என்னால போக முடியாதும்ங்குறது நெஜந்தான்,அப்பிடியே போனாலும் கூட நான் நெனைக்கிறது கேக்கமுடியாது, ஏறிட்டுக்கூட பாக்க மாட்டாங்க._ குமார்

அப்பறம் சொல்றீங்க சார்,_ கடைக்காரர்.

இல்ல சார் ,அதுக்காக சொல்லல,சும்மா பேச்சோட வலுவுக்காக சேத்துக்கிட் டேன்._ குமார்

அதெல்லாம் சேத்துகிடலாம் தப்பில்ல,ஆனா நீங்க சொல்றீங்க பாத்தீங்களா, அதுதான் உண்மை.அவுங்க வேற,நாங்க வேற சார்._கடைக்காரர்.

சரிதான் ஒங்க கடைக்கு வந்தா நீங்க வாங்கன்னு கூப்புட்டு கையெடுத்து கும்புடுறீங்க,ஆனா அது போலான கடைக்குப்போனா நாம அவுங்கள கையெ டுத்துக்கும்புடவேண்டியிருக்கு/அப்புறம்சார்புள்ளைங்கஎன்னபடிக்கிறாங்க, எப் பிடி படிக்கிறாங்க_ குமார்.

நல்லா படிக்கிறாங்க,பொம்பளப்புள்ள பத்தாவது படிக்கிறா,ஒரே படிப்பு படிப்பு படிப்புதான்,விட்டா பத்தாவது பணிரெண்டாவது படிப்ப பத்தாவதுலேயே படிச்சி முடிச்சிருவா போலயிருக்கு/பையன் ஹாக்கி வெளையாட்டுல பின்னி யெட்டுகிறான்,படிப்புல சோடை போகாட்டி கூட ஒண்ணுல கூடுதலா கவனம் செலுத்தும் போது இன்னோன்னுல கவனம் கொறஞ்சி போகுதுதான. அவனு க்கு அப்பிடி ஒரு பாக்கியம் வாச்சிருக்கு/பரவாயில்ல படிப்புல இல்லாதாத கெடைக்காதத விளையாட்டு மூலமா அவார்டு,கப்பு,பிரைஸீன்னு வாங்கீட்டு வரும்போது ஆறுதலா இருக்கு.அதயே சந்தோஷமா எடுத்துக்கிட்டு கொண்டா டுறேன் அவன.இதுதான் அவுங்க ரெண்டு பேர பொறுத்த அளவுக்கு படிப்புல இருக்குற நெலமை _கடைக்காரர்.

குமார்காலையில்அலுவலகம் வரும் போது அவரும் வீட்டிலிருந்து வருவதை கவனிப்பான்,அது போலாய் மதியம் இவன் சாப்பிடச்செல்கையிலும் அவர் சாப்பிடச்செல்வதைபார்த்திருக்கிறான்,ஆனால்சாய்ங்காலம் அப்படி முடியாது அவர் நினைத்தாலும்/

ஆனால் இது நடக்கும் போது ஒருவருக்கு ஒருவர் சொல்லி வைத்து செய்தது போல்இருக்கும்,ஆனால்இவன்செல்லும்போதுஅவர்வருவதும்,அவர்செல்லும் போதுஇவன் போவதும் ஒரு தற்செயல் ஒற்றுமையா அல்லது திட்டமிட்ட செயலா என பிறரை எண்ணவைத்த நாட்களின்பொழுதின்ஒரு நாளன்றின் ஒரு பொழுதில் காலையில் வேளைக்கு வரும் பொழுது இவனை பார்த்து விடுகி றார் கடைக்காரர்.

சார் வாங்க டீ சாப்பிடுவோம் என கடைக்கும் கூட்டிக்கொண்டு போய் விடுகிறார் டீ சாப்பிட்டு முடித்து விட்ட கையோடு/

சரி வேண்டாம் என சொல்வது அவ்வளவு நன்றாக இருக்காது .இவன் என்ன இவ்வளவு மண்டை கர்வமாக இருக்கிறான் என எண்ன வைத்து விடுமோ என்கிற நினைப்பில் நேரமானாலும் பரவாயில்லை,இவருடன் டீ சாப்பிடுவத ற்காக ஒரு மணி நேரம் பெர்மிஷன் போடலாம் என நினைத்து போலவே ஆகியும் போகிறது,

அப்படி ஒன்றும் பெரிதாக ஒன்றும் பேசிக்கொள்ளவில்லை இருவருமாய். ஆனாலும் அவரது கடையில் போய் அமர்ந்திருந்து விட்டு வந்தான்,எழுந்து வரும்போது சொன்னார்,சார் நேரம் கெடைக்கும் போது வாங்க சார் கடையில ஒக்காந்து எந்திரிச்சிப்போங்க சார்,ஒங்களப்போல ஆட்க வந்து போனா ஏங் கடைக்கு ஒரு ராசி சார் என்றார்,

எதைவைத்துஅப்படிச்சொல்கிறார்எனத்தெரியவில்லை.சரிஎனவந்துவிட்டான் ராசிக்காரன் என்கிற பெயர் தாங்கி.அப்படி வந்த அன்றிலிருந்து குமார் ராசிக் காரனாகவே அறியப்படுகிறான். இன்றுவரை/

நேரம் காட்டுகிற சாக்கில்கட்டி அடைக்கப்பட்டிருந்தவட்டவடிவ கடிகாரத்திற் குள்ளாய் கைகோர்த்துக்கொண்டிருந்த சின்னமுள்ளும் பெரிய முள்ளுமாய் தனக்கு துணையாக விநாடி முள்ளையும் துணைக்கு அழைத்துக்கொண்டு தன் வாழ்நாள் முழுவதுமாய் இளம் காதலர்கள் போல் கை கோர்த்துக்கொண்டு திரிகிற பாக்கியம் பெற்ற ஒன்றாயும் ஒன்றுக்கு ஒன்றை ஒப்புக்கொடுத்தது போலாய்சளைக்காமல்ஒட்டிஉறவாடி ஓடிக்கொண்டிருக்கிறகாலத்தின் கை காட்டியுமாய் காட்சிப்பட்டுமாய் அந்த அலுவலகத்தில்/

அது பார்த்துதான் நேரம் இவ்வளவு எனக் கணக்கிட்டுகிளம்புகிறவனாய்/ கால த்திற்கும் நேரத்திற்குமாய் தன்னை ஒப்புக் கொடுத்து விட்டு நேரம் காலமி ன்றி பார்க்கிற வேலைகள் தன்னை இழுத்துக் கொண்டு போய் வீட்டுக்கு அனுப்புகிற வேளை இந்நேரமாய் ஆகிப்போகிறது,

மணி மாலை ஆறு முப்பது,காலையில் ஒன்பதுமணிக்கு வந்து அலுவலகத் தில் தலை குனிந்தது. தலை தூக்கிப்பார்க்கையில் மணி இத்தனையைச் சொல்லி அறிவித்துவிட்டுச் சொல்கிறது.உம் கிளம்பு சீக்கிரம் ,முன்பு போலெ ல்லாம் இல்லை இப்பொழுது. வயதாகிப்போனது உனக்கு,அதற்குத் தகுந்தாற் ப் போல் உனது வேலைகளையும் ஓட்டத்தையும் நிர்ணயித்துக்கொள்ளப் பழகிக்கொள்.அதுதான் நல்லது உனக்கும் உனது உடலுக்கும்/ என ஒலிக்கிற அசரீரியாய் சொல்லிச்செல்கிற மனதின் குரல் செவிப்பறை தாக்கிச் செல்கி றதுதான்,என்ன செய்ய வாக்கபட்ட கதையாய்,,,,,,,,,,ஒப்புக்கொடுத்து விட்ட உடல் உழைப்பையும் மூளை உழைப்பையும் அலுவலகத்திலிருந்து பிரித்தெ டுத்துப்பார்க்கவோ இல்லையாயின் கழட்டி வைத்துவிட்டு சென்று விடவோ மனம் இருப்பதில்லை பெரும்பாலுமாயும்/

கிளம்பிய நேரமும் கிளம்பிய இடமும் ஒன்றாகி காட்சிப்பட்டுத் தெரிகிறது, கிளம்பிய இடம் குமார் வேலை பார்க்கும் அலுவலகம்.கிளம்பிய நேரம் அலு வலக கடிகாரம் காட்டிய ஆறு முப்பது மணி/

6 comments:

 1. அருமை அய்யா

  தொடருங்கள்

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் மது சார்,
   நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/

   Delete
 2. Replies
  1. வணகக்ம் திண்டுக்கல் தனபாலன் சார்,
   நன்றி வருகைக்கும் கருத்துரைக்குமாக/

   Delete
 3. Replies
  1. வணக்கம் கரந்தை ஜெயக்குமார் சார்,
   நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/

   Delete