5 Jun 2017

சாலைக்குள் அடைகொண்ட மனிதம்,,,,,,,/


ஜன நடமாட்டம் மிகுந்த சாலையாய் மாறிப்போயிருந்தது அது .அந்த நேரத் திற்கு.கருத்து நீண்ட சாலையின் ஒரு புறம் மண் பரவிப்போயிருக்க அதன் எதிர்புறம் வரிசைதாங்கி முளைத்திருந்த கடைகள் காம்ப்ளக்ஸ்களுக்குள் அட ங்கிப்போய் உருத்தாங்கியிருந்ததாக/

ஜெராக்ஸ் கடை,செல்போன்சர்வீஸ் சென்டர்,மோட்டார் ஸ்பேர்ஸ் அண்ட் பார்ட்ஸீம் மோட்டாரும் சேர்ந்து விற்கும் கடை, பலசரக்கு விற்கும் கடை, எலெக்ட்ரிக் கடை மற்றும் இவன் அதிகம் போயிருக்காத கடையாக ஒன்று மாய் கூடி கட்டி இருந்தது,

கூட்டினுள்ளே அடைப்பட்ட மனிதமாக மனிதர்களாக கடைக்கார்களும் கடை யின் உட் பொதிந்திருந்த பொருட்களுமாய்/

அது தாங்கி காட்சிப்பட்ட இடமும் அதன் எதிர்புறமுமாய் மண் பரவி போயி ருந்த இடமும் கைகோர்த்துக்கொண்டிருக்க நடுவே ஊர்ந்த சாலை கொஞ்ச மும் லஜ்சை இல்லாமல் தன் மேனி மீது மனித நடமாட்டத்தையும் இன்னும் இன்னுமான வாகன நடமாட்டத்தையுமாய் அனுமதித்திருந்தது அந்நேரத்தில்/

இவனுக்கானால் ஆச்சரியம் எந்த நேரத்தில் நடந்த அதிசயம் இது?பொதுவாக இவன் கிளம்பிப்போகிற மாலை வேளையின் இந்தப்பொழுதிற்கு இந்தச் சாலை இவ்வளவு இயக்கம் பெற்றிருப்பது ஆச்சரியத்திலும் வெகு ஆச்சரிய மே/

அலுவலகம் முடிந்து கீழிறங்கி வந்துஇரு சக்கர வாகனத்தை மற்ற வாக னங்கள் நிறுத்தப்பட்டிருக்கிறவரிசையிலிருந்து தள்ளிக்கொண்டு வந்து வெளி யில் எடுத்து ரோட்டுக்குக் கொண்டு வருவதற்குள்ளாக கால் மணி அல்லது அரை மணி ஆகிப் போகும்,

அப்படிஆகிப்போகிற அரை அல்லது கால் மணி நேரத்திற்கு வண்டியை வெளி எடுக்கிற எரிச்சலில் மனம் கொள்கிற எரிச்சல் பெரும்பாலுமாய் ஒருவர் அல்லது இருவரை நோக்கி மட்டுமே குவியும்,

ஏனெனில் அவர்கள் மட்டுமே அவர்களது வண்டியை குறுக்கும் மறுக்குமாக நிறுத்தியிருப்பார்கள்.

அப்படி ஒன்றும் இன்றைக்கு முகூர்த்த நாளோ அல்லது வேறு ஏதேனுமான விஷேச நாளோ கிடையாது.

நேற்றைக்கு முந்தின தினம்தான்முகூர்த்த தினம்.அதன் பாதிப்பு இன்று வரை யிலுமாய் இருக்கிறது.நேற்று முன்தினமானமுகூர்த்த நாளில் சூலக்கரையில் ஒரு திருமணம்,பத்து முப்பது டூ பணிரெண்டு முப்பது முகூர்த்தம்.கொஞ்சம் மெதுவாகக்கூட போகலாம்,

ஒன்றுமில்லை அதனால் ஆனால் இவனுக்கு போவதா வேண்டாமா,என்கிற மனோநிலை உண்டாகிப்போனது ஆச்சரியத்திலும் ஆச்சரியமே/

திருமணத்திற்கு போவோம் என்பதற்கு தகுந்தாற்போல் ஒரு மனோ நிலையும் வேண்டாம் என்பதற்கு தகுந்தாற்ப்போல ஒரு மனோ நிலையையும் மனம் வரைந்து கொள்வது இன்னொரு ஆச்சரியத்திலும் ஆச்சரியமே/

இளைய மகனை கூட்டிக்கொண்டுதான் திருமணத்திற்குச்சென்றிருந்தான், மிதமான வெயில் இவன் சென்று கொண்டிருந்த பணிரெண்டு மணிவெயிலை அவ்வளவாகசூடுபண்ணிக்காண்பிக்கவில்லை.இரு சக்கரவாகனத்தில் சென்றி ருந்த போதும் கூட/

அநேகமாக திருமணம் இந்நேரம் முடிந்திருக்கும். மண்டபத்திற்குள்கால் வை த்ததும்மொய்எழுதிவிட்டுவந்துவிடவேண்டும்கறாராகஎனநினைத்துக் கொண் டுதான் சென்றான்.

இவன் சொன்னதை மகனும் அப்படியே ஏற்றுக்கொண்டான்.முன்பெல்லாம் கல்யாணத்திற்கு செல்கிற நேரங்களும் இடங்களும் மாறுபடும். இப்பொழுது அப்படியில்லை.

அதுவும்கூட மாறுபடுகிறது. ஒன்பது முப்பது டூ பத்தரை முகூர்த்தம் என்றால் ஒன்பது மணிக்கெல்லாம் போய் விடுவான்.

மண்டபம், அதன் விஸ்தீரணம்,அதன் அழகு, வாடகை,அலங்கரிக்கப்பட்டிருக் கிறவிதம். சமையல்காரர்கள்.அவர்களது ஊர் எதுஎன்பதுமுதற்கொண்டு தெரிந் து கொள்வதில் ஆவலாய் இருப்பான்.ஆவல் செயலிலும்வந்துவிடும்.

தவிர்த்து கல்யாணத்திற்கு வந்திருக்கிற அனைவரும் அணிந்திருக்கிற உடை அவர்களது நடை மற்றும் செயல்கள் பேச்சுக்கள் என பராக்குப்பார்ப்பதில் விருப்பாய் இருப்பான்,

அதில் இவன் பெரும்பாலுமாய் தெரிந்தெடுத்துப் பார்ப்பது திருமணத்திற்கு வருபவர்கள்அணிந்துகொண்டுவருகிறஉடைகளையே,அணிந்திருக்கிறபேண்ட் என்ன வகை சூட்டிங்காய் இருக்கும்,சட்டை எந்த வகை துணியாய் இருக்கும், பாலியெஸ்டரா,காட்டானா,டெரிக்காட்டனா,இல்லைவேறு வேறானதொரு
ரகங்களா,,,,,என அறிந்து கொள்வதிலும் அதை உடுத்தியிருப்பருக்கு அந்த உடை எப்படி இருக்கிறது நன்றாகவும் பிட்டாகவும் என பார்வையிடுவதிலு மாய் முடிந்தால் அது போல் ஒன்று வாங்க வேண்டும் என்பதிலும் குறியாய் இருப் பான்,

நண்பர் ராமராஜிடன் மதுரைக்கு சென்றிருந்த போது புகழ்பெற்ற மில்லின் சூட்டிங்க் ஷோ ரூமில் நூற்றுஐம்பது ரூபாய்க்கு இரண்டு பேண்ட் பிட் எடுத்தார், அந்த நேரத்தில் நூற்று ஐம்பது ரூபாய் பெரிய தொகை/ அதற்கே இவ்வளவுக்கு எடுத்து விட்டோமே,இவ்வளவுக்கு எடுத்து விட்டோமே என பெரும் அனர்த்தலாய் அனர்த்திக்கொண்டே வந்தார் ஊர் வந்து சேர்கிறவரை.

அந்த நேரத்தில் அவருக்குப்பிடித்தது மேட்டி வகை துணிகளே,அதில் கனமாக இருக்கும் துணி தைத்துப்போட்டால் வேர்க்காது சுகமாக இருக்கும் என்பார்,

அதை அனுபவப்பூர்வமாக உணர்ந்த நாட்கள்ளில் இவனுக்குக்கொஞ்சம் சந்தோஷமாக இருந்தது,அன்றிலிருந்து பேண்ட் சட்டைக்கு துணி எடுத்தால் ஒருவார்த்தைராமராஜிடம்கேட்டுக்கொள்வான்எந்தத்துணிஎடுத்தால் நன்றாக  இருக்கும் என,,/

திருமணமண்டபங்களில் இப்படி பார்க்கிற கணங்களில் நண்பர் ராமராஜின் ஞாபகம் வராமல் இருக்காது.

இருபத்திஇரண்டுவயதில் ஒரு மழைநாளின் மாலையில் இவனுடன் வேலை பார்த்துக் கொண்டிருந்தசுரேந்திரன் மறுநாள் நடக்க இருக்கிற திருமணத்திற்கு முதல் நாள் இரவே கூட்டிக்கொண்டு போயிருந்தான்.அவர்களது உறவினர் வீட்டுத் திருமணமாம்.

மண்டபத்தில் அப்படி ஒன்றும் கூட்டம் காணக்கிடைக்கவில்லை..இவர்கள் சென்றநேரம்எல்லோரும்சாப்பிட்டுக்கொண்டிருந்தார்கள்.வெளியூரில்இருந்து  வந்தவர்கள்,உள்ளூர்க்கார்கள் என/

மண்டபத்தில் தங்க வேண்டியவர்களும் வீட்டிற்கு போய் விட்டு வர வேண்டி யவர்களுமாய் அவரவரது பாடுகளைப்பேசிக்கொண்டிருந்தார்கள், இவனுக்குத் தான் சென்றதும் சாப்பிடஒரு மாதிரியாய் இருந்தது.அதற்காகத்தாஅன் மண்ட பத்திற்கு வந்ததது போலவும் சோத்துக்கு ஏமாந்து திரிவது போலவுமாய் இருக்கும்பளிச்சென/நண்பன்தான்அழைத்துக்கொண்டுபோனான்,வாசாப்பிடப்  போகலாம் என.

இல்லை இப்போதைக்கு சாப்பாடு வேண்டாம்,நீ வேண்டுமானால் சாப்பிடு நான் அப்புறமாய் சாப்பிட்டுக் கொள்கிறேன் என்றான்.சரி வா எனக்குத் துணை யாய் எனது பக்கத்தில் உட்கார்ந்து கொள் சாப்பிட வேண்டாம்,என்ற நண்ப னது பேச்சை ஏற்று அவனது பக்கத்தில் போய் அமர்ந்த போது லேசாய் பசித் தது போல் இருந்தது.சரி சாப்பிட்டுக்கொள்வோம் என நண்பனுடன் இவனும் சேர்ந்து அமர்ந்து கொண்டான் சாப்பிட/

சாப்பிடும் போதே சொன்னான் நண்பன்,சாப்பிட்டு விட்டு உனக்கு சின்னதாய் ஒரு வேலை இருக்கிறது,மண்டபத்தில் கல்யாண மேடையை மட்டுமாய் அலங்கரிக்க வேண்டும் என விரும்புகிறார்கள் கல்யாணவீட்டார்கள், உனக்குத் தான் தெரியுமே அலங்கார வேலைகள் எல்லாம்,அந்த நம்பிக்கையில் கல் யாண வீட்டாரிடம்சொல்லிவிட்டேன்நான் அலங்காரம் பண்ணித் தருகிறேன் என,

பண்ணிவிடலாம்தானேஇப்பொழுது,,,,,,,எனக்கேட்டநண்பனைஏறிட்டவனாயும் உள்ளுக்குள்ளாய்சிரித்துக்கொண்டும்iஇதற்காகத்தானாகூட்டிவந்தாய்வேகமாய் கல்யாணத்திற்கு செல்வோம் எனச்சொல்லிஎன நினைத்துமாய்/

நினைத்ததை நண்பனிடம் சொல்லியும் விட்டான்.அதற்கு சமாளித்துச்சிரித்த நண்பன்இல்லை.அப்படியெல்லாம்,அலங்காரம் பண்ண வருவதாய் இருந்தவர் வரவில்லையாம்,என்னிடம்சொல்லிக்கொண்டிருந்தார்கள் இன்று காலையில் நான்தான் பார்த்துக்கொள்கிறேன் நான்,என்னிடம் ஒரு பையன் இருக்கிறான், கூட்டிவந்துவிடுகிறேன்எனகூட்டிவந்தேன்உன்னை என்றான்.சரி வந்தாயிற்று சாப்பிட்டும் ஆயிற்று.கூட்டிக்கொண்டு வந்தவனுக்கு கொடுக்கிற மரியாதை யாய் இந்த வேலையை செய்யா விட்டாலும் கூட தனக்கு தெரிந்து கொள்ள வேண்டும் என ஆசையில் சாப்பிட்டுவிட்டுப்போய்அலங்காரத்தை செய்து முடித்து விட்டுத்தான் வந்தான்,

வேலை செய்ய இவனுக்குப்பிடிக்கும் அதற்காக வேலை என்கிற பெயரில் ஏமாந்து போக இவன் தயாராய் இல்லை.

ஆனால் பெருமளவிலாய் இவன் வேலை பார்க்கிறேன் என்கிற ஏமாற்றத் தான் பட்டிருக்கிறான்.அதுபோலானபொழுதுகளில்இவன்பெருமளவிலாய்சொல்லிக்
கொள்வதெல்லாம்போகட்டும்அவர்கள்எங்காவதுயாராலாவதுஏமாறுவார்கள்.

வேலை தெரியாதவர்களும் வேலையைப்பற்றி அறியாதவர்களுமாய் அதைப் பற்றிய கிஞ்சித்தும்கூட பிரஞ்னை இல்லாதவர்கள் வேலை வாங்குகிற இடத் தில்இருப்பதுபோல்இருக்கிறதுஉனதுஇருப்புஇன்றுஇந்ததிருமணமண்டபத்தில் என நண்பனிடம் சொன்ன போது அவன் அப்படி ஒன்றும் பெரியதாக கவலை பட்டுக்கொண்டதாய் தெரியவில்லை.

இவன் திருமணம் நடக்கிற மேடையில் அலங்காரம் செய்து கொண்டிருக்க மேடைக்குக்கீழே நாற்காலியை போட்டு அமர்ந்து கொண்டு கால்மேல் கால் போட்டவனாய் அப்படிச்செய் இப்படிச்செய் என்று உத்தரவிட்டுக் கொண்டி ருந்தான் நண்பன்,

இவன் மேடையை விட்டு வேகமாக இறங்கி அவன் அருகில் போய் காதரு காய்ச் சொன்னான் என்ன நண்பா நெற்றியில்ஏதோபுடைப்பாகத்தெரிகிறதே என,,,,,,,,,

அந்த சொல்லைகேட்ட மறுகணத்திலிருந்துதிருமணம் முடிகிற மறு நாள் காலைவரை நண்பன் இவனிடம் ஏதும் பேசிக் கொள்ளவில்லை.

திருமணம் முடிந்து வரும் போதுதான் கேட்டான்,ஏன் அப்படிச் சொன்னாய் இரவு என.

பின் என்ன நண்பா அலங்கார வேலையைப் பற்றி ஒன்றும் தெரியாத நீ கால் மேல் கால் போட்டுக்கொண்டு உத்தரவிட்டு கொண்டிருந்தது எனக்குப்பிடிக்க வில்லை, ஆதலால்தான் அப்படிச்சொன்னேன் எனச்சங்கடமாய் ச்சிரித்தான் இவன்/

அப்படிச்சொன்னஅன்றிலிருந்துஅதுபோலானபோலிப்பேச்சுக்களைபேசமாட்டான் நண்பன்,

தனது இருபது தாண்டிய வயதில் நடந்த இந்நிகழ்வு ஒவ்வொரு திருமணத் திற்கு செல்லும் போதுமாய் ஞாபகம் வருவது தவிர்க்க இயலாததாகவே/

இவன் போயிருந்த போது திருமணம் முடிந்து மண்டபம் காலியாக இருந்தது ,நன்றாக இருந்தால் ஐம்பது பேருக்கும் குறைவாகத்தான் இருந்தார்கள் மண்ட பத்தில்,

இவன் மண்டபத்திற்குள்ளாக நுழையும் போதே வாசலில் அமர்ந்து மொய் எழுதிக் கொண்டிருந்தவர்களிடம் மாப்பிள்ளை வீட்டார் மொய்யா என கவன மாக கேட்டு விட்டு மொய் எழுதி விட்டு மண்டபத்திற்குள் போனான்,

முன்பொல்லாம் திருமணத்திற்குச்செல்கிற இடங்களில் மாப்பிள்ளை வீடு, பெண் வீடு என மொய் எழுதுபவர்களூக்கு அருகாமையாய் பேசிக் கொண் டிருப்பதை வைத்து இதுதான் பெண்வீட்டு மொய்,இதுதான் மாப்பிள்ளை வீட்டு மொய் என உத்தேசித்து எழுதி விட்டுவந்துவிடுவான்,

போன மாதம் நடந்த ஒரு திருமணத்திற்கு சென்று வந்ததிலிருந்து அப்படிச் செய்துவிட முடியவில்லை.

தோழர் வீட்டு திருமணம் அது ,அதிகாலை முகூர்த்தம்,

இவன்கொஞ்சம் தாமதமாகச்சென்று விட்டான்,இவன் மட்டும் இல்லை, திரும ணத்திற்கு வந்திருந்தவர்களில்முக்கால்வாசிப்பேர்அப்படித்தான் வந்தார்கள்.

போன இடத்தில் தெரிந்தவர்கள் நண்பர்கள் தோழர்கள் என யாரும் இல்லை. எல்லாம் இதற்கு முன்பாக பார்த்தறியாத புதுப்புது முகங்கள்.

சரி சாப்பிடக்கூட வேண்டாம் என முடிவெடுத்தவனாக மண்டபத்தினுள்ளே கேனில் வைத்திருந்த டீயை மட்டும் குடித்து விட்டு வந்து விட்டான்,மொய் எழுதி விட்டு,

எழுதி விட்டு வந்த அவசரத்தில் எழுதிய மொய் பெண்வீட்டாருக்கு என்பது இவன் எழுதி முடித்து விட்டு நிமிர்ந்த பொழுது உறுதியானது.

என்ன செய்ய எழுதிய பணம் எழுதியதுதான்,திரும்பி வாங்கிவிட முடியாது. சரிஇருக்கட்டும்நாளையிலிருந்துஒருமனம்ஆகப்போகிற இருமனங்கள்தானே ,,,? என நினைத்து மனம் தேற்றிவனாக வந்த நாளன்றிலிருந்து இன்றுவரை எந்த திருமண வீட்டிற்குப்போனாலும் பெண் வீடா,மாப்பிள்ளை வீடா என உறுதிப்படுத்திக் கொண்டுதான் மொய் எழுதத்துணிவான்.

மொய்எழுதிவிட்டுகல்யாணமண்டபத்திற்குள்ளாய் சென்ற பொழுது கல்யாண வீட்டுக்காரர் வெள்ளை வேஷ்டி சட்டையில் இருந்தார்,

இப்பொழுதுஇதுதான்டெரெண்ட்போலும்,வெள்ளை வேஷ்டி வெள்ளை சட்டை பெரிய மனிதர் போல கட்டாய தோற்றம் கொண்டு காட்டிவிடுகிற அதை அணிவதில் சிலருக்கு இருக்கிற அலாதி விருப்பம் போல் திருமண வீட்டுக் காரருக்கும் வந்திருக்கும் போல/

அவர் கூட வந்திருந்த இவனது பையனின் படிப்பைப்பற்றிக்கேட்டார், எந்தக் காலேஜ்,என்ன கோர்ஸ்.படிப்பு எப்படி மார்க் என்ன,,,?என்பதை மூச்சுவிடாமல் கேட்டார்,

விட்டால் இவன் மட்டும் சரியாக படிக்கவில்லை என்றால் ஒருகை பார்த்து விடுவேன் இங்கேயே இப்பொழுதே என்பது போல் பேசினார், பரவாயில்லை , நாம்தான்படிக்கவில்லை நமது பிள்ளைகளாவது படிக்கட்டும் நன்றாக என்கிற சமாதானச்சொல் சொல்லி/

கேட்டவர் அப்படியே வெறுமனே கேட்டுக்கொண்டு மட்டும் இறாமல் கூட்டிக் கொண்டு போய் விட்டார் சாப்பாட்டு ஹாலுக்குள்ளாக/

மிகவும் விஸ்தீரணம் காட்டி இருந்த சாப்பாட்டு ஹாலில் சாப்பிட ஆளில்லாம ல் வெறிச்சிட்டு காணப்பட்டது சமையலாட்களும் பரிமாறுபவர்களும் மட்டு மே அங்கே இருந்தார்கள்.

நடுஇரவில்இரண்டுஅல்லதுமூன்றுமணிக்கெல்லாம் விழித்திருக்க வேண்டும். கண்கள் சொக்கிப்போய் அலுத்து ப்பசித்து அமர்ந்திருந்தார்கள்.

வேண்டாமேசாப்பாடெல்லாம்எனச்சொன்னஇவனையும்இவனதுபையனையும் பிடித்து கட்டாயமாக அமர வைத்து விட்டு ஊடன் சாப்பிட ஆளிலில்லையே என்கிற குறை தெரியாமல் இருக்க இவன் சாப்பிடும் வரைக்குமாய் கூடவே அமர்ந்திருந்தார்,

சாப்பிட்டு முடித்துகை கழுவி வந்தவுடன் அவரே தாபூலப்பைகள் ஈரண்டை எடுத்து வந்து இவன் கையில் ஒன்றையும் மகன் கையில் ஒன்றையுமாய் கொடுத்து விட்டு நகன்றார்,

மண்டபத்தைவிட்டு வெளியில் வருகையில் கூட நூறுரூபாய் சேர்த்து மொய் செய்திருக்கலாம் எனத்தோணியது.

அலுவலகம் முடிந்து வண்டியை எடுத்தவுடன் அது போய் நிற்கிற இடம் பாய் டீக்கடையாகத்தான் இருக்கிறது,அல்லது கொஞ்சம் நகண்டு போனால் ரங்க நாதர் கோயில் வாசலுக்கு எதிரில் இருக்கிற டீக்கடையாய் இருக்கிறது,

இரண்டு டீக்கடைகளுக்கும் டீடேஸ்ட்டில் வித்தியாசம் தென்பட்டு தெரிகிறது தான்,

அதுசெய்முறைவித்தியாசமா இல்லை,இல்லை டீக்குடிப்பவரின் மனோநிலை யா தெரியவில்லை.

அன்றுமாலைடீக்குடித்துக்கொண்டிருக்கும்போதுதான்பைத்தியம்போல்தோற்றம்
கொண்டஒருவர்சாலையில்அங்குமிங்குமாய் ஓடிக்கொண்டிருந்தார்,

ஓடிக்கொண்டிருந்தவர் ஓட்டதை நிறுத்தி சட்டென ஏதோ ஞாபகம் வந்தவராக இவன் டீக்குடித்துக்கொண்டிருந்த கடை முன்பாக வந்து பரிதாபம் காட்டி நிற்கி றார்,

நின்றவர் ஒரு நிமிடத்திற்கு மேலாக இவனை பரிதாபமாக மேலும் கீழுமாய் பார்த்து விட்டு கையை ஏந்துகிறார் பரிதாபமாய் நின்றபடி/

அவர்நீட்டியகையில்வைக்கஅந்நேரமாய்ஒன்றும்இல்லை கையில்,கடைக்கா ரரிடம் திரும்பி நின்று கேட்டவனாய் ஒரு வடையை வாங்குகிறான்.

வாங்கிய வடை உளுந்த வடையாஅல்லதுவேறேதேனுமா எனபார்ப்பதற்குள் ளாக கையிலிருந்த வடையை பிடுங்கிக்கொள்கிறார் பைத்தியமாய் தென் பட் டவர்.

பரட்டைத்தலையும் இறக்கி விடப்பட்ட அழுக்கு வேஷ்டியும் சட்டையில்லா வெற்று உடலும் அவரை பைத்தியம் என்றே உறுதி செய்கிறது.

இவனிடமிருந்து வடையை வாங்கிஅதை மேலும் கீழுமாய் அது வைக்கப் பட்டிருந்த பேப்பருடன் பார்த்த அவர் இவன் கொடுத்த வடையை வேகம் கொண்ட மட்டுமாய்இவனது முகத்தில் வீசி எறிந்து விட்டு திரும்பவுமாய் ஓடி அலைகிறார் ஜன நடமாட்டம் மிகுந்த சாலையில்/

6 comments:

 1. Replies
  1. வணக்கம் திண்டுக்கல் தனபாலன் சார்,
   நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/

   Delete
 2. வடை மனிதர் வாழ்வின் தத்துவம்...
  தம 1+

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் மது சார்,
   நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/

   Delete
 3. வணக்கம்
  மனித தத்துவத்தை சொல்லியுள்ளீர்கள் படித்து மகிழ்ந்தேன் வாழ்த்துக்கள்
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
  Replies
  1. நன்றியும் அன்புமாய்!

   Delete