20 Oct 2017

டீ சொல்லட்டுமா,,,,

சார் டீ சொல்லட்டுமாஎனக் கேட்ட மணிபாரதியண்ணனிடம் வேண்டாம்ண் ணே எனச் சொல்லி விட்டாலும் கூட மனது டீக்குடிக்க ஏங்கியது என்பதுதான் நிஜமாகிப் போகிறதுஅந்தநேரத்தில்.

மணிபாரதியண்ணன் எப்பொழுதும் இப்படியெல்லாம் கலர் புல்லாக சட்டை போட மாட்டார்,கதை வேஷ்டி கதை சட்டைதான்,

உடுத்தியிருக்கிற கதரில் பிடிவாதம் காட்டி ஒட்டியிருக்கிற தும்பைப்பூவை கீழே விழாமல் பார்த்துக்கொள்வார் கவனமாக,,/

என்னய்யா இது ,தொழில்காரருங்குறதுக்காக இந்த முப்பது வயசுல போயி என்னமோஅறுபது வயசு பெரிசு மாதிரி உடுத்திக்கிட்டு வந்தா என்ன அர்த்தம், நல்ல வேளை கழுத்துல ஒரு ருத்ராட்ச மாலை போடாம போனயே,,,,என ஆளாளுக்கு கேலியும் கிண்டலும் பேசவும்தான் இப்பொழுதுக்கு இப்பொழுது பேண்ட சட்டை போட்டுக்கொண்டு வருகிறார்.

ஆனாலும் இடையிடையில் ஞாபகபடுத்துபவர் போல கதை வேஷ்டியையும் கதை சட்டையையும் தும்பைப்பூவையுமாய் கட்டிக்கொண்டு வந்து விடுவார்,

கருப்புக்கலரில் பேண்டும் ஏதோ ஒரு பெயர் தெரியாத கலரில் சட்டையுமாய் அணிந்திருந்தார்,அது அவருடைய நவாப்பழ நிறத்திற்கு நன்றாகத்தான் இருந் தது,

ஜீன்ஸ் பேண்ட் போலும்,அங்கங்கே கிழித்து ஒட்டுபோட்டது போல் இருந்தது, பேண்டிற்காக தையலா,இல்லை தையலுக்காக பேண்டா என சந்தேகம் வந்து விடுகிற அளவிற்காய் இருந்தது,

சட்டைசாதாரணமாகத்தான்இருந்தது,ஆரஞ்சுக்கலராகவும் இல்லாமல், பச்சை நிறமாயும் அற்று இரண்டின் கலவை போல் இருந்தது அவரது உடல் நிறத்தைப் போல,,,/

கேட்டால் நான் என்ன செய்யட்டும் என்பார்,அது அவரது தேசிய பாஷை,அது போல வேறு யாராவது ஒருவர் பேச நினைத்தாலோ,இல்லை பேசினாலோ பொறுக்காமல் கேஷ் போட்டுவிடுவார்,

தேவைப்படுகிற நேரங்களில் நான் என்ன செய்யட்டும் என்கிற வார்த்தையின் கைபிடித்து நடை பயில ஆரம்பித்து விடுவார்.

ஆளறவமற்ற பொழுதுகளில் பக்கத்தில் வந்து யாருக்கும் கேட்காதமாதிரியும் யாரும் பார்க்காத மாதிரியுமாய் கேட்பார்,ஏன் சார் ஒடம்புல இருக்குற ஒட்டு மொத்த ரத்தத்தையும் அப்பிடியே மாத்திறலாமா சார்.எனக்கேட்பார்,எதற்கு என்றால் அப்பிடியாவது இந்த நவாப்பழநெறம் மாறுதான்னு பாப்போம் சார் என்பார்,

ஏண்ணே என்றால் தாங்கமுடியல சார்,அது ஏங் ஒடம்புல இருக்குற இந்த நெறம் செஞ்ச பாவமா,இல்ல நான் செஞ்ச பாவமான்னு தெரியல சார்,போற போக்கப் பாத்தா சைஸா ஆயிருவேன் போல இருக்கு,என்பார்,,/

அப்பிடியெல்லாம் ஒண்ணும் ஆகாது விடுங்க,மனசக்கட்டுங்க,அப்புறம்தான் எல்லாம் மனச அவுத்து வெட்டவெளியில மேய விட்டா அப்பிடித்தான் ஆகிப் போகும், என்பதிற்கு ஒரு பதில் வைத்திருப்பார் மனுசன்,

எங்க சார் வேணாமுன்னு சொல்லுது,ஆனா மனசு கேக்கமாட்டேங்குதே, எங் கிட்டாவது போயிகூறுகெட்டத்தனமா மேஞ்சிட்டுசெருப்படி வாங்கிட்டு வந்து நிக்குது, என்பார்,மென் சிரிப்பை உதிரத்தவறாய்,

அவரிடம் இது சம்பந்தமாய் பேசினால் தண்ணி குடிக்காமல் பேசிக் கொண்டி ருப்பார்,

வேண்டாம் அந்தபேச்சை இடை மறித்து வெட்டிப்பேசியவாக வேண்டாம்ண் ணே டீ/

இனி ஆபீஸ் முடிஞ்சி போகும் போது நேரா டீக்கடையில போயிதான் வண்டி நிக்கும்,’

அங்கடீக்குச்சி முடிச்சி போகும் போது யாராவது பிரண்ட்ஸ் இல்லதோழர்ங்க யாரையாவது பாத்த அப்ப ஒரு டீக்குடிக்க வேண்டியதிருக்கும்,

அப்புறமா வீட்ல போயி ஒரு டீ ,அது கடையில் குடிக்கிற டீக்கு ரெண்டு டீ சமானம்,வீட்ல குடிக்கும் போது டீ நல்லா இருந்தா இன்னும் அரை டம்ளர் வேணுமின்னு வாங்கிகுடிச்சிருவேன்,இப்பிடியே டீயோட எண்ணிக்கை கூடிப் போகுது அது வயித்துக்கு ஒத்துக்கிறமாட்டேங்குது.அதுனால வேணம்ண்ணே டீ,,,/எனச்சொல்லிவிட்டு வேலையைப்பார்க்க ஆரம்பித்து விட்டான் இவன்.

திவ்யாகடையில் இருந்துதான் டீ வர வேண்டும்.

மனைவிபெயரில்கடைவைத்திருக்கிறார்.மனைவிபெயரில்அவ்வளவுபிரியமா எனக்கேட்கலாம்என ஆசை ,ஆனால் கேட்டால் என்ன நினைப்பாரோ அல்லது அப்படி கேட்கும் உரிமை இவனுக்கு உண்டா எனத் தெரியவில்லை. கடைக் குப்போகும்போதெல்லாம் சற்றே யோசித்தவனாய் அப்படியாய்கேட்பதில்லை,

இவன் தனியாக போய் டீக்குடிக்கும் நாட்கள் தவிர்த்து தோழரும் நண்பருமா னவருடன் சேர்ந்து எப்பொழுதாவது டீக்குடிக்க வருவதுண்டு. அவர் கடைக் காரருடன் நன்றாகப் பேசுவார்,நன்றாக என்றால்,,,கோடு கட்டி வைத்திருக்கிற கயிற்றைத்தாண்டி உள்ளே பிரவேசிக்க மாட்டார்.

அவரிடம் சொல்லி கேட்கச்சொல்லலாம் என்கிற யோசனையில் ஒரு நாள் அவரிடம்”தோழர் நாம வழக்கமாக டீக்குடிக்கப்போற கடைக்காரருதான் கடை க்கு பொண்ணு பேர வச்சிருக்குறாரே அது ஏன்னு கேட்டுச் சொல்லலாமா” எனகேட்டபொழுது அதற்கென்ன தோழா கேட்டு விட்டால் முடிந்து போகிறது விஷயம்,எனச்சொன்னவர்”தோழர்வாங்கஇப்பயேபோவோம் அவரு கடைக்கு டீக்குடிக்க”,,,எனகூட்டிக்கொண்டு போனவர் டீக்கு சொல்லி விட்டு கேட்டு விட்டார் அவரிடம்/

இவனும்தோழருமாய்சென்ற நேரம் கடையின் ஓனர் வடை போட்டுக் கொண் டிருந்தார்,வடை மாஸ்டர் லீவாம், அதனால் தானே வடை சுடுவதாகச் சொ ன்னார்,

டீப்பட்டறையில் வேறு ஒரு ஆள் நின்றிருந்தார், இது போலான சமயங்களில் வானத்திலிருந்து குதிப்பவர்களாய் மாஸ்டர்களை வர வைக்கிற வித்தை தெரிந்திருக்கிறது டீகடையின் ஓனருக்கு,,/

நாள் சம்பளம், மற்ற மற்ற எல்லாம் செல்போன் பேச்சுமூலம்தான்,ஓனர் சொன்ன நேரத்திற்கு கடைக்கு வந்து விடுவார்கள், சாயங்காலம் முடிந்து வீடு போகும் போது சம்பளம் வாங்கிக் கொண்டு போய் விடுவார்,

எத்தனை நாளைக்கு தேவையோ அத்தனை நாளைக்கு கூப்பிட்டுக் கொள் வார்கள்,அது தவிர்த்து மணிக்கணக்கிற்கு என்றாலும் ரெடியே,,,எனச் சொன் னவரிடம் டீயைக்குடித்துக்கொண்டே தோழர் கடைப்பெயருக்கான கார ணத் தைக் கேட்டார்,

டீ கொஞ்சம் சுமாராகவே இருந்தது.கடையின் ஓனர் டீக் குடித்துவிட்டு முகம் சுளிக்கிற லட்சணத்தை வைத்தே அறிந்து கொண்டார்,

“இன்னைக்கி கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்கங்க,நாளைக்கு வந்துருவேன் என்றவர் டீப்போட என்றவர் கடைக்கு மனைவியின் பெயரைத்தான் வைத்தி ருக்கிறேன்,என்றார் தோழரிடம்.எல்லாரும் கேட்க மாட்டாங்க இந்தக் கேள் விய யாராவது ஒங்கள மாதிரி உரிமையோட இருக்குறவுங்க கேக்குறதுதான். அது தவிர்த்து மத்தவங்க யாரும் கேக்க மாட்டாங்க.நானும் பெரிசா யார் கிட்டயும் சொல்லிக்கிறமாட்டேன்,ஏன்னாஇதுபெரிய தியாகமெல்லாம் இல்ல தோணிச்சி வைச்சேன், வீட்டம்மா கூட வஞ்சாப்புல,ஏங் இப்பிடி செய்யிறீங்க ன்னு,,,இருக்கட்டும்விடுஎன்ன பேருதான் வைக்கப்போறேன், அதுக்குப் போயி என்னத்த பெருசா பீல் பண்ணீக்கிட்டுன்னு சொல்லீட்டு வந்து அவ பேரையே வச்சிட் டேன்.”

”நீங்கண்ணேகொஞ்சம்நெனைச்சிபாருங்க,இதுலநமக்குஎன்னவந்துறப்போகுது. பேருதானன்னு நெனச்சாலும்கூடகொஞ்சம் உள்வாங்கிப் போயிபாத்தமுன் னா ஏங் உயிர்ல பாதி அவ,அவ இல்லாட்டி நா பாதி மனுசந்தான்,இல்லன்னா பாதி உசுருதான்.அவ இல்லாம நான் ஒண்ணும் இந்த அளவுக்கு வந்துறல, அவ இல்லாட்டி இந்த அளவுக்கு வந்துருக்கவும் மாட்டேன்,சுருக்கமா சொன் னா அவ இல்லாட்டி நா இல்ல,நா இல்லாட்டி அவ இல்ல,,புள்ளைங்க ரெண் டும் தலைக்கு மேல வளந்து நின்னுட்ட பெறகும் கூட அவ மேல நானும் ஏங் மேல அவளுமா இருக்குற ஒட்டுதல் அப்பிடியே தலை போறவரைக்கும் இருக்கணு ம்ன்னு கடவுள வேண்டிக்கிறேன், ஆசைப்படவும் செய்யிறேன், பாப்போம் காலம்எப்பிடியெல்லாம்அனுமதிக்குமோஅனுமதிக்கட்டும்.என்பார்,

பருப்பு வடையை சுட்டு முடித்தவர் அடுத்ததாக வெங்காய வடையை போட ரெடியாக இருந்தார்,வெட்டிய வெங்காயமும் சட்டியில் பிசையப்பட்ட மாவும் ரெடியாகவும் பதமாகவும் காத்திருந்தது,

இது மட்டுமில்லை,இன்னும் காய்கறி வடை,மசால் வடை,உளுந்தவடை என,, இன்னும்இன்னும்,இன்னுமாய் நிறைய சுடுவார்,மாலை நேரங்களில் டீக் குடிக் கப் போகும்பொழுது வீட்டிற்கு என எப்பொழுதாவது வடைகள் வாங்குவ துண்டு.

இவன்கேட்கமறந்தாலும்அவர் சட்னி வைத்துக்கொடுப்பார். சட்னியின் சுவைக் காக அவரிடம் வடை வாங்கலாம்,என யோசிக்கிற அதே நேரம் வடையின் சுவையையும் குறைத்து வைத்திருக்க மாட்டார்,

இரண்டும்ஒன்றுடன் ஒன்று போட்டி போட்டு சுவையைத் தரும்.அது போலான சுவையைசாப்பாட்டிற்கென எப்பொழுதாவதுவடைவாங்குற நாட்களில்உணர முடிவதில்லை.

அதற்காக குறையாகவும் இருக்காது. இதில் ஒன்றுடன் ஒன்றாய் போட்டியிட் டு ஜெயிப்பது வடையா டீயா தெரியவில்லை.எப்பொழுதாவது சம்பளத்திற்கு வருகிற டீ மாஸ்டர் சொல்கிறார்,

”எல்லாம் சரிதான் சார்,என்னைய விட அவர் டீப்போட்டா நல்லாயிருக்குங்கு றது வாஸ்தவம்தான்,ஆனா நீங்க நெனைக்கிற மாதிரி எனக்கு பிரமாதமான சம்பளம் கெடையாது,உழைப்புக்கு ஏத்த ஊதியம் கெடையாது. காலையில ஆறுமணிக்கு டீப்பட்டறையில வந்து நிக்கணும் நானு/,

”ஆறுமணிக்குகடைக்குவர்றதா இருந்தா நான் எத்தன மணிக்கு வீட்ல இருந்து கெளம்பணும்னு பாருங்க.எனக்கு வீடு இங்கயிருந்து கணக்கு பண்ணுனா கரெ க்டா அஞ்சு ஆறு கிலோ மீட்டராவது வரும்,எனக்கு மத்த யாருமாதிரியும் தூங்கி எந்திரிச்ச மொகத்தோட அப்பிடியே கடைக்கு வரப்பிடிக்காது,தொழில் செய்யிற யெடமில்லையா,கொஞ்சம் பிசகி நடந்தாலும் தொழில் படுத்துரும் ன்னு பயமும் பக்தியும் எனக்கு.,

”அதுனாலதான் நான் காலையில எந்திரிச்ச ஒடனே குளிச்சிருவேன் மொத வேலையா,அப்புறம்தான்மத்த,மத்ததெல்லாம், குளிச்சி முடிச்சிட்டு உடுத்தீட் டு சைக்கிள எடுத்துட்டு கெளம்பவும் சரியாய் இருக்கும்,இப்பிடிய தினந் தோ றுமா போகணும்ன்னா நான் எத்தனை மணிக்கு எந்திரிக்கணும்ன்னு பாருங்க,

“அதிகாலையில நாலு மணிக்கு எந்திரிச்சிருவேன்,பெர்மனெண்டா ஒரு யெட த்துலவேலை கெடையாதுன்னாலும் கூட தினசரியுமா எங்கிட்டாவது வேலை இருந்துக்கிட்டே இருக்கும் ,யாராவது ஒரு டீக்கடையில இருந்து கூப்புட்டுக் கிட்டே இருப்பாங்க,

இந்தஓனராவதுமொத நாளே சொல்லீருவாரு,இன்னும் சில பேரு இருக்காங்க, நடு ராத்திரிக்கு போன் பண்ணுவாங்க,நான் அசந்து மசந்து ஏதாவது ஒடம்பு வலிக்கு ஆத்த மாட்டாம கொஞ்சம் தண்ணி சாப்புடுட்டு படுத்துருக்குற நேரமா பாத்துகூப்புடுவாங்க,,,,

”அந்நேரம்ன்னா சரியான கோபமா வரும்,வேண்டா வெறுப்பா எந்திரிச்சி என்னன்னு கேட்டா நாளைக்கு வேலைக்கு வந்துருன்னு வாங்க,தூக்க வெறிச் சலயும் தண்ணி மப்புலயும் ஏதாவது பேசிறலாம்ன்னு நெனப்பு வரும் எனக்கு, வேணாம் கழுதைன்னு விட்டுட்டு தூங்கிப்போவேன் அப்பிடியே,நம்ம மேல நம்பிக்கை வச்சி கூப்புடுறவுங்ககிட்ட ஏதாவது எசக்கேடா பேசிட்டம்ன்னா நாளப் பின்ன பொழப்பு நடக்காதுங்குற மனநிலை ஒரு பக்கம்,சரின்னு மனச பொத்திக்கிட்டுஇருந்துருவேன்,இப்பிடியாநித்தமுமாஒருஆளுகூப்புடும் போது நானும் என்ன செய்யட்டும்,அதிகாலையில சீக்கிரம் எந்திச்சி கெளம்பி ஓட வேண்டியதா இருக்கு,

“சமயத்துல பத்து கிலோ மீட்டர் வரைக்கும் கூட சைக்கிள் மிதிச்சி போக வேண்டி இருக்கும்,அதுனால என்னசெய்யிறதுன்னா நாலுமணுக்கெல்லாம் எந்திரிச்சி பழகீட்டேன்,அது இன்னை க்கி வரைக்குமா தொடருது,

“காலையில ஆறு மணிக்கு கடையில அடுப்பு பத்த வைக்கணும்ன்னா நான் அஞ்சி,அஞ்சரைமணிக்காவதுஅங்கஇருக்கணும்,நானுஅப்பிடியெல்லாம்நூலுப் பிடிச்சிப்போறதில்ல,

சிலநாளுஅஞ்சிமணிக்கெல்லாம் போயிருவேன்,சில நாளு அஞ்சரை மணிக்கு, ஒரு சில நாளு ரெண்டு கெட்டாப்புல அஞ்சேகாலு அஞ்சே முக்காலுக்கு போயி நிப்பேன்.

எத்தனை மணிக்குப்போனாலும் அடுப்பு பத்த வைக்கிறதுக்கு முன்னாடி அந்த யெடத்த கிளீன் பண்ண கால் மணிநேரம் எடுத்துக்குருவேன்,அப்பிடி எடுத்துக் கிட்டாத்தான் எனக்கு நிம்மதி.அன்னைக்கி வேலை செஞ்சாப்புல இருக்கும், இதவுட்டுட்டுஅவக்குதொவக்குன்னுவேலைய பாத்தம்ன்னு வையிங்க, சரியா பாத்தவேலைகூடகோணலாஆனதுமாதிரி இருக்கும்.அன்னைக்கு பூரா எனக்கு வேலை பாத்த திருப்தியே வராதுன்னா பாத்துக்கங்க,மனசு வாதி ச்சிக்கிட்டே கெடக்கும்,

இதுல நான் ஆறுமணிக்கு ஐஞ்சு நிமிஷம் லேட்டா வந்தக்கூட ஏங் ஓனர் என்னையஏன்னுகேக்கமாட்டரு, சிரிச்ச மொகத்தோட ”போ போயி வேலையப் பாருன்னுசொல்லி அனுப்புவாரு,என்ன அவரு அனுப்பீருவாரு, கழுத நமக்குத் தான்மனசு கேக்காது,சே லேட்டா வந்துட்டமேன்னு மனசு கெடந்து வாதிக்கும். என்ன செய்ய சொல்றீங்க அப்பிடியே இருந்து பழகிப் போச்சி.கேக்கமாட்டாத மனசோட உண்மைக்கு கட்டுப்பட்டு வேலையச் செய்யப்போயிருவேன் நானு/

அதுபோலதான் வடை மாஸ்டரும்.மொத டீ போடும் போது ரவாப்பணியாரம் இருக்கணும் ரெடியா,அதுக்காவே அவரு எனக்கு முன்னாடியே வந்து அடுப்பப் பத்த வச்சிட்டு நிப்பாரு, அடுப்பப் பத்த வைக்கிற மனுசன் அடுப்பு கனன்று சட்டியில ஊத்துன எண்ணெய் சுடுற வரைக்கும் சும்மா இருக்க மாட்டாரு, அடுத்துப்போடப்போற பருப்பு வடைக்கும் உளுந்த வடைக்கும் காய்கறி வடை க்கும் தோதா மெளகாயயையும்,வெங்காயத்தையும் வெட்டிவைக்ககாய்கறிய அருவன்னு உக்காந்துருவாரு,

”அவரையும் சும்மா சொல்லக்கூடாது சார்,அவரும்பாடாதான் படுறாரு, அவரு க்கும் சம்பளம் ஒண்ணும் சொல்லிக்கிற மாதிரி இல்ல, இதே ஒழைப்ப அவரு வேற யெடத்துல போயி குடுத்தாருன்னு வையிங்களேன்,இங்க வாங்குற சம்பளத்துல ஒண்றரை மடங்காவது வாங்குவாரு ,இருந்தாலும் ஏங் இன்னும் இங்கயே ஒட்டிக்கிட்டுஇருக்கம்ன்னா பழக்கத்துக்காகங்குற ஒரே சொல்லு தான்.

மத்தபடி ஓனர் மொகத்துக்காவும் பாக்க வேண்டியதா இருக்கு. பாக்கத்தான் எங்க ஓனருகொஞ்சம்கரடு மொரடான ஆளு போல இருப்பாரு,ஆனா மனசு தங்கம்,

போனமாசத்துல வடை மாஸ்டருக்கு கொஞ்சம் ஒடம்பு சரியில்லாம போச்சி, சாதாரணக் காய்ச்சல்தான்னு சொல்லி சும்மா மாத்தரை போட்டுக்கிட்டு இருந் தவர ஆஸ்பத்திரியில பெட்ல இருக்குற வரைக்குமா கொண்டு போயி விட்டு ருச்சி,

”அவரு ஆஸ்பத்திரியில இருந்தப்ப எங்க ஓனர் போயி பாத்து ஒரு ஐந்நூறு ரூபாய் குடுத்துட்டு வந்தாரு.அது போக பழங்கள், ஆர்லிக்ஸ் பாட்டில்ன்னு தனியா வேற,எனக்குக்கூட ஒரு ஆசை,பேசாம நம்ம கூட காய்ச்சல்ல படுத் துருக்கலாமோன்னு,இத ஒடம்பு சரியாயி வந்தப்பெறகுவடை மாஸ்டர் கிட்ட யும் ஓனர் கிட்டயும் சொன்னப்ப அட ஏம்பா எதுக்கோ ஆசைப்பட்டு எதுவோ ஒண்ணா ஆன கதையான்னு சிரிச்சிக்கிட்டாங்க,,,/,

அந்தசிரிப்பும்சிரிப்புக்குண்டானவார்த்தையும்ஓனரோடகனிவும்தான் இன்னும் எங்கள இங்க நிப்பாட்டி வச்சிருக்கு.

மன சாட்சிப்படி பாத்தாக்கா வெளியில பெர்மணெண்டா ஒரு கடையில இருந் தேன்னு வையிங்க இத விட ரெண்டு மடங்கு சம்பளம் கெடைக்கும்எனக்கு, என்னையப் போலவேதான் வடை மாஸ்டருக்கும்.

இருந்தாலும் நாங்க ரெண்டு பேரும் மனசாட்சிக்கு விரோதமில்லாம நடந்துக் கிட்டுஇருக்கோம் வடை அவரு கைப்பக்குவத்துல நல்லா இருக்குன்னா,.டீக்கு நாந்தான இந்த ஏரியாவுல,,,,எனபேசி நிறுத்துவார்.

அவர் பேசி நிறுத்தவும் கடையின்ஓனர்வந்து தலையில் அடித்துக்கொண்டே ”அடபோப்பா அடுங்கிட்டு” சார் கிட்ட அளந்து விட்டது போதும்,என்ன சார் ,இந்த ஏரியாவுலயே நாந்தான் பெரிய டீ மாஸ்டருன்னு சொல்லீருப்பானே,,,,? என இவனைப்பார்த்து அவன் அப்பிடித்தான் சார் விடுங்க,,,,,,பேச்சுமட்டும் இல்லைன்னா செத்துப்போவான் செத்து அந்தளவுக்கு பேச்சோட சேக்காளி, அவன்,,,,/

பேச்சு பேச்சு பேச்சு எங்கன போனாலும் பேச்சுதான் .யாருகூடன்னாலும் பேச்சுத்தான்.போங்க,,எனச்சொல்கிற கடையின் ஓனரைப்பார்த்து ஆமா அவுங் களுக்குகொஞ்சம்சம்பளம்கூட்டிக்குடுக்கலாம்லஎனக்கேட்கிற பொழுது சொல் வார்,

குடுக்கலாம் சார் எனக்கும் மனசு இருக்குது தான் சார்,நானும் ஒரு கடையில டீ மாஸ்டரா இருந்து வந்தவந்தான் சார், எனக்கும், அவுங்களோட கஷ்ட நஷ்டமெல்லாம் தெரியும் சார்,இருந்தாலும் நான் ஏங் பக்கமும்பாக்க வேண்டி யிருக்கு/கடைக்கு வாடகை,கரண்டு பில்லு உங்க ரெண்டு பேரு சம்பளம்,இது போக பசங்க ரெண்டு பேரு இருக்காங்க வேலைக்கு,அவுங்களுக்கு சம்பளம் ன்னு,,,,,,,,எல்லாம்கூட்டிக்கழிச்சிப்பாக்கும் போது நான் சம்பளமில்லாம ஓசியா வேலை செய்யிறது போலத்தான் நிக்கிறேன், இந்த லட்சணத்துல நான் எங்கிட்டுப் போயி சம்பளத்த கூட்டிக்குடுக்க சொல்லுங்க,,,,,,,,என்பார் சங்கட மாய்,,,,,இருந்தாலும் அவுங்களுக்கு இந்த தீபாவளியிலைருந்து சம்பளம் கூட்டித்தான் குடுக்கப்போறேன்,

சார் டீசொல்லட்டுமாஎனக் கேட்ட மணிபாரதியண்ணனிடம் வேண்டாம்ண் ணே எனச் சொல்லி விட்டாலும் கூட மனது டீக்குடிக்க ஏங்கியது என்பதுதான் நிஜமாகிப் போகிறதுஅந்தநேரத்தில் /

9 comments:

கரந்தை ஜெயக்குமார் said...

டீ என்றாலே தங்கள் பதிவின் சுவை கூடத்தான் செய்கிறது
தம +1

vimalanperali said...

டீயில் கலந்திருக்கிற வாழ்க்கை பிணைவு முக்கியம்தானே ... நன்றியும் அன்பும்...!

Thulasidharan V Thillaiakathu said...

டீ மிகச் சுவையாக இருக்கிறது சகோ!! டீ வைத்துக் கூட இப்படி எழுத முடியும் என்று ...அருமை...டீ ப்ரியரோ நீங்கள்!! பல விவரணங்களிலும் டீ வருகிறதே அதனால் கேட்டேன்...

கீதா

வலிப்போக்கன் said...

உண்மையைச் சொன்னா நீங்க நம்ப மாட்டீங்க...சிறு வயதிலிருந்து இன்றுவரை டீயோ...காயியோ குடித்ததில்லை....ஆனால் பலருக்கு டீ வாங்கி கொடுத்திருக்கேன்...

vimalanperali said...

வணக்க்கம் வலிப்போக்கன் சார்,
இது டீக்கடைகளைப்பற்றிய
பதிவு மட்டும் இல்லை,
டீக்கடைகளில் உருக்கொண்டிருக்கிற
மாந்தர்களையும் அங்கிருக்கிற
அவர்களது பாடுகளையும் பற்றிய கதை,,,/

vimalanperali said...

வணக்கம் சார்,ஆமாம் நான் கொஞ்சமான டீப்பிரியன்,
செயின் ஸ்மோக்கிங்க் போல செயினாக இரண்டு டீக்களைக்கூட சேர்ந்தாற்போல சாப்பிட்டு விடுவேன்,
மற்றபடி என்னைவிட டீப்பிரியர்கள் நிறைய உள்ளார்கள்,டீக்குடிக்கும் முன்பாக ஒரு டீயும்
டீக்குடிக்கும் போது ஒரு டீயும்
டீக்குடித்தபின்பாய் ஒரு டீயுமாக
குடிக்கிறவர்கள்நிறைய இருக்கிறார்கள்தான்,
கருத்துரைக்கு நன்றி,,,/

'பரிவை' சே.குமார் said...

மிகவும் அருமை அண்ணா...

Nagendra Bharathi said...

அருமை

vimalanperali said...

வணக்கம் நாகேந்திர பாரதி சார்,
நன்றி வருகைக்கும் கருத்துரைக்குமாக,,/