31 Jul 2018

வெங்காயத்தோலு,,,

”இதுவரைக்கும் இப்பிடி சொன்னதில்ல,,,”,என அவர் தொடுத்து ஆரம்பித்த சொல்லை ”இப்ப சொல்ல வேண்டிய அவசியம் ஆகிப்போச்சி,,அப்பிடித்தானே” என முடித்து வைத்தான் இவன்,

”தேவையும் அவசியமும்தானே எதையும் நிர்ணயிக்கிறது போலும்” என்ற கடைக்காரர் ”இப்பொழுது தேவை எது அவசியம் எது என பிரித்து அறிய முடியவும் தெரியவும் இல்லைதான்” என்றார்.

”வாழ்க்கைக்கு தேவைகள் என்றிருந்தது போய் தேவைகளை வாகைக்குள் அடைத்தும்,அவைகளின் எண்ணிக்கையை அதிகரித்தும் பாலீஸ்ட் வாழ்க்கை வாழப்பழகிக் கொண்டோம் சார்” எனவுமாய் சொன்னார்,

வாஸ்தவம் பட்டு பிரதிபலிக்காமல் இல்லை அவரது பேச்சிலும் வருத்தம் சுமந்த சொல்லிலும்/

”ஒரு காலத்துல சார்,,,,ஒரு காலத்துல என்ன ஒரு காலத்துல நம்ம அம்மா அப்பாகாலங்கள்லன்னு கூடவச்சிக்கிறலாமே,,,,கடைக்குப்போனா ரெண்டு தேங்காய்ச்சில்லு வாங்குற யெடத்துல ஒன்னறை தேங்காய்ச்சில்லு வாங் கீட்டு வந்தோம்,கடைக்காரரும் குடுத்தாரு, ப்ரஸ்பரம் அப்பிடி குடுக்கிற மனசு அவருக்கும் வாங்கீட்டு வீடு போற மனசு நமக்கும் இருந்துச்சி சார்,

”வீட்ல நாலு புள்ளைங்க இருந்தா மொத்தமா கை நெறையா தெரியுற மாதிரி தின் பண்டங்கள வாங்கி கொண்டு வந்து குடுத்தாங்க,அப்ப இருந்த புள்ளைங் களும் சத்தமில்லாம வாங்கி சாப்புட்டுட்டு அது பாட்டுக்கு மத்த புள்ளைக ளோட புள்ளைகளா வெளையாடப் போயிரும்.குடுத்த தின் பண்டம் கூடக் கொறையா இருந்தாலும் பரவாயில்லைன்னு ஏத்துக்கிட்டு/,

”அப்பயெல்லாம் கடைக்கு ரெண்டு ரூபா கொண்டு போனா ஒண்ணரை ரூவா செலவழிச்சிட்டு மீதம் ஐம்பது பைசா கொண்டு வர்றளவுக்கு இருந்துச்சி,ஆனா இன்னைக்கி பத்து ரூவா கொண்டு போயிபதினைஞ்சி ரூவாய்க்கு சாமான் வாங்கீட்டுமீதம் அஞ்சி ரூவாய்க்கு கடன் சொல்லீட்டு வர்ற நெலைமை ஆகிப் போச்சி,,,/ கடைக்கிப் போறவுங்களும் என்னதான் செய்வாங்க சொல்லு ங்க பாப்போம்,

”முன்னயெல்லாம் ஒரு பொருள் வாங்கப்போனா அதமட்டும்தான் வாங்கீட்டு வர்ற மாதிரி இருக்கும்.ஆனா இன்னைக்கி அப்பிடியில்லை. ஒண்ணுக்கு பத்தா பொருள்க கெடைக்குது,அதே மாதிரி,அதே வெலையில,அதே ஸ்டை யில்ல,,,,, பிராண்ட்பேர மட்டும் மாத்தி வச்சிக்கிட்டுநொறுக்குத்தீனிகளா கடை நெறைய அடுக்கி வச்சிருக்காங்க,நம்ம மட்டும் இல்லை,கடைக்கி வர்ற சின்னப் புள்ளைகளுக்கும் இது ஒரு புதுக்கொழப்பமா ஆகிபோகும்,எத எடுக்கு றது எத விடுறதுன்னு தெரியாம கண்ணுக்கு பளபளப்பா எதெல்லாம் தெரியு தோஅதுலரெண்டுவாங்கிக்கிறுவோம்ன்னுவாங்கிறுதுக,வாங்கிறதுக்குகையில காசு இல்லைன்னாலும் கூட ஓடிப்போயி வீட்டுல இருந்து காசு வாங்கீட்டு வந்து வாங்கீட்டு போயிருறாங்க,

“சின்னபுள்ளைங்கதான் இப்பிடின்னா பெரிய ஆட்களும் வயசுப்புள்ளைகளும் இன்னும் மோசம்.பொறந்த நாளு கொண்டாடுறோம்ன்னு ஆயிரத்து ஐந்நூறு ரூபாய்க்கு கேக்கு வாங்கீட்டு வந்து அதுல ஐநூறு ரூபா பெருமான கேக்கை பசங்க ஒண்ணுக்கொண்ணு மொகத்துல தடவிக்கிட்டு திரியிறாங்க,மீதம் இரு க்குற ஆயிரம் ரூவா கேக்கையாவது ஒழுங்கா திங்கிறாங்களான்னு பாத்தா அதுலகால்வாசிகுப்பைக்குப்போயிறுது,மீதத்ததின்னுதிங்காமசிந்திசெதறி,,,,,,,,

”சோறு போட்டு வச்சிருக்குற தட்டுல இருந்து ஒருபருக்கை சிந்துனாக்கூட எடுத்து தட்டுல போட்டு சாப்புட்ட காலம்ன்னு இருந்தது போயி இப்ப சிந்திக் கிட்டும் செதறிக்கிட்டும் அலையிறோம்.

”வாழறதுக்கு தேவைகள்ன்னு இருந்தது போயி தேவைகளின் பின்னால ஓடுற வாழ்க்கைக்கு பழகீட்டமோன்னு தோணுது சார்” என்றார்.

”இதுலஎங்கிட்டுப்போயிதேவைகளும்,அவசியமும்வாழ்க்கைய தீர்மானிக்கிது சொல்லுங்க,

கை கொள்ளத்தெரியாத வாழ்க்கைய நாம வாழ்ந்துகிட்டு வாழ்க்கை கைக் குள்ள வசப்படலைன்னு சொன்னா எப்பிடி சார் என்றார்,மெகா சைஸ் கேள்வி யை அடுக்கியவராயும்நமக்கு முன்னால வாழ்ந்து முடிச்ச தலைமுறையோட பின் வழிதோன்றல்கள்தான நாமள்லாம்,நம்மாள ஏன் அப்பிடி இருக்க முடிய ல சொல்லுங்க,,,,,எனவும் சொன்னார்.

பழம் தின்று கொட்டை போட்டவர் என சொல்வார்கள் அவரை,அப்படி என்ன பழத்தை எப்பொழுது எங்கு வைத்து சாப்பிட்டார் எனத்தெரியவில்லை,

ஊரெல்லாம் பழம் சாப்பிடுபவர்கள் பின்கொட்டையை கீழே போடாமல் விழு ங்கி விடவா செய்வார்கள்,,,?சாப்பிட்டதுதான் சாப்பிட்டார்,தனியாக சாப்பிட்டா ரா அல்லது யாருடனும் கூட்டுச்சேர்ந்து சாப்பிட்டாரா என்பது இன்றைய வரைக்கும் தெரியவில்லை,

அப்படி சாப்பிட்டவர் பழத்தை விழுங்கி விட்டு கொட்டையை எங்கு போட் டார் என்பதும் கேள்விக்குறியாகவே இருக்கிறது.

அப்படிப்போட்டிருந்தால் கழுதக்காது என தரையூன்றிய கொட்டை இந்நேரம் கூத்தாடி அறிவித்திருக்குமே,,?அதுதவிர்த்து போட்ட கொட்டையை உருப் படியான இடத்தில் போட்டிருந்தால் இந்நேரம் அது மரம் கொண்டு வளர்ந்தி ருக்குமே,,,,,,,,?

மண்பிளந்து துளிர்த்து வளர்ந்து கிளை பரப்பி இலையும் தளையும் பூவும் பிஞ்சுமாகவும் காயும் கனியுமாகவும் காட்சிப்படுகிற மரம் தருகிற பலனை எதிர்நோக்கிகாத்திருக்கிறஉள்ளங்கள் உங்களிலும்என்னிலும் காட்சி கொண்டு தாவிப் படர்வதாக,,/

படர்ந்த படர்வின் ஈரத்தை காத்துக்கொண்டிருக்கிற மனங்களை பார்த்துக் கொண்டிருந்தவாறே இருந்து விட்டு போய் விடுவான் நண்பன் அடுத்த பழம் நோக்கி,,,/

”அம்மா அடுப்புக்காசு வந்திருக்கான்னு கொஞ்சம் பாத்துச்சொல்லுங்க தாயே,” ,,,என அரசு அலுவலகங்களின் கனம் கொண்ட நிமிடங்களில் எரிவாய் மானி யத்தை பதிய கையில் பாஸ் புத்தகத்தகத்துடன் காத்துக் கொண்டிருக்கிற மூதாட்டியும் தின்ற பழத்தின் கொட்டையை இறுகச்சப்பி விட்டு தூறப்போட்ட மனிதரும் இங்கே ஒரே ஊரிலும் ஒரே தெருவிலும் நம்மின் தோள் உரசும் தூரத்திலும்,காட்சிப்படுகிறஇடைவெளிகளிலுமாய்நிரம்பித்தெரிகிறார்கள்தான்,  என்பான் அதே நண்பன்,

”சொன்னத்தை மாற்றவும் சொல்லாததை சொல்லவுமான ஒரு தேட்டம் சுமந்த சூட்சுமத்தை கொண்டிருந்த நண்பர் அப்படித்தான் நான் சொல்வது என்ன செய்யப்போற இப்ப” என்பார்.

என்ன செய்து விட முடியும் அது போலான ஆட்களை,இல்லை எதுவும் செய்தாலுமோ இல்லை உரித்து உப்பைத் தடவினாலுமோ பெரிய அளவிலாய் ஒன்றும் பிரயோஜனம் இருந்து விடப்போவதில்லை.பின் எதற்கு காலத்தை யும் நேரத்தையும் வேஸ்ட் பண்ணிக்கிட்டு/,,,எனப்போய் விட வேண்டியது தான்,

வேரூன்றிய மரங்களை அடியோடு வெட்டிச்சாய்ப்பதற்கும் அன்று பிறந்த ஒரு குழந்தை கொல்வதற்கும் பெரிய அளவில் ஒன்றும் வித்தியாசமில்லை தான் எனச்சொல்லும் அவர் நட்பும் தோழமையும் கலந்து பேசுவார் சமயா சமயங்க ளில்/

”இரண்டும் ஒன்றுதானே,பின் என்ன நட்பையும் தோழமையையும் வார்த்தை காட்டி தனித்தனியாக பிரிக்கிறீர்கள்,,”?எனக்கேட்ட போது இல்லை அப்படி யெல்லாம் உங்களை பிரிக்கவோ இல்லை தனி லைன் காட்டி உட்காரவைக் கவோ நினைக்கிற ஆள் இல்லை நான்,”அதையும் மீறி பிரிவு வரும்போது போய்க்கொள்ள வேண்டியதுதான்,



சொன்னவர்வெங்காயக்கடைக்காரராயும்முடித்ததுஇவனாயும்ஆகித்தெரிகிறார்கள் அந்த இடத்தில்/

பொதுவாகவே வயது பார்த்தும் ஆள் தராதரம் பார்த்துமாய் பழகியதில்லை இவன்.அது இவனுக்கு சுட்டுப்போட்டாலும் வந்ததில்லை,இனியும் வருமா என்பது சந்தேகமே,

முளைகொண்டு விட்ட அந்த சந்தேகம் இவனில் நிலை கொள்ளுமா அல்லது போய் விடுமா என்பதின் முன் தோற்றமாய் சிறு சிறு வாக்கியமும் சொற் கட்டுகளுமாய் சுமந்து திரிந்த நாட்கள் இவனில் முன்னை விட இப்பொழுது சற்று அதிகமாய்,

குடிக்கப்போன தேநீரை கை தவறி கீழே போட்டுவிட்டுபூமிக்கு குடிக்கக் கொடு த்தது போல் கால் தவறிப்போய் நின்ற இடம் ஒரு தேநீர் கடையாக இருந்தது,

கால்தவறிஎனஅதைசொல்வதைவிடபோய்க்கொண்டிருந்தஇருசக்கரவாகனம் தவறி எனச்சொல்லலாம்.

”இவன் மட்டும்தான் அப்படி,,,” என ரொம்ப நாட்களாய் நினைத்துக் கொண்டிரு ந்தான்,

செல்கிற வேலையும் செல்கிற பாதையும் எவ்வளவு அவசரமான போதும் என்ன முக்கியம் சுமந்தும் தெரிந்த போதும் கூட சென்று கொண்டிருக்கிற இரு சக்கர வாகனத்தை டீக்கடை தென்பட்டதும் வேகம் குறைத்து ஓரம் கட்டி விட்டு சத்தமில்லாமல் போய் டீக்குடித்து விட்டு வந்து விடுவான்.

அப்படியானால் டீக்குடிப்பவர்கள் எல்லாம் சத்தம்போட்டுக்கொண்டேவா போய் டீ சாப்பிடுகிறார்கள்,,,,?என சப்தம் போட்டு கேட்கிறார் தெரிந்தவர் ஒருவர்.

”சார் கொஞ்சம் டீப்பிரியரோ,,” எனக்கேட்கிற பலரில் இப்பொழுது வெங்காயக் கடைக்காரரும் ஒருவாராகிப்போனார்,

”நான் கூட அப்பிடித்தான் சார் இருந்தேன் ஒரு காலத்துல,டீ ,டீ, டீன்னு பைத்தி யமா அலைஞ்சேன்,

”இப்ப என்ன நீங்க நல்லாக் குடிச்சா ஒரு பத்து டீ வரைக்கும் குடிப்பீங்களா,,,? நான் ஒரு பதினைஞ்சி டீவரைக்கும் கொண்டு போயிருவேன் ஒரு நாளைக்கு, இதுல டீ போக சிகரெட்டு வேற,டீக்குடிச்ச ஒடனே கண்டிப்பா சிகரெட்டு வேணும்எனக்கு,ஆபீஸீல கூடகேலியா சொல்லுவாங்க,யாரு அந்த டீ சாரா,,,? ன்னு/

“ஏங் அடையாளமே அதுதாவே ஆகிப்போயி இடுந்துச்சி, ஒரு நேரத்துல, ரொம்பக் காலம் அப்பிடி திரிஞ்ச நான் ஒரு கட்டத்துல டீயையும் சிகரெட் டையும் கட்டுப்பட்டுத்தணுமுன்னு நெனைக்கிற போது அது முடியலைன்னு ஆகிப் போச்சி,ஆபீஸ்ல ரொம்ப நெருக்கமானவுங்க,அவுங்களும் ஏங்கூட சேந்து டீயும் சிகரெட்டும் குடிக்கிறவுங்கதான்னாலும் கூட அவுங்க போட்டுக் கிட்ட எல்லைக்கோடு மாதிரி என்னால வரைஞ்சிக்கிற முடியல,

“என்ன செய்ய பின்ன,வீட்டம்மா அக்கம் பக்கம் கூட வேலை பாக்குறவுங்க, நண்பர்கள் தோழர்கன்னு எல்லாரும் சொல்லச்சொல்ல கேக்காம அவுங்க பேச்சையெல்லாம்கவனத்துல எடுத்துக்கிட்டாலும் கூட அதை நிலையூனச் செய்ய முடியாம நான் வாட்டுக்கு அப்பிடியே இருந்தேன், செலவுக்கு செலவு வேற கெட்டுப்போற உடல் நிலை வேறைன்னு ரொம்பத் தான சீர் கெட்டுப் போச்சி ஒடம்பு என்ன செய்யிறதுன்னு தெரியல,

”ரொம்ப நெருக்கமான நண்பன் கிட்ட சொன்னப்ப அவன் சொன்னான், மொத ல்ல ராத்திரி தூக்கத்துலயிருந்து முழிக்கிற போது சிகரெட் குடிக்கிறத நிறு த்து, அப்புறம் ரயில்வே கேட் அடைப்புகாக நிக்கும் போது சிகரெட்டு குடிக் கிறத நிறுத்து, அப்பறம் கொஞ்சம் கொஞ்சமா அப்பிடியே கொறைச்சிக்கிட்டெ வந்துரு ,சரியாயிரும் என சொன்னவன் கிட்ட நீ சொன்னதப்பூரா கடந்த ரெண்டு மாசமா பண்ணிப்பாத்துட்டேன்,ஆனாமுடியல,எப்ப எப்ப கொறைக்க ணுமுன்னு நெனைக்கிறமோ,அப்பப்பகூடிப்போகுது சிகரெட்டோட எண்ணிக் கை யும்,டீயோட எண்ணிக் கையும்/ என்ன செய்யிறதுன்னு கையப் பெசை ஞ்சப்ப அவந்தான் ஒரு டாக்டர் கிட்ட கூட்டுக்கொண்டு போயி விட்டான்,

”அவரு சொன்னதக்கேட்டப்ப எனக்கு ரொம்ப ஆச்சிரியமா போச்சி எனக்கு/ ஊம் ஒரு நாளைக்கு இருபது டீக்கு மேல டீக்குடிக்கும் போதெல்லாம் சிகரெ ட்டும் தொணைக்கி வேணும்,அதுதான,,,ஒங்க பிரச்சனை,சரி பண்ணீருவோம் விடுங்க கவலையன்னு சொன்னவரு “நா ஒரு நேரத்துல எவ்வளவு டீயும் சிகரெட்டும் குடிச்சேன் தெரியுமா,ஒங்களவிட ஒன்னரை மடங்கு குடிச்சேன், எனக்கு மொதல்ல ஒன்னும் தோணல,போகப்போக ஒடல்ல மாற்றம் தெரிய ஆரம்பிச்சது மட்டும் இல்லை,அதுக்குன்னு ஆகுற செலவே தனியா ஒரு தொகையா தெரிய ஆரம்பிச்சிச்சி,சரி இனி இது லாயக்குப்படாது,பல பேருக்கு முன்னுதாரணமா இருக்க வேண்டிய நம்மளே இப்பிடி இருந்தோம்ன்னா எப்பிடிங்குற கேள்வியும் விஸ்வரூபம் எடுத்து நிக்க என்னைய நான் மாத்திக்கிறத தவிர்த்து வேற ஒண்ணும் செய்யத் தோணல/ மாத்திக் கிட்டேன், இப்ப சந்தோசமா இருக்கேன்,செலவும் வேற கொறைய ஆரம்பிச்சிருச்சி. ஒடம்பும் கொஞ்சம் நிம்மதியா இருக்கு,அது போலவே ஒங்க நிம்மதி க்கும் நான் கேரண்டின்னாரு,

”சொன்னது மட்டும் இல்ல,அது போலவே ஆக்கியும் விட்டுட்டாருப்பா கொஞ் சம் சந்தோஷமா இருக்கேன், உடல் நெலையும் கொஞ்சம் நல்லா இருக்கு, ஆனா டாக்டர் ரொம்ப கண்டீசனா சொல்லீட்டாரு, இனிம நீங்க பழைய படி யும் ஏதாவது செஞ்சீங்கன்னா ரொம்ப சீரியஸ்ஸாகிரும் ஒடம்ப பாத்துக் கங்க ன்னு எச்சரிச்சி விட்டுட்டாரு/,

”எனக்கும் கொஞ்சம் பயமாகிப்போச்சி அவரோட பேச்சக்கேட்டதும்,

”சரி இதுவரைக்கும்தான் யாரு பேச்சையும் கேக்காம இருந்தோம்,இனியாவது கேப்போம்ன்னு சம்மதிச்ச மனச இறுக்கமா புடிச்சிக்கிட்டு அப்பிடியே இருந் துட்டேன்,

”அது போல இருக்கப்பழகிக்கங்க நல்லாயிருக்கும் ஒடம்பு,நான் போய் வைத் தியம் பாத்த டாக்டர் அட்ரஸ் தர்றேன்,போயிப்பாருங்க கண்டிப்பான்னு சொன் ன வெங்காயக்கடைக்காரர் இந்த நேரம் நன்றியோட நெனைச்சிக்கிறேன் நானு எனச் சொல்லிக்கொண்டிருந்த தினங்கள் ஒன்றில்தான் அவரது கடைக்கு வெங்காயம் வாங்கப்போயிருந்தான் இவன்/

”இதுவரைக்கும் இப்பிடி சொன்னதில்ல,கடையில வெங்காயம் இல்லைன்னு ”,,,  என அவர் தொடுத்து ஆரம்பித்த சொல்லை ”இப்ப சொல்ல வேண்டிய அவசியம் ஆகிப்போச்சி,, அப்பிடித்தானே” என முடித்து வைத்தான் இவன்/

2 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

அருமை...

அந்தக் காலம் பொற்காலம்...

vimalanperali said...

நன்றியும் அன்பும்,,,/