26 Aug 2018

ஊசி மருந்தும் ,தேங்காய்ச்சில்லும்,,,,,

சுந்தரியக்காவின் கணவருக்கு உடல் நிலை சரியில்லை என ஆஸ்பத்திரியில் சேர்த்திருப்பதாகச் சொன்னார்கள்,

என்ன பைய ஒடம்பு இதுண்ணே,காலையில நல்லாயிருக்கு சாயங்காலத்துக் கு ஒரு மாதிரி ஆகிப்போகுது எனச்சொல்லும் சுந்தரியக்காவின் கணவரிடம் சொல்லுவதுண்டு இவன் அடிக்கடியும் எப்பொழுதாவதுமாய்./

அது இல்லண்ணே யாருக்கு நாப்பதைக்கடந்த யாருக்கு ஒடம்பு நல்லாயிருக் குன்னுசொல்றீங்க,,?சின்னதானதலைவலியிலயிருந்து பெருசான இதய நோயி, சக்கரை,,, இன்னும் சில பேருக்கு கேன்சருன்னு இருந்துக்கிட்டுதான இருக்கு/

அது கூட நாப்பதுக்கு மேலதான்னு வச்சாக்கூட இப்ப சின்ன வயசுப்புள்ளை களுக்குக்கூட ஏதாவது பெரிசா நோயி வருதுன்னா பாத்துக்கங்கங்ளேன், அது வும் சரி பண்ன முடியாத அளவுக்கா வர்றது?

வருசமெல்லாம்அந்தப்புள்ளைய ஆஸ்பத்திரிமருந்து மாத்திரைடாக்டருன்னு கூட்டிக்கிட்டு அலையவே நேரம் சரியா இருக்கும் இல்லையா,,,?

நாமல்லாம் சின்ன வயசா இருக்கும் போது மூக்கு ஒழுகிக்கிட்டு திரியாத புள்ளைங்கள பாக்குறது அபூர்வம்,

வெளையாடும் போது கீழ விழுந்து கைகாலெல்லாம் சிராய்ப்பு ஏற்பட்டு ரத்தக்காயம் ஆகாத புள்ளைங்க கிட்டத்தட்ட இருக்கமாட்டாங்க,

அது போல தைரியமானப்பயலுக,சமயத்துல பொண்ணுங்க கூடத்தான் மரத்துல ஏறி அங்கயிருந்து தவறி விழுந்து ஒண்ணும் ஆகாம பொழசிக்கிட் டது இல்லையா,இப்பத்தான வீட்டுக்குள்ல நடக்கும் போது தவறி கால் யெடறி கீழ விழுந்து கை கால் ஒடிஞ்சி போங்குறாங்க,எலும்பு டாக்டருங்குறாங்க, ஆபரேஷன்ன்றாங்க,பிளேட்வச்சிதைக்கணுங்குறாங்க,பிஸியோதெரபின்றாங்க, அப்ப இதெல்லாம் ஏது,,,?

என்ன கர்மமோ கேட்டா கால முன்னேற்றம்,நல்ல சாப்பாடு ,சத்தான உணவு பிஸிக்கல்அண்ட்மெண்டலியானபிட்டோடஇருக்காங்கன்றாங்க,சராசரிஆயுள் கூடிக்குதுன்னு சொல்றாங்க,

ஆனா காலியில் படுத்து எந்திரிக்கும் போது இருக்குற ஒடல் நெலை சாயங்காலத்துல வேற மாதிரி இருக்கு,என்னன்னு சொல்லண்ணே என்கிறார் சுந்தரியக்காவின் கணவர்,

இத்தனைக்கும்அப்பயெல்லாம்வெறும்கம்பங்கஞ்சிகூழுதானண்ணே,நெல்லுச் சோறுங்குறதுயாராவது வசதியான வீட்டுலதான்,அது போல இட்லி தோசைங் குறதும்,கறிக்கொழம்புங்குறதும் ஏதாவதுபண்டிகைநாளைகள்லதானண்ணே, இப்பவாரம் வாரம் கறிக்கொழம்பு,டெய்லி இட்லி தோசை தான்,நெல்லுச் சோறு தான்.கம்பங் கஞ்சி ,கூழுங்குறதெல்லாம் பழசாகி காணமலேயே போயி ருச்சி,

அதுக்குத்தகுந்தாப்புல இப்ப நோய்களும் பெருகிப்போச்சி,என்னனெமோ பேர் தெரியாதநோயெல்லாம் சொல்றாங்க,,,,,,,என இன்று காலையில் பேசும் போது இவனிடம் பேசி விட்டு வேலைக்குப்போனவர்தான் இரவு ஆஸ்பத் திரியில் இருக்கிறார் என்கிறார்கள்,

தனசரி தவறாத வாக்கிங்,எக்ஸர்சை யோகா சமயாசமயத்தில் சைக்கிளிங்க்,,, என வைத்துக்கொண்டிருந்தவர் திடீரென எல்லாவற்றையும் விட்டுவிட்டார் ஒரு ஐந்து வருடங்களுக்கு முன்பாக.

என்னவெனத்தெரியவில்லை,ஏதோ ஒரு மனவீம்பு போல அவரிடம் புகுந்து கொண்டு விளையாடிய வீராப்பு அவரை ஒன்றும் செய்யவிடாமல் தடுத்தது,

இருக்கட்டும்அதனால்என்னஎன்பது போல் மிகவும் தைரியமாகவும் ஒலட்டல் இல்லாமலும் ஓட்டிக்கொண்டிருந்தார் வாழ்க்கையை,

எண்ணண்னே இப்பிடி விட்டுங்களே தினசரியான வாக்கிங்கையும் எக்ஸர்சை ஸையும்,,,,,எனக் கேட்டபோது அடவிடுங்கண்ணே,,,,நம்ம ஒண்ணும் கோடி வருசம் வாழ்ந்துறப்போறதில்ல,ஆனா இருக்குறது வரைக்கும் எந்தத்தொந்த ரவும் இல்லாம அடுத்தவுங்களுக்கு யெடஞ்சல் குடுக்காம குறிப்பா பெரிசா நோயின்னு ஏதும் படுத்துறாம அப்பிடியே கௌரவமா போயிரணுமுண்ணே.,, அதுக்காகத்தான் இத்தனையையும் செஞ்சிக்கிடு வந்துக்கிட்டிருந்தேன்,

அதெல்லாம் கரெக்டா செஞ்சிக்கிட்டு வந்துக்கிட்டிருந்த நாட்கள்லயும், உணவு கட்டுப்பாடு,மனசுக்கட்டுப்பாடுன்னு இருந்துக்கிட்டு வந்த நாட்களுக்கு ஊடால ஒரு நாள் போயி சுகர் டெஸ்ட் எடுத்துப்பாத்தப்ப யெரநூறுக்கும் மேல காட்டு ச்சி, என்னடா இது இத்தனயும் பண்ணி வம்பாடுபட்டது இந்த யெரநூறுக்கும் மேலங்குறதப்பாக்கத்தானா,,,?காலக்கொடுமைன்னு அன்னைக்கோட தலை முழு குனதுதான் இந்ததுகளெல்லாத்தையும்.

அன்னையிலஇருந்து இன்னைக்குவரைக்கும்எல்லாத்தையும் நிறுத்தீட்டேன், எதுவும்செய்யிறதில்ல,வெறுத்துப்போச்சி,இருக்கௌர வரைக்கும் இருப்போ ம்ங்குறமுடிவோட இருக்கேன்,,,,எனச்சொன்னவர் திடீரென ஆஸ்பத்திரியில் இருக் கிறார் எனச்சொன்னால் கொஞ்சம் சங்கடமாகவே இருக்கிறது,

ஒரெட்டுப்போய்பார்த்து விட்டு வர வேண்டும்.

அவருக்காக இல்லாவிட்டலும் கூட சுந்தரியக்காவிற்க்காவும் அவரது பிள்ளை களுக்காவும் கண்டிப்பாக போய் பார்த்து விட்டு வர வேண்டும்.

எப்பொழுது போவது எப்படிப் போவது என்பது கொஞ்சம் திகட்டாலாய் இருக் கிறது,ஆபீஸிலிருந்து வீடுவர ஆறை அல்லது ஏழு மணீயாகிப்போகிறது,ஐந்து மணி அல்லது ஐந்தரை மணிக்கு அலுவலகம் முடிந்த பின் கிளம்பினாலும் கூட எப்படியும் ஒரு மணிநேரமாகிப்போகிறது,கொஞ்சம் விரைவு காட்டி வந் தால் முக்கால் மணி நேரத்தில் வந்துவிடலாம்,

சில நாட்களில் முக்கால் மணி சில நாட்களில் ஒரு மணி என்பது இவனுக்கு கண் கூடு,

பணி முடிந்து போகிற மாலை வேளைதானே கொஞ்சம் ரிலாக்ஸாக போய்க் கொள்ளலாம் என கொஞ்சம் பெராக்குப்பாத்துக்கொண்டு வருவான்,

பெராக்குப்பார்ப்பதும் இரு சக்கர வாகனத்தில் சுற்றுவதும் கொஞ்சம் மனம் பிடித்த செயலாகவே இவனுள் வேர் ஊன்றியிருந்தது,

ஊன்றிய வேரை பிடுங்க வேண்டாம் என வெளியூருக்கு பணி மாறுதல் ஆன போது கூட இரு சக்கர வாகனத்தில் போய் வந்தான்,

இரு வாகனத்தின் ஓட்ட நேர தாமதம்தானே தவிர்த்து வேறென்றுமில்லை.

இன்று மாலை கொஞ்சம் சீக்கிரம் வர முயற்சி செய்வோம்.வந்த பின் மனை வியுடன் போய் விட்டு வரவேண்டும்.

போகவேண்டுமானால் வெறும் கையோடு போக முடியாது, ஏதாவது வாங்கிப் போக வேண்டும்.ஒரு பன் பாக்கெட்டாவது வாங்கிபோக வேண்டும்,

பழம் அது இது என வாங்கினால் விற்கிற விலைவாசியில் காசு கையை மீறி போய்விடும்,

வேண்டாம் போகிற போக்கில் பெரியண்ணன் கடையில் ஒரு பிரெட் பாக்கெட் வாங்கிக்கொண்டு போகலாம், அதென்றால் கொஞ்சம் பழம் வாங்குற அளவு செலவு பிடிக்காது,

மேலும் பன் பாக்கெட் வாங்க காசு தேவையில்லை.இருக்கவே இருக்கிறது பலசரக்குக்கணக்கு,அதில் சேர்த்துக் கொள்ளச் சொல்லி விடலாம் கடைக்கா ரரை,அவரும் மாட்டேன் எனச் சொல்லாமல் சந்தோஷமாய் கும்பிடு போட்டு எடுத்துக் கொடுப்பார்,

அவருக்கு ஒரு எண்ணம் இவனைப்போல் உள்ளவர்கள் தன் கடையில் மாதக் கணக்கு வைத்து சரக்கு வாங்குவது தனது கடைக்குக் கௌரவம் என நினைப் பவர்,

போகவும் கொடுக்கிற சரக்குக்கு காசு இழுக்காமல் வந்து சேரும் என கனக்கு வைத்திருப்பவர்,

புத்தகக்கணக்கும் தன் கடைக்கு வருகிறவர்களைப்பற்றிய மனக்கணக்குமாய் இருந்த பெரியண்ணன் இவன் கடைக் கணக்கில் அதிகமாக சரக்குகள் வாங்கு வதில்லை எனத்தான் வருத்தம் கொண்டிருக்கிறாரே தவிர்த்து இவன் மேல் வேறெதுமான வருத்தம் கொண்டதில்லை.

இவன் எப்பொழுதாவது கடைக்குப்போகிற தினங்களில் அவர் சொல்வார், ”எங்ககடையிலகணக்கு வச்சி சரக்குக வாங்குறதுல ரொம்ப கொறையா வாங் குறது நீங்க ஒருத்தர்தான் சார்,நல்லா வந்தா முன்னூறு ரூபாய்க்கும் கொறை யாத்தான் ஒங்க கணக்கு வரும் சார்,என்பார்.

அவருக்கு இவன் அதிகம் சரக்குகள் வாங்கி அதிகப்பணம் கடைக்கு தர வேண்டும்என்கிற எண்ணத்த விட அவர் மூலமாய் கடைக்கு வருகிற வருமா னம் போய் விடக்கூடாது என்று நினைப்பார்,

போக இது போல் கஷ்டமர்கள் கடைக்கு வந்து போவதில் தனக்கு கொஞ்சம் பாதுகாப்பும் கொடுத்த சரக்குக்குகளுக்கு காசு ஒழுங்காக வரும் என்பதும் அவருக்கிருக்கிற பெரிய நம்பிக்கையும் மனோநிலையும் ஆகும்,

இவன் போகிற நேரம் கடையில் கூட்டம் இருந்தால் இவனை கொஞ்ச நேரம் கடையில் நிறுத்தி வைத்து விடுவார் கூட்டம் கொஞ்சம் போனபின்னும் சிறிது ஆட்கள் குறைந்த பின்னுமாய் இவனுக்கு தேவையானவற்றை வேக வேக மாய் தந்து அனுப்புவார்,

ஒரு தடவையானால் பொறுக்கமாட்டாமல் கேட்டே விட்டான்இவன்/ என்ன ண்ணே ஏன் நான் வந்து நின்னா மட்டும் லேட் பண்ணுறீங்க என,,,,,/

அதற்குஅவர்சிரித்துக்கொண்டேகொஞ்சம் சங்கடம்சுமந்தவராய்ச்சொன்னார்,

சார் பெரிசா ஒண்ணுமில்ல சார்,கூட்டமா இருக்குற வேளையில யாராவது மொகம் தெரியாதவுங்கள நிக்க வைக்கிறத விட ஒங்களப்போலவுங்க நின்னா எனக்கும் ஏங்கடையில இருக்குற பொருளுக்கும் பாதுகாப்பு,

”போக நீங்க ரொம்ப நேரம் நின்னு ஏங்கிட்ட பேசிக்கிட்டு இருக்குறதுனால இந்த ஏரியா சண்டியரு ஒருத்தன் கடைக்கிப்பக்கத்துல வர்றதுக்கு யோசிப் பான்,தவுர தினசரி நீங்க ஏங் கடைக்கி வர்ற ஆளுன்னு சொன்னதுல இருந்து என்னைய அந்த சண்டியர் பையன் ஒரண்டு பண்ணுறதில்ல,அப்படியே கடைப் பக்கம் வந்தாலும் எட்ட நின்னு வாங்கிட்டு வாங்குன சரக்குகளுக்கு காசு குடுத்துட்டு போயிக்கிட்டே இருப்பான்,என்றார்.

இன்னொரு நாளின் மாலை வேளையாய் இவன் அலுவலகம் முடிந்து வந்து கொண்டிருக்கும் போதுகடையிலிருந்து குரலை மட்டும் வெளியே அனுப்பி கூப்பிட்டார்.

இவன் போன நேரம் கடையில் ஆள் ஒருவர் கூட இல்லை,இவனும் கடைக் காரரும் மட்டுமே,/

அவர் எதுக்குக்கூப்பிட்டனுப்பினார் என நினைக்கும் மனோ நிலையில் இவன் இல்லை,”அலுவலகத்திலிருந்து சுமந்து வந்த அலுப்பை முதலில் வீடுபோய் இறக்கி வைக்க வேண்டும்,

”குளித்து முடித்து விட்டு மனைவி கொடுக்கிற டீயை சாப்பிட்டுக்கொண்டே கால் நீட்டி உட்கார்ந்தால் கொஞ்சம் ரிலாக்ஸ் ஆகும் உடம்பும் மனதும், அதற்கு வீடு கேரண்டி,/

இவன் வீட்டைத்தானே இவன் சொல்ல முடியும், இல்லையா,,?

அது போலான மனோ நிலையில் சென்று கொண்டிருந்தவனை பிடித்துக் கொ ண்டு விட்டார்,

ஏதாவது ஒரு மாதத்தின் நடுவிலோ அல்லது கடைசியிலோ கொஞ்சம் பணம் கேட்பார்,அட்வான்ஸ்போலவோ இல்லை வாங்கிய சரக்குக்கும் இனி வாங்கப் போகிற சரக்குகளுக்குமாய் சேர்த்து/

அப்படியாய் பணம் வாங்க கூப்பிட்டிருப்பாரோ,,,,?

“சார் தப்பா நெனைச்சிக்கிறாதீங்க,கொஞ்சம் பணம் தேவைப்படுது, என்பார்,

இவனும் அவர் கேட்கிற பணத்தை என்ன ஏது எனக் கேட்காமல் கொடுத்து விடுவான். இதில் தப்பாக நினைக்க என்ன இருக்க்கிறது என,,,/

கேட்ட நேரத்தில் கேட்ட பொருளைக எடுத்துக்கொடுக்கிறவர், அவர் போன்ற கடைக்காரர் இல்லையென்றால் இந்த ஏரியாவில் முக்கால்வாசி குடும்பங் களின் சமையலின் தேவை நிறைவேறாது என நினைப்பான் சமயத்தில்/

அந்த நினைப்பு உண்மைதான் போலும் என்பதை நிரூபிப்பவராய் காட்சிப் பட்டுத் தெரிவார் கடைக்காரரும்/

அப்படிபட்டவர் கேட்கிற சமயம் கொடுப்பதில் ஒன்றும் பெரிய இழப்பு வந்து விடப்போவதில்லை என்கிற நினைப்புடன் கொடுத்து விடுவான்,

“வாங்குற சாமான்களுக்கு அட்வான்ஸ் குடுக்கிற ஒரே ஆளு நீங்களாத்தான் இருக்க முடியும் அநேகமா” என்பாள் மனைவி.

சிரித்துக்கொள்வான் இவன்.சரி விடு,இவருக்குக்குடுக்குறது நமக்கு ஒண்ணும் பெரியஅளவுல நஷ்டம் இல்லை,சமயத்துல வீட்ல ஒண்ணுமே இல்லாத வேளைகள்ல அரிசி பருப்பு எல்லாம் வாங்கிக்கிறோம்,கூடவே காய்கறிகளும்/

இது போக அவரும் விடாம கேட்டுக்கிட்டே இருக்காரு,மாசா மாசம் நானே அரிசி பருப்பு அரசளவு எல்லாம் குடுத்துர்றேன்னுசொல்றாரு,ஆனா நம்மதான் அங்கங்க பழக்கம் வச்சிருக்குறபழக்கத்தால அந்தந்தசாமன்கள அந்தந்தக் கடையிலயே வாங்கிக்கிறோம்,அதுனாலயே அவருகிட்ட வாங்க முடியாம போகுது.

அத அவரு கிட்ட சொன்னாலும் அவரு சொன்னதையேத்தான் திரும்பத் திரும்ப சொல்லிக் கிட்டே இருக்காரு,ஒங்களப்போல ஒருகஷ்டமரு எனக்கு கெடக்குறதுக்கு நான் குடுத்து வச்சிருக்கணும்ங்குறாரு,

”சரிதான் நீங்க சொல்றது ,நாங்களும் இப்பிடி ஒங்களுக்கு மனசுக்கு பிடிச்சிரு ங்குறதுக்காக இங்கயே ஒறைஞ்சி போயி நின்னுட்டமுன்னா அப்புறம் கை விரிச்ச பழக்கமுன்னு எங்களுக்கு எப்ப வாய்க்கும் சொல்லுங்க,நாங்க என்ன கடையில போயா வாங்க முடியும் ,அப்பிடியான பழக்கத்த,,,?

இது போல அரிசி,பருப்பு,பலசரக்கு,காய்கறிகள்ன்னு,,,, ஒவ்வொரு யெடத்துல ஒவ்வொண்ணு வாங்கும் போதும் புதுசா ஒரு பழக்கமும் தோற்றமும் கெடச் சிப் போகுது,அப்பிடி கெடைக்கிறதுக்காவாவது நாங்க அப்பிடி போயித்தான் ஆகணும் போல இருக்கு,

”போறம் வர்றோம், வாங்குறோம் ,கொஞ்சம் சந்தோஷமா இருந்துக்கிறோம், இப்பநான் சரக்கு வாங்குற யெடத்துலயெல்லாம் ஒங்களப் போலத்தான் பழகு றாங்க,அவங்க வீட்டு விஷேசத்துல இருந்து நல்லது பொல்லதும் கூப்புட்டுர் றாங்க நானும் எல்லாத்துக்கும் தவறாம போய்க்கிட்டும் வந்துக்கிட்டும் இருக் கேன்/

”நீங்கசொல்லுவீங்கள்ல நம்ம கடைக்கி சரக்கு வாங்க வர்றவுங்க பண பழக்க வழக்கத்தோட மட்டும் நின்னுறாம இது போல குடும்ப ஒறவா மாறி நெலை க்கணும்ன்னு,,,” அது போலதான் அங்கயும் ஆச்சி,

”அங்க மட்டும் இல்ல,பெரும்பாலுமா நான் பழகுற யெடங்கள்ல பூராம் இது போலத்தான் வச்சிக்கிறது, அதுல அவுங்களுக்கும் ஒரு சந்தோஷம்,நமக்கும் ஒரு மன நிறைவு, அவ்வளவுதான் அப்பிடீங்குற ஒரு சொல்லோட எனக்கு கொஞ்சம் காசு செலவு அவ்வளவுதான் வேறென்ன,,,,?ஆனா அதப்பாத்தமுன் னா இப்பிடி ஒரு கை விரிச்ச பழக்கம் கெடைக்குறது ரொம்ப கஷ்டம் எனக் கும் அவுங்களுக்கும்,எனும் போது கடைக்கார பெரியண்ணன் தலையாட்டிக் கொள்வார் பெரிதாக,,,,/

”போன மாதத்தின் ஒரு நாளின் நடு இரவில் வெளியூர் போய் திரும்பிக் கொண்டிருந்தவனிடம் சமையல் சாமான் ஏதும் இல்லை வீட்டில் .இந்நேரமா போயி வாங்குறதுக்கு சாப்பாட்டுக்கடைகூட ஒண்ணும் இல்ல பெரிசா,மணி பண்ணெண்டு ஆகப்போகுது,நம்மளும் ஊருக்கு வர்ற அவசரத்துல கெடச்ச பஸ்ஸ புடிச்சி ஏறி வந்துக்கிட்டே இருந்துட்டம்.சாப்புடுறதப்பத்தி நெனைப்பே இல்லாம,இப்ப வயிறு கியா முயான்னு சத்தம் போடுது.என்ன செய்யலாம் என மனைவி பேசிக்கொண்டு வரும் பொழுது இவர்களது ஏரியாவிற்குள் இருக்கும்பெரியண்ணன் கடையை கடந்து கொண்டிருந்தார்கள்.

அப்பொழுதுதான் யோசனை வந்தவனாய் பெரியண்ணன் கடைக்கதவைத் தட்டினான்,

வீடும் கடையும் ஒன்றாக இருந்ததால் இது போலான சமயங்களில் சங்கட மில்லை,

பெரியண்ணனே அநேக சமயங்களில் சொல்லியிருக்கிறார் இவனிடம்,சார் நடு ராத்திரிக்குக்கூட ஏதாவது அவசரமா சாமான் வாங்கனும்ன்னா வாங்க சார் யோசிக்காதீங்க என,

இப்பொழுது அவர் வீட்டுடனான கடைக்கதவை தட்டும் போது அந்த நினைப்பு வராமல் இல்லை.

திறந்ததுமாய் கொஞ்சம் சாமான் வாங்கினார்கள்,அவசர சமையலுக்கு இருக்க வே இருக்கிறது உப்புமா ,ரவை கொஞ்சம் சட்டினி அரைக்க பொரிகடலை, தேங்காய்ச் சில்லு மிளகாய் கறிவேப்பிலை மல்லி இலை என வாங்கிய பிறகு தான் ஞாபகம் வந்தது பக்கத்தில் கொஞ்சம் தள்ளி இருக்கும் 24 மணி நேர கோழிக்கறிக்கடையில் கோழிக்கறி கொஞ்சம் வாங்கியிக்கலாம் என/

இதைபெரியண்ணனிடம் சொன்ன போது சிரித்துகொண்டேசொன்னார்”ஏன் சார் ஒங்களுக்கு இந்த ஆகாத போகாத ஆசையெல்லாம்,இப்பத்தான் பிரயா ணம் முடிஞ்சி யெறங்கீருக்கீங்க,போயி நல்லா குளிச்சிட்டு வயித்துக்கு லேசா சாப்பிட்டு படுத்தாத்தான் காலையில கொஞ்சம் கஷ்டமில்லா எந்திரிக்கலாம்” என்றார்,

இப்படி பேசுகிறவருக்கும்,நடு ராத்திரி எனக்கூடப் ப்பார்க்காமல் கேட்டதும் பலசரக்கு தருபவருக்கும் கேட்ட நேரம் பணம் கொடுப்பதில் என்ன தவறு இருக்கமுடியும் என மனைவியிடம் சொன்ன பொழுது அவள் வாஸ்தவம் தான் நீங்க சொல்றதும் என்றாள்,

சுந்தரியக்காவின் கணவருக்கு உடல் நிலை சரியில்லை என ஆஸ்பத்திரியில் சேர்த்திருப்பதாகச் சொன்னார்கள்,

பெரியண்ணன் கடையில் ஒரு பன் பாக்கெட்டை வாங்கிக்கொண்டு அவரை பார்க்கப் போக வேண்டும்/

2 comments:

கரந்தை ஜெயக்குமார் said...

”குளித்து முடித்து விட்டு மனைவி கொடுக்கிற டீயை சாப்பிட்டுக்கொண்டே கால் நீட்டி உட்கார்ந்தால் கொஞ்சம் ரிலாக்ஸ் ஆகும் உடம்பும் மனதும், அதற்கு வீடு கேரண்டி,/

உண்மை
உண்மை

vimalanperali said...

அன்பும் பிரியமுமான கருத்துரைக்கும்
வருகைக்கும் நன்றி சார்,