8 Sept 2018

குடிக்க டீயும் ,கடிக்க வடையும்,,,,


 எப்பொழுதும் குடிக்கிற டீதான்.அன்றும் குடித்தான், நன்றாக இருந்தது,

பார்த்துப்பார்த்து பண்ணிப்பண்ணி பதம் பார்த்து இதம் பார்த்து பார்த்து நீரின் கொதிப்பு பார்த்து தேநீரின் அளவு பார்த்து ஸ்டவ்வின் ஜுவாலையை கூட்டி யும் குறைத்துமாய் வைத்தும் பாட்டிலிருந்து கையில் கொட்டிய தேயிலை கொதித்ததும் இறக்கி ஆற்றி சூடு தாக்காமல் மென் சூடாய் கொண்டு வந்து கொடுக்கிற வீட்டு டீயின் ருசிகளை அல்லது அதன் பதத்தை கடைகள் எடு த்துக் கொண்டன பெரும்பாலுமாய் என நினைக்கத்தோணுகிறது,

தலை நிறைந்த பூவும் உச்சி வகிடெடுத்த தலையும் அதில் சிலுப்பிப்பறந்து கொண்டிருக்கிற பக்கவாட்டு முடிகளும் குங்கமும் விபூதிக்கீற்றுமாய் பூசியி ருக்கும் நெற்றியும் தழையத்தழைய காட்டன் புடவை கட்டிக்கொண்டு வரு கிற மனைவியின் பாந்தமும் அழகும் ஈர்த்து கட்டிப்போடும் வீடுகள் தரும் டீக்களை இன்னும் எந்த கடைகளும் தந்து விடவில்லை என்கிற போதும் கடைகளின் டீ பாய்லர்கள் இன்னும் கொதிநிலை கொண்டேதான் இருக்கிற தாய்,

அம்மாக்கள் தந்த சர்க்கரை டீயையும் கருப்பட்டிக்காப்பியையும் குடித்த நாட் களைஇதுபோலான கடைகள் கொஞ்சமாய் மறக்கடித்துப்போய் விடுகிறது  தான்,

”ஸ்ஸீ,,,,குடுக்குறத பேசாம குடிச்சிட்டுப் போகணும்,சும்மா அங்க குடிச்சேன் இங்க குடிச்சேன் ,டீ நல்லா இருந்துச்சி காபி நல்லாயிருந்துச்சின்னு சும்மா கதை சொல்லக்கூடாது” ஆமா என்பாள் மனைவி.

வாஸ்தவம்தானேஅவளை வைத்துக்கொண்டே அவள் கொடுக்கிற டீயில் தண் ணீரின் அளவு கூடி விட்டது,சீனியின் அளவு கூடிப்போனது எனச் சொல்லும் போது அவளுக்கும் மனது கசக்கும்தானே,,?

தேவையும் அவசியமும்தான் எதையும் தீர்மானிக்கிறது போலும்.

மதுரையிலிருந்து வந்து கொண்டிருந்தான்,இடையில் வண்டியை நிறுத்தி ரோட்டோரக்கடையில் டீ சாப்பிட்டுக்கொண்டிருக்கும் போது நண்பர் போன் பண்ணினார்,

எண்பத்திநான்காவது ஆண்டு விழா கொண்டாடப்படும் நாயகனின் பிறந்த நள் இன்று,அவரதுபிறந்ததினக்கொண்டாட்டத்துடன் அவரைப்பற்றிய சின்னதான ஒரு கருத்துரையும் இருக்கிறது,அவசியம் வா,என்ன வேலை எப்படிக் கிடந் தாலும் அப்படியப்படியே போட்டு விட்டு என்றவர் ஏனென்றால் நாம் உண் ணும் அரிசி ஒவ்வொன்றிலும் உழைப்புக்கு தன்னை ஒப்புக் கொடுத்து விட்ட விவசாயியின் பெயருகடுத்து அவரது பெயர் பொரிக்கபட்டிக்கிறது, மறக் காமல் வா,,,என,

அவர் தலையால் சொன்ன அழைப்பை தலையாலேயே ஏற்றுக்கொண்டு வருகிறான் அவர் சொன்ன இடம் நோக்கியும் பிறந்த தின விழாவில் பங்கேற் பவனாயும்/

அவர் சொன்ன இடம் செல்ல இன்னும் ஒரு கிலோ மீட்டர் இருக்கிறது,பத்து டூ ஐந்தின் அலுவலகத்தன அலுப்பை விட இருசக்கரவாகனத்தில் வந்த அலுப்பு உடலை அடித்துப்போட்டு விட ஒருக் குடித்தால் தேவலாம் போலத் தோணி யது,

தேவையும் அவசியமும் மட்டுமல்ல தேவலாம்களும் சேந்தே எதையும் தீர் மானிக்கிறது போலும்,

டீயில் கூடவா அது,,,,?

டீயில் என்ன, பச்சைத்தண்ணீரில் என்றாலும் கூட அதுதானே, அது கிடைக்கா மலும் அதன் அதீதத்தாலும் ஏற்பட்டுப்போகிற சிரமங்களும்.அழிவுகளும் பேரி டர்களும் இழப்புகளும் கொஞ்சமா நஞ்சமா,வீடிழந்து வாசழிந்து வாழ்விழந்து இன்னும் இன்னுமான வாழ்வின் அடிப்படை ஆதாரம் கூட இழந்து நிர்கதி யாய் நிற்க காரணியாகிப் போகிற பச்சைத்தண்ணீர் தேவைக்குக் கிடைத்தால் அமுதம் ,தேவை மீறி ஊருக்குள்ளும் வீடுகளுக்கும் பெருக்கெடுத்து ஓடினால் அதுஅழிவு என சுட்டிக்காட்டி விடுகிறதுதான்,

போகிறபோக்கில் அது சொல்லி விட்டுப் போகிற சொல்லாக்கங்களும் கற்றுத் தந்து விட்டுப்போகிற பாடங்களும் நிறைய நிறையவே என்றார், பக்கத்தில் டீக்குடித்துக்கொண்டிருந்த ஒருவர்/

”வாஸ்தவந்தான அவர் சொல்றதும்.நம்ம அள்ளிக்குடிக்கிற அளவுக்கு ஓடுனா அது தண்ணீரு,அதுவே நம்மள அள்ளிக் கிட்டு போயிச்சுன்னா அது கண்ணீரு தான,,,” எனத்தோன்றியது.

குடிக்க டீ கடிக்க ஏதாவதுகிடைக்குமா எனப்பார்த்த போது தட்டில் வாழைப்பூ வடையை அடுக்கி வைத்திருந்தார்கள்,

கடைக்காரரிடம் சொல்லி விட்டு அவரது அனுமதிக்காய் காத்திருந்த வேளை யில் சொல்கிறார் கடைக்காரர் “என்ன சார் இதுக்குப் போயி எடுத்துச் சாப்பு டுங்க சார் சும்மா” என,

”எல்லாரையும் நாங்க அப்பிடி பூதக் கண்ணாடி போட்ட கண் கொண்டு பாக்கு றதில்ல சார்,ஆள் அம்பு சேனையுன்னு சொல்லுவாங்க இல்ல ,அது போல தான் நாங்களும் ஒரு ஆள நிதானம் பண்ணி வச்சிருப்போம் ,கடைக்கு ஆளு நடந்து வர்ற நிதானத்துலயே கண்டு புடிச்சுருவோம் சார்,இன்னார் இப்பிடி ன்னு,,,,,/சில பேரு மொகத்துலயே எழுதி ஒட்டீருக்கும்,அதுலயும் சில பேரு ரொம்பத்தெளிவாவும் ரொம்ப கள்ளமாவும் வருவான் பாத்துக்கங்க,

”இப்பிடித்தான் போன வாரம் ரொம்ப ஒருத்தரு வந்தாரு,பாக்க கொஞ்சம் ஒங்களப் போலதான் இருந்தாரு பேண்ட் சர்ட் போட்டுக் கிட்டு,ஏதும் டிபார்ட் மெண்ட் ஸ்டாப்போ என்னவோ தெரியல சார். கடைக்கு முன்னாடி வந்து தயங்கி தயங்கி நின்னுக்கிட்டு இருந்தாரு,நானும் வேலை மும்பரத்துல மொதல்லஅவரகவனிக்கல,பிற்பாடுதான்பாத்தாரொம்பநேரமா சங்கடத்தோட நிக்குறது போல இருந்துச்சி,

“என்ன சார் என்ன விஷயமுன்னு கேட்டப்ப ரொம்ப தயங்கித்தயங்கி அழுகு துறது மாதிரி சொன்னாரு,இந்த மாதிரி ரெண்டு வடையும் டீயும் சாப்புட் டுட்டேன்,சாப்புட்டப்பெறகு பாத்தா பையில காசக் காணோம்,வீட்லயே வச்சி ட்டு வந்துட்டேன் போலயிருக்கு,அது கூட ஞாபகமில்லாம சாப்புட்டுட்டேன், இப்ப குடுக்குறதுக்கு கையில காசு இல்ல, நாளைக்கு கொண்டு வந்து குடுத் துர்றேன்,இல்லைன்னா வீடு இங்க இருந்து ரெண்டு கிலோ மீட்டர் தூரத்துல தான்இருக்கு ,போயி எடுத்துக்கிட்டு வந்து குடுத்துர்றேன்னு சொன்னவர யெடைமரிச்சி,,,,அதுக்கேன் சார் இவ்வளவு தயங்குறீங்க, நெஞ்ச நிமித்தி சொல்ல வேண்டியதுதான சார்,நாளைக்கு கொண்டு வந்து தர்றேன்னு,ஒங்கள எனக்கு தெரியும் சார்,ஒங்கள அங்கங்க பாத்துருக்கேன் சார்,ஒங்களப்போல பொது நலத்துக்கு ஓடிக்கிட்டு திரியிறவுங்க இப்பிடி ஒரு டீக்கடை முன்னாடி வந்து தலை குனிஞ்சிக்கிட்டு நிக்கக்கூடாது சார்,

“முன்னாடியே ஒங்களப்பாத்துருந்தா அப்பதயே அனுப்பிச்சிருப்பேனே சார், இப்பப்பாத்தீங்களா ,ஒங்க கண்ணு முன்னாடியே ஒருத்த குடிச்சடீக்கும் வடை க் கும் அப்புறமா தர்றேன்னு போனானே,அவன் எங்களுக்கு தர வேண்டிய பாக்கி ரெண்டாயிரத்துச் சொச்சத்துக்கு மேல இருக்கு ,ஒரு விருதாப்பைய அவ்வளவு பாக்கி வச்சிட்டு எந்த கூச்சம் நாச்சமும் இல்லாம வந்து டீக் குடிச்சிட்டுவடைசாப்டுட்டுப்போறான்,நீங்க ஏன் சார் இதுக்கு போயி இவ்வளவு கூசுறீங்கன்னு சொல்லீட்டு இந்தாங்க சார்ன்னு அவருக்குப் புடிச்ச வாழைப்பூ வடையில ஒரு நாலைஞ்ச எடுத்து பார்சல் கட்டி குடுத்து விட்டேன், போங்க சார்,போயி புள்ள குட்டிகளுக்கு குடுங்கன்னு,,,” ”ஒங்களுக்கா எப்ப காசு குடுக்க ணும்ன்னு தோணுதோ அப்ப குடுங்க சார் போதும்ன்னு/

”இன்னும் கொஞ்சம் நேரம் நிக்க வச்சிருந்தா அழுதுருப்பாரு போல அவ்வள வுக் கூசிப்போனாரு மனுசன்,இதுதா சார் மத்திய தர வர்க்கத்துக்குன்னு இருக் குற நல்ல விஷயமும் கெட்ட விஷயமும் சார்”/

”அந்த மனுசன் கொணத்துக்கு டீ வடை என்ன ஏங் கடையே கூட அவருக்கு எழுதி வைக்கலாம்,ஆனா அந்தளவுக்கு நான் தனவந்தனும் இல்ல,என்னதான் ஏழ்மையில இருந்தாலும் அவரும் அந்தளவுக்கு தரம் தாழ்ந்தவரும் இல்லை.

,தவுரநாங்களும்ரொம்பகணக்குப்போட்டும்,யெடைபோட்டுப்பாத்தும்யேவாரம் பண்ணீற முடியாது சார்.இது ஒரு அலி பொழப்பு சார்,நாலு வரும் வரும் ரெண்டு போகும், விட்டது ரெண்ட எட்டிப்புடிகுறதுக்குள்ள இன்னும் ரெண்டு சேந்துரும் ,இன்னும் நாலு வரும்,இப்பிடியே வந்த நாலையும் போன ரெண் டையும் எட்டிப்பிடிக்கிரதையும் யேவாரத்தோட யேவரமா சேத்துக்குவோம்/

எல்லாத்தையும் அனுசரிச்சித்தான் நாங்களும் கடை நடத்தி ஆகணும்.என்ன செய்யிறது சொல்லுங்க,அப்பத்தான் நாங்களும் ஓரளவுக்கு நிக்க முடியும். இல்லைன்னா இருக்குற போட்டியில இந்தக்கடைஇல்லைன்னா அந்தக் கடை ன்னு போயிருவான்,அந்தக்கடை இல்லைன்னா இந்தகடைக்கி வந்துருவான், இப்பிடியே தாவிக்கிட்டே திரிவான் என நீளமாக பேசிக்கொண்டு சென்ற அவர் அணிந்திருந்த சட்டையும்,பேண்ட்டும் இப்பொழுது இருக்கிற ட்ரெண்ட் போல் இருந்தது,

எங்குபார்த்தாலும்இது போல் வெளிர்நிற பேண்ட் அணிந்திருந்தவர்கள் காணக் கிடைக்கிறார்கள்.அதற்கு தகுந்த நிறங்களில் அவர்கள் அணிந்திருக்கிற சட் டையும் பார்க்க நன்றாகவே இருக்கிறது,

பக்கத்து ஊர் பஸ்டாண்டின் டீக் கடையில்நின்றிருந்த போது இது போலவே ஒருவரை பார்க்க நேர்ந்தது,வெளிர்க்கலர் பேண்ட்டும்.நவாப்பழநிறக் கலரில் சட்டையும் அணிந்திருந்தார்,பார்ப்பதற்கு கண்களை உறுத்தாமல் நன்றாகவும் பாந்தமாகவும்இருந்தது.சூப்பர்,,,,,சூப்பர்,,,/அதேசூப்பரின் ஜெராக்ஸ் காப்பியாய்  இப்போது இவர் இங்கு/

இவரது ட்ரெஸ் சென்ஸை நினைக்கிற போது கொஞ்சம் இவனது ட்ரெஸ் ஸைப் பார்த்து கூச்சமாக இருந்தது.

அது மட்டும் இல்லை பிள்ளைகளுக்கு இது போலான கலர்களில் ட்ரெஸ் எடுத்துக் கொடுக்கலாம் என நினைக்கிற போது அவர்கள் கொஞ்சம் வேறு பட்டு நிற்கிறார்கள்,

                                                           பாகம் 2

குடிக்க டீ மட்டும் போதாது,கூடவே எதாவது சேர்த்து சாப்பிடலாம் போலிருந் தது, வரிசையாக கண்ணாடிப் பெட்டிக் குள்ளாக அடுக்கி வைக்கப்பட்டிருக்கிற வடைகளையும் பஜ்ஜிகளையும் இன்னும் பிற தின் பண்டங்களையும் பார்க்கி றான்,

அதில்வாழைப்பூ வடைகொஞ்சம் நன்றாக இருந்தது,இது போலானவைகளை சாப்பிட்டும் ருசி பார்த்தும் ரொம்பவும் நாட்களாகிப் போனது என திருப்பத் திருப்பி வடையைப்பார்த்துக்கொண்டே சாப்பிட்டான்,

விளைந்து நிற்கிற தாவரத்திலிருந்து பூத்து வந்ததை பிய்த்தெடுத்தும் தரம் பார்த்து பிரித்தும் சேர்மானங்கள் சேர்த்து தின்பண்டமாக மாற்றுவது ஒரு பெரிய கலையும் வித்தையும்தான்,

இதை யார் சொல்லி யார் கற்றுக்கொண்டார்கள்,யார் யார் யாருக்கு முதலில் கற்றுக்கொடுத்தார்கள்,யார் மூலம் யாருக்குத்தெரிய வந்து கடைகடைக்கு வட்டம்தட்டி போட்டு வியாபாரம் செய்ய ஆரம்பித்தார்கள் என்பது ஆராய்ச்சிக் குரிய விசயமே என்கிற நினைப்புடன் டீ சாப்பிட்டுக்கொண்டிருக்கும் போது எங்காவது உட்கார்ந்து சாப்பிட்டால் நன்றாக இருக்கும் போலத் தோணியது.

இவ்வளவு பெரிய கடை வைத்திருப்பவர்கள் இவ்வளவு யேவாரம் செய்பவ ர்கள் உடகார ஏதாவது சௌகரியம் பண்ணி வைத்திருக்கக்கூடாதா?

பக்கத்துக் கடையில் சோபா ஒன்றை வெளியில் கிடத்தியிருந்தார்கள்.சோபா ரிப்பேர்க்கடையில் அப்படித்தானே கிடக்க முடியும்.அதுவன்றி வேறெப்படி இருந்து விட முடியும்?

அதில் போய் உட்காரலாமா?, அனுமதிப்பார்களா..?,அனுமதிக்கா விட்டால் கூட பரவாயில்லை,திட்டாமல் இருந்தால் சரி,

போடப்பட்டிருந்த சோபாவின் உள்ளும் புறமுமாய் பிய்ந்து தொங்கிய நார்க ளும் பஞ்சுகளும் மெல்லென வீசுகிறகாற்றில் ஆடிக்கொண்டிருந்தது, ஆடிக் கொண்டிருந்த பஞ்சுகளில் கொஞ்சம்,கொஞ்சம் பிய்ந்து அங்கங்கே பறந்தும் தரை முழுவதும் பாவியுமாய் தெரிந்தது. வெண்பனி போர்த்திய தரையாய் அந்தக்கடையின் முன் வெளியும் மனிதர்கள் டீக்கிளாஸீடன் நின்றிருந்த இடமாய் டீக்கடையின் முன் வெளியுமாய் பட்டுத் தெரிந்தது,

இதை கவனித்துக்கொண்டிந்த வேளையில்தான் இரு சக்கர வாகனத்தில் இரண்டு பேர் வந்து இறங்கினார்கள்,

அவர்கல் இறங்கி இரு சக்கர வாகனத்தை நிறுத்திய இடம் ஒரு ஒற்றைக் கொன்றை மரமாக இருந்தது,

அந்த மரத்தின் பெயர் இவனுக்கு சரியாகதெரியவில்லை,ஆனால் இவன் அதற்கு வைத்தபெயர் அதுவாகிப்போனது,

மரம் நிறைந்து பூத்திருந்த மஞ்சள் நிற மலர்களும் இளம் பச்சையும் கரும் பச்சையுமாயும் பழுத்து மஞ்சள் பாரித்திருந்த இலைகளும் காய்த்துத் தொங்கி ய காய்களும் மரத்தின் அடர்த்திக்கு அழகு சேர்த்ததாய் காணப்பட்டது,

அள்ளி பூ வைத்து சுற்றி கோலமிட்டு நகையாடும் மங்கையர் கூட்டத்திற்கு இணை நான் என மரம் அந்நேரம் சப்தமிட்டுச் சொன்னதாய் கேட்டது.

கேட்ட அசரீரியின் அதிர்வலைகள் அடங்கும் முன்னாய் வேகம் கொண்ட பறவைகள் இரண்டு ஒன்றன் பின் ஒன்றாய் பறந்து சென்றன,

ஜோடிப் பறவைகளாய் இருக்க வேண்டும்.மனங்கொண்ட காதலின் களியாட்ட ங்களின் மிச்சங்களை வானில் பறந்து தொடரும் போலும் என நினைத்துக் கொண்டிருந்த வேளையாய் அவர்கள் வண்டியை நிறுத்தி விட்டு வந்தார்கள்.

அப்பாவும் பெண்ணுமாக இருக்க வேண்டும் போல.

அப்பா ஊதாக்கலரில் கட்டம் போட்ட கைலியும் ஏதோ ஒரு கட்சியின் பெயர் தாங்கிய பனியனுமாய் அணிந்திருந்தார்,

”வீட்ல வேற சட்டை இல்லைண்ணே ,அதான் அவசரத்துக்கு இத எடுத்துப் போட்டுக்கிட்டு வந்தேன், மத்தபடி எனக்கும் இந்தக்கட்சிக்கும் சம்பந்தமில்  லை ,ஏங் தம்பி இதுல இருக்கான்.மத்தபடி,,,என ச்சொல்லிக்கொண்டிருந்தார் வண்டியை நிறுத்தும் போது அவருக்குஅருகில்நின்றுகொண்டிருந்தவரிடம்./

”நல்லவேளையாவீட்லஇதாவது இருந்துச்சேன்னுநெனைக்க வேண்டியிருக் குது. பலசமயங்கள்லபல விசயங்கள அப்பிடித்தான் நெனைச்சி ஆறுதல் பட்டு க்கிற வேண்டியதிருக்கு, என்கிற பதில் சொல்லை உதிர்த்த அவரின் சொல் தாண்டி கடைக்குபோய் இரண்டிரண்டு வடைகளும், பஜ்ஜிகளும் வாங்கிய 
மூன்று தட்டுகளுடன் வருகிறார்,

மகளிடம் கொடுக்கையில் அப்பாவின் தட்டிலிருந்த பஜ்ஜி ஒன்றை எடுத்துக் கொண்டு வடை ஒன்றை வைக்கிறாள்.

”எட்டாவது படிக்கிறா இவ ஏழாவதுல ஒரு வருசம் பெயிலாகிப் போனா அது னால படிக்கிற வகுப்ப விட வயசுகொஞ்சம் கூடுதலா ஆகித் தெரியும் பாக்கு றதுக்கு” என்றார்,

”எனக்குஆம்பளப்புள்ளகெடையாது,ரெண்டும்பொண்ணுங்கதான்.ரெண்டையும் வசதியாவச்சிப்பாத்துக்குறதுக்குதோதுஇல்லைன்னாக்கூடஅவுங்கள முடிஞ்ச அளவுக்குபாத்துக்குறேன்,நல்லாவளக்குறேன்,பெரும்பாலுமாரெண்டுபுள்ளைங் களையும் எங்க போனாலும் கூடவே கூட்டிக்கிட்டு போவேன் பள்ளிக்கொடம் நேரம் படிப்பு நேரம் தவிர்த்து,,/

”இதுல பாருங்க சின்னவளுக்கு அப்பிடி வீட்ட விட்டு வெளியேறி வர்றதுல விருப்பம்இருக்காது,பெரியவ இவ,இவ நான் கூப்புட்ட ஒடனே வந்துருவா, என்ன வேலை கெடந்தாலும் அது எப்பிடி இருந்தாலும் சரி,போட்டது போட்ட படி ஓடிவந்துருவா,ஏங் பொண்டாட்டி கூட வைவா,ஏங் இப்பிடி அவள எங்க போனாலும்கூடவேகூட்டிக்கிட்டுதிரியிறீங்க,நாளைக்குஇன்னொருத்தன்வீட்டு
க்குப் போறவ,நீங்க வாட்டுக்கு ஆம்பளப் பயலப்போல இப்பிடி கூப்புட்டுக் கிட்டுதிரிஞ்சிங்கின்னாபாக்குறவங்கநாலுவிதமாஎன்னத்தையாவதுபேசீறப் போறாங்க பாத்துங்கம்பா,

”நானும்அவபேச்சுக்கு ஒண்ணும் பெரிசா மறுத்துப் பேசீறதில்ல.அதே நேரத் துல அவ பேச்ச தட்டியும் விட்டுறதில்ல,

”எங்க கூட்டிக்கிட்டு போயிற போறேன் அவள சொல்லு ,டவுனுக்கு போகும் போது இல்லை கடைக்குப்போகும் போது இல்ல தோட்டத்துக்கு ப்போகும் போதுகூட்டிக்கிட்டிப் போறேன்,வீட்ல ஆம்பளப்புள்ள இல்லாததுனால அவள முடிஞ்சவரைக்கும் ஆம்பளப்புள்ள போல வளக்கணுமுன்னு ஆசை எனக்கு, சின்ன மகளப் போல தைரியம் இல்லாம இருக்காம இவளாவது நல்ல தைரி யமா வரட்டும்,அத விட்டுட்டுவீட்டுக்குள்ளயேபூட்டி வச்சிக்கிட்டு இருக்கணு முன்னு நெனைக்காத. இப்ப ராத்திரி வேளைகள்ல கூட தனியா டவுனுக்கு வண்டியில போயிட்டு வந்துட்டா,கடைகளுக்குப்போறா,வர்றா நாலு பேரு கூட பேசி பழகக்கத்துக்கிட்டா, பொது யெடங்கள்ல கொஞ்சம் நெளிவு சுழி வான பழக்கம் வந்துருச்சி, அப்பிடி இருக்குறவளப் போயி காத்தக்கட்டி அடை ச்சி வச்ச மாதிரி விட்டுக்குள்ளேயே பள்ளிக்கூடம்,பள்ளிகூடம் விட்டா வீடுன் னு மட்டும் அடைச்சி வச்சா எப்பிடி? என்பான் அவள் மனைவியின் பேச்சுக்கு பதில் பேச்சாக/

இப்போது ஆளுக்கு ஒரு வடையையும் பஜ்ஜியையும் பிய்த்து தட்டிலிருந்த சட்னி தோய்த்து சாப்பிட்டுக்கொண்டிருந்தார்கள்.

அப்பாக்காரர் கட்டியிருந்த கட்டம் போட்ட ஊதாக்கலர் கைலியில் இருந்த மஞ்சள் கோடு கொஞ்சம் தூக்கல் காட்டிகண்ணை உறுத்தியது.

மகள் உடுத்தியிருந்த இளம் சிவப்புக்கலர் சுடிதார் பார்க்க அழகாக இருந்தது,

தோய்த்துச் சாப்பிட்டுக் கொண்டிருந்த சட்னியில் காரம் அதிகம் என்று சொன் னவள் இரு சக்கரவாகனத்தில் இருக்கிற தண்ணீர் பாட்டிலை எடுத்து தண்ணீர் குடித்துக்கொண்டிருந்தாள்.

அப்பொழுது ஒற்றைக்கொன்றை மரத்திலிருந்து உதிர்ந்த கொன்றை பூ ஒன்று அவள் மீது மென்மையாய் விழுந்து சென்றதாக,,,,/

8 comments:

கவிதை வீதி... // சௌந்தர் // said...

தேநீர்... மனித உடலை புத்துணர்ச்சியாக்கம் செய்யும் தேவாமிர்தம்...

பதிவு நீரோடை போல தெளிவாக பயணிக்கிறது.. நானும் கூடவே பயணித்தேன்

vimalanperali said...

அன்பும் பிரியமுமான கருத்துரைக்கு நன்றி,,,/

கரந்தை ஜெயக்குமார் said...

தேநீர் என்றாலே தங்களின் பதிவின் சுவை கூடத்தான் செய்கிறது

வலிப்போக்கன் said...

தேநீர் குடிக்கும் பழக்கமில்லை..இருந்தாலும் தங்களின் தேநீர் கதை சுவையாக இருந்தது.

vimalanperali said...

வணக்கம் சார்,தேனீர் கடைகள்
சாதாரணர்களை அடை கொண்ட
இடமாயும் விளிம்பு நிலை மக்களின்
பல நேர பசிகளை ஆற்றும் வெளியாயும்
அமைந்து காட்சிப்படுகிறது,

vimalanperali said...

தேநீர் கடைளில் தேநீர் மட்டும் விற்பதில்லை,
மாறாக சாதாரணர்களின் வாழ்நிலையும்
அங்குதான் காட்சிப்படுகிறதாய்/

திண்டுக்கல் தனபாலன் said...

தங்களின் பதிவு என்றாலே 'தெம்பு' தான்...

vimalanperali said...

வணக்கம் சார்,தெம்புகளை களம் கொண்ட
இடங்களில் கதைகள் விரிகிறதுதான்,
ஆழமாகவும் அர்த்தம் கொண்டும்,,,/
நன்றியும் அன்பும் வருகைக்கு/