15 Jan 2019

மென் குளிர்வு காட்டி,,,,,

குளிக்கும் பொழுது இரவு பண்ரெண்டு மணி இருக்கும்,

சின்னமுள்ளும் பெரிய முள்ளும் அதன் துணையாய் நிற்கிறவிநாடி முள்ளும் ஒன்றன் மீது ஒன்றாய் உரசிக்கொஞ்சி செல்கிற பொழுதில் உதிர்கிற மொட்டு க்களாய்,,,, ஒன்று இரண்டு,,,,,,,என எண் கூட்டி காட்டிச்செல்கிற மணித்துளிகள் ஒன்றின் கொஞ்சலை ஒன்று தொட்டும் சினுங்கியுமாய் காட்டிச்சென்ற நேரம் பணிரெண்டிற்குள்ளாகவே,,/

ஓரொண்ணா ஒன்னு,ஈரொன்னா ரெண்டு,மூனொன்னா மூணு,,,,என வரிசைப் படுத்திச்சொன்ன வாய்ப்பாட்டை அந்த வட்ட வடிவ கடிகாரம் ஞாபகப்படுத் தியது.

பணிரெண்டு மணி என்பது ஒரு நேர உருவாக்கத்திற்காக சொல்லப்படுகிற சொல்தானே தவிர்த்து உண்மை அது இல்லை,

குனிந்த தலை நிமிராமல் டைப் அடித்துக் கொண்டிருந்த போது உருக்கொ ண்ட வார்த்தைகளின் நுனி பிடித்தும் அடிபிடித்துமாய் நிமிர்ந்து பார்த்த நேரம் மணி பதினொன்று ஐம்பது எனச்சொல்லிச்சென்றது கடிகாரம்.

சுவரில் இருந்ததால் அது சுவர் கடிகாரம் சரி,கடிகாரத்தின் பின்னே மறைந் திருந்த பல்லி எட்டித் தொட்டு கடிகாரத்தின் மீது எச்சமிட்டபோதும்,அதன் மீதும் அதன் பின்னுமாய் ஊர்ந்து திரிந்த போதும் பல்லிக்கடிகாரம் எனச் சொல்ல முடியுமா சொல்லுங்கள் என்பான் நண்பன்,

கொஞ்சம் குசும்புக்காரன்,குறுக்காய் கொஞ்சம் கேள்வி கேட்டாலோ இல்லை கிராஸ் பண்ணி விட்டாலோ,சரியான இடங்களில் உண்மையை பேசி விட்டா லோ அவன் குசும்புக்காரன் ,அடங்காதவன் என பெயர் வாய்த்துப் போகிறது.

”அது அதுக்குப்பேரு அது அது அதுவாவே இருக்கணுமுன்னு நீ சொல்ற, ஆனா கொஞ்சம் மாத்திச் சொல்லவும் மாத்தி வைக்கவுமா ஏன் முயற்சி பண்ணிப் பாக்கக் கூடாதுன்னு நான் யோசிக்கிறேன்,முயற்சியும் பண்றேன், சுவர் மேல கடிகாரத்துல பல்லி ஊர்ந்து போன மாதிரி படம் ஒட்டுனப்பக் கூடயும்அது சுவர் கடிகாரம்தான,,,,?இன்னும் சொல்லப்போனா அத மாடர்னா மாத்தி வைக்கவும் அதுக்கான முயற்சியிலயும் எத்தனை பேரு மெனக் கெடு றாங்க தெரியுமா,அந்த மெனக் கெடல்லயும் நேரம் செலவழிப்புலயும் ஒரு அர்த்த மும் அடர்த்தியானபொதிவும் இருக்கத்தான் செய்யுது பாத்துக்க” என்பான் இவன் நண்பனைப்பார்த்துச் சிரித்தவாறே,,,/

பதிலுக்குசிரித்துக்கொள்கிறநண்பனும்”நீசொன்னாஅதுசரியாத்தான்இருக்கும்,  அப்பிடி ஒரு வார்ப்புல இருக்க நீயி,அது ஒன்னையப் பெத்தவங்க ளோட வளப் போ,இல்ல சூழ்நிலைகள் சேர்ந்து வார்த்த வார்ப்போ தெரியல, எது சொன்னா லும் எது கேட்டாலும் அதுக்கு ஒரு பதிலும்,தீர்வும் வச்சிருக்குற நீயி,ஒனக்கு ஒண்ணுதெரியலைன்னாக்கூடயார்கிட்டயாவது கேட்டுச் சொல்லீறுற, யாரா வது புண்படுத்திப்பேசுனாக்கூட,அத நீ அறிஞ்ச போதும் கூட பேசுனவுங்களு க்கு ஒன்னுண்ணா ஒதவுற, ஓடிப்போயி நிக்கவும் செய்யிற,எப்பிடி வந்துச்சி, எப்ப வந்துச்சி இந்த குணம் ஓங்கிட்டையின்னு தெரியலை எனக்கு, இத்தனை க்கும் நானும் ஓங்கூடவேதான் இருக்கேன் என்ன மாயம் செஞ்சி எங்கயிருந்து இது போலகொணத்த வரவழைச்சிக்கிட்டையின்னு தெரியலடா,,” என்பான், நண்பன்,

அதுமட்டுமா நீ படிக்கிற புத்த கம் நீயி பேசுற பேச்சு,ஒனக்கு ஒரு விஷய த்துல இருக்குற நம்பிகை,அது சார்ந்ததீர்க்கமான பார்வை,தெளிவான முடிவு,,, இன்னும் இன்னுமான எல்லாம் ஒன்னைய எங்கயோ கொண்டு போகாட்டிக் கூட நல்லதனமா இருக்க வச்சிருக்கு.

“என்னதான் நீ இந்த நெலைமையில ஒன்னைய இருத்திகிட்டாலும்கூட ரொ ம்ப செரமப்படுற நேரங்கள்லயும், மனசங்கடத்துக்குள்ளாகுற பொழுதுகள்ல யும் கூட அதையெல்லாம் வெளிக்காண்பிச்சிக்கிறாம இவ்வளவு சங்கடங்க ளுக்கு மத்தியிலயும் இருக்க பாத்தியா அது எல்லாருக்கும் லேசுல வாய்க்கா து பாத்துக்க” என்பான் கூடவே/

சின்ன முள் பதினொன்று தாண்டி,பெரிய முள் அதை நோக்கி,விநாடி முள் விடாமல் துரத்தி டிக்கிட்டுச்சென்றதாய் பிடிவாதம் காட்டி/

டைப் அடிப்பதை சற்றே நிறுத்தி வைத்து விட்டு மடி கணியை கொஞ்சமாய் குனிந்து பார்த்து உற்று நோக்கியும் செவியுற்ற போதும் அதன் சிணுங்கல் கொஞ்சலாய் எட்டிக் கேட்டது,

”ஏன் இப்படி பாதியில விட்டுட்டுப்போறீங்க,எத ஒண்ணையும் முழுசா பயன் படுத்தும்போதுதான் அதன் பலன் பளிச்சென்னு வெளிய தெரியுமுன்னு சொல் லுவாங்க,சொல்லாத சொல்லு விலை மதிப்பிழந்தது போலநீங்க டைப் அடிக்க வந்த மேட்டர முழுசா அடிக்காம பாதியிலயே விட்டுட்டுப் போறதுனால பயன்படுத்தப்படாததாயும்,பயன்பாட்டுக்குஉள்ளாகாததாயும் ஆகிப் போறேன். என்பதாய் எட்டிச்சுட்டது அந்தப்பேச்சின் சாராம்சம்/

இருந்தாலும் கடந்து விட்ட நேரத்தையும் இரவு தன் ஜாமத்தை எட்டி விட்ட பொழுதாயும் ஆகிப் போனதையும் கணக்கில் எடுத்துகொண்டு குளிக்கப்போய் விடுகிறான்.

குளிப்பது இவனுக்குப்பிடித்திருந்ததா அல்லது அதை இவன் வழக்கமாக்கிக் கொண்டானா என்பது சரி வர நினைவில்லை,

எந்தக்குளிர்,எந்த வெயில் எந்தக்காற்று என்ற போதிலும் கூட சுடுதண்ணீரோ பச்சைதண்ணீரோ,இல்லைசில்லிட்டகுளிர்நீரோஎதுவானாலும்,காலை,மதியம், ,மாலை, இரவு எந்த நேரமானாலும் கூட குளித்து விடுவான்,

”ஒங்களையெல்லாம்தண்ணியில்லாதயெடத்துக்குமாத்திப்போட்டாங்கன்னாத் தான் தெரியும்” என்பாள் மனைவி.

“அப்பயும் பஸ்ஸிப்புடிச்சி ஊருக்கு வந்து குளிச்சிட்டு திரும்பிப்போவேன்” என்பான் பதிலுக்கு சிரித்துக் கொண்டே,,/

முதலில் காலிலிருந்துதான் ஆரம்பிப்பான்,பின் உடல் ,அடுத்து தலை என ஆரம்பிக்கிற பொழுது தரையில் முழங்காழிட்டு நிமிர்ந்தமர்ந்தும்,அடுத்து சிறிது முன் குனிந்துமாய் சேவிக்கிறது போலாய் குளிப்பான்,

தண்ணீர் நிரம்பிய பக்கெட் முன்புறம்,அதன் ஓரமாய் சோப்பு டப்பா, அதற்குப் பக்கமாய்முதுகுதேய்க்கும் பிரெஸ் என சகிதமாய் எடுத்து வைத்துக் கொண்டு தான் குளிக்க ஆரம்பிப்பான்,

குளிக்கும் முன்பாயும் குளிக்கிற போதும் குளித்து முடிக்கப் போகிற சமயமா யும் முழங்காலிட்டிருந்த நிலையிலேயே கொஞ்சம் முன் குனிந்து நமஸ்கரிப்
-பது போல் தரை தொடுவான்,

மதுரையில் வேலை பார்த்த நாட்களில் ரூமில் தங்கியிருந்த போது கற்றுக் கொண்ட பழக்கம் இது,

உடன் தங்கியிருந்தவர் கௌபீனம் அணிந்து கொண்டுதான் குளிப்பார். லங் கோடு என்று சொன்னால் கோபம் வந்து விடும் அவருக்கு,”நா லங்கோடு என்றால் நீ வெம்போடு,,” என்பார் சிரித்துக்கொண்டே,/

சக மனிதர்கள் மீது அளவில்லாத பாசத்தையும்,மனம் நிறைந்த வாஞ்சை யையும் அள்ள அள்ளக் குறையாத அன்பையும் கொண்டிருந்த அவர் தனியார் பள்ளி ஆசிரியராய் இருந்தார்,

ஊர் தெற்கத்திப்பக்கம் என தன்னை அடையாளப்படுத்திக்கொள்ளும் அவர் ஒரு காலை வேலையிலான நகர்வில்பள்ளிக்கு கிளம்புவதற்காய் குளித்துக் கொண் டிருந்தார்,

குளிக்கும்போதுஎப்பொழுதுமே கதவை தாளிட்டு குளிக்கும் பழக்கமில்லாத அவர் குளித்துக்கொண்டிருக்கும்போது சோப் தீர்ந்துபோனது என ஜன்னலோ ரம் இருக்கிற சோப்பை எடுத்துத்தரச் சொன்னார்.

இவன் போய் சோப்பை கொடுக்கும் போது அவர் முழங்காலிட்ட நிலையில் முன் குனிந்து தலையை தரையில் தொட விட்டிருந்தார்.

குளித்து விட்டு வந்த அவரிடம் முழங்கால்,தரை தொடல்,,,பற்றி கேட்டபோது ”நம்மால நேரம் ஒதுக்கி ஆசனம் இல்ல, எக்ஸைர்சைஸ் செய்ய முடியாத போது இது போல ஏதாவது சின்னச்சின்னதா செஞ்சிக்கிற வேண்டியதுதா,, அப்பிடி குனிஞ்சி தரை தொடும் போது வயிறு கொஞ்சம் உள்ளிழுக்கும். ஒடம் புக்கும்நல்லது,மனசுக்கும்நல்லது.அதுனாலத்தான்அதசெஞ்சிக்கிறேன்”என்றார்.

அவரைப்பார்த்து அன்று கற்றுக்கொண்டது ,இன்றுவரை விடாமல் துரத்துவ தாய்/

குளிக்கிற மனிதருக்கும்,ஊற்றுகிற தண்ணீருக்கும் உகந்த வேளை அதுவல்ல என்றிருந்தபோதிலும் கூட குளிக்கிற மனிதரையும் ஊற்றுகிற தண்ணீரையும் தவிர்த்து அதை ஏற்றுக்கொள்கிற மனமே முக்கியமாகிப்பட்டதாய்/

“என்ன இது கூத்தா இருக்கு? ஒரு மனுசன் குளிக்கப்போற நேரமா இது? இந்தக்குளிர்ல கையக்கால கழுவீட்டு வந்து படுத்தா போதாதா?,தலை வழியா தண்ணிய விட்டுட்டு அப்பறம் ஒடம்பெல்லாம் கிடுகிடுன்னு ஆடுது, பல்லெல் லாம் தந்தியடிக்கிது, அங்கன குளிருதுஇங்கன குளிருதுன்னு வந்து மனுசியப் போட்டு உயிர எடுக்க வேண்டியது,வயசுக்குத்தக்கன சும்மாவும் இருக்குற தில்ல, இப்பத்தான் எளவட்டம்ன்னு நெனைப்பு,வயசு தலைக்கு மேல கிண் ணாரம் போடுது, ஆளுகளப் பாருங்க,,,,”என செல்லக்கோபம் காட்டி மனைவி இடிக்கும் கொமட்டு இடிக்கு பணிரெண்டு மணிக்கு என்ன ,அதுக்கு மேலுமாய் பதிமூணு என ஒரு நேரம் காட்டினால் கூட குளிக்கலாம்”என அவள் தோளில் சாயும்வேளையில்”சும்மாஇருங்க,அந்தமானிக்க,,,இப்பத்தான் திரும்புதாக்கும் ,நரைபாய்ஞ்சிபோனவயசுலதுள்ளிவெளையாண்டுக்கிட்டுதிரியத்தோணுதோ  ஐயாவுக்கு,”  என தள்ளி விட மனமில்லாமல் தள்ளிவிட்டு விட்டு ”குளிச்சிட்டு வாங்க ,நீங்க வந்ததுக்கு அப்புறம்தான் ஒங்களுக்கு சாப்பாடு எடுத்து வச்சிட்டு நானும் சாப்புடணும்” என்றாள்,

”இன்னும் சாப்புடலாயா” நீ என்றதற்கு இல்ல சாப்புட்டேன் இருந்தாலும் எப்ப யும் நீங்க சாப்புடும் போது ஒரு வாயாவது நீங்க உருட்டிக் குடுக்குற சாப்பா ட்ட சாப்புட்டாத்தான் திருப்தியும் அன்னைக்கி பொழுது பிரயோனப்பட்டும் தெரியும்எனக்கு”எனச்சொன்னஅவளின்முந்தனைபற்றிஇழுத்துமுகம்துடைத்த கணங்களில் உதட்டோரத்தில் சுளித்த மென் சிரிப்பு மெலிதாக வெக்கப்பட வைத்து விடுகிறதாய் இவனை.

அய்யைய்யோ ,அய்யைய்யோ, அய்யைய்யோ,,,,, தப்புப்பண்ணீட்டேனே, தப்பு பண்ணீட்டேனே,,,,இப்பிடிப்பட்டஒருஅழகுதேவதையஇன்னும்கொஞ்சம்நாளு காதலிக்கிறேன்னு இழுத்துக்கிட்டு சுத்திருக்கலாமேன்னுஇப்பத் தோணுது, ஆனா இப்ப இப்படி ஒரு நெனைப்பு வர்றதுக்கும்,பிராயத்துல வர்றதுக்கும் வித்தியாசம் இருக்குதில்லையா என சொன்ன இவனை ஏறிட்டவள் பார்வை யில் ஆயிரம்  அர்த்தப்பூர்வங்கள் பூசி விட்டு மெலிதாய் கண்ணடிக்கிறாள்,

இமைத்துத்திறந்தஅவளதுமெல்லிய இமைகளின் உள்ளின் உள்ளாய் இவனும் பிள்ளைகளுமாய் குடிகொண்டிருந்த காட்சி பஞ்சாரத்துக் கோழிகளாய் காணக் கிடைத்ததுதான்,

முதிர்ந்து பருத்தமரமும்,கிளைபரப்பிஇலைகள்அடர்ந்து பூவும் பிஞ்சும் காயும் கனியுமாய் காட்சி தருகிற இன்மையும் இருமையுமாய் பட்டுத் தெரிகிறது அங்கு,

முகம் துடைத்த முந்தானையை மெலிதாய் அள்ளி இவன் வலது தோள் மீது போட்டுக் கொண்டு ”இப்பிடியே விடிய விடிய நின்னுக்கிட்டு பேசிக்கிட்டே இருக்கலாமா” என்றபோதுவாயிலிருந்து வெளிப்பட்டகாற்று தோள்படர்ந்திரு ந்த புடவையின் முனையை உள்ளிழுத்தும் வெளி விலக்கியுமாய்/

உள்ளிக்கும் போது ஒட்டிய பூ ஒன்று வெளி விடும்போது புடவையிலிருந்து கழண்டு கீழே விழுந்ததாய்/

அதைப்பின் தொடர்ந்து பல பூக்கள்/

விழுந்த பூவிற்கு காயமேதும் ஏற்பட்டுவிடுமோ என்கிற அவசரத்தில் அதை அள்ளி எடுக்க குனிந்த வேளை நல்லதொரு முகூர்த்தம் என எழுதிச்செல்கிற பொழுதுகள் இவனிலும் அவளிலுமாய்/

அள்ளிய பூக்களை ஆறத்தழுவி நெஞ்சோடணைத்து,அணைத்த பூ அத்தனை யையும்  ஒன்று விடாமல்  அவள்  மீது  செரிந்தால்  வீசுகிற  மணம்  எட்டுத் 
திக் குக்கும் காணாது என்கிறார்கள் உண்மையா எனக்கேட்ட நேரம் அவளின் தலையிலிருந்து கால்வரை பூவாபிஷேகம் செய்து விடலாம் போலிருக்கிறது தான்.

குளிப்பதுஇவனுக்குபிடித்திருக்கிறதுதான்,,குளியல் மிகவும் பிடித்த ஒன்றாய்,  பாத்ரூமிற்குள் போன நேரம் பக்கெட்,ஈய டப்பு என இரண் டிலும் நீர் நிறைந்தி ருந்தது,

“என்னஇது ஏன் இப்பிடி,ரெண்டுத்துலயும்,தலையத்தலைய தண்ணியப் புடிச்சி வச்சிருக்க ,அதான் குழாயத் தெறந்தா தண்ணி வரப்போகுது ஏன் இப்பிடி,,,? தொறந்தா அருவியாக்கொட்டுற தண்ணிக் கொழாயிக்குக்கீழ இந்த மாதிரி,,,, என வார்த்தைகளை முடிக்காமல் மெலிய சிரிப்புடன் பாத்ரூமிலி ருந்து எட்டிப் பார்த்த பொழுது ”போங்க, உள்ள போங்க மொதல்ல,கொஞ்சம் கூட ,,,ஒரு இது இல்லாம சீ,”,,,,என்றாள்,

”சீயாவது,,,தோவாவது,”,,என்றவாறு எட்டிபிடித்த கையை உருவிக்கொண்டு ஓடியவளை ”ஏய் ஏய் பாத்து டைல்ஸ் தரை தண்ணி கிண்ணி நின்னுச்சின்னா ஒண்ணும் தெரியாது,பாத்துப்போ” என்றவனை திரும்பி முறைத்தவளாய் ஏன் இந்தப்பாடு படுத்துறீங்க குளிச்சிட்டு வாங்க மொதல்ல,நீங்க இன்னும் குளிச் சிட்டு வந்து சாப்புட்டுட்டு தூங்கும் போது விடிஞ்சி போகும் விடிஞ்சி இன்னை க்கி ராத்திரி சிவ ராத்திரிதான். போங்க,என்றாள்.

“அது என்ன ராத்திரியாவது இருந்துட்டுப்போகட்டும்,வந்து கொஞ்சம் முதுக தேய்ச்சி விடேன்,,,,,என்கிற இவனின் சிணுங்கலுக்கு சும்மா கெடங்க சும்மா குளிச்சிவாங்க சட்டுன்னு ஆம்பள குளிக்கிற யெடத்துல பொம்பளைக்கு என்ன வேலை”,,,என்ற போது இவன் சிரித்த சிரிப்பின் அதிர்வில் அவளும் கலந்து கொள்கிறாள்.

குளிப்பது இவனுக்கு பிடித்தமானதாகவே இரவு மணி பணிரெண்டான போதி லும் கூட,,/

3 comments:

'பரிவை' சே.குமார் said...

அருமை அண்ணா...
ரசித்து வாசிக்க வைக்கும் எழுத்து உங்களோடது.

vimalanperali said...

வணக்கம் பரிவை சேக்குமார் அண்ணா,
நன்றியும் அன்பும் வருகைக்கும்,
கருத்துரைக்குமாய்,,/

vimalanperali said...

அன்பும் நன்றியும்/