4 Mar 2019

தொலை நகர் பிம்பங்கள்,,,,

பிடித்த மனிதர்கள் இருக்கிற இடம் நோக்கிச்செல்கிற போது கொஞ்சம் சந்தோ ஷமாகவும்,இசைவுற்றதாயும் ஆகித்தெரிகிறதாய் மனம்/

அது மனம் பிடித்த மனைவியான போதிலும் சரி,கைபிடிக்கப்போகிற காதலி யான போதிலும் சரி,

”மனம் பிடித்த மனைவி சரி,நானிருக்கேன்,,அதென்ன காதலி பெரிய காதலி, வேறஎங்கிட்டும்பதுக்கிவச்சிருக்கீங்களா”,,,,எனபொய்க்கோபம்காட்டி அடிக்கக் கை ஓங்குற மனைவியிடம் ”ஆமா நீ கூட எனக்கு காதலிதான், ஒன்னத் தான் பதுக்கி வச்சிருக்கேன் மனசுக்குள்ள,,” என்பான் கண்ணடித்துக் கொண்டே/

”காதலிச்சி கல்யாணம் பண்ணிக்கிட்டா மட்டும்தான் காதல் கல்யாணமா,,,? கல்யாணம் பண்ணிட்டு காதலிச்சாலும் அது காதல் கல்யாணம் மாதிரிதான்,.

”இன்னும் சொல்லப்போனா கல்யாணத்துக்கு முன்னாடி காதலிக்கிற காதலை விட கல்யாணத்துக்கு அப்புறமா காதலிக்கிற தம்பதிகளோட காதலுக்கு பலம் ஜாஸ்தி” என்பான்.

பெரும் தீற்றலாய் பறந்து பாவியிருக்கிற காலை நேரத்து இளம் மேகம் தன் னில் சூழ்க்கொண்ட நீலத்தையும்,வெண்மையும் கலந்து கட்டி காட்சிப் படுத்தி பிரசவிக்கிற சூரியனின் மென் கிரணக்கதிர்கள் பிடிவாதம் காட்டி வீட்டின் சமையலறை ஜன்னல் வழியாய் மனம் பிடித்த போக்கில் நுழைந்து தன் இருப்பை இருத்திக்கொள்கிற நேரம் மனம் பிடித்ததாய் ஆகித் தெரிகிறது தான் வேலைகளின் அவசரமும் அழுத்தமும் இறுக்குகிற போதும் கூட என்பாள் மனைவி.

சொல் புதிது,மனம் புதிது,வார்த்தைபுதிது எனச்சொல்லத்தோணா விட்டாலும் கூடஅவள் தருகிற ஒற்றை டம்ளர் தேநீரைஉறிஞ்சி கொண்டே சமையலறை மேடையில்அமர்ந்திருக்கிறசமயங்களில்அவள் பேசியவார்த்தைகளின் சொல் ஊன்றியகணங்கள் சமையலறை முழுவதுமாய்சுழட்டிப் போட்ட சோலிக ளாய் சிதறிக் கிடந்ததுதான்.

அது மனம் பிடித்த மனைவியான போதிலும் சரி,கைபிடிக்கப்போகிற காதலி யான போதிலும் சரி,

மனைவின்னா சரி,நானிருக்கேன்,அதென்ன காதலி பெரிய காதலி,,,,,எங்கிட் டும்பதுக்கி வச்சிருக்கீங்களா என பொய்க்கோபம் காட்டி அடிக்கக்கை ஓங்குற மனைவியிடம் ஆமா நீ கூட எனக்கு காதலிதான்,

காதலிச்சி கல்யாணம் பண்ணிக்கிட்டா மட்டும்தான் காதல் கல்யாணமா,,,? கல்யாணம் பண்ணிட்டு காதலிச்சாலும் அது காதல் கல்யாணம் மாதிரிதான்.

இன்னும் சொல்லப்போனா கல்யாணத்துக்கு முன்னாடி காதலிக்கிற காதலை விட கல்யாணத்துக்கு அப்புறமா காதலிக்கிற தம்பதிகளோட காதலுக்கு பலம் ஜாஸ்தி” என்பான்.

”ஆமா இப்பிடித்தான் சொல்லுவீங்க,தீடீர்ன்னு மிடில் ஏஜ் பிளவர் பாட்ட பாத் தேன்,பாட்டுக்கேட்டேன்,இசையிலமயங்குனேன்,தென்றல்காத்து,வெடிச்சி மலர்ந்தபூவு,அத்துவானவெளி,,அருவிஇயற்கை,அள்ளிக்கட்டமுடியாநெனைப்புன்னு இன்னும்இன்னும்மா மிதந்துக்கிட்டுப் போகும்போது பைக்கக் கொண்டு போயி ரோட்டோர போஸ்ட்மரத்துல இடிச்சிட்டேன்னு என்னனென்னமோ சொல்லிக் கிட்டு வந்து நிப்பீங்க,

நானும் பல சமயங்கள அட கிறுக்கு மனுசா அப்பிடியெல்லாம் இருக்காதை யான்னு சொன்ன்னாலும் கூட கேக்காம திரும்பத்திரும்ப இப்பிடித்தான் வந்து நிக்குறீங்க,ஒங்களப்பத்தித் தெரியாத எனக்கு என மனைவி சொல்கிற சமயங் களில் ,,

“அப்பிடித்தான் யெளவட்டங்களுக்கு நடக்கும் இதெல்லாம் பெரிசா எடுத்து க்கக் கூடாது நீயி”,,,என்பான்.

”எங்கமூஞ்சத்திருப்புங்க பாப்போம்.யெளவட்டமாமுல்ல ,யெளவட்டம், தலை யில கறுப்புமுடின்னு இன்னும் ஒண்ணு ரெண்டுதான் மிச்சம் இருக்கு,மூத்தவ கல்யாண வயசுல நிக்குறா,இந்த லட்சணத்துல யெளவட்டமாமுல்ல யெள வட்டம், போறீங்களா இல்லையா அங்கிட்டு என்கிற அவளின் உச்சஸ்தாயி லான குரலுக்கு சிரிப்பை காணிக்கையாக்கி விட்டுமடங்கிப் போவான்/

அப்படியான சமயங்களில் “வயசாகுறது ஒடம்புக்குத்தான் பாத்துக்க,மனசுக்கு இல்ல தெரிஞ்சிக்க,”என்றான் முகத்தை அடைத்திருந்த மூன்று நாள் தாடியை சொரிந்து கொண்டே/

என்ன இது புதுசா எப்பவும் ரோமக்கட்டை தட்டவிடாம மழுமழுன்னு ஷேவி ங்கில வந்து நிப்பீங்க,இப்ப என்னாச்சு மூணு நாளுநாள் தாடியோட,சகிக்கல இப்ப பையங்க வளத்துக்கிட்டுத்திரியிற மாதிரி பேஷன்னு சொல்லிக்கிட்டு திரியாம போயி ஷேவிங் பண்ணுற வழியப்பாருங்க, ஆமா, என்பவளைப் பார் த்து,,,,,,,,

ஒரு எரிச்சல்ல பண்ணாம விட்டுட்டேன் அவ்வளவுதானே தவிர்த்து பெரிசா ஒண்ணும் இல்ல ,தெனசரி இது ஒரு வேலையா ரேசரும் கையுமா நிக்க வேண்டி இருக்கு.அதான் விட்டுட்டேன்,

”அதான பாத்தேன்,தாடியோட படம் எடுத்து பேஸ்புக்,அது இதுன்னு போட்டுக் கிட்டு திரியப்போறீங்களாக்குமுன்னு நெனைச்சேன்,

“இப்பயெல்லாம் அதுதான பேஷனா போச்சி ஒலகத்துல,பக்கத்துலயாரு வந்து நின்னாலும்தெரியிறதுல்ல,பஸ்ஸீலபோகும்போதுவரும்போதும்,பொதுயெடத் துல நிக்கும் போதும், போனுபோனு போனுதான்,வீட்டுக்கு சொந்தக்காரங்க ளோ,அக்கம் பக்கமோ நண்பர்களோ யாரும்வந்தாலும் சரி என்னன்னு கூட கேக்கத்தோணாத அளவுக்குஆகிப் போச்சி அப்பிடித்தான் பழகியும் போனீங்க, ஒரு வேலை அது போல ஆகிப்போறதுக்கு முயற்சி பண்ணுறீங்களோன்னு நெனைச்சேன்” என்றாள்,

அப்பிடியே முயற்சி பண்ணுனாலும் என்ன தப்புங்குறேன்,எனகண்ணடிக்கிற இவனைப்பார்த்து,,

இப்பிடியே பேசிக்கிட்டேதிரிங்க ஒருநாளுஇல்லைன்னா,ஒருநாளுசட்டையக் கிழிச்சிட்டு ரோட்டுல அலையப்போறீங்க,அப்ப நாந்தான் மொதக்கல்லு எறி வேன் ஆமா,,,என்பாள் சிரித்துக்கொண்டே,.,,/

”எறிவ,எறிவ,எறிய மாட்டாம எறிஞ்ச கைய ஒடிச்சி அடுப்புல வச்சிருவேன் ஆமா,தெரிஞ்சிக்க”,,,,என்கிற இவன் அருகில் அக்கம் பக்கம் பார்த்தவளாய் கன்னத்தில் செல்லமாக இடித்து விட்டும், ஒரு மென் முத்தமுட்டுவிட்டுமாய் ஓடி விடுவாள்.

ஓடுகிற ஓட்டத்திலும் ,நடக்கிற நடையிலுமாய் பொதிந்திருக்கிற லயமும், அழகும் காணக்கிடைக்கிறபாக்கியம் இது போலான தருணங்களில் சட்டெனக் கிடைத்துப் போவதுண்டு சடுதியில்/

அது போலான தருணங்களில் மென் கனம் சுமந்தும் இனிமை காத்துமாய் மனதில் சூழ் கொள்ளும் நினைவுகள் தருணங்களின் பொழுதுகளை அழகாக்கி வர்ணம் பூசி விடுவதுண்டுதான்.

ஊலலலா,ஊலலலா,,,,,என மனம் களி கொள்கிற துள்ளல்களின் வரணம் கொண்ட நேரம் புஷ்பித்த நினைவுகள் ,,என இன்னும் இன்னுமாய் மனம் சூழ் கட்டிக்கொண்டு போகும்தான்.

அந்த வர்ணமே அவர்களுக்குள்ளான வாழ்வின் நாட்களை இந்த இருபத்தை ந்து வருடங்களும் பெரிய அளவிளான கசப்பேதும் இல்லாமல் நகர்த்திக் கொ ண்டு வந்திருக்கிறது,

அதுஎப்படி சாத்தியமாகிறது,இல்லை கைகூடுகிறது இல்லை உங்களுக்கு உங் களுக்கு மட்டும்தான் அப்படியா இல்லை மற்ற எல்லா வீடுகளிலும் அப்படித் தானா,,,?இல்லையென்றால் அப்படியெல்லாம் இருக்க எங்கேனும் சிறப்பாக பயிற்சி ஏதேனும் எடுத்தீர்களா என இவனிடம் கேட்கிற சமயங்களில்…..

”இதுக்கு எதுக்கு பயிற்சி அது இதுன்னுல்லாம் வேஸ்டா பண்ணிக்கிட்டு,,,,,, முப்பதுநாளைக்குமோகத்தையும்,அறுபதுநாளைக்குஆசையையும்தத்துக்குடுத்து றாம கட்டிக்காப்பாத்தி மடியில கட்டிக்கிட்டு திரிஞ்சமுன்னா சாத்தியமாகும் எல்லாமும்,அத விட்டுட்டு எல்லாம் முடிஞ்சி போச்சின்னு இறுத்திப்புடிச்சி வடிகட்டிட்ட மன நிலையோட திரிஞ்சா ஒரு வீட்டுக்குள்ள ரெண்டு குடும் பமா வாழ்றதுன்னுதான் ஆகிப்போகும்”.என்பான்.

ஆனால் எல்லா நேரங்களிலும் அப்படியெல்லாம் எதிர்பார்த்துப்போய் விட முடிவதில்லை/ போனாலும் பெரிதாய் பலன் ஒன்றும் கிடைத்து விடப் போவ தில்லை, போனது போனது தான் வந்தது வந்ததுதான்.

பஜாரில் காய்கறி வாங்கிக்கொண்டு கிளம்பும் பொழுது நல்ல பசி ,மணியைப் பார்க்கிறான்,இரண்டு ஐம்பது ஆகி விட்டது,இரண்டு ஐம்பதா இல்லை ,ஒன்று ஐம்பதா என உற்றுப்பார்த்து உறுதி செய்து கொண்ட போது இரண்டு ஐம்பதே வாஸ்தவம் என உறுதி செய்துச்சொன்னது கடிகாரம்.

கையில் வாட்ச் கட்டி மிகவும் நாட்களாகிபோனது,வருடங்களும் நாட்களில் அடங்கிப்போவதுதானே,,?இரண்டுவருடங்களாவது இருக்கும்,கையில் வாட்ச் கட்டி/

இருபத்தைந்தாவது ஆண்டு நிறைவு நாளை ஒட்டி கம்பெனியில் கொடுத்த கடிகாரம்,

கம்பெனியின் லோகோ பதித்து வட்ட வடிவ டயல் கொண்ட கடிகாரத்தை வாங்கிய மறு நாளிலிருந்து கைச்செயினை கழட்டி வைத்து விட்டு லெதரில் வார் போட்டுக் கொண்டான்,

அதுதான்சௌகரியமாக இருந்தது,பார்ப்பதற்குகொஞ்சம் சிம்பிளாகவும் அழகு தாங்கியுமாய்/

அப்படி இருப்பதை விடுத்து வேறு ஒன்றிற்கு ஏன் முயற்சி பண்ண வேண்டும், பண்ணுகிற முயற்சிகள் வீண்பட்டுப்போனால் அப்புறம்எல்லாமும்சங்கடம்தா னே,,?.என்கிற முடிவில் பாய் கடையில் போன வருடம் பார்த்த வாட்சை வா ங்கக் கூட இல்லை,

மாடனாக இருக்கிறதே,வாங்கலாம் எனக்கூட நினைத்தான்.

ஆனால் அன்று வாங்காத வாட்ச் விடுத்து கைவசம் இருந்த வாட்சையும் இப்பொழுது வரை கட்டவில்லை. செல்போனில் மணிபார்த்துக் கொள்கிறான்.

சமயத்தில் அதில் மணி பார்ப்பதிலும் கூட சிக்கல் வந்து விடுகிறது. காலை யில்முழு அளவிற்கு சார்ஜ் ஏற்றிக்கொண்டு போனால்மாலை வரைகூட நிற்க வில்லை.மாலை யாருடனாவது பேச வேண்டும் இல்லை,மணி பார்க்க வேண் டுமென்றால்செல்போன்ஆப்ஆகியிருக்கும்,சரிஅலுவலகத்தில்சார்ஜ் போட்டுக் கொள்ளலாம் என நினைக்கிற நேரம் அலுவலக நேரம் முடிந்து இவன் பஸ் ஸேற வேண்டிய நேரம் வந்து விடும்.

அலுவலகத்தில் இருந்து சார்ஜ் போட்டுக்கொண்டு வரலாம் என நினைத்தா லும்கூடஅதில் ஒரு கால் மணிநேரம் முதல்அரை மணி வரைஆகிப்போகும்.

அந்த அரை மணி தாமதம் பஸ்ஸேறி வீடு வந்து சேரும் போது இரவு எட்டு மணிக்கு கொண்டு வந்து நிறுத்தி விடுவதும் உண்டு/

இருந்தாலும் இன்று வரை அவன் செல்போனில்தான் மணி பார்த்துக் கொள் கிறான்.

அப்படிப்பார்த்த மணி சரிதானா என பார்த்த பொழுது காய்கறிகடையில் இருந் தான் ,

காய்கறிக்கடைக்கு வருவதற்கு முன்னாய் வெங்காயம் வாங்குற கடையில் இரண்டு கிலோ பல்லாரி வெங்காயத்திற்கு சொல்லிவிட்டு போட்டு வையுங் கள் பஜாருக்குள் போய் வந்து வாங்கிக்கொள்கிறேன் என பையைக் கொடுத்து விட்டு வந்திருந்தான்.

வழக்கமாக வாங்குற கடைதான்,போனதும் சொல்லி விடுவார் கடைக்காரர் ,சின்ன வெங்காயம் இந்த விலை ,பெரிய வெங்காயம் இந்த விலை என/

வியாபாரம் தவிர்த்து கொஞ்சம் பேசுவார், ஊர் பற்றி கல்வி பற்றி மருத்துவம் பற்றி உடல் பற்றி என எல்லாமும் பேசுவார்.

அவரிடம் வெங்காயம் போட்டு வைக்கச்சொல்லி பையைக்கொடுத்து விட்டு காய்கறிக்கடைக்கு வந்து நினைத்த காய்களை வாங்கிக்கொண்டு தேங்காய்க் கடைக்கு வந்து இரண்டு தேங்காய்களை வாங்கிக்கொண்டு திரும்பவுமாய் வெங்காயக் கடைக்குப்போய் போட்டு வைக்கச்சொன்ன வெங்காயத்தை வாங் கிக் கொண்டு கிளம்பினான்.

இதற்கு ஏன் இத்தனை தடவை போய் வர வேண்டும்,போகும் போதே வெங் காயத்தைவாங்கிக்கொண்டு தேங்காயையும்வாங்கிக்கொண்டுபோயிருந்தால் காய்கறி வாங்கும் கடை போகிற வழிதானே ,அப்படியே காய்கறிக் கடைக்குப் போய் விட்டு வீட்டிற்குப்போயிருக்கலாம்தான்,

ஆனால் இவனுக்கு அது பிடிக்கவில்லைதான்,சும்மாக்காச்சுமாய் இரு சக்கர வாகனத்தில் அங்குமிங்குமாய் போய் வருவதில் கொஞ்சம் இஷ்டம். கொஞ் சம் பிடிக்கும் கூட,

உடல் போன போக்கிலும் மனம் சொல்கிற திசையிலுமாய் சென்று வருவான்.

போகிற போக்கிலும்செல்கிற திசையிலும் பார்க்கிற மக்கள்,ஊர்,தேங்காய்க் கடைஅதன்ஓனர் உட்கார்ந்த இடத்திலிருந்தே அவர்தேங்காய்களை எடுத்துக் கொடுப்பதும் எடுத்துக்கொடுக்கையில் அவர்அணிந்திருக்கிறபேண்ட் சட்டை முழுவதும் தேங்காய் நார்களாய் சிதறிக்கிடப்பதும், காய்கறிக்கடைக்காரர் வீங்கிப்போயிருக்கும் இடது கால் மணிக்கட்டினருகே தடிமனாய் கட்டி வைத் திருக்கும் கருப்புக்கயிறும் ,வெங்காயக்கடைக்காரரின் மனம் கலக்கிற பேச் சையும் சுமந்தவாறே இவன் செலுத்துதலுக்கு உட்பட்டு செல்கிற இரு சக்கர வாகனம் செல்கிற திசையெல்லாம் இவன் ஆளுமைக்குட்பட்டே சென்றவாறி ப்பது இவனுக்கு மிகவும் பிடிக்கும்,

ஓய்வுற்றிருக்கிற நேரங்களிலும்,சரி ஏதாவது வேலையாக சென்றிருக்கிற நேரங்களிலும் சரி இரு சக்கர வாகனத்தை கொஞ்சமாய் எட்டி ஓட்டி இலக்கி ல்லாமல் போய் வருவது இவனுக்கு கொஞ்சம் பிடித்திருந்ததாய்.

இரு சக்கர வாகனத்தில் காய்கறிகடைக்கும்,வெங்காயக்கடைக்கும், தேங்கா ய்க் கடைக்குமாய் போய் விட்டு திரும்பும் போது மிகவும் பசிக்க ஆரம்பித்து விட்டது,

சரி இனி வீட்டிற்குப்போய் சாப்பிடுவதற்கு நேரமாகிப்போகலாம்,இப்பொழுதே பசி வயிற்றைக்கிள்ளுகிறது,

இனியும் தாமதிக்கக்கூடாது என தூத்துக்குடி ரோட்டில் இருக்கிற கடைக்குச் செல்கிறான்,

அதுதான் இவனுக்கு மிகவும் பிடித்த கடை,

வேறு எதற்காக இல்லையானாலும் கூட இவன் போனதும் என்ன வேணும் ஏது வேணும் என்கிற கடைக்காரரின் மனம் தொட்ட பேச்சிற்காவாது இவன் அந்தக்கடைக்குப்போவதையே வழக்கமாக வைத்திருந்தான்.

பிடித்த மனிதர்கள் இருக்கிற இடம் நோக்கிச்செல்கிற போது கொஞ்சம் சந்தோஷமாகவும்,இசைவுற்றதாயும் ஆகித்தெரிகிறதாய் மனம்/

8 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

முடிவில் சொன்னது உண்மை...

ஸ்ரீராம். said...

இந்தக் காலத்தில் மனம் தொடுகிற பேச்சு அபூர்வம்தான்.

Thulasidharan V Thillaiakathu said...

”மனம் பிடித்த மனைவி சரி,நானிருக்கேன்,,அதென்ன காதலி பெரிய காதலி, வேற எங்கிட்டும் பதுக்கி வச்சிருக்கீங்களா”,,,,என பொய்க்கோபம் அடிக்கக்கை ஓங்குற மனைவியிடம் ”ஆமா நீ கூட எனக்கு காதலிதான்,ஒன்னத்தான் பதுக் கி வச்சிருக்கேன் மனசுக்குள்ள,,” என்பான் கண்ணடித்துக்கொண்டே/

”காதலிச்சி கல்யாணம் பண்ணிக்கிட்டா மட்டும்தான் காதல் கல்யாணமா,,,? கல்யாணம் பண்ணிட்டு காதலிச்சாலும் அது காதல் கல்யாணம் மாதிரிதான்,.//

ரசித்த வரிகள் சகோ..

கீதா

Thulasidharan V Thillaiakathu said...

வேறு எதற்காக இல்லையானாலும் கூட இவன் போனதும் என்ன வேணும் ஏது வேணும் என்கிற கடைக்காரரின் மனம் தொட்ட பேச்சிற்காவாது இவன் அந்தக்கடைக்குப்போவதையே வழக்கமாக வைத்திருந்தான். //

இது ஆம் பழக்கமான கடை என்பதை விட அவர்கள் நம்மிடம் பேசும் விதம் எல்லாம் நம்மை அவர்களிடம் ஈர்க்கும் தான்...இது எல்லா மனிதர்களுக்கும் பொருந்தும். இந்த மனம் தொடுகின்ற பேச்சு என்பது ரொம்பவே அபூர்வம்...

அருமையா இருக்கு...இலக்கிய நயத்துடன்

கீதா

vimalanperali said...

வணக்கம் சார்,
நன்றி தங்களது கருத்துரைக்கும்,வருகைக்குமாய்,
சொல்லிச்செல்கிற முடிவுகள் எதுவாயினும் கூட
வலிமை தாங்கிய ஒன்றாய் அமைந்து போவது
பதிவிற்கு பலமூட்டுகிறதுதான்.

vimalanperali said...

வணக்கம் சார்,நன்றியும் அன்பும்.
முளைத்துத்தெரிகிற அபூர்வங்கள் இந்தக்காலம் என்ன
அந்தக்காலம் என்ன,எல்லாக்காலத்திலுமாய் இருந்துகொண்டே/

vimalanperali said...

அன்பும் மனம் நிறைந்த பிரியமும்/
திசைகள் அறிவிக்கிற சொல்லும் செயலும்
கதையாகும் பொழுது நன்றாக அமைவதுண்டு
எனச்சொல்வார்கள்.
அது போல் படித்தகதையை விலாவாரியாய்
எடுத்துரைத்து விமர்சனம் செய்வது இனிதிலும் இனிது,
நன்றி வணக்கம்/

vimalanperali said...

நன்றியும் அன்பும் கை கோர்த்த பிரியம்/