8 Feb 2020

குமிழிக்காத்து,,,,,சடுதியில் தெரிந்த முகத்தை உற்றுப்பார்க்கையில் வெளிப்பட்டவர் தர்மராய் இருக்கிறார், அவனது ஊர்க்காரர் என்பது தவிர்த்து வேறதிகமான பழக்கம் ஏதும் இல்லாதவர்.இவன் மீது அளவற்ற பிரியமும் மதிப்பு வைத் திருப்பவர்.

அப்பாதாத்தா காலத்து மரியாதையும் கட்டிக்காப்பாத்திவந்த மதிப்பும் இவன் மீதும் தொடர்ந்தது.

போகிற போக்கில் வேகமாக கடக்கையில் பிடிபடவில்லை இன்னார் என/ கொஞ்சம் நிறுத்தி பிரேக்கை கைக்குள் கொண்டு வந்து பின் உற்று நோக்கு கையில் அவராய் வரையப்பட்டிருந்தார்,

வெயில் பரந்திருந்த ஒருமதியம்,ஒரு மணிக்கு நெருக்கி இருக்கலாம். வாட்ச் கட்டுகிற பழக்கம் விட்டுப்போய் ஒரு வருடத்திற்கும் மேலாகிப் போனது,

பரமசிவம்அண்ணன்கூடக்கேட்டார்.”ஏன் இப்பிடிஇருக்குற சிம்பிளா இருக்கு றேங் குற பேர்ல வாட்ச்கூட கட்டலையின்னா எப்பிடி,,,? நல்லதா ஒரு பேண்ட், சர்ட், கையில பிரேஸ்லெட், மோதிரம்,,,, இதெல்லாம் நீ எப்பயும் கூட போட வேணாம், ஏதாவது கல்யாணம் காச்சி,விஷேசமுன்னு போற நாட்கள்ல யாவது போட்டுக்கிறலாமுல்ல என்பார்,

இவன் மீது சிறிது அக்கறை உள்ளவர், குருத்தாய் முளைத்தெழுந்ததிலி ருந்து பார்த்துவருபவர்.

இவனதுஅசைவு,எண்ணம்,நடப்பு,பழக்கம்,,எல்லாம்தெரிந்தவர்,அவர்எப்பொழுது இதைக்கவனித்தார், எப்படி அவதானித்தார்,,,,,தெரியவில்லை.

அவரைப் பார்த்து மிகவும் நாட்களாகிப்போனது,மல்லிகா அக்கா வீட்டு திருமணத்தன்று பார்த்தது,பந்தியிலிருந்து வெளிவரும்போது பார்த்தவர் சிறிது நேரம் பேசினார்,

வீடு,குடும்பம்,பிள்ளைகள்,அவர்களின்படிப்பு,வேலை,வேலை பார்க்கிற ஊர்,,, என எல்லாம் விசாரித்தார்,பேசிய பேச்சிலிருந்து சிறிது நூற்தெடுத்து பாவு முக்கி சாயம் சேர்த்து கொஞ்சம் சொல்லுவார். சமயத்தில் அதுவும் சொல்லாமல் மனதை ஊடுருவிப் பார்ப்பது போல மௌனமான பார்வை யுடன்  நகன்று விடுவார்,

அப்படி நகர்பவர் எப்படி இதையெல்லாம் கவனித்தார் எனத் தெரியவி ல்லை,நீ ஓடிக்கிட்டு திரியிர நிக்கக் கூடநேரமில்லாம, பாக்கவும் கேக்கவும் சந்தோ ஷமா இருந்தாலும் கூட ஒருபக்கம் வருத்தமாவும் இருக்கு,

”ஏங் மக கல்யாணத்துக்குக்கூட லேட்டாத்தான் வந்த ஓங் சம்சாரத்தகூட்டிக் கிட்டு/ கேட்டதுக்கு என்னனென்னெமோ வேலையின்னு சொன்ன, அங்க போனேன் ,இங்க போனேன்னு சொன்ன,ஏங் மனசு அத ஒத்துக்காட்டிகூட ஒனக்காக அதச் சரின்னு ஏத்துக்கிட்டு தலையாடிக்கிட்டேன். ஆனா நீ என்ன மோ எனக்காக கல்யாணத்துக்கு வந்தது போல நடந்துக்கிட்ட,

நம்ம சொந்தக்காரங்கள்லாம் காலையில ஆறு மணிக்கும் அஞ்சரை மணிக் குமா வந்து சேந்துட்டாங்க,நீ ஒருத்தன்தான் நடக்குறது ,என்னமோ ஊரார் வீட்டு கல்யாணம் மாதிரி அவ்வளவு நேரம் கழிச்சி வந்த”என்றவரை ஏறிட்டவன் பெரியவர் பேசும் போது கம்முன்னுஇருக்கணும் என மனதிற் க்கு சொல்லி வைத்தான்,

“நீஅன்னைக்கிகல்யாணத்துக்கு வராததுனாலகல்யாணம் நின்னு போகப் போயிறதில்லை,ஆனாஓடிக்கிட்டேத்திரியிரேன்ங்குறபேர்லசொந்தபந்தங்கல விட்டுறாத,கொஞ்சம்சூதானமாஇருந்துக்கண்ணுதான்சொல்லவந்தேன்,எனக்குத் தெரியும் நீ எப்பயும் தப்புக்குத்தொணைப் போறவனில்லைன்னு , ஆனா அதுல இருந்து தப்பிக்கக் கூடத் தெரியாத வெள்ளந்திப்பய நீ. உக்காருறதுக்கு நேரமில்லாம ஆகிப்போகாத, அவுங்களுக்கு ஒன்னைய விட்டா கூப்புடுறதுக் கு நெறைய ஆட்கள் இருக்காங்க,ஆனா ஓங் குடும்பத்துக்கு நீ தாண்டா.என வாய் ஓயாமலும் ஓரக்கண்ணால் பார்த்த படியுமாய் சொன்ன அண்ணனின் பேச்சையும் நினைவையும் சுற்ற வைத்து வைக்கிறதாய் வாட்சின் முட்கள்/

பஜாருக்குப்போய் திரும்பி வந்துகொண்டிருந்தவேளைபாரத விலாஸிற்கு எதிர்த்தாற் போல் பார்க்கும் படியாகிப்போகிறது,

பாரத விலாஸ் சைவப் பிரியர்களுக்கு என இல்லை ,அனைவருக்கும் ஏற்ற ஹோட்டலாய்/

என்ன சிறிது கூட அல்ல மிகவும் பழமை தாங்கி காட்சிப்படும்.அங்கு கிடைக்கிற ரவா தோசையும் பில்டர் காபியும் வேறெங்கும் கிடைக்காது என்பது அங்கு சாப்பிடச்செல்ப்வர்களது அபிப்ராயம்.

அது போல செந்தமிழ் தேன் மொழியாலை மருந்துக்குக் கூட வேறெங் குமாய் கேட்டு விட முடியாது,

சிறிது நாட்கள் முன்புவரை முருகன் கோவில் சந்தில் பழைய பாடல்கள் கேட்க வாய்க்கும்,ஆனால் இப்பொழுதைக்கு இப்பொழுதெல்லாம் கேட்க முடியவில்லை,

“எல்லாமே ரிக்கார்ட்தான் தம்பி,நான் சவுண்ட சர்வீஸ் வச்சிருந்தேன் , இங்க யிருந்து சுத்தியிருக்குற பட்டி தொட்டி வரைக்கும் நம்ம சவுண்டு சர்வீஸ் தான்,பாத்துக்கங்க,என்ன இப்ப மாதிரியெல்லாம் அப்பம் எதுகெடு த்தாலும் மைக் செட்டெல்லாம் வைக்க முடியாது. ஆளு பேரு அம்புன்னு சொல்லுவா ங்கல்ல, அதபொறுத்துதான் அமையும் ,வசதி படைச்சவுங்க தான் இதப்பத்தி யோசிப்பாங்க, இதுக்காக ஆகுற செலவு ஒண்ணும் பெரிசா வந்துறப் போறதில் லைன்னாலும்கூடஇது என்னடா இது,ரேடியோ செட்டக் கொண்டாந்து வீட்டு முன்னாடி கட்டிக்கிட்டு,இப்ப என்ன கோயில் திருவிழாவா நடக்குதுங்குற பேச்சில மைக் செட்ட அமுக்கிருவாங்க, அதத் தாண்டி அவுங்க யோசிக்கறதும் இல்ல,என்பார்,

“நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு ஓடு ராஜா” என பிள்ளையார் சுழியிட்டு சுழலஆரம்பிக்கிறபாடல்”தெய்வமேதெய்வமேநன்றி சொல்வேன் தெய்வமே,,” என முற்றுப் புள்ளியிட்டுநிற்கும்,முதல்நாள் அப்படியென்றால் மறுநாள்” ராஜாவின் பார்வை ராணியின் பக்கம்” என ஆரம்பித்து ”காவியமா நெஞ்சில் ஓவியமா” என்பதில் கொண்டு வந்து முடிப்பார்,

என்றாவது ஒரு நாளில் அல்லது பஜாருக்குச்செல்கிற தினம் தோறுமாய் அந்த சந்தைக்கடக்க நேர்ந்தால் அல்லது அந்த வழியாய் செல்ல நேர்ந்தால் அருகிலிருக்கிற டீக்கடையில் நின்று விடுவான் பாடல்களைக்கேட்க,/

டி,எம்,எஸ்ஸீம், சிதம்பரம் ஜெயராமனும் ,திருச்சி லோகநாதனும் ஜிக்கி யும் சுசிலா அம்மாவும் இன்னமும் பெயர் தெரியாத பாடகர்களும் பாடகிக ளுமாய் இவனது அருகில் வந்து மனதை நிறைத்து விட்டுச்செல்கிற நேரங்க ளில் அந்த பாடல்களுக்காய் வெண் திரையில் ஓடிய நாயகனும் நாயகிகளும் அங்கு கானல் காட்சிகளாய் வந்து செல்வது தவிர்க்க இயலாமல் போய் விடுவது ண்டு,

பாடல்களுக்கும் இசைக்கும் அப்படி ஒரு தனி சக்தி உண்டுதான் போலும், திரையில் பார்த்தவர்களையும் ,கேட்டவைகளையும் தரையில் கண்முன்னே கொண்டு வந்து நிறுத்திச்செல்கிற மாயகணம் அது,

இவனுக்கு தெரிந்தும் இவன் அறிந்தும் பள்ளி வாசல் தெரு வழியாய் நடந்து படிக்கச்செல்கிற காலங்களில் தர்காவை அதிசமாய் பார்த்ததுண்டு, உயர்ந்து நிற்கிற தர்காவையும் அதன் மீது பூசப்பட்டிருக்கிற வர்ணத்தையும் மேலே பறக்கிற கொடியையும்,அதை உரசிப்பரக்கிற புறாக்களையும், கட்டி டங்களில் படரும் அதன் நிழலையும் இவன் அதிசயமாய் பார்த்ததுண்டு,

நோன்புநாட்களில் பள்ளி நண்பர்கள் பக்கத்துபெஞ்ச்பையன்கள் வாங்கி வந்து தருகிற நோன்புக்கஞ்சி குடிக்கிற கணம் தாண்டி மனதிற்குள்ளுமாய் இனிக்கும்தான்,

பள்ளிமுடித்துவந்தமாலைவேளைகளில்வரிசையில்நின்றுகஞ்சி வாங்கிச் சென்ற தினங்களும் உண்டு,அப்படி கஞ்சி வாங்கச்சென்ற ஒரு மாலை வேளையாய் பக்கத்து பெஞ்சு மஞ்சுவுடன் வந்து கொண்டிருந்த ஒரு மழை நாளில் தர்கா தாண்டி தெரு முக்கிலிருந்த டீக்கடையில் ஒருவர் சினிமா வசனம் பேசிக் கொண்டிருந்தார்,

இவனுக்கு அதை நின்றுவேடிக்கை பார்க்க ஆசை, வசனம் கேட்க ஆசை, கூட நிற்கிற மஞ்சு அரித்துக் கொண்டிருந்தாள் வீட்டிற்குப்போக வேண்டும் என/

அவளை அனுப்பி விட்டு கையில் இருந்த காசில் ஒரு வடையை வாங்கி தின்று கொண்டே அவர் பேசுகிற வசனத்தை கேட்டுக்கொண்டிருந்தான், ”வானம் பொழிகிறது, பூமி விளைகிறது”,,என ஆரம்பித்து வீர பாண்டிய கட்ட பொம்மன் சிவாஜியையும் சினிமாவையும் கண் முன்னே கொண்டு வந்து நிறுத்தினார்,

ஏற்ற இறக்கங்களோடும்,உடல் மொழியுடனும் மூச்சுவாங்கவுமாய் அவர் பேசுகிற வசனங்களில் அவரது கண்ணக்கதுப்பின் துடிப்பும்,அவரது கை கால்களின் அசைவும் அவரது மதிப்பிட முடியாத உணர்வும் சேர்ந்து கலந்தி ருக்கும்,

அவர்வசனம்பேசிச்செல்கிற வேளைகளில்அவருக்குள்ளாய் குடி கொண்டிருப் பவர் சிரிப்பார்,கோபப்படுவார்,கர்ஜிப்பார்,முறைப்பார், சிலிர்ப்பார், அவரது சிலிர்ப்பிலும், கோபத்திலும்,கர்ஜிப்பிலும் ஒரு முழு நீள அர்த்தம் பட்டுத் தெரி வதுண்டு,அரை மணி ஒரு மணி என அவர் பேசுகிற வசனம் கேட்டு விட்டு வீட்டிற்குசெல்லலேட்டாகிப்போகும் நாட்களில் அம்மாவின் கைகள் இவன் முதுகில் அழுந்தப்பதிவதுண்டு. அன்றிலிருந்து இரண்டு தினங்கள் பள்ளி செல்வது கட்டாகிப் போகும்.
 ஆறு மாதங்களுக்கு முன்னால் என நினைக்கிறான். பஜார் போய் விட்டுத் திரும்பிக்கொண்டிருந்தஒருமாலைவேளை,அலுவலகத்திலிருந்து வீட்டிற்குச் செல்லாமல் பஜாருக்கு வந்து விட்டிருந்தான்,

வீட்டிற்குச் சென்றால்டீக்குடிக்கசிறிது நேரம் உட்கார டீ,வி பார்க்க எனவும் பிடித்துவைத்துக்கொள்கிறது வீட்டிற்கும் கட்டுப்பட்டே ஆகவேண்டி இருக்கி றது,

வெறும் செங்கலும் சிமெண்டும் மட்டுமே வீடு,என்கிற மேல் பூச்சு தாண்டி ரத்தமும் சதையுமானமனித உறவுகள் பூத்துக்குலுங்குகிற செடியா க வும் மலர்ந்து சிரிக்கிற பூவாகவும்,,,இருக்கக்கண்டதுண்டு, அதனால்தான் வீட்டால் இவ்வளவு ஈர்க்கப் படுகிறான்இவன்,

”அப்படியே இருங்க அசையாம,,என்ன இது வெள்ளை முடி கூடிக்கிட்டே போகுதுஐயாவுக்கு,,” என்கிற மனைவியின் கேலிப் பேச்சிற்கு,சிரித்துக் கொண் டே கண்ணடிப்பான்,

”மொதல்லஇந்ததெத்துப்பல்லையும்,கண்ணுரெண்டையும்நோண்டுனாத்தான் சும்மாக்கெடப்பீங்க நீங்க, இந்த பார்வையையும் சிரிப்பையும் வச்சிக்கிட்டுத் தான மயக்குறீங்க மனச,,,,/

“நான் வாட்டுக்கு செவனேன்னு சமையக்கட்டுக்குள்ள கெடந்தவள இழுத்து வச்சி வம்பு பேசிக்கிட்டு இப்ப எதுவும் தெரியாத பப்பா மாதிரி,,,,,,,ஆத்தாடி கொஞ்சம் ஆபத்தான ஆளுதான் நீங்க,,,,என நீட்டி முழக் கியவளாயும் விரல் மடக்கி கொமட்டில் குத்தியவளாயும் சென்றவளின் பின் சென்றவன் தண்ணீர் குடித்து விட்டு வருவான்,

“இந்த வயசுல இவ்வளவு தாகத்தோட திரியிறதுநல்லதில்லஆமா சொல்லீட் டேன்,என்பவளை அப்படியே அள்ளிக் கொண்டு போய் விடலாம் போலத் தோணும்,

“அட பைத்தியகார மனுசா, நீங்க ஏங் முதுகுக்குப்பின்னால நின்னாலும் ஒங்க மனசுஏங் கண்ணுக்கு முன்னாடி நிக்குது,அப்பிடி நெனைக்கவெல்லாம் வேணாம், வெலைஞ்சி நிக்கிற வெள்ளாமை ஒங்களுக்குத்தான ,இத அறுவடை பண்ண யாரக்கேக்கணும்,போவீங்களாசோலியப்பாத்துக்கிட்டு,, ,,அப்பிடியேஅள்ளுவாங்களாம்,,,கொண்டுபோவாங்களாம்,,எதுக்குப்போயி இத்தன,,,,எனச் சிரிக்கிறவளைக்காண இரண்டு கண்கள் போதாதுதான்,

காய்கறிகளை வாங்கிக்கொண்டு திரும்பி வந்து கொண்டிருந்த வேளையில் எதிர்ப் பட்ட நண்பர் மிகவும் சந்தோஷப்பட்டு வரவேற்றார்,சந்தித்து நீண்ட நாட்கள் ஆகிப்போனதன் குறையைத்தீர்க்க வாருங்கள் போய் சாப்பிடலாம் என்றவராய் ஹோட்டலுக்குள் கூப்பிட்டுக்கொண்டு போனார்,

அவர் அம்புக் குறியிட்ட கடை பாரத விலாஸாய் இருந்தது,பொதுவாக ஒரப்பு சரப்பாய் சாப்பிடும் இவனுக்கு சைவ ஹோட்டல்கள் கொஞ்சம் தூரம்தான்,

சரி வேறு வழியில்லை, வேண்டாம் எனச்சொன்னால் வம்பிழுத்து விடு வார் மனுசன், அப்பிடின்னா என்னையமாதிரி ஆளுக கூப்பிட்டா சாப்புட வர மாட்ட அப்பிடித்தான என்பார் கூசாமல்/

இடம் காலம் தோது பார்த்து இதற்கெல்லாம் ஆட்பட்டுத்தான் போக வேண்டி இருக்கிறது,என்ன செய்ய எனபான் நண்பன் கேட்கிற பொழுது களில்.

சிரித்துக்கொள்வான் அவனும்,அவன் சொல் வேறு மாதிரியாய் இருக்கிறது, எத்தன காலத்துக்கு ஆட்படுவ நீ,ஒரு எண்டுல போயி ஒடைச்சிரு, ஒடைச்சி நில்லு,இல்லைன்னா ஒடைச்சிட்டு வெளிய வா,எதுக்குப் போயிக் கிட்டு,என்ன அவர் மட்டும்தானா ஒனக்கு நண்பர்,நாங்களெல்லாம் என்ன ஆகாதவுங்களா, ஒனக்கு,

இன்னமும் சொல்லப்போனா அவுங்கள விட ஒன்னைய நல்லா அறிஞ்ச வன் ஒன்னயப்பத்தி தெரிஞ்சவன், நீ அம்மணமா திரிஞ்ச பருவத்துல இருந்து ஒன்னைய பாத்துக்கிட்டு வர்றவன்,ஆமா பாத்துக்க” என்றவன் ”பாத்து சூதானமா இரு,”எனச் சொன்ன சொல் மனமெங்குமாய் நின்று பரவுகிறதுதான் அவர் கூப்பிட்டு தோள் மீது கை போட்ட வேளையில் /

ஹோட்டலின் உள் அழைத்துப்போனார்.ஹோட்டலின் நுழை வாயில் இடது ஒரம் கல்லா,வலது ஓரம் சுண்ணாம்பு பெயர்ந்து வெள்ளையடிக்க பட்டு உருவம் காட்டி நின்ற சுவர்,அந்த உருவத்தை ஹோட்டலுக்கு வந்து போகிறவர்கள்என்னவாய் நினைக்கிறார்களோ அதுவாகவே மாறிக்காட்சிப் பட்டது அவர்களுக்கு/

உள்ளே இரண்டு வரிசையாய் கிழக்கு மேற்காகவும் இரண்டு வரிசையாய் வடக்கு தெற்காகவுமாய் சாப்பாட்டு மேஜைகளை போட்டிருந்தார்கள்,எந்த இடஞ்சலுமற்ற நிறைந்த வெளியாய் காட்சிப்பட்டது சாப்பாட்டு மேஜை அடைகொண்டிருந்த இடம். அதைத் தாண்டி பெரியதாய் மறைப்பேதும் இல்லாமல் இருந்த சமையல் ரூம், அங்கு தொந்தி தள்ளி நின்று கொண்டிரு ந்த மாஸ்டர்,

அப்படியே சமையல் ரூமின் நேர் எதிராய் கை கழுவுகிற இடம், பெரிதாக வைக்கப்பட்டிருந்த பித்தளை அண்டா நிறைந்த தண்ணீரில் சில்வர் டம்ப்ளர் ஒன்று மிதந்தது, அதில் தண்ணீர் மோந்து அண்டா இருந்த திண்டின் அருகில் இருந்த இடத்தில் கழுவினார்கள்,பார்ப்பதற்கு சின்ன சளதாரிப்போலத் தெரிந்தது,

இதையெல்லாம் சாப்பிட வருகிற அன்று பார்த்த போதும் கூட இதற்கு முன்னாய் எப்பொழுதோ அங்கு வந்து சென்ற ஞாபகம்,

“அடப்பாவி இது கூட மறந்து போச்சா ஒனக்கு” என மனம் இரைச்சலி ட்டது. ஊரில் இருந்த வெயில் நாள் ஒன்றில் பாட்டிக்கு வயிற்றோட்டம் நிற்காமல் இருந்தது, அதற்கு ஜீரா போலி சாப்பிட்டால் சரியாகிப் போகும் என யாரோ சொன்ன வார்த்தையை நம்பி அதிகாலையில் ஐந்து கிலோ மீட்டர் தூரம் ஓட்டத்தெரியாத சைக்கிளை மிதித்து வந்து அந்நேரம் திறக்காத கடை முன்னாய் காத்திருந்து ஜீரா போலி வாங்கிச் சென்றது ஞாபகங் களில் வளையமிடுவதாய்,,,,/

இவனின் தூரத்து உறவுப் பாட்டி அவள்,ஆனாலும் இவன் மீது பிரிய மாய் இருந்தாள்,அசப்பில் அவளது மூத்த மகள் போல் இருக்கிறாய், அடிக்கடிச் சொல்வாள்.

”அதனால் என் உள்ளம் ஈர்க்கிறாய் நீ”என்கிற அவளது சொல்லுக்காயும் அவள் மீது கொண்ட அளவற்ற பாசத்திற்காயும் மட்டுமே அன்று ஜீரா போலி வாங்க வந்திருந்தான்,

அன்றிலிருந்துஇன்று வரை தனது அடையாளத்தை இழக்காததாதி போல எந்த வித பெரிய மாற்றமும் இன்றி அப்படியே இருந்தது கடை. ஓனருக்கு கொஞ்சம் வயதாகியிருந்தது,நரை முடியை அழுந்த படிய வாரியிருந்தார், சமையலறையும் தண்ணீர் ஊற்றுகிற அண்டாவும் சமையல் மாஸ்டரும் அப்படியேதான் இருந்தார்கள்,சாப்பாட்டு மேஜைகளின் வரிசையும் அதன் பெயர்ந்து அடையாளத்தையும் சேர்த்து./

அன்று சென்ற அதே பாரத விலாஸிற்கு முன் நின்றவன்தர்மரை அழைத்துக் கொண்டுசாப்பிடப்போகலாமா,என்கிற யோசனையில் ஆழ்ந்தவனாய்,,,,/

2 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

அந்த மாயகணம் என்றும் சிறப்பு...

vimalanperali said...

நன்றியும் அன்பும்!

Related Posts Plugin for WordPress, Blogger...