Showing posts with label நிகழ்வு பதிவுசமூகம்சித்திரம்அனுபவம். Show all posts
Showing posts with label நிகழ்வு பதிவுசமூகம்சித்திரம்அனுபவம். Show all posts
15 Mar 2014
24 Aug 2013
இலக்கு,,,,,,,
வெள்ளை நிற நாய் அது.புசுபுசுத்த முடிகள் அடர்ந்து தெரிய
வாலைமடக்கிக் கொண்டு காது களை கூர் தீட்டியது போலவுமாய் தூக்குக்கொண்டு ஒடியது.
கரு நிற போர்வை போத்தியது
போல தன் மேனியின் நிறம் காட்டிய சாலையது.இரு சக்கர வாகனங்களும்,சைக்கிள்களும்,கனரகமிதரகவாகனங்களுமாய்அவ்வளவாகவும்
அவ்வளவு அல்லாமலும் பயணித்துக்கொண்டிருந்த காலை வேலையது.
மணி 9ஐத்தொட்டுகைகுலுக்கப்போகிற8.59ன்முடிவு நேரமாய்/மொட்டவிழ்ந்து
மலர் கிற ஒரு பூவின் மென் மலர்வாய்.8.9.10.11 12,,,,,,,,,,,,என முடிந்து திரும்பவுமாய்
ஒன்றிலிருந்து ஆரம்பித்து நகர ஆரம்பிக்கிற மணித்துளிகள் இந்த ஒன்பதை இப்படியாய் காட்டிச்செல்கிறது.
தன் உயரம் காட்டியும்,தன் ஆகுருதி காட்டியுமாய் சாலையின்
இருபக்கமுமாய் வளர் ந்து நின்ற பலநிற மரங்கள் பலபெயர்களைஅறிவித்தவாறும்,தன்னைஇனம்காட்டியுமாய்/முரட்டுத் தனமாயும் இள ஊடல் காட்டியும்,பூஞ்சையாயும் கைவிரித்து இலைகளும்
பூவும் பிஞ்சுமாய் அது அற்றுமாய் நின்றவைகளுமாய் தன்னை இனம் காட்டிக் கொண்டிருந்த மரங்கள்
தன் வளர்விலிருந்து இன்று வரையான தன் கதையைக்கூறி அடையாளம் காட்டியவாறு/
புளிய மரம் கேட்கிறது,வேப்பமரம் சொல்கிறது.புங்க மரம் சொல்கிறது,
பூவரசமரம் கேட்கிறது. நால்வழிச்சாலையமைக்கவெட்டுப்பட்டசாலையின்ஓரங்களில்நிலைகொண்டிருந்தஐம்பது வருடசரித்திரம் பேசிய மரங்களின் உள் ஆத்மாக்களையும்,அதன் பெருமூச்சுக்களையும், விரக் திப்பேச்சுக்களையும்வெளிப்படுத்தியமரங்களின்நடுவாய்ப்பயணித்த்சாலையில்பின்னங்கால்கள்இரண்டும்,முன்னங்கால்கள்இரண்டைத்தொடஓடிக்கொண்டிருக்கிற நாய் தனக்கு முன்னா ல் பார்வை படும் தூரத்தில் சைக்கி ளில் செல்கிற
அதன் உரிமையாளரை எட்டிப்பிடிக்கச் செல்கிறதாய்/
நாய்பின்னால்,அதன்உரிமையாளர்முன்னால்,உரிமையாளர்முன்னால்நாய்பின்னால்,,,என்கிற
ஒரேநேர்கோட்டுநிகழ்வாய் காட்சிப்பட்ட அதன் பின்னால் இருத்தி வைக்கபட்டிருந்த விழிகள்
பல நோக்க தன் செயல்,நோக்கம் ,இலக்கு எல்லாம் ஒன்றென கருதி மனம் குவித்து ஓடுகிறது நாய்/
பின்னங்கால்கள் இரண்டும் முன்னங்கால்கள் எட்டிஇரண்டைத்தொட்டவாறிருக்க/
15 Jul 2013
கவிச்சாரலாய்,,,,,,,,
முதன் முதலாக வந்த மாணவன் தயங்கி நின்றபோது மணி காலை 9.30. நான்,
கிளைச் செயலாளர் முத்துக் குமார், நாவலாசிரியர் பாண்டியக் கண்ணன் ,கிளைத் தலைவர்
திருமதி. சுமதிச் செல்வி.திரு, தேனி வசந்தன்,திரு.ஜே.ஜே சீனிவாசன் ,திரு.திலீப்
நாரயணன் எல்லோருமாய் கூடி நிகழ்ச்சிக்கான வேலை செய்து கொண்டிருந்த இடம் விருதுநகர்
R.C மேல் நிலைப்பள்ளி .
த.மு.எ.க.ச விருதுநகர் கிளை உயர் நிலைப் பள்ளி மாணவ,மாணவிகளுக்கான கவிதைப்
போட்டி நடத்த வேண்டும் என முடிவு செய்த நாளிலிருந்து கிளைத் தோழர்களுக்கு இறக்கை
முளைத்து விட்டது. எல்லோரும் மிகவும் சந்தோசித்துப் போனோம். ஆகா மிகவும் நல்லதொரு
நிகழ்ச்சி. இது கவிதைப் போட்டியாக மட்டும் அமையாது. பயிற்சியாகவும் அமையும் என்கிற
உயரிய முடிவே ஒரு குறிப்பிட்ட தலைப்பில் மட்டுமே கவிதை எழுதச் சொல்லாமல் எதைப்
பற்றி வேண்டுமானாலும் எழுதலாம் என அறிவிப்பு செய்ய வைத்தது. உள்ளூர் கேபிள் டீ.வி
நகரின் பிரதான இடங்களில் இரண்டு விளம்பரப் பலகைகள் என வைத்ததும் ,கவிதைச் சங்கமம்
நிகழ்ச்சியின் சூடு ஊரெங்கும் பற்றிக் கொண்டது . நேரிலும்,தொலை பேசி மூலமாகவும்
கிளைச் செயலாளர் முத்துக் குமார் அவர்களிடம் எப்பொழுது, எங்கு, எப்படி, நிகழ்ச்சி
நடக்கும் இடம் எங்கே? என்கிற விசாரிப்பு நடந்து அதற்கு விடை தந்து நிகழ்ச்சி
நடக்கும் நாளும் வந்து விட்டது. அந்த நாளின் காலை முதன் முதலாக வந்த மாணவன் தயங்கி
நின்ற போது காலை மணி 9.30. அந்த மாணவன் முதன் முதலாய் கேட்ட கேள்வி போட்டி
எப்பொழுது ஆரம்பிக்கும் என.
எழுதி,எழுதி தீராத பக்கங்களாய் வாழ்க்கை தன்னுள் அன்றாட நிகழ்வுகளையும்,
சம்பவங்களையும் சுமந்துகொண்டும், சுழியிட்டுக்கொண்டும், முடியிட்டுக் கொண்டுமாய்ஓடிக் கொண்டிருக்கிறது. பழவண்டிக்காரர்கள், காய்கறிவிற்கும் பெண், கீரைக்காரக் கிழவி,பெட்டிக் கடைக்காரபாய் , ரோட்டோர மரத்தடியில் அமர்ந்து செருப்புத்தைப்பவர்............,எனவாழ்க்கையின் சகல தரப்பினரையும் தன்னகத்தே சுமந்து கொண்டிருக்கிற சமூகத்தின்நகர்வில் இரவு வடிந்து காலை புலர்ந்த "11.9.2010" தனது நகர்வை "தமிழ்நாடு முற்போக்குஎழுத்தாளர் கலைஞர்கள் சங்கம்" விருதுநகர் கிளை நடத்திய "கவிதை சங்கமம் "நிகழ்ச்சிக்கென ஒதுக்கித் தருகிறது.
11.9.2010 அன்று உயர் நிலைப்பள்ளி மற்றும் ,கல்லூரிமாணவ,மாணவிகளுக்கான "கவிதை சங்கமம்" விருதுநகர் R.C மேல்நிலைப்பள்ளியில்நடைபெற்றது. பேனாவை கூர்முனை
செய்து கொண்டும், மனதை தயார் படுத்திக் கொண்டுமாய் "கவிதை எழுத
வேண்டும்,பரிசு பெற வேண்டும்" என்கிற ஆவலில் வந்திருந்த மாணவ, மாணவிகள்
அனைவரையும் அடக்கிய "கவிதை சங்கமம்"
நிகழ்ச்சி காலை 10.30 மணியளவில் கிளைத்தலைவர் திருமதி, சுமதிச்செல்வி
அவர்களின் தலைமையிலும், கிளைச் செயலாளர் திரு.முத்துக்குமார்அவர்களின்
அவர்களின் தலைமையிலும், கிளைச் செயலாளர் திரு.முத்துக்குமார்அவர்களின்
முன்னிலையிலும் , நடந்தது
நிகழ்வுக்கு ஊக்கமான துவக்கமாய்கவிஞர் நீலம் மதுமயன்அவர்களின் துவக்க உரை இருந்தது. கவிதை பற்றி, கவிதையின் பாடு பொருள் பற்றி, இளம் பருவத்தின் ஆசை பற்றி,
கனவுகள்பற்றி,காதல் பற்றி என நிறைய,
நிறைய பேசியது மாணவ, மாணவிகளை உற்சாகப்படுத்தியது. இலக்கியத்தில்கவிதைஆற்றுகிறபங்குஎனதிரு.தேனிவசந்தன் அவர்களும் "கவிதை சங்கமம்" பற்றியும், கலை இலக்கியகத்தின்போக்கு பற்றியுமாய் பேசிய கிளைச் செயலாளர் திரு.முத்துக்குமார் ஆகியோரின் பேச்சும்நிகழ்ச்சிக்கு நிமிர்வு சேர்த்தது. அனைவரும் பேசி
முடியவும் போட்டி ஆரம்பமானதாய் அறிவிக்கப் படுகிறது. மாணவ,மாணவிகள் அனைவரும் தனது சைகளை,கனவுகளை,எண்ணங்களை,
ஆவல்களை கவிதையாக எழுதினார்கள்.
நாவலாசிரியர் திரு.பாண்டியக் கண்ணன் ,எழுத்தாளர் திரு.திலீப் நாரயணன் ,எழுத்தாளர் திரு.விமலன். பேச்சாளர் திரு.தேனி வசந்தன் ,கருத்தாளர் திரு.ஜே.ஜே சீனிவாசன் ,த.மு.எ.க.சவின் மாவட்டச் செயலாளர் திரு.லட்சுமி காந்தன் ஆகியோரின் பங்கேற்புடன் மிகவும் கம்பீரமாகவும், எளிமையாகவும் நடைபெற்ற "கவிதை சங்கமம்" நிகழ்வில் விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த பல்வேறு பள்ளி,கல்லூரி மாணவ, மாணவிகள் 50 பேர்வரைமிகவும் உற்சாகத்துடன் கலந்து கொண்டார்கள்.
சுமார் ஒருமணிநேரத்திற்கும் மேல் நடந்த கவிதை போட்டியில் பல்வேறுதலைப்புகளையும் ,கருத்துக்களையும், தாங்கி வந்த கவிதைகளை ஆய்வுசெய்த "த.மு.எ.க.ச" வின்விருதுநகர் கிளைத் தலைமையையும், மாவட்டச் செயலாளர் திரு.லட்சுமிகாந்தன்அவர்களையும் கொண்டகுழு இறுதியாக உயர்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகளுக்கானகவிதைகளுக்கு, மூன்று பரிசுகளையும், கல்லூரி மாணவ ,மாணவிகளுக்கானகவிதைகளுக்கு , மூன்று பரிசுகளையும் அறிவித்தது.
கல்லூரிகான கவிதைப் போட்டியில்நாவலாசிரியர் பாண்டியக்கண்ணன் அவர்களின்
புதல்வி செல்வி. கயல் விழி (V.V.Vகல்லூரி,)முதல் பரிசையும்,இரண்டாம் பரிசை கலைவாணி (V.V.V கல்லூரி)யும், மூன்றாவது பரிசை மணிகண்டன்(அண்ணா பல்கலைக்கழகம் )னும்பெற்றுக் கொண்டார்கள்.
புதல்வி செல்வி. கயல் விழி (V.V.Vகல்லூரி,)முதல் பரிசையும்,இரண்டாம் பரிசை கலைவாணி (V.V.V கல்லூரி)யும், மூன்றாவது பரிசை மணிகண்டன்(அண்ணா பல்கலைக்கழகம் )னும்பெற்றுக் கொண்டார்கள்.
உயர்நிலைப் பள்ளிகளுக்கான கவிதைப் போட்டியில் முதல் பரிசைவீரலட்சுமி(ஹாஜி.பி. ஹவ்வா பீ.வி மேல்
நிலைப் பள்ளி)யும், இரண்டாவது பரிசைஜெரால்டு(R.C மேல் நிலைப் பள்ளி)டும், மூன்றாவது பரிசை K.சதீஸ்வரன்(ஹாஜி .பி.செய்யது மேல்நிலைப் பள்ளி) யும்பெற்றுக் கொண்டார்கள்.
பரிசுகள் வழங்கி, கௌரவித்து ,புகைப்படம் எடுத்து சந்தோசித்த"கவிதைசங்கமம்"
நிகழ்வை "த.மு.எ.க.ச" வின் மாவட்டச்செயலாளர் திரு.லட்சுமிகாந்தன்அவர்கள்
"எங்கும் பரவி நிற்கிறது கவிதை" என்கிற தனது எளிய உரையுடன் முடித்து
வைத்தார்கள்.நிகழ்ச்சியின் பின்புலமாய் நின்று உதவிய இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினருக்கும், தங்களது பள்ளியில்நிகழ்ச்சி நடத்த இடம் கொடுத்து உதவி, நிகழ்ச்சிபற்றியும், "த.மு.எ.க.ச விருதுநகர் கிளை" பற்றியுமாய் விசாரித்துத் தெரிந்து கொண்ட உயர் உள்ளம் கொண்ட R.C உயர்நிலைப் பள்ளி நிர்வாகத்திற்குமாய் நன்றி சொல்லி விட்டு நிகழ்வு முடிந்து அனைத்து மாணவ, மாணவிகளும்இன்முகத்துடன் வெளியேறியபின் கடைசியாகசென்ற கல்லூரி மாணவன் தன்னைஇருபாலினத்து மாணவன்என கோடிட்டுக் காட்டி விட்டுச் சென்றான்.அப்படிப்பட்ட மாணவனைதைரியமாக நிகழ்வில்பங்கேற்க செய்ய "த.மு.எ.க.ச" வால்மட்டுமே முடிகிறது. த.மு.எ.க.ச விருதுநகர் கிளை அதை சாத்தியப்படுத்தியிருக்கிறது.மனிதமும், மனித நேயமும், மண்ணில் இருக்கிறவரை "த.மு.எ.க.ச" வினால் "கவிதைசங்கமம்" நடத்தப்படும்.அந்த நிகழ்வில் பங்கேற்க, அந்த மாணவனைப் போல இன்னும்சிலர் தைரியமாக வரக்கூடும்.அந்த தைரியத் தையும், நெஞ்சு நிமிர்வையும் "த.மு.எ.க.ச"வழங்கியிருக்கிறது.
வைத்தார்கள்.நிகழ்ச்சியின் பின்புலமாய் நின்று உதவிய இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினருக்கும், தங்களது பள்ளியில்நிகழ்ச்சி நடத்த இடம் கொடுத்து உதவி, நிகழ்ச்சிபற்றியும், "த.மு.எ.க.ச விருதுநகர் கிளை" பற்றியுமாய் விசாரித்துத் தெரிந்து கொண்ட உயர் உள்ளம் கொண்ட R.C உயர்நிலைப் பள்ளி நிர்வாகத்திற்குமாய் நன்றி சொல்லி விட்டு நிகழ்வு முடிந்து அனைத்து மாணவ, மாணவிகளும்இன்முகத்துடன் வெளியேறியபின் கடைசியாகசென்ற கல்லூரி மாணவன் தன்னைஇருபாலினத்து மாணவன்என கோடிட்டுக் காட்டி விட்டுச் சென்றான்.அப்படிப்பட்ட மாணவனைதைரியமாக நிகழ்வில்பங்கேற்க செய்ய "த.மு.எ.க.ச" வால்மட்டுமே முடிகிறது. த.மு.எ.க.ச விருதுநகர் கிளை அதை சாத்தியப்படுத்தியிருக்கிறது.மனிதமும், மனித நேயமும், மண்ணில் இருக்கிறவரை "த.மு.எ.க.ச" வினால் "கவிதைசங்கமம்" நடத்தப்படும்.அந்த நிகழ்வில் பங்கேற்க, அந்த மாணவனைப் போல இன்னும்சிலர் தைரியமாக வரக்கூடும்.அந்த தைரியத் தையும், நெஞ்சு நிமிர்வையும் "த.மு.எ.க.ச"வழங்கியிருக்கிறது.
இது போதும் தோழர்களே,நிகழ்ச்சி வெற்றிகரமாக முடிந்து விட்டது எனஅறிவிக்க,,,, என்கிற சந்தோச புன்னகையுடன் வெளியேறுகிறோம் , நிகழ்ச்சிக்கு பின் புலமாகஇருந்துஉதவிய நல் உள்ளங்கள் அனைவருக்கும் நன்றி கூறியவாறே./
Subscribe to:
Posts (Atom)




