Showing posts with label வலைப்பதிவர் திருவிழா. Show all posts
Showing posts with label வலைப்பதிவர் திருவிழா. Show all posts

3 Oct 2015

ஆஹா! அழைப்பிதழ் வந்தாச்சு! வருக வருக நண்பர்களே!

ஆஹா! மனம் ஆனந்தத்தில் கூத்தாடுகிறது, புதுக்கோட்டை நகரம் மட்டுமல்ல இணைய நண்பர்களின் இல்லங்கள் தோறும் விழாக் கோலம் பூண்டிருக்கிறது. இணையத்தில் சந்தித்து இதயத்தில் இடம் பிடித்த அத்தனை உறவுகளை ஒரே நேரத்தில் ஒரே இடத்தில் சந்திக்க இருக்கிறோம் என்றால் இல்லங்கள் மட்டுமல்ல உங்களின் உள்ளங்களும் எண்ணங்களும் புதுகையை நோக்கி நகர்ந்து வந்து கொண்டிருக்கிறது என்பதை நானறிவேன். இனி என்ன இதோ அழைப்பிதழ் வந்தாச்சு. இணைய வாயிலாகவும், அஞ்சல் வாயிலாகவும் அழைப்பிதழ் உங்களின் இல்லத்து வாசலை நோக்கி வந்து கொண்டிருக்கிறது. மின்னஞ்சல் எல்லாம் உங்களது மைக்ரோ சாப்ட் (விண்டோஸ்) சன்னலில் வழியே எகிறி குதித்து உங்களை இருகரம் கூப்பி அழைத்துக் கொண்டிருக்கிறது.

நண்பர்களே! ஈரோடு, மதுரையை அடுத்து புதுக்கோட்டையில் புது விதமா சந்திக்க இருக்கிறோம். கவிதை ஓவியக் கண்காட்சி, தமிழிசைப்பாடல்கள், பதிவர் நூல் காட்சி மற்றும் விற்பனை, போட்டிக்கான ரொக்க பரிசு மற்றும் கேடயம், பதிவர்கள் கையேடு என நமது சந்திப்பு புதுமையாகவும் அருமையாகவும், பிரமாண்டமாகவும் நடக்க இருக்கிறது. புது பட ரீலீஸை விட ஆர்வத்தை அதிகமாகியிருக்கிறது நமது சந்திப்பு.

இந்திய ஆட்சிப் பணி அலுவலர்களும், விழாவிற்கு தமிழாய்ந்த சான்றோர்களும், கல்வி அலுவலர்களும், கருத்தியல் சிந்தனையாளர்களும் வர இருக்கிறார்கள். அப்ப நீங்க? அட போப்பா! நாங்க எல்லாம் தொடர்வண்டி பயணச்சீட்டு பதிவு செய்து பல காலம் ஆகிடுச்சு. எப்ப 11.10.2015வ் ஆவலோடு காத்திருக்கிறோம் என்று தானே சொல்கிறீர்கள். வாருங்கள் நண்பர்களே எங்களின் இதயக்கதவுகள் மட்டுமல்ல எங்களின் இல்லக் கதவுகளும் உங்களுக்காக காத்திருக்கிறது. வருக வருக என அன்போடு அழைக்கிறது விழாக்குழு. அவசியம் வரவும். எங்களின் விழிப்பார்வைகள் உங்களின் வருகையை நோக்கி. நன்றி..


நன்றி அரும்புகள் மலரட்டும் http://pandianpandi.blogspot.com