ஒரு பொங்கல் இரண்டு உளுந்த வடைகள். ப்ரெவுன் கலரில் விரிந்து தெரிந்த
மேஜை மீது பச்சையாய் விரிக்கப்பட்டிருந்த இலை மீது தெளிக்கப்பட்டிருந்த
தண்ணீர்த் துளிகளை மீறியவையாகவும் அதன் மீது வீற்றிருக்கிறதாகவும் இருந்த ஒரு பொங்கல் இரண்டு உளுந்த வடைகளே போதுமானதாகயிருந்தது.
சாம்பாரை ஊற்றி அருகிலிருந்த
கெட்டிச் சட்னியை துணைக்கழைத்துக் கொண்டு பிசைந்து சாப்பிட்டு கொண்டே வடையை
கைபிடித்தவாறு சாப்பிட்டு முடித்தது திருப்தியானதாயும்.வயிறு
நிறைந்ததாயும்/
இன்னும் சொல்லப்போனால் வயிறு
நிறைந்து முட்டிக்கொண்டு நின்றதாகத் தெரிந்தது.வயிற்றுக்குள்ளிலிருந்து
இரண்டு கைகளாலும் யாரோ வயிற்றை முன் நோக்கி தள்ளுவது மாதிரி இருந்தது.
அந்தக் கைகள் எந்தக் கைகள்
எனத்தெரியவில்லை.வளைக்கரங்களா அல்லது அது அல்லாத
முரட்டுக்கரங்களா?எதுவாயினும் அதன் தொடு உணர்வு நன்றாகவே இருந்தது.
கடைகாரர் கேட்ட டீயையும் வேண்டாம்
என சொல்லி விடுகிறேன். போகிற வழியில் தங்கமுத்து தோழர் கடையில்
குடித்துக் கொள்ளலாம். நன்றாக
இருக்கும்.
சூலக்கரையில்ஒருவேலையாக போய்விட்டு வரும்போது பசித்தவயிற்றுக்கு
உணவிடத்தான் அந்தக்கடையில் நுழைந்தமர்கிறேன்.
சாலையோர உணவுக்கடையது. கை நிறைய காசிருந்த போதும் வயிறு நிறைய பசியிருந்த போதும் பெரிய கடைகளில் இது நாள் வரை தனியாக
ப்போய் சாப்பிட்டதில்லை.
ப்போய் சாப்பிட்டதில்லை.
மனைவி,பிள்ளைகளுடன் போகும் போது வேறு வழியில்லாமல் பசியாற அந்த மாதிரி கடைகளுக்குள் நுழைந்தால்த்தான் உண்டு.
பிரிவு உபச்சார பார்ட்டி என ஒரு
நாள் இரவை எட்டித் தொடுகிற மாலை நேரம் ஒரு த்ரீ ஸ்டார் ஹோட்டலுக்கு
கூட்டிப் போகிறார் அன்பின் மனிதர் கண்ணன் சார்.
நாங்கள் ஸ்டாப்ஸ் பத்துப்பேர்,
அவர்,அவரது குடும்பம் என பதினைந்து பேர் அமர்ந்திருந்த ஏ.சி அறைக்கு ஆர்டர்
செய்த உணவு வர ஒரு மணி நேரம் ஆகிப் போனது.
உடன் வந்திருந்த ஸ்ரீதர்தான் சொன்னார்,இங்கு சாப்பிட வர வேண்டுமானால் வரும் போதே இரண்டு இட்லிகள் சாப்பிட்டு வர வேண்டுமோ என/
வயிற்றைக் கிள்ளிய பசி ஒரு
பக்கம், குளிரூட்டப்பட்ட அறை என்பதால் வயிற்றை முட்டிக் கொண்டு நின்ற சிறு
நீர் ஒரு பக்கம், மனம் நிரம்பி நின்ற கூச்சம் ஒரு பக்கம்.
திரும்பவும் ஸ்ரீதர்தான் கைகொடுத்தார்" வாங்க சார் பசியக்கூடஅடக்கீடலாம் இத எப்பிடி” என பாத்ரூம் போய் விட்டு வந்தோம்.
அப்படிப்ப்ட்ட இடத்தில் அது எங்கிருக்கிறது என தேடவே ஒரு நாள் ஆகி விடும் போலிருக்கிறது.
அப்படியான படோடோபமான தோற்றமே முதலில் எனக்கு ஒத்துவராததாய்
இருந்தது.
கண்ணாடியால் சூழப்பட்ட சுவர்கள், ரிச்லுக், சுகந்த வாசனை, பணத்திமிரான தோற்றம் என்கிறவை எப்போதுமே என்னை தள்ளி நிற்கச்செய்பவையாக/
இங்கு மட்டும் என இல்லை.எங்குமே
அப்படித்தான் இருந்திருக்கிறேன் என தூக்கத்திலிருந்து எழுப்பி உரைகல்லில்
வைத்து உரசிப்பார்த்தாலும் தெரியும்/
அங்கு ஒரு டீ 88 ரூபாய் 50 பைசா
என்றார்கள். சராசரியாக ஒருவருக்கு ஒரு நாள் முழுக்கவுமாய் ஆகிற செலவை
ஒரு கண்ணாடி க்ளாஸில் நிரப்பப்
பட்டிருந்த பிரெளன் கலர் திரவத்திற்கு விலையாக சொன்னார்கள்.
ஹோட்டலை விட்டு வெளியே வரும் போது ஒரு இட்லி 3.50 என விலைப் பட்டியல் காண்பித்த கடை ஒன்று கண்ணில் படுகிறது. நல்ல காம்பினேஷன்
என்கிற மனோ நிலையை சுமந்தவனாக இன்று வரை பயணித்துக் கொண்டிக்
-ருக்கிற நான் இப்படி சாலையோர உணவகங்களை தேர்ந்தெடுத்து சாப்புடுகிற பழக்கத்தை கைக் கொண்டவனாக இருக்கிறேன் இப்போதும்.
எனது நண்பர் நாசர்தான் சொல்வார் அடிக்கடி.ஒரு சின்னக் கடையாப் பாருங்க,
ரெண்டு இட்லி சாப்பிடலாம் என.அது மாதிரியான சின்னக்கடையாகத்தான் அது இருந்தது.
இரண்டு,மூன்று வருடங்களுக்கு
முன்பாகப் பார்த்த அதே தோற்றம். அதே இடம்,அதே பிளாஸ்டிக் சேர்கள்,மர
பெஞ்சுகள்,நாற்காலிகள்,அழுக்காய் வேயப்பட்டிருந்தமேல்க்கூரை என
காட்சியளித்த கடை.
கறுத்து நீண்டிருந்த சாலையின்
வலது ஓரம் புழுதி பூசிக் கிடந்த மண்ணில் அப்படியே அமர்ந்திருந்தது.ஆட்கள்
மட்டும் மாறித்தெரிந்தார்கள். நெருங்கிப் போய் கேட்டதில் உடல் நிலை
சரியில்லாமல் கடையை நடத்துவதிலிருந்து விலகிக் கொண்டார்.நாங்கள் வந்து
விட்டோம் என்கிறார்கள்.
ஒரு பெண்,ஒரு ஆண்(கணவன் மனைவியாக
இருக்க வேண்டும்) தூக்கி சொருயிருந்தபுடவையுடன்
பெண்பரிமாறிக்கொண்டிருந்தாள்.மடித்துக்கட்டிய கைலியுடன் ஆண்
டீப்போட்டுக்கொண்டிருந்தார்.
நன்றாகயிருந்தால் இரண்டு பேருக்கும் நாற்பதிற்குள்ளாக இருக்கலாம் வயது. அவர்கள் சக்திக்கு அது பெரிய கடையாகவே படுகிறதெனக்கு.
“வேறென்ன வேணும்
அண்ணாச்சி,வேறென்ன வேணும் அண்ணாச்சி,வடை வைக்கட்டுமா,இட்லி தரட்டுமா,
இன்னொரு பொங்கல் வைக்கட்டுமா” என கேட்டவாறு சுற்றி சுழன்றவளாய்
பரிமாறிய அவளைப் பார்த்தவாறும் டீப்
போடட்டுமா சார் என கேட்ட அவனை பார்த்தவாறுமாய் சாப்பிட்டு முடித்த இலையை மடிக்கிறேன்.
நான் மடித்த இலையிலிருந்து மேல்
நோக்கி நேர் கோடு இழுத்ததாய் தெரிந்த மேற்கூறை மேல் தொங்கிய ஒட்டடை, அதன்
அருகே பிரிந்து தொங்கிய அழுகடைந்த கயிறுகள்,அடுக்காயும், அழுக்காயும்
தெரிந்த மேல்க் கூரையின்
கட்டுமானம்பூசப்படாததரையிலிருந்துகால்ஒட்டிய
மண். கை கழுவுவதற்காய் கடைக்கு வெளியே இருக்கிற பக்கவாட்டு வெளியில்
வீற்றிருக்கிற சிமிண்ட்
தொட்டி,அதில்உதிர்ந்துகிடந்தபுளியமரத்துஇலைகளும்உப்புக்கரித்ததண்ணீரும்
எனவுமாய் தெரிந்த கலவையான கடையை விட்டு வெளியே வருகையில் 21 ரூபாய்க்கு
அவர்கள் கொடுத்தபொங்கலும், இரண்டு உளுந்த வடைகளும்
போதுமானதாயும்,திருப்தியானதாயும்/
9 comments:
ஒரு ரோட்டுக் கடைக்குள் சாப்பிடச் சென்றவரின் மனசு பேசியதை மகிழ்வாய் வாசிக்க வைத்த எழுத்து... அருமை அண்ணா உங்கள் எழுத்து...
ரோட்டுக் கடையில் சாப்பிட்ட திருப்தி, ஸ்டார் ஹொட்டல்களில் வராது
அருமை நண்பரே
த.ம.2
இதற்காகவே உங்களை சந்திக்க வர வேண்டும்... உங்களின் பல ரசனையை ரசிக்க வேண்டும்...
ரோட்டுக்கடையில் உள்ள அன்பும் உபசரிப்பும் எங்கும் கிடைக்காது என்பது உண்மைதான்.
சிறிய கடைகளில் இருக்கும் சுவையும் எளிமையும் பெரிய கடைகளில் இருப்பதில்லைதான்! அருமையான பகிர்வு! நன்றி!
வணக்கம் சே குமார் அண்ணா,
நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/
வணக்கம் கரந்தை ஜெயக்குமார் சார்.
நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/
வணக்கம் கோமதி அரசு அவர்களே,
நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/
வணக்கம் சுரேஷ் சார்
நன்றி வருகைக்கும்,கருத்துரைக்குமாக/
Post a Comment